அத்தியாயம் – 40
அக்ரூரரின் பிரார்த்தனைகள்
பதம் 10.40.1
ஸ்ரீ-அக்ரூர உவாச
நதோ ‘ஸ்மி அஹம் த்வாகில-ஹேது-ஹேதும்
நாராயணம் பூருஷம் ஆத்யம் அவ்யயம்
யன்-நாபி-ஜாதாத் அரவிந்த-கோஷாத்
ப்ரஹ்மாவிராஸீத் யத ஏஷ லோக

ஸ்ரீ அக்ரூர: உவாச—ஸ்ரீ அக்ரூரர் கூறினார்; நத:—தலைவணங்கினார்; அஸ்மி—இருக்கின்றேன்; அஹம்—நான்; த்வா—உமக்கு; அகில—அனைத்தின்; ஹேது—காரணங்களுக்கெல்லாம்; ஹேதும்—காரணம்; நாராயணம்—பகவான் நாராயணர்; பூருஷம்—பரமபுருஷர்; ஆத்யம்—ஆதியானவர்; அவ்யயம்—குறைவற்றவர்; யத்—எவருடைய; நாபி—நாபியிலிருந்து; ஜாதாத்—உண்டானது; அரவிந்த—ஒரு தாமரைக்கொடி; கோஷாத்—அதன் இதழ் அடுக்குக்களிலிருந்து; ப்ரஹ்மா—பிரம்மதேவன்; அவிராஸீத்—தோன்றினார்; யத:—எவரிடமிருந்து; ஏஷ:—அந்த; லோக:—உலகம்.

ஸ்ரீ அக்ரூரர் கூறினார்: “காரணங்கள் அனைத்தின் காரணமும், ஆதியானவரும், குறைவற்றவருமான பரம புருஷர் நாராயணருக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக. உமது நாபியிலிருந்து தோன்றிய தாமரை மலரின் இதழ் அடுக்குகளிலிருந்து பிரம்ம தேவன் தோன்றினார். அவரது செயல் துணையினால் இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது.”

பதம் 10.40.2
பூஸ் தோயம் அக்னி: பவனம் கம் ஆதிர்
மஹான் அஜாதிர் மன இந்த்ரியாணி
ஸர்வேந்த்ரியார்த்தா விபுதாஸ் ச ஸர்வே
யே ஹேதவஸ் தே ஜகதோ ‘ங்க பூதா:

பூ—நிலம்; தோயம்—நீர்; அக்னி:—நெருப்பு; பவனம்—காற்று; கம்—ஆகாயம்; ஆதி:—மற்றும் அவற்றின் ஆதாரமான ஆணவம்; மஹான்—மகத்தத்துவம்; அஜா—ஒட்டுமொத்த ஜடவியற்கை; ஆதி:—அதன் ஆதாரமான பரமபுருஷ பகவான்; மன:—மனம்; இந்த்ரியாணி—புலன்கள்; ஸர்வ-இந்த்ரியா—புலன்கள் அனைத்தின்; அர்த்தா:—பொருட்கள்; விபுதா:—தேவர்கள்; ச—மற்றும்; ஸர்வோ—எல்லாம்; யே—எது; ஹேதவ:—காரணம்; தே—உம்முடைய; ஜகத—பிரபஞ்சத்தின்; அங்க—உடலிலிருந்து; பூதா:—உண்டானது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் அவற்றின் ஆதாரமான ஆணவம், மகத்தத்துவம், ஒட்டு மொத்தப் பௌதிக இயற்கை மற்றும் அதன் ஆதாரமான பரமபுருஷ பகவானின் புருஷவிரவு, மனம், புலன்கள், புலன்பொருட்கள், மற்றும் புலன்களின் ஆதிபத்தியத் தெய்வங்கள் இப்பிரபஞ்சத் தோற்றத்தின் அனைத்துக் காரணங்களும் உமது உன்னத உடலிலிருந்தே தோன்றின.

பதம் 10.40.3
நைதே ஸ்வரூபம் விதுர் ஆத்மனஸ் தே
ஹி அஜாதயோ ‘நாத்மதயா க்ருஹீதா:
அஜோ ‘னுபத்த: ஸ குணைர் அஜாயா
குணாத் பரம் வேத ந தே ஸ்வரூபம்

ந—இல்லை; ஏதே—இவை (படைப்புப் பொருட்கள்); ஸ்வரூபம்—உண்மை வடிவம்; விது:—அறிவது; ஆத்மன:—பரமாத்மாவின்; தே—நீர்; ஹி—உண்மையில்; அஜா-ஆதய:—ஒட்டுமொத்த ஜடஇயற்கையின் தலைமையில்; அநாத்மதயா—உயிரற்ற ஜடமாயிருக்கும் நிலைமையினால்; க்ருஹீதா:—பற்றப்பட்டார்; அஜ:—பிரம்மதேவன்; அனுபத்த:—பந்தப்படுத்தப்பட்டார்; ஸ:—அவர்; குணை:—குணங்களினால்; அஜாயா:—ஜட இயற்கையின்; குணாத்—குணங்களுக்கு; பரம்—உன்னதமான; வேத ந—அவர் அறியமாட்டார்; தே—உமது; ஸ்வரூபம்—உண்மை வடிவினை.

பிரக்ருதி எனப்படும் ஒட்டு மொத்த ஜடஇயற்கையும், மற்றும் இவை போன்ற பிற படைப்புப் பொருட்களும், உயிரற்ற ஜடத்தின் வரையறைக்கள் தோன்றியதினால் அவை உம்மை உள்ளபடியே நிச்சயம் அறிய முடியாது. நீர் ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்டவராதலினால், அக்குணங்களில் கட்டுண்டிருக்கும் பிரம்ம தேவனால் கூட உமது உண்மை வடிவினை அறிய முடியவில்லை.

பதம் 10.40.4
த்வாம் யோகினோ யஜந்தி அத்தா மஹா-புருஷம் ஈஸ்வரம்
ஸாத்யாத்மம் ஸாதிபூதம் ச ஸாதிதைவம் ச ஸாதவ:

த்வாம்—உமக்கு; யோகின:—யோகிகள்; யஜந்தி—வேள்விகள் செய்து; அத்தா—நிச்சயமாக; மஹா-புருஷம்—பரமபுருஷருக்கு; ஈஸ்வரம்—முழுமுதற்கடவுள்; ஸ-அத்யாத்மம்—உயிர்களின் (சாட்சி); ஸ-அதி-பூதம்—பெளதிகப் பூதங்களின்; ச—மற்றும்; ஸ-அதிதைவம்—ஆதிபத்தியத் தேவர்களின்; ச—மற்றும்; ஸாதவ:—தூய்மையானவர்கள்.

தூய்மையான யோகிகள், உயிர்கள், உயிர்களின் உடல்களை உருவாக்கும் பௌதிகப் பூதங்கள் மற்றும் அப்பூதங்களின் ஆதிபத்தியத் தேவர்கள் என்னும் மூவகை வடிவமாக உம்மை உணர்வதின் மூலம். முழுமுதற்கடவுளாகிய உம்மை வழிபடுகின்றனர்.

பதம் 10.40.5
த்ரய்யா ச வித்யயா கேசித் த்வாம் வை வைதானிகா த்விஜா:
யஜந்தே விததைர் யஜ்ஞைர் நானா-ரூபாமராக்யயா

த்ரய்யா—மூன்று வேதங்களின்; ச—மற்றும்; வித்யயா—மந்திரங்களினால்; கேசித்—சிலர்; த்வாம்—உம்மை; வை—உண்மையில்; வைதானிகா:—மூன்று புனித அக்கினிகளின் ஒழுங்குமுறை விதிகளை மதிப்பவர்கள்; த்விஜா:—அந்தணர்கள்; யஜந்தே—வழிபடுகின்றனர்; வித்தை:—விரிவான; யக்ஞை:—யக்ஞங்களினால்; நானா—பல்வேறு; ரூப—வடிவங்களையுடைய; அமர—தேவர்களின்; ஆக்யயா—நியமங்களினால்.

மூன்று புனித அக்கினிகளின் நியதிகளைப் பின்பற்றும் அந்தணர்கள் மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை ஓதி, விரிவான அக்னி யக்ஞங்களை பல்வேறு வடிவங்களும், நாமங்களுமுடைய பல்வேறு தேவர்களுக்கு அக்னி யக்ஞங்களை செய்வதின்மூலம் உம்மை வணங்குகின்றனர்.

பதம் 10.40.6
ஏகே த்வாகில-கர்மாணி ஸன்ன்யஸ்யோபஸ்மம் கதா:
ஜ்ஞானினோ ஜ்ஞான-யஜ்ஞேன யஜந்தி ஜ்ஞான-விக்ரஹம்

ஏகே—சிலர்; த்வா—உமக்கு; அகில—அனைத்து; கர்மாணி—செயல்கள்; ஸன்ன்யஸ்ய—விலகியிருந்து; உபஸமம்—அமைதி; கதா:—அடைந்து; ஜஞானின:—ஞானிகள்; ஜ்ஞான-யஜ்ஞேன—ஞான வளர்ச்சிக்கான வேள்வியினால்; யஜந்தி—அவர்கள் வழிபடுகின்றனர்; ஜ்ஞான-விக்ரஹம்—ஞான வடிவமாக.

ஞானம் வேண்டும் சிலர் உலகியற் செயல்கள் அனைத்தையும் துறந்து, அமைதிபெற, ஞானம் அனைத்தின் உண்மை வடிவமான உம்மை, ஞானம் பெறுவதற்கான வேள்வியின் மூலம் வழிபடுகின்றனர்.

பதம் 10.40.7
அன்யே ச ஸம்ஸ்க்ருதாம்மானோ விதினாபிஹிதேன தே
யஜந்தி த்வன் மயாஸ் த்வாம் வை பஹீ-மூர்தி-ஏக-மூர்திகம்

அன்யே—பிறர்; ச—மேலும்; ஸம்ஸ்க்ருத—தூய்மையுடைய; ஆத்மன:—அவர்களின் புத்தி; விதினா—விதிமுறைகளினால் (“பாஞ்சராத்ரம்’ போன்ற சாத்திரங்களின்); அபிஹிதேன—அருளப்பட்டது; தே—உம்மால்; யஜந்தி—வழிபடுகின்றனர்; த்வத்-மயா:—உமது சிந்தனையினால் நிரப்பப்பட்டு; த்வாம்—உம்மை; வை—உண்மையில்; பஹி-மூர்தி—பல வடிவங்கள் உடையவர்; ஏக-மூர்திகம்—ஒரே வடிவம் உடையவர்.

மேலும், தூய்மையான புத்தியுடைய பிறர், உம்மால் அருளப்பட்ட வைணவ சாத்திரங்களின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். உமது நினைவில் தமது மனங்களை ஒருமுகப்படுத்தி பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் ஒரே பரமபுருஷ பகவான் நீர்தானென்று உம்மை வழிபடுகின்றனர்.

பதம் 10.40.8
த்வாம் ஏவான்யே ஸிவோக்தேன மார்கேண ஸிவ-ரூபிணம்
பஹ்வ்-ஆச்சார்ய-விபேதேன பகவந்தம் உபாஸதே

த்வாம்—உம்மை; ஏவ—கூட; அன்யே—பிறர்; ஸிவ—சிவபெருமானால்; உக்தேன—கூறப்பட்ட; மார்கேண—மார்க்கத்தினால்; ஸிவ-ரூபிணம்—சிவபெருமான் வடிவத்தில்; பஹீ-ஆச்சார்ய—பல ஆச்சார்யர்கள்; விபேதேன—பல்வேறு உபதேசங்களைப் பின்பற்றி; பகவந்தம்—பரம புருஷபகவான்; உபாஸதே—அவர்கள் வழிபடுகின்றனர்.

மற்றுஞ்சிலர், பரமபுருஷ பகவான் உம்மை, சிவபெருமான் வடிவத்தில் வழிபடுகின்றனர். அவர்கள் சிவபெருமானால் அருளப்பட்டு பல ஆச்சாரியர்களால் பல்வேறு வழிகளில் விளக்கமளிக்கப்படும் மார்க்கத்தினைப் பின்பற்றுகின்றனர்.

பதம் 10.40.9
ஸர்வே ஏவ யஜந்தி த்வாம் ஸர்வ-தேவ-மயோஸ்வரம்
யே ‘பி அன்ய-தேவதா-பக்தா யதி அபி அன்ய-திய: ப்ரபோ

ஸர்வே—அனைவரும்; ஏவ—உண்மையில்; யஜந்தி—வழிபடுகின்றனர்; த்வாம்—உம்மை; ஸர்வ-தேவ—எல்லா தேவர்களையும்; மய—ஓ, நீர் தம்முள் உடையவர்; ஈஸ்வரம்—பரமபுருஷ பகவான்; யே—எவர்கள்; அபி—கூட; அன்ய—பிற; தேவதா—தேவதைகளின்; பக்தா:—பக்தர்கள்; யதி அபி—இருந்தபோதிலும்; அன்ய—வேறோரிடத்தில்; திய:—தங்கள் கவனத்தினைத் திருப்புகின்றனர்; ப்ரபோ—ஓ, பிரபுவே.

ஆயினும் எந்தன் பிரபுவே, இவர்கள் அனைவரும் உம்மிடமிருந்தும் தங்கள் கவனத்தைத் திருப்பிப் பிற தேவர்களை வழிபட்ட போதிலும், ஓ, அனைத்துத் தேவர்களின் உருவமாகத் திகழ்பவரே, அவர்கள் உண்மையில் உம்மைத் தான் வழிபடுகின்றனர்.

பதம் 10.40.10
யதாத்ரி-ப்ரபவா நத்ய: பர்ஜன்யா பூரிதா: ப்ரபோ
விஸந்தி ஸர்வத: ஸிந்தும் தத்வத் த்வாம் கதயோ ‘ந்தத

யதா—போன்று; அத்ரி—மலைகளிலிருந்து; ப்ரபவா:—பிறந்து; நத்ய:—நதிகள்; பர்ஜன்ய—மழையினால்; ஆபூரிதா:—நிரப்பப்பட்டு; ப்ரபோ—ஓ, பிரபுவே; விஸந்தி—புகுகின்றன; ஸர்வத:—எல்லாப் பக்கங்களிலும் இருந்தும்; ஸிந்தும்—கடலினுள்; தத்வத்—அதுபோல்; த்வாம்—உம்மை; கதய:—இப்பாதைகள்; அந்தத:—இறுதியில்.

மலைகளில் பிறந்து, மழைநீரினால் நிரப்பப்படும் எல்லா நதிகளும், பல்வேறு திசைகளில் பாய்ந்தோடி இறுதியில் கடலில் கலக்கின்றன. அதுபோல் இப்பல்வேறு பாதைகளும் இறுதியில் உம்மையே அடைகின்றன ஒ, பிரபுவே.

பதம் 10.40.11
ஸத்த்தவம் ரஜஸ் தம இதி பவத: ப்ரக்ருதேர் குணா:
தேஷு ஹி ப்ராக்ருதா: ப்ரோதா ஆ-ப்ரஹ்ம-ஸ்தாவராதய:

ஸத்த்தவம்—சத்துவகுணம்; ரஜ:—ரஜோகுணம்; தம:—தமோகுணம்; இதி—இவ்வாறு அறியப்படும்; பவத:—உமது; ப்ரக்ருதே:—ஜட இயற்க்கையின்; குணா:—குணங்கள்; தேஷு—அவர்களுக்கு; ஹி—நிச்சயமாக; ப்ராக்ருதா:—கட்டுப்பட்ட உயிர்கள்; ப்ரோதா:—புகுகின்றனர்; ஆ-ப்ரஹ்ம—பிரம்மதேவன் வரை; ஸ்தாவர-ஆதய:—அசையாத உயிர்களில் தொடங்கி.

உமது ஜட இயற்கையின் முக்குணங்களான சத்துவம், இரஜோ, தமோ குணங்கள், அசையாத உயிர்களிலிருந்து பிரம்ம தேவன் வரையிலான அனைத்து ஆத்மாக்களையும் சிக்க வைக்கின்றன.

பதம் 10.40.12
துப்யம் நமஸ் தே த்வ் அவிஷக்த-த்ருஷ்டயே
ஸர்வாத்மனே ஸர்வ-தியாம் ச ஸாக்ஷிணே
குண-ப்ரவாஹோ ‘யம் அவித்யயா க்ருத:
ப்ரவர்த்ததே தேவ-ந்ரு-திர்யக்-ஆத்மஸு

துப்யம்—உமக்கு; நம:—வந்தனம்; தே—உமது; து—மற்றும்; அவிஷக்த—தனித்த; த்ருஷ்டயே—அவருடைய பார்வை; ஸர்வ-ஆத்மனே—அனைவரின் ஆத்மாவிற்கு; ஸர்வ—அனைவரின்; தியாம்—உணர்வின்; ச—மற்றும்; ஸாக்ஷிணே—சாட்சிக்கு; குண—ஜடக் குணங்களின்; ப்ரவாஹ:—பிரவாகம்; அயம்—இது; அவித்யயா—அறியாமையின் வலிமையினால்; க்ருத:—உருவாக்கப்பட்டது; ப்ரவர்த்ததே—செல்கின்றது; தேவ—தேவர்களாக; ந்ரு—மனிதர்களாக; திர்யக்—விலங்குகளாக; ஆத்மஸு—தங்கள் அடையாளங்களை மேற்கொண்டிருப்போரிடையே.

எல்லா உயிர்களின் பராமாத்மாவாக இருந்து, அனைவரின் உணர்வினையும் நடுநிலையுடன் நோக்கும் சாட்சியான உமக்கு நான் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். அறியாமையின் வலிமையால் உருவான, உமது உலகியற் குணங்களின் பிரவாகமானது, தேவர்களாகவும், மனிதர்களாகவும், விலங்குகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அனைத்து உயிர்களிடையும் மிக்க வன்மையுடன் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

பதங்கள் 10.40.13 – 10.40.14
அக்னிர் முகம் தே ‘வனிர் அங்க்ரீர் ஈக்ஷணம்
ஸூர்யோ நபோ நாபிர் அதோ திஸ: ஸ்ருதி:
த்யெள கம் ஸுரேந்த்ராஸ் தவ பாஹவோ ‘ர்ணாவ:
குக்ஷிர் மருத் ப்ராண-பலம் ப்ரகல்பிதம்

ரோமாணி வ்ருக்ஷெளஷதய: ஸிரோருஹா
மேகா: பரஸ்யாஸ்தி-நகானி தே ‘த்ரய:
நிமேஷணம் ராத்ரி-அஹனீ ப்ரஜாபதிர்
மேட்ரஸ் து வ்ருஷ்டிஸ் தவ வீர்யம் இஷ்யதே

அக்னி:—நெருப்பு; முகம்—முகம்; தே—உமது; அவனி:—பூமி; அங்க்ரி:—பாதங்கள்; ஈக்ஷணம்—விழி; ஸூர்ய:—சூரியன்; நப:—வானம்; நாபி:—நாபி; அத உ—மற்றும் கூட; திஸ:—திசைகள்; ஸ்ருதி:—செவிப்புலன்; த்யெள—தேவலோகம்; கம்—தலை; ஸுர-இந்த்ரா:—தலைமைத் தேவர்கள்; தவ—உமது; பாஹவ—கரங்கள்; அர்ணாவ:—கடல்கள்; குக்ஷி:—அடிவயிறு; மருத்—காற்று; ப்ராண—பிராணன்; பலம்—உடல் வலிமை; ப்ரகல்பிதம்—கருதப்படுகின்றது; ரோமாணி—உரோமங்கள்; வ்ருஷ—மரங்கள்; ஒளஷதய:—செடிகள்; ஸிர:-ருஹா:—உமது தலை முடி; மேகா:—மேகங்கள்; பரஸ்ய—பரமபுருஷரின்; அஸ்தி—எலும்புகள்; நகானி—நகங்கள்; மே—உமது; அத்ரய:—மலைகள்; நிமேஷணம்—நீர் கண் இமைப்பது; ராத்ரி-அஹனீ—இரவு மற்றும் பகல்; ப்ரஜாபதி:—பிரஜாபதி; மேட்ர:—பிறப்புறுப்பு; து—மற்றும்; வ்ருஷ்டி:—மழை; தவ—உமது; வீர்யம்—சுக்கிலம்; இஷ்யதே—கருதப்படுகிறது.

நெருப்பு உமது முகம், நிலம் உமது பாதங்கள், சூரியன் உமது விழி, வானம் உமது நாபி, திசைகள் உமது செவிப்புலன்கள், தலைமைத்தேவர்கள் உமது கரங்கள், கடல்கள் உமது அடிவயிறு, தேவலோகம் உமது சிரம், காற்று உமது பிராணன் மற்றும் உடல் வலிமையாகும். மரங்களும், செடிகளும் உமது உடலிலுள்ள உரோமங்கள், மேகங்கள் உமது தலையிலுள்ள மயிர்க்குழல்கள், மலைகள், பரமபுருஷரே! உமது எலும்புகளும், நகங்களுமாகும். இரவு பகல் என்றும், இவற்றின் பாதை உமது கண் இமைத்தலாகும். மனித குலத்தின் பிரஜாபதி உமது பிறப்புறுப்பு, மழை உமது சுக்கிலமாகும்.

பதம் 10.40.15
த்வய்ய் அவ்யயாத்மன் புருஷே ப்ரகல்பிதா
லோகா: ஸ்-பாலா பஹு-ஜீவ-ஸங்குலா:
யதா ஜலே ஸஞ்ஜிஹதே ஜலௌகஸோ
‘பி உதும்பரே வா மஸகா மனோ-மயே

த்வயி—உமக்குள்; அவ்யய-ஆத்மன்—அழிவற்ற ஒருவர்; புருஷே—முழுமுதற்கடவுள்; ப்ரகல்பிதா:—படைக்கப்பட்டது; லோகா:—உலகங்கள்; ஸ-பாலா:—அவற்றைப் பாதுகாக்கும் தேவர்களுடன் சேர்த்து; பஹீ—பல; ஜீவ—உயிர்கள்; ஸங்குலா:—கூட்டத்துடன்; யதா—போன்று; ஜலே—நீரில்; ஸஞ்ஜிஹதே—செல்கின்றன; ஜல-ஓகஸ:—நீர் வாழ் உயிர்கள்; அபி—உண்மையில்; உதும்பரே—உதும்பர பழத்தில் (ஒரு வகையான அத்திப்பழம்); வா—அல்லது; மஸகா:—கடிக்கும் சிறு பூச்சிகள்; மன:—மனம் (மற்றும் பிற புலன்கள்); மயே—(உம்மிடத்தில்) இருக்கின்றன.

எல்லா உலகங்களும் அவற்றின் ஆதிபத்தியத்தேவர்களோடும், மக்கட்கூட்டங்களோடும் அழிவற்ற முழுமுதற் கடவுளான உமக்குள்ளேயே படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், நீர்வாழ் உயிர்கள் கடலில் நீந்துவது போன்றும் அல்லது ‘உதும்பர’ பழத்தினுள் சிறு பூச்சிகள் இருப்பது போன்றும் மனம் மற்றும் புலன்களின் அடிப்படையாக விளங்கும் உமக்குள் பயணம் செய்கின்றன.

பதம் 10.40.16
யானி யானீஹ ரூபாணி க்ரீடனார்த்தம் பிபர்ஸி ஹி
தைர் ஆம்ருஷ்ட-ஸுசோ லோகா முதா காயந்தி தே யஸ

யானி யானி—வேறு வேறு; இஹ—இப்பௌதிக உலகில்; ரூபாணி—வடிவங்கள்; க்ரீடன—விளையாட்டு; அர்த்தம்—நோக்கத்திற்காக; பிபர்ஸி—நீர் தோற்றுவிக்கின்றீர்; ஹி—உண்மையில்; தை:—அவற்றினால்; ஆம்ருஷ்ட—நீக்குகின்றன; ஸுச:—அவர்களின் துக்கத்தினை; லோகா:—மக்கள்; முதா—மகிழ்ச்சியுடன்; காயந்தி—பாடுகின்றனர்; தே—உமது; யஸ:—கீர்த்திகளை.

உமது லீலைகளில் மகிழ்வதற்காக, நீர் உம்மை இப்பௌதிக உலகில், பல்வேறு வடிவங்களாகத் தோற்றுவிக்கின்றீர். இவ்வாதாரங்கள் உமது கீர்த்திகளை மகிழ்ச்சியுடன் பாடுகின்றவர்களின் துக்கத்தினை அறவே நீக்குகின்றன.

பதங்கள் 10.40.17 – 10.40.18
நம: காரண-மத்ஸ்யாய ப்ரளயாப்தி-சராய ச
ஹயஸீர்ஷ்ணே நமஸ் துப்யம் மது-கைடப-ம்ருத்யவே

ஆகூபாராய ப்ருஹதே நமோ மந்த்ர-தாரிணே
க்ஷிதி-உத்தார-விஹாராய நம: ஸுகர-மூர்த்தயே

நம:—வந்தனம்; காரண—படைப்பின் மூல காரணமாக இருப்பவர்; மத்ஸ்யயா—பரமபுருஷ பகவானின் மச்சாவதாரத்திற்கு (மீன்); ப்ரளய—பிரளய வெள்ளத்தில்; அப்தி—கடலில்; சராய—அவர் நீந்தினார்; ச—மற்றும்; ஹய-ஸீர்ஷ்ணே—குதிரைத் தலையுடன் அவதரித்தவருக்கு; நம:—வந்தனங்கள்; துப்யம்—உமக்கு; மது-கைடப—மது மற்றும் கைடப என்னும் அசுரர்களை; ம்ருத்யவே—கொன்றவருக்கு; அகூபாராய—ஆமைக்கு; ப்ருஹதே—பெரிய; நம:—வந்தனங்கள்; மந்தர—மந்தர மலையினை; தாரிணே—தாங்கியவருக்கு; க்ஷிதி—பூமியை; உத்தார—தூக்கியவர்; விஹாராய—மகிழ்ச்சியுடன்; நம:—வந்தனங்கள்; ஸுகர—பன்றியின்; மூர்த்தயே—வடிவத்திற்கு.

ஊழிக்காலப் பிரளய வெள்ளத்தில் நீந்திச் சென்ற பகவான் மச்சாவதாரத்திற்கும், மது, கைடபர் என்னும் அசுரர்களைக் கொன்ற பகவான் ஹயக்ரீவருக்கும், மந்தர மலையினைத் தாங்கிய மிகப் பெரிய ஆமைக்கும் (பகவான் கூர்மாவதாரம்), பூமியைத் தூக்கி மகிழ்ந்த பன்றி அவதாரத்திற்கும் (பகவான் வராகர்) படைப்பின் மூல காரணரான உமக்கும் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 10.40.19
நமஸ் தே ‘த்புத-ஸிம்ஹாய ஸாது-லோக-பயாபஹ
வாமனாய நமஸ் துப்யம் க்ராந்த-த்ரிபுவனாய ச

நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; அத்புத—அற்புதமான; ஸிம்ஹாய—சிங்கத்திற்கு; ஸாது-லோக—சாதுக்களான அனைத்துப் பக்தர்களின்; பய—பயத்தினை; அபஹ—ஓ, நீக்குபவரே; வாமனாய—வாமன அவதாரத்திற்கு; நம:—வந்தனங்கள்; துப்யம்—உமக்கு; க்ராந்த—அளந்தவர்; த்ரி-புவனாய—பிரஞ்சத்தின் மூன்று உலகங்களையும்; ச—மற்றும்.

உமது சாதுக்களான பக்தர்களின் அச்சத்தினை நீக்கும் அற்புத சிங்கத்திற்கும் (பகவான் நரசிம்மன்), மூன்று உலகங்களையும் தமது பாதத்தினால் அளந்த வாமன அவதாரத்திற்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.40.20
நமோ ப்ருகூணாம் பதயே த்ருப்த-க்ஷத்ர-வனச்-சிதே
நமஸ் தே ரகு-வர்யாய ராவணாந்த-கராய ச

நம:—வந்தனங்கள்; ப்ருகூணாம்—பிருகுகுலத்தின்; பதயே—தலைவருக்கு (பகவான் பரசுராமர்); த்ருப்த—இறுமாப்புடைய; க்ஷத்ர—சத்திரிய குலத்தின்; வன—வனம்; சிதே—வெட்டி எறிந்தவர்; நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; ரகு-வர்யாய—இரகு குல நாயகருக்கு; ராவண—இராவணனை; அந்த-கராய—முடிவிற்குக் கொண்டு வந்தார்; ச—மற்றும்.

இறுமாப்புடைய சத்திரியர்கள் என்னும் வம்சாவளியினை வெட்டி வீழ்த்திய பிருகு குலத்தின் தலைவருக்கும் (பரசுராமர்) மற்றும் இராவணனின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்த இரகு குல திலகரான பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.40.21
நமஸ்தே வாஸுதேவாய நம: ஸங்கர்ஷணாய ச
ப்ரத்யும்நாயாநிருத்தாய ஸாத்வதாம் பதயே நம:

நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; வாஸுதேவாய—பகவான் ஸ்ரீ வாசுதேவருக்கு; நம:—வந்தனங்கள்; ஸங்கர்ஷணாய—பகவான் சங்கர்ஷருக்கு; ச—மற்றும்; ப்ரத்யும்நாய—பகவான் பிரத்யும்னருக்கு; அநிருத்தாய—பகவான் அநிருத்தருக்கும்; ஸாத்வதாம்—யாதவர்களின்; பதயே—தலைவருக்கு; நம:—வந்தனங்கள்.

சாத்வத குலத்தின் தலைவரான உமக்கும், உமது வடிவங்களான வாசுதேவருக்கும், சங்கர்ஷணருக்கும், பிரதியும்நருக்கும், அநிருத்தருக்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.40.22
நமோ புத்தாய ஸுத்தாய தைத்ய-தானவ-மோஹினே
ம்லேச்ச-ப்ராய-க்ஷத்ர-ஹந்த்ரே நமஸ் தே கல்கி-ரூபிணே

நம:—வந்தனங்கள்; புத்தாய—பகவான் புத்தருக்கு; ஸுத்தாய—சுத்தமான; தைத்ய-தானவ—திதி மற்றும் தானு என்னும் அசுரகுலத்தினரை; மோஹினே—குழப்பியவருக்கு; ம்லேச்ச—மாமிசம் உண்ணும் மிலேச்சர்களை; ப்ராய—ஒத்த; க்ஷத்ர—சத்திரியர்கள்; ஹந்த்ரே—அழிக்கின்றவருக்கு; நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; கல்கி-ரூபிணே—கல்கி வடிவத்தில்.

தைத்யர்கள் மற்றும் தானவர்களைக் குழப்பமுறச் செய்த குற்றமற்ற உமது பகவான் புத்தர் அவதாரத்திற்கும், மன்னர்கள் என்னும் போர்வையில் மாமிசம் உண்ணும் மிலோச்சர்களை அழிக்கின்ற உமது கல்கி அவதாரத்திற்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.40.23
பகவான் ஜீவா-லோகோ ‘யம் மோஹிதஸ் தவ மாயயா
அஹம் மமேதி அஸத்-க்ராஹோ ப்ராம்யதே கர்ம-வர்த்மஸு

பகவான்—ஓ, பரமபுருஷ பகவானே; ஜீவ—உயிர்களை; லோக:—உலகம்; அயம்—இந்த; மோஹித:—குழம்பச் செய்யும்; தவ—உமது; மாயயா—மாயாசக்தியினால்; அஹம் மம இதி—”நான்” மற்றும் “எனது” என்ற கருத்துகளின் அடிப்படையில்; அஸத்—பொய்யான; க்ராஹ:—அவர்களின் கருத்து; ப்ராம்யதே—அலையவைக்கப்படுகிறான்; கர்ம—பலன் தரும் செயலின்; வர்த்மஸு—பாதைகளில்.

ஓ, பரமபுருஷ பகவானே, இவ்வுலகிலுள்ள உயிர்கள் உமது மாயா சக்தியினால் குழப்பமடைகின்றனர். “நான்” “எனது” என்னும் பொய்யான கருத்துக்களைக் கொண்டிருப்பதினால் அவர்கள் பலன்தரும் செயலின் பாதைகளில் பலவந்தமாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பதம் 10.40.24
அஹம் சாத்மாத்மஜாகார-தாரார்த்த-ஸ்வஜனாதிஷு
ப்ரமாமி ஸ்வப்ன-கல்பேஷு மூட: ஸத்ய-தியா விபோ

அஹம்—நானும்; ச—கூட; ஆத்ம—எனது உடலைக் கருதி; ஆத்ம-ஜ—குழந்தைகள்; அகார—இல்லம்; தார—மனைவி; அர்த்த—செல்வம்; ஸ்வ-ஜன—உறவினர்கள்; ஆதிஷீ—போன்ற; ப்ரமாமி—குழப்பப்படுகிறேன்; ஸ்வப்ன—ஒரு கனவு; கல்பேஷு—அவர்களைப் போன்ற; மூட:—மூடர்கள்; ஸத்ய—அவையெல்லாம் உண்மை என்றும்; தியா—கருத்தில்; விபோ—ஓ, எல்லாம் வல்ல பகவானே.

ஓ, எல்லாம் வல்ல பகவானே! நானும்கூட இவ்வாறு குழப்பப்பட்டு, மூடத்தனமாக, ஒரு கனவினைப் போல் பொய்யான எனது உடல், குழந்தைகள், இல்லம், மனைவி, செல்வம் மற்றும் உறவினர்களை உண்மையானவை என்று கருதிக் கொண்டிருக்கின்றேன்.

பதம் 10.40.25
அநித்யானாத்ம-து: கேஷுவிபர்யய-மதிர் ஹி அஹம்
த்வந்த்வாராமஸ் தமோ-விஷ்டோ ந ஜானே த்வாத்மன: ப்ரியம்

அநித்ய—நித்தியமற்றதை; அநாத்ம—உண்மையான ஆத்மா அல்லாததை; து: கேஷு—துன்பத்திற்கு ஆதாரமானவற்றை; விபர்யய—எதிரிடையான; மதி:—அவருடைய மதி; ஹி—உண்மையில்; அஹம்—நான்; த்வந்த்வ—இருமையில்; ஆராம:—இன்பமடைகின்றேன்; தம:—அறியாமையில்; விஷ்ட:—மூழ்கி; ந ஜானே—நான் அறியவில்லை; த்வா—உம்மை; ஆத்மன:—எனது; ப்ரியம்—பிரியத்திற்குரியவராக.

இவ்வாறு அநித்யமானவற்றை நித்தியமானவையென்றும், எனது உடலை எனது ஆத்மாவாகவும், துன்பத்திற்குக் காரணமானவற்றை, இன்பத்திற்குக் காரணமானவை என்றும் நேர் எதிரிடையாக கருதி நான் உலகியல் இருமைகளில் இன்பம் காண முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறு அறியாமையினால் மூடப்பட்டதினால், உம்மை எனது அன்பிற்குரிய உண்மைப் பொருளாக நான் அறியமுடியவில்லை.

பதம் 10.40.26
யதாபுதோ ஜலம் ஹித்வா ப்ரதிச்சன்னம் தத்-உத்பவை:
அப்யோதி ம்ருக-த்ருஷ்ணாம் வை தத்வத் த்வாஹம் பரான்-முக:

யதா—போன்று; அபுத:—மதியற்ற ஒருவன்; ஜலம்—நீரினை; ஹித்வா—மேலோட்டமாகப் பார்த்து; ப்ரதிச்சன்னம்—மூடப்பட்ட; தத்-உத்பவை:—அதனுள் வளர்ந்திருக்கும் செடி கொடிகளால்; அப்யோதி—அணுகுகிறான்; ம்ருக-த்ருஷ்ணாம்—ஒரு கானல் நீரினை; வை—உண்மையில்; தத்வத்—அதே வழியில்; த்வா—உம்மை; அஹம்—நான்; பராக்-முக:—பாராமுகமாக இருந்துவிட்டேன்.

செடி கொடிகளாலும் பாசியினாலும் மூடப்பட்டிருந்த நீர் நிலையினை மேலாட்டமாகப் பார்த்த ஒருவன் அங்கே நீரில்லை என்று கருதி கானல் நீரின் பின்னே ஓடியது போல் நானும் உம்மிடம் பராமுகமாக இருந்து விட்டேன்.

பதம் 10.40.27
நோத்ஸஹே ‘ஹம் க்ருபண-தீ: காம-கர்ம-ஹதம் மன:
ரோத்தும் ப்ரமாதிபிஸ் சாக்ஷைர் ஹ்ரியமானம் இதஸ் தத:

ந உத்ஸஹே—பலத்தினைக் காண இயலாதவனாக இருக்கிறேன்; அஹம்—நான்; க்ருபண—ஊனமுடைய; தீ:—புத்தியினால்; காம—பெளதிக இச்சைகளினால்; கர்ம—மற்றும் பெளதிகச் செயல்களினால்; ஹதம்—தொல்லைகளான; மன:—எனது மனம்; ரோத்தும்—தடுத்து நிறுத்துவதற்கு; ப்ரமாதிபி:—வலிவும், ஆற்றலுமுடைய; ச—மற்றும்; அக்ஷை:—புலன்களினால்; ஹ்ரியமானம்—அலைக்கழிக்கப்படுகின்றேன்; இத: தத:—இங்குமங்கும்.

எனது புத்தி ஊனமுடையதாக இருப்பதினால் எனது மனதினை அடக்கம் வலிமையினை என்னால் எங்கும் காண முடியவில்லை. எனது மனம் இச்சைகளினாலும், உலக செயல்களினாலும் தொல்லைக்காளாகி கட்டுக்கடங்காத எனது வலிய புலன்களினால் தொடர்ந்து இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகின்றது.

பதம் 10.40.28
ஸோ ‘ஹம் தவாங்க்ரி-உபகதோ ‘ஸ்மி அஸதாம்-துராபம்
தச் சாபி அஹம் பவத்-அனுக்ரஹ ஈஸ மன்யே
பும்ஸோ பவேத் யர்ஹி ஸம்ஸரணாபவர்கஸ்
த்வய்ய் அப்ஜ-நாப ஸத்-உபாஸனயா மதி: ஸ்யாத்

ஸ:—இவ்வாறாக; அஹம்—நான்; தவ—உமது; அங்க்ரி—பாதங்களை; உபகத: அஸ்மி—அஸ்மி-அடைகின்றேன்; அஸ்தாம்—தூய்மையற்றவர்களுக்கு; துராபம்—அடைவதற்கரிய; தத்—அது; ச—மற்றும்; அபி—கூட; அஹம்—நான்; பவத்—உமது; அனுக்ரஹ:—கருணை ஈஸ—ஓ, பகவானே; மன்யே—கருதுகிறேன்; பும்ஸ:—ஒருவனின்; பவேத்—ஏற்படுகின்றது; யர்ஹி—எப்பொழுது; ஸம்ஸரண—வாழ்க்கைச் சக்கரத்தில் சுழல்கின்றவனின்; அபவர்க:—நிற்கின்ற போது; த்வயி—உமது; அப்ஜ—தாமரை மலர்போன்ற; நாப—ஓ, நாபியினை உடையவரே; ஸத்—தூய பக்தர்களின்; உபாஸனயா—வழிபடுவதினால்; மதி:—உணர்வு; ஸ்யாத்—வளர்ச்சியடைகின்றான்.

இவ்வாறு இழிவற்ற நான் அடைக்கலம் வேண்டி உமது திருவடிகளை அணுகுகின்றேன். ஏனென்றால் ஓ, பகவானே! தூய்மையற்றவர்கள் உமது திருவடிகளை அடைய முடியாது என்ற போதிலும் கூட, உமது கருணையினால் அது சாத்தியமே என்று நான் கருதுவதினால் தான். ஓ, பத்மநாப பகவானே, ஒருவனது உலக வாழ்க்கை முடிவுறும் பொழுது, உமது தூய பக்தர்களுக்குத் தொண்டு செய்வதின் மூலமே, அவனால் உமது உணர்வில் வளர்ச்சி பெற முடியும்.

பதம் 10.40.29
நமோ விஜ்ஞான-மத்ராய ஸர்வ-ப்ரத்யய-ஹேதவே
புருஷேஸ-ப்ரதானாய ப்ரஹ்மணே ‘னந்த-ஸக்தயே

நம:—வந்தனங்கள்; விஜ்ஞான—தூய ஞானத்தின்; மாத்ராய—உருவமானவருக்கு; ஸர்வ—அனைத்து; ப்ரத்யய—ஞான வடிவங்கள்; ஹேதவே—ஆதாரமானவருக்கு; புருஷ—புருஷரின்; ஈஸ—கட்டுப்படுத்தும் சக்திகள்; ப்ரதானாய—ஆள்கின்றவர்; ப்ரஹ்மணே—பரம முழுமெய்ப் பொருளுக்கு; அனந்த—அளவிறந்த; ஸக்தயே—அவருடைய சக்திகள்.

அளவற்ற சக்திகளைத் தம்மிடத்தே கொண்டிருக்கும் பரம முழு மெய்ப் பொருளுக்கு எனது வந்தனங்கள். அவரே தூய உன்னத ஞானத்தின் உருவமாகத் திகழ்பவர். எல்லாவிதமான ஞானங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர். உயிர்களை ஆளும் ஜடவியற்கைச் சக்திகளின் பரம ஆளுநரும் அவரேயாவார்.

பதம் 10.40.30
நமஸ் தே வாஸுதேவாய ஸர்வ-பூத-க்ஷயயா ச
ஹ்ருஷீகேஸ நமஸ் துப்யம் ப்ரபன்னம் பாஹி மாம் ப்ரபோ

நம:—வந்தனங்கள்; தே—உமக்கு; வாஸுதேவாய—வசுதேவரின் மைந்தருக்கு; ஸர்வ—அனைத்து; பூத—உயிர்களின்; க்ஷயாய—உறைவிடம்; ச—மற்றும்; ஹ்ருஸீக-ஈஸ—ஓ, மனம் மற்றும் புலன்களின் தலைவரே; நம:—வந்தனங்கள்; துப்யம்—உமக்கு; ப்ரபன்னம்—சரணடைந்திருக்கின்றேன்; பாஹி—காத்தருள்வீராக; மாம்—என்னை; ப்ரபோ—பிரபுவே.

எல்லா உயிர்களின் உறைவிடமான, வசுதேவரின் மைந்தராகிய உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக. மனம் மற்றும் புலன்களின் தலைவரே, உமக்கு எனது வந்தனங்களை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஓ, பிரபுவே, உம்மைச் சரண்புகுந்த என்னைக் காத்தருள்வீராக.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அக்ரூரரின் பிரார்த்தனைகள்” எனும் தலைப்பை கொண்ட நாற்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare