அத்தியாயம் – 23
அந்தணர்கள் மனைவியர் ஆசீர்வதிக்கப்படுதல்
பதம் 10.23.1 : ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்: ஓ, ராமா, ஓ, ராமா, வல்லமை மிக்கவரே! ஓ, கிருஷ்ணா, துஷ்டர்களை அழிப்பவரே! பசியினால் நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். அதனைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும்.
பதம் 10.23.2 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆயர்குலச் சிறுவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டவுடன் தேவகீ மைந்தரான முழுமுதற்கடவுள் தமது பக்தைகளான அந்தணர்களின் மனைவியர்க்கு அருள்புரிய விரும்பி பின்வருமாறு கூறினார்.
பதம் 10.23.3 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) உடனே யாக சாலைக்குச் செல்வீராக. அங்கே வேதநெறிகளைப் பின்பற்றும் அந்தணர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் இப்போது ஆங்கிரஸ யாகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
பதம் 10.23.4 : அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்களே நீங்கள் அங்கு சென்று சிறிது உணவு வேண்டுமென்று யாசிக்கவும். அவர்களிடம் நீங்கள் பரம புருஷ பகவான் பலராமர் மற்றும் என்னால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறவும்.
பதம் 10.23.5 : முழுமுதற்கடவுளால் இவ்வாறு கட்டளையிடப்பட்டவுடன் அந்த ஆயர்குலச் சிறுவர்கள் அங்கே சென்று வேண்டி நின்றனர். அவர்கள் அந்தணர்களின் முன்பு தமது கரங்களைக் குவித்து வணங்கி நின்று, பிறகு நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் வீழ்ந்து அவர்களுக்கு மரியாதை செய்தனர்.
பதம் 10.23.6 : (ஆயர்குலச்சிறுவர்கள் கூறினர்) ஓ, பூமி தேவர்களே! நாங்கள் கூறுவதைக் கேட்பீராக. ஆயர்குலச் சிறுவர்களாகிய நாங்கள் கிருஷ்ணரின் ஆணைப்படி நடப்பவர்கள் ஆவோம். நாங்கள் பலராமரால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாவதாக. எங்கள் வருகையினை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக.
பதம் 10.23.7 : பகவான் ராமரும் பகவான் அச்சுதனும் தங்கள் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் இடம் இங்கிருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர்கள் பசியுடனிருக்கின்றனர். ஒ, அந்தணர்களே, ஓ, தர்ம அறநெறிகளை நன் குணர்ந்தோரே, உங்களுக்கு நம்பிக்கை உண்டென்றால் அவர்களுக்கு சிறிது உணவளிப்பீராக.
பதம் 10.23.8 : ஒரு யாகத்தின் ஆரம்ப நிலையிலிருந்து விலங்கினைப் பலியிடுவது வரை உள்ள இடைப்பட்ட காலத்தினைத் தவிர்த்து ஓ, தூய அந்தணர்களே “ஸௌத்ராமணி” என்னும் யாகத்தைத் தவிர பிற யாகங்களில் யாகத்தினைச் செய்வோன் உணவு உட்கொள்வது ஒன்றும் குற்றமாகாது.
பதம் 10.23.9 : முழுமுதற் கடவுளின் பணிவான வேண்டுகோளினைக் கேட்டும், அந்தணர்கள் அதனைத் தம் கருத்திற் கொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் அற்ப ஆசைகள் நிறைந்தவர்களாகவும் சமயச் சடங்குகளில் பெரும் ஈடுபாடு உடையவர்களாகவும் விளங்கினர். வேதக்கல்வியில் தாம் பெரியவர்கள் என்று அவர்கள் எண்ணிய போதிலும் அவர்கள் உண்மையில் அனுபவமில்லாத மூடர்களேயாவர்.
பதங்கள் 10.23.10 – 10.23.11 : யாகம் செய்வதற்குத் தேவையான இடம், காலம், குறிப்பிட்ட பூஜைப் பொருட்கள், மந்திரங்கள், புரோகிதர்கள், அக்கினிகள், தேவர்கள், செய்பவன், அர்ப்பணிப்பு மற்றும் புலனாகாத நற்பலன்கள் போன்றவையெல்லாம் அவரது வைபவங்களாக இருந்த போதிலும் அந்தணர்கள் பகவான் கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதனாகவே பார்த்தனர். இதற்குக் காரணம் அவர்களது முரண்பட்ட புத்தியேயாகும். அவரே முழுமெய்ப் பொருளென்றும், அவரே நேரடியாக வெளிப்பட்ட முழுமுதற்கடவுளென்றும், பௌதிகப் புலன்களால் அவரை எளிதில் உணர முடியாது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இவ்வாறு அழிகின்ற உடலுடன் கொண்ட தவறான அடையாளத்தினால் அவர்கள் குழப்பமடைந்திருந்ததினால் அவர்கள் அவருக்கு உரிய மரியாதையினை அளிக்கவில்லை.
பதம் 10.23.12 : “ஆம்” அல்லது “இல்லை” என்று கூட அந்தணர்கள் பதில் கூறாததைக் கண்டவுடன், ஓ, பகைவரைச் சுடுவோனே (பரீக்ஷித்துவே) ஆயர்குலச் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிவந்து கிருஷ்ணரிடமும் ராமரிடமும் நடந்ததைக் கூறினர்.
பதம் 10.23.13 : நடைபெற்றதைக் கேட்டவுடன் ஜகதீஸ்வரரான முழுமுதற்கடவுள் புன்னகை செய்தார். பிறகு அவர் மீண்டும் ஆயர்குலச் சிறுவர்களிடம் லௌக உலகில் மனிதர்கள் செல்லும் பாதையினைப் பற்றி விளக்கிக் கூறினார்.
பதம் 10.23.14 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) நான் இங்கே பகவான் சங்கர்ஷணருடன் வந்திருப்பதாகக் கூறுங்கள். அவர்கள் என்னிடம் மிகுந்த அன்புடையவர்களாகவும், தமது மனதினால் என்னில் மட்டுமே வாழ்பவர்களாகவும் இருப்பதினால், அவர்கள் நிச்சயம் நீங்கள் வேண்டும் உணவினை அளிப்பார்கள்.
பதம் 10.23.15 : அதன்பிறகு ஆயர்குலச் சிறுவர்கள் அந்தணர்களின் மனைவியர் வாழும் இல்லத்திற்குச் சென்றனர். அங்கே, கற்புக்கரசிகளான அப்பெண்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருப்பதை அச்சிறுவர்கள் கண்டனர். அவர்களை வணங்கி ஆயர்குலச் சிறுவர்கள் மிக்க பணிவுடன் கூறினர்.
பதம் 10.23.16 : (ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்): ஒ, கற்றறிந்த அந்தணர்களின் மனைவியரே! உங்களுக்கு எங்கள் வணக்கங்கள். இங்கிருந்து சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணரால் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
பதம் 10.23.17 : அவர் ஆயர்குலச் சிறுவர்களுடனும், பகவான் பலராமருடனும் சேர்ந்து பசுக்களை மேய்த்துக் கொண்டு வெகு தூரத்திலிருந்து வந்திருக்கின்றார். அவர் மிகுந்த பசியுடன் இருக்கின்றார். அதனால் அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் சேர்த்து சிறிது உணவு அளிக்க வேண்டும்.
பதம் 10.23.18 : பகவான் சரிதங்களைக் கேட்டு அவர்தம் மனங்கள் அவற்றினால் ஈர்க்கப்பட்டதினால் அந்தணர்களின் மனைவியர்கள் கிருஷ்ணரைக் காண பெரும் ஆவலுடையவர்களாக இருந்தனர். அதனால் அவர் வந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் அவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.
பதம் 10.23.19 : அறுசுவையும், நறுமணமும் உடைய நான்கு வகையான உணவுகளைப் பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு அந்தணர்களின் மனைவியர் நதிகள் கடலை நோக்கிப் பாய்ந்தோடுவது போன்று தங்கள் பிரியமானவரைச் சந்திக்க விரைந்து சென்றனர்.
பதங்கள் 10.23.20 – 10.23.21 : அங்கிருந்து அவர்கள் செல்வதை அவர்களின் கணவர்களும், மைந்தர்களும், உறவினர்களும் தடுத்தபோதிலும் கிருஷ்ணரின் உன்னதக் குணங்களைக் கேட்டு அவரைக் காண வேண்டுமென்று அவர்கள் கொண்டிருந்த ஆவல் இறுதியில் வெற்றிபெற்றது. யமுனை நதியின் அருகில், அசோகமரங்களின் மலர் மொட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் உபவனத்தில் கிருஷ்ணர் தமது மூத்த சகோதரர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
பதம் 10.23.22 : அவரது உடல் வண்ணம் கருநீலமாகவும் ஆடைகள் பொன் நிறமாகவும் இருந்தன. அவர் மயிலிறகு, வண்ண மணிகள், இளம் மொட்டுக்கள், காட்டுமலர்கள் கொண்டு கட்டப்பட்ட மாலை மற்றும் இலைகளையும் அணிந்திருந்தார். அவர் ஒரு நடனக் கலைஞன் போல் ஆடை அணிந்திருந்தார், அவர் தமது ஒரு கரத்தினைத் தமது நண்பனின் தோள்களின் மீது வைத்திருந்தார், மற்றொரு கரத்தில் ஒரு தாமரைப் பூவினைச் சுழற்றிக் கொண்டிருந்தார். அல்லிமலர்கள் அவரது செவிகளை அலங்கரித்தன. தலையிலுள்ள மயிர்க்குழல்கள் அவர் கன்னங்களில் புரண்டன. அவரது செந்தாமரை மலர் போன்ற முகத்தில் மெலிதான புன்னகை தவழ்ந்திருந்தது.
பதம் 10.23.23 : ஓ, நரேந்திரனே! நீண்ட காலமாக அந்த அந்தணர்களின் மனைவியர் தங்கள் பிரியமான கிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது கீர்த்திகளைத் தொடர்ந்து தமது செவிகளில் அணிகலன்களாக அணிந்திருந்தனர். உண்மையில் அவர்களின் மனங்கள் எப்போதும் அவரது நினைவிலேயே ஆழ்ந்திருந்தன. இப்போது அவர்கள் தமது விழித்துளைகளின் வழியே பலவந்தமாக அவரைத் தமது மனங்களில் புகுத்தியுள்ளதோடு, நெடுங்காலமாக அவரை அவர்கள் தழுவிக் கொண்டும் உள்ளனர். இவ்வாறு அவர்கள் முனிவர்கள் தமது ஆணவக் கவலைகளை, அகத்திலுள்ள உணர்வினைத் தழுவிக்கொண்டதின் மூலம் துறப்பதுபோல், அவரைப்பிரிந்து அனுபவிக்கும் விரகதாபத்தினை இறுதியில் அவர்கள் துறந்தனர்.
பதம் 10.23.24 : எல்லா உயிர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்த்துக் கொண்டிருப்பவரான பகவான் கிருஷ்ணர், அப்பெண்கள் எவ்வாறு உலக இச்சைகளை எல்லாம் துறந்து தம்மைக் காணவந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டார். புன்னகை தவழும் முகத்துடன் அவர் அவர்களிடம் பின்வருமாறு பேசினார்.
பதம் 10.23.25 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்) பாக்கியம் செய்த பெண்களே உங்கள் வரவு நல்வரவாகுக. இங்கே வந்து வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் இங்கு என்னைக் காண வந்தது மிகவும் பொருத்தமுடையதேயாகும்.
பதம் 10.23.26 : தங்கள் உண்மை நலனைக் காண்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் நிச்சயமாக உள்நோக்கமற்ற, தடைப்படாத பக்தித் தொண்டினை எனக்குப் புரிகின்றனர். காரணம், நானே ஆத்மாவிற்கு மிகவும் பிரியமானவனாக இருக்கின்றேன்.
பதம் 10.23.27 : ஒருவன் தனது ஆத்மாவுடன் தொடர்புகொள்வதினாலேயெ அவனது உயிர்மூச்சு, புத்தி, மனம், நண்பர், உடல், மனைவி, மக்கள், செல்வம் போன்றவை அவனுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன. அதனால் ஒருவனது ஆத்மாவைவிட அவனுக்குப் பிரியமான பொருள் வேறென்ன இருத்தல் கூடும்?
பதம் 10.23.28 : உடனே யாக சாலைக்கு நீங்கள் திரும்பிச் செல்வீராக. ஏனென்றால் கற்றறிந்த அந்தணர்களான உங்கள் கணவன்மார் இல்லறத்தார் ஆவர். அதனால் அவர்கள் செய்யும் யாகங்களை நிறைவு செய்வதற்கு உங்கள் துணை தேவைப்படும்.
பதம் 10.23.29 : அந்தணர்களின் மனைவியர் கூறினர்: ஓ, எல்லாம் வல்லவரே, இது போன்ற கொடிய வார்த்தைகளைக் கூறாதீர். நீர் எப்போதும் அன்புடன் உமது பக்தர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பீர் என்னும் உமது சத்திய வாக்கினை நிறைவேற்றுவீராக. இப்போது நாங்கள் உமது தாமரைத் திருவடிகளை எய்தப் பெற்றிருக்கிறோம். அவற்றில் அணியப்பட்டுள்ள துளசிமாலைகளை எங்கள் தலைகளில் தாங்கிக் கொண்டு இக்காட்டில் இருக்கலாம் என்று விரும்பினோம். ஆனால் நீரோ உமது தாமரைத் திருவடிகளினால் எங்களை எட்டி உதைக்கின்றீர். நாங்கள் எங்கள் உலகியல் உறவுகள் அனைத்தையும் துறப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
பதம் 10.23.30 : எங்கள் கணவர்களும், தந்தையரும், புதல்வர்களும், சகோதரர்களும் இன்னபிற உறவினர்களும், நண்பர்களும் நீண்டகாலம் எங்களை வைத்திருக்கமாட்டார்கள், மேலும் யார் எங்களுக்கு மனமுவந்து அடைக்கலம் தர முன்வருவர்? நாங்கள் ஏற்கெனவே உமது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்திருப்பதினாலும், எங்களுக்கு வேறு கதி இல்லை ஆதலினாலும், ஓ, பகைவரைச் சுடுவோனே எங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுவீராக.
பதம் 10.23.31 : முழுமுதற்கடவுள் கூறினர்: உங்கள் கணவன்மார் இனிமேல் உங்களிடம் பகைமை பாராட்டமாட்டார்கள். அதுபோல் உங்கள் தந்தையர், சகோதரர், புதல்வர், உறவினர் மற்றும் பொதுமக்கள் யாவரும் இனிமேல் உங்களிடம் பகை கொள்ள மாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கின்றேன். நான் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்துவேன். உண்மையில் தேவர்கள் கூட அவர்களுக்கு அனுக்கிரகம் செய்வர்.
பதம் 10.23.32 : உடல் தொடர்பின் மூலம் நீங்கள் என்னுடன் இருந்தீர்களென்றால் அது இவ்வுலகிலுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்பதோடு, என்மீதுள்ள அன்பினை அதிகரிப்பதற்கு அது சிறந்த வழியும் ஆகாது. மாறாக உங்கள் மனங்களை என் மீது நிலைநிறுத்துவீர்களானால் மிக விரைவில் நீங்கள் என்னை அடைவீர்கள்.
பதம் 10.23.33 : என்னைப் பற்றிக் கேட்பதினாலும், எனது திருமூர்த்த வடிவத்தினைத் தரிசிப்பதினாலும், என்னைத் தியானிப்பதினாலும், எனது நாமங்களையும், கீர்த்திகளையும் ஓதுவதினாலும் என்மீது கொண்ட அன்பு வளருமேயல்லாது, உடல்ரீதியாக எனது அருகாமையில் இருப்பதினால் வளர்ச்சி பெறாது. ஆதலினால் உங்கள் இல்லங்களுக்கு நீங்கள் திரும்பிச் செல்வீராக.
பதம் 10.23.34 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு உபதேசிக்கப்பட்டவுடன் அந்தணர்களின் மனைவியர்கள் யாகசாலைக்குத் திரும்பிச் சென்றனர். அந்தணர்களும் அவர்கள் மனைவியரிடம் எந்தவிதமான குற்றமும் காணவில்லை. இருபாலரும் இணைந்து யாகத்தினை நிறைவேற்றினர்.
பதம் 10.23.35 : அப்பெண்களுள் ஒருத்தி தனது கணவனால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாள். அவள் பிறரிடமிருந்து பரமபுருஷ பகவான் கிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் மனதினுள் வரித்து உலகியல் கட்டுப்பாட்டுக்கு அடிப்படையாக விளங்கும் தனது பெளதிக உடலைத் துறந்தாள்.
பதம் 10.23.36 : முழுமுதற் கடவுளான கோவிந்தன், அந்த நால்வகை உணவுகளையும் ஆயர்குலச் சிறுவர்கள் உண்ணுமாறு செய்தார். பிறகு எல்லாம் வல்ல பகவான் தானும் அவற்றில் சிறிது உண்டார்.
பதம் 10.23.37 : தமது லீலைகளை நிகழ்த்துவதற்காக மனிதனாகத் தோன்றிய பரமபுருஷ பகவான் இவ்வாறு மனித சமுதாயத்தின் இயல்புகளைப் பாவனை செய்தார். அவர் தமது பசுக்களையும், ஆயர்குல நண்பர்களையும், கோபியர்களையும் தமது எழில், வாக்கு, மற்றும் செயல்களினால் மகிழ்விப்பதில் இன்பமெய்தினார்.
பதம் 10.23.38 : பிறகு தங்கள் அறிவிலே தெளிவுபெற்ற அந்தணர்கள் மிகவும் வருந்தலாயினர். அவர்கள் “மனிதர்களைப் போல் தந்திரமாக அவதரித்துள்ள இப்பிரபஞ்சத்தின் இரு தெய்வங்களின் வேண்டுகோளையும் மறுதலித்ததின்மூலம் நாம் பாவம் செய்து விட்டோம்.” என்று நினைத்தனர்.
பதம் 10.23.39 : முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர்மீது தமது மனைவியர் வைத்திருக்கும் தூய உன்னத பக்தியினைக் கண்டு அதுபோன்ற பக்தி தம்மிடத்தில் இல்லையே என்று அறிந்த அந்தணர்கள் பெரிதும் துக்கித்துத் தாமே நிந்திக்கத் தொடங்கினர்.
பதம் 10.23.40 : (அந்தணர்கள் கூறினர்:) எமது மூன்றுவகைப் பிறப்பும். பிரம்மச்சரிய விரதமும், உயர்கல்வியும் பாழாய்ப் போகவும்! எமது உயர் குலப்பின்னணியும், வேதச் சடங்குகளில் உள்ள தேர்ந்த ஞானமும் பாழாய்ப் போகவும்! இவையனைத்தும் நிந்தனைக்குரியதே! ஏனென்றால் நாங்கள் முழுதற்கடவுளை விரோதித்துக் கொண்டோம்.
பதம் 10.23.41 : பரமபுருஷ பகவானின் மாயா சக்தி மகாயோகிகளையே மதி மயங்கச் செய்துவிடும். அப்படியிருக்க நாங்கள் எம்மாத்திரம்? அந்தணர்களாதலினால் நாங்கள் மனித சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினர்க்கும் ஆன்மீகக் குருக்களாக இருக்கின்றோம். இருந்தும் எங்களது உண்மையான நலன் என்ன என்பதில் நாங்களும் குழப்பமடைந்துவிட்டோம்.
பதம் 10.23.42 : ஜகத்குருவான பகவான் கிருஷ்ணரின்மீது இப்பெண்கள் வைத்திருக்கும் அளவில்லாத அன்பினைச் சிறிது பாருங்கள்! அவர்களின் அந்த அன்பு இல்லற வாழ்வின் மீது உள்ள பற்று என்னும் அவர்களின் மரண பந்தங்களை உடைத்து நொறுக்கிவிட்டது.
பதங்கள் 10.23.43 – 10.23.44 : இப்பெண்கள் இருபிறப்பாளருக்குரிய தூய்மை செய்யும் சடங்குகளை மேற்கொண்டதில்லை. ஆன்மிகக் குருவின் ஆஸ்ரமத்தில் பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்ததில்லை. தவங்கள் எதுவும் செய்ததில்லை. ஆத்மாவின் உண்மை நிலைபற்றிய தத்துவ விசாரணை செய்ததில்லை, தூய்மை செய்யும் சடங்குகளையோ அல்லது புனிதச்சடங்குகளையோ செய்ததில்லை. இருந்தபோதிலும் இவர்கள் வேதமந்திரங்களினால் ஓதப்படும் கீர்த்திகளையுடையவரும், யோக ஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும் விளங்கும் பகவான் கிருஷ்ணரின் மீது உறுதியான பக்தியுடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு மாறாக நாம் மேலே கூறப்பட்டுள்ள முறைகள் அனைத்தையும் மேற்கொண்ட போதிலும் நம்மிடம் பகவான்மீது அதுபோன்ற உறுதியான பக்தி இல்லை.
பதம் 10.23.45 : உண்மையில் இல்லறக் கடமைகளில் நாம் பற்றுடையவர்களாக இருந்ததினால், நமது வாழ்வின் உண்மை இலட்சியத்திலிருந்து நாம் முற்றிலும் விலகிவிட்டோம். ஆனால் இப்போது பாருங்கள்; சாதாரண ஆயர்குலச் சிறுவர்களின் வார்த்தைகளின் மூலம் உண்மையான யோகிகள் அனைவரின் இறுதி இலக்கு எது என்பதைப் பகவான் நமக்கு எவ்வாறு நினைவுறுத்தியிருக்கிறார் என்று.
பதம் 10.23.46 : இல்லையேல் பரம நெறியாளரான பகவான் அவரது அனைத்து விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது, அவரே முக்திக்கும், உன்னத ஆசிகள் அனைத்திற்கும் தலைவராவார். அவரது கட்டுப்பாட்டில் எப்போதும் இருக்கும் நம்மிடம் ஏன் பாசாங்கு செய்ய வேண்டும்?
பதம் 10.23.47 : அவரது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசத்திற்காக, அதிர்ஷ்ட தேவதையான மகாலட்சுமி எல்லாவற்றையும் துறந்து, தனது பெருமை மற்றும் நிலையாமை என்னும் குற்றங்களையும் தவிர்த்துத் தொடர்ந்து அவரை வழிபடுகிறாள். அவர் தானம் கேட்டதானது நிச்சயம் எல்லோரையும் குழப்பும் ஒரு செயலாகும்.
பதங்கள் 10.23.48 – 10.23.49 : யாகம் செய்வதற்குத் தேவையான-தூய்மையான இடம், காலம், பல்வேறு பூஜைப் பொருட்கள், வேதமந்திரங்கள், குறிப்பிட்ட சடங்குகள், புரோகிதர்கள் மற்றும் யாக அக்னிகள், தேவர்கள், யாகத்தின் தலைவன், புனித அர்ப்பணிப்புக்கள், மற்றும் அதனால் பெறும் புண்ணிய பலன்கள்-போன்ற அனைத்தும் அவரது வளங்களின் வெளிப்பாடேயாகும். முழுமுதற்கடவுளும், யோக ஸித்திகளின் தலைவர்கட்கெல்லாம் தலைவராக விளங்குபவருமான பகவான் விஷ்ணு யதுகுலத்தில் அவதரித்திருக்கின்றார் என்று கேள்விப்பட்டும், அவர்தான் ஸ்ரீல கிருஷ்ணர் என்பதை அறிந்து கொள்ளாத நாம் மூடர்களாவோம்.
பதம் 10.23.50 : முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரை நாம் வணங்குவோம். அவரது புத்தி குழப்பத்திற்காளாவதில்லை, மாறாக அவரது மாயா சக்தியால் சூழப்பட்டிருக்கும் நாமோ பலன்தரும் செயலின் பாதையில் அலைந்து கொண்டிருக்கின்றோம்.
பதம் 10.23.51 : பகவான் கிருஷ்ணரின் மாயா சக்தியினால் குழப்பமுற்றதின் காரணமாக முழுமுதற் கடவுளான அவரது செல்வாக்கினை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. நமது குற்றத்தினை அவர் அன்புடன் மன்னித்தருள்வார் என்று இப்போது நாங்கள் நம்புகின்றோம்.
பதம் 10.23.52 : பகவான் கிருஷ்ணரைப் புறக்கணித்ததினால் தாம் செய்த பாவத்தினை எண்ணி வருந்திய அந்தணர்கள் அவரைத் தரிசிக்க வேண்டுமென்று பெரும் ஆவல் கொண்டனர். ஆயினும் கம்சனுக்கு அஞ்சி அவர்கள் விரஜத்திற்குச் செல்லவில்லை.