அத்தியாயம் – 39
அக்ரூரர் கண்ட காட்சி
பதம் 10.39.1 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: பகவான் பலராமராலும், பகவான் கிருஷ்ணராலும் வெகுவாகக் கௌரவிக்கப்பட்டபின், அக்ரூரர் ஒரு மஞ்சத்தில் அமர்ந்து கொண்டு, வரும் வழியில் தனது மனதில் உருவான அனைத்து ஆசைகளும் இப்பொழுது நிறைவேறிவிட்டனவென்று நினைத்தார்.
பதம் 10.39.2 : அன்பிற்குரிய மன்னனே, அதிர்ஷ்டதேவதை உறையுமிடமான முழு முதற்கடவுளைத் திருப்திப்படுத்தியவனுக்கு அடையமுடியாததென்று என்ன இருக்கிறது? இருந்தும் பகவானின் பக்தித் தொண்டிற்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள் அவரிடமிருந்து எதையும் எப்போதும் விரும்பி வேண்டுவதில்லை.
பதம் 10.39.3 : மாலை உணவு முடிந்த பின்னர், தேவகியின் மைந்தரான பகவான் கிருஷ்ணர் அக்ரூரரிடம், கம்சன் தமது அன்பான உறவினர்கள் மற்றும் நண்பர்களை எவ்வாறு நடத்துகிறானென்றும் அரசன் என்ன செய்ய எண்ணியுள்ளான் என்றும் வினவினார்.
பதம் 10.39.4 : பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்பிற்கும், மரியாதைக்குரிய மாமா அக்ரூரர் அவர்களே, உங்கள் பயணம் சுகமாக இருந்ததா? உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும். உங்கள் நலன் விரும்பும் நண்பர்களும் நெருங்கிய, தூரத்து உறவினர்களும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமுடனும் இருக்கின்றனரா?
பதம் 10.39.5 : ஆனால், எனது அன்பிற்குரிய அக்ரூரரே! “தாய்மாமன்” என்னும் பெயரில் எங்கள் குடும்பத்தின் நோயாக இருக்கும் மன்னன் கம்சன் இன்னும் வளமுடனிருக்கையில், எனது குடும்பத்தின் நலனையும், அவனது பிற குடிமக்களின் நலனையும் பற்றி நான் ஏன் கேட்க வேண்டும்?
பதம் 10.39.6 : எனது குற்றமற்ற பெற்றோரின் துன்பத்திற்கு நான் எவ்வாறு காரணமாகிவிட்டேன் என்பதைப் பாருங்கள்! என் பொருட்டே அவர்தம் மைந்தர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சிறைப்பட்டனர்.
பதம் 10.39.7 : எங்கள் நல்லதிர்ஷ்டத்தினால், எங்கள் நெருங்கிய உறவினரான உங்களைக் காணும் எங்கள் ஆவல் இன்று நிறைவேறியது. ஓ, மேன்மை மிக்க மாமாவே, நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று எங்களுக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.
பதம் 10.39.8 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பரமபுருஷ பகவானின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட யதுகுலத்தைச் சேர்ந்த அக்ரூரர், யதுக்களிடம் கம்சன் பகைமை பாராட்டுவது, வசுதேவரைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.
பதம் 10.39.9 : தான் கொண்டு வந்த செய்தியினை அக்ரூரர் தெரிவித்தார். கம்சனின் உண்மை எண்ணம் என்ன என்பதையும், கிருஷ்ணர் வசுதேவருக்குப் பிறந்த புதல்வர் என்பதை நாரதர் கம்சனுக்குத் தெரியப்படுத்தியதையும் கூட அவர் விளக்கிக் கூறினார்.
பதம் 10.39.10 : அக்ரூரர் கூறியதைக் கேட்டவுடன் எதிர்க்கும் வீரர்களை அழிக்கும் பகவான் கிருஷ்ணரும், பகவான் பலராமரும் நகைத்தனர். பின்னர் பகவான்கள் இருவரும் தங்கள் தந்தை நந்தமகாராஜாவிடம் மன்னன் கம்சனின் ஆணையினைத் தெரிவித்தனர்.
பதங்கள் 10.39.11 – 10.39.12 : பின்னர் நந்த மகாராஜா, ஊர்க்காவலன் மூலம் தனது ஆட்சிக்குட்பட்ட விரஜத்திலுள்ள ஆயர்கள் அனைவருக்கும் பின்வரும் கட்டளையினை அறிவித்தார்: “கிடைக்கக்கூடிய எல்லாப் பால்பொருட்களையும் சேகரித்துக் கொள்ளவும். மதிப்புமிகு பரிசுப் பொருட்கள் எடுத்துக் கொண்டு உங்கள் வண்டிகளைக் கட்டிக் கொள்ளவும். நாளை நாம் மதுராவிற்குச் சென்று நமது பால் பொருட்களை மன்னருக்கு அளித்து ஒரு பெரிய விழாவினைக் காண்போம். சுற்று வட்டத்திலுள்ள அனைவருமே போகின்றோம்”.
பதம் 10.39.13 : அக்ரூரர், கிருஷ்ணரையும், பலராமரையும் நகரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக விரஜத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் இளங்கோபியர்கள் அனைவரும் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.
பதம் 10.39.14 : சில கோபியர்களின் உள்ளம் வேதனையால் துடித்தது. நீண்ட பெருமூச்சினால் அவர்களின் முகங்கள் வெளிறின. பெருந்துயருற்ற பிற கோபியர்களின் ஆடைகளும், கைவளைகளும், சடைப் பின்னல்களும் நெகிழ்ந்தன.
பதம் 10.39.15 : பிற கோபியர்களின் உணர்வுச் செயல்கள் முற்றும் நின்றுபோய் அவர்கள் கிருஷ்ணரைப்பற்றிய தியானத்தில் நிலைத்து நின்றனர். ஆத்ம உணர்வு நிலையினை எய்தியவர்கள் போல் அவர்கள் புறவுலக உணர்வுகள் அனைத்தையும் இழந்துவிட்டனர்.
பதம் 10.39.16 : மேலும் சில பெண்கள் பகவான் ஸௌரியின் (கிருஷ்ணரின்) வார்த்தைகளை நினைத்து மயக்கமுற்றனர். விந்தைமிகு அணி அலங்காரச் சொற்களும், நேசமிகு புன்னகையுடன் அவை உரைக்கப்பட்ட விதமும் இளங்கன்னியர்களின் இதயங்களை ஊடுருவிச் செல்வதாகும்.
பதங்கள் 10.39.17 – 10.39.18 : பகவான் முகுந்தனின் நீண்ட பிரிவினை நினைக்கும்பொழுதே அச்சத்தால் நடுக்கமுற்றனர். அவரது கவர்ச்சிமிகு நடையழகு, லீலைகள், நேசமும், புன்னகையும் நிறைந்த பார்வைகள், வீரதீரச் செயல்கள், தங்கள் துன்பத்தினை நீக்கும் அவருடைய கேலிப் பேச்சுக்கள் போன்றவற்றினை நினைந்தும், அவரது நீண்டப் பிரிவினை எண்ணியும் கோபியர்கள் மிகுந்த துக்கத்திற்காளாயினர். அவர்கள் கூட்டமாகக் கூடி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். அவர்களின் முகங்கள் கண்ணீரினால் நனைந்தன. அவர்களின் மனங்களோ முற்றிலும் அச்சுதனிடம் ஆழ்ந்திருந்தன.
பதம் 10.39.19 : கோபியர்கள் கூறினர்: அந்தோ விதியே, கருணை என்பது உன்னிடம் சிறிதும் கிடையாது! உடல்பெற்ற உயிர்களை நீ, நட்பிலும், அன்பிலும் ஒன்று சேர்க்கின்றாய். பிறகு அவர்கள் தங்கள் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முன் அறிவிப்பின்றி அவர்களைப் பிரிக்கின்றாய். தன்னிச்சையான உனது இந்த விளையாட்டானது சிறு குழந்தையின் விளையாட்டைப் போன்றதாகும்.
பதம் 10.39.20 : சுருண்ட மயிர்க்குழல்களினால் மறைக்கப்பட்டதும், அழகிய கன்னங்களினாலும், எடுப்பான சீரிய நாசியினாலும், எல்லாத் துன்பங்களையும் நீக்கும் மெல்லிய புன்னகையினாலும் அழகு செய்யப்பட்டதுமான பகவான் முகுந்தனின் திருமுகத்தினைக் எங்களுக்குக் காட்டி, இப்போது அம்முகத்தினைக் காண முடியாமற் செய்கின்றாய். உனது இந்நடத்தை ஒரு சிறிதும் நல்லதன்று.
பதம் 10.39.21 : ஓ, விதியே, அக்ரூரர் என்னும் பெயரில் நீ இங்கே வருகின்ற போதிலும் நீ உண்மையில் குரூரமானவனே ஆவாய். நீ எங்களுக்கு அளித்த எந்தக் கண்களினால், உனது படைப்பு முழுவதின் நிறைவினை பகவான் மதுத்விஷனின் வடிவத்தின் ஒரு பகுதியில் பார்த்துக்கொண்டிருக்கின்றோமே அந்தக் கண்களை ஒரு மூடனைப் போல் நீ பறித்துக் கொள்கின்றாய்.
பதம் 10.39.22 : அந்தோ, கணப்பொழுதில் காதல் உறவினை முறித்துக் கொள்ளும் நந்த மகாராஜாவின் மைந்தன் இனிமேல் எங்களை நேரடியாகப் பார்க்கக் கூட மாட்டார். பலவந்தமாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் எங்களைக் கொண்டு வந்ததினால் நாங்கள் அவருக்குப் பணி செய்வதற்காக, எங்கள் இல்லங்களையும், உறவினர்களையும், குழந்தைகளையும், கணவர்களையும் துறந்தோம். ஆனால் அவரோ எப்பொழுதும் புதிய காதலிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்.
பதம் 10.39.23 : இன்றைய இரவினைத் தொடர்ந்து வரும் விடியல் மதுராபுரியில் உள்ளப் பெண்களுக்கு நிச்சயம் மங்களகரமானதாகும். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது நிறைவேறப் போகின்றன. விரஜத்தின் தலைவர் அவர்களது நகருக்குள் நுழையும் பொழுது அவரது விழிகளின் ஓரத்திலிருந்து பிறக்கும் புன்னகை அமிர்தத்தினை அவரது திருமுகத்திலிருந்து அவர்களால் பருக இயலும்.
பதம் 10.39.24 : ஓ, கோபியர்களே, நமது முகுந்தன் புத்திமானாகவும், பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்தவராகவும் இருந்த போதிலும் மதுராபுரிப் பெண்களின் தேனைப் போல் இனிக்கும் வார்த்தைகளுக்கு வசப்பட்டும், அவர்களின் கவர்ச்சிகரமான நாணம் கலந்த புன்னகையினால் மதிமயங்கியும்விட்டாரென்றால், பிறகு அவர் நாகரிகமற்ற கிராமத்துப் பெண்களாக நம்மிடம் எவ்வாறு திரும்பி வருவார்?
பதம் 10.39.25 : தாஸர்களும், போஜர்களும், விருஷ்ணிக்களும், சாத்வதர்களும், மதுராவிலுள்ள தேவகியின் மைந்தர், மதுராவிற்குச் செல்லும் வழியில் அவரைக் காணும்பொழுது நிச்சயம் விழாக்கால மகிழ்ச்சியை அனுபவிப்பர். அவரே அதிர்ஷ்டதேவதையின் அன்பிற்குரியவராகவும் உன்னத குணங்கள் அனைத்தின் உறைவிடமாகவும் விளங்குகின்றார்.
பதம் 10.39.26 : இரக்கமற்ற இக்கொடிய செயலைச் செய்பவர் அக்ரூரர் என்று அழைக்கப்படுதல் கூடாது. துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் விரஜவாசிகளை சமாதானப்படுத்தாத அளவிற்கு அவர் மிகக் கொடியவராவார். அவர் நமது உயிரைக் காட்டிலும் பிரியமான கிருஷ்ணரை இங்கிருந்து அழைத்துச் செல்கின்றார்.
பதம் 10.39.27 : கல்மனதுடைய கிருஷ்ணர் ஏற்கெனவே இரதத்தில் ஏறிவிட்டார். துர்மதியுடைய ஆயர்களோ தங்கள் மாட்டு வண்டிகளில் அவர் பின்னால் விரைந்து செல்கின்றனர். அவரைத் தடுத்து நிறுத்துவதற்குப் பெரியவர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை. இன்று விதி நமக்கு எதிராக விளையாடுகின்றது.
பதம் 10.39.28 : நாம் நோரடியாகச் சென்று மாதவனைச் செல்லவிடாது தடுத்து நிறுத்தினோமென்றால் நமது குடும்பத்திலுள்ள பெரியவர்களும், உறவினர்களும் நம்மை என்ன செய்வர்? இப்போது விதி, முகுந்தனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றது. அரைவிநாடி கூட அவரது தொடர்பின்றி எங்களால் இருக்க முடியாது, ஆதலினால் ஏற்கெனவே எங்கள் இதயம் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.
பதம் 10.39.29 : ‘ராஸ’ நடனக் கூட்டத்திற்கு அவர் நம்மை அழைத்து வந்தபொழுது அங்கே நாம் அவரது காதல்மிகு மனங்கவரும் புன்னகை, அவரது கவர்ச்சிமிகு இரகசிய உரையாடல்கள், அவரது வேடிக்கைப் பார்வைகள் மற்றும் அவரது தழுவல்கள் போன்றவற்றினை அனுபவித்து மகிழ்ந்து பல இரவுகளை ஒரு கணமாகக் கழித்தோம். ஓ, கோபியரே, அவரின்றி கடப்பதற்குரிய இருளினை நாம் எவ்வாறு கடத்தல் கூடும்?
பதம் 10.39.30 : மாலைப்பொழுதில் விரஜத்திற்கு, ஆயர்குலச்சிறுவர்களுடன், பசுக்களின் காலடிக்குளம்புகளினால் எழுந்த தூசி படிந்திருக்கும். தலைமுடியும், மாலையும் உடைய, அனந்தனின் நண்பரான கிருஷ்ணர் வருவார். அவர் இன்றி நாங்கள் எங்ஙனம் உயிர்வாழ்தல் கூடும்? அவர் புல்லாங்குழலினை இசைக்கும்பொழுது தமது புன்னகை நிறைந்த ஓரவிழிப்பார்வையினால் எங்கள் மனங்களைக் கொள்ளை கொள்வார்.
பதம் 10.39.31 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: “இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் மீதுப் பற்றுடைய விரஜத்திலுள்ளப் பெண்கள், அவரது உடனடிப் பிரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நாணம் என்பதை அடியோடு மறந்து “ஒ, கோவிந்தா! ஓ, தாமோதரா! ஓ, மாதவா!” என்று பெருங்குரலெடுத்துக் கூவினர்.”
பதம் 10.39.32 : கோபியர்கள் இவ்வாறு அழுது புலம்பிக் கொண்டிருக்க சூரிய உதயத்தில் தனது காலை வழிபாடு மற்றும் காலைக் கடன்களை முடித்த அக்ரூரர் இரதத்தினைச் செலுத்தத் தொடங்கினார்.
பதம் 10.39.33 : நந்த மகாராஜாவின் தலைமையில் ஆயர்கள் தங்கள் வண்டிகளில் பகவான் கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் நெய் மற்றும் பால்பொருட்கள் நிரம்பிய பானைகளுடன் ஏராளமான பரிசுப் பொருட்களை மன்னருக்கு அளிப்பதற்காகத் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
பதம் 10.39.34 : (தமது பார்வைகளினால்) பகவான் கிருஷ்ணர், கோபியர்களைச் சமாதானப்படுத்தினார். அவர்களும் அவரை சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவர் தங்களுக்கு சில உபதேசங்கள் அருள்வார் என்றும் நம்பிக்கையில் அவர்கள் அப்படியே நின்றனர்.
பதம் 10.39.35 : யதுகுலத்தில் சிறந்தவரான அவர் புறப்பட்டுச் சென்ற பொழுது கோபியர்கள் எங்ஙனம் அழுது புலம்புகின்றனர் என்பதைக் கண்டார். அதனால் அவர் ஒரு தூதனிடம் “நான் திரும்பிவருவேன்” என்னும் காதல் மயமான உறுதிமொழியினைச் சொல்லி அனுப்பி அவர்களைச் சாந்தப்படுத்தினார்.
பதம் 10.39.36 : தங்கள் மனங்களைக் கிருஷ்ணரின் பின்னால் அனுப்பிவிட்டுக் கோபியர்கள் சித்திரத்தில் வரையப்பட்ட உருவங்கள் போல் அப்படியே அசைவற்று நின்றனர். இரதத்தின் உச்சியில் கட்டப்பட்ட கொடி தமது கண்களுக்குப் புலனாகும் வரையிலும், இரதத்தின் சக்கரங்களினால் எழுந்த தூசு தங்கள் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் அவர்கள் அங்கேயே நின்றனர்.
பதம் 10.39.37 : பின்னர், கோவிந்தன் தம்மிடம் திரும்பிவருவார் என்றும் நம்பிக்கையின்றிக் கோபியர்கள் திரும்பிச் சென்றனர். மிக்க துயரத்துடன் தங்கள் பிரியமானவரின் லீலைகளைப் பற்றிப் பாடுவதின் மூலம் பகல் மற்றும் இரவுகளை அவர்கள் கழிக்கத் தொடங்கினர்.
பதம் 10.39.38 : அன்பிற்குரிய அரசனே, பரமபுருஷபகவானான கிருஷ்ணர், பகவான் பலராமருடனும், அக்ரூரருடனும் அந்த இரதத்தில் காற்றினைப் போல் வேகமாகப் பயணம் செய்து, பாவங்கள் அனைத்தையும் அழிக்கின்ற காளிந்தி நதியினை அடைந்தார்.
பதம் 10.39.39 : அந்நதியின் இன்சுவைநீர் மரகதமணியைவிட ஒளியுடையதாக விளங்கியது. தூய்மை செய்வதற்காக அதனைத் தொட்ட பகவான், தமது கரத்தில் சிறிதளவு நீரினை எடுத்துப் பருகினார். பிறகு அவர் மரங்களடர்ந்த சோலையில் நிறுத்தப்பட்டிருந்த இரதத்தில் பலராமருடன் சேர்ந்து ஏறி அமர்ந்தார்.
பதம் 10.39.40 : அக்ரூரர் பகவான்கள் இருவரையும் இரதத்தின் இருக்கையில் அமரும்படி வேண்டிக் கொண்டார். பின்னர் அவர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனை நதியின் ஒரு குளத்தில் நீராடச் சென்றார். அங்கு அவர் சாத்திர நெறி முறைகளுக்கேற்ப நீராடினார்.
பதம் 10.39.41 : நித்தியமான வேத மந்திரங்களை ஓதிக் கொண்டு, நீரினுள் மூழ்கும் பொழுது அக்ரூரர் பலராமரையும், கிருஷ்ணரையும் தன் முன் கண்டார்.
பதங்கள் 10.39.42 – 10.39.43 : அக்ரூரர் எண்ணினார், “இரதத்தில் அமர்ந்திருக்கும் ஆனகதுந்துபியின் மைந்தர்கள் இருவரும் எவ்வாறு இங்கே நீரினுள் நின்று கொண்டிருக்க முடியும்? அவர்கள் இரதத்திலிருந்து இறங்கி வந்திருக்க வேண்டும்” என்று அவர் நீரினின்று வெளியே வந்து பார்த்தபோது அவர்களிருவரும் முன்புபோலவே இரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் தனக்குள் ”நீரினுள் நான் பார்த்த அவர்களின் தோற்றம் பொய்யானதா?” என்று கேட்டுக் கொண்டார். அக்ரூரர் மீண்டும் குளத்தில் இறங்கினார்.
பதங்கள் 10.39.44 – 10.39.45 : அங்கே அக்ரூரர் நாகங்களின் தலைவரான அனந்தசேஷன், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், மற்றும் அசுரர்கள் போன்றவர்களால் தலைவணங்கிப் போற்றப்படுவதைக் கண்டார். அக்ரூரர் பார்த்த முழுமுதற்கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான படங்களும், ஆயிரக்கணக்கான மணி மகுடங்களும் இருந்தன. அவருடைய நீல வண்ண ஆடைகளும், தாமரைத் தண்டின் இழைகளைப்போன்ற அவரது வெண்மைநிறமும் அவரைப் பல சிகரங்களையுடைய வெள்ளிக் கயிலயங்கிரியைப் போல் தோன்றக் செய்தன.
பதங்கள் 10.39.46 – 10.39.48 : பின்னர் அக்ரூரர், முழுமுதற்கடவுள், அமைதியுடன் பகவான் அனந்தசேஷனின் மடியில் துயில்வதைக் கண்டார். பரமபுருஷரின் மேனி நிறம் கருநீல வண்ணமேகத்தைப்போல் இருந்தது. அவர் மஞ்சள் வண்ணப் பாட்டாடை உடுத்திருந்தார். அவருக்கு நான்கு கரங்கள் இருந்தன. செந்தாமரை இதழ்களைப் போல் சிவந்த விழிகள் உடையவராக இருந்தார். அவருடைய திருமுகம், கவர்ச்சிகரமான புன்னகையினாலும், மனதினை மயக்கும் பார்வையினாலும், எழில்மிகு புருவங்களினாலும், எடுப்பான நாசியினாலும், அழகுற அமைந்த செவிகளினாலும், அழகிய கன்னங்களினாலும், சிவந்த அதரங்களினாலும் காண்பதற்குக் கவர்ச்சிகரமாக விளங்கியது. பகவானின் விரிந்த தோள்களும், பரந்த மார்பும் எழில்மிக்கவையான இருந்தன. அவரது கரங்கள் நீண்டும், உறுதியாகவும் விளங்கின. அவருடைய கழுத்து வெண்சங்கினை ஒத்திருந்தது. அவருடைய உந்திச் சுழி ஆழமாக இருந்தது. அவருடைய அடிவயிற்றில் ஆலிலையில் உள்ளது போன்ற வரிகள் காணப்பட்டன.
பதங்கள் 10.39.49 – 10.39.50 : அவருக்கு விரிந்த பிருஸ்டங்களும், இடையும் இருந்தன. அவருடைய தொடைகள் யானையின் துதிக்கையைப் போன்றிருந்தன. அவருக்கு நன்கமைந்த முழுங்கால் மூட்டுகளும், முழங்கால்களும் இருந்தன. அவருடைய உயர்ந்த கணுக்கால் பகுதி, அவருடைய தாமரைத் திருவடிகள் அழகு செய்த மலரிதழ்களைப் போல் மென்மையாக இருந்த கால் விரல்களில் நகங்களிலிருந்து உண்டான ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
பதங்கள் 10.39.51 – 10.39.52 : விலைமதிப்பற்ற இரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்றிருந்த மணிமகுடம், கடகங்கள், கைவளைகள், மேகலை, முப்புரிநூல், கழுத்தணிகள், காற்சலங்கைகள், செவிக்குண்டலங்கள் அணிந்து பகவான் ஒளி மிக்கவராகத் திகழ்ந்தார். ஒரு கரத்தில் தாமரை மலரும், பிறகரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் போன்றவற்றை ஏந்தியிருந்தார். அவருடைய மார்பினை ஸ்ரீவத்ச அடையாளமும், ஒளிபொருந்திய கௌஸ்துபமணியும், மலர்மாலையும் அழகு செய்தன.
பதங்கள் 10.39.53 – 10.39.55 : பகவானைச் சுற்றி நின்றுகொண்டு வழிபட்டனர் நந்தர், சுநந்தர் மற்றும் அவரது தனி உதவியாளர்கள், சனகர் மற்றும் பிற குமாரர்கள், பிரம்மதேவன், ருத்திரன் மற்றும் பிற தேவர்கள்; ஒன்பது தலைமை அந்தணர்கள்; மற்றும் பிரகலாதன், நாரதர், உபரிசர வசுவின் தலைமையின் கீழ் சிறந்த தெய்வீக பக்தர்கள். மகான்களான ஒவ்வொருவரும் தமது சிறந்த மனநிலையுடன் புனிதமான வார்த்தைகளை ஒதுவதின் மூலம் பகவானை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பகவானை அவரது தலைமைச் சக்திகளான ஸ்ரீ, புஷ்டி, கீர், காந்தி, கீர்த்தி, துஷ்டி, இலா, ஊர்ஜா போன்றவர்களும் அவரது பெளதிகச் சக்திகளான வித்யா, அவித்யா, மாயா மற்றும் அவரது அகவின்ப சக்தியான ‘சக்தியும்’ வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
பதங்கள் 10.39.56 – 10.39.57 : இவற்றையெல்லாம் கண்ட மிகச் சிறந்த பக்தரான அக்ரூரர் பெருமகிழ்ச்சியுற்று, உன்னத பக்தியில் தன்னை மறந்தார். அவரது மெய்மறந்த ஆழ்ந்த ஆனந்தத்தினால் உடல் புளகமுற்று மயிர்க்கூச்செறிந்தார். அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி அவர் உடல் முழுவதையும் நனைத்தது. ஒருவாறு தன்னிலை பெற்ற அக்ரூரர் நிலத்தில் வீழ்ந்து தனது தலையினால் வணங்கினார். பிறகு அவர் தனது இருகரங்களையும் பணிவுடன் குவித்து கம்மிய குரலில் மெதுவாக, பயபக்தியுடன் வழிபடலானார்.