அத்தியாயம் – 36
அரிஷ்டாசுரனை வதம் செய்தல்
பதம் 10.36.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஆத தர்ஹி ஆகதோ கோஷ்டம் அரிஷ்டோ வ்ருஷபாஸுர:
மஹீம் மஹா-ககுத்-காய: கம்பயன் குர-விக்ஷதாம்

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—அடுத்து; தர்ஹி—பிறகு; ஆகத:—வந்தான்; கோஷ்டம்—கோகுலத்திற்கு; அரிஷ்ட:—அரிஷ்டன் என்னும் பெயருடைய; வ்ருஷப-அஸுர:—விருஷபாசுரன் (எருது அசுரன்); மஹீம்—பூமி; மஹா—பெரிய; ககுத்—திமில் உடையவனாக; காய:—அவனுடைய உடல்; கம்பயன்—நடுங்கச் செய்தது; குர—அவனது கால்குளம்படிகளினால்; விக்ஷதாம்—கிழித்தான்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிறகு அரிஷ்டாசுரன் என்பவன் கோகுலத்திற்கு வந்தான். முதுகில் பெரும் திமிலையுடைய காளைமாடு வடிவம் கொண்ட அவன் தனது காலடிக்குளம்புகளினால் நிலத்தைக் கிழித்து இப்பூமியையே நடுங்கச் செய்தான்.

பதம் 10.36.2
ரம்பமாண: கரதரம் பதா ச விலிகன் மஹீம்
உத்யம்ய புச்சம் வப்ராணி விஷாணக்ரேண சோத்தரன்
கிஞ்சித் கிஞ்சிச் சக்ருன் முஞ்சன் மூத்ரயன் ஸ்தப்த-லோசன:

ரம்பமாண:—மாட்டின் உக்கார ஒலி எழுப்பினான்; கர-தரம்—மிகவும் பயங்கரமாக; பதா—தனது காலடிக் குளம்புகளினால்; ச—மற்றும்; விலிகன்—கீறினான்; மஹீம்—நிலத்தை; உத்யம்ய—உயரே தூக்கினர்; புச்சம்—தனது வாலை; வப்ராணி—மண் சுவர்களை; விஷாண—தன் கொம்புகளின்; அக்ரேண—கூர்முனைகளினால்; ச—மற்றும்; உத்தரன்—தூக்கிக் கிழித்தான்; கிஞ்சித்-கிஞ்சித்—சிறிது சிறிதாக; ஸக்ருத்—மலம்; முஞ்சன்—கழிந்தான்; மூத்ரயன்—மூத்திரம்; ஸ்தப்த—பளபளக்கும்; லோசன:—அவனுடைய கண்கள்.

அரிஷ்டாசுரன் மிகவும் பயங்கரமான ஒலி எழுப்பி நிலத்தை தனது காலடிக் குளம்புகளினால் உதைத்தான். அவனது வால் வானம் நோக்கி உயர்ந்திருந்தது. அவன் சிறிது சிறிதாக சாணமும், மூத்திரமும் கழிந்து கொண்டு தனது கொம்புகளின் கூர்மையான முனைகளினால் மண் சுவர்களைக் கிழிக்கத் தொடங்கினான்.

பதங்கள் 10.36.3 – 10.36.4
யஸ்ய நிர்ஹ்ராதிதேனாங்க நிஷ்துரேண கவாம் ந்ருணாம்
பதந்தி அகாலதோ கர்பா: ஸ்ரவந்தி ஸ்ம பயேன வை

நிர்விஸந்தி கனா யஸ்ய ககுதி அசல-ஸங்கயா
தம் தீக்ஷண-ஸ்ருங்கம் உத்வீக்ஷ்ய கோப்யோ கோபாஸ் ச தத்ரஸு:

யஸ்ய—எவனுடைய; நிர்ஹ்ராதிதேன—எதிரொலிக்கும் பேரொலியினால்; அங்க—அன்பார்ந்த மன்னனே (பரீக்ஷித்); நிஷ்துரேண—முரடான; கவாம்—பசுக்களின்; ந்ருணாம்—மனிதர்களின்; பதந்தி—வீழ்ந்து; அகாலத:—அகாலத்தில்; கர்பா:—கர்ப்பங்கள்; ஸ்ரவந்தி ஸ்ம—சிதைத்தன; பயேன—பயத்தினால்; வை—உண்மையில்; நிர்விஸந்தி—புகுந்தது; கனா:—மேகங்கள்; யஸ்ய—எவனுடைய; ககுதி—திமிலின் மேல்; அசல—மலையினைப் போன்ற; ஸங்கயா—தவறான அடையாளத்தினால்; தம்—அவனை; தீக்ஷ்ண—கூர்மையான; ஸ்ருங்கம்—அவனுடையக் கொம்புகள்; உத்வீக்ஷ்ய—கண்டு; கோப்ய:—கோபியர்கள்; கோபா:—கோபாலர்கள்; ச—மற்றும்; தத்ரஸு:—அச்சத்திற்காளாயினர்.

அன்பார்ந்த அரசனே, கூர்மையான கொம்புகளையுடைய அரிஷ்டாசுரனின் திமிலை மலையென்று தவறாக எண்ணி மேகங்கள் அதன்மீது தவழ்ந்தன. ஆயர்குலத்தின் ஆண்களும், பெண்களும் அசுரனைக் கண்டவுடன் அச்சத்தினால் நடுநடுங்கினர். அவன் எழுப்பிய ஒலியின் பயங்கரத்தினால் சினைமாடுகளின் கருவும், கர்ப்பிணிப் பெண்களின் கருவும் சிதைந்தன.

பதம் 10.36.5
பஸவோ துத்ருவுர் பீதா ராஜன் ஸந்த்யஜ்ய கோ-குலம்
க்ருஷ்ண க்ருஷ்ணேதி தேஸர்வே கோவிந்தம் ஸரணம் யயு:

பஸவ:—வளர்ப்புப் பிராணிகள்; துத்ருவு:—ஓடின; பீதா:—அஞ்சி; ராஜன்—ஓ, ராஜனே; ஸந்த்யஜ்ய—நீங்கி; கோ-குலம்—கோகுலத்தினை விட்டு; க்ருஷ்ண க்ருஸ்ண இதி—”கிருஷ்ணா, கிருஷ்ணா என்றவாறு; தே—அவர்கள் (விருந்தாவனத்தைச் சேர்ந்தவர்கள்); ஸர்வே—அனைவரும்; கோவிந்தம்—பகவான் கோவிந்தனிடம்; ஸரணம்—சரணடைவதற்காக; யயு:—சென்றார்.

வளர்ப்புப் பிராணிகள் கோகுலத்தை விட்டு அச்சத்தினால் ஓடின. ஓ மன்னனே! அங்கு வசிப்பவர்கள் அனைவரும் “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று கூவிக் கொண்டே கோவிந்தனைச் சரணடைவதற்காக ஓடினர்.

பதம் 10.36.6
பகவான் அபி தத் வீக்ஷ்ய கோ-குலம் பய வித்ருதம்
மா பைஷ்டேதி கிராஸ்வாஸ்ய வ்ருஷாஸுரம் உபாஹ்வயத்

பகவான்—முழுமுதற் கடவுள்; அபி—உண்மையில்; தத்—அதனை; வீக்ஷ்ய—கண்டு; கோ-குலம்—கோகுலத்தினர்; பய—பயத்தினால்; வித்ருதம்—தப்பி ஓடுதல் அல்லது குழப்பமடைதல்; மா பைஷ்ட—”அஞ்சவேண்டாம்”; இதி—இவ்வாறு; கிரா—வார்த்தைகளால்; ஆஸ்வாஸ்ய—அமைதிப்படுத்தினார்; வ்ருஷ-அஸுரம்—விருஷபாசுரனை; உபாஹ்வயத்—அவர் அழைத்தார்.

ஆயர்குலத்தினர் குழப்பமுற்று அச்சத்தினால் ஓடிவருவதைத் கண்டவுடன் பரமபுருஷபகவான் அவர்களை “அஞ்ச வேண்டாம்” என்று கூறி அமைதிப்படுத்தினார். பிறகு அவர் விருஷபாசுரனைப் பின் வருமாறு அழைத்தார்.

பதம் 10.36.7
கோபாலை: பஸுபிர் மந்த த்ராஸிதை: கிம் அஸத்தம
மயி ஸாஸ்திரி துஷ்டானாம் த்வத்-விதானாம் துராத்மனாம்

கோபாலை:—கோபாலர்களையும்; பஸுபி:—அவர்களின் விலங்குகளையும்; மந்த—ஓ, மூடனே; த்ராஸிதை:—அச்சுறுத்தப்படுகின்றனர்; கிம்—எதற்காக; அஸத்தம—ஓ, கேடுகெட்டவனே; மயி—நான் (இருக்கும்பொழுது); ஸாஸ்திரி—தண்டிப்பவனாக; துஷ்டானாம்—துஷ்டர்களை; த்வத்-விதானாம்—உன்னைப் போன்ற; துராத்மனாம்—துராத்மாக்களை.

மூடனே! நீ இவ்வாறு செய்வதின் நோக்கமென்ன கேடுகெட்டவனே, உன்னைப் போன்ற துஷ்டர்களைத் தண்டிப்பதற்காக நான் இங்கே இருக்கும்பொழுது நீ ஆயர்குலத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அச்சுறுத்துகின்றாயே.

பதம் 10.36.8
இதி ஆஸ்போத்யாச்யுதோ ‘ரிஷ்டம் தல-ஸப்தேன கோபயன்
ஸக்யுர் அம்ஸே புஜாபோகம் ப்ரஸார்யாவஸ்திதோ ஹரி:

இதி—இவ்வாறு கூறியபடி; ஆஸ்போத்ய—தமது புஜங்களைத் தட்டியபடி; அச்யுத:—குற்றமற்ற பகவான்; அரிஷ்டம்—அரிஷ்டாசுரன்; தல—தமது கரதலத்தினால்; ஸப்தேன—ஒலி எழும்பி; கோபயன்—சின மூட்டினார்; ஸக்யு:—ஒரு நண்பனின்; அம்ஸே—தோளின் மீது; புஜ—தமது மேற்கரத்தினை; ஆபோகம்—பாம்பின் உடலை (போன்றிருந்த); ப்ரஸார்ய—போட்டபடி; அவஸ்தித:—நின்று கொண்டிருந்தார்; ஹரி:—பகவான் ஹரி.

இவ்வாறு கூறியபடி குற்றமற்றவரான பகவான் ஹரி தமது கரதலத்தினால் அவரது புஜங்களைத் தட்டி ஓசை எழுப்பி அரிஷ்டாசுரனை மேலும் சினங்கொள்ளச் செய்தார். பிறகு பகவான் தமது வலிமைமிக்கதும், பாம்பின் உடலைக் போன்றும் தோன்றுகின்ற கரத்தினை ஒரு நண்பனின் தோளில் போட்டபடி அவ்வசுரனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

பதம் 10.36.9
ஸோ ‘பி ஏவம் கோபிதோ ‘ரிஷ்ட: குரேணாவனிம் உல்லிகன்
உத்யத்-புச்ச-ப்ரமன்-மேக: க்ருத்: க்ருஷ்ணம் உபாத்ரவத்

ஸ:—அவர்; அபி—உண்மையில்; ஏவம்—இவ்வாறு; கோபித:—சின மூட்டப்பட்ட; அரிஷ்ட:—அரிஷ்டன்; குரேண—தனது காலடிக் குளம்புகளினால்; அவனிம்—நிலத்தை; உல்லிகன்—கீறிக் கொண்டு; உத்யத்—உயர்ந்த; புச்ச—தனது வாலினால்; ப்ரமன்—திரிகின்ற; மேக—மேகங்கள்; க்ருத்:—குரோதமுடன்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணரை நோக்கி; உபாத்ரவத்—பாய்ந்தான்.

இவ்வாறு சினமூட்டப்பட்ட அரிஷ்டாசுரன் தனது காலடிக் குளம்பினால் நிலத்தினை உதைத்தான். பிறகு மேகங்கள் தவழ்கின்ற வானை நோக்கி உயர்த்தப்பட்ட வாலுடன், மிகவும் குரோதமுடையவனாக கிருஷ்ணரை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

பதம் 10.36.10
அக்ரன்யஸ்த-விஷாணாக்ர: ஸ்தப்தாஸ்ருக்-லோசனோ ‘ச்யுதம்
கடாக்ஷிப்யாத்ரவத் தூர்ணம் இந்த்ர-முக்தோ ‘ஸனிர் யதா

அக்ர—முன்னோக்கி; ந்யஸ்த—குத்திட்டு நின்ற; விஷாண—அவனுடைய கொம்புகளின்; அக்ர:—முன்; ஸ்தப்த—பளபளக்கும்; அஸ்ருக்—இரத்தமயமான; லோசன:—அவனுடைய விழிகள்; அச்யுதம்—பகவான் கிருஷ்ணரை; கட-ஆக்ஷிப்ய—பக்கப்பார்வை பார்த்துக்கொண்டே; அத்ரவத்—அவன் ஓடிவந்தான்; தூர்ணம்—முழு வேகத்தில்; இந்த்ரா-முக்த—தேவேந்திரனால் எறியப்பட்ட; அஸனி:—வஜ்ராயுதம்; யதா—போன்று.

தனது கொம்புகளின் கூர்மையான நுனிகளை முன்னோக்கி வைத்த படியும், இரத்தமயமான தனது விழிகளின் ஓரங்களினால் பகவான் கிருஷ்ணரைக் குரோதத்துடன் பார்த்தபடியும், அரிஷ்டாசுரன், இந்திரனால் எறியப்பட்ட வஜ்ராயுதம் போன்று முழு வேகத்துடன் அவரை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

பதம் 10.36.11
க்ருஹீத்வா ஸ்ருங்கயோஸ் தம் வா அஷ்டாதஸ பதானி ஸ:
ப்ரத்யபோவாஹ பகவான் கஜ: ப்ரதி-கஜம் யதா

க்ருஹீத்வா—பிடித்து; ஸ்ருங்கயோ:—கொம்புகளை; தம்—அவனை; வை—உண்மையில்; அஷ்டாதஸ—பதினெட்டு; பதானி—அடிகள்; ஸ:—அவர்; ப்ரத்யபோவாஹ—தூக்கி எறிந்தார்; பகவான்—பரமபுருஷ பகவான்; கஜ:—ஓர் யானை; ப்ரதி-கஜம்—தன்னுடைய பகையானையை; யதா—போன்று.

பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் அதிர்ஷ்டாசுரனின் கொம்புகளைப் பற்றித் தனது பகையானையுடன் சண்டை செய்யும்போது ஓர் யானை செய்வது போல் அவனை பதினெட்டு அடிகள் தூரத்தில் தூக்கி எறிந்தார்.

பதம் 10.36.12
ஸோ ‘பவித்தோ பகவதா புனர் உத்தாய ஸத்வரம்
ஆபதத் ஸ்வின்ன-ஸர்வாங்கோ நி: ஸ்வஸன் க்ரோத-மூர்ச்சித:

ஸ:—அவன்; அபவித்த:—தூக்கி எறியப்பட்டான்; பகவதா—பகவானால்; புன:—மீண்டும்; உத்தாய—எழுந்து; ஸத்வரம்—விரைந்து; ஆபதத்—தாக்கினான்; ஸ்வின்ன—வேர்வை நீரோட; ஸர்வ—அனைத்து; அங்க:—அவனுடைய அங்கங்களினாலும்; நி: ஸ்வஸன்—பெருமூச்சுவிட்டபடி; க்ரோத—குரோதத்தினால்; மூர்ச்சித:—மந்தமதி உடையவனாக.

பரமபுருஷ பகவானால் இவ்வாறு தோற்கடிக்கப்பட்டவுடன் விருஷபாசுரன் எழுந்துநின்று பெருமூச்சுவிட்டான். அவனது உடலெங்கும் வேர்வை பெருக்கெடுத்து ஓடியது. அவன் ஆத்திரத்தில் மந்தமதி கொண்டு மீண்டும் அவரைத் தாக்குவதற்காகப் பாய்ந்தான்.

பதம் 10.36.13
தம் ஆபதந்தம் ஸ நிக்ருஹய ஸ்ருங்கயோ:
பதா ஸமாக்ரம்ய நிபாத்ய பூ-தலே
நிஷ்பீடயாம் ஆஸ யதார்த்ரம் அம்பரம்
க்ருத்வா விஷாணேன ஜகான ஸோ ‘பதத்

தம்—அவனை; ஆபதந்தம்—தாக்கிய; ஸ:—அவர்; நிக்ருஹ:—பற்றி; ஸ்ருங்கயோ:—கொம்புகளை; பதா—அவரது பாதத்தினால்; ஸமாக்ரம்ய—மிதித்து; நிபாத்ய—கீழே விழும்படிச் செய்தார்; பூ-தலே—நிலத்தின் மீது; நிஷ்பீடயம் ஆஸ—அவர் அவனை அடித்தார்; யதா—போன்று; அர்த்ரம்—ஈரமான; அம்பரம்—ஓர் துணியை; க்ருத்வா—செய்தார்; விஷாணேன—அவருடைய கொம்பினால்; ஜகான—தாக்கி; ஸ:—அவர்; அபதத்—வீழ்த்தினார்.

அரிஷ்டாசுரன் தாக்கியபொழுது பகவான் கிருஷ்ணர் அவனது கொம்புகளைப் பற்றி நிறுத்தித் தமது பாதத்தினால் அவனைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தினார். பிறகு பகவான் அவனை ஒரு ஈரத்துணியை அடித்துத் துவைப்பது போல் நிலத்தில் துவைத்தார். இறுதியாக அவர் அவனது கொம்புகளில் ஒன்றைப் பிடுங்கி, அதனைக் கொண்டே அவன் கீழே விழும் வரை தாக்கினார்.

பதம் 10.36.14
அஸ்ருக்வமன் மூத்ர-ஸக்ருத் ஸமுத்ஸ்ருஜன்
க்ஷிபம்ஸ் ச பாதான் அனவஸ்திதேக்ஷண:
ஜகாம க்ருச்ச்ரம் நிர்ருதேர் அத க்ஷயம்
புஸ்பை: கிரந்தோ ஹரிம் ஈடிரே ஸுரா:

ஆஸ்ருக்—இரத்தம்; வமன்—வாந்தியெடுத்து; மூத்ர—மூத்திரமும்; ஸக்ருத்—சாணமும்; ஸமுத்ஸ்ருஜன்—தொடர்ந்து கழிந்து; க்ஷிபம்ஸ்—எறியவும்; ச—மற்றும்; பாதான்—அவனது கால்கள்; அனவஸ்தித—தளர்வுற்று; ஈஷண:—அவனுடைய விழிகள்; ஜகாம—அவன் சென்றான்; க்ருச்ச்ரம்—இடத்திற்கு; நிர்ருதே:—மரணத்தின்; அத—பிறகு; க்ஷயம்—இருப்பிடம்; புஷ்பை:—புஷ்பங்களை; கிரந்த:—பொழிந்தனர்; ஹரிம்—பகவான் கிருஷ்ணர் மீது; ஈடிரே—வணங்கினர்; ஸுரா:—தேவர்கள்.

இரத்த வாந்தியெடுத்து, மூத்திரமும், சாணமும் தொடர்ந்து கழிந்து தனது கால்களை உதைத்து, கண்களைச் சுழற்றி, இவ்வாறு அரிஷ்டாசுரன் மிகுந்த வேதனையுடன் மரணத்தின் இருப்பிடம் சென்றான். தேவர்கள் பகவான் கிருஷ்ணர்மீது மலர்மாரி பொழிந்து அவரைப் போற்றித் துதித்தனர்.

பதம் 10.36.15
ஏவம் குகுத்மினம் ஹத்வா ஸ்தூயமான: த்விஜாதிபி:
விவேஸ கோஷ்டம் ஸ-பலோ கோபீனாம் நயனோத்ஸவ:

ஏவம்—இவ்வாறு; குகுத்மினம்—திமிலையுடையவனை (விருஷபாசுரனை); ஹத்வா—கொன்று; ஸ்தூயமான:—போற்றப்பட்டு; த்விஜாதிபி:—அந்தணர்களால்; விவேஸ—அவர் புகுந்தார்; கோஷ்டம்—கோகுலத்தில்; ஸ-பல:—பகவான் பலராமருடன் சேர்ந்து; கோபீனாம்—கோபியர்களின்; நயன—விழிகளுக்கு; உத்ஸவ:—உற்சவமாக விளங்குபவர்.

இவ்வாறு அரிஷ்டன் என்னும் காளை அசுரனைக் கொன்ற பிறகு, கோபியர்களின் கண்களுக்கு உற்சவமாக விளங்கும் அவர் பலராமருடன் சேர்ந்து கோகுலத்தினுள் நுழைந்தார்.

பதம் 10.36.16
அரிஷ்டே நிஹதே தைத்யே க்ருஷ்ணேனாத்புத-கர்மணா
கம்ஸாயாதாஹ பகவான் நாரதோ தேவ-தர்ஸன:

அரிஷ்டே—அரிஷ்டாசுரன்; நிஹதே—கொல்லப்பட்டான்; தைத்யே—அசுரன்; க்ருஷ்ணேன—கிருஷ்ணரால்; அத்புத-கர்மணா—அவரது செயல்கள் அற்புதமானவை; கம்ஸாய—கம்சனிடம்; அத—பின்னர்; ஆஹ—கூறினார்; பகவான்—ஆற்றல்மிக்க முனிவர்; நாரத:—நாரதர்; தேவ-தர்ஸன:—தெய்வீகப் பார்வையுடையவர்.

அற்புதத் செயல்கள் புரியும் கிருஷ்ணரால் அரிஷ்டாசுரன் கொல்லப்பட்ட பின்னர் நாரத முனிவர் கம்சனைக் காண்பதற்காகச் சென்றார். தெய்வீகப் பார்வையுடைய ஆற்றல் மிகு அம்முனிவர் மன்னரிடம் பின்வருமாறு பேசலுற்றார்.

பதம் 10.36.17
யஸோதாயா: ஸுதாம் கன்யாம் தேவக்யா: க்ருஷ்ணம் ஏவ ச
ராமம் ச ரோஹிணீ-புத்ரம் வஸுதேவேன பிப்யதா
ந்யஸ்தௌ ஸ்வ-மித்ரே நந்தே வை யாப்யாம் தே புருஷா ஹதா:

யஸோதாயா:—யசோதையின்; ஸுதாம்—புதல்வி; கன்யாம்—பெண்குழந்தை; தேவக்யா:—தேவகியின்; க்ருஷ்ணம்—கிருஷ்ணா; ஏவ ச—மேலும்; ராமம்—பலராமர்; ச—மற்றும்; ரோஹிணீ-புத்ரம்—ரோகிணியின் புதல்வன்; வஸுதேவேன—வசுதேவரால்; பிப்யதா—அச்சங்கொண்டு; ந்யஸ்தௌ—இடப்பெற்றனர்; ஸ்வ-மித்ரே—அவரது நண்பரிடம்; நந்தே—நந்த மகாராஜா; வை—உண்மையில்; யாப்யாம்—அந்த இருவரால்; தே—உனது; புருஷா:—ஆட்கள்; ஹதா:—கொல்லப்பட்டனர்.

(கம்சனிடம் நாரதர் கூறினார்:) உண்மையில் யசோதைக்கு பிறந்தது பெண்குழந்தையாகும். கிருஷ்ணர் தேவகியின் மைந்தராவார். பலராமரோ ரோகிணியின் புதல்வராவார். அச்சத்தின் காரணமாக வசுதேவர் கிருஷ்ணரையும், பலராமரையும் தமது நண்பரான நந்த மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அவர்களிருவரே உமது ஆட்களைக் கொன்றவர்களாவர்.

பதம் 10.36.18
நிஸம்ய தத் போஜ-பதி: கோபாத் ப்ரசலிதேந்த்ரிய:
நிஸாதம் அஸிம் ஆதத்த வஸுதேவ-ஜிகாம்ஸயா

நிஸம்ய—கேட்டவுடன்; தத்—அதனை; போஜ-பதி:—போஜ குலத்தின் தலைவன் (கம்சன்); கோபாத்—சினத்தினால்; ப்ரசலித—துன்புற்றன; இந்த்ரிய:—அவனுடைய புலன்கள்; நிஸாதம்—கூர்மையான; அஸிம்—ஓர் வாள்; ஆதத்த—எடுத்துக்கொண்டு; வஸுதேவ-ஜிகாம்ஸயா—வசுதேவரைக் கொல்லும் எண்ணத்தில்.

இதனைக் கேட்டதும், போஜர்களின் தலைவன் கோபம் கொண்டான். உணர்ச்சிவயப்பட்டுத் தன்னை மறந்தான். கூரிய வாளினை எடுத்து வசுதேவரைக் கொல்லத் துணிந்தான்.

பதம் 10.36.19
நிவாரிதோ நாரதேன தத்-ஸுதௌ-ம்ருத்யும் ஆத்மன:
ஜ்ஞாத்வா லோஹ-மயை: பாஸைர் பபந்த ஸஹ பார்யயா

நிவாரித:—தடுத்து நிறுத்தப்பட்டான்; நாரதேன—நாரதரால்; தத்-ஸுதெள—அவருடைய இரு புதல்வர்களும்; ம்ருத்யும்—இறப்பிற்கு; ஆத்மன:—அவனது; ஜ்ஞாத்வா—புரிந்து கொண்டு; லோஹ-மயை:—இரும்பினாலான; பாஸை:—சங்கிலியால்; பபந்த—அவர் பிணைக்கப்பட்டார்; ஸஹ—சேர்த்து; பார்யயா—அவரது மனைவியுடன்.

ஆனால் நாரதர், வசுதேவரின் இரண்டு புதல்வர்களே அவனது மரணத்திற்குக் காரணமாவர் என்று எடுத்துக்கூறி கம்சனைத் தடுத்து நிறுத்தினார். பிறகு கம்சன் வசுதேவரையும், அவருடைய மனைவியையும் சேர்த்து இரும்புச் சங்கிலியால் பிணைத்தான்.

பதம் 10.36.20
ப்ரதியாதே து தேவர்ஷௌ கம்ஸ ஆபாஷ்ய கேஸினம்
ப்ரேஷயாம் ஆஸ ஹன்யேதாம் பவதா ராம-கேஸவெள

ப்ரதியாதே—சென்றபிறகு; து—பின்னர்; தேவ-ருஷௌ—தேவரிஷி; கம்ஸ:—அரசன் கம்சன்; ஆபாஷ்ய—கூறினான்; கேஸினாம்—அசுரன் கேசியிடம்; ப்ரேஷயாம் ஆஸ—அவனை அனுப்பினான்; ஹன்யேதாம்—அவர்கள் இருவரும் கொல்லப்பட வேண்டும்; பவதா—உன்னால்; ராம-கேஸவௌ—பலராமரும் கிருஷ்ணரும்.

நாரத மகரிஷி அங்கிருந்து சென்ற பின்னர், கம்சராஜன் கேசி என்னும் அசுரனை அழைத்து “ராமரையும், கிருஷ்ணரையும் கொல்வாயாக” என்று கட்டளையிட்டான்.

பதம் 10.36.21
ததோ முஷ்டிக-சாணூர-ஸல-தோஸலகாதிகான்
அமாத்யான் ஹஸ்திபாம்ஸ் சைவ ஸமாஹூயாஹ போஜ-ராட்

தத:—பின்னர்; முஷ்டிக-சாணூர-ஸல-தோஸலக—ஆதிகான், முஷ்டிகன், சாணூரன், சலன், தோசலன், மற்றும் பிறர்; அமாத்யான்—அவனுடைய அமைச்சர்கள்; ஹஸ்தி-பான்—யானைப் பாகர்கள்; ச ஏவ—கூட; ஸமாஹூய—ஒன்றாக அழைத்தான்; ஆஹ—கூறினான்; போஜ-ராட்—போஜர்களின் மன்னன்.

போஜர்களின் மன்னரான கம்சன் பின்னர் முஷ்டிகன், சாணூரன், சலன், தோசலன் போன்றவர்களின் தலைமையின் கீழுள்ள தனது அமைச்சர்களையும், தனது யானைப் பாகர்களையும் அழைத்து வரச்செய்தான். அரசன் அவர்களிடம் பின்வருமாறு கூறினான்.

பதங்கள் 10.36.22 – 10.36.23
போ போ நிஸாம்யதாம் ஏதத் வீர-சாணூர-முஷ்டிகௌ
நந்த-வ்ரஜே கிலாஸாதே ஸுதாவ் ஆனகதுந்துபே:

ராம-க்ருஷ்ணெள ததோ மஹ்யம் ம்ருத்யு: கில நிதர்ஸித:
பவத்ப்யாம் இஹ ஸம்ப்ராப்தெள ஹன்யேதாம் மல்ல-லீலயா

போ: போ:—எனதன்பிற்குரியவர்களே (அமைச்சர்களே); நிஸம்யதாம்—நன்கு கவனியுங்கள்; ஏதத்—இதனை; வீர—ஓ, வீரர்களே; சாணூர-முஷ்டிகௌ—சாணூரன், மற்றும் முஷ்டிகன்; நந்த-வ்ரஜே—நந்தனின் விரஜத்தில்; கில—உண்மையில்; ஆஸாதே—வசிக்கின்றனர்; ஸுதெள—இரண்டு புதல்வர்களும்; ஆனகதுந்துபே:—வசுதேவரின்; ராம-க்ருஷ்ணெள—ராமரும், கிருஷ்ணரும்; தத:—அவர்களிடமிருந்தே; மஹ்யம்—எனது; ம்ருத்யு:—மரணம்; கில—உண்மையில்; நிதர்ஸித:—குறிப்பிடப்பட்டிருக்கிறது; பவத்ப்யாம்—உங்கள் இருவரால்; இஹ—இங்கே; ஸம்ப்ராப்தெள—கொணர்ந்து; ஹன்யேதாம்—அவர்கள் கொல்லப்பட வேண்டும்; மல்ல—மல்யுத்தத்தின்; லீலயா—விளையாட்டு என்னும் சாக்கில்.

எனதன்பிற்குரிய வீரர்களான சாணூரனே, முஷ்டிகனே, இதனைக் கேட்பீராக. ஆனகதுந்துபியின் (வசுதேவரின்) புதல்வர்களான ராமரும், கிருஷ்ணரும் நந்த கோபனின் ஆயர்பாடியில் வசிக்கின்றனர். எனது மரணம் அவ்விருவர்களாலேயே நிகழும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிருவரும் இங்கே கொண்டுவரப்பட்டவுடன், மல்யுத்தம் என்னும் போர்வையில் அவர்களைக் கொல்வீராக.

பதம் 10.36.24
மஞ்ச: க்ரியந்தாம் விவிதா மல்ல-ரங்க-பரிஸ்ரிதா:
பௌரா ஜானபதா: ஸர்வே பஸ்யந்து ஸ்வைர-ஸம்யுகம்

மஞ்ச:—மேடைகள்; க்ரியந்தாம்—அமைக்கப்பட வேண்டும்; விவிதா:—பல்வேறு; மல்ல-ரங்க—மல்யுத்த அரங்கம்; பரிஸ்ரிதா:—சூழந்து; பௌரா:—நகரவாசிகள்; ஜானாபதா:—வெளியூர்வாசிகளும்; ஸர்வே—அனைவரும்; பஸ்யந்து—காண வேண்டும்; ஸ்வைர—தாமாகவே பங்கு கொண்டு; ஸம்யுகம்—போட்டி.

பார்வையாளர் மேடைகள் பல சூழ்ந்திருக்க, மல்யுத்த அரங்கம் ஒன்றினை உருவாக்குங்கள். போட்டியைக் காண்பதற்காக நகரவாசிகளையும், வெளியூர்வாசிகளையும் அழைத்து வாருங்கள்.

பதம் 10.36.25
மஹாமாத்ர த்வயா பத்ர ரங்க-த்வாரி உபனீயதாம்
த்விப: குவலயாபீடோ ஜஹி தேன மமாஹிதெள

மஹா-மாத்ர—ஓ, யானைப் பாகனே; த்வயா—உன்னால்; பத்ர—பாக்கியசாலியே; ரங்க—அரங்கத்தின்; த்வாரி—வாயிலில்; உபனீயதாம்—கொண்டுவரப்படவேண்டும்; த்விப:—யானை; குவலயாபீட:—குவலய பீடம் எனப்படும்; ஜஹி—அழிப்பாயாக; தேன—அதனால் (யானையினால்); மம—எனது; அஹிதெள—பகைவர்களை.

பாக்கியசாலியான எனது யானைப்பாகனே! குவலய பீடம் என்னும் யானையை மல்யுத்த அரங்கத்தின் வாயிலில் நிறுத்தி எனது இரு பகைவர்களையும் கொல்வாயாக.

பதம் 10.36.26
ஆரப்யதாம் தனுர்-யாகஸ் சதுர்தஸ்யாம் யதா-விதி
விஸஸந்து பஸூன் மேத்யான் பூத-ராஜாய மீடுஷே

ஆரப்யதாம்—ஆரம்பிக்கப்படவேண்டும்; தனு:-யாக:—தனுர்யாகம்; சதுர்தஸ்யா:—சதுர்த்தசி அன்று; யதா-விதி—வேத விதிகளுக்கேற்ப; விஸஸந்து—வேள்வியில் அர்ப்பணிக்க; பஸூன்—விலங்குகள்; மேத்யான்—அர்ப்பணிப்பதற்குரிய; பூத-ராஜாய—பூத கணங்களின் தலைவரான சிவபெருமானுக்கு; மீடுஷே—நல்வரம் அருள்பவர்.

சதுர்த்தசியன்று தனுர்யாகத்தினை வேதவிதிகளுக்கேற்பத் தொடங்குதல் வேண்டும். நல்வரம் அருளும் சிவபெருமானுக்கு உரிய மிருகங்களை யாகத்தில் பலியிட வேண்டும்.

பதம் 10.36.27
இதி அஜ்ஞாப்யார்த-தந்த்ர ஜ்ஞ ஆஹூய யது-புங்கவம்
க்ருஹீத்வா பாணினா பாணிம் ததோ ‘க்ருரம் உவாச ஹ

இதி—இவ்வாறான வார்த்தைகளினால்; அஜ்ஞாப்ய—கட்டளையிட்டு; அர்த—சுயநலமும் பயனும்; தந்த்ர—தந்திரம்; ஜ்ஞ:—அறிந்தவன்; ஆஹூய—அழைத்தான்; யது-புங்கவம்—யதுகுலத்தில் சிறந்த; க்ருஹீத்வா—பற்றிக் கொண்டு; பாணினா—தனது கரத்தினால்; பாணிம்—அவருடைய கரத்தினை; தத:—பின்னர்; அக்ரூரம்—அக்ரூரரிடம்; உவாச ஹ—அவன் கூறினான்.

இவ்வாறு தனது அமைச்சர்களுக்குக் கட்டளையிட்ட கம்சன் அடுத்து யதுகுலத்தின் சிறந்த அக்ரூரரை அழைத்து வரச் செய்தான். சுய நல வித்தையில் கைதேர்ந்தவன் கம்சன் ஆதலினால் அவன் அக்ரூரரின் கரங்களைத் தனது கரங்களினால் பற்றிக் கொண்டு அவரிடம் பின்வருமாறு கூறினான்.

பதம் 10.36.28
போ போ தான-பதே மஹ்யம் க்ரியதாம் மைத்ரம் ஆத்ருத:
நான்யஸ் த்வத்தோ ஹிததமோ வித்யதே போஜ-வ்ருஷ்ணிஷு

போ போ—அன்பிற்குரிய; தான—தானத்தின்; பதே—தலைவரே; மஹ்யம்—எனக்கு; க்ரியதாம்—செய்வீராக; மைத்ரம்—ஓர் உதவி; ஆத்ருத:—மரியாதையின் நிமித்தம்; ந—இல்லை; அன்ய:—பிறர்; த்வத்த:—உம்மைவிட; ஹித-தம:—சிறந்த நன்மை செய்பவர்; வித்யதே—இருத்தல்; போஜ-வ்ருஷ்ணிஷு—போஜர்கள் மற்றும் விருஷ்ணிகளில்.

தானத்தில் சிறந்த எனதன்பிற்குரிய அக்ரூரரே, மரியாதையின் நிமித்தம் நீர் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். போஜர்கள் மற்றும் விருஷ்ணிக்களில் எம்மிடம் உம்மைப் போல் அன்பு பூண்டவர் வேறு எவருமிலர்.

பதம் 10.36.29
அதஸ் த்வாம் ஆஸ்ரித ஸௌம்ய கார்ய-கௌரவ-ஸாதனம்
யதேந்த்ரோ விஷ்ணும் ஆஸ்ரித்ய ஸ்வார்த்தம் அத்யகமத் விபு:

அத:—அதனால்; த்வாம்—உம்மை; ஆஸ்ரித:—(நான்) நம்பியிருக்கின்றேன்; ஸௌம்ய—ஒ, மேன்மையானவரே; கார்ய—உரிய கடமைகளை; கௌரவ—மரியாதையுடன்; ஸாதனம்—செய்பவர்; யதா—போன்ற; இந்த்ர—இந்திரன்; விஷ்ணும்—பகவான் விஷ்ணுவை; ஆஸ்ரித்ய—சரண்புகுந்த; ஸ்வ-அர்த்தம்—தனது இலட்சியங்களை; அத்யகமத்—எய்தினான்; விபு:—தேவர்களின் அரசனான ஆற்றல் மிக்க இந்திரன்.

மேன்மை மிகு அக்ரூரரே, நீர் எப்பொழுதும் உமது கடமைகளை மரியாதையுடன் நிறைவேற்றுபவர் ஆவீர். தேவேந்திரன் பகவான் விஷ்ணுவைத் தனது இலட்சியங்கள் ஈடேறுவதற்காகச் சரணடைந்தது போல் நான் இப்போது உம்மை நம்பியே இருக்கின்றேன்.

பதம் 10.36.30
கச்ச நந்த-வ்ரஜம் தத்ர ஸுதாவ் ஆனகதுந்துபே:
ஆஸாதே தாவ் இஹானேன ரதேனானய மா சிரம்

கச்ச—செல்வீர்; நந்த-வ்ரஜம்—நந்த கோபரின் விரஜத்திற்கு; தத்ர—அங்கே; ஸுதெள—இரண்டு புத்திரர்கள்; ஆனகதுந்துபே:—வசுதேவரின்; ஆஸாதே—வசிக்கின்றனர்; தெள—அவர்களை; இஹ—இங்கே; அனேன—இந்த; ரதேன—ரதத்தின் மூலம்; ஆனய—கொணர்வீராக; மா-சிரம்—தாமதமின்றி.

ஆனக துந்துபியின் இரு புதல்வர்களும் வாழும், நந்கோபரின் விரஜத்திற்குச் சென்று, இங்கே அவர்களைத் தாமதமின்றி இந்த ரதத்தில் அழைத்து வருவீராக.

பதம் 10.36.31
நிஸ்ருஷ்ட: கில மே ம்ருத்யுர் தேவைர் வைகுண்ட-ஸம்ஸ்ரயை: தாவ் ஆனய ஸமம் கோபைர் நந்தாத்யை: ஸாப்யுபாயனை:

நிஸ்ருஷ்ட:—அனுப்பப்பட்டவர்கள்; கில—உண்மையில்; மே—எனது; ம்ருத்யு:—மரணத்திற்காக; தேவை:—தேவர்களால்; வைகுண்ட—பகவான் விஷ்ணுவின்; ஸம்ஸ்ரயை:—சரணடைந்தவர்கள்; தெள—அவர்களிருவரையும்; ஆனய—கொண்டு வருவீராக; ஸமம்—உடன் சேர்த்து; கோபை:—கோபாலர்களையும்; நந்த-ஆத்யை:—நந்தகோபரின் தலைமையின் கீழுள்ள; ஸ—உடன்; அப்யுபாயனை:—பரிசுப் பொருட்கள்.

விஷ்ணுவின் பாதுகாப்பின் கீழுள்ள தேவர்கள் எனது மரணத்திற்காக இந்த இரு சிறுவர்களையும் அனுப்பியுள்ளனர். அவர்களிருவரையும் இங்கு அழைத்து வருவீராக. மேலும் நந்தகோபரையும், ஆயர்களையும் கூட மரியாதையின் நிமித்தம் பரிசுப் பொருட்களுடன் அழைத்து வரவும்.

பதம் 10.36.32
காதயிஷ்ய இஹானீதெள கால-கல்பேன ஹஸ்தினா
யதி முக்தெள ததோ மல்லைர் காதயே வைத்யுதோபமை:

காதயிஷ்யே—நான் அவர்களைக் கொல்லச் செய்வேன்; இஹ—இங்கே; ஆனீதெள—கொண்டுவந்து; கால-கல்பேன—மரணத்தைப் போன்ற; ஹஸ்தினா—யானையினால்; யதி—ஒரு வேளை; முக்தௌ—அவர்கள் தப்பிவிட்டால்; தத:—பிறகு; மல்லை:—மல்யுத்த வீரர்களால்; காதயே—நான் கொல்லச் செய்வேன்; வைத்யுத—மின்னலை; உபமை:—போன்ற.

கிருஷ்ணரையும், பலராமரையும் நீர் இங்கே கொண்டு வந்தபிறகு, நான் அவர்களிருவரையும் மரணத்தைப் போன்ற சக்தியுடைய எனது யானையினால் கொல்லச் செய்வேன். சந்தர்ப்ப வசத்தினால் அவர்கள் தப்பிவிட்டார்களென்றால் மின்னலைப் போன்று வலிமையுடைய எனது மல்யுத்த வீரர்களால் நான் அவர்களைக் கொல்லச் செய்வேன்.

பதம் 10.36.33
தயோர் நிஹதயோஸ் தப்தான் வஸுதேவ-புரோகமான்
தத் பந்தூன் நிஹனிஷ்யாமி வ்ருஷ்ணி-போஜ-தஸார்ஹகான்

தயோ:—அவர்களிருவரும்; நிஹதயோ:—கொல்லப்பட்டவுடன்; தப்தான்—வேதனைப்படும்; வஸுதேவ-புரோகமான்—வசுதேவரின் தலைமையின் கீழுள்ள; தத்-பந்தூன்—அவர்களது உறவினர்களையும்; நிஹனிஷ்யாமி—நான் கொல்வேன்; வ்ருஷ்ணி-போஜ-தஸார்ஹகான்—விருஷ்ணிக்களையும், போஜர்களையும், தாசரதர்களையும்.

அவ்விருவர்களும் கொல்லப்பட்டவுடன், வேதனையில் ஆழ்ந்திருக்கும் வசுதேவரையும் அவரது உறவினர்களான விருஷ்ணிக்களையும், போஜர்களையும், தாசரதர்களையும் கொல்வேன்.

பதம் 10.36.34
உக்ரஸேனம் ச பிதரம் ஸ்தவிரம் ராஜ்ய-காமுகம்
தத்-ப்ராதரம் தேவகம் ச யே சான்யே வித்விஷோ மம

உக்ரஸேனம்—மன்னர் உக்ரசேனன்; ச—மற்றும்; பிதரம்—எனது தந்தை; ஸ்தவிரம்—வயதான; ராஜ்ய—இராஜ்ஜியத்திற்காக; காமுகம்—ஆசைகொண்டவர்; தத்-ப்ராதரம்—அவருடைய சகோதரன்; தேவகம்—தேவகளையும்; ச—மற்றும்; யே—இவர்களையும்; ச—மற்றும்; அன்யே—பிறரையும்; வித்விஷ:—பகைவர்களையும்; மம—எனது.

மேலும் நான், எனது இராஜ்ஜியத்தின் மீது ஆசை கொண்ட என் வயதான தந்தை உக்கிரசேனனையும், அவரது சகோதரர் தேவகளையும், எனது பிற பகைவர்கள் அனைவரையும் கூடக் கொல்வேன்.

பதம் 10.36.35
ததஸ் சைஷா மஹீ மித்ர பவித்ரீ நஷ்ட-கண்டகா

தத:—பிறகு; ச—மற்றும்; ஏஷா—இந்த; மஹீ—பூமி; மித்ர—ஓ, நண்பரே; பவித்ரீ—இருக்கும்; நஷ்ட—அழிக்கப்படுவது; கண்டகா—அதன் முட்கள்.

பிறகு, எனது நண்பரே, இப்பூமி, குத்தும் முட்களின்றி இருக்கும்.

பதம் 10.36.36
ஜராஸந்தோ மம குருர் த்விவிதோ தயித: ஸகா
ஸம்பரோ நரகோ பாணோ மய்ய் ஏவ க்ருத-ஸௌஹ்ருதா:
தைர் அஹம் ஸுர-பக்ஷியான் ஹத்வா போக்ஷ்யே மஹீம் ந்ருபான்

ஜராஸந்த:—ஜராசந்தன்; மம—எனது; குரு:—மூத்தவர் (மாமனார்); த்விவித:—துவிவிதன்; தயித:—அன்பிற்குரிய; ஸகா—நண்பன்; ஸம்பர:—சம்பரன்; நரக:—நரகன்; பான:—பாணன்; மயி—எனக்கு; ஏவ—உண்மையில்; க்ருத-ஸௌஹ்ருதா:—உறுதியான நட்புடையவர்கள்; தை:—அவர்களோடு; அஹம்—நான்; ஸுர—தேவர்களின்; பக்ஷீயன்—கூட்டணி வைத்திருப்பவர்கள்; ஹத்வா—கொன்று; போக்ஷ்யே—மகிழ்வேன்; மஹீம்—பூமி; ந்ருபான்—அரசர்கள்.

எனது மூத்த உறவினரான ஜராசந்தனும், எனதன்பிற்குரிய நண்பன் துவிவிதனும், சம்பரனையும், நரகனையும், பாணனையும் போன்று எனது நலன் விரும்பிகளாவர். அவர்களின் உதவியுடன் தேவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் இங்குள்ள அரசர்கள் அனைவரையும் கொன்று பின்னர் நான் இந்த பூமியை ஆள்வேன்.

பதம் 10.36.37
ஏதஜ் ஜ்ஞாத்வானய க்ஷிப்ரம் ராம-க்ருஷ்ணாவ் இஹர்பகௌ
தனுர்-மக-நிரீக்ஷர்தம் த்ரஷ்டும் யது-புர-ஸ்ரியம்

ஏதத்—இதனை; ஜ்ஞாத்வா—அறிந்து கொண்டு; ஆனய—கொண்டு வருக; க்ஷிப்ரம்—விரைந்து; ராம-க்ருஷ்ணௌ—ராமரையும், கிருஷ்ணரையும்; இஹ—இங்கே; அர்பகௌ—சிறுவர்கள்; தனு:-மக—தனுர்யாகம்; நிரீக்ஷ-அர்தம்—காண்பதற்கும்; த்ரஷ்டும்—பார்ப்பதற்கு; யது-புர—யது குலத்தின் தலைநகரை; ஸ்ரியம்—வளத்தினை.

இப்போது எனது எண்ணத்தினை நீர் அறிந்திருப்பீர். ஆகையினால் உடனே சென்று கிருஷ்ணரையும், பலராமரையும், தனுர் யாகத்தினைக் காண்பதற்கும், யதுக்களின் தலைநகர் வளத்தினைக் காண்பதற்கும் அழைத்து வருவீராக.

பதம் 10.36.38
ஸ்ரீ-அக்ரூர உவாச
ராஜன் மணீஷிதம் ஸத்ர்யக் தவ ஸ்வாவத்ய-மார்ஜனம்
ஸித்தி-அஸித்த்யோ: ஸமம் குர்யாத் தைவம் ஹி பல-ஸாதனம்

ஸ்ரீ-அக்ரூர: உவாச—ஸ்ரீ அக்ரூரர் கூறினார்; ராஜன்—ஓ, ராஜனே; மணீஷிதம்—நினைப்பு; ஸத்ர்யக்—நிறைவானது; தவ—உமது; ஸ்வ—உமக்குரிய; அவத்ய—துரதிர்ஷ்டம்; மார்ஜனம்—அது நீங்கச் செய்யும்; ஸித்தி-அஸித்த்யோ:—வெற்றி, தோல்வி இரண்டினையும்; ஸமம்—சமமாக; குர்யாத்—ஒருவன் செயல்பட வேண்டும்; தைவம்—விதி; ஹி—சாதாரணமாக; பல—பலன், விளைவு; ஸாதனம்—எய்துவதின் காரணம்.

ஸ்ரீ அக்ரூரர் கூறினார்: “ஓ, மன்னரே, துரதிரிஷ்டம் வராதிருப்பதற்காக நீர் ஒரு வழிமுறையினை மிகுந்த தேர்ச்சியுடன் வடிவமைத்திருக்கின்றீர். ஒருவனது செயலின் பலனை விதியே நிர்ணயிப்பதினால் வெற்றி, தோல்வியினிடத்து ஒருவன் சமமாக இருத்தல் வேண்டும்.”

பதம் 10.36.39
மனோரதான் கரோதி உச்சைர் ஜனோ தைவ-ஹதான் அபி
யுஜ்யதே ஹர்ஷ-ஸோகாப்யாம் ததாபி அஜ்ஞாம் கரோமி தே

மனோ:-ரதான்—அவனுடைய விருப்பங்கள்; கரோதி—செய்கிறான்; உச்சை:—தீவிரமாக; ஜன:—சாதாரண மனிதன்; தைவ—விதியினால்; ஹதான்—தடைசெய்யப்பட்ட; அபி—போதிலும் கூட; யுஜ்யதே—அவன் போராடுகிறான்; ஹர்ஷ-ஸோகாப்யாம்—இன்ப துன்பத்தினால்; ததா அபி—இருந்தும்; அஜ்ஞாம்—கட்டளையினை; கரோமி—நான் நிறைவேற்றுவேன்; தே—உமது.

சாதாரண மனிதன், தனது விருப்பங்களை நிறைவேற்றவிடாது விடுத்த போதிலும்கூட அவன் தனது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதில் தீவிரமாக இருக்கிறான். அதனால் அவன் இன்பம் துன்பம் என்னும் இரண்டினையும் எதிர்கொள்கிறான். எது எப்படி இருந்த போதிலும், உமது கட்டளையினை நான் நிறைவேற்றுவேன்.

பதம் 10.36.40
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம் ஆதிஸ்ய சாக்ரூரம் மந்திரிணஸ் ச விஸ்ருஜ்ய ஸ:
ப்ரவிவேஷ க்ருஹம் கம்ஸஸ் ததாக்ரூர: ஸ்வம் ஆலயம்

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஆதிஸ்ய—கட்டளையிட்டு; ச—மற்றும்; அக்ரூரம்—அக்ரூரர்; மந்த்ரிண:—அவனுடைய அமைச்சர்கள்; ச—மேலும்; விஸ்ருஜ்ய—முடித்துவைத்து; ஸ:—அவன்; ப்ரவிவேஸ—புகுந்தான்; க்ருஹம்—அவனது அந்தப்புரத்திற்கு; கம்ஸ:—கம்சன்; ததா—கூட; அக்ரூர:—அக்ரூரர்; ஸ்வம்—தமது; ஆலயம்—இல்லம்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அக்ரூரருக்கு இவ்வாறு கட்டளையிட்டபின் கம்ச மன்னன் தனது அமைச்சர்களுக்கு விடை கொடுத்து தனது அந்தப்புரத்திற்குச் சென்றான். அக்ரூரரும் தமது இல்லம் திரும்பினார்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “அரிஷ்டாசுரனை வதம் செய்தல்” எனும் தலைப்பை கொண்ட முப்பத்தாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare