அத்தியாயம் – 37
கேசி மற்றும் வியாமாசுரனை அழித்தல்
பதங்கள் 10.37.1 – 10.37.2 : சுகதேக கோஸ்வாமி கூறினார்: கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்னும் அசுரன் ஒரு பெரிய குதிரை வடிவம் பூண்டு விரஜத்திற்கு வந்தான். மனோ வேகத்தில் ஓடி வந்த அவன் தனது காற்குளம்புகளினால் நிலத்தைக் கிழித்தான். அவனது பிடரிமயிர் வானத்திலுள்ள மேகங்களையும், தேவர்களின் விமானங்களையும் சிதறடித்தது. அவன் தனது பெருத்த கனைப்பொலியினால் எல்லோரையும் நடுங்கச் செய்தான். தனது பயங்கரமான கனைப்பொலியினாலும், வாலினால் மேகங்களைக் கலைப்பதின் மூலமும், கோகுலத்தினை எவ்வாறு அவ்வசுரன் நடுங்கச் செய்து கொண்டிருந்தான் என்பதைக் கண்டவுடன் முழுமுதற் கடவுள் அவனைச் சந்திப்பதற்காக அவனிருக்குமிடம் வந்தார். கேசியோ கிருஷ்ணரைச் சண்டை செய்வதற்காக தேடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் பகவான் வந்து தன்னிடம் வரும்படி அறைகூவல் விடுத்தவுடன் குதிரை வடிவமாக நின்ற அசுரன் ஒரு சிங்கத்தைப் போல் பதிலுக்குக் கர்ஜித்தான்.
பதம் 10.37.3 : தன் முன்னால் பகவான் நிற்பதைக் கண்ட கேசி மூர்க்கமுடன் அவரை நோக்கி ஓடினான். அவனது வாய் வானத்தையே விழுங்குவது போல் அகல விரிந்திருந்தது. நெருங்குதற்கரிய, வெல்வதற்கரிய குதிரையசுரன் கடுமையான வேகத்தில் ஓடி செந்தாமரை விழியுடைய பகவானைத் தனது முன்னங்கால்கள் இரண்டினால் தாக்க எத்தனித்தான்
பதம் 10.37.4 : ஆனால் உன்னதமான பகவானோ கேசியின் தாக்குதலைத் தடுத்துத் தமது கரங்களினால் பெருஞ்சினத்துடன் அவ்வசுரனின் கால்களைப் பற்றித் தூக்கி வானில் சுழற்றி கருடன் ஒரு பாம்பைத் தூக்கி எறிவது போல் அவனை ஏளனமாக நூறு தனு அளவுகள் தூரத்தில் தூக்கி எறிந்தார். பின்னர் பகவான் கிருஷ்ணர் அங்கேயே நின்றார்.
பதம் 10.37.5 : உணர்வுபெற்று எழுந்த கேசி சினத்துடன் தனது வாயினைப் பெரிதாகத் திறந்தபடி மீண்டும் பகவான் கிருஷ்ணரைத் தாக்குவதற்காக ஓடினான். ஆனால் பகவானோ புன்னகை பூத்தபடி, நிலத்திலுள்ள பொந்தில் பாம்பு நுழைவது போல் தமது இடது கரத்தினை அக்குதிரையின் வாயினுள் எளிதாக நுழைத்தார்.
பதம் 10.37.6 : பரமபுருஷ பகவானின் கரம் நெருப்பில் காய்ச்சிய இரும்புத் துண்டம் போல் கேசிக்குக் கொதித்தது. அவனது பற்கள் அதன் மீது பட்டவுடன் உடைந்து வீழ்ந்தன. சரியான கவனிப்பின்மையினால் நோயுற்ற வயிறு பெரிதாக வீங்குவதுபோல் முழுமுதற் கடவுளின் கரம் கேசியின் உடலினுள் மிகப் பெரிதாக விரிந்தது.
பதம் 10.37.7 : வளர்ச்சிபெற்ற பகவான் கிருஷ்ணரின் கரம் கேசியின் சுவாசத்தினை முற்றிலும் தடுத்து நிறுத்தியவுடன் அவனுடைய கால்கள் துடி துடித்தன, உடலெங்கும் வியர்வை ஊற்றெடுத்தது, அவனுடைய விழிகள் சுற்றிக் சுழன்றன. பின்னர் அவ்வசுரன் தன்னையறியாது மலம் கழித்து நிலத்தில் வீழ்ந்து இறந்தான்.
பதம் 10.37.8 : உறுதிமிக்க கரத்தினையுடைய பகவான் கிருஷ்ணர் ‘கர்கடிகா’ பழத்தினைப் போல் தற்போது தோன்றும் தமது கரத்தினை கேசியின் உடலிலிருந்து வெளியே எடுத்தார். அவரது பகைவனை முயற்சியேதுமின்றிக் கொன்றும் சிறிதளவும் கர்வமுமின்றிப் பகவான், வானிலிருந்து தேவர்கள் தம் மீது மலர் மாரி பொழிந்து வணங்கியதை ஏற்றுக் கொண்டார்.
பதம் 10.37.9 : அன்பிற்குரிய அரசனே! அதன்பிறகு, தேவரிஷியான நாரத முனிவர் பகவான் கிருஷ்ணரை தனிமையான இடம் ஒன்றில் சந்தித்தார். தமது லீலைகளை முயற்சி எதுவுமின்றிச் செய்யும் பகவானிடம் மேன்மைமிக்க பக்தரான நாரதர் பின்வருமாறு கூறினார்.
பதங்கள் 10.37.10 – 10.37.11 : (நாரதமுனிவர் கூறினார்:) ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா அளவிடற்கரிய பகவானே, யோக ஸித்திகளின் மூலாதாரமே, ஜகதீஸ்வரரே! ஓ, வாசுதேவா, அனைவரின் அடைக்கலமே, யது குலத்தில் சிறந்தவரே! ஓ, தலைவரே, நீரே படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் பரமாத்மாவாக அவற்றின் மனக் குகையினுள், விறகில் நெருப்பு உறைந்திருப்பதுபோல், கண்ணுக்குப் புலப்படாமல் அமர்ந்திருக்கின்றீர். நீரே, அனைவரின் அகத்தினுள்ளும் சாட்சியாக விளங்கும் முழுமுதற் கடவுளும், பரம நெறியாளரும் ஆவீர்.
பதம் 10.37.12 : நீரே, அனைத்து ஆத்மாக்களின் அடைக்கலமாக இருக்கின்றீர். பரம நெறியாளரானதினால் உமது விருப்பத்திற்கேற்ப உமது இச்சைகளை நீர் நிறைவேற்றிக் கொள்கின்றீர். உமது சுயபடைப்புச் சக்தியால் ஆதியில் நீர் ஜட இயற்கையின் அப்படைப்பு குணங்களை உருவாக்கினீர். அவற்றின் துணையின் மூலம் நீர் இப்பிரபஞ்சத்தினை படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கின்றீர்.
பதம் 10.37.13 : படைப்பவரான நீரே, இப்போது இங்கே அரசர்களாகத் தோன்றும் தைத்யர், பிரமதர், ராட்சசர் போன்ற அசுரர்களை அழிக்கவும், தெய்வீக அருளாளர்களான சாதுக்களைக் காக்கவும் இப்பூமியில் தோன்றியுள்ளீர்.
பதம் 10.37.14 : குதிரை வடிவம் மேற்கொண்ட அசுரனின் பயங்கரமான கனைப்பொலி தேவர்களை நடுங்கச் செய்து அவர்களை சொர்க்கத்தினை விட்டே நீங்கச் செய்தது. ஆனால் எங்கள் நல்லதிர்ஷ்டத்தின் காரணமாக அவனைக் கொல்வதை நீங்கள் ஒரு விளையாட்டாகச் செய்து மகிழ்ந்தீர்.
பதங்கள் 10.37.15 -10.37.20 : இன்னும் இரண்டும் நாட்களில், எல்லாம் வல்ல பகவானே! சாணூரன், முஷ்டிகன், மற்றும் பிற மல்லர்களும், குவலயபீடம் என்னும் யானையும், கம்ச மன்னனும் எல்லோரும் உமது கரணத்தினால் மரணமடையப் போவதை நான் காண்பேன். மேலும் நீர், காலயவனன், முரன், நரகன், மற்றும் சங்காசுரன் போன்றவர்களைக் கொல்வதையும் நான் காண்பேன். பாரிஜாத மலரை நீர் திருடி இந்திரனைத் தோற்கடிப்பதையும் கூட நான் காண்பேன். பின்னர், வீரம் செறிந்த அரசர்கள் பலரின் கன்னிகைகளை உமது வீரத்தினை சீதனமாகக் கொடுத்து நீர் மணம் புரிவதையும் நான் காண்பேன். ஓ, பிரபஞ்ச நாயகரே! பிறகு நீர் துவாரகையில் நிருக மன்னருக்கு சாபவிமோசனம் அளிப்பதையும், மற்றொரு மனைவியுடன் சியாமந்தக மணியைச் சேர்த்துப் பெறுவீர். ஒரு அந்தணனின் இறந்து போன மகனை நீர், உமது பணியாளனான யமராஜனின் உறைவிடத்திலிருந்தும் மீட்டும் வரச்செய்வீர். அதன் பின்னர் நீர் பௌண்ட்ரகனைக் கொன்று, காசி நகரை எரித்து, தந்தவக்ரனை அழித்து இராஜ சூய மகாயக்ஞத்தில் சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும் வதம் செய்வீர். நீர் துவாரகையில் இருக்கும் பொழுது இவை போன்ற லீலைகளையும், இன்னும் பிறவற்றையும் கூட நான் காண்பேன். இந்த லீலைகள் அனைத்தும் இப்புவியில் உன்னதக் கவிஞர்களால் போற்றிப் பாடப்படும்.
பதம் 10.37.21 : இதனையடுத்து காலத்தின் வடிவமாகத் தோன்றியிருக்கும் நீர் அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்து, புவியின் பாரத்தினை நீக்குவதற்காக போர்ப்படை வீரர்கள் அனைவரையும் அழிப்பதையும் நான் காண்பேன்.
பதம் 10.37.22 : அடைக்கலம் பெறுவதற்காக முழுமுதற்கடவுளாகிய உம்மை நாங்கள் அணுகுவோமாக. நீர் முற்றிலும் நிறைவான தூய ஆன்மீக உணர்வுடையவராகவும், எப்போதும் உமது மூலத் தன்மையில் நிலைத்தும் இருக்கின்றீர். உமது விருப்பம் ஒருபோதும் குலைவதில்லை. ஆதலினால் நீர் ஏற்கெனவே உமது விருப்பத்திற்குரிய அனைத்தையும் எய்தப் பெற்றிருக்கின்றீர். உமது ஆன்மீகச் சக்தியின் ஆற்றலினால் நீர் பெளதிக மாயா சக்தியின் குணப் பிரவாகத்தினின்று தனித்து இருக்கின்றீர்.
பதம் 10.37.23 : உம்மை மட்டுமே சார்ந்திருக்கும் பரம ஆளுனரான உம்மை நான் தலைவணங்குகின்றேன். உமது சக்தியால் நீர் இப்பிரபஞ்சத்தில் அளவற்ற குறிப்பிட்ட ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கின்றீர். இப்போது நீர் யது, விருஷ்ணி மற்றும் சாத்வத குலங்களின் தலைசிறந்த வீரராக அவதரித்து மனிதயுத்த நடவடிக்கையில் பங்கு பெறத் தீர்மானித்திருக்கின்றீர்.
பதம் 10.37.24 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: “இவ்வாறு யதுகுலத் தலைவரான பகவான் கிருஷ்ணரிடம் கூறிய நாரதர் கீழே விழுந்து அவருக்குத் தமது வந்தனங்களை அர்ப்பணித்தார். பிறகு மாமுனிவரும், மிகச் சிறந்த பக்தருமான நாரதர் பகவானை நேரில் தரிசித்ததினால் பெருமகிழ்ச்சி கொண்டு அவரிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றார்.”
பதம் 10.37.25 : யுத்தத்தில் கேசி என்னும் அசுரனைக் கொன்றபிறகு முழுமுதற் கடவுள் தமது மகிழ்ச்சிமிக்க ஆயர்குலச் சிறுவர்களின் துணையுடன் தொடர்ந்து பசுக்களையும் பிற விலங்குகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார். இவ்வாறு அவர் விருந்தாவனவாசிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துக் கொண்டிருந்தார்.
பதம் 10.37.26 : ஒரு நாள் ஆயர்குலச் சிறுவர்கள் மலைச் சரிவுகளில் தங்கள் விலங்குகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது திருடர்கள் மற்றும் மேய்ப்பவர்கள் என்று தம்மைப் பாவித்துக் கொண்டு தேடிப்பிடித்து விளையாடும் விளையாட்டில் ஈடுபட்டனர்.
பதம் 10.37.27 : ஓ, மன்னனே! அவ்விளையாட்டில் சிலர் திருடர்கள் போன்றும், சிலர் மேய்ப்பவர்கள் போன்றும் சிலர் ஆடுகள் போன்றும் தம்மை பாவித்துக் கொண்டனர். எந்தவித அச்சமுமின்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பதம் 10.37.28 : பின்னர், மயன் என்னும் அசுரனின் புதல்வனும், சக்தி மிக்க மந்திரவாதியுமான வியோமன் என்பவன் ஆயர்குலச் சிறுவனின் வடிவம் பூண்டு அங்கு வந்தான். அந்த விளையாட்டில் திருடனைப்போல் நடித்துக் கொண்டு அவன், ஆடுகளைப் போல் நடித்துக் கொண்டிருந்த சிறுவர்களின் பெரும் பகுதியினரைத் திருடத் தலைப்பட்டான்.
பதம் 10.37.29 : மெல்ல மெல்ல அம்மகா அசுரன் ஆயர்குலச் சிறுவர்களை மேலும் மேலும் திருடி ஒரு மலைக்குகையினுள் வைத்து அக்குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லினால் அடைத்து வைத்தான். இறுதியில் அவ்விளையாட்டில் ஆடுகளாக நடித்த சிறுவர்களில் நான்கைந்து பேர்களே மீதமிருந்தனர்.
பதம் 10.37.30 : சாதுக்களான பக்தர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கும் பகவான் கிருஷ்ணர் வியோமாசுரனின் செயலினை நன்கு அறிந்து கொண்டார். சிங்கம் ஓநாயைப் பற்றுவதைப் போன்று கிருஷ்ணர், ஆயர்குலச் சிறுவர்கள் பலரை அவன் எடுத்துச் செல்லும் போது அவனைப் பலவந்தமாகப் பற்றி நிறுத்தினார்.
பதம் 10.37.31 : அவ்வசுரன் தனது உண்மை வடிவத்திற்கு மாறினான். அது மலையைப் போன்று பெரிதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது. ஆனால் அவன் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற போது அவனால் முடியவில்லை. ஏனெனில் அவன் பகவான் கிருஷ்ணரின் இறுக்கமான பிடியினால் தனது பலத்தினை இழந்திருந்தான்.
பதம் 10.37.32 : பகவான் அச்சுதன், வியோமாசுரனைத் தமது கரங்களுக்கிடையில் இறுகப்பற்றி நிலத்தில் எறிந்தார். பிறகு தேவலோகத்தில் இருந்து தேவர்கள் பார்த்துக்கொண்டிருக்க கிருஷ்ணர் யாகத்தில் ஒரு விலங்கினைப் பலியிடுவது போல் அவனைக் கொன்றார்.
பதம் 10.37.33 : பின்னர் கிருஷ்ணர், குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருந்த பாறாங்கல்லைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்து, பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களைப் பத்திரமாக வெளிக்கொணர்ந்தார். அதன்பிறகு தேவர்களும், ஆயர்குலச் சிறுவர்களும் அவரது கீர்த்திகளைப் போற்றிப் பாட அவர் தமது கோகுலத்திற்குத் திரும்பினார்.