மாடு மேய்க்கும் கண்ணே

பல்லவி
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

சரணம்
காச்சின பாலுதரேன்
கல்கண்டு சீனி தரேன்

காச்சின பாலுதரேன்
கல்கண்டு சீனி தரேன்

கை நிறைய வெண்ணை தரேன்
வெயிலியில் போக வேண்டாம்

கை நிறைய வெண்ணை தரேன்
வெயிலியில் போக வேண்டாம்

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

காச்சின பாலும் வேண்டாம்
கல்கண்டு சீனி வேண்டாம்

காச்சின பாலும் வேண்டாம்
கல்கண்டு சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு
நொடியில் திரும்பிடுவேன்

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

யமுனா நதிக்கரையில்
எப்பொழுதும் கள்வர் பயம்

யமுனா நதிக்கரையில்
எப்பொழுதும் கள்வர் பயம்

கள்வர் வந்து
உன்னை அடித்தால்
கலங்கிடுவாய் கண்மணியே

மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னே

கள்ளனுக்கோர் கள்ளன்
உண்டோ கண்டதுண்டோ
சொல்லும் அம்மா

கள்ளனுக்கோர் கள்ளன்
உண்டோ கண்டதுண்டோ
சொல்லும் அம்மா

கள்வர் வந்து என்னை அடித்தால்
கண்ட துண்டம் செய்திடுவேன்

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

கோவர்தன கிரியில்
கோரமான மிருகங்கள் உண்டு

கோவர்தன கிரியில்
கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியை கண்டால்
கலங்கிடுவாய் கண்மணியே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

காட்டு மிருகங்கள் எல்லாம்
என்னை கண்டால்
ஓடி வரும்

காட்டு மிருகங்கள் எல்லாம்
என்னை கண்டால்
ஓடி வரும்

கூட்டம் கூட்டமாக வந்தால்
வேட்டை ஆடி
ஜெயித்திடுவேன்

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

பாசமுள்ள நந்த கோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்

பாசமுள்ள நந்த கோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா
என்னுடைய கண்மணியே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

பாலருடன் வீதியிலே
பந்துஅடுரன் என்று சொல்லேன்

பாலருடன் வீதியிலே
பந்துஅடுரன் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி
வந்து நின்றிடுவன்

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக
வேண்டாம் சொன்னே

போக வேணும் தாயே தடை
சொல்லாதே நீயே

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare