அத்தியாயம் – 27
தேவேந்திரனும் அன்னை சுரபியும் வழிபடுதல்
பதம் 10.27.1
ஸ்ரீ-ஸீக உவாச
கோவர்தனே த்ருதே ஸைவே ஆஸாராத் ரக்ஷிதே வ்ரஜே
கோ-லோகாத் ஆவ்ரஜத் க்ருஷ்ணம் ஸீரபி: ஸக்ர ஏவச
ஸ்ரீ-ஸீக: உவாச—ஸ்ரீ சுகதேவகோஸ்வாமி கூறினார்; கோவர்தனே—கோவர்தனம்; த்ருதே—தூக்கியது; ஸைவே—மலையினை; ஆஸாராத்—மழையிலிருந்து; ரக்ஷிதே—பாதுகாத்தார்; வ்ரஜே—விரஜம்; கோ-லோகாத்—பசுக்களின் உலகம் (கோலோகம்); ஆவ்ரஜத்—வந்தாள்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரிடம்; ஸீரபி:—அன்னை சுரபி; ஸக்ர:—இந்திரன்; ஏவ—மட்டும்; ச—மேலும்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோவர்தன கிரியைத் தூக்கி நாசகார மழையிலிருந்து விரஜவாசிகளைப் பகவான் கிருஷ்ணர் காத்தபிறகு பசுக்களின் அன்னையான சுரபி தனது உலகிலிருந்து கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக இந்திரனுடன் சேர்ந்து வந்தாள்.
பதம் 10.27.2
விவிக்த உபஸங்கம்ய வ்ரீடித: க்ருத-ஹேலன:
பஸ்பர்ஸ பாதயோர் ஏனம் க்ரீடேனார்க-வர்சஸா
விவிக்தே—தனிமையான ஓரிடத்தில்; உபஸங்கம்ய—சென்று; வ்ரீடித:—வெட்கினான்; க்ருத-ஹேலன்:—குற்றமிழைத்தவன்; பஸ்பர்ஸ—அவன் ஸ்பரிசித்தான்; பாதயோ:—அவரது பாதங்களில்; ஏனம்—அவரை; க்ரீடேன—அவனது கிரீடத்துடன்; அர்க—சூரியனைப் போன்று; வர்சஸா—அதன் ஒளி.
பகவானிடம் தவறிழைத்துவிட்டதற்காக இந்திரன் பெரிதும் நாணினான். பகவானை ஒரு தனிமையான இடத்தில் சந்தித்து சூரியனைப் போன்று ஒளிரும் தனது கிரீடம் பகவானது தாமரைத் திருவடிகளில் பட அவரை வீழ்ந்து வணங்கினான்.
பதம் 10.27.3
த்ருஷ்ட-ஸ்ருதானுபாவோ ‘ஸ்ய க்ருஷ்ணஸ்யாமித-தேஜஸ:
நஷ்ட-த்ரி-லோகேஸ மத இதம் ஆஹ க்ருதாஞ்ஜலி:
த்ருஷ்ட—கண்ட; ஸ்ருத—கேட்டு; அனுபாவ:—சக்தி; அஸ்ய—இதன்; க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணர்; அமித—அளவில்லாத; தேஜஸ:—அவனது சக்திகள்; நஷ்ட—அழிக்கப்பட்டது; த்ரி-லோக—மூவுலகங்களின்; ஈஸ—தலைவன் என்னும்; மத:—அவனது மதிமயக்கம்; இதம்—இவ்வார்த்தைகள்; ஆஹ—கூறினான்; க்ருத-அஞ்ஜலி:—தனது இரு கரங்களைக் குவித்துப் பணிவுடன் வணங்கியபடி.
இந்திரன் இப்பொழுது சக்திவாய்ந்த கிருஷ்ணரின் உன்னத சக்தியைப் பற்றி கேட்ட, கண்ட பிறகு, மூவுலகங்களின் தலைவன் என்ற அவனது பொய் அகங்காரம் முறியடிக்கப்பட்டது. அவன் தன் இருகரங்களைக் குவித்துப் பணிவுடன் வணங்கியபடி பகவானிடம் இவ்வாறு கூறினான்.
பதம் 10.27.4
இந்த்ர உவாச
விஸூத்த-ஸத்தவம் தவ தாம ஸாந்தம்
தபோ-மயம் த்வஸ்த-ரஜஸ்-தமஸ்கம்
மாயா-மயோ ‘யம் குண-ஸம்ப்ரவாஹோ
ந வித்யதே தே ‘க்ரஹணானுபந்த:
இந்த்ர: உவாச—இந்திரன் கூறினான்; விஸூத்த-ஸத்த்வம்—சத்துவகுணத்தின் வெளிப்பாடு; தவ—உமது; தாம—வடிவம்; ஸாந்தம்—மாற்றமில்லாத; தப:-மயம்—ஞானமயமானது; த்வஸ்த—அழிந்தது; ரஜ:—ரஜோகுணம்; தமஸ்கம்—தமோகுணம்; மாயா-மய:—மாயையின் அடிப்படையிலான; அயம்—இந்த; குண—ஜட இயற்கைக் குணங்களின்; ஸம்ப்ரவாஹ:—தொடர்ந்து பெருகிவரும்; ந வித்யதே—இருப்பதில்லை; தே—உம்மிடம்; அக்ரஹன—அறியாமை; அனுபந்த:—தொடர்பினால்.
தேவேந்திரன் கூறினான்: சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும், ஞான ஒளியுடையதும், ரஜோ, தமோ குணங்கள் அற்றதுமாகும். மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை.
பதம் 10.27.5
குதோ நு தத்-ஹேதவ ஈஸ தத்-க்ருதா
லோபாதயோ யே ‘புத-லிங்க-பாவா:
ததாபி தண்டம் பகவான் பிபர்தி
தர்மஸ்ய குப்த்யை கல-நிக்ரஹாய
குத:—எவ்வாறு; நு—உறுதியாக; தத்—அதன் (பெளதிக உடலின் தோற்றம்); ஹேதவ:—காரணங்கள்; ஈஸ—ஓ, பகவானே; தத்-க்ருதா:—ஒருவனது பௌதிக உடலின் தொடர்பினால் உண்டாவது; லோப-ஆதய:—லோபம் போன்றவை; யே—இவை; அபுத—அறியாமைமிக்க ஒருவனின்; லிங்க-பாவா:—அடையாளங்கள்; ததா அபி—இருந்தும்; தண்டம்—தண்டனை; பகவான்—முழுமுதற் கடவுள்; பிபர்தி—பொருத்துகின்ற; தர்மஸ்ய—தர்ம நெறிகளின்; குப்த்யை—காப்பதற்காக; கல—துஷ்டர்களின்; நிக்ரஹாய—தண்டிப்பதற்காக.
பிறகு எவ்வாறு உம்மிடம் காமம், குரோதம், லோபம் என்னும் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும்? இவை ஒருவனின் முந்தைய பௌதிக வாழ்வின் ஈடுபாட்டின் காரணமாக உண்டாவதோடு அவன் மேலும் உலகியல் வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமும் ஆகின்றன. மேலும் தாங்கள் பரமபுருஷ பகவான் ஆதலினால் துஷ்டர்களை அழித்து தர்ம நெறிகளைக் காக்கின்றீர்.
பதம் 10.27.6
பிதா குருஸ் த்வம்-ஜகதாம் அதீஸோ
துரத்யய: கால உபாத்த-தண்ட:
ஹிதாய சேச்சா-தனுபி: ஸமீஹஸே
மானம் விதுன்வன் ஜகத்-ஈஸ-மானினாம்
பிதா—தந்தை; குரு:—குரு; த்வம்—நீரே; ஜகதாம்—இப்பிரபஞ்சத்தின்; அதீஸ:—பரமநெறியாளர்; துரத்யய:—கடப்பதற்கரிய; கால:—காலம்; உபாத்த—செயல்படுத்துகின்ற; தண்ட:—தண்டனை; ஹிதாய—நன்மைக்காக; ச—மற்றும்; இச்சா—உமது இச்சைக்கேற்ப மேற்கொள்ளப்படும்; தனுபி:—உமது உன்னத வடிவங்களால்; ஸமீஹஸே—நீர் முயற்சிக்கின்றீர்; மானம்—வீண் ஆணவத்தினை; விதுன்வன்—அழிக்கின்றீர்; ஜகத்-ஈஸ—பிரபஞ்ச நாயகர்; மானினாம்—தம்மைக் கருதுபவர்கள்.
இப்பிரபஞ்சத்தின் தந்தையும் ஆன்மீகக் குருவும், பரமநெறியாளரும் நீரே, கடப்பதற்கரிய காலமும் நீரே, பாவிகளின் நன்மைக்காக அவர்களைத் தண்டிப்பவரும் நீரே. உமது விருப்பத்திற்கேற்ப நீர் மேற்கொள்ளும் பல்வேறு அவதாரங்களிலும், தம்மை இவ்வுலகின் தலைவன் என்று கருதுபவர்களின் வீண் ஆணவத்தினை நீக்குவதற்காக உறுதியுடன் செயல்படுகின்றீர்.
பதம் 10.27.7
யே மத்-விதாஜ்ஞா ஜகத்-ஈஸ-மானினஸ்
த்வாம் லீக்ஷ்ய காலே ‘பயம் ஆஸீ தன்-மதம்
ஹித்வார்ய-மார்கம் ப்ரபஜந்தி அபஸ்மயா
ஈஹா கலானாம்அபி தே ‘னுஸாஸனம்
யே—இவர்கள்; மத்-வித—என்னைப்போல்; ஆஜ்ஞா:—மூடர்கள்; ஜகத்-ஈஸ—பிரபஞ்ச நாயகர்களாக; மானின:—தம்மைத் தவறாக அடையாளம் கண்டு; த்வாம்—உம்மை; லீக்ஷ்ய—கண்டு; காலே—காலத்தின் (அச்சத்தின்); அபயம்—அச்சமற்ற; ஆஸீ—விரைவாக; தத்—அவர்களது; மதம்—வீண் ஆணவத்தின்; ஹித்வா—புறக்கணித்து; ஆர்ய—ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெறும் பக்தர்களின்; மார்கம்—பாதை; ப்ரபஜந்தி—முற்றிலும் மேற்கொண்டு; அப-ஸ்மயா:—ஆணவம் நீங்கி; ஈஹா—செயல்; கலானாம்—துஷ்டர்களின்; அபி—உண்மையில்; தே—உம்மால்; அனுஸாஸனம்—உபதேசம்.
தம்மை அப்பிரபஞ்சத்தின் தலைவர்களாகக் கருதும் என்னைப் போன்ற மூடர்கள் கூடக் காலத்திற்கும் அஞ்சாதவராக நீர் இருப்பதைக் காணும்பொழுது உடனடியாகத் தமது எண்ணத்தினை உதறித்தள்ளி நேரடியாக ஆன்மீக வளர்ச்சிப் பாதையினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீர் தீயவர்களையும் கூட அவர்களுக்கு உபதேசிப்பதின் மூலம் தண்டிக்கின்றீர்.
பதம் 10.27.8
ஸ த்வம் மமைஸ்வர்ய-மத-ப்லுதஸ்ய
க்ருதாகஸஸ் தே ‘விதுஷ: ப்ரபாவம்
க்ஷந்தும் ப்ரபோ (ஆ)தார்ஹஸிமூட-சேதஸோ
மைவம் புனர் பூன் மதிர் ஈஸ மே ‘ஸதீ
ஸ:—அவர்; த்வம்—உமது; மம—எனது; ஐஸ்வர்ய—ஆட்சி அதிகாரத்தின்; மத—மதிமயக்கத்தினால்; ப்லுதஸ்ய—இணைந்திருத்தல்; க்ருத—செய்துள்ளேன்; ஆகஸ:—பெருங்குற்றம்; தே—உமது; அபிதுஷ:—அறியாது; ப்ரபாவம்—உன்னத செல்வாக்கு; க்ஷந்தும்—மன்னித்தல்; ப்ரபோ—ஓ, பிரபுவே; அத—அதனால்; அர்ஹஸி—நீர்; மூட—மூடன்; சேதஸ:—அவனது புத்தி; மா—இல்லை; ஏவம்—இவ்வாறு; புன:—மீண்டும்; பூத்—ஆகட்டும்; மதி:—உணர்வு; ஈஸ—ஓ ஈசனே; மே—எனது; அஸதீ—அசுத்தம்.
எனது ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் அமிழ்ந்து, உமது மாண்பினை அறியாது உம்மிடம் தவறிழைத்து விட்டேன். ஒ, பிரபுவே என்னை மன்னித்தருள்வீராக. எனது புத்தி குழம்பி இருந்தது. அதனால் எனது உணர்வு மீண்டும் மாசு பெறாதிருப்பதாக.
பதம் 10.27.9
தவாதாரோ ‘யம் அதோக்ஷஜேஹ
புவோ பராணாம் உரு-பார-ஜன்மனாம்
சமூ-பதீனாம் அபவாய தேவ
பவாய யுஷ்மச்-சரணானுவர்தினாம்
தவ—உமது; அவதார:—அவதாரம்; அயம்—இந்த; அதேக்ஷஜ—ஓ, உன்னத பகவானே; இஹ—இவ்வுலகில்; புவ:—புவியின்; பராணாம்—பாரமாக இருப்பவர்கள்; உரு-பார—பல்வேறு இடையூறுகள்; ஜன்மனாம்—பெருகச் செய்பவர்கள்; சமூ-பதீனாம்—இராணுவத் தலைவர்களின்; அபவாய—அழிப்பதற்காக; தேவ—ஓ, முழுமுதற் கடவுளே; பவாய—புனித நன்மைக்காக; யுஷ்மத்—உமது; சரண—தாமரைத் திருவடிகள்; அனுவர்தினாம்—தொண்டு செய்பவர்களின்.
ஓ, உன்னத பகவானே, இப்புவியின் பாரத்தினை அதிகரித்து இதற்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்யும் போர்வெறி பிடித்த தலைவர்களை அழிப்பதற்காக நீர் இவ்வுலகில் அவதரிக்கின்றீர். ஓ, பகவானே, அதே சமயம் நீர் உமது தாமரைத் திருவடிகளுக்கு நம்பிக்கையுடன் தொண்டு செய்பவர்களின் நன்மைக்காகவும் செயல்படுகின்றீர்.
பதம் 10.27.10
நமஸ் துப்யம் பகவதே புருஷாய மஹாத்மனே
வாஸூதேவாய க்ருஷ்ணாய ஸாத்வதாம் பததே நம:
நம:—வந்தனம்; துப்யம்—உமக்கு; பகவதே—முழு முதற்கடவுள்; புருஷாய—அனைத்து உயிர்களின் இதயங்களிலும் இருப்பவர்; மஹா-ஆத்மனே—மகாத்மாவே; வாஸுதேவாய—எங்கும் வியாபித்திருக்கும் அவருக்கு; க்ருஷ்ணாய—ஸ்ரீ கிருஷ்ணர்; ஸாத்வதாம்—யதுகுலத்தின்; பதயே—தலைவருக்கு; நம:—வந்தனங்கள்.
முழுமுதற்கடவுளே, மகாத்மாவே, எங்கும் வியாபித்திருப்பவரே எல்லா உயிர்களின் இதயங்களிலும் இருப்பவரே! உமக்கு எனது வந்தனங்கள். யதுகுலத்தின் தலைவரான கிருஷ்ணரே, உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.27.11
ஸ்வச்சந்தோபத்தா-தேஹாய விஸீத்த-ஜ்ஞான-மூர்தயே
ஸர்வஸ்மை ஸர்வ-பீஜாய ஸர்வ-பூதாத்மனே நம:
ஸ்வ—அவரது (பக்தர்களின்); சந்த—விருப்பத்திற்கேற்ப; உபாத்த—மேற்கொள்கிறார்; தேஹாய—அவரது உன்னத உடல்கள்; விஸீத்த—முழுத் தூய்மையுடையது; ஜ்ஞான—ஞானம்; மூர்தயே—அவரது வடிவம்; ஸர்வஸ்மை—எங்கும் பரவி இருக்கும் அவருக்கு; ஸ்ர்வ-பீஜாய—அவரே எல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவர்; ஸர்வ-பூத—படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின்; ஆத்மனே—உள்ளே இருக்கும் ஆத்மா அவர்; நம:—வந்தனங்கள்.
தமது பக்தர்களின் விருப்பங்களுக்கேற்ப உன்னத உடல்களை மேற்கொள்பவருக்கும், தூய உணர்வுடைய வடிவம் உடையவருக்கும், எல்லா உயிர்களுக்கும் வித்தாகவும், ஆத்மாவாகவும் இருக்கும் அவருக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
பதம் 10.27.12
மயேதம் பகவன் கோஷ்ட-நாஸாயாஸார-வாயுபி:
சேஷ்டிதம் விஹதே யஜ்ஞே மானினா தீவ்ர-மன்யுனா
மயா—என்னால்; இதம்—இந்த; பகவன்—ஓ, பகவானே; கோஷ்ட—உமது கோகுலத்தின்; நாஸாய—நாசத்திற்காக; ஆஸார—கனமழையினால்; வாயுபி:—மற்றும் பலத்த காற்றினால்; சேஷ்டிதம்—கட்டளையிடப்பட்டது; விஹதே—அது தடைப்பட்ட பொழுது; யஜ்ஞே—எனது வேள்வி; மானினா—வீண் கர்வம் கொண்டிருந்த (என்னால்); தீவ்ர—தீவிரமான; மன்யுனா—அவனது சினம்.
போற்றுதற்குரிய பகவானே, எனது வேள்வி தடை செய்யப்பட்டது கண்டு அகந்தையின் காரணமாக நான் கடுஞ்சினங் கொண்டேன். அதனால் உமது ஆயர்குலத்தினைக் கடுமையான மழை மற்றும் சூறைக் காற்றினால் நான் அழித்துவிட முயன்றேன்
பதம் 10.27.13
த்வயேஸானுக்ருஹீதோ ‘ஸ்மி த்வஸ்த-ஸ்தம்போ வ்ருதோத்யம:
ஈஸ்வரம் குரும் ஆத்மானம் த்வாம் அஹம் ஸரணம் கத:
த்வயா—உம்மால்; ஈஸ—ஓ பகவானே; அனுக்ருஹீத:—கருணை காட்டுவீராக; அஸ்மி—நான்; த்வஸ்த—அழித்த; ஸ்தம்பஹ்—ஆணவம்; வ்ருதா—பலனற்ற; உத்யம:—எனது முயற்சி; ஈஸ்வரம்—பரமபுருஷ பகவான்; குரும்—ஆன்மீகக்குரு; ஆத்மானம்—உண்மையான ஆத்மா; த்வாம்—உமக்கு; அஹம்—நான்; ஸரணம்—சரணடைவதற்காக; கத:—வந்துள்ளேன்.
எனது ஆணவத்தினை அழித்து எனது முயற்சியினை (விருந்தாவனத்தினைத் தண்டித்தல்) தோல்வியுறச் செய்ததின் மூலம் ஓ, பகவானே, நீர் எனக்குக் கருணை காட்டியுள்ளீர். பரமபுருஷ பகவானும், ஆன்மீக குருவும் பரமாத்மாவும் ஆனவரே, உம்மைச் சரணடைவதற்காக இப்போது நான் வந்திருக்கின்றேன்.
பதம் 10.27.14
ஸ்ரீ-ஸீக உவாச
ஏவம் ஸங்கீர்தித: க்ருஷ்ணே மகோனா பகவான் அமும்
மேக-கம்பீரயா வாசா ப்ரஹஸன் இதம் அப்ரவீத்
ஸ்ரீ-ஸீக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஸகீர்தித—புகழ்ந்து; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; மகோனா—இந்திரனால்; பகவான்—முழுமுதற் கடவுள்; அமும்—அவருக்கு; மேக—மேகங்களைப் போன்ற; கம்பீரயா—கம்பீரமான; வாசா—வார்த்தைகளுடன்; ப்ரஹஸன்—புன்னகையுடன்; இதம்—பின்வரும்; அப்ரவீத்—கூறினார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரனால் இவ்வாறு போற்றப்பட்டவுடன் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் புன்னகை புரிந்து மேகங்களின் ஒலியைப் போன்ற கம்பீரமான குரலில் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.27.15
ஸ்ரீ-பகவான் உவாச
மயா தே ‘காரி மகவன் மக-பங்கோ ‘னுக்ருஹ்ணதா
மத்-அனுஸ்ம்ருதயே நித்யம் மத்தஸ்யேந்த்ர-ஸ்ரியா ப்ருஸம்
ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; மயா—என்னால்; தே—உனக்கு; அகாரி—செய்யப்பட்டது; மகவன்—அன்பிற்குரிய இந்திரனே; மக—உனக்குரிய வேள்வி; பங்க:—தடைசெய்தது; அனுக்ருஹ்ணதா—உனக்குக் கருணைபுரிய; மத்-அனுஸ்ம்ருதயே—என்னையே நினைக்கவேண்டும் என்பதற்காக; நித்யம்—எப்போதும்; மத்தஸ்ய—மதிமயங்கியதின்; இந்த்ர-ஸ்ரிய—இந்திரனின் செல்வ வளத்தினால்; ப்ருஸம்—பெரிதாக.
முழுமுதற்கடவுள் கூறினார்: அன்பிற்குரிய இந்திரனே, உன்மீது கொண்ட கருணையினாலேயே நான் உனக்குரிய யாகத்தினைத் தடுத்து நிறுத்தினேன். தேவலோகத்தின் தலைவன் என்னும் உனது செல்வத்தினால் நீ செருக்குற்றிருந்தாய். அதனால் நீ எப்போதும் என்னையே நினைத்திருக்க வேண்டும் என்று நான் உளம் கொண்டேன்.
பதம் 10.27.16
மாம் ஜஸ்வர்ய-ஸ்ரீ மதாந்தோ தண்ட-பாணிம் ந பஸ்யதி
தம் ப்ரம்ஸயாமி ஸம்பத்ப்யோ யஸ்ய சேச்சாமி அனுக்ரஹம்
மாம்—என்னை; ஜஸ்வர்ய—அவனது அதிகாரம்; ஸ்ரீ—மற்றும் செல்வம்; மத—மதிமயக்கத்தினால்; அந்த:—குருடனாகி; தண்ட—தண்டனைக்குரிய தண்டம்; பாணிம்—எனது கரத்தில்; ந பஸ்யதி—ஒருவன் காண்பதில்லை; தம்—அவனை; ப்ரம்ஸயாமி—நான் விழச் செய்கிறேன்; ஸம்பத்ப்ய:—அவனது பெளதிகச் சொத்துக்களிலிருந்து; யஸ்ய—அவனுக்கு; ச—மற்றும்; இச்சாமி—நான் விரும்புகிறேன்; அனுக்ரஹம்—நன்மைசெய்ய.
தனது அதிகாரம் மற்றும் செல்வத்தினால் மதிமயங்கிக் கண்கள் குருடாகிப் போன ஒருவனால் அவனுக்குத் தண்டனை தருவதற்காக கையில் கண்டத்துடன் அவன் அருகில் நிற்கும் என்னைக் காண முடியாது. அவனது உண்மையான நலத்தினை நான் விரும்புவதினால் அவனது பௌதிக உயர்நிலையிலிருந்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளுகிறேன்.
பதம் 10.2717.
கம்யதாம் ஸக்ர பத்ரம் வ: க்ரியதாம் மே ‘னுஸாஸனம்
ஸ்தீயதாம் ஸ்வாதிகாரேஷீ யுக்தைர் வ: ஸ்தம்ப-வர்ஜிதை:
கம்யதாம்—நீ போகலாம்; ஸக்ர—ஓ இந்திரனே; பத்ரம்—நன்மை உண்டாகட்டும்; வ:—உனக்கு; க்ரியதாம்—நீ செய்வாயாக; மே—எனது; அனுஸாஸனம்—கட்டளை; ஸ்தீயதாம்—இருப்பாயாக; ஸ்வ—உனது; அதிகாரேஷீ—பொறுப்புக்களில்; யுக்தை:—தெளிவுடன் ஈடுபடுவாயாக; வ:—நீ; ஸ்தம்ப—ஆணவம்; வர்ஜிதை—இன்றி.
இந்திரனே! இப்போது நீ செல்லலாம். எனது கட்டளையினை நிறைவேற்றிக் கொண்டு உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேவலோகத் தலைவன் பதவியில் இருப்பாயாக. ஆனால் அதேசமயம் ஆணவம் இன்றி அறிவிலே தெளிவுடன் இருப்பீராக.
பதம் 10.27.18
அதாஹ ஸீரபி: க்ருஷ்ணம் அபிவந்த்ய மனங்வினீ
ஸ்வ-ஸந்தானைர் உபாமந்த்ரய கோப-ரூபிணம் ஈஸ்வரம்
அத—பிறகு; ஆஹ—கூறினார்; ஸீரபி:—பசுக்களின் தாயான சுரபி; க்ருஷ்ணம்—கிருஷ்ணரிடம்; அபிவந்த்ய—மரியாதை செய்து; மனஸ்வினீ—மனதில் அமைதியுடன்; ஸ்வ-ஸந்தானை:—அவளது வாரிசுகளான பசுக்களுடன்; உபாமந்த்ரய—அவரது கவனத்தினை வேண்டினாள்; கோப-ரூபிணம்—ஆயர்குலச் சிறுவனாகத் தோன்றியுள்ள; ஈஸ்வரம்—பரமபுருஷ பகவான்.
பிறகு அன்னை சுரபி தனது வாரிசுகளான பசுக்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணருக்கு வந்தனம் செய்தாள். தனது முன்னே ஆயர்குலச் சிறுவனாக அமர்ந்திருக்கும் முழுமுதற்கடவுளிடம் அவள் மிகவும் மரியாதையுடன் அவரது கவனத்தினை அவர் தம்மீது வைக்குமாறு வேண்டிக் கொண்டாள்.
பதம் 10.27.19
ஸீரபிர் உவாச
க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-யோகின் விஸ்வாத்மன் விஸ்வ-ஸம்பவ
பவதா லோக-நாதேன ஸ-நாதா வயம் அச்யுத
ஸீரபி: உவாச—சுரபி கூறினாள்; க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா; மஹா-யோகின்—மகாயோகியே; விஸ்வ-ஆத்மன்—ஓ விஸ்வாத்மாவே; விஸ்வ-ஸம்பவ—ஓ, பிரபஞ்சத்தின் மூலாதாரமே; பவதா—உம்மால்; லோக-நாதேன—லோக நாதனே; ஸ-நாதா:—தலைவராக; வயம்—நாங்கள்; அச்யுத—ஓ, குற்றமற்றவரே.
அன்னை சுரபி கூறினாள்: ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா, மகா யோகியே! ஒ, இப்பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும், ஆதாரமாகவும் இருப்பவரே! நீரே இவ்வுலகின் தலைவர், ஓ, குற்றமற்றவரே, உமது கருணையினாலேயே நாங்கள் உம்மை எமது தலைவராக அடையப் பெற்றிருக்கின்றோம்.
பதம் 10.27.20
த்வம் ந: பரமகம் தைவம் த்வம் ந இந்த்ரோ ஜகத்-பதே
பவாய பவ கோ-விப்ர தேவானாம் யே ச ஸாதவ:
த்வம்—நீர்; ந:—எமது; பரமகம்—பரமன்; தைவம்—தெய்வம்; த்வம்—நீர்; ந:—எனது; இந்த்ர:—பகவான் இந்திரன்; ஜகத்-பதே—ஓ, பிரபஞ்சத்தின் தலைவரே; பவாய—நலனுக்காக; பவ—இருப்பீராக; கோ—பசுக்களின்; விப்ர—அந்தணர்களின்; தேவானாம்—தேவர்களின்; யே—இவர்கள்; ச—மற்றும்; ஸாதவ:—முனிவர்கள்.
நாங்கள் வணங்கும் தெய்வம் நீரே. ஆகையினால் ஓ, பிரபஞ்ச நாதனே! நீர், பசுக்கள், அந்தணர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்ற எங்கள் அனைவருக்கும் இந்திரன் ஆவீராக.
பதம் 10.27.21
இந்த்ரம் நஸ் த்வாபிஷேக்ஷ்யாமோ ப்ரஹ்மணா சோதிதா வயம்
அவதீர்ணோ ‘ஸி விஸ்வாத்மன் பூமேர் பாராபனுத்தயே
இந்திரம்—இந்திரனாக; ந:—எமது; அபிஷேக்ஷ்யாம:—முடிசூட்டு விழாவிற்கான மங்கள நீராட்டினைச் செய்வோம்; ப்ரஹ்மணா—பிரம்ம தேவனால்; சோதிதா:—கட்டளையிடப்பட்டு; வயம்—நாங்கள்; அவதீர்ண:-அஸி—நீர் அவதரித்திருக்கின்றீர்; விஸ்வ-ஆத்மன்—ஓ, பிரபஞ்சத்தின் ஆத்மாவே; பூமே:—பூமியின்; பார—பாரம்; அபனுத்தயே—குறைப்பதற்காக.
பிரம்மதேவனின் கட்டளையின்படி ‘நீரே எமது இந்திரன்’ என்று முடிசூட்டுவதற்கான மங்கள நீராட்டினை நாங்கள் உமக்குச் செய்வோம். ஓ, பிரபஞ்சத்தின் ஆத்மாவே! பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவே நீர் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றீர்.
பதங்கள் 10.27.22 – 10.27.23
ஸ்ரீ-ஸீக உவாச
ஏவம் க்ருஷ்ணம் உபாமந்த்ரய ஸீரபி: பயஸாத்மன:
ஜலைர் ஆகாஸ-கங்காயா ஜராவத-கரோத்ருதை:
இந்த்ர ஸீரர்ஷிபி: ஸாகம் சோதிதோ தேவ-மாத்ருபி:
அப்யஸிஞ்சத தாஸார்ஹம் கோவிந்த இதி சாப்யதாத்
ஸ்ரீ-ஸீக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; உபாமந்த்ரய—வேண்டிக் கொண்டு; ஸீரபி:—அன்னை சுரபி; பயஸா—பாலுடன்; ஆத்மன:—அவனது; ஜலை:—நீருடன்; ஆகாஸ-கங்காயா:—ஆகாயகங்கையின் (மந்தாகினியின்); ஐராவத—இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானையின்; கர—தும்பிக்கையினால்; உத்ருதை:—சுமந்து; இந்த்ர:—தேவேந்திரன்; ஸீர—தேவர்களால்; ருஷிபி:—மாமுனிவர்களின்; ஸாகம்—உடன்; சோதிதோ—கட்டளையிடப்பட்ட; தேவ—தேவர்களின்; மாத்ருபி:—அன்னையர்கள் (அதிதியின் தலைமையில்); அப்ய ஸிஞ்சத—அவன் நீராட்டினான்; தாஸார்ஹம்—தாஸார்ஹ மன்னனின் வழித்தோன்றலான பகவான் கிருஷ்ணர்; கோவிந்த: இதி—கோவிந்தனாக; ச—மற்றும்; அப்யதாத்—அவன் பகவானுக்குப் பெயர் சூட்டினான்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு பகவான் கிருஷ்ணரை வேண்டிக் கொண்ட அன்னை சுரபி தனது பாலினால் அவருக்கு மங்கள நீராட்டு செய்வித்தாள். அதிதி மற்றும் பிற அன்னையர்களால் கட்டளையிடப்பட்ட இந்திரனும் ஆகாய கங்கையின் நீரைத் தனது வாகனமான ஐராவதம் என்னும் யானையின் தும்பிக்கையில் சுமந்து வரச் செய்து அந்நீரைக் கொண்டு பகவானுக்கு மங்கள நீராட்டு செய்வித்தான். இவ்வாறு தேவர்கள் மற்றும் மாமுனிவர்களின் துணையுடன் இந்திரன் தாஸார்ஹ குலத்தைச் சேர்ந்த பகவான் கிருஷ்ணருக்கு முடிசூட்டி அவருக்குக் கோவிந்தன் என்னும் நாமமும் அளித்தான்.
பதம் 10.27.24
தத்ராகதாஸ் தும்புரு-நாரதாதயோ
கந்தர்வ-வித்யாதர-ஸித்த-சாரணா:
ஜகுர் யஸோ லோக-மலாபஹம் ஹரே:
ஸீராங்கனா: ஸன்னன்ருதுர் முதான்விதா:
தத்ர—அந்த இடத்திற்கு; ஆகதா:—வந்தனர்; தும்புரு—தும்புரு என்னும் கந்தர்வன்; நாரத—நாரத முனிவர்; ஆதய:—மற்றும் பிற தேவர்கள்; கந்தர்வ-வித்யாதர-ஸித்த-சாரணா:—கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள்; ஜகு:—பாடினர்; யஸ:—கீர்த்திகளை; லோக—இவ்வுலகம் முழுவதும்; மல—மாசு; அபஹம்—அது நீக்கியது; ஹரே:—பகவான் ஹரியின்; ஸீர—தேவர்களின்; அங்கனா:—மனைவியர்; ஸன்னன்ருது:—சேர்ந்து ஆடினர்; முதா அன்விதா:—மகிழ்ச்சியுடையோராக.
தும்புரு, நாரதர், மற்றும் பிற கந்தர்வர்கள் போன்றோர் வித்யாதரர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களுடன் சேர்ந்து இவ்வுலகம் முழுவதையும் தூய்மை செய்யும், பகவான் ஹரியின் கீர்த்திகளை இசைப்பதற்கு அங்கே வந்து கூடினர். மேலும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட தேவர்களின் மனைவியர் பகவானைக் கௌரவிக்கும் பொருட்டு அவ்விசைக்கேற்ப நர்த்தனமாடினர்.
பதம் 10.27.25
தம் துஷ்டுவுர் தேவ-நிகாய-கேதவோ
ஹி அவாகிரம்ஸ் சாத்புத-புஷ்ப-வ்ருஷ்டிபி:
லோகா: பராம் நிர்வ்ருதிம் ஆப்னுவம்ஸ் த்ரயோ
காவஸ் ததா காம் அனயன் பயோ-த்ருதாம்
தம்—அவரை; துஷ்டுவு:—போற்றினார்; தேவ-நிகாய—தேவர்கள் அனைவரும்; கேதவ:—மிகவும் முக்கியமான; ஹி—உண்மையில்; அவாகிரன்—அவர்கள் அவரை மூடினர்; ச—மற்றும்; அத்புத—அற்புதமான; புஷ்ப—மலர்களின்; வ்ருஷ்டிபி:—மாரியுடன்; லோகா:—உலகங்கள்; பராம்—பரம; நிர்வ்ருதிம்—திருப்தி; ஆப்னுவன்—எய்தப் பெற்றனர்; த்ரய:—மூன்று; காவ:—பசுக்கள்; ததா—பின்னர்; காம்—பூமியை; அனயன்—கொண்டு வந்தன; பய:—தமது பாலினால்; த்ருதாம்—நனைப்பதற்கு.
மிகவும் முக்கியமான தேவர்கள் பகவானின் கீர்த்திகளைப் போற்றிப்பாடி அற்புத நறுமண மலர்களை அவரைச் சுற்றித் தூவினர். மூவுலகங்களும் பரம திருப்தியுற்றன. பசுக்கள் புவியின் மேற்பரப்பினைத் தமது பாலினால் நனைத்தன.
பதம் 10.27.26
நானா-ரஸௌகா: ஸரிதோ வ்ருக்ஷா ஆஸன் மது-ஸ்ரவா:
அக்ருஷ்ட-பச்யௌஷதயோ கிரயோ ‘பிப்ரன் உன் மணீன்
நானா—பல்வேறு; ரஸ—ரஸங்கள்; ஓகா:—பெருகின; ஸரித:—நதிகள்: வ்ருக்ஷா:—மரங்கள்; ஆஸன்—ஆயின; மது—இனிமையான சாறுடன்; ஸ்ரவா:—பொங்கிப்பிரவகித்தல்; அக்ருஷ்ட—பயிர் செய்யாமலேயே; பச்ய—முதிர்ந்தன; ஒளஷதய:—தாவரங்கள்; கிரய:—மலைகள்; அபிப்ரன்—சுமந்தன; உத்—நிலமட்டத்திற்கு மேல்; மணின்—மணிகள்.
பல்வேறு வகையான இனிய சுவையுடைய ரஸங்களுடன் நதிகள் பெருக்கெடுத்து ஓடின. மரங்கள் தேனைப் பொங்கிப் பிரவகித்தன. உணவிற்கான தாவரங்கள் பயிர் செய்யாமலேயே விளைந்தன. மற்றும் மலைகள் தமக்குள்ளே மறைத்து வைத்திருந்த நவரத்தினங்களை அளித்தன.
பதம் 10.27.27
க்ருஷ்ணே ‘பிஷிக்த ஏதானி ஸர்வாணி குரு-நந்தன
நிர்வைராணி அபவம்ஸ் தாத க்ரூராணி அபி நிஸர்கத:
க்ருஷ்ணே—பகவான் கிருஷ்ணர்; அபிஷிக்தே—மங்கள நீராட்டப்பட்டவுடன்; ஏதானி—இவை; ஸர்வாணி—அனைத்தும்; குரு-நந்தன—குருநந்தன; நிர்வைராணி—பகைமை ஒழிந்தன; அபவன்—ஆயின; தாத—அன்பிற்குரிய பரீக்ஷித்துவே; க்ரூராணி—கொடிய; அபி—இருந்த போதிலும்; நிஸர்கத:—இயற்கையினால்.
ஓ, குருகுலத்தின் சிறந்த பரீக்ஷித்துவே! பகவான் கிருஷ்ணரின் மங்கள நீராட்டு விழாவினால், எல்லா உயிர்களும்! குறிப்பாக இயற்கையிலேயே கொடிய தன்மையுடைய உயிர்களுங்கூட முற்றிலும் பகைமை ஒழிந்தன.
பதம் 10.27.28
இதி கோ-கோகுல-பதிம் கோவிந்தம் அபிஷிச்ய ஸ:
அனுஜ்ஞாதோ யயெள ஸக்ரோ வ்ருதோ தேவாதிபிர் திவம்
இதி—இவ்வாறு; கோ—பசுக்களின்; கோ-குல—கோகுலத்தின்; பதிம்—தலைவர்; கோவிந்தம்—பகவான் கிருஷ்ணர்; அபிஷிச்ய—நீராட்டி; ஸ:—அவன் இந்திரன்; அனுஜ்-ஞாத:—அனுமதிபெற்று; யயெள—சென்றான்; ஸக்ர:—தேவேந்திரன்; வ்ருத:—சூழ; தேவ-ஆதிபி:—தேவர்களும், பிறரும்; திவம்—சொர்க்கத்திற்கு
பசுக்கள் மற்றும் ஆயர்குலத்தினரின் தலைவரான பகவான் கோவிந்தனை மங்கள நீராட்டிய பிறகு தேவேந்திரன் பகவானிடம் அனுமதி பெற்றுத் தேவர்களும், பிற மேன்மக்களும் பின் தொடரத் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “தேவேந்திரனும் அன்னை சுரபியும் வழிபடுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.