அத்தியாயம் – 22
கிருஷ்ணர் இளங்கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்
பதம் 10.22.1
ஸ்ரீ-ஸுக உவாச
ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த-வ்ரஜ-குமாரிகா:
சேருர் ஹவிஷ்யம் புஞ்ஜானா: காத்யாயனி-அர்ச்சன-வ்ரதம்
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஹேமந்தே—குளிர்காலத்தில்; ப்ரதமே—முதலில்; மாஸி—மாதம்; நந்த-வ்ரஜ—நந்த மகாராஜாவின் விரஜ கிராமத்தில்; குமாரிகா:—மணமாகாத குமரிப்பெண்களள்; சேரு:—மேற்கொண்டனர்; ஹவிஷ்யம்—ஹவிஷ்யான்னம்; புஞ்ஜானா:—உண்டு வாழ்ந்தனர்; காத்யாயனீ—தேவி காத்யாயனீ; அர்ச்சன—வ்ரதம் விரத வழிபாடு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குளிர்காலத்தின் முதல் மாதத்தில் (மார்கழி மாதம்) கோகுலத்தில் உள்ள மணமாகாத குமரிப் பெண்கள் காத்யாயனீ தேவியை விரதமிருந்து வழிபடுவர். அம்மாதம் முழுவதும் அவர்கள் மசாலா சேர்க்காத ஹவிஷ்யான்னத்தை மட்டுமே உண்பர்.
பதங்கள் 10.22.2 – 10.22.3
ஆப்லுத்யாம்பஸி காளிந்த்யா ஜலாந்தே சோதிதே ‘ருணே
க்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீம் அநார்சுர் ந்ருல னஸகதீம்
கந்தைர் மால்யை: ஸீரபிபிர் பலிபிர் தூப-தீபகை:
உச்சாவசைஸ் சோபஹாரை: ப்ரவான-பல-தண்டுலை:
ஆப்லூத்ய—நீராடி; அம்பஸி—நீரில்; காளிந்த்யா:—யமுனை நதியின்; ஜல-அந்தே—நதிக்கரையில்; ச—மற்றும்; உதிதே—எழுந்தவுடன்; அருணே—காலைக் கருக்கலில்; க்ருத்வா—செய்வர்; ப்ரதி-க்ருதிம்—ஒரு பிரதிமை; தேவீம்—தேவி; அநார்சு:—வழிபட்டனர்; ந்ருப—ஓ, பரீக்ஷித்து மன்னனே; னஸகதீம்—மண்ணால் செய்யப்பட்ட; கந்தை:—சந்தனம் மற்றும் பிற நறுமணப் பொருட்களுடன்; மால்யை:—மாலைகளுடன்; ஸுரபிபி:—நறுமணம்; பலிபி:—பூஜைப் பொருட்களுடன்; தூப-தீபகை:—தூப தீபங்களுடன்; உச்ச-அவசை:—எளிமையாகவும் அதே சமயம் வளமிக்கதாகவும்; ச—மற்றும்; உபஹாரை:—அன்பளிப்புக்களுடன்; ப்ரவான—இளந்தளிர்கள்; பல—பழங்கள்; தண்டுலை:—வெற்றிலை பாக்குடன்.
அன்பிற்குரிய மன்னா, அருணோதயத்திற்குச் சிறிது முன்பு காலைக் கருக்கலில் யமுனை நதியில் நீராடி கோபியர்கள் நதிக்கரையில் மண்ணைக் கொண்டு துர்காதேவியின் பிரதிமை ஒன்றைச் செய்தனர். பிறகு அவர்கள் அத்தேவியை எளிமையும் வளமும் நிறைந்த சந்தனம், பழங்கள், வெற்றிலை பாக்கு, இளந்தளிர்கள், நறுமணமலர் மாலைகள், போன்றவற்றை அர்ப்பணித்து, விளக்குகள் ஏற்றி, தூப தீபங்கள் காட்டி வழிபட்டனர்.
பதம் 10.22.4
காத்யாயனி மஹா-மாயே மஹா-யோகினி அதீஸ்வரி
நந்த-கோப-ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:
இதி மந்த்ரம் ஜபந்த்ய தா: பூஜாம் சக்ரு: குமாரிகா:
காத்யாயனி—ஓ, காத்யாயனி தேவியே; மஹா-மாயே—ஓ, மகாமாயையே; மஹா-யோகினி—ஓ, மகா யோகசக்தி உடையவளே; அதீஸ்வரி—ஓ, எல்லாம்வல்ல ஈஸ்வரியே; நந்த-கோப-ஸுதம்—நந்த மகாராஜாவின் மைந்தன்; தேவி—ஓ, தேவியே; பதிம்—மணாளன்; மே—எனது; குரு—அருள்வாயாக; தே—உனக்கு; நம:—எனது வந்தனங்கள்; இதி—இவ்வார்த்தைகளுடன்; மந்த்ரம்—மந்திரம்; ஜபந்த்ய:—ஜெபித்து; தா:—அவர்கள்; பூஜாம்—பூஜை; சக்ரு:—செய்தனர்; குமாரிகா:—கன்னிப்பெண்கள்.
பின்வரும் மந்திரத்தை ஓதி கன்னிப்பெண்கள் அனைவரும் அத்தேவியை வழிபட்டனர்: “ஓ, காத்யாயனீ தேவியே, ஒ, பகவானின் மகாசக்தியே, ஓ, மகா யோக சக்தி உடையவளே, ஓ, எல்லாம் வல்ல ஈஸ்வரியே, நந்த மகாராஜாவின் மைந்தனை எனது மணாளனாக்குவாயாக. உனக்கு எனது வந்தனங்கள். “
பதம் 10.22.5
ஏவம் மாஸம் வ்ரதம் சேரு: குமார்ய: க்ருஷ்ண-சேதஸ
பத்ரகாளீம் ஸமானர்கர் பூயான் நந்த-ஸுத: பதி:
ஏவம்—இவ்வாறு; மாஸம்—ஒரு மாத காலம்; வ்ரதம்—அவர்களது விரதத்தை; சேரு—நிறைவேற்றினர்; குமார்ய:—அக்குமரிப் பெண்கள்; க்ருஷ்ண-சேதஸ:—கிருஷ்ணரில் மனம் ஆழ்ந்து; பத்ர-காளீம்—காத்யாயனி தேவியை; ஸமானர்க:—அவர்கள் முறையாக வழிபட்டனர்; பூயாத்—அவர் ஆவாராக; நந்த-ஸுத:—நந்த புத்திரர்; பதி:—என் கணவராக.
இவ்வாறு அக்குமரிப் பெண்கள் ஒரு மாத காலம் தங்கள் விரதத்தை அனுஷ்டித்து, பத்ரகாளியை முறையாக வழிபட்டனர். அவர்கள், “நந்த புத்திரர் எனக்குக் கணவராக வேண்டும்” என்று தியானித்தபடி, கிருஷ்ணரில் தங்கள் மனங்களை மூழ்கடித்தனர்.
பதம் 10.22.6
ஊஷஸி உத்தாய கோத்ரை: ஸ்வைர்
அன்யோன்யாபத்த-பாஹவ:
க்ருஷ்ணம் உச்சைர் ஜகுர் யாந்த்ய:
காளிந்த்யாம் ஸ்நா தும் அன்வஹம்
ஊஷஸி—காலைக் கருக்கலில்; உத்தாய—எழுந்து; கோத்ரை—அவர் தம் பெயர்களால்; ஸ்வை:—உரிய; அன்யோன்ய—ஒருவரோடொருவர்; ஆபத்த—பற்றிக் கொண்டு; பாஹவ:—அவர்களது கரங்களை; க்ருஷ்ணம்—கிருஷ்ணரின் புகழை; உச்சை:—உரத்தக் குரலில்; ஜகு:—அவர்கள் பாடினர்; யாந்த்ய:—செல்லும்பொழுது; காளிந்த்யாம்—யமுனை நதிக்கு; ஸ்நாதும்—நீராடுவதற்காக; அனு-அஹம்—ஒவ்வொரு நாளும்.
அவர்கள் அனைவரும் காலைக்கருக்கலில் எழுந்து ஒவ்வொரு பெண்ணையும் பெயர்சொல்லி அழைத்து, ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கீர்த்திகளை உரத்த குரலில் பாடிக்கொண்டே காளிந்தி நதிக்கு நீராடச் செல்வர்.
பதம் 10.22.7
நத்யா: கதாசித் ஆகத்ய தீரே நிக்ஷிப்ய பூர்வ-வத்
வாஸாம்ஸி க்ருஷ்ணம் காயந்த்யோ விஜஹ்ரு: ஸலிலே முதா
நத்யா:—நதியின்; கதாசித்—ஒருமுறை; ஆகத்ய—வந்து; தீரே—கரைக்கு; நிக்ஷிப்ய—கீழே போட்டுவிட்டு; பூர்வ-வத்—முன்புபோல்; வாஸாம்ஸி—அவர்களது ஆடைகளை; க்ருஷ்ணம்—கிருஷ்ணரைப் பற்றிய; காயந்த்ய:—பாடிக்கொண்டு; விஜஹ்ரு:—அவர்கள் விளையாடினர்; ஸலிலே—நீரில்; முதா—மகிழ்ச்சியுடன்.
ஒருநாள் அவர்கள் நதிக்கரைக்கு வந்து முன்புபோல் ஆடைகளைக் களைந்து கீழே வைத்து விட்டு கிருஷ்ணரின் கீர்த்திகளைப் பாடியபடியே நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
பதம் 10.22.8
பகவாம்ஸ் தத் அபிப்ரேத்ய க்ருஷ்ணோ யோகேஸ்வரேஸ்வர:
வயஸ்யைர் ஆவ்ருதஸ் தத்ர கதஸ் தத்-கர்ம-ஸித்தயே
பகவான்—முழுமுதற்கடவுள்; தத்—அது; அபிப்ரேத்ய—கண்டு; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; யோக-ஈஸ்வர:-ஈஸ்வர—யோகஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; வயஸ்யை:—இளந்துணைவர்களால்; ஆவ்ருத:—சூழப்பட்டு; தத்ர—அங்கே; கத:—சென்றார்; தத்—அப்பெண்களின்; கர்ம—சமயம் சார்ந்த செயல்கள்; ஸித்தயே—பலனை உறுதி செய்வதற்காக.
முழுமுதற்கடவுளும், யோக ஸித்திகளின் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகவான் கிருஷ்ணர், கோபியர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை நன்கறிந்து கொண்டார். அதனால் அவர் கோபியர்களின் முயற்சிக்குரிய பலன்களை அவர்களுக்கு அளிக்க விரும்பி, தமது இளம் நண்பர்கள் உடன் வர அந்த இடத்திற்குச் சென்றார்.
பதம் 10.22.9
தாஸாம் வாஸாம்ஸி உபாதாய நீபம் ஆருஹ்ய ஸத்வர:
ஹஸத்பி: ப்ரஹஸன் பாலை: பரிஹாஸம் உவாச ஹ
தாஸாம்—அப்பெண்களின்; வாஸாம்ஸி—ஆடைகள்; உபாதாய—எடுத்துக்கொண்டு; நீபம்—ஒரு கதம்பமரத்தின்; ஆருஹ்ய—ஏறிக் கொண்டார்; ஸத்வர:—விரைவாக; ஹஸத்பி:—அவர்களும் சிரித்தனர்; ப்ரஹஸன்—அவரும் பெரிதாகச் சிரித்தார்; பாலை:—பாலர்களுடன்; பரிஹாஸம்—பரிகாசம் செய்து; உவாச ஹ—அவர் கூறினார்.
பெண்களின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அவர் விரைந்து ஒரு கதம்ப மரத்தின் மீது ஏறிக் கொண்டார். பிறகு அவர் சத்தம் போட்டுப் பெரிதாகச் சிரித்தார். அவரது நண்பர்களும் அவருடன் சேர்ந்து சிரித்தனர். அவர் அப்பெண்களிடம் கேலி மொழிகள் பேசலானார்.
பதம் 10.22.10
அத்ராகத்யாபவா: காமம் ஸ்வம் ஸ்வம் வாஸ்: ப்ரக்ருஹ்யதாம்
ஸத்யம் ப்ருவாணி நோ நர்ம யத் யூயம் வ்ரத-கர்ஸிதா:
அத்ர—இங்கே; ஆகத்ய—வந்து; அபவா:—ஓ, பெண்களே; காமம்—உமது விருப்பம் போல்; ஸ்வம் ஸ்வம்—ஒவ்வொருத்தருக்கும் உரிய; வாஸ:—ஆடைகள்; ப்ரக்ருஹ்யதாம்—எடுத்துக் கொள்ளுங்கள்; ஸத்யம்—உண்மை; ப்ருவாணி—நான் கூறுகிறேன்; ந—இல்லை; உ—மாறாக; நர்ம—கேலி; யத்—ஏனென்றால்; யூயம்—நீவீர்; வ்ரத—உமது விரதத்தினால்; கர்ஸிதா:—களைப்புற்றிருக்கின்றீர்.
(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பார்ந்த பெண்களே, நீங்கள் விரும்பினால் இங்கே வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரதம் இருந்து களைத்துப் போயிருப்பதால் நான் உங்களிடம் கேலி பேசவில்லை, உண்மையைக் கூறுகிறேன்.
பதம் 10.22.11
ந மயோதித-பூர்வம் வா அன்ருதம் தத் இமே விது:
ஏகைகஸ: ப்ரதீச்சத்வம் ஸஹைவேதி ஸு-மத்யமா:
ந—இல்லை; மயா—என்னால்; உதித—பேசியது; பூர்வம்—முன்பு; வை—உறுதியாக; அன்ருதம்—எதுவும் தவறாக; தத்—அது; இமே—இச்சிறுவர்களிடம்; விது:—அறிவர்; ஏக-ஏகஸ:—ஒவ்வொருவராகவும்; ப்ரதீச்சத்வம்—எடுத்துக் கொள்ளுங்கள் (உங்கள் ஆடைகளை); ஸஹ—அல்லது அனைவரும் சேர்ந்து வந்தோ; ஏவ—உண்மையில்; இதி—இவ்வாறு; ஸுமத்யமா:—ஓ, மெல்லிடைப் பெண்களே.
இதற்கு முன்பு நான் ஒரு போதும் பொய்யே பேசியதில்லை. இதனை இச்சிறுவர்கள் நன்கறிவார்கள். ஓ, மெல்லிய இடையுடைய பெண்களே! நீங்கள் அனைவரும் தனித் தனியாகவோ அல்லது சேர்ந்து வந்தோ உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பதம் 10.22.12
தஸ்ய தத் க்ஷ்வேலிதம் த்ருஷ்ட்வா கோப்ய: ப்ரேம-பரிப்லுதா:
வ்ரீடிதா: ப்ரேக்ஷ்ய சான்யோன்யம் ஜாத-ஹாஸா ந நிர்யயு:
தஸ்ய—அவரது; தத்—அந்த; க்ஷ்வேலிதம்—வேடிக்கைப் பேச்சினை; த்ருஷ்ட்வா—கண்டு; கோப்ய:—கோபியர்கள்; ப்ரேம-பரிப்லுதா:—கடவுளின் தூய அன்பில் முற்றிலும் ஆழ்ந்து; வ்ரீடிதா:—வெறுப்புற்று; ப்ரேக்ஷ்ய—பார்த்து; ச—மற்றும்; அன்யோன்யம்—ஒருவரையொருவர்; ஜாத-ஹாஸா—சிரிக்கத் தொடங்கினர்; ந நிர்யயு:—அவர்கள் வெளியே வரவில்லை.
கிருஷ்ணர் தம்மை வேடிக்கை செய்ததைக் கண்ட கோபியர்கள் அவர் மீதான காதலில் முற்றிலும் ஆழ்ந்து போயினர். தங்களது கவலைக்கிடையிலும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கேலிகள் பேசத் தொடங்கினர். ஆயினும் அவர்கள் நீரை விட்டு வெளியே வரவில்லை.
பதம் 10.22.13
ஏவம் ப்ருவதி கோவிந்தே நர்மணாக்ஷிப்த-சேதஸ:
ஆ-கண்ட-மக்னா: ஸீதோதே வேபமானாஸ் தம் அப்ருவன்
ஏவம்—இவ்வாறு; ப்ருவதி—கூறிய; கோவிந்தே—பகவான் கோவிந்தன்; நர்மணா—அவரது கேலி மொழிகளால்; ஆக்ஷிப்த—கிளர்ச்சியடைந்த; சேதஸ:—அவர்களது மனம்; ஆ-கண்ட—கழுத்து வரை; மக்னா:—மூழ்கி இருந்த; ஸீத—குளிர்; உதே—தண்ணீரில்; வேபமானா:—நடுங்கினர்; தம்—அவருக்கு; அப்ருவன்—அவர்கள் கூறினர்.
கோபியர்களிடம் கிருஷ்ணர் இவ்வாறு கேலி மொழிகள் பேசியவுடன் கோபியர்களின் மனங்கள் முற்றிலும் அவரது வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டன. கழுத்துவரை குளிர்ந்த ஆற்று நீரில் மூழ்கியிருந்ததினால் அவர்கள் நடுங்கத் தொடங்கினர். அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறலுற்றனர்.
பதம் 10.22.14
மானயம் போ: க்ருதாஸ் த்வாம் து நந்த-கோப-ஸுதம் ப்ரியம்
ஜானீமோ ‘ங்க வ்ரஜ-ஸ்லாக்யம் தேஹி வாஸாம்ஸி வேபிதா:
மா—செய்யாதே; அனயம்—அநீதி; போ:—எங்கள் அன்பிற்குரிய கிருஷ்ணர்; க்ருதா:—செய்வாயாக; த்வாம்—நீ; து—மாறாக; நந்த-கோப—நந்தமகாராஜாவின்; ஸுதம்—மைந்தனே; ப்ரியம்—பிரியமானவன்; ஜானீம:—நாங்கள் அறிவோம்; அங்க—ஒ, இனியவனே; வ்ரஜ-ஸ்லாக்யம்—விரஜம் முழுவதும் புகழப்படுபவன்; தேஹி—கொடுப்பாயாக; வாஸாம்ஸி—எங்கள் ஆடைகளை; வேபிதா:—நடுங்குகின்ற (எங்களுக்கு).
(கோபியர்கள் கூறினர்:) இனிய கிருஷ்ணரே, அநீதி செய்யாதே! நீ மரியாதைக்குரிய நந்த மகாராஜாவின் மைந்தன் என்பதும், விரஜம் முழுவதும் கீர்த்தி பெற்றவன் என்பதுடன் எங்களுக்கும் நீ இனிமை வாய்ந்தவனாவாய். எங்கள் ஆடைகளை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நாங்கள் குளிரினால் நடுங்குகின்றோம்.
பதம் 10.22.15
ஸ்யாம்ஸுந்தர தே தாஸ்ய: கரவாம தவோதிதம்
தேஹி வாஸாம்ஸி தர்ம-ஜ்ஞ நோ சேத் ராஜ்ஞே ப்ருவாம ஹே
ஸ்யாமஸுந்தர—ஓ, பகவான் சியாம சுந்தரனே; தே—உனது; தாஸ்ய:—அடிமைகள்; கரவாம—நாங்கள் செய்வோம்; தவ—உன்னால்; உதிதம்—கூறப்பட்ட; தேஹி—கொடுப்பாயாக; வாஸாம்ஸி—எங்கள் ஆடைகளை; தர்ம-ஜ்ஞ—ஓ, தர்மம் அறிந்தவனே; ந—இல்லை; உ—உண்மையில்; சேத்—இல்லையேல்; ராஜ்ஞே—மன்னரிடம்; ப்ருவாம:—நாங்கள் கூறுவோம்; ஹே—ஓ, கிருஷ்ணா.
ஒ, சியாம சுந்தரா! நாங்கள் உனது அடிமைகள். நீ என்ன சொன்னாலும், அதனை நாங்கள் செய்வோம். அதனால் எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு. தர்மம் என்னவென்று நீ நன்கறிவாய். அவ்வாறு நீ திருப்பித்தரவில்லையென்றால் மன்னரிடம் நாங்கள் புகார் செய்வோம்.
பதம் 10.22.16
ஸ்ரீ-பகவான் உவாச
பவத்யோ யதி மே தாஸ்யோ மயோக்தம் வா கரிஷ்யத
அத்ராகத்ய ஸ்வ-வாஸாம்ஸி ப்ரதீச்சத ஸுசி-ஸ்மிதா:
நோ சேன் நாஹம் ப்ரதாஸ்யே கிம் க்ருத்தோ ராஜா கரிஷ்யதி
ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற் கடவுள் கூறினார்; பவத்ய—நீவீர்; யதி—என்றால்; மே—எனது; தாஸ்ய:—அடிமைகள்; மயா—என்னால்; உக்தம்—கூறியது; வா—அல்லது; கரிஷ்யத—செய்வீராக; அத்ர—இங்கே; ஆகத்ய—வந்து; ஸ்வ-வாஸாம்ஸி—உங்கள் ஆடைகளை; ப்ரதீச்சத—எடுத்துக் கொள்ளுங்கள்; ஸுசி—புதிதாகப்பூத்த; ஸ்மிதா:—அவர்களது புன்னகை; ந உ—இல்லை; சேத்—என்றால்; ந—இல்லையேல்; அஹம்—நான்; ப்ரதாஸ்யே—அளிப்பது; கிம்—என்ன; க்ருத்த:—சினம்; ராஜா—மன்னர்; கரிஷ்யதி—செய்யக்கூடும்.
முழுமுதற் கடவுள் கூறினார்: உண்மையிலேயே நீங்கள் எனது அடிமைகள் என்றால், எனது சொல்லைக் கேட்பவர்கள் என்றால் ஒளி பொருந்திய உமது புன்னகையுடன் வந்து ஒவ்வொருவரும் உங்கள் ஆடைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் கூறியபடி நீங்கள் நடக்காவிட்டால் பிறகு உங்கள் ஆடைகளை நான் திருப்பித் தரமாட்டேன். மேலும் அரசரின் கோபம் என்னை என்ன செய்யும்?
பதம் 10.22.17
ததோ ஜலாஸயாத் ஸர்வா தாரிகா: ஸீத-வேபிதா:
பாணிப்யாம் யோனிம் ஆச்சாத்ய ப்ரோத்தேரு: ஸீத-கர்ஸிதா:
தத்:—பிறகு; ஜல-ஆஸயத்—நீரிலிருந்து; ஸர்வா:—எல்லோரும்; தாரிகா:—இளம்பெண்; ஸீத-வேபிதா:—குளிரில் நடுங்கியவாறு; பாணிப்யாம்—தங்கள் கைகளால்; யோனிம்—யோனியை; ஆச்சாத்ய—மறைத்துக் கொண்டு; ப்ரோத்தேரு:—வெளியே வந்தனர்; ஸீத-கர்ஸிதா:—குளிரினால் வருந்தி.
பிறகு குளிரினால் வருந்திய கோபியர்கள் அனைவரும் பிறப்பிடத்தினைக் கைகளால் மறைத்தபடியே நீரினின்று வெளியே வந்தனர்.
பதம் 10.22.18
பகவான் ஆஹதா வீக்ஷ்ய ஸுத்த-பாவ—ப்ரஸாதித:
ஸ்கந்தே நிதாய வாஸாம்ஸி ப்ரீத: ப்ரோவாச ஸ-ஸ்மிதம்
பகவான்—பரமபுருஷபகவான்; ஆஹதா:—தாக்கப்பட்டது; வீக்ஷ்ய—கண்டு; ஸுத்த—தூய; பாவ—அவர்களது பாசத்தினால்; ப்ரஸாதித—திருப்தியடைந்தார்; ஸ்கந்தே—தமது தோள்களின்மீது; நிதாய—போட்டுக் கொண்டு; வாஸாம்ஸி—அவர்களது ஆடைகளை; ப்ரீத:—பிரியமுடன்; ப்ரோவாச—கூறினார்; ஸ-ஸ்மிதம்—புன்னகைத்தப்படி
தர்மசங்கடமான நிலைக்குக் கோபியர்கள் ஆளாகியிருப்பதைக் கண்ட பகவான், அவர்கள் தம் மீது வைத்திருக்கும் தூய காதலை எண்ணித் திருப்தியடைந்தார். அவர்களது ஆடைகளைத் தமது தோள்களில் போட்டுக் கொண்டு புன்னகை புரிந்தவாறே பகவான் அவர்களிடம் அன்பொழுகப் பேசலானார்.
பதம் 10.22.19
யூயம் விவஸ்த்ரா யத் அபோ த்ருத-வ்ரதா
வ்யகாஹதைதத் தத் உ தேவ-ஹேலனம்
பத்த்வாஞ்ஜலிம் மூர்த்னி அபனுத்தயே ‘ம்ஹஸ:
க்ருத்வா நமே ‘தோ-வஸனம் ப்ரக்ருஹ்யதாம்
யூயம்—நீவீர்; விவஸ்த்ரா:—பிறந்த மேனியராக; யத்—காரணத்தினால்; அப:—நீரில்; த்ருத்-வ்ரதா:—வேதச் சடங்கிற்குரிய விரதத்தினை மேற்கொள்ளும்பொழுது; வ்யகாஹத—நீராடினீர்; ஏதத்-தத்—இது; உ—உண்மையில்; தேவ-ஹேலனம்—வருணன் மற்றும் பிற தேவர்களுக்குச் செய்த குற்றமாகும்; பத்த்வா-அஞ்ஜலிம்—இரு கரங்களையும் சேர்த்து; மூர்த்னி—உங்கள் தலைக்கு மேலே; அபனுத்தயே—பரிகாரம் செய்வதற்காக; அம்ஹஸ:—உங்கள் பாவச்செயலுக்கு; க்ருத்வா—நம:—வந்தனம் செய்வீராக; அத: வஸனம்—உங்கள் பாவாடைகளை; ப்ரக்ருஹ்யதாம்—பெற்றுக் கொள்ளுங்கள்.
(பகவான் கிருஷ்ணர் கூறினார்) உங்கள் விரதத்தினை நிறைவேற்றும் பொழுது நீங்கள் பிறந்த மேனியராக நீராடியுள்ளீர். இது தேவர்களுக்கு எதிராக இழைத்த பெருங்குற்றமாகும். உங்கள் பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் கரங்களைக் குவித்துத் தலைக்கு மேலே உயர்த்தி வந்தனம் செய்தல் வேண்டும். பிறகு உங்கள் பாவாடைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பதம் 10.22.20
இதி அச்யுதேனாபிஹிதம் வ்ரஜாபலா
மத்வா விவஸ்த்ராப்லவனம் வ்ரத-ச்யுதம்
தத்-பூர்த்தி-காமாஸ் தத்-அஸேஷ-கர்மணாம்
ஸாக்ஷாத்-க்ருதம் நேமுர் அவத்ய-ம்ருக்யத
இதி—இவ்வார்த்தைகளில்; அச்யுதேன—குற்றமற்றப் பரமபுருஷ பகவானால்; அபிஹிதம்—சுட்டப்பட்ட; வ்ரஜ-அபலா:—விரஜ மகளிர்; மத்வா—கருதினர்; விவஸ்த்ர—ஆடையின்றி; ஆப்லவனம்—நீராடியது; வ்ரஜ-ச்யுதம்—தங்கள் விரதத்திலிருந்து தவறிவிட்டதாக; தத்-பூர்த்தி—அதனை வெற்றிகரமாக முடிப்பதற்கு; காமா:—விருப்பங்கொண்டு; தத்—அச்செயலின்; அஸேஷ-கர்மணாம்—மற்றும் அளவற்ற பிற புண்ணியச் செயல்கள்; ஸாக்ஷாத்-க்ருதம்—நேரடிப் பலனுக்கு; நேமு:—அவர்கள் தமது வந்தனங்களை அர்ப்பணித்தனர்; அவத்யம்ருக்—எல்லாப் பாவங்களையும் நீக்குபவர்; யத:—ஏனென்றால்.
இதனால் விருந்தாவனத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள், ஆடையின்றி ஆற்றில் நீராடியதனால் தாங்கள் தங்கள் விரதத்திலிருந்து தவறிவிட்டோமோவென்று கருதி பகவான் அச்யுதன் சொன்னதற்கு ஒப்புக்கொண்டனர். ஆயினும், தங்கள் விரதத்தினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று விரும்பிய அவர்கள், பகவான் கிருஷ்ணரே புண்ணியச் செயல்கள் அனைத்திற்கும் இறுதிப் பலனாக இருப்பவர் என்று, அவர்கள் தமது பாவங்கள் நீங்க வேண்டுமென்பதற்காக அவருக்குத் தங்கள் வந்தனங்களை அர்ப்பணித்தனர்.
பதம் 10.22.21
தாஸ் ததாவனதா த்ருஷ்ட்வா பகவான் தேவகீ-ஸுத:
வாஸாம்ஸி தாப்ய: ப்ராயச்சத் கருணஸ் தேன தோஷித:
தா:—அவர்கள்; ததா—இவ்வாறு; அவனதா:—தலைவணங்கியது; த்ருஷ்ட்வா—கண்டு; பகவான்—முழு முதற்கடவுள்; தேவகீ-ஸுத:—தேவகி மைந்தரான கிருஷ்ணர்; வஸாம்ஸி—ஆடைகளை; தாப்ய:—அவர்களுக்கு; ப்ராயச்சத்—திருப்பி அளித்தார்; கருண:—கருணையுடன்; தேன—அச்செயலால்; தோஷித:—திருப்தியடைந்து.
அவர்கள் தலை வணங்கியதைக் கண்ட முழுமுதற் கடவுளான தேவகி மைந்தன், அவர்கள்மீது கருணை கொண்டும், அவர்கள் செயலில் திருப்தியுற்றும், அவர்களது ஆடைகளை மீண்டும் அவர்களிடத்து வழங்கினார்.
பதம் 10.22.22
த்ருடம் ப்ரவப்தாஸ் த்ரபயா ச ஹாபிதா:
ப்ரஸ்தோபித: க்ரீடன-வச் ச காரிதா:
வஸ்த்ராணி சைவாபஹ்ருதானி அதாபி அமும்
தா நாப்யஸுயன் ப்ரிய-ஸங்க-நிர்வ்ருதா:
த்ருடம்—முற்றிலும்; ப்ரவப்தா:—ஏமாற்றப்பட்டும்; த்ரபயா—அவர்களின் நாணம்; ச—மற்றும்; ஹாபிதா:—இழந்தும்; ப்ரஸ்தோபிதா:—கேலிக்கு ஆளாகியும்; க்ரீடன-வத்—விளையாட்டுப் பொம்மைகள் போல்; ச—மற்றும்; காரிதா:—ஆட்டுவிக்கப்படும்; வஸ்த்ராணி—அவர்களின் ஆடைகள்; ச—மேலும்; ஏவ—உண்மையில்; அபஹ்ருதானி—திருடப்பட்டும்; அத அபி—இருந்தபோதிலும்; அமும்—அவரிடத்து; தா:—அவர்கள்; ந அப்யஸுயன்—பகைமை பாராட்டவில்லை; ப்ரிய—தங்கள் பிரியத்திற்குரிய; ஸங்க—தொடர்பினால்; நிர்வ்ருதா:—மகிழ்ச்சியடைந்தனர்.
கோபியர்கள் முற்றிலும் ஏமாற்றப்பட்டும், நாணம் அழிக்கப்பட்டும், கேலி செய்யப்பட்டும், விளையாட்டுப் பொம்மைகள் போல் ஆட்டுவிக்கப்பட்டும், அவர்களது ஆடைகள் திருடப்பட்டும் கூட ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர்கள் பகைமை பாராட்டவில்லை. மாறாகத் தங்கள் பிரியமானவரிடம் சேர்ந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினைப் பெற்றமைக்காக அவர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தனர்.
பதம் 10.22.23
பரிதாய ஸ்வ-வாஸாம்ஸி ப்ரேஷ்ட-ஸங்கம-ஸஜ்ஜிதா:
க்ருஹீத-சித்தா நோ சேலுஸ் தஸ்தின் லஜ்ஜாயிதேக்ஷணா:
பரிதாய—அணிந்துகொண்டும்; ஸ்வ-வாஸாம்ஸி—அவர்களது ஆடைகளை; ப்ரேஷ்ட—தங்கள் அன்பிற்குரிய; ஸங்கம—இத்தொடர்பினால்; ஸஜ்ஜிதா:—அவரிடத்து முற்றிலும் பற்றுடையோராகி; க்ருஹீத—மீட்டுக் கொள்ள; சித்தா:—அவர்கள் மனங்களை; ந—முடியவில்லை; உ—உண்மையில்; சேலு:—அசைதல்; தஸ்மின்—அவர் மீது; லஜ்ஜாயித—நாணங்கொண்டு; ஈக்ஷணா:—அவர்களது பார்வைகள்.
கோபியர்கள் தங்கள் அன்பிற்குரிய கிருஷ்ணருடன் கொண்ட தொடர்பினால் மதிமயங்கி இருந்தனர். அவரால் அவர்கள் முற்றிலும் ஈர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்ட போதிலும் அசையாது அப்படியே நின்றனர். அவர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே அவரை நாணத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
பதம் 10.22.24
தாஸாம் விஜ்ஞாய பகவான் ஸ்வ-பாத-ஸ்பர்ஸ-காம்யயா
த்ருத-வ்ரதானாம் ஸங்கல்பம் ஆஹ தாமோதரோ ‘பலா:
தாஸாம்—இப்பெண்களின்; விஜ்ஞாய—புரிந்துகொண்ட; பகவான்—முழுமுதற்கடவுள்; ஸ்வ-பாத—அவரது பாதங்களின்; ஸ்பர்ஸ—ஸ்பரிசத்திற்காக; காம்யயா—விருப்பத்துடன்; த்ருத-வ்ரதானாம்—தங்கள் விரதத்தினை மேற்கொண்டவர்கள்; ஸங்கல்பம்—நோக்கம்; ஆஹ—கூறினார்; தாமோதர:—பகவான் தாமோதரன்; அபலா:—அப்பெண்களிடத்து.
தங்கள் விரதத்தினை நிறைவேற்றுவதில் கோபியர்களுக்கிருந்த உறுதியினைப் பரமபுருஷ பகவான் நன்கு உணர்ந்துகொண்டார். அப்பெண்கள் தமது தாமரைத் திருவடிகளைத் தொடுவதற்கு விருப்பங்கொண்டதையும் கூடப் பகவான் நன்கறிவார். அதனால் பகவான் தாமோதரனாகிய கிருஷ்ணர் அவர்களிடம் பின்வருமாறு கூறலுற்றார்.
பதம் 10.22.25
ஸங்கல்போ விதித: ஸாத்வ்யோ பகவதீனாம் மத்-அர்ச்சனம்
மயானுமோதித: ஸோ ‘ஸௌ ஸத்யோ பவிதும் அர்ஹதி
ஸங்கல்ப:—நோக்கம்; விதித:—புரிந்து கொண்டு; ஸாத்வ்யோ:—ஒ, மாசற்ற புனிதப் பெண்களே; பகவதீனாம்—உங்கள்; மத்-அர்ச்சனம்—என்னை வழிபட்டது; மயா—என்னால்; அனுமோதித:—அனுமதிக்கப்பட்டது; ஸ அஸௌ—அது; ஸத்ய:—உண்மை; பவிதும்—ஆவதற்கு; அர்ஹதி—கண்டிப்பாக.
(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) ஓ, புனிதமுடைய பெண்களே! உங்கள் விரதத்தின் நோக்கம் என்னை வழிபடுவதே என்பதை நான் நன்கறிவேன். உங்களது அந்த எண்ணம் என்னால் அங்கீகரிக்கப்படுகிறது. உண்மையில் அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
பதம் 10.22.26
ந மய்ய் ஆவேஸித-தியாம் காம: காமாய கல்பதே
பர்ஜிதா க்வதிதா தானா: ப்ராயோ பீஜாய நேஸதே
ந—இல்லை; மயி—என்னிடத்தில்; ஆவேஸித—முற்றிலும் ஆழ்ந்த; தியாம்—உணர்வுடையவர்களின்; காம:—விருப்பம்; காமாய—பெளதிக காமத்திற்கு; கல்பதே—இட்டுச் செல்லுதல்; பர்ஜிதா:—காய்ந்த; க்வதிதா:—சமைக்கப்பட்ட; தானா:—தானியம்; ப்ராய:—பெரும்பகுதி; பீஜாய—புதிதாக வளர்வது; ந ஈஷ்யதே—திறனுடையவையன்று.
சூரிய வெய்யிலில் காய்ந்து, சமைக்கப்பட்ட தானியங்கள் மீண்டும் எவ்வாறு முளைப்பதில்லையோ அதுபோல் என்னிடத்தில் தமது மனங்களை நிலைநிறுத்தியவர்களின் விருப்பம் அவர்களை ஒருபோதும் புலனுகர்ச்சிக்கான உலகியல் காமத்திற்கு இட்டுச் செல்வதில்லை.
பதம் 10.22.27
யாதாபலா வ்ரஜம் ஸித்தா மயேமா ரம்ஸ்யத க்ஷபா:
யத் உத்திஸ்ய வ்ரதம் இதம் சேருர் ஆர்யார்சனம் ஸதி:
யாத—இப்போது சொல்வீராக; அபலா:—அன்புப் பெண்களே; வ்ரஜம்—விரஜத்திற்கு; ஸித்தா:—உமது எண்ணம் நிறைவேறிவிட்டது; மயா—எனது; இமா:—இவை; ரம்ஸ்யத—நீவீர் அனுபவித்து மகிழ்வீர்; க்ஷபா:—இரவுகளை; யத்—இதனை; உத்திஸ்ய—மனதில் கொண்டு; வ்ரதம்—விரதம்; இதம்—இந்த; சேரு:—நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்; ஆர்யா—காத்யாயனி தேவியின்; அர்ச்சனம்—வழிபாடு; ஸதி:—தூயவர்களே.
இப்போது இங்கிருந்து விரஜத்திற்குச் செல்வீராக. உங்களது எண்ணம் நிறைவேறிவிட்டது. எனது துணையுடன் இனிவரும் இரவுகளை நீங்கள் அனுபவித்து மகிழலாம். ஓ, தூயவர்களே, இதுதானே நீங்கள் காத்யாயனி தேவியை வழிபட்டு விரதம் இருந்ததின் நோக்கம்.
பதம் 10.22.28
ஸ்ரீ-ஸுக உவாச
இதி ஆதிஷ்டா பகவதா லப்த-காமா: குமாரிகா:
த்யாயந்த்யஸ் தத்-பதாம்போஜம் க்ருச்ச்ரான் நிர்விவிஸுர் வ்ரஜம்
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஆதிஷ்டா:—உபதேசித்து; பகவதா—முழுமுதற்கடவுளால்; லப்த—எய்தப் பெற்றது; காமா:—அவர்களின் விருப்பம்; குமாரிகா:—கன்னிப் பெண்களின்; த்யாயந்த்ய:—தியானித்து; தத்—அவரது; பத-அம்போஜம்—தாமரைத் திருவடிகளை; க்ருச்ச்ராத்—மிகுந்த சிரமத்துடன்; நிரவிவிஸு:—அவர்கள் திரும்பிச் சென்றனர்; வ்ரஜம்—விரஜத்திற்கு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு தமது விருப்பம் நிறைவேறப்பட்ட அக்கன்னிப் பெண்கள், முழுமுதற்கடவுளால் உபதேசிக்கப்பட்டவுடன், அவரது தாமரைத் திருவடிகளைத் தியானித்து அவரைப் பிரிய மனமின்றி மிகுந்த சிரமத்துடன் விரஜத்திற்குத் திரும்பிச் சென்றனர்.
பதம் 10.22.29
அத கோபை: பரிவ்ருதோ பகவான் தேவகீ-ஸுத:
வ்ருந்தாவனாத் கதோ தூரம் சாரயன் கா: ஸஹாக்ரஜ:
அத—அதன்பிறகு; கோபை:—கோபாலர்களினால்; பரிவ்ருத:—சூழப்பட்டு; பகவான்—பரமபுருஷ பகவான்; தேவகீ-ஸுத:—தேவகீ மைந்தன்; வ்ருந்தாவனாத்—விருந்தாவனத்திலிருந்து; கத:—அவர் சென்றார்; தூரம்—தூரத்திற்கு; சாரயன்—மேய்த்துக் கொண்டு; கா—பசுக்களை; ஸஹ-அக்ரஜ:—தமது சகோதரர் பலராமருடன் சேர்ந்து.
சிறிது நேரத்திற்குப் பிறகு தேவகீ மைந்தரான பகவான் கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமருடன் சேர்ந்து, ஆயர்குல நண்பர்கள் உடன் வர பசுக்களை மேய்த்துக்கொண்டு விருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திற்குச் சென்றார்.
பதம் 10.22.30
நிதாகார்காதபே திக்மே சாயாபி: ஸ்வாபிர் ஆத்மன:
ஆதபத்ராயிதான் வீக்ஷ்ய த்ருமான் ஆஹ வ்ரஜெளகஸ:
நிதாக—கோடைப்பருவத்தின்; அர்க—சூரியனின்; ஆதபே—வெம்மையில்; திக்மே—கடுமையான; சாயாபி:—நிழலுடன்; ஸ்வாபி:—தமக்குரிய; ஆத்மன:—அவருக்கு; ஆதபத்ராயிதான்—குடைகளாகச் செயல்பட்டன; வீக்ஷ்ய—கண்டு; த்ருமான்—மரங்கள்; ஆஹ—அவர் கூறினார்; வ்ரஜ-ஓகஸ:—விரஜத்தின் சிறுவர்களுக்கு.
சூரியனின் வெம்மை மிகவும் கடுமையாக இருந்தது. மரங்களெல்லாம் நிழல் தரும் குடைகளாக விளங்குவதைப் பகவான் கிருஷ்ணர் கண்டார். அதனால் அவர் தமது ஆயர் குல நண்பர்களிடம் பின்வருமாறு கூறலானார்.
பதங்கள் 10.22.31 – 10.22.32
ஹே ஸ்தோக-க்ருஷ்ண ஹே அம்ஸோ ஸ்ரீதாமன் ஸுபலார்ஜுன
விஸால வ்ருஷபோஜஸ்வின் தேவப்ரஸ்த வரூதப
பஸ்யதைதான் மஹா-பாகான் பரார்தைகாந்த-ஜீவிதான்
வாத வர்ஷாதப-ஹிமான் ஸஹந்தோ வாரயந்தி ந:
ஹே ஸ்தோக-கிருஷ்ண—ஓ, ஸ்தோக கிருஷ்ணா; ஹே அம்ஸோ—ஓ அம்சு; ஸ்ரீதாமன்ஸுபலஅர்ஜுன—ஓ, ஸ்ரீதாமா, சுபலா, அர்ஜுனா; விஸால வ்ருஷப ஓஜஸ்வின்—ஓ, விசாலா, விருஷபா, ஓஜஸ்வீ; தேவப்ரஸ்த வரூதப—ஓ, தேவப்பிரஸ்தா, வரூதபா; பஸ்யத—பாருங்கள்; ஏதான்—இவை; மஹா-பாகான்—மிகவும் பாக்கியம் செய்த; பர-அர்த—பிறர் நலனுக்காக; ஏகாந்த—ஏகாந்தமாக; ஜீவிதான்—அவற்றின் வாழ்க்கை; வாத—காற்று; வர்ஷ—மழை; ஆதப—சூரிய வெய்யில்; ஹிமான்—பனி; ஸஹந்த:—தாங்கிக்கொண்டு; வாரயந்தி—காக்கிக்கின்ற; ந:—நம்மை.
(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) ஓ, ஸ்தோக கிருஷ்ணா, அம்சு, ஸ்ரீதாமா, சுபலா, அர்ஜுனா, விருஷபா, ஒஜஸ்வீ, தேவப்பிரஸ்தா, வரூதபா, மிகுந்த பாக்கியம் செய்த இம்மரங்களைப் பாருங்கள், அவற்றின் வாழ்க்கை முற்றிலும் பிறர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. காற்று, மழை, வெய்யில், பனி போன்றவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இவை அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
பதம் 10.22.33
அஹோ ஏஷாம் வரம் ஜன்ம ஸர்வ-ப்ராணி-உபஜீவனம்
ஸு-ஜனஸ்யேவ யேஷாம் வை விமுகா யாந்தி நார்தின:
அஹோ—அந்தோ பாருங்கள்; ஏஷாம்—இம்மரங்களின்; வரம்—உயர்ந்த; ஜன்ம—பிறப்பினை; ஸர்வ—அனைவருக்கும்; ப்ராணி—உயிர்கள்; உபஜீவினம்—பாதுகாக்கின்றன; ஸு-ஜனஸ்ய இவ—ஓர் மகானைப் போல்; யேஷாம்—இவற்றிடமிருந்து; வை—உறுதியாக; விமுகா:—ஏமாற்றத்துடன்; யாந்தி—திரும்பிச் செல்பவர்கள்; ந—இல்லை; அர்தின:—ஏதேனும் வேண்டிக் கேட்டோர்.
இம்மரங்கள் அனைத்து உயிர்களையும் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைப் பாருங்கள்! இவற்றின் பிறப்பு வெற்றிகரமானதாகும். இவற்றின் தன்மையோ மகாத்மாக்களைப் போன்றதாகும். யாரேனும் ஒருவன் மரத்திடம் எதையாவது கேட்டு ஏமாற்றத்துடன் ஒருபோதும் திரும்பிச் செல்வதில்லை.
பதம் 10.22.34
பத்ர-புஷ்ப-பல-ச்சாயா-மூல-வல்கல-தாருபி:
கந்த-நிர்யாஸ-பஸ்மாஸ்தி தோக்மை: காமான் விதன்வதே
பத்ர—இலைகளினால்; புஷ்ப—மலர்கள்; பல—பழங்கள்; சாயா—நிழல்; மூல—வேர்கள்; வல்கல—பட்டைகள்; தாருபி:—விறகு; கந்த—நறுமணம்; நிர்யாஸ—சாறு; பஸ்ம—சாம்பல்; அஸ்தி—நார்; தோக்மை:—தளிர்கள்; காமான்—விருப்பத்திற்கு உகந்த பொருட்கள்; விதன்வதே—இவை அளிக்கின்றன.
இம்மரங்கள் ஒருவனின் விருப்பத்தைத் தமது இலைகள், மலர்கள், பழங்கள், நிழல், வேர்கள், பட்டைகள், விறகு, நறுமணம், சாறு, நார் மற்றும் இளந்தளிர்களினால் பூர்த்தி செய்கின்றன.
பதம் 10.22.35
ஏதாவஜ் ஜன்ம-ஸாபல்யம் தேஹினாம் இஹ தேஹிஸு
ப்ராணைர் அர்த்தைர் தியா வாசா ஸ்ரேய-ஆசரணம் ஸதா
ஏதாவத்—இதுவரை; ஜன்ம—பிறப்பின்; ஸாபல்யம்—நிறைவு; தேஹினாம்—ஒவ்வோர் உயிரின்; இஹ—இவ்வுலகில்; தேஹிஷு—உடல் பெற்றவர்களுக்கு; ப்ராணை:—உயிரினால்; அர்த்தை:—செல்வத்தினால்; தியா—புத்தியினால்; வாசா—வார்த்தைகளினால்; ஸ்ரேய:—நித்திய நற்பாக்கியம்; ஆசாரணம்—நடைமுறையில் செயல்பட வேண்டும்; ஸதா—எப்போதும்.
ஒவ்வோர் உயிர்வாழியும் தமது உயிர், செல்வம், புத்தி, வார்த்தைகள் போன்றவற்றினால் பிறருக்கு நன்மை செய்வதைத் தமது கடமையாகக் கொள்ள வேண்டும்.
பதம் 10.22.36
இதி ப்ரவாள-ஸ்தபக-பல-புஷ்ப-தலோத்கரை:
தரூணாம் நம்ர-ஸாகானாம் மத்யதோ யமுனாம் கத:
இதி—இவ்வாறு பேசிக்கொண்டு; ப்ரவாள—புதுக்கிளைகளின்; ஸ்தபக—கொத்துக்களினால்; பல—பழங்கள்; புஷ்ப—மலர்கள்; தல—இலைகள்; உத்கரை:—ஏராளமான; தருணாம்—மரங்களின்; நம்ர—வளைந்திருந்தன; ஸாகானாம்—அவற்றின் கிளைகள்; மத்யத:—மத்தியில்; யமுனாம்—யமுனை நதி; கத:—அவர் அடைந்தார்.
தமது ஏராளமான தளிர்கள், பழங்கள், மலர்கள், இலைகள் போன்றவற்றின் பாரந்தாங்காது நிலத்தைத் தொடுவதுபோல் வளைந்திருந்த கிளைகளையுடைய மரக்கூட்டங்களுக்கு நடுவே நடந்து பகவான் கிருஷ்ணர் யமுனை நதியினை அடைந்தார்.
பதம் 10.22.37
தத்ர கா: பாயயித்வாப ஸு-ம்ருஷ்டா: ஸீதலா: ஸிவா:
ததோ ந்ருப ஸ்வயம் கோபா: காமம் ஸ்வாது பபுர் ஜலம்
தத்ர—அங்கே; கா:—பசுக்கள்; பாயயித்வா—பருகச்செய்தனர்; அப:—நீர்; ஸு-ம்ருஷ்டா:—மிகவும் தெளிவான; ஸீதலா:—குளிர்ந்த; ஸிவா:—நலம்தரும்; தத:—பிறகு; ந்ருப—ஓ, பரீக்ஷித்து மன்னனே; ஸ்வயம்—அவர்களும்; கோபா:—கோபாலர்கள்; காமம்—ஆசைதீர; ஸ்வாது—இன்சுவையுடைய; பபு:—பருகினர்; ஜலம்—நீரினை.
ஆயர்குலச் சிறுவர்கள் தெளிவும், குளிர்ச்சியும் நலமுமிக்க யமுனை நதியின் நீரினை பசுக்கள் பருகுமாறு செய்தனர். ஓ, பரீக்ஷித்து மன்னனே, ஆயர்குலச் சிறுவர்களும் தங்கள் ஆசை தீர யமுனையின் இன்சுவை நீரினைப் பருகினர்.
பதம் 10.22.38
தஸ்யா உபவனே காமம் சாரயந்த: பஸுன் ந்ருப
க்ருஷ்ண-ராமாவ் உபாகம்ய க்ஷுத்-ஆர்தா இதம் அப்ருவன்
தஸ்யா:—யமுனையின் அருகில்; உபவனே—ஒரு சிறிய வனத்தில்; காமம்—அவர்கள் விருப்பம்போல் இங்குமங்கும்; சாரயந்த:—ஒட்டிக்கொண்டு; பஸுன்—பசுக்களை; ந்ருப—ஓ, மன்னனே; க்ருஷண-ராமெள—பகவான் கிருஷ்ணரும் பகவான் பலராமரும்; உபாகம்ய—அணுகி; க்ஷுத்-ஆர்தா:—பசியினால் துன்புற்று; இதம்—இவ்வாறு; அப்ருவன்—(ஆயர்குலச்சிறுவர்கள்) கூறினர்.
ஓ, மன்னனே! பிறகு ஆயர்குலச்சிறுவர்கள் சாவகாசமாக தமது பசுக்களை யமுனை நதியின் அருகில் இருந்த உபவனத்தில் மேய்க்கத் தொடங்கினர். தாங்க முடியாத பசி வந்தவுடன் அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி பின்வருமாறு கூறினர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கிருஷ்ணர் இளங்கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.