VI. புரிக்கு வெளியேயுள்ள திருக்கோயில்கள்
6. க்ஷீரசோர கோபிநாதர் கோவில்
நோக்கங்கள்:
நோக்கம் 2: இந்த புனித ஸ்தலத்துடன் தொடர்புடைய மகான் பக்தர்களைப் பற்றி அறிதல்.
நோக்கம் 4: கோவிலில் உள்ள முக்கிய விக்ரகங்கள் மற்றும் அவற்றின் அமைப்பை அறிதல்.
அறிமுகம்
நோக்கம் 1: ரேமுணாவில் உள்ள க்ஷீர-சோர கோபிநாதர் கோவிலின் இருப்பிடம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிதல்.
க்ஷீர-சோர கோபிநாதர் கோவில் ஒடிஷா மாநிலத்தில் உள்ள ரேமுணா என்ற இடத்தில் உள்ளது. இது பலசோர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் பூரி மற்றும் கொல்கத்தா இடையே அமைந்துள்ளது.
“ரேமுணா” என்ற பெயர் “ரமணிய” என்ற சொல்லில் இருந்து வந்தது. அதற்கு “மிக அழகான இடம்” என்று அர்த்தம்.
“க்ஷீர-சோர கோபிநாதர்” என்றால் “கோபிகளின் நாதனான கிருஷ்ணர், பால் பாயசத்தை (க்ஷீரம்) திருடியவர்” என்று பொருள்.
இந்த பெயர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தெய்வீக நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிகழ்வில், பகவான் கோபிநாதர், பெரிய வைஷ்ணவ பக்தரான மாதவேந்திர பூரிக்காக ஒரு பாத்திரம் பால் பாயசத்தை திருடினார்.
இந்த தெய்வீக லீலையினால், அந்த பகவான் “க்ஷீர-சோர கோபிநாதர்” என்று பிரபலமானார்.
இந்த கோவில் வைஷ்ணவ மரபில் முக்கியமான 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.
இந்த திருத்தலத்துடன் தொடர்புடைய பக்தர்கள்
நோக்கம் 2: இந்த புனித ஸ்தலத்துடன் தொடர்புடைய மகான் பக்தர்களைப் பற்றி அறிதல்.
க்ஷீரசோர கோபிநாதர் கோவிலுடன் பல பெரிய பக்தர்களுக்கும் தொடர்பு உள்ளது.
• உத்கலத்தின் மன்னர் லங்குல நரசிம்ஹ தேவர் – இந்த மன்னர் தெய்வத்தை கொண்டு வந்து ரேமுணாவில் பிரதிஷ்டை செய்து வழிபாட்டை ஆரம்பித்தார்.
• ஸ்ரீ சைதன்ய மகாபிரபு – ஜகன்னாத புரிக்கு பயணம் செய்தபோது இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அவருடைய திருவடிச்சுவடுகள் கருட ஸ்தம்பத்தின் அருகில் இன்றும் காணப்படுகின்றன. இந்த லீலை *சைதன்ய சரிதாமிர்தம் (மத்திய லீலை)*யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
• ஸ்ரீ ரசிகானந்தர் – ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பரம்பரையில் வந்த ஒரு பெரியவைஷ்ணவ பக்தர். அவருடைய சமாதி இந்த கோவிலின் உள்ளேயே உள்ளது.
• சைதன்ய தாச பாபாஜி – இவர் விருந்தாவனத்திலிருந்து பகவான்ஸ்ரீ கோவிந்தர் மற்றும்பகவான் ஸ்ரீ மதன மோகன் விக்கிரங்களை இக்கோவிலுக்கு கொண்டு வந்தார்.
லீலைகள் (தெய்வீக நிகழ்வுகள்)
நோக்கம் 3: மாதவேந்திர பூரியின் புனித பயணம், க்ஷீரசோர கோபிநாதரின் தெய்வீக லீலை, மற்றும் ரேமுணாவில் இன்றும் தொடரும் ஆன்மீக மரபுகளை உணருதல்.
500 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய பக்தரான ஸ்ரீ மாதவேந்திர பூரி, தனது விருந்தாவனத்தில் இருக்கும் பகவான் ஸ்ரீ கோபாலருக்காக சந்தனக் கட்டைகளை கொண்டு வர ஜெகன்னாத புரிக்கு பயணம் செய்தார். அந்த வழியில் அவர் ரேமுணாவில் தங்கி, அங்கு அழகாக வழிபடப்படும் பகவான் கோபிநாதரை தரிசனம் செய்தார்.
அவர் தரிசனம் செய்தபோது, மாலை நேரத்தில் பகவான் கோபிநாதருக்கு “அம்ருத கேலி” என்ற இனிய பால் பாயசம் நைவேத்யமாக சமர்ப்பிக்கப்படுவதாக பூசாரி மூலமாக அறிந்தார். அதை பார்த்தவுடன், “இதன் சுவையை சுவைத்து தெரிந்து கொண்டு, என் கோபாலருக்காக இதையே செய்வேன்” என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது.
ஆனால் உடனே, “கோபிநாதரின் நைவேத்யத்தை உண்ண நினைப்பது தவறு.இது தகாத எண்ணம்” என்று நினைத்து, அதற்க்காக மிகவும் வெட்கப்பட்டார். உடனே கோவிலை விட்டு வெளியேறி அருகிலுள்ள சந்தையில் அமர்ந்து ஹரிநாமத்தை ஜபிக்கத் தொடங்கினார்.
அன்றிரவு, பகவான் கோபிநாதர் பூசாரியின் கனவில் தோன்றி, “நான் மாதவேந்திர பூரிக்காக ஒரு பாத்திரம் பாயசத்தை மறைத்து வைத்துள்ளேன்” என்று கூறினார். பூசாரி அதை கண்டுபிடித்து மாதவேந்திர பூரிக்கு கொடுத்தார். “பகவான் உங்களுக்காக பாயசத்தை திருடி வைத்துள்ளார்” என்று கூறினார்.
அதன் பின்னர், அந்த பகவான் “க்ஷீரசோர கோபிநாதர்” (பாயசத்தை திருடிய கோபிநாதர்) என்று புகழ்பெற்றார்.
பின்னர், மாதவேந்திர பூரி ஜகன்னாத புரியில் இருந்து சந்தனம் கொண்டுதிரும்பும் வழியில்,மீண்டும் ரேமுணாவிற்கு வந்தார். அப்போது, விருந்தாவன பகவான் ஸ்ரீ கோபாலர் அவருக்கு கனவில் தோன்றி, “இந்த சந்தனத்தை ரேமுணா பகவான் கோபிநாதருக்கு பூசு; நானும் கோபிநாதரும் ஒன்றே” என்று அறிவுறுத்தினார்.மாதவேந்திர பூரியும் அவ்வாறே செய்தார்.
இந்த தெய்வீக மரபு இன்றும் “சந்தன யாத்திரை” திருவிழாவில் தொடர்கிறது. மேலும், ரேமுணா கோவிலில் பக்தர்கள் இன்றும் அந்த புகழ்பெற்ற “அம்ருத கேலி பாயச” பிரசாதத்தை பெறுகின்றனர்.
க்ஷீரசோர கோபிநாதர் லீலை மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு தானே சேவை செய்து, அவர்கள் சொல்லாத ஆசைகளையும் கூட நிறைவேற்றுகிறார் என்பதை நாம் அறியலாம்.
க்ஷீரசோர கோபிநாதர் லீலை மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு தானே சேவை செய்து, அவர்கள் சொல்லாத ஆசைகளையும் கூட நிறைவேற்றுகிறார் என்பதை நாம் அறியலாம்.
விக்ரகங்கள்
நோக்கம் 4: கோவிலில் உள்ள முக்கிய விக்ரகங்கள் மற்றும் அவற்றின் அமைப்பை அறிதல்
இந்த கோவிலின் முதன்மை விக்ரகம் பகவான் கோபிநாதருடையது (க்ஷீரசோர கோபிநாதர்) ஆகும். அவரின் வலப்பக்கத்தில் ஸ்ரீ கோவிந்தர், இடப்பக்கத்தில் ஸ்ரீ மதன மோகன் உள்ளனர். எல்லா விக்ரகங்களும் கருப்பு கல்லால் செய்யப்பட்டவை.
பகவான்ஸ்ரீ கோவிந்தர் மற்றும் பகவான் ஸ்ரீ மதன மோகன் விக்ரகங்களை, சுமார் 1938 ஆம் ஆண்டு சைதன்ய தாச பாபாஜி விருந்தாவனத்திலிருந்து கொண்டு வந்தார்.
இந்த கோவிலில் ஸ்ரீ ராதா-ராசபிஹாரி, ஜகன்னாத பகவான், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஆகியோரின் விக்ரகங்களும் மற்றும் பல சாளகிராமங்களும் உள்ளன.
விக்ரகத்தின் தோற்றம்
நோக்கம் 5: பகவான் ராமர் செதுக்கிய கோபிநாதர் விக்ரகத்தின் ஆரம்ப வரலாறு, அதன் தெய்வீக முக்கியத்துவம் மற்றும் யுகங்களாக தொடர்ந்து நடக்கும் வழிபாட்டை அறிதல்.
உள்ளூர் மரபு படி,பகவான் கோபிநாதர் விக்ரகத்தை முதலில் திரேதா யுகத்தில், சீதா மற்றும் லட்சுமணருடன் சித்ரகூடத்தில் வனவாசம் இருந்தபோது பகவான் ராமர் செதுக்கியதாக கூறப்படுகிறது.
ஒரு நாள், கனமழைக்கு பிறகு சுற்றியுள்ள இடம் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. அப்போது பகவான் ராமர், ஆசிரமங்களில் மேயும் பசுக்களை பார்த்து சிரித்தார். இதைக் கண்ட சீதாதேவி காரணம் கேட்டார். அதற்கு ராமர், “இது என்னுடைய அடுத்த அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர்—பசுக்களை மேய்க்கும் கோபாலன்—அவரை நினைவுபடுத்துகிறது” என்று கூறினார். அதை கேட்டு சீதாதேவி அந்த ரூபத்தை காண விரும்பினார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்ற, ராமர் ஒரு கல்லை எடுத்து, தனது அம்பின் முனையால் வேணு வாசிக்கும் திரிபங்கி ரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை செதுக்கியார். அவரைச் சுற்றி எட்டு கோபிகைகளையும் செதுக்கியார்—இடப்பக்கத்தில் லலிதா, விஷாகா, சித்ரா, இந்துலேகா; வலப்பக்கத்தில் சாம்பகலதா, சுதேவி, துங்கவித்யா, ரங்கதேவி. அவரின் திருவடிகளின் அருகில் சுபலன், மதுமங்களன், சனந்தன், விதக்தன் போன்ற நண்பர்களையும், கிருஷ்ணரின் கோபால லீலைகளையும், சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகிய மல்யுத்த வீரர்களை வென்ற நிகழ்வையும் செதுக்கினார்.
பின்னர் சீதாதேவி அந்த விக்ரகத்தை தொட்டு “இது எப்படி உருவானது?” என்று கேட்டார். அதற்கு ராமர் மீண்டும் அம்பால் கல்லை தொட்டார். அப்போது அந்த கல்லில் இருந்து இரத்தம் வடியத் தொடங்கியது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த விக்ரகம் பகவானின் ஸ்பரிசத்தால் உயிர்ப்புடன் ஆனது என்று அறியப்படுகிறது. அதன் பிறகு சீதாதேவி அந்த விக்ரகத்தை நேரடியாக பூஜை செய்தார். பின்னர் பிரம்மாவும் அதே வழிபாட்டை தொடர்ந்தார்.
இராவணனை வென்ற பின், அயோத்திக்கு திரும்பும் வழியில் பகவான் ராமர் இப்போது ரேமுணா என்று அழைக்கப்படும் அழகான இடத்தில் தங்கினார். அப்போது அங்கு சீதாதேவி குளிக்க விரும்பியதால், ராமர் நிலத்தில் ஏழு அம்புகளை எய்து “சப்தசாரா” என்ற நதியை உருவாக்கினார்.
சித்ரகூடத்தில் செதுக்கப்பட்ட இந்த பகவான் கோபிநாதர் விக்ரகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் வரை தொடர்ந்து வழிபடப்பட்டு வருகிறது.
ரேமுணாவில் ஸ்ரீ க்ஷீரசோர கோபிநாதரின் பிரதிஷ்டை
நோக்கம் 6: மதனகோபாலர் விக்ரகம் மன்னர் லங்குல நரசிம்ஹ தேவரால் ரேமுணாவிற்கு கொண்டு வரப்பட்ட விதம் மற்றும் அங்கு வழிபாடு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை அறிதல்.
அடுத்த நாள், மன்னர் மிகுந்த பக்தியுடன் அந்த விக்ரகத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீக்ஷேத்திரம் (ஜகன்னாத புரி) நோக்கி பயணம் செய்தார். அந்த வழியில் அவர் ரேமுணாவில் தங்கினார். அப்போது பகவான் ஶ்ரீகிருஷ்ணர்,“இந்த இடத்தில் நிறைய பால் தரும் பசுக்கள் உள்ளதால், நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
மன்னர் அந்த தெய்வீக விருப்பத்தை ஏற்று, ரேமுணாவில் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அந்த விக்ரகத்தை சுற்றி எட்டு கோபிகைகளும் நண்பர்களும் இருந்ததால், மகாராணி அவரை ஸ்ரீ கோபிநாதர் என்று பெயரிட்டார்.
மேலும், மன்னர், பிரஜாபோக்ரி மற்றும் குடபோக்ரி என்ற இரண்டு பெரிய புனித குளங்களை உருவாக்க ஏற்பாடு செய்தார். இந்த பணிகளை முடித்த பின், அவர் மீண்டும் புரிக்கு திரும்பினார்.
இவ்வாறு,மதனகோபாலன் என்கின்ற ஸ்ரீ க்ஷீரசோர கோபிநாதர் ரேமுணாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை பக்தர்களால் மிகவும் நேசத்துடன் வழிபடப்படுகிறார்.
கோவில் அமைப்பு
நோக்கம் 7: கோவிலின் வரலாற்று வளர்ச்சியை—அதன் ஆரம்ப கட்டிடம், படையெடுப்பின்போது ஏற்பட்ட சேதம், பின்னர் நடந்த புதுப்பிப்பு—போன்றவற்றை அறிதல்.
வரலாற்று படி, ஒடிஷாவின் மன்னர் லங்குல நரசிம்ஹ தேவர் 13ஆம் நூற்றாண்டில் ரேமுணாவில் இந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.
ஆரம்பத்தில் கட்டப்பட்ட கோவில், முஸ்லிம் படையெடுப்பின்போது சேதமடைந்தது. அந்த காலத்தில், விக்ரகம் பாதுகாப்புக்காக ஒரு குளத்தில் மறைத்து வைக்கப்பட்டது. பின்னர் அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடு தொடரப்பட்டது.
பின்னர், பெரிய பக்தரான ஸ்ரீ ரசிகானந்தர் அதை மீண்டும் புதுப்பித்தார்.

