அத்தியாயம் – 16
பயோ:விரத வழிபாட்டு முறையை
நிறைவேற்றுதல்
பதம் 8.16.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, அதிதியின் புத்திரர்களான தேவர்கள் சுவர்க்கத்திலிருந்து மறைந்துவிட்டபோது, அவர்களின் பதவிகளை அசுரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதைக் கண்ட அதிதி, தம்மை இனி காப்பாற்றுபவர் இல்லாததைப் போல் துக்கப்பட ஆரம்பித்தாள்.
பதம் 8.16.2 : பற்பல நாட்களுக்குப் பிறகு, மிகவும் சக்திவாய்ந்தவரான கஸ்யப முனிவர், தமது சமாதி நிலையிலிருந்து எழுந்தார். அதிதியின் ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற அவர், அது மகிழ்ச்சிகரமான நிலையில் இல்லாததைக் கண்டார்.
பதம் 8.16.3 : குருக்களில் சிறந்தவரே, கஸ்யப முனிவர் நன்கு வரவேற்று உபசரிக்கப்பட்டு, தமது ஆசனத்தில் அமர்ந்த பின், மிகவும் கவலையுடன் இருந்த தமது மனைவியான அதிதியிடம் பின்வருமாறு பேசினார்.
பதம் 8.16.4 : பேரன்பு மிக்கவனே, மதக் கொள்கைகள், பிராமணர்கள் அல்லது மரணத்தின் பாதைக்கு உட்பட்டவர்களான பொதுமக்கள் ஆகியவற்றின் சம்பந்தமாக, இப்போது அமங்களமான சம்பவம் ஏதேனும் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
பதம் 8.16.5 : இல்லற வாழ்வில் மிகவும் பற்றுக் கொண்டுள்ள எனது மனைவியே, மதக் கொள்கைகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன்களின் திருப்தி ஆகியவை இல்லற வாழ்வில் முறையாக பின்பற்றப்படுமானால், ஒருவரது செயல்கள், ஓர் ஆன்மீகியின் செயல்களுக்கு ஒப்பானவையாக இருக்கும். இக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் முரண்பாடு நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
பதம் 8.16.6 : குடும்ப அங்கத்தினரிடம் நீ கொண்ட அளவுக்கதிகமான பற்றின் காரணத்தால், அழையா விருந்தாளிகளை நீ வரவேற்கத் தவறி, அதனால் நமக்கு வரவேற்பு இல்லை என்றெண்ணி அவர்கள் சென்றுவிட்டனரோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
பதம் 8.16.7 : எந்த வீடுகளிலிருந்து சிறிதளவு நீர்கூட அளிக்கப்படாமல் விருந்தாளிகள் சென்று விடுகிறார்களோ, அத்தகைய வீடுகள் பூமியிலுள்ள குள்ள நரிகளின் வசிப்பிடத்தைப் போன்றவையாகும்.
பதம் 8.16.8 : கற்பும், மங்களமும் உடையவளே, வேறு இடங்களுக்குச் செல்வதற்காக நான் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தபோது, யாகத்தீயில் நெய் ஊற்றாத அளவிற்கு அவ்வளவு பெரிய கவலைக்கு நீ உட்பட்டிருந்தாயா?
பதம் 8.16.9 : நெருப்பையும், பிராமணர்களையும் வழிபடுவதன் மூலமாக, குடும்பஸ்தரொருவர் உயர் கிரகங்களில் வாழ்வதெனும் அவர் விரும்பிய இலக்கை அடைய முடியும். ஏனென்றால், யாகத்தீயும், பிராமணர்களும், எல்லாத் தேவர்களுக்கும் பரமாத்மாவாக இருக்கும் பகவான் விஷ்ணுவின் வாயாக கருதப்படுகின்றன.
பதம் 8.16.10 : உதார குணமுள்ள பெண்ணே, உன்னுடைய புத்திரர்கள் அனைவரும் நலமுடன் வாழ்கிறார்களா? உனது வாடிய முகத்தைக் கண்டு, உனது மனம் அமைதியிழந்து கிடப்பதை என்னால் அறிய முடிகிறது. இது எப்படி?
பதம் 8.16.11 : அதிதி கூறினாள்: மரியாதைக்குரிய எனது பிராமண கணவரே, பிராமணர்கள், பசுக்கள், மதம் மற்றும் பிற மக்களின் நலம் ஆகிய அனைத்தும் நன்றாகவே இருக்கின்றன. வீட்டின் எஜமானரே, தர்மம், அர்த்தம் மற்றும் காமம் ஆகிய மூன்று கொள்கைகளும் இல்லற வாழ்வில் செழிப்புடனேயே இருக்கின்றன. இதன் விளைவாக இல்லற வாழ்வு பூரண நல்லதிர்ஷ்டம் உள்ளதாக இருக்கிறது.
பதம் 8.16.12 : அன்புள்ள கணவரே, அக்னிகள், விருந்தாளிகள், பணியாட்கள் பிச்சைக்காரர்கள் ஆகிய அனைவரும் என்னால் நன்கு கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். நான் எப்பொழுதும் உம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால், எந்த மதக் கொள்கையையும் நான் செய்யத் தவறுவது சாத்தியமல்ல.
பதம் 8.16.13 : என் தலைவா, தாங்கள் ஒரு பிரஜாபதியாக இருப்பதுடன் மதக் கொள்கைகளின் விஷயத்தில் எனக்கு உபதேசம் செய்பவராகவும் இருப்பதால், எனது ஆசைகளனைத்தும் எப்படி நிறைவேறாமல் போகும்?
பதம் 8.16.14 : மரீசியின் புதல்வரே, தாங்கள் ஒரு சிறந்தபுருஷராக இருப்பதால், எல்லா அசுரர்களிடமும், தேவர்களிடமும் சமநோக்குக் கொண்டவராக இருக்கிறீர். உமது உடலிலிருந்து அல்லது மனதிலிருந்து பிறந்தவர்களாகிய இந்த தேவர்கள் சத்வம், ரஜஸ் அல்லது தமஸ் ஆகிய முக்குணங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றுள்ளனர். ஆனால் பரம ஆளுனராகிய பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக இருக்கிறார். அவர் குறிப்பாக பக்தர்களுக்கு ஆதரவு காட்டுபவராக இருக்கிறார்.
பதம் 8.16.15 : ஆகவே, நற்பண்புகள் கொண்ட எஜமானரே, அன்புடன் உமது பணிப்பெண்ணுக்கு ஆதரவு காட்டுங்கள், எங்களது எதிரிகளானஅசுரர்களால் எங்களுடைய செல்வத்தையும், வசிப்பிடத்தையும் இப்போது நாங்கள் இழந்து தவிக்கிறோம். அன்புடன் எங்களை ஆதரிப்பீராக.
பதம் 8.16.16 : எங்களுடைய வெல்லுவதற்கறிய, சக்திவாய்ந்த எதிரிகளான அசுரர்கள், எங்களது செல்வம், அழகு, புகழ் மட்டுமின்றி எங்களது வசிப்பிடத்தையும் கூட பறித்துக் கொண்டனர். உண்மையில் நாங்கள் இப்போது தலைமறைவாக வாழ்வதுடன் பெரும் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.
பதம் 8.16.17 : முனிவர்களில் சிறந்தவரே, மங்களகரமான வரங்களை அளிப்பவர்களுள் மிகச்சிறந்தவரே, தயவுசெய்து எங்களுடைய நிலையை கருத்தில்கொண்டு, எனது புத்திர்கள் இழந்துவிட்டதை அவர்கள் திரும்பப் பெறுவதற்குரிய வரங்களை அவர்களுக்கு அளிப்பீராக.
பதம் 8.16.18 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு கஸ்யப முனிவரை அதிதி வேண்டிக் கொண்டபோது, அவர் இலேசாக புன்னகை செய்து, பின்வருமாறு கூறினார், “ஐயோ பாவம்! விஷ்ணுவின் மாயச்சக்தி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இச்சக்தியின் மூலமாக உலகம் முழுவதுமே குழந்தைப் பாசத்தால் கட்டுப்பட்டுள்ளது.
பதம் 8.16.19 : கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: பஞ்ச பூதங்களாலான இந்த ஜட உடல் என்பது என்ன? இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டுள்ளது. உண்மையில், பெளதிக மூலப் பொருட்களாலான உடலிலிருந்து ஆத்மா முற்றிலும் வேறானதாகும். ஆனால் தேகப் பற்றின் காரணத்தால், ஒருவர் கணவராகவோ அல்லது மகனாகவோ கருதப்படுகிறார். பொய்யான இவ்வுறவு முறைகள் தவறான எண்ணத்தினால் விளைந்தவையாகும்.
பதம் 8.16.20 : எனது அன்புள்ள அதிதி, பரமபுருஷ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக. அவரே அனைத்திற்கும் எஜமானர். அவரால் எல்லோருடைய எதிரிகளையும் அடக்கிவிட முடியும். மேலும் அவர் எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். கிருஷ்ணர், அல்லது வாசுதேவன் எனப்படும் அப்பரம புருஷரே பிரபஞ்சத்தின் ஆன்மீக குரு என்பதால், அவரால் மட்டுமே அனைவருக்கும் சர்வ மங்களகரமான வரங்களை அளிக்க முடியும்.
பதம் 8.16.21 : ஏழைகளிடம் மிகவும் கருணை கொண்டவரான பரமபுருஷ பகவான் உனது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவார். ஏனெனில் அவருக்குச் செய்யப்படும் பக்தித்தொண்டு நிலையானதாகும். இதுவே எனது அபிப்ராயம்.
பதம் 8.16.22 : ஸ்ரீமதி அதிதி கூறினாள்: பிராமணரே, உலகின் பரம எஜமானரை வழிபடுவதற்கான கட்டுப்பாட்டு விதிகளை எனக்குக் கூறுங்கள். இதன் மூலமாக பகவான் என்னிடம் திருப்தியடைந்து, எனது ஆசைகளைப் பூர்த்தி செய்யட்டும்.
பதம் 8.16.23 : பிராமணர்களில் சிறந்தவரே, முழுமுதற் கடவுள் வெகு விரைவில் என்னிடம் திருப்தியடைந்து என்னையும், எனது புத்திரர்களையும், மிகவும் அபாயமான இச் சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவதற்குரிய மிகச் சிறந்த வழிபாட்டு முறையை, அன்புடன் எனக்குக் கூறுவீராக.
பதம் 8.16.24 : ஸ்ரீ கஸ்யப முனி கூறினார்: குழந்தைகளைப் பெற நான் விரும்பிய போது, தாமரைப் பூவிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவரிடம் நான் கேள்விகள் கேட்டேன். பிரம்ம தேவர் எனக்கு உபதேசித்த அதே வழிமுறையை இப்போது நான் உனக்கு விவரிக்கப் போகிறேன். இம்முறையால் பரமபுருஷ பகவானாகிய கேசவன் திருப்தியடைவார்.
பதம் 8.16.25 : ஃபால்குண மாதத்தின் (பிப்ரவரி மற்றும் மார்ச்) வளர்பிறையில், துவாதசியுடன் முடிவுறும் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருவர், பாலை மட்டும் அருந்தும் விரதத்தை மேற்கொண்டு, தாமரைக் கண்களையுடைய பரமபுருஷ பகவானைப் பூரணமான பக்தியுடன் வழிபட வேண்டும்.
பதம் 8.16.26 : ஒரு காட்டுப் பன்றியினால் தோண்டி எடுக்கப்பட்ட மண் கிடைக்குமானால், அம்மண்ணை ஒருவர் அமாவாசையன்று தன் உடல் மீது பூசிக் கொண்ட பின், ஓடும் நதியொன்றில் குளிக்க வேண்டும். குளிக்கும் போது பின்வரும் மந்திரத்தை ஓத வேண்டும்.
பதம் 8.16.27 : பூமி தேவியே, வசிப்பிடம் வேண்டுமென்று நீ விரும்பியதால், காட்டுப் பன்றியின் ரூபத்திலிருந்த முழுமுதற் கடவுளால் நீ மேலே தூக்கப்பட்டாய். என்னுடைய பாவ வாழ்வின் எல்லா விளைவுகளையும் அன்புடன் நீ அழித்துவிட வேண்டும் என்று வேண்டுகிறேன். உனக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.28 : அதன்பிறகு, தினசரி ஆன்மீகக் கடமைகளை ஒருவர் செய்ய வேண்டும். பிறகு, மிகவும் கவனத்துடன், முழுமுதற் கடவுளின் விக்கிரகத்தையும், மற்றும் பலிபீடம், ஆன்மீக குரு, சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றையும் கூட ஒருவர் வழிபட வேண்டும்.
பதம் 8.16.29 : பரமபுருஷ பகவானே, அனைவரிலும் மிகச் சிறந்தவரே, எல்லோருடைய இதயத்திலும் வசிப்பவரே, அனைவரும் உம்முள் வாழ்கின்றனர். அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவரே, பரமனும், எங்கும் பரவியுள்ளவருமான வாசுதேவனே உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.30 : பரமபுருஷராகிய தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மிகவும் சூட்சுமமானவராக இருப்பதால், ஜடக் கண்களுக்கு தாங்கள் ஒருபோதும் காட்சியளிப்பதில்லை. இருபத்து நான்கு மூலப் பொருட்களை அறிந்தவரும், ஸாங்க்ய யோக முறையைத் தொடக்கி வைத்தவரும் நீரே.
பதம் 8.16.31 : உமக்கு இரு தலைகளும் (ப்ராயணீய மற்றும் உதாயணீய), மூன்று கால்களும் (ஸவன-த்ரய), நான்கு கொம்புகளும் (நான்கு வேதங்கள்), மற்றும் ஏழு கரங்களும் (காயத்ரீ போன்ற ஏழு சந்தங்கள்) உள்ளன. பரமபுருஷ பகவானாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். உமது இதயமும், ஆத்மாவுமாக இருப்பவை மூன்று வேதச் சடங்குகளாகும் (கர்ம-காண்டம், ஞான-காண்டம் மற்றும் உபாஸனா-காண்டம்). மேலும் யாகங்களின் வடிவில் இச் சடங்குகளை விரிவடையச் செய்பவரும் நீரே. உமக்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.32 : சிவபெருமான், அல்லது ருத்திரனாகிய தாங்கள் அனைத்து சக்திகளுக்கும் ஊற்றாவீர். நீரே அனைத்து அறிவிற்கும் பிறப்பிடமும், அனைவருக்கும் எஜமானருமாவீர். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.33 : ஹிரண்யகர்பராக இப்பவரும், உயிரின் பிறப்பிடமும், அனைத்து ஜீவராசிகளின் பரமாத்மாவுமான உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உமது தேகம் யோக சக்திகளெனும் அனைத்து ஐசுவரியங்களுக்கும் பிறப்பிடமாகும். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.34 : நீரே மூலமுழுமுதற் கடவுளாவீர். அனைவரது இதயத்திலும் உள்ள சாட்சியும், மனித ரூபத்தில் தோன்றிய நர-நாராயண ரிஷியின் அவதாரமும் நீரே. உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். முழுமுதற் கடவுளே எனது பணிவான வணக்கங்களை நான் மீண்டும் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.35 : எம்பெருமானே, மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உமது தேக வர்ணம் மரகத மணியை ஒத்ததாக இருக்கிறது. மேலும் திருமகள் உமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறாள். எம்பெருமானே, கேசவா, எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.16.36 : மிகமிக உயர்ந்தவரும், வழிபாட்டுக்குரியவருமான பெருமானே, வரம் அளிப்பவர்களுள் நீர் மிகச் சிறந்தவராவீர். அனைவரது ஆசைகளையும் உம்மால் நிறைவேற்ற முடியும். ஆகவே நிதான புத்தியுள்ளவர்கள், அவர்களின் சொந்த நன்மைக்காக, உமது தாமரைப் பாதங்களின் புழுதியை வழிபடுகின்றனர்.
பதம் 8.16.37 : அனைத்து தேவர்கள் மட்டுமல்லாமல், லக்ஷ்மி தேவியும் கூட, அவரது திருவடித் தொண்டில் ஈடுபட்டுள்ளாள். உண்மையில், அத்திருவடிகளின் நறுமணத்தையும் அவர்கள் மதிக்கின்றனர். அப்பரமபுருஷ பகவான் என்னிடம் திருப்தி அடைவாராக.
பதம் 8.16.38 : கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: இவ்வெல்லா மந்திரங்களையும் ஒதுவதாலும், பரமபுருஷ பகவானை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வரவேற்பதாலும், (பாத்யம், அர்க்யம்) முதலான வழிபாட்டுப் பொருட்களை அவருக்கு அர்ப்பணிப்பதாலும், ஒருவர் கேசவனான அல்லது ஹ்ரிஷீகேசனான முழுமுதற் கடவுளை, ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
பதம் 8.16.39 : ஆரம்பத்தில், பக்தன் துவாதசாக்ஷர-மந்திரத்தை ஓதி, மலர்மாலைகள், தூபம் முதலானவற்றை அர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு பகவானை வழிபட்டபின், பகவானைப் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தகுதியான ஆடைகள், ஒரு பூனூல் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றால் அவரை அலங்கரிக்க வேண்டும். பகவானுடைய பாதங்களைக் கழுவுவதற்காக நீரைக் கொடுத்த பின், ஒருவர் மீண்டும் பகவானை நறுமணமுள்ள மலர்களாலும், தூபத்தாலும், மற்ற பொருட்களாலும் வழிபட வேண்டும்.
பதம் 8.16.40 : ஒருவரால் முடியுமென்றால், பாலில் வேகவைத்த உயர்தர சாதத்தை நெய்யுடனும், வெல்லப்பாகுடனும் சேர்த்து விக்கிரகத்திற்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அதே மூல மந்திரத்தை ஓதும் வேளையில் இவை அனைத்தையும் ஒருவர் தீயில் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
பதம் 8.16.41 : எல்லாப் பிரசாதத்தையும் ஒருவர் ஒரு வைஷ்ணவருக்கு அளித்து விட வேண்டும். அல்லது பிரசாதத்தின் ஒரு பாகத்தை அவருக்கு அளித்து, மீதத்தைத் தானே உட்கொள்ளலாம். இதன்பிறகு, விக்கிரகத்திற்கு ஒருவர் ஆச்சமன நிவேதனம் செய்து பிறகு வெற்றிலைப் பாக்கை நிவேதனம் செய்து, அதன்பிறகு பகவானை மீண்டும் வழிபட வேண்டும்.
பதம் 8.16.42 : அதன்பிறகு ஒருவர் அம்மந்திரத்தை 108 முறைகள் மௌனமாக உச்சரித்து, பகவானை போற்றிப் புகழ்வதற்கான ஸ்தோத்திரங்களைச் செய்ய வேண்டும். பிறகு பகவானை வலம் வரவேண்டும். இறுதியாக பெரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும் (தண்டவத்).
பதம் 8.16.43 : விக்கிரகத்திற்கு அர்ப்பணம் செய்த எல்லா மலர்களையும், நீரையும் தலையால் தொட்டபின், புனிதமான ஓர் இடத்தில் அவற்றை எறிந்துவிட வேண்டும். பிறகு குறைந்தது இரு பிராமணர்களுக்கு பாயசத்துடன் உணவளிக்க வேண்டும்.
பதங்கள் 8.16.44 – 8.16.45 : தான் உணவளித்த மரியாதைக்குரிய பிராமணர்களை ஒருவர் முறையாக கௌரவிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களுடைய அனுமதியைப் பெற்று அவர் தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பிரசாதத்தை உண்ண வேண்டும். அன்றிரவு, உறுதியான பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, மறுநாள் காலையில் மீண்டும் குளித்த பின் தூய்மையாகவும், கவனத்துடனும், விஷ்ணுவின் விக்கிரகத்தை பாலால் அபிஷேகம் செய்து, ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ள முறைகளுக்கேற்ப அவரை வழிபட வேண்டும்.
பதம் 8.16.46 : ஒருவர் பெரும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பகவான் விஷ்ணுவை ஆராதனை செய்து, பாலை மட்டுமே உட்கொண்டு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். யாகத்தீயிலும் ஒருவர் அர்ப்பணங்களைச் செய்து, ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
பதம் 8.16.47 : இவ்விதமாக, பன்னிரண்டு நாட்கள் கடக்கும் வரை, ஒருவர் தினந்தோறும் பகவானை வழிபட்டு, அன்றாட கடமைகளை நிறைவேற்றி, யாகங்களை இயற்றி, மற்றும் பிராமணர்களுக்கு உணவளித்து இப் பயோ-விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
பதம் 8.16.48 : பிரதிபத் தினத்திலிருந்து அடுத்த பௌர்ணமியின் பதின்மூன்றாம் நாள் வரையுள்ள (சுக்ல-த்ரயோதசீ) காலத்தில் ஒருவர் முழு பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, தரைமீது படுத்துறங்கி, ஒரு நாளுக்கு மும்முறை குளித்து, இவ்விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 8.16.49 : இச்சமயத்தில், ஒருவர் தேவையில்லாமல் பௌதிக விஷயங்களைப் பற்றியோ அல்லது புலன் நுகர்வைப் பற்றியோ பேசக் கூடாது. அனைத்து ஜீவராசிகளிடமும் கொண்டுள்ள பொறாமையிலிருந்து ஒருவர் முற்றிலும் விடுபட்டு பகவான் வாசுதேவனின் ஒரு தூய, எளிமையான பக்தராக இருக்க வேண்டும்.
பதம் 8.16.50 : அதன்பிறகு, சாஸ்திரங்களை அறிந்தவர்களான பிராமணர்களின் உதவியுடன் சாஸ்திர விதிகளைப் பின்பற்றி, சந்திரனின் பதின்மூன்றாம் தினத்தன்று (திரயோதசி) ஒருவர் பஞ்சாமிர்தங்களால் (பால், தயிர், நெய், சர்க்கரை மற்றும் தேன்) பகவான் விஷ்ணுவிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
பதங்கள் 8.16.51 – 8.16.52 : பணத்தை செலவழிக்காத கருமித்தனத்தைக் கைவிட்டு, அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கும் பரமபுருஷ பகவானாகிய விஷ்ணுவின் ஆடம்பரமான வழிபாட்டிற்கு ஒருவர் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய் மற்றும் பால் ஆகியவற்றில் வேகவைத்த தானியங்களை மிகவும் கவனத்துடன் தயாரித்து அதை நிவேதனம் செய்வதுடன், புருஷ-சூக்த மந்திரத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனத்திற்கான உணவு பலவகையான சுவைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்விதமாக, பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபட வேண்டும்.
பதம் 8.16.53 : வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவரான ஆன்மீக குருவை (ஆசார்யரை) ஒருவர் திருப்திப்படுத்த வேண்டும். மேலும் (ஹோதா, உத்காதா, அத்வர்யு மற்றும் ப்ரஹ்ம எனப்படும்) அவரது உதவியாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வஸ்திரங்கள், ஆபரணங்கள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை அளித்து திருப்திப்படுத்த வேண்டும். இதுவே விஷ்ணு ஆராதனை எனப்படும் சடங்காகும்.
பதம் 8.16.54 : மிகவும் பய பக்தியுடைய பெண்ணே, ஒருவர் எல்லாச் சடங்குகளையும், கற்றுணர்ந்த ஆச்சார்யர்களுடைய வழிகாட்டலின் கீழ் நிறைவேற்றி, அவர்களையும், அவர்களது வேதியர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். பிரசாத விநியோகத்தின் மூலமாக பிராமணர்களையும், கூடியுள்ள மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.
பதம் 8.16.55 : வஸ்திரம், ஆபரணங்கள், பசுக்கள் மற்றும் கொஞ்சம் பொருள் ஆகியவற்றைக் கொடுத்து, ஆன்மீக குருவையும், உதவியாளர்களான வேதியர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். மேலும் பிரசாத விநியோகத்தினால், மனிதர்களில் கடைப்பட்டவர்களான சண்டாளர்களும் (நாயின் இறைச்சியை உண்பவர்கள்) உட்பட, கூடியுள்ள அனைவரையும் ஒருவர் திருப்திப்படுத்த வேண்டும்.
பதம் 8.16.56 : ஏழை மனிதன், குருடன், பக்தனல்லாதவன் மற்றும் பிராமணன் அல்லாதவன் ஆகியோர் உட்பட அனைவருக்கும் விஷ்ணு பிரசாதத்தை ஒருவர் விநியோகிக்க வேண்டும். அனைவருக்கும் விஷ்ணு பிரசாதம் அளிக்கப்படும்போது பகவான் விஷ்ணு மிகவும் திருப்தியடைகிறார் என்பதை அறிந்த, யாகம் இயற்றுபவர், தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பிறகு பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்.
பதம் 8.16.57 : ஒவ்வொரு நாளும் பிரதிபத்திலிருந்து திரயோதசிவரை, நாட்டியம், பாடல், மேளம் வாசித்தல், துதி செய்தல், சர்வ மங்களகரமான மந்திரங்களை ஓதுதல் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்விதமாக, பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபட வேண்டும்.
பதம் 8.16.58 : இதுவே பயோ-விரதம் எனப்படும் மதச் சடங்காகும். இதனால் பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபடலாம். எனது பாட்டனாரான பிரம்மாவிடமிருந்து இத்தகவலை நான் பெற்றேன். இப்போது இதை நான் முழு விவரத்துடன் உனக்கு விளக்கியுள்ளேன்.
பதம் 8.16.59 : பெரும் பாக்கியசாலியான பெண்ணே, உன் மனதை நன்றாக நிலைப்படுத்தி, இப் பயோ-விரத முறையை நிறைவேற்று. இவ்வாறாக குறையற்றவரான முழுமுதற் கடவுளை, கேசவனை வழிபடுவாயாக.
பதம் 8.16.60 : இந்த பயோ-விரதம் ஸர்வ-யக்ஞம் என்றும் அறியப்படுகிறது. அதாவது, இந்த யாகத்தைச் செய்வதன் மூலமாக, மற்றெல்லா யாகங்களையும் ஒருவர் தானாகவே செய்துவிட முடியும். அனைத்து சமயச் சடங்குகளிலும் இதுவே மிகச் சிறந்ததாக அங்கீகரிக்கப்படுகிறது. நற்பண்புகளைக் கொண்ட பெண்ணே, எல்லாத் தவங்களுக்கும் இதுவே சாராம்சமாகும். இதுவே தானம் கொடுப்பதற்கும், பரம ஆளுனரைத் திருப்திப்படுத்துவதற்கும் உரிய முறையாகும்.
பதம் 8.16.61 : அதோக்ஷஜர் எனப்படுபவரான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த முறையாகும். இதுவே எல்லாக் கட்டுப்பாட்டு நியமனங்களிலும் மிகச் சிறந்ததும், மிகச் சிறந்த தவமும், தானம் கொடுப்பதற்கான மிகச் சிறந்த முறையும், மிகச் சிறந்த யாக முறையுமாகும்.
பதம் 8.16.62 : ஆகவே, எனது அன்பிற்குரிய பெண்ணே, கட்டுப்பாட்டு விதிகளை உறுதியாகப் பின்பற்றி, இவ்விரதத்தை நீ மேற்கொள்ள வேண்டும். இம் முறையினால் பரமபுருஷர் வெகுவிரைவில் திருப்தியடைந்து, உனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றுவார்.