அத்தியாயம் – 25
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்:
அறிமுகம்
பதம் 10.25.1
ஸ்ரீ-ஸுக உவாச
இந்த்ரஸ் ததாத்மண: பூஜம் விஜ்ஞாய விஹதாம் ந்ருப
கோபேப்ய: க்ருஷ்ண-நாதேப்யோ நந்தாதிப்யஸ் சுகோப ஹ

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இந்த்ர:—தேவேந்திரன்; ததா—பின்னர்; ஆத்மன:—அவனுக்குரிய; பூஜாம்—வழிபாட்டின்; விஜ்ஞாய—அறிந்துகொண்டு; விஹதாம்—மாற்றப்பட்டது; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து); கோபேப்ய:—ஆயர்களிடத்தில்; க்ருஷ்ண-நாதேப்ய:—அவர்கள் கிருஷ்ணரைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டனர்; நந்த-ஆதிப்ய:—நந்த மகாராஜாவின் தலைமையின்கீழ்; சுகோப-ஹ—அவன் மிகுந்த சினம் கொண்டான்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, தனக்குரிய வேள்வி தடைபட்டது கண்ட இந்திரன், கிருஷ்ணரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட நந்த மகாராஜாவிடமும், ஆயர்களிடமும் பெருஞ்சீற்றம் கொண்டான்.

பதம் 10.25.2
கணம் ஸாம்வர்தகம் நாம மேகானாம் சாந்த-காரிணாம்
இந்த்ர: ப்ரசோதயத் க்ருத்தோ வாக்யம் சாஹேஸ-மானி உத

கணம்—கூட்டம்; ஸாம்வர்தகம் நாம—சாம்வர்தகம் என்னும் பெயருடைய; மேகானாம்—மேகங்கள்; ச—மேலும்; அந்த-காரிணாம்—அவை இப்பிரஞ்சத்திற்கே இறுதி செய்யக்கூடியன; இந்த்ர:—இந்திரன்; ப்ரசோதயத்—அனுப்பினான்; க்ருத்த:—சினத்துடன்; வாக்யம்—வார்த்தைகள்; ச—மற்றும்; ஆஹ—கூறினான்; ஈஸ-மானீ—தவறாகத் தன்னைப் பரம நெறியாளராகக் கருதிக் கொண்டு; உத—உண்மையில்.

சினம் கொண்ட இந்திரன் இப்பிரபஞ்சத்தையே அழிக்கவல்ல ‘சர்மவர்தகம்’ என்னும் மேகக் கூட்டத்தினை அனுப்பினான். தன்னை பரம நெறியாளராகக் கருதிக் கொண்டு அவன் பின்வருமாறு கூறினான்.

பதம் 10.25.3
அஹோ ஸ்ரீ-மத-மஹாத்ம்யம் கோபானாம் கானனௌகஸாம்
க்ருஷ்ணம் மர்த்யம் உபாஸ்ரித்ய யே சக்ருர் தேவ-ஹேலனம்

அஹோ—சற்றுப்பாருங்கள்; ஸ்ரீ—வளத்தின் காரணமாக; மத—மதி மயங்கி; மாஹாத்ம்யம்—பெரும் அளவு; கோபானாம்—கோபாலர்களின்; கானன—வனத்தில்; ஓகஸாம்—இருக்கின்றனர்; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; மர்த்யம்—ஒரு சாதாரண மனிதன்; உபாஸ்ரித்ய—அடைக்கலம் புகுந்து; யே—அவர்கள்; சக்ரு:—செய்திருக்கின்றனர்; தேவ—தேவர்களுக்கெதிராக; ஹேலனம்—குற்றம்.

(இந்திரன் கூறினான்:) இந்த ஆயர்குலத்தினரைச் சற்றுப் பாருங்கள், இவர்கள் தங்கள் வளத்தினால் மிகவும் மதிமயக்கம் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மனிதனான கிருஷ்ணனைச் சரணடைந்ததின் மூலம் தேவர்களிடத்தில் குற்றமிழைத்திருக்கின்றனர்.

பதம் 10.25.4
யதாத்ருடை: கர்ம-மயை: க்ரதுபிர் நாம-நௌ-நிபை:
வித்யாம் ஆன்வீக்ஷிகீம் ஹித்வா திதீர்ஷந்தி பவார்ணவம்

யதா—போன்று; அத்ருடை:—போதுமானதன்று; கர்ம-மயை:—பலன்தரும் செயலின் அடிப்படையிலான; க்ரதுபி:—வேள்விச் சடங்குகளினால்; நாம—பெயரில் மட்டும்; நௌ-நிபை:—தோணிகளாகப் பயன்படும்; வித்யாம்—அறிவு; ஆன்வீக்ஷிகீம்—ஆன்மீக; ஹித்வா—புறக்கணித்து; திதீர்ஷந்தி—அவர்கள் கடக்க முயல்கின்றனர்; பவ-அர்ணவம்—பௌதிக வாழ்க்கைக் கடலை.

அவர்கள் கிருஷ்ணரைச் சரண் புகுந்தது, உன்னத ஆத்ம ஞானத்தைப் புறக்கணித்துவிட்டு அதற்குப் பதிலாகப் பலன் தரும் வேள்விச் சடங்குகள் என்னும் படகுகளின் மூலம் பௌதிக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடக்க எண்ணும் மனிதர்களின் மதியற்ற முயற்சியைப் போன்றதாகும்.

பதம் 10.25.5
வாசாலம் பாலிஸம் ஸ்தப்தம் அஜ்ஞம் பண்டித-மானினம்
க்ருஷ்ணம் மர்த்யம் உபாஸ்ரித்ய கோபா மே சக்ரூர் அப்ரியம்

வாசாலம்—அதிகம் பேசுகின்ற; பாலிஸம்—சிறுவன்; ஸ்தப்தம்—செருக்குடைய; அஜ்ஞம்—அறிவற்ற; பண்டித-மானினம்—தன்னைப் பெரிய அறிஞனாக எண்ணும்; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; மர்த்யம்—ஒரு மனிதன்; உபாஸ்ரித்ய—தஞ்சம் புகுந்து; கோபா:—கோபாலர்கள்; மே—எனக்கெதிராக; சக்ரு:—செயல்பட்டனர்; அப்ரியம்—பாதகமாக.

தன்னைப் பெரிய அறிஞனாக எண்ணும் மதியற்ற, செருக்குடைய, அதிகம் பேசுகின்ற மானுடச் சிறுவனான கிருஷ்ணரைச் சரணடைந்ததின் மூலம் இந்த ஆயர்கள் எனக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர்.

பதம் 10.25.6
ஏஷாம் ஸ்ரியாவலிப்தானாம் க்ருஷ்ணேனாத்மாபிதாத்மனாம்
துனுத ஸ்ரீ-மத-ஸ்தம்பம் பஸூன் நயத ஸங்க்ஷயம்

ஏஷாம்—அவர்களின்; ஸ்ரியா—வளங்களினால்; அவலிப்தானாம்—மதிமயங்கியுள்ளவர்கள்; க்ருஷ்ணேன—கிருஷ்ணரால்; ஆத்மாபித—வலுப்படுத்தப்படுகிறது; ஆத்மானாம்—அவர்களது மனங்கள்; துனுத—நீக்க; ஸ்ரீ—அவர்களது செல்வத்தின் அடிப்படையில்; மத—மதிமயங்கி; ஸ்தம்பம்—அவர்களது வீண்கர்வத்தினை; பஸூன்—அவர்களது விலங்கினங்களை; நயத—கொணர்க; ஷங்க்ஷயம்—அழிவிற்கு.

(அழிவு செய்யும் மேகங்களைப் பார்த்து இந்திரன் கூறினான்) இம் மனிதர்களிடம் உள்ள செல்வமே இவர்களைக் கர்வமும் பெருமையும் கொள்ளச் செய்கிறது. அவர்களின் செருக்கு கிருஷ்ணரால் தாங்கப்படுகிறது. நீங்கள் சென்று அவர்களின் ஆணவத்தையும், விலங்கினங்களையும் அழிப்பீராக.

பதம் 10.25.7
அஹம் சைரவதம் நாகம் ஆருஹ்யானுவ்ரஜே வ்ரஜம்
மருத்-கணைர் மஹா-வேகைர் நந்த-கோஷ்ட-ஜிகாம்ஸயா

அஹம்—நான்; ச—மற்றும்; ஐராவதம்—ஐராவதம் என்னும் பெயருடைய; நாகம்—எனது யானை; ஆருஹ்ய—ஒட்டிக் கொண்டு; அனுவ்ரஜே—பின் தொடர்ந்து; வ்ரஜம்—விரஜத்திற்கு; மருத்-கணை:—வாயு-தேவர்களுடன் சேர்ந்து; மஹா-வேகை:—மகா வேகத்துடன்; நந்த-கோஷ்ட—நந்த மகாராஜாவின் ஆயர்குலம்; ஜிகாம்ஸயா—அழிக்கும் எண்ணத்துடன்.

நந்த மகாராஜாவின் ஆயர்குலத்தினை அழிப்பதற்காக எனது ஐராவதம் என்னும் யானையின் மீது அமர்ந்து கொண்டு, வேகமாக வீசும் வாயுதேவர்களுடன் இணைந்து நான் உங்களைப் பின் தொடர்ந்து விரஜத்திற்கு வருவேன்.

பதம் 10.25.8
ஸ்ரீ-ஸுக உவாச
இத்தம் மகவதாஜ்ஞப்தா மேகா நிர்முக்த-பந்தனா:
நந்த-கோகுலம் ஆஸாரை: பீடயாம் ஆஸுர் ஓஜஸா

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்வாறாக; மகவதா—இந்திரனால்; ஆஜ்ஞப்தா:—ஆணையிடப்பட்டு; மேகா:—மேகங்கள்; நிர்முக்த-பந்தனா:—அவற்றின் கட்டிலிருந்து விடுதலை பெற்று (உலகின் அழிவுக்காலம் வரும் வரை அவை தடுத்து வைக்கப்பட்டிருக்கும்); நந்த-கோகுலம்—நந்த மகாராஜாவின் கோகுலம்; ஆஸாரை:—பெரு மழை பெய்வதற்காக; பீடயாம் ஆஸு:—அவை துயர் செய்தன; ஓஜஸா—அவற்றின் சக்தி முழுவதையும் ஒருங்கு திரட்டி.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிரபஞ்ச அழிவிற்கான மேகங்கள் இந்திரனின் கட்டளையினால் காலம் அல்லாத காலத்தில் தங்களது கட்டிலிருந்து விடுதலைபெற்று நந்த மகாராஜாவின் கோகுலத்தில் மழை பொழியச் சென்றன. அங்கே அவை தமது சக்திகளையெல்லாம் ஒருங்கு திரட்டிக் கனமழை பெய்து அங்குள்ளவர்களைத் துன்புறுத்தின.

பதம் 10.25.9
வித்யோதமானா வித்யுத்பி: ஸ்தனந்த: ஸ்தனயித்துபி:
தீவ்ரைர் மருத்-கணைர் நுன்னா வவ்ருஷுர் ஜல-ஸர்கரா:

வித்யோதமான:—ஒளி செய்து; வித்யுத்பி:—மின்னல் அம்புகளால்; ஸ்தனந்த:—பெரும் ஓசை செய்து; ஸ்தனயித்துபி:—இடியுடன்; தீவ்ரை:—அஞ்சத்தக்க; மருத்-கணை:—வாயுதேவர்களால்; நுன்னா:—முன்னோக்கி செலுத்தப்பட்டு; வவ்ருஷு:—அவை மழை பொழிந்தன; ஜல-ஸர்கரா:—ஆலங்கட்டிகள்.

அச்சந்தரும் வாயுதேவர்களால் முன்னோக்கிச் செலுத்தப்பட்டு, மின்னல் அம்புகளுடனும், பெருத்த இடி ஓசையுடனும் அம்மேகங்கள் ஆலங்கட்டி மழை பெய்தன.

பதம் 10.25.10
ஸ்தூணா-ஸ்தூலா வர்ஷ-தாரா முஞ்சத்ஸ்வ் அப்ரேஷ்வ் அபீக்ஷணஸ:
ஜலௌகை: ப்லாவ்யமானா பூர் நாத்ருஷ்யத நதோன்னதம்

ஸ்தூணா—தூண்களைப் போன்று; ஸ்தூலா:—ஏராளமாக; வர்ஷதாரா:—மழைத்துளிகள்; முஞ்சத்ஸு—பெய்து; அப்ரேஷு—மேகங்கள்; அபீக்ஷணஸ:—தொடர்ந்து; ஜல—ஓகை:—மழை வெள்ளத்தினால்; ப்லாவ்யமான—இணைந்து; பூ:—பூமி; ந அத்ருஸ்யத—காணமுடியவில்லை; நத-உன்னதம்—தாழ்வான அல்லது மேலான.

பெருந்தூண்களைப் போன்ற மழைத்துளிகளை அம்மேகங்கள் பொழிந்தன. பூமி முழுவதும் வெள்ளக்காடாகியது. உயர்ந்த பகுதி தாழ்ந்த பகுதி என்று பிரித்துக்காண முடியாத அளவிற்கு பூமி தரைமட்டமாகியது.

பதம் 10.25.11
அதி-ஆஸாராதி-வாதேன பஸவோ ஜாத-வேபனா:
கோபா கோப்யஸ் ச ஸீதார்தா கோவிந்தம் ஸரணம் யயு:

அதி-ஆஸாரா—பெருமழையினால்; அதி-வாதேன—புயற்காற்றினாலும்; பஸவ:—பசுக்களும் பிறவிலங்குகளும்; ஜாத-வேபனா:—நடுங்கின; கோபா:—கோபாலர்கள்; கோப்ய:—கோபியர்கள்; ச—மற்றும்; ஸீத—குளிரினால்; ஆர்தா:—துன்புற்றனர்; கோவிந்தம்—பகவான் கோவிந்தனிடம்; ஸரணம்—சரணடைய; யயு:—அவர்கள் சென்றனர்.

பலத்த காற்றினாலும், பெருமழையினாலும் பசுக்களும், பிற விலங்கினங்களும் நடு நடுங்கின. ஆயர்குல ஆண்களும், பெண்களும் குளிரினால் துன்புற்றனர். அனைவரும் அடைக்கலம் வேண்டி பகவான் கோவிந்தனிடம் சென்றனர்.

பதம் 10.25.12
ஸிர: ஸுதாம்ஸ் ச காயேன ப்ரச்சாத்யாஸார-பீடிதா:
வேபமானா பகவத: பாத-மூலம் உபாயயு:

ஸிர:—அவற்றின் தலைகளினால்; ஸுதான்—தமது குழந்தைகள்; ச—மற்றும்; காயேன—தமது உடல்களால்; ப்ரச்சாத்ய—மறைத்தபடி; ஆஸார்-பீடிதா:—மழையினால் வருந்தி; வேபமானா:—நடுங்கிக் கொண்டு; பகவத:—முழுமுதற்கடவுள்; பாத-மூலம்—தாமரைத் திருவடிகளின் அடியில்; உபாயயு:—அவர்கள் அடைந்தனர்.

கனமழை தந்த துன்பத்தினால் நடுங்கியபடியும் தமது உடல்களினால் தலைகளையும் கன்றுகளையும் மறைத்தபடியும் பசுக்கள் முழு முதற்கடவுளின் தாமரைத் திருவடிகளை அணுகின.

பதம் 10.25.13
க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-பாக த்வன்-நாதம் கோகுலம் ப்ரபோ
த்ராதும் அர்ஹஸி தேவான் ந: குபிதாத் பக்த-வத்ஸல

க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா; மஹா-பாக—ஓ, மகா பாக்கியவானே; த்வத்-நாதம்—உமக்கு நீரே தலைவர்; கோ-குலம்—கோகுலம்; ப்ரபோ—ஓ, பிரபுவே; த்ராதும் அர்ஹஸி—காத்தருள்வீராக; தேவாத்—தேவேந்திரனிடமிருந்து; ந:—எம்மை; குபிதாத்—சினம் கொண்ட; பக்த-வத்ஸல—ஓ, பக்தர்களிடம் மிகுந்த பாசமுடையவரே.

(ஆயர்குலப் பெண்களும் ஆண்களும் பகவானிடம் கூறினர்:) கிருஷ்ணா, கிருஷ்ணா, ஓ, பாக்கியவனே, இந்திரனின் தண்டனையிலிருந்து பசுக்களைக் காத்தருள்வீராக! ஒ, பக்தர்களிடம் பாசமுடையவரே, எம்மையும் காத்தருள்வீராக.

பதம் 10.25.14
ஸிலா-வர்ஷாதி-வாதேன ஹன்யமானம் அசேதனம்
நிரீக்ஷ்ய பகவான் மேனே குபீதேந்த்ர-க்ருதம் ஹரி:

ஸிலா—ஆலங்கட்டி; வர்ஷ—மழையினால்; அதி-வாதேன—மற்றும் பலத்த காற்றினால்; ஹன்யமானம்—தாக்கப்பட்டு; அசேதனம்—உணர்விழந்தனர்; நிரீக்ஷ்ய—கண்டு; பகவான்—முழுமுதற்கடவுள்; மேனே—எண்ணினார்; குபித—சினம்; இந்த்ர—இந்திரனால்; க்ருதம்—செய்யப்பட்டது; ஹரி:—பகவான் ஹரி.

தமது கோகுலவாசிகள் ஆலங்கட்டி மழையினாலும், பெருஞ்சூறைக் காற்றினாலும் உணர்விழந்த நிலைக்கு வந்திருப்பதைக் கண்ட பகவான் ஹரி “இது சினங்கொண்ட இந்திரனின் வேலையே” என்று அறிந்து கொண்டார்.

பதம் 10.25.15
அபர்த்வ் அதி-உல்பணம் வர்ஷம் அதி-வாதம் ஸிலா-மயம்
ஸ்வ-யாகே விஹதே ‘ஸ்மாபிர் இந்த்ரோ நாஸாய வர்ஷதி

அப-ருது—பருவமல்லாத காலத்தில்; அதி-உல்பணம்—வழக்கத்திற்கு மாறாகக் கடுஞ்சீற்றமுடன்; வர்ஷம்—மழை; அதி-வாதம்—பலத்த காற்றுடன் சேர்ந்து; ஸிலா-மயம்—ஆலங்கட்டிகள் நிறைந்தது; ஸ்வ-யாகே—அவனுக்குரிய வேள்வி; விஹத—தடைப்பட்டதினால்; அஸ்மாபி:—நம்மால்; இந்த்ர:—தேவேந்திரன்; நாஸாய—நாசம் செய்வதற்கு; வர்ஷதி—மழைபெய்யச் செய்கின்றான்.

(ஸ்ரீ கிருஷ்ணர் தமக்குள் கூறிக்கொண்டார்:) அவனுக்குரிய வேள்வியை நாம் தடுத்து நிறுத்தியதால் இந்திரன் வழக்கத்திற்கு மாறாகப் பலத்த காற்றுடன் கூடிய, துன்பம் விளைவிக்கவல்ல மழைபெய்யச் செய்கின்றான்.

பதம் 10.25.16
தத்ர ப்ரதிவிதிம் ஸம்யக் ஆத்ம-யோகேன ஸாதயே
லோகேஸ-மானினாம் மௌட்யாத் ஹனிஷ்யே ஸ்ரீ-மதம் தம:

தத்ர—இது தொடர்பாக; ப்ரதி-விதம்—எதிர்நடவடிக்கைகள்; ஸம்யக்—முறையாக; ஆத்ம-யோகேன—எனது யோக சக்தியால்; ஸாதயே—நான் ஏற்பாடு செய்வேன்; லோக-ஈஸ—உலகின் தலைவனாக; மானினாம்—தவறாகத் தம்மைக் கருதுபவர்கள்; மௌட்யாத்—மடமையின் காரணமாக; ஹனிஷ்யே—நான் தோற்கடிப்பேன்; ஸ்ரீ-மதம்—செல்வச் செருக்கினையும்; தம:—அறியாமையினையும்.

இந்திரனால் செய்யப்பட்ட இந்த இடையூறுக்கு எனது யோக சக்தியால் நான் முற்றிலும் எதிர் நடவடிக்கை மேற்கொள்வேன். தமது செல்வத்தினால் இந்திரன் போன்ற தேவர்கள் கர்வமுடையவர்களாக இருக்கின்றனர். மடமையின் காரணமாக அவர்கள் தம்மை இப்பிரபஞ்சத்தின் தலைவனாகக் கருதுகின்றனர். இவர்களது அறியாமையினை நான் இப்போது அழிப்பேன்.

பதம் 10.25.17
ந ஹி ஸாத்-பாவ-யுக்தானாம் ஸுராணாம் ஈஸ-விஸ்மய:
மத்தோ ‘ஸதாம் மான-பங்க: ப்ரஸமாயோபகல்பதே

ந—இல்லை; ஹி—உறுதியாக; ஸத்-பாவ—சத்துவக் குணத்துடன்; யுக்தானாம்—உடையவர்களாக இருக்கின்றனர்; ஸுராணாம்—தேவர்களின்; ஈஸ—கட்டுப்படுத்தும் தலைவர்களாக; விஸ்மய:—தவறான அடையாளம்; மத்த:—என்னால்; அஸதாம்—உண்மையற்ற; மான—வீண் பெருமையின்; பங்க:—நீக்குதல்; ப்ரஸமாய—விடுவிப்பதற்காக; உபகல்பதே—உறுதிசெய்யப்படுகிறது.

தேவர்கள் சத்துவ குணமுடையவர்களாக இருப்பதினால் தன்னையே தலைவனாகக் கருதும் அவர்களது ஆணவமானது அவர்களை நிச்சயம் பாதித்துவிடக் கூடாது. அவ்வாறு சத்துவகுணம் இழந்து, ஆணவம் மட்டுமே உடையவர்களாக இருப்பவர்களெனில், அவர்களது ஆணவத்தை அழித்து அவர்களைக் காப்பதே எனது நோக்கமாகும்.

பதம் 10.25.18
தஸ்மான் மச்-சரணம் கோஷ்டம் மன்-நாதம் மத்-பரிக்ரஹம்
கோபாயே ஸ்வாத்ம யோகேன ஸோ ‘யம் மே வ்ரத ஆஹித:

தஸ்மாத்—ஆகையினால்; மத்-ஸரணம்—என்னைத் தஞ்சமடைந்த; கோஷ்டம்—ஆயர்குலத்தினர்; மத்-நாதம்—என்னைத் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்; மத்-பரிக்ரஹம்—எனது சொந்தக் குடும்பம்; கோபாயே—நான் பாதுகாப்பேன்; ஸ்வ-ஆத்ம-யேகேன—எனது சுயயோக சக்தியினால்; ஸ:-அயம்—அது; மே—என்னால்; வ்ரத:—விரதம்; ஆஹித:—மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆயர்குலம் எனது சொந்தக்குடும்பம் ஆதலினாலும், ஆயர்கள் என்னை அடைக்கலம் கொண்டு என்னையே தங்கள் தலைவனாகவும் ஏற்றுக்கொண்டிருப்பதினாலும் எனது யோக சக்தியால் நான் ஆயர்குலத்தைப் பாதுகாப்பேன். மேலும் எனது பக்தர்களைக் காப்பதாக நான் விரதம் மேற்கொண்டிருக்கின்றேன்.

பதம் 10.25.19
இதி உக்த்வைகேன ஹஸ்தேன க்ருத்வா கோவர்தனாச்சலம்
ததார லீலயா விஷ்ணுஸ் சத்ராகம் இவ பாலக:

இதி—இவ்வாறு; உக்த்வை—கூறியபின்னர்; ஏகேன—ஒரு; ஹஸ்தேன—கரத்தில்; க்ருத்வா—எடுத்தார்; கோவர்தன-அசலம்—கோவர்தனமலையை; ததார—தூக்கி நிறுத்தினார்; லீலயா—மிக எளிதில்; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; சத்ராகம்—ஒரு காளான் குடையை; இவ—போன்று; பாலக:—ஒரு குழந்தை;

இவ்வாறு கூறிய விஷ்ணுவான பகவான் கிருஷ்ணர் ஒரு குழந்தை காளான்குடையை மிக எளிதாகத் தூக்குவது போல் கோவர்தனகிரியை ஒரே கரத்தில் தூக்கினார்.

பதம் 10.25.20
அதாஹ பகவான் கோபான் ஹே ‘ம்ப தாத வ்ரஜெளகஸ:
யதோபஜோஷம் விஸத கிரி-கர்தம் ஸ-கோ-தனா:

அத—பின்னர்; ஆஹ—அழைத்தார்; பகவான்—பரமபுருஷ பகவான்; கோபான்—ஆயர்குலத்தினர்; ஹே—ஓ, அம்ப அன்னையரே; தாத—ஓ தந்தையரே; வ்ரஜ-ஓகஸ:—ஓ, விரஜவாசிகளே; யதா-உபஜோஷம்—உங்கள் மகிழ்ச்சிக்கேற்ற; விஸத—வாருங்கள்; கிரி—இந்த மலை; கர்தம்—அடிப்பகுதிக்கு; ஸ-கோ-தனா:—உங்கள் பசுக்களுடன்.

பிறகு பகவான் ஆயர்குலத்தினரைப் பார்த்துக் கூறினார்: ஓ அன்னையே, ஓ தந்தையே, ஓ, விரஜவாசிகளே, நீங்கள் விரும்பினால் உங்கள் பசுக்களுடன் இம்மலையின் கீழே வாருங்கள்.

பதம் 10.25.21
ந த்ராஸா இஹ வ: கார்யோ மத்-ஹஸ்தாத்ரி-நிபாதனாத்
வாத-வர்ஷ பயேனாலம் தத்-த்ராணம் விஹிதம்ஹி வ:

ந—இல்லை; த்ராஸ:—அச்சம்; இஹ—இதுவிஷயத்தில்; வ:—உங்களால்; கார்ய:—நினைக்க வேண்டும்; மத்-ஹஸ்த—எனது கரத்திலிருந்து; அத்ரி—மலையின்; நிபாதனாத்—விழுந்து விடுதல்; வாத—காற்று; வர்ஷ—மற்றும் மழை; பயேன—அச்சத்துடன்; அலம்—போதுமானது; தத்-த்ராணம்—அதிலிருந்து மீட்பதற்காக; விஹிதம்—ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; ஹி—உறுதியாக; வ:—உங்களுக்காக.

எனது கரத்திலிருந்து இந்த மலை கீழே விழுந்து விடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். இக்காற்றுக்கும், மழைக்கும் அஞ்ச வேண்டாம். இத்துன்பங்களிலிருந்து உங்களை மீட்பதற்கான ஏற்பாடு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது.

பதம் 10.25.22
ததா நிர்விவிஸுர் கர்தம் க்ருஷ்ணாஸ்வாஸித-மானஸ:
யதாவகாஸம் ஸ-தனா: ஸ-வ்ரஜா: ஸோபஜீவின:

ததா—இவ்வாறு; நிர்விவிஸு:—அவர்கள் புகுந்தனர்; கர்தம்—அடிப்பகுதியில்; க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரால்; ஆஸ்வாஸித—அமைதிப்படுத்தப்பட்டு; மானஸ:—அவர்களது மனங்கள்; யதா-அவகாஸம்—வசதியாக; ஸ-தனா:—தங்கள் பசுக்களுடனும்; ஸ-வ்ரஜா:—வண்டிகளுடனும்; ஸ-உபஜீவின:—தம்மைச் சார்ந்திருப்பவர்களுடனும் (பணியாட்கள் மற்றும் அந்தணப் புரோகிதர்கள் போன்றோர்).

பகவான் கிருஷ்ணரால் அவர்களது மனம் அமைதிப்படுத்தப்பட்டவுடன் அவர்கள் அனைவரும் மலையின் கீழே வந்தனர். அங்கே அவர்கள் தங்கள் பசுக்கள், வண்டிகள், பணியாட்கள், புரோகிதர்கள், மற்றும் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் போதிய இடம் இருப்பதைக் கண்டனர்.

பதம் 10.25.23
க்ஷுத்-த்ருட்-வ்யதாம் ஸுகாபேக்ஷாம் ஹித்வா தைர் வ்ரஜு-வாஸிபி:
விக்ஷ்யமாணோ ததாராத்ரிம் ஸப்தாஹம் நாசலத் பதாத்

க்ஷுத்—பசி; த்ருட்—தாகம்; வ்யதாம்—வேதனை; ஸுக—சுகம்; அபேக்ஷாம்—எல்லாவற்றையும்; ஹித்வா—தவிர்த்துவிட்டு; தை:—அவர்களால்; வ்ரஜ-வாஸிபி:—விரஜவாசிகள்; வீக்ஷ்யமாண:—பார்த்துக் கொண்டிருக்க; ததார—அவர் தாங்கினார்; அத்ரிம்—மலையினை; ஸப்த-அஹம்—ஏழுநாட்களுக்கு; ந அசலத்—அவர் அசையாமல்; பதாத்—அந்த இடத்திலிருந்து.

பகவான் கிருஷ்ணர் பசிதாகம் மறந்து, எல்லாவகையான இன்பங்களையும் துறந்து விரஜ மக்கள் பார்த்துக் கொண்டிருக்க சிறிதும் அசையாது ஏழுநாட்கள் அந்த மலையைத் தாங்கிக் கொண்டு நின்றார்.

பதம் 10.25.24
க்ருஷ்ண-யோகானுபாவம் தம் நிஸம்யேந்த்ரோ ‘தி-விஸ்மித:
நிஸ்தம்போ ப்ரஷ்ட-ஸங்கல்ப: ஸ்வான் மேகான் ஸன்ன்யவாரயத்

க்ருஷ்ண—பகவான் கிருஷ்ணரின்; யோக—யோக சக்தியின்; அனுபாவம்—பாதிப்பு; தம்—அது; நிஸம்ய—கண்டு; இந்த்ர:—தேவேந்திரன்; அதி-விஸ்மித:—மிகவும் ஆச்சரியப்பட்டான்; நிஸ்தம்ப:—அவனது ஆணவம் நீங்கியது; ப்ரஷ்ட—அழிக்கப்பட்டது; ஸங்கல்ப:—அவனது உறுதி; ஸ்வான்—அவனது; மேகான்—மேகங்கள்; ஸன்ன்யவாரயத்—நிறுத்தப்பட்டன.

பகவான் கிருஷ்ணர் வெளிப்படுத்திய யோக சக்தியைக் கண்ட தேவேந்திரன் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானான். ஆணவம் என்னும் மாளிகையிலிருந்து அவன் கீழே வீழ்ந்தான். அவனது நோக்கங்கள் நொறுங்கிப்போயின, அவன் மேகங்களுக்கு மழையை நிறுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டான்.

பதம் 10.25.25
கம் வ்யப்ரம் உதிதாதித்யம் வாத-வர்ஷம் ச தாருணம் நிஸம்யோபரதம் கோபான் கோவர்தன-தரோ ‘ப்ரவீத்

கம்—வானம்; வி-அப்ரம்—மேகங்கள் இன்றி தெளிவாகியது; உதித—உதித்தது; ஆதித்யம்—சூரியன்; வாத-வர்ஷம்—காற்றும் மழையும்; ச—மற்றும்; தாருணாம்—வேகமான; நிஸம்ய—கண்டு; உபரதம்—நின்று போனது; கோபான்—கோபாலர்கள்; கோவர்தன-தர:—கோவர்தன மலையைத் தூக்கியவர்; அப்ரவீத்—கூறினார்.

உக்கிரமான மழையும் காற்றும் நின்று, மேகங்கள் இன்றி வானம் தெளிவாகி, சூரியனும் உதித்ததைக்கண்ட கோவர்தன கிரிதாரியான பகவான் கிருஷ்ணர் ஆயர்குலத்தாரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.25.26
நிர்யாத த்யஜத த்ராஸம் கோபா: ஸ-ஸ்த்ரீ-தனார்பகா:
உபாரதம் வாத-வர்ஷம் வ்யுத-ப்ராயாஸ் ச நிம்னகா:

நிர்யாத்—வெளியேறுவீர்களாக; த்யஜத—தவிருங்கள்; த்ராஸம்—உங்கள் அச்சத்தினை; கோபா:—ஓ, கோபாலர்களே; ஸ—சேர்ந்து கொண்டு; ஸ்த்ரீ—உங்கள் பெண்டிருடன்; தன—செல்வம்; அர்பகா:—மற்றும் குழந்தைகள்; உபாரதம்—நின்றுவிட்டது; வாத-வர்ஷம்—காற்றும் மழையும்; வி-உத—நீரின்றி; ப்ராயா:—நடைமுறையில்; ச—மற்றும்; நிம்னகா:—நதிகள்.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பிற்குரிய ஆயர்குலத்தோரே! உங்கள் மனைவியர், மக்கள் மற்றும் செல்வங்களுடன் இப்போது நீங்கள் வெளியேறுவீர்களாக. காற்றும் மழையும் நின்றுவிட்டன. நதிகளில் வெள்ளமும் வடிந்துவிட்டது.

பதம் 10.25.27
ததஸ் தே நிர்யயுர்கோபா: ஸ்வம் ஸ்வம் ஆதாய கோ-தனம்
ஸகடோடோபகரணம் ஸ்த்ரீ-பால-ஸ்தவிரா: ஸனை:

தத:—பின்னர்; தே—அவர்கள்; நிர்யயு:—வெளியேறினர்; கோபா:—கோபாலர்கள்; ஸ்வம் ஸ்வம்—அவரவர்க்குரிய; ஆதாய—எடுத்துக்கொண்டு; கோ-தனம்—பசுக்கள்; ஸகட—வண்டிகளில்; ஊட—ஏற்றிக் கொண்டு; உபகரணம்—உபகரணங்களுடன்; ஸ்த்ரீ—பெண்கள்; பால—குழந்தைகள்; ஸ்தவிரா:—முதியவர்கள்; ஸனை:—மெதுவாக.

தங்கள் பசுக்களுடனும், வண்டியில் ஏற்றப்பட்ட உபகரணங்களுடனும் ஆயர்குல ஆண்கள் வெளியேறினர். பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மெதுவாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.

பதம் 10.25.28
பகவான் அபி தம் ஸைலம் ஸ்வ-ஸ்தானே பூர்வ-வத் ப்ரபு:
பஸ்யதாம் ஸர்வ-பூதானாம் ஸ்தாபயாம் ஆஸ லீலயா

பகவான்—முழுமுதற்கடவுள்; அபி—மற்றும்; தம்—அந்த; ஸைலம்—மலை; ஸ்வ-ஸ்தானே—அதனிடத்தில்; பூர்வ-வத்—முன்பிருந்தாற்போல; ப்ரபு:—எல்லாம்வல்ல பகவான்; பஸ்யதாம்—அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே; ஸர்வ-பூதானம்—எல்லா உயிரினங்களுக்கும்; ஸ்தாபயாம் ஆஸ—அவர் வைத்தார்; லீலயா—மிகவும் எளிதாக.

எல்லா உயிரினங்களும் பார்த்துக் கொண்டிருக்க, முழுமுதற் கடவுள் முன்பிருந்தாற்போன்றே மலையினை அதன் இடத்தில் மீண்டும் வைத்தார்.

பதம் 10.25.29
தம் ப்ரேம-வேகான் நிர்ப்ருதா வ்ரஜௌகஸோ
யதா ஸமீயு: பரிரம்பணாதிபி:
கோப்யஸ் ச ஸ-ஸ்நேஹம் அபூஜயன் முதா
ததி-அக்ஷதாத்பிர் யுயுஜீ: ஸத்-ஆஸிஷ:

தம்—அவருக்கு; ப்ரேம—அவர்களது தூய அன்பின்; வேகாத்—வேகத்தினால்; நிர்ப்ருதா:—நிறைவேறியது; வ்ரஜ-ஓகஸ:—விரஜவாசிகள்; யதா—ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கேற்ப; ஸமீயு:—அருகில் வந்து; பரிரம்பண-ஆதிபி:—தழுவிக் கொள்ளுதல் போன்ற; கோப்ய:—கோபியர்கள்; ச—மற்றும்; ஸ-ஸ்நேஹம்—மிக்கபாசத்துடன்; அபூ ஜயன்—தங்கள் மரியாதையினைச் செய்தனர்; முதா—மகிழ்ச்சியுடன்; ததி—தயிர்; அக்ஷத—அட்சதை; அத்பி:—மற்றும் நீர்; யுயுஜு:—அவர்கள் அளித்தனர்; ஸத்—உயர்ந்த; அஸிஸ:—ஆசிகள்.

விருந்தாவனத்தைச் சேர்ந்த அனைவரும் உணர்ச்சிப் பெருக்கினால் ஆனந்தக் கூத்தாடினர். ஸ்ரீ கிருஷ்ணருடன் அவர்களுக்குரிய தொடர்பிற்கேற்ப அவர்கள் அவரை வாழ்த்தினர். சிலர் அவரை மார்புறத் தழுவிக் கொண்டனர், வேறு சிலர் காலில் விழுந்து வணங்கினர். கோபியர்கள் தயிருடன் நீர் கலந்து அவருக்குப் பருகக் கொடுத்தனர். மேலும் அவர்கள் அவர்மீது அட்சதைகள் போட்டுத் தங்கள் ஆசிகளை வழங்கினர்.

பதம் 10.25.30
யஸோதா ரோஹிணீ நந்தோ ராமஸ் ச பலினாம் வர:
க்ருஷ்ணம் ஆலிங்க்ய யுயுஜுர் ஆஸிஷ: ஸ்நேஹ-காதரா:

யஸோதா—அன்னை யசோதை; ரோஹிணீ—ரோகிணீ; நந்த:—நந்த மகாராஜா; ராம:—பலராமன்; ச—மற்றும்; பலினாம்—பலமிக்க; வர:—சிறந்த; க்ருஷ்ணம்—கிருஷ்ணர்; ஆலிங்க்ய—தழுவிக் கொண்டனர்; யுயுஜு:—அவர்கள் அனைவரும் வழங்கினர்; ஆஸிஸ:—ஆசிகள்: ஸ்நேஹ—அவர்மீதுள்ள பாசத்தினால்; காதரா:—தம்மை மறந்து.

அன்னை யசோதையும், அன்னை ரோகிணியும், நந்த மகாராஜாவும், பலத்திற்கு சிறந்த பலராமரும் கிருஷ்ணரைத் தங்கள் மார்புடன் தழுவிக் கொண்டனர். பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் தங்கள் ஆசிகளை அவருக்கு வழங்கினார்கள்.

பதம் 10.25.31
திவி தேவ-கணா: ஸித்தா: ஸாத்யா கந்தர்வ-சாரணா:
துஷ்டுவுர் முழுகஸ் துஷ்டா: புஷ்ப-வர்ஷாணி பார்திவ

திவி—சொர்க்கத்தில்; தேவ-கணா:—தேவர்கள்; ஸித்தா—சித்தர்கள்; ஸாத்யா:—சாத்யர்கள்; கந்தர்வ-சாரணா:—கந்தர்வர்களும், சாரணர்களும்; துஷ்டுவு:—பகவானின் கீர்த்தியை இசைத்தனர்; முழுக:—அவர்கள் பொழிந்தனர்; துஷ்டா:—மிக்க மகிழ்ச்சியுடன்; புஷ்ப-வர்ஷாணி—மலர்மாரி; பார்திவ—ஓ, மன்னனே (பரீக்ஷித்து).

ஓ, மன்னனே! சொர்க்கத்தில் இருந்து தேவர்களும், சித்தர்களும், சாகித்யர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும், பகவான் கிருஷ்ணரின் கீர்த்திகளை இசைத்தபடி மிக்க மகிழ்ச்சியுடன் மலர்மாரி பொழிந்தனர்.

பதம் 10.25.32
ஸங்க-துந்துபயோ நேதுர் திவி தேவ-ப்ரசோதிதா:
ஜகுர் கந்தர்வ-பதயஸ் தும்புரு-ப்ரமுகா ந்ருப

ஸங்க—சங்குகள்; துந்துபய:—துந்துபிகள்; நேது:—முழங்கின; திவி—மேல் உலகங்களில்; தேவ-ப்ரசோதிதா:—தேவர்களால் மீட்டப்பட்டது; ஜகு:—பாடினர்; கந்தர்வ-பதய:—கந்தர்வர்களின் தலைவர்கள்; தும்புரு-ப்ரமுகா:—தும்புருவின் தலைமையில்; ந்ருப—அன்பிற்குரிய அரசனே.

அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே, வானிலிருந்து தேவர்கள் தங்கள் சங்குகளையும், துந்துபிகளையும் முழங்கினர். தும்புருவின் தலைமையின் கீழ் சிறந்த கந்தர்வர்கள் கீதங்கள் பாடினர்.

பதம் 10.25.33
ததோ ‘னுரத்தை: பஸுபை: பரிஸ்ரிதோ
ராஜன் ஸ்வ-கோஷ்டம் ஸ-பலோ ‘வ்ரஜத் ஹரி:
ததா-விதானி அஸ்ய க்ருதானி கோபிகா
காயந்த்ய ஈயுர் முதிதா ஹ்ருதி-ஸ்ப்ருஸ:

தத:—பிறகு; அனுரக்தை:—அன்புடன்; பஸு-பை:—ஆயர்குலச் சிறுவர்கள்; பரிஸ்ரித:—சூழ்ந்துவர; ராஜன்—ஓ, ராஜனே; ஸ்வ-கோஷ்டம்—அவர் தமது பசுக்களை மேய்க்கும் இடத்திற்கு; ஸ—பல; பகவான்—பலராமருடன் சேர்ந்து; அவ்ரஜத்—சென்றார்; ஹரி:—கிருஷ்ணர்; ததா-விதானி—அதுபோன்ற (கோவர்தனகிரியைத் தூக்கியது போன்ற); அஸ்ய—அவரது; க்ருதானி—செயல்கள்; கோபிகா:—கோபியர்கள்; காயந்த்ய:—பாடிக்கொண்டு; ஈயு:—அவர்கள் சென்றனர்; முதிதா:—மகிழ்ச்சியுடன்; ஹ்ருதி-ஸ்ப்ருஸ:—தங்கள் இதயத்தைத் தொட்ட அவரது.

தமது அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்கள் சூழ்ந்து வர, பகவான் பலராமருடன் சேர்ந்து கொண்டு கிருஷ்ணர் பின்னர் தமது பசுக்களை மேய்க்கும் வழக்கமான இடத்திற்குச் சென்றார். ஆயர்குல இளம் பெண்கள் தங்கள் இதயந்தொட்ட கிருஷ்ணர் கோவர்தனகிரியைத் தூக்கியது பற்றியும் அவரது பிற செய்கைகளைப் பற்றியும் பாடியபடி மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் திரும்பினர்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “பகவான் கிருஷ்ணர் கோவர்தனகிரியைத் தூக்குதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare