அத்தியாயம் – 30
கோபியர்கள் கிருஷ்ணரைத் தேடுதல்
பதம் 10.30.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: திடீரென்று பகவான் கிருஷ்ணர் மறைந்தவுடன், அவரைக் காணாத கோபியர்கள் தமது இணையான ஆண் யானையைப் பிரிந்த பெண்யானைகளைப் போல் மிகவும் துயருற்றனர்.
பதம் 10.30.2 : கோபியர்கள் கிருஷ்ணரை நினைத்தவுடன் அவர்தம் இதயங்கள், அவரது செயல்களினாலும், கவர்ச்சி மிகு புன்னகையாலும், வேடிக்கைப் பார்வையினாலும், மதிமயக்கும் பேச்சுக்களாலும், அவர்களோடு அவர் நடத்தி மகிழ்ந்த பல்வேறு லீலைகளினாலும், உணர்ச்சிவயப்பட்டன. இவ்வாறு ரமாவின் துணைவரான பகவான் கிருஷ்ணரின் நினைவுகளில் மூழ்கிய கோபியர்கள் அவரது பல்வேறு உன்னத லீலைகளை நடிக்கத் தொடங்கினர்.
பதம் 10.30.3 : பிரியமான கோபியர்கள், தமது பிரியத்திற்குரிய கிருஷ்ணரின் நினைவுகளில் மூழ்கிப் போனதினால் அவர்களின் உடல்கள், அவர் நடப்பதைப் போன்றும், சிரிப்பதைப் போன்றும், பார்ப்பதைப் போன்றும் பேசுவதைப் போன்றும் அவரது சிறந்த தன்மைகள் அனைத்தையும் பாவனை செய்தன. அவரது நினைவுகளில் முற்றிலும் ஆழ்ந்து அவரது லீலைகளை நினைத்து மதிமயங்கிய காரணத்தினால் அவர்கள் ஒருத்தி மற்றொருத்தியிடம் “நானே கிருஷ்ணர்” என்று கூறினர்.
பதம் 10.30.4 : கிருஷ்ணரைப் பற்றி உரக்கப் பாடிக் கொண்டு அவர்கள் உன்மத்தம் பிடித்த பெண்களின் கூட்டம் போன்று அவரை அவர்கள் அக்காடெங்கும் தேடினர். ஆகாயத்தைப் போன்று எல்லா உயிர்களின் அகத்திலும், புறத்திலும் நிறைந்திருப்பவர் ஆதலினால், அவரைப் பற்றி அவர்கள் மரங்களிடம் கூட விசாரித்தனர்.
பதம் 10.30.5 : (கோபியர்கள் கூறினர்:) ஓ, அரச மரமே! ஒ, அத்திமரமே! ஓ ஆலமரமே! நீங்கள் கிருஷ்ணரைப் பார்த்தீர்களா? தமது புன்னகையாலும், பார்வையினாலும் எங்கள் மனங்களைத் திருடிய நந்தமகாராஜாவின் மைந்தர் எங்களைப் பிரிந்து சென்றுவிட்டார்.
பதம் 10.30.6 : ஓ, குரவமரமே, அசோக மரமே, நாக மரமே, புன்னாக மரமே, சண்பக மரமே! எல்லாப் பெண்களின் கர்வத்தினையும் தமது புன்னகையினால் அழிக்கும், பலராமரின் இளைய சகோதரர் இவ்வழியே சென்றாரா?
பதம் 10.30.7 : கோவிந்தனின் பாதங்களின் மீது பற்றுடைய துளசியே, உன்னையும் உன்னைச் சுற்றி மொய்க்கும் தும்பிகளையும் அணிந்து கொண்டு குற்றமற்றவரான அச்சுதன் இவ்வழியே நடந்து சென்றதை நீ பார்த்தாயா?
பதம் 10.30.8 : ஓ, மல்லிகையே, யூதிகையே தமது கரங்களின் தீண்டலால் உங்களுக்கு இன்பமளித்துவிட்டு மாதவன் இவ்வழியே சென்றாரா?
பதம் 10.30.9 : யமுனை நதிக்கரையில் உங்களது வாழ்வினையே பிறர் நலத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு நிற்கும் மாங்கொடியே, பிரியால மரமே, பலாமரமே, ஆஸனமரமே, கோவிதார மரமே, நாவல் மரமே, எருக்கஞ்செடியே, வில்வமரமே, மகிழமரமே, மாமரமே, கடம்பமரமே, நீபமரமே, செடி கொடிகளே, கோபியர்களாகிய நாங்கள் எங்கள் மனங்களைத் தொலைத்துவிட்டோம். கிருஷ்ணர் இவ்வழியே சென்றாரா என்பதை எமக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக.
பதம் 10.30.10 : ஓ, அன்னை பூமியே, பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளின் ஸ்பரிசம் படுவதற்கு நீ என்ன தவம் செய்தாயோ? அந்த ஸ்பரிசத்தின் விளைவாக எழுந்த இன்பத்தினால் உனது மேனி புளகமுற்று மயிர்க்கூச்செறிந்தனையோ? இந்நிலையில் நீ மிக்க எழிலுடையவளாகத் தோன்றுகிறாய். இது பகவானின் தற்போதைய வடிவத்தினால் உண்டானதா அல்லது இதற்கு முன்பு அவர் வாமனதேவர் என்னும் குள்ள வடிவம் கொண்டு தமது பாதங்களை உன்மீது பதித்ததினால் உண்டானதா அல்லது அதற்கும்முன்பு வராகதேவர் என்னும் பன்றியின் வடிவம் கொண்டு அவர் உன்னைத் தழுவிக் கொண்டதினால் உண்டானதா?
பதம் 10.30.11 : மானின் மனைவியான ஓ, சகியே, பகவான் அச்சுதன், தமக்குப் பிரியமானவளுடன் இங்கே இருந்து உனது விழிகளுக்கு மகிழ்ச்சியளித்தாரா? உண்மையில் இங்கே வீசும் காற்றில் அவரது மாலையிலுள்ள மல்லிகை மலர்களின் நறுமணம் கமழ்ந்திருக்கின்றது. அவர் தமது பிரிய சிநேகிதியைத் தழுவியதினால், அவள் மார்பகங்களில் உள்ள குங்குமத் துகள் அவர் அணிந்துள்ள மாலையில் படிந்திருக்கின்றது.
பதம் 10.30.12 : ஓ மரங்களே! நீங்கள் தலைவணங்கி நிற்பதை நாங்கள் காண்கின்றோம். மதிமயங்கிய தும்பிகள் மொய்க்கும் துளசி மஞ்சரிகள் அலங்கரிக்கும் மாலையினை அணிந்த பலராமரின் இளைய சகோதரர் இவ்வழியே செல்லும் பொழுது, அவர் தமது பாசமிகு பார்வையினால் உங்கள் வந்தனங்களை ஏற்றுக் கொண்டாரா? அவர் தமது ஒரு கரத்தினைத் அவரதுப் பிரியசகியின் தோள்களின் மீது போட்டுக் கொண்டும் மற்றொரு கரத்தில் தாமரை மலர் ஒன்றினையும் வைத்திருத்தல் வேண்டும்.
பதம் 10.30.13 : கிருஷ்ணரைப் பற்றி இக்கொடிகளிடம் நாம் கேட்போம். மரம் என்னும் தங்கள் கணவனின் கரங்களை அவை தழுவிக் கொண்டிருந்த போதிலும் கிருஷ்ணரின் விரல் நகங்கள் அவற்றின் மீது நிச்சயம் பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக விளைந்த இன்பப் பெருக்கினால் அவை மயிர்க்கூச்செறிந்திருக்கின்றன.
பதம் 10.30.14 : இவ்வாறு கூறி கோபியர்கள், கிருஷ்ணரைத் தேடுவதிலிருந்து கவனம் மாறி, அவரது நினைவில் முற்றிலும் ஆழ்ந்தவர்களாக, அவரது பல்வேறு லீலைகளை நடிக்கத் தொடங்கினர்.
பதம் 10.30.15 : ஒரு கோபி பூதனாவைப் போல் நடிக்க மற்றொருத்தி குழந்தை கிருஷ்ணராக நடித்து, அவளது ஸ்தனத்தில் பால் குடிப்பது போல் பாவனை செய்தாள். பிறிதொரு கோபி குழந்தை கிருஷ்ணராக நடித்து, சகடாசுரனாக நடித்த கோபியை எட்டி உதைத்தாள்.
பதம் 10.30.16 : ஒரு கோபி த்ருணாவர்த்தனாக நடித்து, குழந்தை கிருஷ்ணராக நடித்த கோபியைத் தூக்கிச் சென்றாள். மற்றொரு கோபி தவழ்ந்து சென்றாள், அவள் தனது பாதங்களினால் ஊர்ந்து செல்கையில், அவள் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள் ஒலி செய்தன.
பதம் 10.30.17 : ஆயர்குலச் சிறுவர்களாக நடித்த கோபியர்களின் மத்தியில் இரு கோபியர்கள் இராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்தனர். ஒரு கோபி மற்றொரு கோபியுடன் சேர்ந்து வத்ஸாசுரனைக் கிருஷ்ணர் வதம் செய்ததை நடித்துக் காட்டினாள். இரு கோபியர்கள் இணைந்து பகாசுர வதத்தினை நடித்தனர்.
பதம் 10.30.18 : ஒரு கோபி, வெகு தொலைவில் நிற்கும் பசுக்களை கிருஷ்ணர் எவ்வாறு அழைப்பாரென்றும், எவ்வாறு அவர் புல்லாங்குழல் இசைப்பாரென்றும், எவ்வாறு வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார் என்றும் மிகப் பொருத்தமாக நடித்துக் காட்டிய பொழுது பிற கோபியர்கள் அவளை “நன்று! நன்று!” என்று பாராட்டினர்.
பதம் 10.30.19 : கிருஷ்ணரிடம் தனது மனதை நிலை நிறுத்திய மற்றொரு கோபி, தனது கரத்தினைத் தன் தோழியின் தோள்களில் போட்டவாறு “நானே கிருஷ்ணர் எத்துணை எழிலுடன் நான் நடக்கின்றேன் என்பதைப் பாருங்கள்” என்று கூறினாள்.
பதம் 10.30.20 : “காற்று, மழைக்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நான் உங்களைக் காப்பாற்றுவேன்” இவ்வாறு கூறிய ஒரு கோபி தனது தாவணியைத் தன் தலைக்கு மேலே தூக்கினாள்.
பதம் 10.30.21 : (சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) ஓ, மன்னனே! ஒரு கோபி, மற்றொரு கோபியின் தோள்களில் ஏறிக்கொண்டு, தனது பாதத்தினை அடுத்தவள் தலையின் மீது வைத்தபடி “கொடிய பாம்பே! இங்கிருந்து செல்வாயாக. துஷ்டர்களைத் தண்டிப்பதற்காகவே நான் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றேன் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினாள்.
பதம் 10.30.22 : பிறகு வேறொரு கோபி கூறினாள்: அன்பிற்குரிய ஆயர்குலச் சிறுவர்களே! பெருஞ்சீற்றமுடன் எரிகின்ற காட்டுத்தீயைப் பாருங்கள்! விரைந்து உங்கள் விழிகளை மூடிக் கொள்ளுங்கள். உங்களை எளிதாக நான் காப்பேன் என்றாள்.
பதம் 10.30.23 : ஒரு கோபி, மெல்லிய உடலுடைய தனது தோழி ஒருத்தியின் கரங்களை மலர்மாலையினால் கட்டியபடியே “வெண்ணெய் இருந்த பானையினை உடைத்து வெண்ணெய் திருடிய இச்சிறுவனை நான் கட்டிவைக்கப் போகிறேன்” என்று கூற, அத்தோழி தனது அழகிய விழிகளைக் கைகளினால் பொத்தியபடியே அஞ்சுவது போல் பாசாங்கு செய்தாள்.
பதம் 10.30.24 : இவ்வாறு கோபியர்கள் கிருஷ்ணரின் லீலைகளை நடித்துக் கொண்டும், விருந்தாவனத்திலுள்ள மரம், செடி, கொடிகளிடம் அவர் இருப்பிடத்தைப் பற்றி வினவிக் கொண்டும் இருந்தபொழுது, காட்டின் ஒரு மூலையில் கிருஷ்ணரின் காலடிச் சுவடுகளை அவர்கள் காண நேர்ந்தது.
பதம் 10.30.25 : (கோபியர்கள் கூறினர்) இக்காலடிச் சுவடுகளில் தெளிவாகக் காணப்படும் கொடி, தாமரை, வஜ்ராயுதம், அங்குசம், வாற்கோதுமை மணி போன்ற அடையாளங்கள் இவை நந்தமகாராஜாவின் மைந்தருடையவை என்று உறுதிசெய்கின்றன.
பதம் 10.30.26 : கிருஷ்ணரின் காலடிச் சுவடுகளைக் கொண்டு அவர் சென்ற பாதையில் கோபியர்கள் நடக்கத் தொடங்கினர். ஓரிடத்தில் அச்சுவடுகள் அவரது பிரியமிகு காதலியின் காலடிச் சுவடுகளோடு கலந்திருப்பதைக் கண்டு அவர்கள் மிகுந்த துயருற்றுப் பின்வருமாறு கூறினர்.
பதம் 10.30.27 : (கோபியர்கள் கூறினர்:) இங்கே நாம் காணும் யாரோ ஒரு கோபியின் காலடிச் சுவடுகளிலிருந்து அவள் நந்தமகாராஜாவின் மைந்தருடன் இணைந்து சென்றிருக்க வேண்டுமென்று தெரிகிறது. ஓர் ஆண் யானை தனது துதிக்கையினைத் தன் உடன் வரும் பெண் யானையின் மீது போடுவதுபோல் அவரும், அப்பெண்ணின் தோள்களின் மீது தமது கரத்தினைப் போட்டிருத்தல் வேண்டும்.
பதம் 10.30.28 : நிச்சயமாக அக்கோபி, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான கோவிந்தனை முறையாக பூஜித்திருக்கின்றாள். அதனால் அவள் மீது மகிழ்ச்சி கொண்ட அவர், நம்மையெல்லாம் புறக்கணித்து விட்டு அவளை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பதம் 10.30.29 : ஓ, பெண்களே! கோவிந்தனின் தாமரைத்திருவடிகளிலுள்ள தூசு மிகவும் புனிதமானதாகும். அதனைப் பிரம்மதேவனும், சிவபெருமானும், ரமாதேவியும் தங்கள் பாவபலன்களின் நீக்கத்திற்காக அவர்களது தலைகளின் மீது எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.
பதம் 10.30.30 : தனிச்சிறப்புடைய அக்கோபியின் காலடிக்சுவடுகள் நமக்குப் பெரும் கலக்கத்தினை உண்டு பண்ணுகின்றன. எல்லாக் கோபியர்களையும் விட்டுவிட்டு, அவள் மட்டும் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அவள் கிருஷ்ணரின் அதரங்களைச் சுவைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றாள். இங்கே பாருங்கள் இந்த இடத்தில் அவளது காலடிச் சுவடுகளை நம்மால் காண முடியவில்லை. அவளது மென்மையான பாதங்களை புற்களும், முனைகளும் காயப்படுத்தியிருக்க வேண்டும் என்று தெரிகிறது, அதனால் அவளுடைய காதலர் அவரது பிரிய காதலியைத் தூக்கிச் சென்றுள்ளார்.
பதம் 10.30.31 : அன்பார்ந்த கோபியரே, இந்த இடத்தில் காமமிகு கிருஷ்ணரின் காலடிச் சுவடுகள் எவ்வாறு ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதைச் சற்றுப் பாருங்கள். அவரது பிரிய காதலியின் பாரத்தினைச் சுமந்து செல்வது அவருக்குக் கடினமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மலர்களைச் சேகரிப்பதற்காக அக்கூர்மதி உடையவர் அவளைக் கீழே இறக்கிவிட்டிருக்க வேண்டும்.
பதம் 10.30.32 : அன்பிற்குரிய கிருஷ்ணர் தமது பிரிய காதலிக்காக இந்த இடத்தில் எவ்வாறு மலர்களைச் சேகரித்துள்ளார் என்பதைச் சற்றே பாருங்கள். இங்கே அவர் தமது பாதங்களின் முன் பகுதிச் சுவடுகளையே விட்டுச் சென்றுள்ளார். ஏனென்றால் அவர் மலர்களைப் பறிப்பதற்காகத் தமது கால்களின் விரல்களை ஊன்றி நின்றுள்ளார்.
பதம் 10.30.33 : கிருஷ்ணர் அவருடைய காதலியின் கேசத்தினை அழகு செய்வதற்காக நிச்சயம் இந்த இடத்தில் அமர்ந்துள்ளார். அக்காமமிகு இளைஞன் தாம் சேகரித்த மலர்களைக் கொண்டு அக்காமமிகு பெண்ணுக்கு ஒரு மணிமுடி செய்திருக்க வேண்டும்.
பதம் 10.30.34 : (சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) பகவான் கிருஷ்ணர் தம்முன் மகிழ்பவராகவும், சுயதிருப்தியுடையவராகவும், தம்முன் முழுமை உடையவராகவும் இருந்தபோதிலும் அவர் அக்கோபியுடன் களித்து மகிழ்ந்தார். இவ்வாறு அவர் நேர்மாறாக சாதாரண காமமிகு ஆண்கள் மற்றும் கல்நெஞ்சமுடைய பெண்களின் இழிதன்மையினை வெளிப்படுத்திக் காட்டினார்.
பதங்கள் 10.30.35 – 10.30.36 : கோபியர்கள் அலைந்து திரிந்த பொழுது அவர்களின் மனம் முற்றிலும் குழப்பத்திற்காளானது. அவர்கள் கிருஷ்ணருடைய லீலைகளின் பல்வேறு அடையாளங்களைச் சுட்டிக் காட்டினர். கிருஷ்ணர் பிற கோபியர்கள் அனைவரையும் புறக்கணித்து ஒரு குறிப்பிட்ட கோபியை மட்டும் ஒரு தனிக் காட்டிற்கு அழைத்துச் சென்றாரே அவள் தானே பிற பெண்கள் அனைவரினும் சிறந்தவள் என்று தன்னைப் பற்றிக் கருதத் தொடங்கினாள். “அவள் நினைத்தாள்” எனது காதலர், பிறகோபியர்கள் அனைவரும் மன்மதனால் துன்புறுத்தப்பட்டபோதிலும் கூட அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர் தனிமையில் உறவாட என்னை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளார்” என்று.
பதம் 10.30.37 : காதலர்கள் இருவரும் விருந்தாவனக்காட்டின் ஒரு பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபொழுது அக்குறிப்பிட்ட கோபி தன்னை எண்ணிக் கர்வம் கொள்ளத் தொடங்கினாள். அவள் பகவான் கேசவரிடம் “இதற்கு மேல் என்னால் நடக்க முடியாது. நீர் எங்கெல்லாம் செல்ல விரும்புகின்றீரோ அங்கெல்லாம் என்னைத் தூக்கிச் செல்வீராக” என்று கூறினாள்.
பதம் 10.30.38 : அவள் இவ்வாறு கூறியதும் பகவான் கிருஷ்ணர் “எனது தோள்களின் மீது ஏறிக் கொள்வாயாக” என்று மறுமொழி கூறினார். இதனைக் கூறிய மறுகணமே அவர் அங்கிருந்து மறைந்தார். பிறகு அவருடைய பிரிய காதலி மிகுந்த துயரத்திற்கு ஆளானாள்.
பதம் 10.30.39 : அவள் உரக்கக் கூறினாள்: ஓ, நாதனே! எந்தன் காதலரே! ஓ பேரன்பிற்குரியவரே, நீ எங்கே இருக்கின்றீர்? நீர் எங்கே இருக்கின்றீர்? வலிமைமிக்க கரங்களை உடையவரே, ஓ, நண்பரே, உமது இந்த ஏழைப்பணிப்பெண்ணுக்கு உம்மைக் காட்டியருள்வீராக!
பதம் 10.30.40 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கிருஷ்ணரைத் தேடிக் கொண்டு அவர் சென்ற பாதையில் தொடர்ந்து வந்த கோபியர்கள் சிறிது தூரத்தில், சோகத்தில் வீற்றிருந்த தங்கள் தோழியைக் கண்டனர். தனது காதலரின் பிரிவினால் அவள் மிக்க குழப்பமுற்றிருந்தாள்.
பதம் 10.30.41 : அவள் அவர்களிடம், மாதவன் தனக்கு எந்த அளவிற்கு மரியாதை அளித்தாரென்றும், ஆயினும் தனது தவறான நடத்தையின் காரணமாகத் தான் எவ்வாறு அவமானப்பட நேர்ந்தது என்றும் கூறினாள். இதனைக் கேட்டுக் கோபியர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்காளாயினர்.
பதம் 10.30.42 : பிறகு கிருஷ்ணரைத் தேடிக் கோபியர்கள் காட்டின் அடர்ந்த பகுதியினுள் புகுந்து நிலவு வெளிச்சம் தெரியும் இடம் வரை சென்றனர். ஆனால் தாங்கள் இருளில் மூழ்கிவிட்டோம் என்று உணர்ந்தவுடன் அவர்கள் திரும்பிவரத் தீர்மானித்தனர்.
பதம் 10.30.43 : அவர்களின் மனங்கள் அவரது நினைவுகளில் மூழ்கின; அவரைப் பற்றியே அவர்கள் உரையாடினர். அவரது லீலைகளை நடித்து அவர், தம் முன் இருப்பதாக உணர்ந்தனர். கிருஷ்ணரின் உன்னதக் குணங்களின் பெருமைகளை உரத்தகுரலில் பாடி அவர்கள் தமது இல்லங்களை முற்றிலும் மறந்தனர்.
பதம் 10.30.44 : கோபியர்கள் மீண்டும் காளிந்தி நதிக்கரைக்கு வந்தனர். கிருஷ்ணரைத் தியானித்து அவர் திரும்பிவருவார் என்று ஆர்வமுடன் நம்பிக்கை கொண்டு அவரைப் பற்றிப் பாடுவதற்காக அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து கீழே அமர்ந்தனர்.