அத்தியாயம் – 6
நாரதருக்கும் வியாசருக்கும் இடையிலான உரையாடல்
பதம் 1.6.1
சூத உவாச
ஏவம் நிசம்ய பகவான் தேவர்ஷேர் ஜன்ம கர்ம ச
பூய: பப்ரச்ச தம் ப்ரஹ்மன் வ்யாஸ: ஸத்யவதீ-ஸுத:
சூத உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; நிசம்ய-கேள்விப்பட்ட; பகவான்—பகவானின் சக்தி வாய்ந்த அவதாரம்; தேவர்ஷ்ஷே-:-தேவரிஷியின்; ஜன்ம—பிறப்பு; கர்ம—செயல்; ச-மேலும்; பூய—மீண்டும்; பப்ரச்ச—கேட்டார்; தம் அவரிடம்; ப்ரஹமன்—பிராமணர்களே; வ்யாஸ:—வியாசதேவர்; ஸத்யவதீ -ஸூத:— சத்தியவதியின் புதல்வரான.
சூதர் கூறினார்: பிராமணர்களே, இவ்வாறு பகவானின் அவதாரமும், சத்தியவதியின் புதல்வருமான வியாசதேவர், ஸ்ரீ நாரதரின் பிறப்பு மற்றும் செயல்களைப் பற்றிய அனைத்தையும் கேட்டபின் பின்வருமாறு வினவினார்.
பதம் 1.6.2
வ்யாஸ உவாச
பிக்ஷுபிர் விப்ரவஸிதே விக்ஞானாதேஷ்ட்ருபிஸ்- தவ
வர்தமானோ வயஸி ஆக்யே தத: கிம் அகரோத் பவான்
வ்யாஸ உவாச-ஸ்ரீ வியாசதேவர் கூறினார்; பிக்ஷுபி—மாமுனிவர்களால்; விப்ரவஸிதே—மற்ற இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றபின்; விக்ஞான—பகவானைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான அறிவு; ஆதேஷ்ட்ரூபி:-உபதேசித்தவர்கள்: தவ—தங்களுடைய; வர்தமான:—தற்போதைய; வயஸி—வாழ்நாளின்; ஆத்யே-அது துவங்குவதற்கு முன்; தது:—அதன் பிறகு; கிம்—என்ன; அகரோத்- செய்தீர்கள்; பவான்-தாங்கள்.
ஸ்ரீல வியாசதேவர் கூறினார்; உங்களுடைய இப்பிறப்பிற்கு முன், உங்களுக்கு விஞ்ஞான பூர்வமான ஆன்மீக அறிவை உபதேசித்த மாமுனிவர்கள் புறப்பட்டுச் சென்றபின் தாங்கள் (நாரதர்) என்ன செய்தீர்கள்?
பதம் 1.6.3
ஸ்வாயம்புவ கயா வ்ருத்யா வர்திதம் தே பரம் வய:
கதம் சேதம் உதஸ்ராக்ஷி: காலே ப்ராப்தே கலேவரம்
ஸ்வாயம்புவ-பிரம்மாவின் புதல்வனே; கயா— எத்தகைய சூழ் நிலையில்; வ்ருத்யா-தொழில்; வர்திதம்-செலவிடப்பட்டது; தே— தாங்கள்; பரம்- தீட்சைக்குப் பிறகு; வய:-ஆயுள்; கதம்- எப்படி; ச-மேலும்; இதம்-இந்த; உதஸ்ராக்ஷி:-தாங்கள் கைவிட்டீர்கள்; காலே-காலப்போக்கில்; ப்ராப்தே—அடைந்து; கலேவரம்-உடலை.
பிரம்மாவின் புதல்வரே, தீட்சைக்குப் பின் தாங்கள் எப்படி வாழ்வை நடத்தினீர்கள்? மேலும் காலப்போக்கில் உங்களுடைய பழைய உடலைக் கைவிட்டபின், எப்படி இவ்வுடலைத் தாங்கள் பெற்றீர்கள்?
பதம் 1.6.4
ப்ராக்—கல்ப விஷயாம் ஏதாம் ஸ்ம்ருதிம் தே முனி –ஸத்தம
ந ஹி ஏஷவ்யவதாத் கால ஏஷ ஸர்வ—நிராக்ருதி;
ப்ராக்—முன்னதாக; கல்ப—பிரம்மாவின் ஒரு நாள்; விஷயாம்-விஷயம்; ஏதாம்-இவ்வெல்லா; ஸ்ம்ருதிம்—ஞாபகம்; தே- தங்களுடையை; முனி-ஸத்தம:— மிகச்சிறந்த முனிவரே; ந-இல்லை; ஹி-நிச்சயமாக; ஏஷ-இவ்வெல்லா; வ்யவதாத்—எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை: கால— காலப்போக்கில்: ஏ-இல்வெல்லா; ஸ்ர்வ—அனைத்தும்; நிராக்ருதி—அழிவு.
மிகச்சிறந்த முனிவரே, நாளடைவில் காலம் அனைத்தையும் அழித்துவிடுகிறது. அவ்வாறிருக்க, பிரம்மாவின் முந்திய காலத்தில் நிகழ்ந்த இவ்விஷயம் எப்படி காலத்தால் கலைக்கப்படாமல், இன்னமும் பசுமையாகவே தங்களது நினைவில் நிற்கிறது?
பதம் 1.6.5
நாரத உவாச
பிக்ஷுபிர் விப்ரவஸிதே விக்ஞானா தேஷ்ட்ருபிர் மம
வர்தமானோ வயஸி ஆத்யே தத ஏதத் அகாரஷம்
நாரத உவாச—ஸ்ரீ நாரதர் கூறினார்; பிக்ஷுபி:—முனிவர்களால்; விப்ரவஸிதே—மற்ற இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றதும்; விக்ஞான—விஞ்ஞானபூர்வமான ஆன்மீக அறிவு; ஆதேஷ்ட்ருபி:- எனக்கு புகட்டியவர்கள்; மம—என்னுடையது; வர்தமான—தற்போதைய; வயஸி ஆத்யே—முற்பிறவியில்; தத—அதன் பிறகு; ஏதத்—இதன் அளவு; அகாரஷம்—புரியப்பட்டது.
ஸ்ரீ நாரதர் கூறினார்: விஞ்ஞான பூர்வமான தெய்வீக அறிவை எனக்குப் புகட்டிய மாமுனிவர்கள் மற்ற இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றதும், என்னுடைய வாழ்வை நான் இந்த முறையில் கழிக்க வேண்டியதாயிற்று.
பதம் 1.6.6
ஏகாத்மஜா மே ஜனனீ யோஷின் மூடா ச கிங்கரீ
மய் ஆத்மஜே ‘நன்ய?—கதௌ சக்ரே ஸ்னேஹானு பந்தனம்
ஏ-ஆத்மஜா—ஒரே மகனைப் பெற்ற; மே—எனது; ஜனனீ—தாய்; யோஷித் -பிரிவைச் சேர்ந்த பெண்ணாக; மூடா-முட்டாள்; ச-மேலும்; கிங்கரீ-வேலைக்காரி; மயி—என்னிடம்; ஆத்மஜே—அவளது வாரிசாக இருந்ததால்; அநன்ய-கதௌ:—பாதுகாப்புக்கு வேறு வழி இல்லாதவள்; சக்ரே-.அதனைச் செய்தாள்; ஸ்னேஹ-அனுபந்தனம்:—பாசத்தினால் கட்டினாள்.
சாதாரண ஒரு பெண்மணியாகவும், வேலைக்காரியாகவும் இருந்த எனது தாய்க்கு நான் ஒரே மகனாக இருந்தேன். அவருக்கு நான் ஒரே வாரிசாக இருந்ததால், அவளைப் பாதுகாப்பதற்கு வேறுயாரும் இருக்கவில்லை. அன்பால் அவள் என்னைக் கட்டிவிட்டாள்.
பதம் 1.6.7
ஸாஸ்வதந்த்ரா ந கல்பாஸீத் யோக-க்ஷேமம் மமேச்சதீ
ஈசஸ்ய ஹி வசே லோகோ யோஷா தாருமயீ யதா
ஸா-அவள்: அஸ்வதந்த்ரா—சார்ந்தவளாக; ந—இல்லை; கல்ப—முடிந்தது; ஆஸீத்—அவளால்; யோக—க்ஷேமம்:—பராமரிப்பு; மம—எனது; இச்சதீ—விரும்பிய போதிலும்; ஈசஸ்ய—பகவானின்; ஹி—அதற்காக; வசே—அவரது ஆட்சியின் கீழ்; லோக:—அனைவரும்; யோஷா—பொம்மை; தாரு-மயீ:—மரத்தாலான; யதா—அந்த அளவிற்கு.
அவள் என்னை நன்றாக கவனித்துக்கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் சுதந்திரமாக இல்லாததால், எனக்காக அவளால் எதையுமே செய்ய முடியவில்லை. உலகம் பரம புருஷ பகவானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது; ஆகவே ஒரு பொம்மலாட்டக்காரனின் கைப்பொம்மையாயே அனைவரும் உள்ளனர்.
பதம் 1.6.8
அஹம் ச தத்—ப்ரஹ்ம—குலே ஊஷிவாம்ஸ் தத்—உபேக்ஷயா
திக்—தேச— காலவ்யுத்பன்னோ பாலக: பஞ்ச—ஹாயன:
அஹம்—நான்; ச—தவிரவும்: தத்—அந்த; ப்ரஹ்ம—குலே:—பிராமணர்களுக்குரிய பள்ளியில்; ஊஷிவான்:—வசித்து வந்தேன்; தத்—அவளது; உபேக்ஷயா—நம்பியிருந்ததால்; திக்—தேச:—திசையையும் தேசத்தையும்; கால—காலம்: அவ்யுபன்ன:—எந்த அனுபவமும் இல்லாததால்; பாலக:— ஒரு சிறுவனாக மட்டுமே; பஞ்ச—ஐந்து; ஹாயன:- வயது— நிரம்பிய.
ஐந்து வயதே நிரம்பிய சிறுவனாக இருந்தபொழுது நான் ஒரு பிராமண பள்ளியில் வசித்து வந்தேன். எனது தாயின் பாசத்தையே நான் நம்பியிருந்ததால், வெளியுலக அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லை.
பதம் 1.6.9
எகதா நிர்கதாம் கேஹாத் துஹந்தீம் நிசி காம் பதி
ஸர்போ ‘தஸத் பதா ஸ்ப்ருஷ்ட: க்ருபணாம் கால-சோதித:
ஏகதா—முன்னொரு காலத்தில்; நிர்கதாம்—சென்றுவிட்டதாள்; கேஹாத்—வீட்டிலிருந்து; துஹந்தீம்—பால் கறப்பதற்காக; நிசி—இரவில்; காம்—பசுவை; பதி—வழியில்; ஸர்ப:-பாம்பு; அதசத்.— கடித்து; பதா—காலில்; ஸ்ப்ருஷ்ட—இவ்வாறு கடிக்கப்பட்டு; க்ருபணாம்—நிராதரவான பெண்; கால—சோதித:—பரமான காலத்தினால் தூண்டப்பட்டு.
ஒரு சமயம் என் தாய் பசுவைக் கறப்பதற்காக இரவில் வெளியே செல்லும்பொழுது, பரமான காலத்தினால் தூண்டப்பட்டு, காலில் பாம்பினால் கடிக்கப்பட்டாள்.
பதம் 1.6.10
ததா தத் அஹம் ஈசஸ்ய பக்தானாம் சம் அபீப்ஸத:
அநுக்ரஹம் மன்யமான: ப்ராதிஷ்டம் திசம் உத்தராம்
ததா —அப்பொழுது; தத்—அதை; அஹம்—நான்; ஈசஸ்ய— பகவானின்; பக்தானாம்—பக்தர்களின்; சம்—கருணையாக; அபீப்ஸத:—விரும்பும்; அநுக்ரஹம்—விசேஷ கருணையை ; மன்யமான:—அப்படி எண்ணியவாறு; ப்ராதிஷ்டம்—புறப்பட்டேன்; திசம் உத்தராம்— வடதிசையில்.
அவரது பக்தர்களுக்கு எப்பொழுதும் நல்லாசிகளையே அளிக்க விரும்புபவரான பகவானின் விசேஷ கருணையாக இதை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த எண்ணத்துடன், நான் வடதிசையை நோக்கிப் புறப்பட்டேன்.
பதம் 1.6.11
ஸ்ஃபீதாந் ஜனபதாம்ஸ் தத்ர புர-க்ராம—வ்ரஜாகரான்
கேட-கர்வட—வாடீஸ் ச வனானி உபவனானி ச
ஸ்ஃபீதான்—மிகவும் செழிப்புடன் விளங்கும்; ஜன- பதான்:— பெரிய நகரங்கள்; தத்ர—அங்கு: புர—பட்டணங்கள்; க்ராம—கிராமங்கள்; வ்ரஜ—பெரியத் தோட்டங்கள்; ஆகரான்—சுரங்கங்கள்; கேட—விவசாயப் பண்ணைகள்; கர்வட—பள்ளத்தாக்குகள்; வாடீ—பூந்தோட்டங்கள்; ச-மேலும்; வனானி—காடுகள்; உபவனாமி— நாற்றங்கால்கள்: ச-மேலும்.
அங்கிருந்து, புறப்பட்ட நான், வழியில் பல செழிப்புமிக்க மாநகரங்கள், பட்டணங்கள், கிராமங்கள், மிருகப் பண்ணைகள், சுரங்கங்கள், விவசாயப் பண்ணைகள், பள்ளத்தாக்குகள், பூந்தோட்டங்கள், நாற்றங்கால்கள் மற்றும் இயற்கையான காடுகள் ஆகியவற்றை கடந்து சென்றேன்.
பதம் 1.6.12
சித்ர-தாது விசித்ராத்ரீன் இப-பக்ன-புஜ-த்ருமான்
ஜலாசயாஞ் சிவ-ஜலான் நளினீ: ஸுர-ஸேவிதா:
சித்ர-ஸ்வனை: பத்ர-ரதைர் விப்ரமத் ப்ரமர-ஸ்ரீய:
சித்ர:—தாது—தங்கம், வெள்ளி மற்றும் செம்பு போன்ற விலையுயர்ந்த உலோகங்கள்; விசித்ர—பல வகையான சூழ்நிலைகள் நிறைந்த; அத்ரீன்- குன்றுகளையும், மலைகளையும்; இப—பக்ன:— மிகப்பெரிய யானைகளால் உடைத்தெறியப்படும்; புஜ-கிளைகள்; த்ருமான்—மரங்கள்: ஜலாசயான் சிவ—நலம்தரும்; ஜலான்- நீர்த்தேக்கங்கள்; நளினி—தாமரைப்பூக்கள்; ஸுர—ஸேவிதா:— ஸ்வர்க்க லோகவாசிகளாலும் விரும்பப்படும்; சித்ர—ஸ்வனை:-ஆத்மதிருப்தியளிக்கும்: பத்ர-ரதை:-பறவைகளால்; விப்ரமத்—குழப்பமான; ப்ரமர-ஸ்ரீய—தேனீக்களால் அலங்கரிக்கப்பட்ட.
தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பல உலோகங்கள் நிறைந்த மலைச் சுரங்கங்களையும், அழகிய தாமரை மலர்கள் நிரம்பிய நீர்த்தேக்கங்களைக் கொண்ட நிலப்பரப்புகளையும் நான் கடந்து சென்றேன். அலைந்து திரியும் தேனீக்களாலும், பாடும் பறவைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த இந்நீர்த்தேக்கங்கள் ஸ்வர்க்க லோகவாசிகளுக்கு ஏற்றவையாக இருந்தன.
பதம் 1.6.13
நல-வேணு-சரஸ்தந்ப குச-கீசக—கஹ்வரம்
ஏக ஏவாதியாதோ ‘ஹம் அத்ராக்ஷம் விபினம் மஹத்
கோரம் ப்ரதிபயாகாரம் வ்யாலோலுக-சிவாஜிரம்
நல-குழல்கள்; வேணு—மூங்கில்; சர—பட்டிகள்; ஸ்தன்ப—நிறைந்த; குச-கூர்மையான புல்; கீசக—புல்பூண்டுகள்; கஹ்வரம்-குகைகள்; ஏக—தனியாக; ஏவ-மட்டுமே; அதியாத -புகுந்து செல்வதற்குக் கடினமான; அஹம்— நான்; அத்ராக்ஷம்- சென்று பார்தேன்; விபினம்—அடர்ந்த காடுகள்; மஹத்—மிகவும்; கோரம்— அச்சமூட்டக்கூடிய; ப்ரதிபய—ஆகாரம்:—பயங்கரமான; வ்யால—பாம்புகள்; உலூக-ஆந்தைகள்; சிவ-நரிகள்; அஜிரம்—விளையாட்டு மைதானங்கள்.
அதன் பிறகு கோரைப் புற்கள், மூங்கில், நாணல், கூர்மையான புற்கள், புல்பூண்டுகள் மற்றும் குகைகள் ஆகியவை நிறைந்த காடுகளை தனியாகவே கடந்து சென்றேன். இத்தகைய காடுகளில் தனியாகச் செல்வது மிகவும் கடினமானதாகும் பாம்புகளும், ஆந்தைகளும் நரிகளும் சுதந்திரமாக சுற்றித்திரியும், அடர்ந்த, இருண்ட, அச்ச மூட்டக்கூடிய பயங்கரமான காடுகளையும் நான் கடந்து சென்றேன்.
பதம் 1.6.14
பரிஸ்ராந்தேந்த்ரியாத்மாஹம் த்ருட்-பரீதோ புபுக்ஷித:
ஸ்நாத்வா பீத்வா ஹ்ரதே நத்யா உபஸ்ப்ருஷ்டோ கத-ஸ்ரம:
பரிஸ்ராந்த—களைப்படைந்ததால்; இந்ரிய—உடலாலும்; ஆத்மா மனத்தாலும்; அஹம்—நான்; த்ருத்-பரீத:—தாகமும் ஏற்பட்டதால்; புபுக்ஷித—பசியும்; ஸ்நாத்வா—நீராடி; பீத்வா—மேலும் நீரையும் பருகி; ஹ்ரதே—படுக்கையில்; நத்யா—ஒரு நதியின்; உபஸ்ப்ருஷ்ட:— அதனுடன் தொடர்பு கொண்டதால்; கத-அதிலிருந்து விடுபட்டேன்; ஸ்ரம்—களைப்பு.
இவ்வாறு பயணம் செய்த எனக்கு பசியும், தாகமும் ஏற்பட்டது. இதனால் உடலும் மனமும் களைப்படைந்ததை நான் உணர்ந்தேன். எனவே ஒரு நதியின் மடுவில் நீராடி, நீரையும் பருகினேன். இதனால் நான் களைப்பிலிருந்து விடுபட்டேன்.
பதம் 1.6.15
தஸ்மின் நிர்மனுஜே ‘ரண்யே பிப்பலோபஸ்த ஆஸ்ரித:
ஆத்மனாத்மானம் ஆத்மஸ்தம் யதா—ஸ்ருதம் அசிந்தயம்
தஸ்மின்—அதனுள்: நிர்மனுஜே—மனித நடமாட்டமில்லாத; அரண்யே—காட்டில்; பிப்பல—ஆலமரம்; உபஸ்தே—அதனடியில் அமர்ந்து: ஆஸ்ரித:—புகலிடம் கொண்டு; ஆத்மனா—புத்தியால்; ஆத்மானம்-பரமாத்மா; ஆத்மா-ஸ்தம்:—எனக்குள்ளே இருக்கின்ற; யதா-ஸ்ருதம்:— முக்திபெற்ற ஆத்மாக்களிடம் இருந்து நான் கேட்டதுபோல்; அசிந்தயம்— தியானித்தேன்.
அதன் பிறகு, மனித நடமாட்டமில்லாத காட்டிலுள்ள ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த நான், முக்திபெற்ற ஆத்மாக்களிடமிருந்து நான் கற்றறிந்ததைப் போல், எனது புத்தியை உபயோகித்து, எனக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை தியானிக்கத் துவங்கினேன்.
பதம் 1.6.16
த்யாயதஸ்; சரணாம் போஜம் பாவ—நிர்ஜித சேதஸா
ஒளக்கண்ட்யா ஸ்ரு—கலாக்ஷஸ்ய ஹ்ருதி ஆஸீன் மே சனைர் ஹரி;
த்யாயத:— இப்படி தியானிக்கும்பொழுது; சரண-அம்போஜம்:—பரமாத்மாவாக உள்ள பரம புருஷரின் தாமரைப் பாதங்கள்; பாவ-நிர்ஜித:—பகவானின் உன்னத அன்பை நோக்கி மனம் மாற்றப்பட்டது; சேதஸா-மனதால் செய்யப்படும். செயல்கள் அனைத்தும் (எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம்); ஔத்கண்ட்ய—உற்சாகம்; அஸ்ரு-கல:—கண்ணீர் உருண்டோடியது; அக்ஷஸ்ய- கண்களின்; ஸ்ருதி—என் இதயத்தினுள்; ஆஸீத் – தோன்றினார்; மே—எனது; சனை:- தாமதமின்றி; ஹரி:—பரம புருஷ பகவான்.
உன்னத அன்பினால் பரவசமடைந்த நான் பரம புருஷ பகவானின் தாமரைப் பாதங்களை தியானிக்கத் துவங்கிய உடனேயே, என் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. பரம புருஷ பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணரும் தாமதமின்றி என் இதயகமலத்தில் தோன்றினார்.
பதம் 1.6.17
ப்ரேமாதிபர-நிர்பின்ன புலகாங்கோ ‘தினிர்வ்ருத:
ஆனந்த—ஸம்ப்லவே லீனோ நாபஸ்யம் உபயம் முனே
ப்ரேம—பிரேமை; அதிபர—அதிகமான; நிர்பின்ன—முக்கியமாக தனிப்பட்ட முறையில்; புலக—இன்ப உணர்வுகள்; அங்க:—வெவ்வேறு உடலுறுப்புக்கள்; அதி-நிர்வ்ருத:—முற்றிலும் பரவசமடைந்து; ஆனந்த—ஆனந்த; ஸம்ப்லவே—கடலில்; லீன—அதில் மூழ்கி: ந—இல்லை; அபஸ்யம்- காண முடிந்தது; உபயம் – இருவரையும்; முனே— வியாசதேவரே.
வியாசதேவரே, அச்சமயத்தில், தான் அளவுக்கதிகமான ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்துவிட்டதால், என்னுடலின் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாக உற்சாகமடைந்தன. நான் பேரானத்தக் கடலில் மூழ்கிவிட்டதால், என்னையும் பகவானையும் என்னால் காணமுடியாமல் போயிற்று.
பதம் 1.6.18
ரூபம் பகவதோ யத் தன் மன: காந்தம் சுசபஹம்
அபஸ்யன் ஸஹஸோத்தஸ்தே வைக்லவ்யாத் துர்மனா இவ
ரூபம்- உருவம்; பகவத- பரம் புருஷ பகவானின்; யத்— உண்மையான; தத்— அந்த; மன:-மனதின்; காந்தம்- அதன் விருப்பப்படி: சுச-அபஹம்—எல்லா வேறுபாடுகளும் மறைகின்றன; அபஸ்யன் —காணாமல்; ஸஹஸா—திடீரென்று; உத்தஸ்தே—எழுந்து நின்றேன்; வைக்லவ்யாத்-சஞ்சலமடைந்து; துர்மனா—விரும்பியதை இழந்ததால்; இவ—அது இருந்ததைப் போலவே.
உண்மையுருவிலுள்ள பகவானின் திவ்யமான வடிவம், மனதின் விருப்பங்களை நிறைவேற்றி, மனதிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் அழித்துவிடுகிறது. அவ்வுருவம் காணாமல் போனதால், விரும்பியதை இழந்தவன் சஞ்சலமடைவதைப் போல், நான் சஞ்சலத்துடன் திடீரென எழுந்தேன்.
பதம் 1.6.19
தித்ருக்ஷஸ் தத் அஹம் பூய: ப்ரணிதாய மனோ ஹ்ருதி
வீக்ஷமாணோ’பி நாபஸ்யம் அவித்ருப்த இவா துர:
தித்ருக்ஷு:—காண விரும்பி; தத்—அந்த; அஹம்—தான்; பூய— மீண்டும்; ப்ரணிதாய—ஒருமுகப்படுத்திய மனதுடன்; மன- மனம்; ஹ்ருதி- இதயத்தின் மீது: வீக்ஷமாண- காண்பதற்குக் காத்திருந்தேன்;
அபி—இருப்பினும்; ந-ஒருபோதும் இல்லை; அபஸ்யம்—அவரை கண்டேன்; அவித்ருப்த-திருப்தியடையாமல்: இவ—போல்: ஆதுர— வருந்தினேன்.
பகவானின் அந்த திவ்யமான உருவத்தை நான் மீண்டும் காண விரும்பினேன். ஆனால் இதயத்தின் மீது மனதை ஒருமுகப்படுத்த நான் ஆவலுடன் முயன்றபோதிலும், அதன் பிறகு, அவரை என்னால் காணவே முடியவில்லை. இவ்வாறு மனத்திருப்தி அடையாமல் நான் மிகவும் வருந்தினேன்.
பதம் 1.6.20
ஏவம் யதந்தம் விஜனே மாம் ஆஹாகோசரோ கிராம்
கம்பீர—ஸ்லக்ஷணயா வாசா சுச:ப்ரசமயன் இவ
ஏவம்—இவ்வாறு; யதந்தம்—முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவர்: விஜனே—தனிமையான; மாம்— என்னிடம்; ஆஹ—கூறினார்; அகோசர—பௌதிகமான ஓசையின் வரம்பிற்கு அப்பால்; கிராம்-பேச்சுகள்; கம்பீர—கம்பிரமான; ஸ்லக்ஷ்ணயா—கேட்பதற்கு இனிமையான; வாசா—வார்த்தைகள்; சுச:—வருத்த; ப்ரசமயன்—குறைத்து; இவ—போல்.
அத்தனிமையான இடத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்ட, பௌதிக வர்ணணைகளுக்கு அப்பாற்பட்டவரான பரம புருஷ பகவான், என்னுடைய வருத்தத்தைக் குறைப்பதற்காகவே. இனிமையான சொற்களுடன் மிகவும் கம்பிரமாக என்னிடம் பேசினார்.
பதம் 1.6.21
ஹந்தாஸ்மின் ஜன்மனி பவான் மா மாம் த்ரஷ்டும் இஹார்ஹதி
அவிபக்வ—கஷாயாணாம் துர்தர்சோ ‘ஹம் குயோகினாம்
ஹந்த—ஓ நாரதரே; அஸ்மின்-இந்த; ஜன்மனி—வாழ்நாள்; பவான்-நீ; மா-முடியாது; மாம்-என்னை; த்ரஷ்டும்- காண; இஹ-இங்கு: அர்ஹதி—தகுதி; அவிபக்வ-பக்குவமடையாத; கஷாயாணாம்—பௌதிக அழுக்கு; தூர்தர்ச:—காண்பது கடினம்; அஹம்—நான்; குயோகினாம்—முழுமையடையாத தொண்டினால்.
நாரதா (பகவான் கூறினார்). இப்பிறவியில் இனிமேல் என்னை உன்னால் காண முடியாது என்பதை நான் வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன். தொண்டில் பூரணத்துவத்தை அடையாதவர்களும், பௌதிக பற்றிலிருந்து முழுமையாக விடுபடாதவர்களும் என்னைக் காண்பது கடினம்.
பதம் 1.6.22
ஸக்ருத் யத் தர்சிதம் ரூபம் ஏதத் காமாயதே “னக
மத்—காம;: சனகை: ஸாது ஸர்வான் முன்சதி ஹ்ருச்-சயான்
ஸக்ருத்—ஒருமுறை மட்டுமே; யத்—அந்த; தர்சிதம்—காட்டினேன்; ரூபம்— உருவத்தை; ஏதத்—இது; காமாய—ஆசைகளுக்காக; தே—உனது; அநக- நற்குணவானே; மத்—என்னுடைய; காம:—ஆசை; சனகை:—அதிகரிப்பதன் மூலம்; ஸாது—பக்தர்; ஸர்வான்—எல்லா; முன்சதி—கைவிடுகிறார்; ஹ்ருத்-சயான்—பௌதிக ஆசைகள்.
நற்குணவானே, ஒருமுறை மட்டுமே நீ என் உருவத்தைக் கண்டிருக்கிறாய். இது, என் மீது உனக்கேற்பட்ட ஆசையை அதிகரிப்பதற்காகவே ஆகும். ஏனெனில், என்னை அடைய நீ எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக விரும்புகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் நீ விடுபடுவாய்.
பதம் 1.6.23
ஸத்—ஸேவயாதீர்கயாபி ஜாதா மயி த்ருடா மதி:
ஹிதீவாவத்யம் இமம் லோகம் கந்தா மஜ்—ஜனதாம் அஸி
ஸத் – ஸேவயா — பரபிரம்மத்திற்கான தொண்டினால்; அதீர்கயா— சிலநாட்களுக்கு; அபி—கூட; ஜாதா—அடைந்தபின்; மயி—என்னிடம்; த்ருடா—உறுதியான; மதி:—புத்தியை; ஹித்வா—கைவிட்டதும்; அவத்யம்—வருந்தத்தக்கதான; இமம்—இந்த; லோகம்— ஐடவுலகங்களை; கந்தா—செல்கிறான்; மத்—ஜனதாம்—எனது சகாக்கள்; அஸி — ஆகி.
ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பரபிரம்மத்தின் தொண்டில் ஈடுபடுவதால், பக்தனொருவன் என்னிடம் உறுதியான, நிலையான புத்தியைப் பெறுகிறான். அதன் விளைவாக, வெறுக்கத்தக்க பௌதிக உலகங்களைக் கைவிட்ட பின், பக்தன் ஆன்மீக உலகிற்குச் சென்று எனது சகாக்களில் ஒருவனாக மாறிவிடுகிறான்.
பதம் 1.6.24
மதிர் மயி நிபத்தேயம் ந விபத்யேத கர்ஹிசித்
ப்ரஜா—ஸர்க—நிரோதே ‘பி ஸ்ம்ருதிஸ் ச மத்-அனுக்ரஹாத்
மதி—புத்தி; மயி— என்னிடம் அர்ப்பணிக்கப்பட்ட; நிபத்தா— ஈடுபடுத்தப்பட்ட; இயம்—இந்த; ந—ஒருபோதும் முடியாது; விபத்யேத—பிரிக்க; கர்ஹிசித்—எந்த நேரத்திலும்; ப்ரஜா—ஜீவராசிகள், ஸர்க—படைக்கப்படும்பொழுது; நிரோதே—அழிக்கப்படும் பொழுதும் கூட ; அபி—கூட; ஸ்ம்ருதி-நினைவாற்றல்; ச-மேலும்; மத்—எனது; அனுக்ரஹாத்—கருணையால்.
எனது பக்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அறிவு எந்த நேரத்திலும் அழிக்கப்பட முடியாததாகும். சிருஷ்டி மற்றும் அழிவுக் காலங்களிலும் கூட, என் கருணையினால் உனது நினைவாற்றல் தொடர்ந்திருக்கும்.
பதம் 1.6.25
ஏதாவத் உக்த்வோபரராம தந் மஹத்
பூதம் நபோ—லிங்கம் அலிங்கம் ஈஸ்வரம்
அஹம் ச தஸ்மை மஹதாம் மஹீயஸே:
சீர்ஷ்ண அவணாமம் விததே ‘நுகம்பித:
ஏதாவத்—இவ்வாறு; உக்த்வா-பேசுவதை; உபரராம—நிறுத்தியதும்; தத்—அந்த; மஹத்—மிகச்சிறந்தவரும்; பூதம்—அற்புதமானவரும்; நப-லிங்கம்:—ஒலி வடிவமானவரும்; அலிங்கம்—கண்களுக்குக் காணப்படாதவரும்; ஈஸ்வரம்- பரம அதிகாரி: அஹம்-தான்; ச-மேலும்; தஸ்மை- அவருக்கு: மஹதாம்—மிகவும்: மஹீயஸே:—புகழப்படுபவருக்கு; சீர்ஷ்ண—தலையால்; அவணாமம்—வணக்கங்கள்; விததே—செய்தேன்; அநுகம்பித-அவரால் ஆதரவு காட்டப்பட்டதால்.
பிறகு, ஒலி வடிவமானவரும், கண்களுக்குக் காணப்படாதவரும், ஆனால் மிகவும் அற்புதமானவருமான அப்பரம அதிகாரி பேசுவதை நிறுத்திக்கொண்டார். நான் நன்றியுணர்வுடன் சிரம் தாழ்த்தி அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.
பதம் 1.6.26
நாமானி அனந்தஸ்ய ஹத—த்ரப:படன்
குஹ்யானி பத்ராணி க்ருதானி ச ஸ்மரன்
காம் பர்யடம்ஸ் துஷ்ட-மனா கத-ஸ்ப்ருஹ:
காலம் ப்ரதீக்ஷன் விமதோ விமத்ஸர:
நாமானி- புனித நாமம், புகழ் முதலியவைகளை; அனந்தஸ்ய— எல்லையற்றவரின்; ஹத-த்ரப்:—ஜடவுலகின் எல்லா முறைகளில் இருந்தும் விடுபட்டு; படன்—உச்சரித்தல், திரும்ப திரும்ப படித்தல் முதலியவைகளால்; குஹ்யானி—புதிரான; பத்ராணி- எல்லா ஆசிர்வாதங்களையும் அளிக்கக்கூடியது; க்ருதானி- செயல்கள்; ச-மேலும்: ஸ்மரன்—எப்பொழுதும் நினைவிற் கொண்டு; காம்—பூமியில்; பர்யடன்—எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்து: துஷ்ட-மனா:—பூரண திருப்தியுடன்; கத-ஸ்ப்ருஹ:—எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு; காலம்-காலம்; ப்ரதீக்ஷன்— காத்திருந்து; விமத:– அகம்பாவம் இல்லாமல்; விமத்ஸர:-பொறாமை இல்லாமல்.
இவ்வாறு நான் ஜடவுலக வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு. பகவானின் நாமத்தையும், புகழையும் இடைவிடாமல் பாடத் துவங்கினேன். பகவானின் உன்னத லீலைகளைப் பற்றி இவ்வாறு பாடுவதும், நினைவிற் கொள்வதும் நன்மை அளிக்கக்கூடியவையாகும். அவ்வாறு செய்துகொண்டு, பூரண திருப்தியுடனும், பணிவுடனும், பொறாமையின்றியும் நான் உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்தேன்.
பதம் 1.6.27
ஏவம் க்ருஷ்ண-மதேர் ப்ரஹ்மன் நாஸக்தஸ்யாமலாத்மன:
கால:ப்ரா துரபூத் காலே தடித் ஸௌதாமனீ யதா
ஏவம்—இவ்வாறாக; க்ருஷ்ண—மதே:—கிருஷ்ணரைப் பற்றிய எண்ணத்தில் முழுமையாக ஆழ்ந்துள்ள ஒருவர்: ப்ரஹ்மன்-வியாச தேவரே; ந—இல்லை; ஆஸக்தஸ்ய-பற்றுக்கொண்டுள்ளவரின்; அமல-ஆத்மன:— எல்லா பௌதிக அழுக்குகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ள ஒருவரின்; கால:—மரணம்; ப்ராதுரபூத்—காணப்படகூடிய; காலே—காலபோக்கில்; தடித்-மின்னல்; ஸௌதாமனீ— வெளிச்சமாக்கும்; யதா—உள்ளது உள்ளபடி.
எனவே பிராமணரான வியாசதேவரே, கிருஷ்ணரைப் பற்றிய எண்ணத்தில் முழுமையாக நான் ஆழ்ந்திருந்ததால் என்னிடம் எவ்விதமான பற்றும் இருக்கவில்லை. இவ்வாறு எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டிருந்த நான், மின்னலும், வெளிச்சமும் ஒரே நேரத்தில் தோன்றுவதைப் போல், கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்ததிருக்கும்போதே காலப்போக்கில் எனக்கு மரணமும் சம்பவித்தது.
பதம் 1.6.28
ப்ரயுஜ்யமானே மயி தாம் சுத்தாம் பாகவதீம் தனும்
ஆரப்த—கர்ம—நிர்வாணோ ஞபதத் பாஞ்ச பௌதிக:
ப்ரயுஜ்யமானே—அளிக்கப்பட்டதால்; மயி-எனக்கு: தாம்—அந்த; சுந்தரம்-திவ்யமான; பாகவதீம் —பரம புருஷருடன் சகவாசம் கொள்வதற்குப் பொருத்தமான; தனும்—உடல்; ஆரப்த-சேகரிக்கப்பட்ட; கர்ம—பலன்நோக்குக் கருமம்; நிர்வாண—தடுக்கப்பட வேண்டிய; ஞபதத்—கைவிட்டு : பாஞ்ச-பௌதிக:—பஞ்ச பூதங்களால் ஆன உடலை.
பரம புருஷ பகவானுடன் சகவாசம் கொள்வதற்கு தகுதியள்ள ஓர் ஆன்மீக உடல் அளிக்கப்பட்டதால், பஞ்ச பூதங்களான உடலை நான் கைவிட்டேன். ஆகவே, அதனால் பெற்ற கர்ம பலன்களும் நின்றுவிட்டன.
பதம் 1.6.29
கல்பாந்த இதம் ஆதாய சயானே ‘ம்பஸி உதன்வத:
சிசயிஷோர் அனுப்ராணம் விவிசே ‘ந்தர் அஹம் விபோ;
கல்ப—அந்தே:—பிரம்மாவின் நாள் முடிவில்; இதம்—இந்த; ஆதாய—மொத்தமாக; சயானே-சயனிக்கச் சென்றதால்; அம்பஸி—காரண ஜலத்தில்; உதன்வத—அழிவு; சிசயிஷோ-பரம புருஷ பகவானின் (நாராயணரின்) சயனம்; அனுப்ராணம்—சுவாசம்; விவிசே—உள்ளே புகுந்தார்; அந்த- உள்ளே; அஹம்-நான்; விபோ-பிரம்மதேவரின்.
யுகத்தின் முடிவில், பரம புருஷ பகவானான நாராயணர் பிரளய நீரில் சயனித்த பொழுது, பிரம்மா படைப்பிற்குரிய எல்லா மூலப்பொருட்களுடனும் பகவானுக்குள் புக ஆரம்பித்தார், நானும் அவரது சுவாசத்தின் வழியாக அவருக்குள் புகுந்தேன்.
பதம் 1.6.30
ஸஹஸ்ர-யுக-பர்யந்தே உத்தாயேதம் ஸிஸ்ருக்ஷத:
மரீசி—மிஸ்ரா ருஷய: ப்ராணேப்யோ ‘ஹம் ச ஜக்ஞிரே
ஸஹஸ்ர—ஆயிரம்; யுக-43,20,000 ஆண்டுகள்; பர்யந்தே- அந்த நேரத்தின் முடிவில்; உத்தாய-உறங்கச் சென்றவர்; இதம்- இந்த; ஸிஸ்ருக்ஷத:-மீண்டும் படைக்க விரும்பினார்; மரீசி-மிஸ்ரா:—மரீசியைப் போன்ற ரிஷிகள்; ருஷய—எல்லா ரிஷிகளும்; ப்ராணேப்ய:—அவரது புலன்களிலிருந்து: அஹம்-நான்; ச -கூட; ஜக்ஞிரே-தோன்றினேன்.
432 கோடி சூரிய ஆண்டுகளுக்குப் பிறகு, பகவானின் விருப்பப்படி மீண்டும் படைப்பதற்காக பிரம்மா உறங்கி எழுந்தபொழுது, மரீசி, அங்கிரா மற்றும் அத்ரி முதலான எல்லா ரிஷிகளும் பகவானின் திவ்யமான உடலிலிருந்து படைக்கபட்டனர். அவர்களுடன் நானும் தோன்றினேன்.
பதம் 1.6.31
அந்தர் பஹிஸ் ச லோகாம்ஸ் த்ரீன் பர்யேமி அஸ்கந்தித-வ்ரத:
அனுக்ரஹான் மஹா-விஷ்ணோர் அவிகாத—கதி: கவசித்
அந்த-ஆன்மீக உலகிலும்; பஹி- ஜடவுலகிலும்; ச-மேலும்; லோகான்-கிரகங்கள்; த்ரீன்-மூன்று (பிரிவுகள்): பர்யேமி—பிரயாணம் செய்கிறேன்; அஸ்கத்தித—இடைவிடாத; வ்ரத:—விரதம்; அனுக்ரஹாத்—அகாரணமான கருணையால்; மஹா-விஷ்ணோ:— மஹாவிஷ்ணுவின் (காரணோதகசாயீ விஷ்ணு); அவிகாத— தடையின்றி; கதி—நுழைவு: க்வசித்—எந்த நேரத்திலும்.
சர்வ வல்லமையுடைய விஷ்ணுவின் கருணையால், அன்று முதல் நான் ஆன்மீக உலகிலும், முப்பிரிவுகளைக் கொண்ட ஜடவுலகிலும் நடையின்றி பிரயாணம் செய்து வருகிறேன். பசுவானின் இடையறாத பக்தித் தொண்டில் நான் நிலையாக ஈடுபட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
பதம் 1.6.32
தேவ தத்தாம் இமாம் வீணாம் ஸ்வர ப்ரஹ்ம விபூஷிதாம்
மூர்ச்சயித்வா ஹரி-கதாம் காயமானஸ் சராமி அஹம்
தேவ—பரம புருஷ பகவான்; தத்தாம்-பரிசளிக்கப்பட்ட; இமாம்—இந்த; வீணாம்- விணை; ஸ்வர— ஸ்வரம்; ப்ரஹ்ம-திவ்யமான; விபூஷிதாம்—அலங்கரிக்கப்பட்ட; மூர்ச்சயித்வா—வாசித்துக் கொண்டு; ஹரி-கதாம்:—உன்னத மகிமைகளை; காயமான-இடைவிடாமல் பாடிக்கொண்டு; சராமி-பிரயாணம் செய்கிறேன்; அஹம்-நான்.
இவ்வாறாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் எனக்கு அளிக்கப்பட்டதும், தெய்வீக ஓசை நிரம்பியதுமான இவ்வீணையை வாசித்துக் கொண்டு பகவானின் உன்னதமான மகிமைகளை இடைவிடாமல் பாடிக்கொண்டு நான் பிரயாணம் செய்கிறேன்.
பதம் 1.6.33
ப்ரகாயத: ஸ்வ-வீர்யாணி தீர்த-பாத: ப்ரிய-ஸ்ரவா:
ஆஹுத இவ மே சீக்ரம் தர்சனம் யாதி சேதஸி
ப்ரகாயத- இவ்வாறு பாடுவதால்; ஸ்வ-வீர்யாணி—சொந்த செயல்கள்; தீர்த-பாத:- எல்லா மங்கள தன்மைகளுக்கும் பிறப்பிடமான பாதங்களைக் கொண்ட பகவான்; ப்ரிய-ஸ்ரவா:-கேட்பதற்கினிய; ஆஹுத—அழைக்கப்பட்டது: இவ—இதுபோலவே: மே-எனக்கு; சீக்ரம்-சீக்கிரமாக; சேதஸி — இதய பீடத்தில்; தர்சனம்- தரிசனம்; யாதி-தோன்றுகிறார்;
பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளும், செயல்களும் செவிக்கு இன்பமூட்டுபவை ஆகும். அவரது புனிதமான செயல்களைப் பற்றி நான் பாடத் துவங்கிய உடனேயே, அவரைக் கூவி அழைத்ததைப் போல், உடனே என் இதயக் கமலத்தில் அவர் தோன்றுகிறார்.
பதம் 1.6.34
ஏதத் தி ஆதுர—சித்தானாம் மாத்ரா—ஸ்பர்சேச்சயா முஹு:
பவ-ஸிந்து- பிலவோ த்ருஷ்டோ ஹரி-சர்யானுவர்ணனம்
ஏதத்- இந்த; ஹி-நிச்சயமாக; ஆதுர- சித்தானாம்:— எப்பொழுதும் கவலைகளும், ஆவல்களும் நிறைந்துள்ள மனங்களைக் கொண்டவர்களின்; மாத்ரா—புலன் இன்பங்களுக்கான பொருட்கள்; ஸ்பர்ச- புலன்கள்; இச்சயா—ஆசைகளால்; முஹு:—எப்பொழுதும்; பவ—ஸிந்து:— அறியாமைக் (அனுபவித்தேன்) கடல்; ப்லவ:-படகு; த்ருஷ்ட -அனுபவிதேன்; ஹரி-சர்ய:— பரம புருஷராகிய ஸ்ரீ ஹரியின்; அனுவர்ணனம்—இடையறாது பாடுதல்.
இந்த்ரிய போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இடைறாத ஆசைகளில் மூழ்கியிருப்பவர்களால், பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் அறியாமை எனும் கடலைக் கடந்துவிட முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தினால் நான் உணர்ந்து கொண்டேன்.
பதம் 1.6.35
யமாதிபிர் யோக—பதை: காம-லோப-ஹதோ முஹு;
முகுந்த—ஸேவயா யத்வத் ததாத்மாத்த ந ஸாம்யதி
யம—ஆதிபி: சுயக்கட்டுப்பாட்டைப் பயிலும் முறையால்; யோக பதை—யோக முறையினால் (தெய்வீக நிலையை அடைவதற்கான யோக சக்தி); காம- புலனின்ப ஆசைகள்; லோப—புலன்களை திருப்திப்படுத்துவதற்கான சிற்றின்ப இச்சை; ஹயத:—அடக்கப்படுகிறது; முஹூ—எப்பொழுதும்; முகுந்த-பரம புருஷ பகவான்; ஸேவயா:— அச்சேவையால்; யத்வத்—உள்ளபடி; ததா—அதைப் போலவே; ஆத்மா-ஆத்மா; அத்தா-எல்லா நடைமுறை நோக்கங்களுக்கும்; ந-இல்லை; சாம்யதி—திருப்தியடைகிறது.
யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருவ பசுவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.
பதம் 1.6.36
ஸர்வம் தத் இதம் ஆக்யாதம் யத் ப்ருஷ்டோ அஹம் த்வயாநக
ஜன்ம-கர்ம-ரஹஸ்யம் மே பவதஸ் சாத்ம தோஷணம்
ஸர்வம்-எல்லா; தத்- அந்த; இதம-இது; ஆக்யாதம்-விளக்கினேன்; யத்-எதெல்லாம்; ப்ருஷ்ட- கேட்கப்பட்டது; அஹம்- என்னிடம்; த்வயா—உங்களால்; அநக—பாவங்கள் இல்லாமல்; ஜன்ம- பிறப்பு; கர்ம-செயல்கள்; ரஹஸ்யம்—இரகசியங்கள்; மே—என்னுடைய ; பவத:— உங்களது ; ச-மேலும்; ஆத்ம-ஆத்மா; தோஷணம் — திருப்தி.
வியாசதேவரே, நீர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறீர். நீர் கேட்டபடியே எனது பிறப்பு மற்றும் தன்னுணர்வுக்கான செயல்கள் ஆகியவற்றை நான் விளக்கினேன். இவையனைத்தும் உம்முடைய சொந்த திருப்திக்கு உதவும்.
பதம் 1.6.37
சூத உவாச
ஏவம் ஸம்யாஷ்ய பகவான் நாரதோ வாஸவீ—ஸுதம்
ஆமந்த்ரிய வீணாம் ரணயன் யயௌ யாத்ருச்சிகோ முனி:
ஸூத—சூத கோஸ்வாமி; உவாச—கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஸம்பாஷ்ய—கூறியதும்; பசுவான்-உன்னத சக்தி வாய்ந்த; நாரத- நாரத முனி; வாஸவி-_வாஸவீ (சக்தியவதி) எனப்படும்; ஸுதம்—மகன்; ஆமந்த்ரிய—வரவேற்று; வீணம்-விணையை; ரணயன்—வாசித்துக் கொண்டு; யயௌ—சென்றார்; யாத்ருச்சிக- விரும்பி இடத்திற்கெல்லாம்; முனி- முனிவர்.
ஸூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வியாசதேவரிடம் கூறியபின் ஸ்ரீல நாரத முனி அவரிடமிருந்து மனம்போன போக்கில் புறப்பட்டுச் சென்றார்.
பதம் 1.6.38
அஹோ தேவர்ஷிர் தந்யோ ‘யம் யத்-கீர்திம் சார்ங்கதன்வன:
காயன் மாத்யன் இதம் தந்த்ர்யா ரமயதி ஆதுரம் ஜகத்
அஹோ-எல்லா புகழும்; தேவர்ஷி—தேவரிஷி; தன்ய—எல்லா வெற்றியும்; அயம் யத்—யாரொருவர்; கீர்திம்—பெருமைகளை; சார்ங்க-தந்வன:— பரம புருஷ பகவானின்; காயன்—பாடும்; மாத்யன்—அதில் இன்பமடையும்; இதம்—இந்த; தந்த்ர்யா—வீணையின் உதவியுடன்; ரமயதி—உற்சாகப்படுத்துகிறார்; ஆதுரம்—துன்பப்படும்; ஜகதி—உலகம்.
ஸ்ரீல நாரத முனிவர் பரம புருஷ பகவானின் செயல்களைப் புகழ்வதால் அவருக்கு எல்லா புகழும், வெற்றியும் உண்டாகட்டும். பகவானைத் துதிப்பதால் அவர் தாமே மகிழ்ச்சி அடைவதுடன், பிரபஞ்சத்திலுள்ள எல்லா துன்பப்படும் ஆத்மாக்களுக்கும் உற்சாகத்தையும் ஊட்டுகிறார்.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “நாரதருக்கும் வியாசருக்கும் இடையிலான உரையாடல்” எனும் தலைப்பைக் கொண்ட, ஆறாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.