அத்தியாயம் – 24
பகவானின் மச்ச அவதாரம்
பதம் 8.24.1
ஸ்ரீ-ராஜோவாச
பகவாஞ் ச்ரோதும் இச்சாமி ஹரேர் அத்புத-கர்மண:
அவதார-கதாம் ஆத்யாம் மாயா-மத்ஸ்ய-விடம்பனம்
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரே; ஸ்ரோதும்—கேட்க; இச்சாமி—நான் விரும்புகிறேன்; ஹரே:—பரமபுருஷ பகவானாகிய ஹரியின்; அத்புத-கர்மண:—அற்புதச் செயல்களைக் கொண்ட; அவதார-கதாம்—அவதார லீலைகளை; ஆத்யாம்—முதலாவதாக; மாயா-மத்ஸ்ய-விடம்பனம்—ஒரு மீனைப் போலவே காட்சியளித்த.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பரமபுருஷ பகவானாகிய ஹரி எப்பொழுதும் தெய்வீக நிலையிலேயே இருப்பவராவார். இருப்பினும் அவர் இந்த ஜட உலகிற்கு வந்து, தம்மை பல்வேறு அவதாரங்களில் வெளிப்படுத்துகின்றார். மாபெரும் மீனாகத் தோன்றியது அவரது முதல் அவதாரமாகும். பெரும் சக்தி படைத்தவரான சுகதேவ கோஸ்வாமியே, அந்த மீன் அவதாரத்தின் லீலைகளைப் பற்றி தங்களிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.
பதங்கள் 8.24.2 – 8.24.3
யத்-அர்தம் அததாத் ரூபம் மாத்ஸ்யம் லோக-ஜுகுப்ஸிதம்
தம:-ப்ரக்ருதி-துர்மர்ஷம் கர்ம-க்ரஸ்த இவேஸ்வர:
ஏதன் நோ பகவன் ஸர்வம் யதாவத் வக்தும் அர்ஹஸி
உத்தமஸ்லோக-சரிதம் ஸர்வ-லோக-ஸுகாவஹம்
யத்-அர்தம்—எந்த நோக்கத்திற்காக; அததாத்—ஏற்றார்; ரூபம்—ரூபத்தை; மாத்ஸ்யம்—ஒரு மீனின்; லோக-ஜுகுப்ஸிதம்—நிச்சயமாக இவ்வுலகில் மிகவும் அனுகூலமாக இல்லாத; தம:—அறியாமைக் குணத்தில்; ப்ரக்ருதி—அத்தகைய செயல்; துர்மர்ஷம்—நிச்சயமாக மிகவும் துன்பகரமானதும், உபயோகமற்றதுமான; கர்ம-க்ரஸ்த:—கர்ம விதிகளுக்கு உட்பட்ட ஒருவர்; இவ—போல்; ஈஸ்வர:—பரமபுருஷ பகவான்; ஏதத்—இவ்வெல்லா உண்மைகளையும்; ந:—எங்களுக்கு; பகவான்—பெரும் சக்திவாய்ந்த முனிவரே; ஸர்வம்—அனைத்தையும்; யதாவத்—முறையாக; வக்தும் அர்ஹஸி—அன்புடன் விவரிப்பீராக; உத்தமஸ்லோக-சரிதம்—பரமபுருஷ பகவானின் திருவிளையாடல்களை; ஸர்வ-லோக-ஸுக-ஆவஹம்—எதைப் பற்றி கேட்பதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்களோ.
கர்ம விதிகளுக்கு உட்பட்ட சாதாரண ஜீவராசி வெவ்வேறு உருவங்களை ஏற்பதைப் போலவே, எதற்காக பரமபுருஷ பகவானும் வெறுக்கத்தக்கதான ஒரு மீனின் வடிவத்தை ஏற்றார்? ஒரு மீனின் வடிவம் நிச்சயமாக உபயோகமற்றதும், பயங்கரமான துன்பங்கள் நிறைந்ததுமாகும். கணம் பொருந்தியவரே, இந்த அவதாரத்தின் நோக்கமென்ன? பகவானுடைய லீலைகளைப் பற்றி கேட்பதானது அனைவருக்கும் மங்களம் அளிப்பதாகும். எனவே அன்புடன் இதை எங்களுக்கு விவரிப்பீராக.
பதம் 8.24.4
ஸ்ரீ-ஸூத உவாச
இதி உக்தோ விஷ்ணு-ராதேன பகவான் பாதராயணி:
உவாச சரிதம் விஷ்ணோர் மத்ஸ்ய-ரூபேண யத் க்ருதம்
ஸ்ரீ-ஸூத உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; இதி-உக்த:—இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டதால்; விஷ்ணு-ராதேன—விஷ்ணுராதர் எனப்படும் பரீட்சித்து மகாராஜனால்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; பாதராயணி:—வியாசதேவரின் புதல்வரான சுகதேவ கோஸ்வாமி; உவாச—கூறினார்; சரிதம்—திருவிளையாடல்களை; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; மத்ஸ்ய-ரூபணே—மீனின் வடிவிலிருந்த அவரால்; யத்—அனைத்தையும்; க்ருதம்—செய்யப்பட்டவை.
சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜன் இவ்வாறு சுகதேவ கோஸ்வாமியிடம் விசாரித்தபோது, சக்திவாய்ந்தவரான அம்முனிவர், ஒரு மீனாக அவதரித்த பகவானின் லீலைகளை விவரிக்கத் துவங்கினார்.
பதம் 8.24.5
ஸ்ரீ-சுக உவாச
கோ-விப்ர-ஸுர-ஸாதூனாம் சந்தஸாம் அபி சேஸ்வர:
ரக்ஷாம் இச்சம்ஸ் தனூர் தத்தே தர்மஸ்யார்தஸ்ய சைவ ஹி
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கோ—பசுக்களையும்; விப்ர—பிராமணர்களையும்; ஸுர—தேவர்களையும்; ஸாதூனாம்—மற்றும் பக்தர்களையும்; சந்தஸாம் அபி—வேத நூல்களையும் கூட; ச—மேலும்; ஈஸ்வர:—பரம ஆளுனர்; ரக்ஷாம்—பாதுகாக்க; இச்சன்—விரும்பி; தனூ:-தத்தே—அவதார ரூபங்களை ஏற்கிறார்; தர்மஸ்ய—மதக் கொள்கைகளையும்; அர்தஸ்ய—வாழ்வுக்குரிய நோக்கத்தை நிறைவேற்றும் கொள்கைகளையும்; ச—மேலும்; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பசுக்களையும், பிராமணர்களையும், தேவர்களையும், பக்தர்களையும், வேத நூல்களையும், மதக் கொள்கைகளையும் மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய கொள்கைகளையும் பாதுகாப்பதற்காக பரமபுருஷ பகவான் அவதார ரூபங்களை ஏற்கிறார்.
பதம் 8.24.6
உச்சாவசேஷு பூதேஷு சரன் வாயுர் இவேஸ்வர:
நோச்சாவசத்வம் பஜதே நிர்குணத்வாத் தியோ குணை:
உச்ச அவசேஷு—உயர்வான அல்லது தாழ்வான உடல் வடிவங்களுடைய; பூதேஷு—ஜீவராசிகளுக்கு இடையில்; சரன்—நடந்துக் கொள்ளும்; வாயு: இவ—காற்றைப் போலவே; ஈஸ்வர:—பரமபுருஷர்; ந—இல்லை; உச்ச-அவசத்வம்—வாழ்வின் உயர்ந்த அல்லது தாழ்ந்த படிகளின் சுபாவத்தை; பஜதே—ஏற்கிறார்; நிர்குணத்வாத்—எல்லா பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டு தெய்வீக நிலையில் இருப்பதால்; திய:—பொதுவாக; குணை:—ஜட இயற்கைக் குணங்களால்.
காற்று வெவ்வேறு வகையான சூழ்நிலைகளுக்குள் புகுந்து செல்கிறது. அதைப்போலவே, பரமபுருஷ பகவான் சில சமயங்களில் ஒரு மனிதராகவும் சில சமயங்களில் ஒரு தாழ்ந்த மிருகமாகவும் தோன்றினாலும், அவர் எப்பொழுதும் தெய்விக நிலையிலேயே இருக்கிறார். அவர் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவராக இருப்பதால், உயர்ந்ததும் தாழ்ந்ததுமான உருவங்களால் அவர் பாதிப்படைவதில்லை.
பதம் 8.24.7
ஆஸீத் அதீத-கல்பாந்தே ப்ராஹ்மோ நைமித்திகோ லய: ஸமுத்ரோபப்லுதாஸ் ததா லோகா பூர்-ஆதயோ ந்ருப
ஆஸீத்—இருந்தது; அதீத—கடந்த; கல்ப-அந்தே—கல்ப முடிவில்; ப்ராஹ்ம:—பிரம்ம தேவருடைய பகற்பொழுதின்; நைமித்திக:—அதனால்; லய:—வெள்ளப் பெருக்கு; ஸமுத்ர—சமுத்திரத்தில்; உபப்லுதா:—மூழ்கடிக்கப்பட்டன; தத்ர—அங்கு; லோகா:—எல்லாக் கிரகங்களும்; பூ:—ஆதய:—பூர், புவர் மற்றும் ஸ்வர் எனும் மூன்று லோகங்களும்; ந்ருப—ராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, கடந்த யுகத்தின் முடிவில், பிரம்ம தேவருடைய பகலின் முடிவான இரவு நேரத்தில், அவர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவதால், பிரளயம் ஏற்பட்டு, மூவுலகங்களும் சமூத்திர நீரால் மூழ்கடிக்கப்பட்டன.
பதம் 8.24.8
காலேனாகத-நித்ரஸ்ய தாது: சிசயிஷோர் பலீ
முகதோ நிஹ்ஸ்ருதான் வேதான் ஹயக்ரீவோ ‘ன்திகே ‘ஹரத்
காலேன—காலத்தினால் (பிரம்மாவினுடைய பகலின் முடிவில்); ஆகத-நித்ரஸ்ய—உறக்கம் வருவது போல் இருப்பதை அவர் உணர்ந்த போது; தாது:—பிரம்மாவின்; சிசயிஷோ:—படுத்துறங்க விரும்பி; பலீ—மிகவும் சக்திவாய்ந்த; முகத:—வாயிலிருந்து; நிஹ்ஸ்ருதான்—வெளிவரும்; வேதான்—வேத அறிவை; ஹயக்ரீவ:—ஹயக்ரீவன் எனும் பெரும் அசுரன்; அந்திகே—அருகில்; அஹரத்—திருடிச் சென்றான்.
பிரம்மாவினுடைய மனுவின் முடிவில், உறக்கம் வருவது போல் இருப்பதை உணர்ந்த பிரம்மா கீழே படுத்துறங்க விரும்பினார். அப்போது அவரது வாயிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த வேதத்தை (வேத அறிவை) ஹயக்ரீவன் எனும் பெரும் அசுரன் திருடிச் சென்றான்.
பதம் 8.24.9
ஞாத்வா தத் தானவேந்ரஸ்ய ஹயக்ரீவஸ்ய சேஷ்டிதம்
ததார சஃபரீ-ரூபம் பகவான் ஹரிர் ஈஸ்வர:
ஞாத்வா—புரிந்து கொண்ட பின்; தத்—அந்த; தானவ-இந்ரஸ்ய—பெரும் அசுரனின்; ஹயக்ரீவஸ்ய—ஹயக்ரீவனின்; சேஷ்டிதம்—செயலை; ததார—ஏற்றார்; சஃபரீ-ரூபம்—ஒரு மீனின் வடிவத்தை; பகவான்—பரமபுருஷ பகவான்; ஹரி:—பகவான்; ஈஸ்வர:—பரம ஆளுனராகிய.
சர்வ ஐசுவரியங்கள் நிறைந்த முழுமுதற் கடவுளாகிய ஹரி, பெரிய அசுரனான ஹயக்ரீவனின் செயல்களை அறிந்து, ஒரு மீனின் வடிவத்தை ஏற்று, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார்.
பதம் 8.24.10
தத்ர ராஜ-ரிஷி: கஸ்சின் நாம்னா ஸத்யவ்ரதோ மஹான்
நாராயண-பரோ ‘தபத் தப: ஸ ஸலிலாசன:
தத்ர—அது சம்பந்தமாக; ராஜ-ரிஷி:—பெரும் முனிவருக்குச் சமமான தகுதிகளைப் பெற்ற ஓரரசர்; கஸ்சித்—ஒருவர்; நாம்னா—எனும் பெயர் கொண்ட; ஸத்யவ்ரத:—சத்தியவிரதன்; மஹான்—சிறந்த மஹானான; நாராயண பர:—பரம புருஷரான பகவான் நாராயணரின் ஒரு சிறந்த பக்தரான; அதபத்—தவங்களைச் செய்தார்; தப:—தவங்கள்; ஸ:—அவர்; ஸலில-ஆசன:—நீரை மட்டுமே பருகி.
சாக்ஷுஷ—மன்வந்தரத்தின் போது, பரமபுருஷ பகவானின் மிகச் சிறந்த பக்தரான, சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட ஒரு சிறந்த அரசர் இருந்தார். சத்தியவிரதன் நீரை மட்டுமே பருகி தவமியற்றினார்.
பதம் 8.24.11
யோ ‘ஸாவ் அஸ்மின் மஹா கல்பே தனய: ஸ விவஸ்வத:
ஸ்ரத்தாதேவ இதி க்யாதோ மனுத்வே ஹரிணார்பித:
ய:—யாரொருவர்; அஸௌ—அவர் (பரம புருஷர்); அஸ்மின்—இந்த; மஹா-கல்பே—சிறந்த யுகத்தில்; தயை:—மகன்; ஸ:—அவர்; விவஸ்வத:—தேவனின்; ஸ்ராத்ததேவ:—ஸ்ராத்ததேவர் எனும் பெயரால்; இதி—இவ்வாறாக; க்யாத:—புகழ்பெற்ற; மனுத்வே—மனுவின் பதவியில்; ஹரினா—பரமபுருஷ பகவானால்; அர்பித:—இருந்தார்.
இந்த (தற்போதைய) யுகத்தில் சத்தியவிரத மகாராஜன் பிறகு சூரிய கிரகத்தின் அரசனான விவஸ்வானின் மகனாகப் பிறந்து, ஸ்ராத்ததேவர் என்று அழைக்கப்பட்டார். பரம புருஷரின் கருணையால் அவருக்கு மனுவின் பதவி அளிக்கப்பட்டது.
பதம் 8.24.12
ஏகதா க்ருத மாலாயாம் குர்வதோ ஜல-தர்பணம்:
தஸ்யாஞ்சலி-உதகே காசிச் சஃபரி ஏகாப்யபத்யத
ஏகதா—ஒரு நாள்; க்ருதமாலாயாம்—கிருதமாலா நதிக்கரையில்; குர்வத்—நிறைவேற்றியபோது; ஜல-தர்பணம்—நீர்த்தர்ப்பணத்தை; தஸ்ய—அவரது; அஞ்சலி—கைநிறைய; உதகே—நீரில்; காசித்—ஏதோ; சஃபரீ—ஒரு சிறிய மீன்; ஏகா—ஒன்று; அப்யபத்யத—உற்பத்தி செய்யப்பட்டது.
ஒரு நாள் சத்தியவிரத மகாராஜன் கிருதமாலா நதிக்கரையில் நீர்த்தர்ப்பணம் செய்து தவமியற்றிக் கொண்டிருந்த போது, அவரது உள்ளங்கைகளில் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் தோன்றியது.
பதம் 8.24.13
ஸத்யவ்ரதோ ‘ஞ்ஜலி-கதாம் ஸஹ தோயேன பாரத
உத்ஸஸர்ஜ நதீ-தோயே சஃபரீம் த்ரவிடேஸ்வர:
ஸத்யவ்ரத:—சத்தியவிரத மகாராஜன்; அஞ்சலி-கதாம்—அரசரின் உள்ளங்கைகளில் இருந்த நீர்; ஸஹ—உடன்; தோயேன—நீர்; பாரத—பரீட்சித்து மகாராஜனே; உத்ஸஸர்ஜ—எறிந்தார்; நதீ-தோயே—நதிக்குள்; சஃபரீம்—அச்சிறிய மீனையும்; த்ரவிட-ஈஸ்வர:—திராவிட தேசத்தின் அரசரான சத்தியவிரதன்.
பரத வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, திராவிட தேசத்தின் ராஜனான சத்தியவிரதன், அவரது உள்ளங்கையில் இருந்த நீருடன் அந்த மீனையும் நதியில் எறிந்துவிட்டார்.
பதம் 8.24.14
தம் ஆஹ ஸாதிகருணம் மஹா-காருணிகம் ந்ருபம்
யா தோப்யோ ஞாதி-காதிப்யோ தீனாம் மாம் தீன-வத்ஸல
கதம் விஸ்ருஜஸே ராஜன் பீதாம் அஸ்மின் ஸரிஜ்-ஜலே
தம்—அவரிடம் (சத்தியவிரதன்); ஆஹ—கூறியது; ஸா—அச்சிறிய மீன்; அதி-கருணம்—கருணை மிக்க; மஹா-காருணிகம்—தயை மிகுந்தவரான; ந்ருபம்—சத்தியவிரத மகாராஜனிடம்; யாதோப்ய:—நீர் வாழ் இனங்களிடம்; ஞாதி-காதிப்ய:—சிறிய மீனைக் கொல்வதில் எப்பொழுதும் ஆர்வமுள்ள; தீனாம்—ஆதரவற்ற; மாம்—என்னை; தீன-வத்ஸல—ஆதரவற்றவர்களைக் காப்பவரே; கதம்—ஏன்; விஸ்ருஜஸே—நீங்கள் எறிகிறீர்கள்; ராஜன்—ராஜனே; பீதாம்—மிகவும் அஞ்சுகிறேன்; அஸ்மின்—இதற்குள்; ஸரித்-ஜலே—நதியிலுள்ள நீருக்குள்.
நிராதரவான நிலையிலிருந்த அம்மீன் மனத்தை உருக்கும் குரலில் கருணை மிக்கவரான மகாராஜனைப் பார்த்து கூறியது: எனதன்புள்ள அரசே, ஆதரவற்றவர்களைக் காப்பவரான நீங்கள் ஏன் என்னை நதியில் வீசுகிறீர்கள்? அதில் என்னைக் கொன்றுவிடக் கூடிய பிற நீர் வாழ் பிராணிகள் உள்ளனவே. அவைகளிடம் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.
பதம் 8.24.15
தம் ஆத்மனோ ‘நுக்ரஹார்தம் ப்ரீத்யா மத்ஸ்ய-வபுர்-தரம்
அஜானன் ரக்ஷணார்தாய சஃபர்யா: ஸ மனோ ததே
தம்—மீனுக்கு; ஆத்மன:—சொந்த; அனுக்ரஹ-அர்தம்—அனுக்கிரகம் செய்வதில்; ப்ரீத்யா—மிகவும் திருப்தியடைந்தார்; மத்ஸ்ய-வபு:தரம்—ஒரு மீனின் வடிவத்தை ஏற்றுள்ள பரமபுருஷ பகவான்; அஜானன்—இதைப் பற்றிய அறிவு இல்லாமல்; ரக்ஷண-அர்தாய—பாதுகாப்பு வழங்குவதற்காகவே; சஃபர்யா:—மீனுக்கு; ஸ:—அரசர்; மன:—மனதில்; ததே—முடிவு செய்தார்.
அந்த மீன் பரமபுருஷ பகவான் தான் என்பதை அறியாத சத்தியவிரத மகாராஜன், தனது திருப்திக்காக பெரு மகிழ்ச்சியுடன் அந்த மீனுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தார்.
பதம் 8.24.16
தஸ்ய தீனதரம் வாக்யம் ஆஸ்ருத்ய ஸ மஹீபதி:
கலசாப்ஸு நிதாயைனாம் தயாலுர் நின்ய ஆஸ்ரமம்
தஸ்யா:—மீனின்; தீன-தரம்—இரங்கத்தக்க; வாக்யம்—வார்த்தைகளை; ஆஸ்ருத்ய—கேட்டு; ஸ:—அந்த; மஹீ-பதி:—அரசர்; கலச-அப்ஸு—ஜாடிக்குள் இருந்த நீரில்; நிதாய—எடுத்து; ஏனாம்—மீனை; தயாலு:—கருணைமிக்கவரான; நின்யே—எடுத்து வந்தார்; ஆஸ்ரமம்—அவரது வசிப்பிடத்திற்கு.
மீனின் இரங்கத்தக்க வார்த்தைகளால் ஆட்கொள்ளப்பட்ட கருணாமூர்த்தியான அரசர், ஒரு நீர் ஜாடிக்குள் மீனை விட்டு, தனது சொந்த வசிப்பிடத்திற்கு அதை எடுத்து வந்தார்.
பதம் 8.24.17
ஸா து: தத்ரைக-ராத்ரேண வர்தமானா கமண்டலௌ அலப்த்வாத்மாவகாசம் வா இதம் ஆஹ மஹீபதிம்
ஸா—அந்த மீன்; து—ஆனால்; தத்ர—அவ்விடத்தில்; ஏக-ராத்ரேண—ஓர் இரவுக்குள்; வர்தமானா—விரிவடைந்து; கமண்டலௌ—நீர் ஜாடியில்; அலப்த்வா—பெறாமல்; ஆத்ம-அவகாசம்—அதன் உடலுக்கு சௌகரியமான ஒரு நிலையை; வா—அல்லது; இதம்—இதை; ஆஹ—கூறியது; மஹீ-பதிம்—அரசரிடம்.
ஆனால் ஓர் இரவுக்குள், நீர் ஜாடிக்குள் செளகரியமான முறையில் அதன் உடலை அசைக்க முடியாத அளவிற்கு அந்த மீன் பெரியதாக வளர்ந்து விட்டது. பிறகு அது அரசரைப் பார்த்து பின்வருமாறு கூறியது.
பதம் 8.24.18
நாஹம் கமண்டலாவ் அஸ்மின் க்ருச்ரம் வஸ்தும் இஹோத்ஸஹே
கல்பயௌக: ஸுவிபுலம் யத்ராஹம் நிவஸே ஸுகம்
ந—இல்லை; அஹம்—நான்; கமண்டலௌ—இந்த நீர் ஜாடிக்குள்; அஸ்மின்—இதில்; க்ருச்ரம்—பெருங்கஷ்டத்துடன்; வஸ்தும்—வாழ; இஹ—இங்கு; உத்ஸஹே—போல்; கல்பய—சற்று சிந்தியுங்கள்; ஓக:—வசிப்பிடத்தை; ஸு-விபுலம்—இன்னும் விரிவான; யத்ர—எங்கு; அஹம்—நான்; நிவஸே—வாழமுடியுமோ; ஸுகம்—மகிழ்ச்சியுடன்.
எனதன்புள்ள ராஜனே, இவ்வளவு பெரிய கஷ்டத்துடன் இந்த ஜாடிக்குள் வாழ நான் விரும்பவில்லை. ஆகவே, நான் செளகரியமாக வாழத்தகுந்தச் சிறந்ததொரு நீர்த் தேக்கத்தை தயவுசெய்து கொடுத்து உதவவேண்டும்.
பதம் 8.24.19
ஸ ஏனாம் தத ஆதாய ன்யதாத் ஒளதஞ்சனோதகே
தத்ர க்ஷிப்தா முஹூர்தேன ஹஸ்த-த்ரயம் அவர்தத
ஸ:—அரசர்; ஏனம்—மீனை; தத:—அதன்பிறகு; ஆதாய—வெளியே எடுத்து; ன்யதாத்—வைத்தார்; ஒளதஞ்சன-உதகே—ஒரு கிணற்றுக்குள்; தத்ர—அந்த இடத்தில்; க்ஷிப்தா—வீசப்பட்ட; முஹூர்தேன—ஒரு நொடியில்; ஹஸ்த-த்ரயம்—மூன்று முழம் நீளத்திற்கு; அவர்தத—உடனே வளர்ந்துவிட்டது.
பிறகு, நீர் ஜாடியிலிருந்து மீனை வெளியே எடுத்த அரசர், அதை ஒரு பெரிய கிணற்றுக்குள் விட்டார். ஆனால் ஒரு நொடிக்குள் அந்த மீன் மூன்று முழம் நீளத்திற்கு வளர்ந்து விட்டது.
பதம் 8.24.20
ந மே ஏதத் அலம் ராஜன் ஸுகம் வஸ்தும் உதஞ்சனம்
ப்ருது தேஹி பதம் மஹ்யம் யத் த்வாஹம் சரணம் கதா
ந—இல்லை; மே—எனக்கு; ஏதத்—இது; அலம்—பொருத்தமாக; ராஜன்—ராஜனே; ஸுகம்—மகிழ்ச்சியாக; வஸ்தும்—வாழ; உதஞ்சனம்—நீர்த்தேக்கம்; ப்ருது—மிகப் பெரிய; தேஹி—கொடுங்கள்; பதம்—ஓரிடத்தை; மஹ்யம்—எனக்கு; யத்—எது; த்வா—உங்களிடம்; அஹம்—நான்; சரணம்—சரணம்; கதா—அடைந்திருக்கிறேன்.
அந்த மீன் பிறகு கூறியது: எனதன்புள்ள ராஜனே, நான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த நீர்த்தேக்கம் பொருத்தமாக இல்லை. உங்களிடம் நான் சரணடைந்திருப்பதால், தயவுசெய்து இன்னும் பெரியதொரு நீர்த்தேக்கத்தைக் கொடுத்து உதவவேண்டும்.
பதம் 8.24.21
தத ஆதாய ஸா ராஜ்ஞா க்ஷிப்தா ராஜன் ஸரோவரே
தத் அவ்ருத்யாத்மனா ஸோ ‘யம் மஹா மீனோ ‘ன்வவர்தத
தத:—அங்கிருந்து; ஆதாய—வெளியே எடுக்கப்பட்டு; ஸா—மீன்; ராஜ்ஞா—ராஜனால்; க்ஷிப்தா—வீசப்பட்டது; ராஜன்—ராஜனே (பரீட்சித்து மகாராஜன்); ஸரோவரே—ஓர் ஏரியில்; தத்—அதை; ஆவ்ருத்ய—நிரப்பியது; ஆத்மனா—உடலால்; ஸ:—மீன்; அயம்—இந்த; மஹா-மீன:—மிகப்பெரிய மீன்; அன்வவர்தத—உடனே வளர்ந்து.
பரீட்சித்து மகாராஜனே, அரசர் கிணற்றிலிருந்த மீனை எடுத்து ஓர் ஏரிக்குள் விட்டார். ஆனால் அந்த மீன் உடனே நீர்ப்பரப்பை விட மிகவும் பெரியதொரு உருவத்தை ஏற்றது.
பதம் 8.24.22
நைதன் மே ஸ்வஸ்தயே ராஜன் உதகம் ஸலிலெளகஸ:
நிதேஹி ரக்ஷா-யோகேன ஹ்ரதே மாம் அவிதாஸினி
ந—இல்லை; ஏதத்—இந்த; மே—எனக்கு; ஸ்வஸ்தயே—செளகரியமாக; ராஜன்—ராஜனே; உதகம்—நீர்; ஸலில-ஓகஸ:—நான் ஒரு பெரிய மீன் என்பதால்; நிதேஹி—விட்டுவிடுங்கள்; ரக்ஷா-யோகேன—ஏதோ ஒரு வழியில்; ஹ்ரதே—ஓர்ஏரியில்; மாம்—என்னை; அவிதாஸினி—நிலையான.
பிறகு அந்த மீன் கூறியது: ராஜனே, நான் ஒரு மிகப்பெரிய மீனாக இருக்கிறேன், அதனால் இந்நீர் எனக்குச் சிறிதும் ஏற்றதாக இல்லை. இப்போது என்னைக் காப்பாற்ற அன்புடன் ஏதேனும் வழியைக் கண்டுபிடியுங்கள். ஒருபோதும் குறைந்து விடாத ஒரு ஏரிக்குள் என்னை விட்டுவிடுவது நல்லதாக இருக்கும்.
பதம் 8.24.23
இதி உக்த: ஸோ ‘நயன் மத்ஸ்யம் தத்ர தத்ராவிதாஸினி
ஜலாசயே ‘ஸம்மிதம் தம் ஸமுத்ரே ப்ராக்ஷிபஜ் ஜஷம்
இதி உக்த:—இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதால்; ஸ:—அந்த அரசர்; அனயத்—கொண்டு வந்தார்; மத்ஸ்யம்—மீனை; தத்ர—அங்கு; தத்ர—அந்த இடத்திற்கு; அவிதாஸினி—நீர் ஒருபோதும் குறைந்துவிடாமல் இருக்கும்; ஜல-ஆசயே—நீர்த்தேக்கத்தில்; அஸம்மிதம்—எல்லையற்ற; தம்—மீனை; ஸமுத்ரே—சமுத்திரத்தில்; ப்ராக்ஷிபத்—விட்டார்; ஜஷம்—மிகப்பெரிய மீனை.
இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதும், சத்தியவிரதன் மீனை மிகப்பெரிய நீர்த்தேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். ஆனால் அதுவும் கூட போதவில்லை என்று நிரூபிக்கப்பட்டபோது, இறுதியாக அரசர் பிரம்மாண்டமான அம்மீனை சமுத்திரத்தில் விட்டுவிட்டார்.
பதம் 8.24.24
க்ஷிப்யமாணஸ் தம் ஆஹேதம் இஹ மாம் மகராதய:
அதந்தி அதிபலா வீர மாம் நேஹோத்ஸ்ரஷ்டும் அர்ஹஸி
க்ஷிப்யமாண:—சமுத்திரத்தில்விடப்பட்ட; தம்—அரசரிடம்; ஆஹ—அந்த மீன் கூறியது; இதம்—இந்த; இஹ—அந்த இடத்தில்; மாம்—என்னை; மகர-ஆதய:—சுறா மீன்களைப் போன்ற பயங்கரமான கடல்வாழ் பிராணிகள்; அதந்தி—தின்று விடும்; அதி-பலா:—அதிக பலம் வாய்ந்தவையாக இருப்பதால்; வீர—வீரமுள்ள ராஜனே; மாம்—என்னை; ந—இல்லை; இஹ—இந்நீரில்; உத்ஸ்ரஷ்டும்—வீசிவிட; அர்ஹஸி—நீங்கள் தகுதியுடையவர்.
சமுத்திரத்தில் வீசப்படும்போது, அந்த மீன் சத்தியவிரத மகாராஜனிடம் கூறியது: வீரமுள்ளவரே, இந்நீரில் என்னைத் தின்று விடக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த அபாயகரமான சுறா மீன்கள் உள்ளன. ஆகவே இவ்விடத்தில் என்னை நீங்கள் எறிந்து விடக்கூடாது.
பதம் 8.24.25
ஏவம் விமோஹிதஸ் தேன வததா வல்கு பராதீம்
தம் ஆஹ கோ பவான் அஸ்மான் மத்ஸ்ய ரூபேண மோஹயன்
ஏவம்—இவ்வாறு; விமோஹித:—திகைப்படைந்த தேன—மீனால்; வததா—பேசப்பட்ட; வல்கு-பாரதீம்—இனிய சொற்களால்; தம்—அவரிடம்; ஆஹ—கூறினார்; க:—யார்; பவான்—நீங்கள்; அஸ்மான்—எங்களை; மத்ஸ்ய-ரூபேண—ஒரு மீனின் வடிவில்; மோஹயன்—குழப்பும்.
ஒரு மீனின் வடிவிலுள்ள பரம புருஷரிடமிருந்து இனிமையான இச்சொற்களைக் கேட்ட பின், குழம்பிப்போன அரசர், அவரிடம் வினவினார். ஐயா நீங்கள் யார்? எங்களை நீங்கள் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டீர்களே!
பதம் 8.24.26
நைவம் வீர்யோ ஜலசரோ த்ருஷ்டோ ‘ஸ்மாபி: ஸ்ருதோ ‘பி வா
யோ பவான் யோஜன-சதாம் அஹ்னாபிவ்யானசே ஸர:
ந—இல்லை; ஏவம்—இவ்வாறு; வீர்ய:—சக்திவாய்ந்த; ஜல-சர:—நீர்வாழ் பிராணியை; த்ருஷ்ட:—காணப்பட்டதோ; அஸ்மாபி:—எங்களால்; ஸ்ருத: அபி—அல்லது கேட்கப்பட்டதோ; வா—அல்லது; ய:—யார்; பவான்—பெருமானாகிய தாங்கள்; யோஜன-சதம்—நூற்றுக்கணக்கான மைல்கள்; அஹ்னா—ஒரே நாளில்; அபிவ்யானசே—விரிவடையும்; ஸர:—நீரை.
எம்பெருமானே, ஒரே நாளில் தாங்கள் நதி நீரையும், சமுத்திர நீரையும் நிரப்பிவிடும் வகையில், தங்களை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு விரிவடையச் செய்திருக்கிறீர்கள். இதற்கு முன் இத்தகைய ஒரு நீர்வாழ்ப் பிராணிகளை நாங்கள் கண்டதோ அல்லது கேள்விப்பட்டதோ இல்லை.
பதம் 8.24.27
நூனம் த்வம் பகவான் ஸாக்ஷாத் தரிர் நாராயணோ ‘வ்யய:
அனுக்ரஹாய பூதானாம் தத்ஸே ரூபம் ஜ லௌகஸாம்
நூனம்—நிச்சயமாக; த்வம்—தாங்கள் (தான்); பகவான்—பரமபுருஷபகவான்; ஸாக்ஷாத்—நேரடியாக; ஹரி:—பகவான்; நாராயண:—முழுமுதற் கடவுள்; அவ்யய:—வற்றாத; அனுக்ரஹாய—கருணை காட்டுவதற்கு; பூதானாம்—அனைத்து ஜீவராசிகளுக்கும்; தத்ஸே—தாங்கள் ஏற்றிருக்கிறீர்கள்; ரூபம்—ஓர் உருவத்தை; ஜல-ஓகஸாம்—ஒரு நீர் வாழ்ப் பிராணியைப் போன்ற.
எம்பெருமானே, தாங்கள் வற்றாதவரும், முழுமுதற் கடவுளுமாகிய நாராயணர், ஸ்ரீ ஹரி என்பதில் சந்தேகமில்லை. ஜீவராசிகளிடம் தங்களுடைய கருணையைக் காட்டுவதற்காகத்தான் தாங்கள் இப்போது நீர் வாழ்ப் பிராணியின் ஓர் உருவத்தை ஏற்றிருக்கிறீர்கள்.
பதம் 8.24.28
நமஸ்தே புருஷ-ஸ்ரேஷ்ட ஸ்திதி-உத்பத்தி-அப்யயேஸ்வர
பக்தானாம் ந: ப்ரபன்னானாம் முக்யோ ஹி ஆத்ம-கதிர் விபோ
நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; தே—தங்களுக்கு; புருஷ-ஸ்ரேஷ்ட—அனைத்து ஜீவாசிகளிலும், அனைத்து அனுபவிப்பாளர்களிலும் மிகச் சிறந்தவரான; ஸ்திதி—காத்தலின்; உத்பத்தி—படைத்தலின்; அப்யய—மற்றும் அழித்தலின்; ஈஸ்வர—பரமபுருஷர்; பக்தானாம்—தங்களது பக்தர்களின்; ந:—எங்களைப் போன்ற; ப்ரபன்னானாம்—சரணடைந்துள்ள இருப்பவர்கள்; முக்ய:—பரம; ஹி—உண்மையில்; ஆத்ம-கதி:—பரம கதி அல்லது இலக்கு; விபோ—பகவான் விஷ்ணு.
எம்பெருமானே, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் எஜமானரே, மிகச்சிறந்த அனுபவிப்பாளரான பகவான் விஷ்ணுவே, எங்களைப் போன்ற சரணடைந்துள்ள பக்தர்களுக்குத் தாங்கள் தான் தலைவராவீர். நாங்கள் சென்றடைய வேண்டிய இலக்கும் தாங்கள்தான். எனவே எனது பணிவான வணக்கங்களை தங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.24.29
ஸர்வே லீலாவதாராஸ் தே பூதானாம் பூதி-ஹேதவ:
ஞாதும் இச்சாமி அதோ ரூபம் யத்-அர்தம் பவதா த்ருதம்
ஸர்வே—அனைத்து; லீலா—லீலைகளும்; அவதாரா:—அவதாரங்களும்; தே—பெருமானாகிய தங்களின்; பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்; பூதி—செழிப்பான ஒரு சூழ்நிலைக்கான; ஹேதவ:—காரணங்களே; ஞாதும்—அறிய; இச்சாமி—நான் விரும்புகின்றேன்; அத:—இந்த; ரூபம்—உருவம்; யத்-அர்தம்—என்ன நோக்கத்திற்காக; பவதா—பெருமானாகிய தங்களால்; த்ருதம்—ஏற்கப்பட்டது.
தங்களுடைய லீலைகளும், அவதாரங்களும் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவே தோன்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆகவே எம்பெருமானே, இந்த மீன் வடிவத்தை தாங்கள் ஏற்றிருப்பதன் நோக்கத்தை அறிய நான் விரும்புகிறேன்.
பதம் 8.24.30
ந தே ‘ரவிந்தாக்ஷ பதோபஸர்பணம்
ம்ருஷா பவேத் ஸர்வ-ஸுஹ்ருத்-ப்ரியாத்மன:
யதேதரேஷாம் ப்ருதக்-ஆத்மனாம் ஸதாம்
அதீத்ருசோ யத் வபுர் அத்புதம் ஹி ந:
ந—ஒருபோதும் இல்லை; தே—பெருமானாகிய தங்களின்; அரவிந்த-அக்ஷ—தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய பகவானே; பத உபஸர்பணம்—தாமரைப் பாதங்களின் வழிபாடு; ம்ருஷா—உபயோகமற்றது; பவேத்—ஆக முடியும்; ஸர்வ-ஸுஹ்ருத்—அனைவருக்கும் நண்பராக; ப்ரிய—அனைவருக்கும் பிரியமானவராக; ஆத்மன:—அனைவருக்கும் பரமாத்மாவாகவும்; யதா—போல்; இதரேஷாம்—மற்றவர்களின் (தேவர்களின்); ப்ருதக்-ஆத்மனாம்—ஆத்மாவிலிருந்து வேறுபட்டதான ஜட உடல்களைக் கொண்ட ஜீவராசிகள்; ஸதாம்—ஆன்மீக வாழ்வில் நிலைத்தவர்களின்; அதீத்ருச:—தாங்கள் தோன்றச் செய்திருக்கிறீர்கள்; யத்—அந்த; வபு:—உடலை; அத்புதம்—அற்புதமான; ஹி—உண்மையில்; ந:—எங்களுக்கு.
தாமரை இதழ்களைப் போன்ற கண்களைப் பெற்றுள்ள எம்பெருமானே, தேகாபிமானத்தில் உள்ளவர்களான தேவர்களின் வழிபாடு எல்லா விதத்திலும் பலனற்றதாகும். ஆனால் அனைவருக்கும் பரம நண்பராகவும், மிகப்பிரியமான பரமாத்மாவாகவும் இருப்பவர் தாங்கள்தான் என்பதால், தங்களுடைய தாமரைப் பாதங்களை வழிபடுவதென்பது ஒருபோதும் பலனளிக்காமற் போகாது. ஆகவேதான் தாங்கள் ஒரு மீனாக தங்களுடைய உருவத்தை தோன்றச் செய்திருக்கிறீர்கள்.
பதம் 8.24.31
ஸ்ரீ-சுக உவாச
இதி ப்ருவாணம் ந்ருபதிம் ஜகத்-பதி:
ஸத்யவ்ரதம் மத்ஸ்ய-வபுர் யுக-க்ஷயே
விஹர்து-காம: ப்ரளயார்ணவே ‘ப்ரவீச்
சிகீர்ஷுர் ஏகாந்த-ஜன-ப்ரிய: ப்ரியம்
ஸ்ரீ சுக:-உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ப்ருவாணம்—அவ்வாறு பேசி; ந்ருபதிம்—அரசரிடம்; ஜகத்-பதி:—அகில லோகங்களுக்கும் எஜமானரான; ஸத்யவ்ரதம்—சத்தியவிரதனிடம்; மத்ஸ்ய-வபு:—ஒரு மீனின் உருவை ஏற்ற பகவான்; யுக-க்ஷயே—ஒரு யுகத்தின் முடிவில்; விஹர்து-காம:—அவரது சொந்த லீலைகளை அனுபவிக்க; ப்ரளய-அர்ணவே—வெள்ளப் பெருக்கில்; அப்ரவீத்—கூறினார்; சிகீர்ஷு:—செய்ய விரும்பும்; ஏகாந்த-ஜன-ப்ரிய:—பக்தர்களுக்கு மிகவும் பிரியமானதை; ப்ரியம்—மிகவும் நன்மை அளிப்பதை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சத்தியவிரத மகாராஜன் இவ்வாறு பேசியதும், தமது பக்தருக்கு நன்மை செய்வதற்காகவும், வெள்ளப் பெருக்கில் தமது லீலைகளை நடத்தி அனுபவிப்பதற்காகவும், யுகத்தின் முடிவில் ஒரு மீனின் வடிவத்தை ஏற்றவரான பரமபுருஷ பகவான் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 8.24.32
ஸ்ரீ-பகவான் உவாச
ஸப்தமே ஹி அத்யதனாத் ஊர்த்வம் அஹனை ஏதத் அரிந்தம
நிமங்க்க்ஷயதி அப்யயாம் போதௌ த்ரைலோக்யம் பூர்-புவாதிகம்
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; ஸப்தமே—ஏழாவது; ஹி—உண்மையில்; அத்யதனாத்—இன்றிலிருந்து; ஊர்த்வம்—முன்னோக்கிய; அஹனி—நாளில்; ஏதத்—இப்படைப்பு; அரிந்தம—எதிரிகளை வெல்லக்கூடியவரான ராஜனே; நிமங்க்க்ஷ்யதி—வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும்; அப்யய-அம்போதேள—பிரளய நீரில்; த்ரை லோக்யம்—மூன்று லோகங்களும்; பூ:-புவ-ஆதீகம்—பூர்லோகம், புவர்லோகம் மற்றும் ஸ்வர்லோகம் ஆகியவை.
பரமபுருஷ பகவான் கூறினார்: எதிரிகளை வெல்லக்கூடியவரான ராஜனே, இன்றிலிருந்து ஏழாவது நாளில், பூ:, புவ மற்றும் ஸ்வ: ஆகிய மூவுலகங்களும் பிரளய நீரில் மூழ்கிவிடும்.
பதம் 8.24.33
த்ரி-லோக்யாம் லீயமானாயாம் ஸம்வர்தாம்பஸி வை ததா
உபஸ்தாஸ்யதி நௌ: காசித் விசாலா த்வாம் மயேரிதா
த்ரி-லோக்யம்—மூவுலகங்களும்; லீயமானாயாம்—மூழ்கிவிடும் போது; ஸம்வர்த்த-அம்பஸி—பிரளய நீரில்; வை—உண்மையில்; ததா—அப்போது; உபஸ்தாஸ்யதி—தோன்றும்; நௌ:—படகு; காசித்—ஒரு; விசாலா—மிகப் பெரிய; த்வாம்—உமக்கு; மயா—என்னால்; ஈரிதா—அனுப்பப்பட்ட.
மூவுலகங்களும் நீரில் மூழ்கிவிடும்போது, என்னால் அனுப்பப்பட்ட கப்பல் ஒன்று உமக்கு முன் தோன்றும்.
பதங்கள் 8.24.34 – 8.24.35
த்வம் தாவத் ஓஷதீ: ஸர்வா பீஜானி உச்சாவசானி ச
ஸப்தர்ஷிபி: பரிவ்ருத: ஸர்வ-ஸத்வோபப்ரும்ஹித:
ஆருஹ்ய ப்ருஹதீம் நாவம் விசரிஷ்யஸி அவிக்லவ:
ஏகார்ணவே நிராலோகே ரிஷீணாம் ஏவ வர்சஸா
த்வம்—நீர்; தாவத்—அதுவரை; ஓஷதீ:—மூலிகைகளையும்; ஸர்வா:—எல்லா வகையான; பீஜானி—விதைகளையும்; உச்ச-அவசானி—உயர்ந்ததும், தாழ்ந்ததுமான; ச—மேலும்; ஸப்த-ரிஷிபி:—ஏழு ரிஷிகளால்; பரிவ்ருத:—சூழப்பட்டு; ஸர்வ-ஸத்வ—எல்லா வகையான ஜீவராசிகளாலும்; உபப்ரும்ஹித:—சூழப்பட்டவாறு; ஆருஹ்ய—ஏறிக்கொண்டு; ப்ருஹதீம்—மிகப் பெரிய; நாவம்—படகில்; விசரிஷ்யஸி—பிரயாணம் செய்வீராக; அவிக்லவ:—வருத்தம் இல்லாமல்; ஏக-அர்ணவே—பிரளய-நீரில்; நிராலோகே—ஒளியூட்டப்படாமல்; ரிஷீணாம்—பெரும் ரிஷிகளின்; ஏவ—உண்மையில்; வர்சஸா—பிரகாசத்தால்.
அதன்பிறகு, ராஜனே, எல்லா வகையான மூலிகைகளையும், விதைகளையும் சேகரித்து அவற்றை நீர் அக்கப்பலில் ஏற்றிவிட வேண்டும். பிறகு, ஏழு ரிஷிகள் பின்தொடர, எல்லா வகையான ஜீவராசிகளாலும் சூழப்பட்டவாறு, நீரும் அக்கப்பலில் ஏறிக்கொள்ள வேண்டும். மேலும் பெரும் ரிஷிகளிடமிருந்து வெளிப்பட்டு பிரகாசத்தை மட்டுமே ஒளியாகக் கொண்டு, உம்மால் வருத்தமின்றி உமது சகாக்களுடன் பிரளய நீரில் சுலபமாக பிரயாணம் செய்ய முடியும்.
பதம் 8.24.36
தோதூயமானாம் தாம் நாவம் ஸமீரேண பலீயஸா
உபஸ்திதஸ்ய மே ஸ்ருங்கே நிபத்னீஹி மஹாஹினா
தோதூயமானாம்—அலைக்கழிக்கப்படும்; தாம்—அந்த; நாவம்—படகை; ஸமீரேண—காற்றால்; பலீயஸா—மிகவும் சக்திவாய்ந்த; உபஸ்திதஸ்ய—அருகிலுள்ள; மே—எனது; ஸ்ருங்கே—கொம்புடன்; நிபத்னீஹி—பிணைத்து விடவும்; மஹா-அஹினா—மிகப்பெரிய பாம்பால் (வாசுகி).
பிறகு, சக்திவாய்ந்த காற்றுகளால் கப்பல் அலைக்கழிக்கப்படும் போது, நான் உமக்கு அருகிலேயே இருப்பேன் என்பதால், மிகப்பெரிய பாம்பான வாசுகியை கயிறாகக் கொண்டு கப்பலை எனது கொம்புடன் பிணைத்துவிட வேண்டும்.
பதம் 8.24.37
அஹம் த்வாம் ரிஷிபி: ஸார்தம் ஸஹ-நாவம் உதன்வதி
விகர்ஷன் விசரிஷ்யாமி யாவத் ப்ராஹ்மீ நிசா ப்ரபோ
ஆஹம்—நான்; த்வாம்—உம்மை; ரிஷிபி:—எல்லா ரிஷிகளுடனும்; ஸார்தம்—எல்லோரையும் ஒன்றாக; ஸஹ—உடன்; நாவம்—படகை; உதன்வதி—பிரளய நீரில்; விகர்ஷன்—தொடர்பு கொண்டு; விசரிஷ்யாமி—நான் பிரயாணம் செய்வேன்; யாவத்—வரையில்; ப்ராஹ்மீ—பிரம்ம தேவரின்; நிசா—இரவு; ப்ரபோ—ராஜனே.
ராஜனே, உம்முடன் எல்லா ரிஷிகளையும் கொண்ட கப்பலை இழுத்துக் கொண்டு, பிரம்ம தேவரின் நித்திரைக் காலமான இரவுநேரம் முடியும்வரை பிரளய நீரில் நான் பிரயாணம் செய்வேன்.
பதம் 8.24.38
மதீயம் மஹிமானம் ச பதம் ப்ரஹ்மேதி சப்திதம்
வேத்ஸ்யஸி அனுக்ருஹீதம் மே ஸம்ப்ரஸ்னைர் விவ்ருதம் ஹ்ருதி
மதீயம்—என்னைப்பற்றிய; மஹிமானம்—பெருமைகள்; ச—மேலும்; பரம் ப்ரஹ்ம—பரிபூரண சத்தியமாகிய பரப்பிரம்மம்; இதி—இவ்வாறாக; சப்திதம்—புகழ்பெற்ற; வேத்ஸ்யஸி—நீர் தெரிந்து கொள்வீர்; அனுக்ருஹீதம்—ஆதரவு அளிக்கப்பட்டு; மே—என்னால்; ஸம்ப்ரஸ்னை:—விசாரணைகளால்; விவ்ருதம்—பூரணமாக விளக்கப்படும்; ஹ்ருதி—இதயத்தினுள்.
உமக்கு என்னால் பூரணமாக அறிவுறுத்தப்பட்டு, ஆதரவு அளிக்கப்படும். உமது விசாரணைகளின் காரணத்தால், பரப்பிரம்மன் எனப்படும் எனது பெருமைகளைப் பற்றிய அனைத்தும் உமது இதயத்தினுள் வெளிப்படுத்தப்படும். இவ்வாறாக என்னைப் பற்றிய அனைத்தையும் நீர் அறிவீர்.
பதம் 8.24.39
இத்தம் ஆதிஸ்ய ராஜானம் ஹரிர் அந்தரதீயத
ஸோ ‘ன்வவைக்ஷத தம் காலம் யம் ஹ்ருஷீகேச ஆதிசத்
இத்தம்—முன்னமே சொல்லப்பட்டது போல்; ஆதிஸ்ய—உபதேசித்து; ராஜானம்—அரசனுக்கு (சத்தியவிரதன்); ஹரி:—பரமபுருஷ பகவான்; அந்தர்-அதீயத—அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டார்; ஸ:—அவர் (அரசன்); அன்வவைக்ஷத—அதற்காக காத்திருக்கத் துவங்கினார்; தம் காலம்—அந்த நேரம்; யம்—எது; ஹ்ரிஷீக-ஈச:—எல்லாப் புலன்களுக்கும் அதிபதியான பகவான் ரிஷி கேசர்; ஆதிசத்—கூறியிருந்த.
அரசருக்கு அவ்வாறு உபதேசித்த பின், பரமபுருஷ பகவான் உடனே மறைந்து விட்டார். அதன்பிறகு சத்தியவிரத மகாராஜன் பகவான் அறிவித்திருந்த அந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தார்.
பதம் 8.24.40
ஆஸ்தீர்ய தர்பான் ப்ராக்-கூலான் ராஜர்ஷி: ப்ராக்-உதன்-முக:
நிஷஸாத ஹரே: பாதெள சிந்தயன் மத்ஸ்ய-ரூபிண:
ஆஸ்தீர்ய—பரப்பி; தர்பான்—தர்ப்பைப் புல்லின்; ப்ராக் கூலான்—மேற்பகுதியை கிழக்கு நோக்கியவாறு; ராஜ-ரிஷி:—ராஜ ரிஷியான சத்தியவிரதன்; ப்ராக்-உதக்-முக:—வடகிழக்கு (ஈசான) திசையை நோக்கியவாறு; நிஷஸாத—கீழே அமர்ந்தார்; ஹரே:—பரம்புருஷ பகவானின்; பாதௌ—தாமரைப் பாதங்களை; சிந்தயன்—தியானித்தபடி; மத்ஸ்ய-ரூபிண:—ஒரு மீனின் உருவை ஏற்றிருந்த.
தர்ப்பைப் புற்களின் முனைகளை கிழக்கு நோக்கியவாறு பரப்பிய பின், ராஜ ரிஷியான அரசர் வடகிழக்குத் திசையை நோக்கியவாறு அதன்மேல் அமர்ந்து, ஒரு மீனின் உருவை ஏற்றுள்ள முழுமுதற் கடவுளான விஷ்ணுவை தியானிக்க ஆரம்பித்தார்.
பதம் 8.24.41
தத: ஸமுத்ர உத்வேல: ஸர்வத: ப்லாவயன் மஹீம்
வர்தமானோ மஹா-மேகைர் வர்ஷத்பி: ஸமத்ருஸ்யத
தத:—அதன்பிறகு; ஸமுத்ர:—சமுத்திரம்; உத்வேல:—பொங்கி வழிந்த; ஸர்வத—எல்லா இடங்களையும்; ப்லாவயன்—மூழ்கடித்தது; மஹீம்—பூமியை; வர்தமான:—மேன்மேலும் பெருகி; மஹா-மேகை:—பிரம்மாண்டமான மேகங்களால்; வர்ஷத்பி:—இடைவிடாது மழை பொழிந்து; ஸமத்ருஸ்யத—சத்தியவிரத மகாராஜன் அதைக் கண்டார்.
அதன்பிறகு, பிரம்மாண்டமான மேகங்கள் இடைவிடாத மழையைப் பொழிந்து சமுத்திரத்தை இன்னும் அதிகமாக பெருகச் செய்தன. இவ்வாறாக சமுத்திரம் நிலத்தில் பொங்கி வழியத் துவங்கி, முழு உலகையும் வெள்ளத்தால் மூழ்கடித்தது.
பதம் 8.24.42
த்யாயன் பகவத்-ஆதேசம் தத்ருசே நாவம் ஆகதாம்
தாம் ஆருரோஹ விப்ரேந்ரைர் ஆதாயெளஷதி-வீருத:
த்யாயன்—நினைவிற்கொண்டு; பகவத்-ஆதேசம்—முழுமுதற் கடவுளின் கட்டளையை; தத்ருசே—அவர் கண்டார்; நாவம்—ஒரு படகு; ஆகதாம்—அருகில் வருவதை; தாம்—படகின் மீது; ஆருரோஹ—ஏறிக்கொண்டார்; விப்ர-இந்ரை:—புனிதர்களான பிராமணர்களுடன்; ஆதாய—எடுத்துக் கொண்டு; ஒளஷதி—மூலிகைகளையும்; வீருத:—மற்றும் கொடிகளையும்.
முழுமுதற் கடவுளின் கட்டளையை சத்தியவிரதன் நினைவுக்கூர்ந்த சமயத்தில், ஒரு கப்பல் தமக்கருகில் வருவதை அவர் கண்டார். இவ்வாறாக மூலிகைகளையும், கொடிகளையும் சேகரித்த பின், புனிதர்களான பிராமணர்களுடன் அவர் கப்பலில் ஏறிக்கொண்டார்.
பதம் 8.24.43
தம் ஊசுர் முனைய: ப்ரீதா ராஜன் த்யாயஸ்வ கேசவம்
ஸ வை ந: ஸங்கடாத் அஸ்மாத் அவிதா சம் விதாஸ்யதி
தம்—ராஜனிடம்; ஊசு:—கூறினர்; முனைய:—புனிதர்களான பிராமணர்கள் அனைவரும்; ப்ரீதா:—திருப்தியடைந்து; ராஜன்—ராஜனே; த்யாயஸ்வ—தியானம் செய்யுங்கள்; கேசவம்—பரமபுருஷரான சேகவனை; ஸ:—பெருமானாகிய அவர்; வை—உண்மையில்; ந:—நம்மை; ஸங்கடாத்—பெரும் ஆபத்திலிருந்து; அஸ்மாத்—இப்போது காணப்படுகின்ற; அவிதா—காப்பாற்றுவார்; சம்—நன்மைக்காக; விதாஸ்யதி—அவர் ஏற்பாடு செய்வார்.
அரசரிடம் திருப்தியடைந்த புனிதர்களான அந்த பிராமணர்கள் அவரிடம் கூறினர்: ராஜனே, முழுமுதற் கடவுளாகிய கேசவனை தயவுசெய்து தியானியுங்கள். அவர் நம்மை நெருங்கியுள்ள இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றி, நம்முடைய நலனுக்கான ஏற்பாட்டைச் செய்வார்.
பதம் 8.24.44
ஸோ ‘நுத்யாதஸ் ததோ ராஜ்ஞா ப்ராதுராஸீன் மஹார்ணவே
ஏக-ஸ்ருங்க-தரோ மத்ஸ்யோ ஹைமோ நியுத-யோஜன:
ஸ:—பகவான்; அநுத்யாத:—மீது தியானித்து; தத:—அதன்பிறகு (புனித பிராமணர்களின் சொல் கேட்டு); ராஜ்ஞா—அரசரால்; ப்ராதுராஸீத்—தோன்றியது (அவர் முன்); மஹா-அர்ணவே—பெரும் பிரளய-வெள்ளத்தில்; ஏக-ஸ்ருங்க-தர:—ஒரு கொம்புடன்; மத்ஸ்ய:—ஒரு பெரிய மீன்; ஹைம:—தங்கத்தாலான; நியுத-யோஜன—என்பது லட்சம் மைல்கள் நீளமுள்ள.
பிறகு, அரசர் முழுமுதற் கடவுளை இடைவிடாமல் தியானித்துக் கொண்டிருக்கும்போது, மிகப்பெரிய தங்க மீன் ஒன்று பிரளய வெள்ளத்தில் தோன்றியது. என்பது லட்சம் மைல்கள் நீளமுள்ள அந்த மீனுக்கு ஒரே கொம்பு இருந்தது.
பதம் 8.24.45
நிபத்ய நாவம் தச்-ச்ருங்கே யதோக்தோ ஹரிணா புரா
வரத்ரேணாஹினா துஷ்டஸ் துஷ்டாவ மதுஸூதனம்
நிபத்ய—கட்டி; நாவம்—கப்பலை; தத்-ஸ்ருங்கே—அப்பெரிய மீனின் கொம்பில்; யதா-உக்த:—அறிவுறுத்தப்பட்டது போல்; ஹரிணா—பரமபுருஷ பகவானால்; புரா—முன்பு; வரத்ரேன—கயிறாக பாவித்து; அஹிணா—(வாசுகி எனும் பெயர்கொண்ட) மிகப்பெரிய பாம்பை; துஷ்ட:—திருப்தியடைந்து; துஷ்டாவ—அவர் திருப்திபடுத்தினார்; மதுஸூதனம்—மதுவைக் கொன்றவரான பரமபுருஷர்.
பரமபுருஷரால் முன்பு அளிக்கப்பட்ட உபதேசங்களைப் பின்பற்றிய அரசர் வாசுகி எனும் பாம்பை கயிறாகப் பாவித்து, கப்பலை மீனின் கொம்புடன் பிணைத்துக் கட்டினார். இவ்வாறு திருப்தியடைந்த அரசர், பகவானை துதிக்கத் துவங்கினார்.
பதம் 8.24.46
ஸ்ரீ ராஜேவாச
அனாதி-அவித்யோபஹதாத்ம-ஸம்விதஸ்
தன்-மூல-ஸம்ஸார-பரிஸ்ரமாதுரா
யத்ருச்சயோபஸ்ருதா யம் ஆப்னுயுர்
விமுக்திதோ ந: பரமோ குருர் பவான்
ஸ்ரீ-ராஜ உவாச—அரசர் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்; அனாதி—நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து; அவித்யா—அறியாமையால்; உபஹத—இழந்த; ஆத்ம-ஸம்வித:—ஆத்மாவைப் பற்றிய அறிவை; தத்—அதுதான்; மூல—வேர்; ஸம்ஸார—பௌதிக பந்தம்; பரிஸ்ரம்—துன்பமான சூழ்நிலைகளும், கடினமான உழைப்பும் நிறைந்த; ஆதுரா:—துன்பம்; யத்ருச்சயா—பரம ஆணையால்; உபஸ்ருதா:—ஆசார்யரால் அன்பு காட்டப்பட்டு; யம்—பரமபுருஷ பகவான்; ஆப்னுயு:—அடைய முடியும்; விமுக்தி-த:—முக்திபெறும் வழியை; ந:—நமது; பரம:—பரம; குரு:—ஆன்மீக குரு; பவான்—பெருமானாகிய தாங்கள்.
அரசர் கூறினார்: நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து, இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த, பெளதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள், பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.
பதம் 8.24.47
ஜனோ ‘புதோ ‘யம் நிஜ-கர்ம-பந்தன:
ஸுகேச்சயா கர்ம ஸமீஹதே ‘ஸுகம்
யத்-ஸேவயா தாம் விதுனோதி அஸன்-மதிம்
க்ரந்திம் ஸ பிந்யாத் த்ருதயம் ஸ நோ குரு:
ஜன:—பிறப்பு, இறப்பிற்கு உட்பட்ட பந்தப்பட்ட ஆத்மா; அபுத:—உடலையே தான் என்று ஏற்கும் பெரும் மூடனான; அயம்—அவன்; நிஜ-கர்ம-பந்தன:—அவனுடைய பாவச் செயல்களின் பலனாக வேறுபட்ட உடல்களை ஏற்று; ஸுக-இச்சயா—இந்த ஜட உலகில் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி; கர்ம—பலன் கருதும் செயல்களான; ஸமீஹதே—திட்டம் தீட்டுகிறான்; அஸுகம்—ஆனால் அது துன்பத்தை மட்டுமே தருகிறது; யத்-ஸேவயா—யாருக்கு சேவை செய்வதால்; தாம்—கர்ம பந்தம்; விதுனோதி—தீர்ந்து விடுகிறதோ; அஸத்-மதிம்—அசுத்தமான மனோநிலை (உடலையே தானென ஏற்றுள்ள); க்ரந்திம்—கடினமான முடிச்சு; ஸ:—முழுமுதற் கடவுளாகிய அவர்; பிந்யாத்—துண்டிக்கப்பட்டு; ஹ்ருதயம்—இதயத்தில்; ஸ:—அவர் (பகவான்); ந:—எமது; குரு—பரம ஆன்மீக குரு.
முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில், துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன்நோக்குக் கருமங்களைச் செய்கிறான். ஆனால் பரமபுருஷ பகவானுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, ஒருவன் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இத்தகைய பொய்யான ஆசைகளிலிருந்து விடுபடுகிறான். எனது பரம ஆன்மீக குரு என் இதயத்திலுள்ள பொய்யான ஆசைகளின் முடிச்சை வெட்டி வீழ்த்துவாராக.
பதம் 8.24.48
யத்-ஸேவயாக்னேர் இவ ருத்ர-ரோதனம்
புமான் விஜஹ்யான் மலம் ஆத்மனஸ் தம:
பஜேத வர்ணம் நிஜம் ஏஷ ஸோ ‘வ்யயோ
பூயாத் ஸ ஈச: பரமோ குரோர் குரு:
யத்-ஸேவயா—பரமபுருஷரை சேவிப்பதால்; அக்னே:—நெருப்புடன் சம்பந்தப்பட்டுள்ள; இவ—உள்ளவாறு; ருத்ர-ரோதனம்—ஒரு தங்கத்துண்டு அல்லது வெள்ளித்துண்டு தூய்மையடைகின்றது; புமான்—ஒருவர்; விஜஹ்யாத்—கைவிட முடியும்; மலம்—ஜட வாழ்விலுள்ள அழுக்குகள் அனைத்தும்; ஆத்மன:—ஒருவரது ஆத்மாவின்; தம:—எதனால் ஒருவன் பாவ, புண்ணிய செயல்களைச் செய்கிறானோ அந்த அறியாமைக் குணத்தை; பஜேத—புதுப்பித்துக் கொள்ள முடியும்; வர்ணம்—அவனது ஆதியான சொரூபத்தை; நிஜம்—ஒருவரது சொந்த; ஏஷ:—அத்தகைய; ஸ:—அவர்; அவ்யயோ— முடிவற்றவரான; பூயாத்—ஆவார்; ஸ—அவர்; ஈச:—பரமபுருஷர்; பரம:—பரம; குரோ:-குரு:—மற்றெல்லா ஆன்மீக குருமார்களுக்கும் குருவானவர்.
ஜட சிக்கலிலிருந்து விடுபட விரும்பும் ஒருவன் பரமபுருஷரின் தொண்டை மேற்கொண்டு, பாவ, புண்ணியச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள, அறியாமை எனும் களங்கத்தைக் கைவிடவேண்டும். இவ்வாறாக, தங்கம் அல்லது வெள்ளிக்கட்டி நெருப்பால் பதனிடப்படும் போது, அதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் உதிர்ந்து அது தூய்மையடைவதைப் போலவே, ஒருவன் தனது ஆதியான சொரூபத்தை திரும்ப பெறுகிறான். பரமபுருஷ பகவான் மற்றெல்லா ஆன்மீக குருமார்களுக்கும் மூல குருவாக இருப்பதால், முடிவற்றவரான அந்த பகவான் நமது ஆன்மீக குரு ஆவாராக.
பதம் 8.24.49
நயத்-ப்ரஸாதாயுத-பாக-லேசம்
அன்யே ச தேவா குரவோ ஜனா: ஸவயம்
கர்தும் ஸமேதா: ப்ரபவந்தி பும்ஸஸ்
தம் ஈஸ்வரம் த்வாம் சரணம் ப்ரபத்யே
ந—இல்லை யத்-ப்ரஸாத—பரமபுருஷ பகவானுடைய கருணையில்; ஆயுத-பாக-லேசம்—ஆயிரத்தில் ஒரு பாகம் மட்டுமே; அன்யே—மற்றவர்கள்; ச—மேலும்; தேவா:—தேவர்கள் கூட; குரவ:—பெயரளவேயான குருமார்கள்; ஜனா:—மொத்த ஜனத்தொகை; ஸ்வயம்—தனிப்பட்ட முறையிலோ; கர்தும்—நிறைவேற்ற; ஸமேதா:—மொத்தமாகவோ; ப்ரபவந்தி—சமதிறமை பெற்றவராக முடியும்; பும்ஸ:—பகவானால்; தம்—அவருக்கு; ஈஸ்வரம்—பரம புருஷருக்கு; த்வாம்—தங்களுக்கு; சரணம்—புகலிடம்; ப்ரபத்யே—சரணடைவேனாக.
தேவர்களாலோ, அல்லது பெயரளவேயான குருமார்களாலோ அல்லது மக்களாலோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது மொத்தமாகவோ, உங்களால் வழங்கப்படும் கருணையில் பத்தாயிரத்தில் ஒரு பாகத்திற்கு ஈடான கருணையைக் கூட வழங்க முடியாது. ஆகவே உங்களுடைய தாமரைப் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
பதம் 8.24.50
அசக்ஷுர் அந்தஸ்ய யதாக்ரணீ: க்ருதஸ்
ததா ஜனஸ்யாவிதுஷோ ‘புதோ குரு:
த்வம் அர்க-த்ருக் ஸர்வ-த்ருசாம் ஸமீக்ஷணோ
வ்ருதோ குருர் ந: ஸ்வ-கதிம் புபுத்ஸதாம்
அசக்ஷு:—கண் பார்வை இல்லாத; அந்தஸ்ய—அத்தகைய ஒரு குருடனுக்கு; யதா—போல்; அக்ரணீ:—முன் செல்லும் வழிகாட்டியாக; க்ருத:—ஏற்கப்படுகிறான்; ததா—அதுபோலவே; ஜனஸ்ய—அத்தகைய ஒருவன்; அவிதுஷ:—வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய அறிவு இல்லாத; அபுத:—மூடனான அயோக்கியன்; குரு:—ஆன்மீக குரு; த்வம்—பெருமானாகிய தாங்கள்; அர்க-த்ருக்—சூரியனைப் போல் தோன்றுகிறீர்கள்; ஸர்வ-த்ருசம்—அறிவின் மூலங்களுக்கெல்லாம்; ஸமீக்ஷேண:—முழுமையாக காணக் கூடியவரை; வ்ருத:—ஏற்றுக் கொள்கிறோம்; குரு:—ஆன்மீக குருவாக; ந:—எங்கள்; ஸ்வ-கதிம்—தனது நிஜமான சுயநலத்தை அறிந்திருப்பவன்; புபுத்ஸதாம்—இத்தகைய ஆன்ம ஞானம் பெற்றவன்.
குருடனொருவன், காண இயலாதிருப்பதால், மற்றொரு குருடனைத் தனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறான். வாழ்வின் இலட்சியத்தை அறியாத மக்கள், மூடனும், அயோக்கியனுமான ஒருவனை குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்களோ தன்னுணர்வில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆகவே, தாங்கள் எல்லாத் திசைகளிலும் காணக் கூடியவராகவும், சூரியனைப் போல் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பதால், பரம புருஷராகிய தங்களையே எங்களுடைய ஆன்மீக குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
பதம் 8.24.51
ஜனோ ஜனஸ்யாதிஸதே ‘ஸதீம் கதிம்
யயா ப்ரபத்யேத துரத்யயம் தம:
த்வம் து அவ்யயம் ஞானம் அமோகம் அஞ்ஜஸா
ப்ரபத்யதே யேன ஜனோ நிஜம் பதம்
ஜன:—உண்மையான குற்றமல்லாத ஒருவன் (ஒரு சாதாரண மனிதன்); ஜனஸ்ய—வாழ்வின் நோக்கத்தை அறியாத ஒரு சாதாரண மனிதனின்; ஆதிசதே—உபதேசிக்கிறான்; அஸதீம்—நிலையற்ற, பெளதிகமான; கதிம்—வாழ்வின் இலட்சியத்தை; யயா—இத்தகைய அறிவால்; ப்ரபத்யேத—அவன் சரணடைகிறான்; துரத்யயம்—கடக்கமுடியாத; தம:—அறியாமைக்கு; த்வம்—பெருமானாகிய தாங்கள்; து—ஆனால்; அவ்யயம்—அழியாத; ஞானம்—அறிவை; அமோகம்—ஜடக்களங்கம் இல்லாமல்; அஞ்ஜஸா—மிக விரைவில்; ப்ரபத்யதே—அடைகிறான்; யேன—அத்தகைய அறிவினால்; ஜன:—ஒருவன்; நிஜம்—அவனது சொந்த; பதம்—ஆதியான நிலையை.
பெயரளவாக மட்டுமே உள்ள பெளதிகவாதியான ஒரு குரு தனது சீடர்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும், புலன் நுகர்வையும் பற்றி உபதேசிக்கிறார். இத்தகைய உபதேசங்களினால், மூடர்களான சீடர்கள் அறியாமை மிகுந்த பெளதிக வாழ்வையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். ஆனால் பெருமானாகிய தாங்கள் நித்தியமான அறிவை வழங்குகிறீர்கள். மேலும் இத்தகைய அறிவைப் பெறும் புத்திசாலி விரைவாக தனது இயற்கையான மூல நிலையில் நிலைபெறுகிறான்.
பதம் 8.24.52
த்வம் ஸர்வ-லோகஸ்ய ஸுஹ்ருத் ப்ரியேஸ்வரோ
ஹி ஆத்மா குருர் ஞானம் அபீஷ்ட-ஸித்தி:
ததாபி லோகோ ந பவந்தம் அந்த-தீர்
ஜானாதி ஸந்தம் ஹ்ருதி பத்த-காம:
த்வம்—எனதன்புள்ள பெருமானாகிய தாங்கள்; ஸர்வ-லோகஸ்ய—அனைத்து லோகங்கள் மற்றும் அவற்றில் வசிப்பவர்களின்; ஸுஹ்ருத்—நலத்தில் அக்கறை கொண்ட உற்ற நண்பர்; ப்ரிய—மிகவும் பிரியமானவர்; ஈஸ்வர:—பரம ஆளுனர்; ஹி—மேலும்; ஆத்மா—பரமாத்மா; குரு:—பரம குரு; ஞானம்—பரம ஞானம்; அபீஷ்ட-ஸித்தி:—எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்; ததா அபி—இருப்பினும்; லோக:—நபர்கள்; ந—இல்லை; பவந்தம்—தங்களை; அந்த-தீ:—குருட்டு புத்தியின் காரணத்தால்; ஜானாதி—அறிய முடியும்; ஸந்தம்—உள்ள; ஹ்ருதி—அவனுடைய இதயத்தில்; பத்த-காம:—பெளதிகமான சிற்றின்ப ஆசைகளால் தடுமாற்றம் அடைந்திருப்பதால்.
எம்பெருமானே, தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை கொண்ட மிகச்சிறந்த நண்பரும், பரம ஆளுனரும், பரமாத்மாவும், பரம போதகரும், உன்னத அறிவை வழங்குபவரும் மற்றும் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவரும் ஆவீர். ஆனால் மூடர்களின் இதயங்களிலும் தாங்கள் இருந்த போதிலும், அவர்களுடைய இதயத்திலுள்ள சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், தங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பதம் 8.24.53
த்வம் த்வாம் அஹம் தேவ-வரம் வரேண்யம்
ப்ரபத்ய ஈசம் ப்ரதிபோதனாய
சிந்தி அர்த-தீபைர் பகவன் வசோபிர்
க்ரந்தீன் ஹ்ருதய்யான் விவ்ருணு ஸ்வம் ஓக:
த்வம்—தாங்கள் எவ்வளவு உயர்ந்தவர்; த்வாம்—தங்களிடம்; அஹம்—நான்; தேவ-வரம்—தேவர்களால் வழிபடப்படும்; வரேண்யம்—அனைவரிலும் மிகச் சிறந்தவரான; ப்ரபத்யே—முழுமையாக சரணடைந்து; ஈசம்—பரம ஆளுனரான; ப்ரதிபோதனாய—வாழ்வின் உண்மையான இலட்சியத்தை அறிவதற்கு; சிந்தி—வெட்டி வீழ்த்துங்கள்; அர்த-தீபை:—அர்த்தமுள்ள உபதேச ஒளியால்; பகவன்—பரமபுருஷ பகவானே; வசோபி:—தங்களது வார்த்தைகளால்; க்ரந்தீன்—முடிச்சுகளை; ஹ்ருதய்யான்—இதய மத்தியில் உறுதியாக உள்ள; விவ்ருணு—அன்புடன் விளக்க வேண்டும்; ஸ்வம் ஒக:—வாழ்வில் எனது இலக்கை.
பரமபுருஷரே, தேவர்கள் உங்களை அனைத்திற்கும் பரம ஆளுனராக வழிபடுகின்றனர். தன்னுணர்வைப் பெறுவதற்காக தங்களிடம் நான் சரணடைகிறேன். வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் தங்களது உபதேசங்களால் என்னுடைய இதயத்திலுள்ள முடிச்சை வெட்டி வீழ்த்த வேண்டும். என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை நான் அறியும்படி செய்ய வேண்டும்.
பதம் 8.24.54
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்தவந்தம் ந்ருபதிம் பகவான் ஆதி-புருஷ
மத்ஸ்ய-ரூபீ மஹாம்போதௌ விஹரம்ஸ் தத்வம் அப்ரவீத்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; உக்தவந்தம்—சத்தியவிரத மகாராஜனால் விண்ணப்பிக்கப்பட்டதால்; ந்ருபதிம்—அரசருக்கு; பகவான்—பரமபுருஷ பகவான்; ஆதி-புருஷ:—ஆதி புருஷரான; மத்ஸ்ய-ரூபீ—ஒரு மீனின் வடிவத்தை ஏற்றுள்ள; மஹா-அம்போதௌ—அப்பிரளய நீரில்; விஹரன்—செல்லும் போதே; தத்வம்-அப்ரவீத்—பரம சத்தியத்தை விளக்கினார்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சத்தியவிரதன் பகவானிடம் விண்ணப்பித்ததும், ஒரு மீனின் வடிவத்தை ஏற்றிருந்த பரமபுருஷர், பிரளய நீரில் நீந்திச் செல்லும்போதே அவருக்கு பரம சத்தியத்தைப் பற்றி விளக்கினார்.
பதம் 8.24.55
புராண-ஸம்ஹிதாம் திவ்யாம் ஸாங்கீய-யோக-க்ரியாவதீம்
ஸத்யவ்ரதஸ்ய ராஜர்ஷேர் ஆத்ம-குஹ்யம் அசேஷத:
புராண—பழைய சரித்திரங்களான புராணங்களில், குறிப்பாக மச்ச புராணத்தில் விளக்கப்பட்டுள்ள விஷயத்தை; ஸம்ஹிதாம்—பிரம்ம சம்ஹிதையிலும், மற்ற சம்ஹிதைகளிலும் அடங்கியுள்ள வேத உபதேசங்களை; திவ்யாம்—அனைத்து தெய்வீக இலக்கியங்களையும்; ஸாங்க்ய—ஸாங்க்ய யோகத்தின் தத்துவ ஞான மார்க்கத்தை; யோக—தன்னுணர்வு விஞ்ஞானம் அல்லது பக்தியோகம்; க்ரியாவதீம்—நடைமுறை வாழ்வில் உபயோகிக்கப்படும்; ஸத்யவ்ரதஸ்ய—சத்தியவிரத மகாராஜனே; ராஜ-ரிஷே:—சிறந்த அரசரும், ரிஷியுமான; ஆத்ம-குஹ்யம்—தன்னுணர்வைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும்; அசேஷத:—எல்லா கிளைகளும் உட்பட.
இவ்வாறாக, பரமபுருஷ பகவான், ஸாங்க்ய-யோகம் எனப்படும் ஆன்மீக விஞ்ஞானத்தை சத்தியவிரத மகாராஜனுக்கு விளக்கினார். இது ஜடத்துக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பகுத்தறியும் விஞ்ஞானமாகும் (அதாவது, பக்தி-யோகம்). இவ்விஞ்ஞானத்துடன் புராணங்களில் (பழைய சரித்திரங்களில்) அடங்கியுள்ள உபதேசங்களையும் மற்றும் சம்ஹிதைகளையும் கூட விளக்கினார். இவ்வெல்லா இலக்கியங்களிலும் பகவான் தம்மைப்பற்றி விளக்கிக் கூறினார்.
பதம் 8.24.56
அஸ்ரௌஷீத் ருஷிபி: ஸாகம் ஆத்ம-தத்வம் அஸம்சயம்
நாவி ஆஸினோ பகவதா ப்ரோக்தம் ப்ரஹ்ம ஸானாதனம்
அஸ்ரௌஷு—அவர் கேட்டார்; ரிஷிபி:—மகா ரிஷிகள்: ஸாகம்—உடன்; ஆத்ம-தத்வம்—தன்னை அறியும் விஞ்ஞானத்தை; அஸம்சயம்—எவ்வித சந்தேகமும் இல்லாமல் (அது பரமபுருஷராலேயே பேசப்பட்டதால்); நாவி-ஆஸீன:—கப்பலில் அமர்ந்து கொண்டு; பகவதா—பரமபுருஷ பகவானால்; ப்ரோக்தம்—விளக்கப்பட்டது; ப்ரஹ்ம—எல்லா தெய்வீக இலக்கியங்களும்; ஸனாதனம்—நித்தியமான.
கப்பலில் அமர்ந்திருக்கும் பொழுது, சத்தியவிரத மகாராஜனும், அவருடனிருந்த சிறந்த ரிஷிகளும், தன்னுணர்வைப் பற்றிய பரம புருஷரின் உபதேசங்களைக் கேட்டனர். இவ்வுபதேசங்கள் நித்தியமான வேத இலக்கியத்திலிருந்து (ப்ரஹ்ம) கூறப்பட்டவை ஆகும். இவ்வாறாக அரசருக்கும், ரிஷிகளுக்கும் பரம சத்தியத்தைப் பற்றி எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.
பதம் 8.24.57
அதீத-ப்ரலயாபாய-உத்திதாய ஸ வேதஸே
ஹத்வாஸுரம் ஹயக்ரீவம் வேதான் ப்ரத்யாஹரத் தரி:
அதீத—கடந்த; ப்ரளய-அபாயே—பிரளய வெள்ளத்தின் முடிவில்; உத்திதாய—உறக்கத்திற்குப் பின் அவரை சுய உணர்வுக்குக் கொண்டு வர; ஸ:—பரம புருஷர்; வேதஸே—பிரம்ம தேவரிடம்; ஹத்வா—கொன்ற பின்; அஸுரம்—அசுரனை; ஹயக்ரீவம்—ஹயக்ரீவன் எனும் பெயர்கொண்ட; வேதான்—எல்லா வேதக் குறிப்புகளையும்; ப்ரத்யாஹரத்—ஒப்படைத்தார்; ஹரி:—பரமபுருஷ பகவான்.
கடந்த பிரளய வெள்ளத்தின் முடிவில் (சுயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில்), பரமபுருஷர், ஹயக்ரீவன் எனும் அசுரனைக் கொன்று, எல்லா வேத இலக்கியங்களையும், பிரம்ம தேவர் உறக்கத்திலிருந்து எழுந்ததும் அவரிடம் ஒப்படைத்தார்.
பதம் 8.24.58
ஸது ஸத்யவ்ரதோ ராஜா ஞான-விஞ்ஞான-ஸம்யுத:
விஷ்ணோ: ப்ரஸாதாத் கல்பே ‘ஸ்மின் ஆஸீத் வைவஸ்வதோ மனும்
ஸ:—அவர்; து—உண்மையில்; ஸத்யவ்ரத:—சத்தியவிரதன்; ராஜா—மகாராஜன்; ஞான-விக்ஞான-ஸம்யுத:—பூரண அறிவிலும் அதன் நடைமுறை உபயோகத்திலும் ஞான உபதேசம் பெற்றார்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ப்ரஸாதாத்—கருணையால்; கல்பே அஸ்மின்—(வைவஸ்வத மனுவால் ஆளப்பட்ட) இந்த ஆட்சிக் காலத்தில்; ஆஸீத்—ஆனார்; வைவஸ்வத:-மனு:—வைவஸ்வத மனு.
சத்தியவிரத மகாராஜன் பகவான் விஷ்ணுவின் கருணையால் அனைத்து வேத அறிவிலும் அறிவூட்டப்பட்டார். மேலும் இந்த ஆட்சிக் காலத்தில் சூரிய தேவனின் மகனான வைவஸ்வத மனுவாக இப்போது அவர் பிறவி எடுத்திருக்கிறார்.
பதம் 8.24.59
ஸத்யவ்ரதஸ்ய ராஜர்ஷேர் மாயா-மத்ஸ்யஸ்ய சார்ங்கின:
ஸம்வாதம் மஹத்-ஆக்யானம் ஸ்ருத்வா முச்யேத கில்பிஷாத்
ஸத்யவ்ரதஸ்ய—சத்தியவிரத மகாராஜனின்; ராஜ-ரிஷே:—ராஜ ரிஷியின்; மாயா-மத்ஸ்யஸ்ய—மற்றும் மீன் அவதாரமான; சார்ங்கின:—அவரது தலைமீது ஒரு கொம்பு இருக்கப் பெற்றவர்; ஸம்வாதம்—வர்ணணையை; மஹத்-ஆக்யானம்—மிகச் சிறந்த கதையை; ஸ்ருத்வ—கேட்பதால்; முச்யேத—விடுவிக்கப்படுகிறார்; கில்பிஷாத்—எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும்.
மிகச் சிறந்தவரான சத்தியவிரத மகாராஜனைப் பற்றியதும், பரமபுருஷரான விஷ்ணுவின் மீன் அவதாரத்தைப் பற்றியதுமான இக்கதை மிகச் சிறந்ததொரு தெய்வீகமான வர்ணணையாகும். இதைக் கேட்பவர் யாராக இருப்பினும் அவர் பாவ வாழ்வின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
பதம் 8.24.60
அவதாரம் ஹரேர் யோ ‘யம் கீர்த்தயேத் அன்வஹம் நர:
ஸங்கல்பாஸ் தஸ்ய ஸித்யந்தி ஸ யாதி பரமாம் கதிம்
அவதாரம்—அவதாரத்தை; ஹரே:—பரம புருஷரின்; ய:—யாராக இருப்பினும்; அயம்—அவர்; கீர்த்தயேத்—சொல்பவர், படிப்பவர்; அன்வஹம்—ஒவ்வொரு நாளும்; நர:—அத்தகைய ஒருவர்; ஸங்கல்பா:—எல்லா நோக்கங்களுக்கும்; தஸ்ய—அவரது; ஸித்யந்தி—நிறைவேறும்; ஸ:—அத்தகைய ஒருவர்; யாதி—திரும்பிச் செல்கிறார்; பரமாம் கதிம்—தெய்வீக இடமான ஆன்மீக உலகிற்கு.
மச்ச அவதாரத்தையும், சத்திய விரத மகாராஜனையும் பற்றிய இந்த வர்ணனையை விவரிப்பவர், அவரது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வது நிச்சயம். மேலும் அவர் பரமபுருஷ பகவானின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்வார் என்பதிலும் சந்தேகமில்லை.
பதம் 8.24.61
ப்ரளய-பயஸி தாது: ஸுப்த-சக்தேர் முகேப்ய:
ஸ்ருதி-கணம் அபனீதம் ப்ரத்யுபாதத்த ஹத்வா
திதிஜம் அகதயத் யோ ப்ரஹ்ம ஸத்யவ்ரதானாம்
தம் அஹம் அகில-ஹேதும் ஜிஹ்ம-மீனம் நதோ ‘ஸ்மி
ப்ரளய-பயஸி—பிரளய நீரில்; தாது:—பிரம்ம தேவரிடமிருந்து; ஸுப்த-சக்தே:—உறங்கிக் கொண்டு இருந்ததால் செயலற்றிருந்த; மூகேப்ய:—வாய்களிலிருந்து; ஸ்ருதி-கணம்—வேதக் குறிப்புகளை; அபனீதம்—களவாடப்பட்ட; ப்ரத்யுபாதத்த—அவரிடம் திருப்பிக் கொடுத்தார்; ஹத்வா—கொன்று; திதிஜம்—சக்தி வாய்ந்த அசுரனை; அகதயத்—விளக்கினார்; ய:—யாரொருவர்; ப்ரஹ்ம—வேத அறிவை; ஸத்யவ்ரதானாம்—சத்தியவிரதன் மற்றும் பெரும் ரிஷிகளின் ஆத்ம ஞானத்திற்காக; தம்—அவருக்கு; அஹம்—நான்; அகில-ஹேதும்—எல்லா காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பவருக்கு; ஜிஹ்ம-மீனம்—ஒரு பெரிய மீனாகத் தோன்றி, நடிக்கும்; நத: அஸ்மி—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
ஒரு பெரிய மீனாகத் தோன்றியவரும், உறக்கத்திலிருந்து விழிதெழுந்த பிரம்ம தேவருக்கு வேத இலக்கியத்தை திரும்பக் கொடுத்தவரும், சத்தியவிரத மகாராஜனுக்கும், பெரும் ரிஷிகளுக்கும் வேத இலக்கியத்தின் சாரத்தை விளக்கியவருமான பரமபுருஷ பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பகவானின் மச்ச அவதாரம்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திநான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.