அத்தியாயம் – 37
கேசி மற்றும் வியாமாசுரனை அழித்தல்
பதங்கள் 10.37.1 – 10.37.2
ஸ்ரீ-ஸுக உவாச
கேஸீ து கம்ஸ-ப்ரஹித: குரைர் மஹீம்
மஹா-ஹயோ நிர்ஜரயன் மனோ—ஜவ:
ஸடாவ தூதாப்ர-விமான-ஸங்குலம்
குர்வன் நபோ ஹேஷித-பீஷிதாகில:
தம் த்ராஸயந்தம் பகவான் ஸ்வ-கோகுலம்
தத்-ஹேஷிதைர் வால-விகூர்ணிதாம்புதம்
ஆத்மானம் ஆஜௌ ம்ருகயந்தம் அக்ர-ணீர்
உபாஹ்வயத் ஸ வ்யநதன் ம்ருகேந்த்ர-வத்
ஸ்ரீ-ஸுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கேஸீ—கேசி என்னும் அசுரன்; து—மேலும் இப்போது; கம்ஸ-ப்ரஹித:—கம்சனால் அனுப்பப்பட்டவன்; குரை:—அவனது காற்குளம்புகளினால்; மஹீம்—பூமியை; மஹா-ஹய:—ஒரு பெரிய குதிரை; நிர்ஜரயன்—மிகச் சிறந்த; மன:—மனதினைப் போல்; ஜவ:—அவன் வேகம்; ஸடா—அவனது பிடரி மயிரினால்; அவ தூத—சிதறின; அப்ர—மேகங்களும்; விமான—(தேவர்களின்) விமானங்களும்; ஸங்குலம்—கூட்டமாக; குர்வன்—செய்தான்; நப:—வானத்தினை; ஹேஷித—அவனது கனைப்பொலியினால்; பீஷித—நடுங்கச் செய்தான்; அகில—அனைத்தையும்; தம்—அவனது; த்ராஸயந்தம்—பயங்கரமான; பகவான்—பரமபுருஷபகவான்; ஸ்வ கோகுலம்—அவரது கோகுலம்; தத்—ஹேஷிதை:—அக்கனைப்பொலியினால்; வால—அவனது வாலிலுள்ள முடியினால்; விகூர்ணித—அசைத்தான்; அம்புதம்—மேகங்களை; ஆத்மானம்—அவரை; ஆஜெள—ஒரு யுத்தத்திற்கு; ம்ருகயந்தம்—தேடிக் கொண்டிருந்தான்; அக்ரணீ:—முன்னோக்கி வந்தார்; உபாஹ்வயத்—சந்திப்பதற்காக; ஸ:—அவன்; வ்யனதன்—கர்ஜித்தான்; ம்ருகேந்த்ர-வத்—சிங்கத்தைப் போன்று. கேசி;
சுகதேக கோஸ்வாமி கூறினார்: கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்னும் அசுரன் ஒரு பெரிய குதிரை வடிவம் பூண்டு விரஜத்திற்கு வந்தான். மனோ வேகத்தில் ஓடி வந்த அவன் தனது காற்குளம்புகளினால் நிலத்தைக் கிழித்தான். அவனது பிடரிமயிர் வானத்திலுள்ள மேகங்களையும், தேவர்களின் விமானங்களையும் சிதறடித்தது. அவன் தனது பெருத்த கனைப்பொலியினால் எல்லோரையும் நடுங்கச் செய்தான். தனது பயங்கரமான கனைப்பொலியினாலும், வாலினால் மேகங்களைக் கலைப்பதின் மூலமும், கோகுலத்தினை எவ்வாறு அவ்வசுரன் நடுங்கச் செய்து கொண்டிருந்தான் என்பதைக் கண்டவுடன் முழுமுதற் கடவுள் அவனைச் சந்திப்பதற்காக அவனிருக்குமிடம் வந்தார். கேசியோ கிருஷ்ணரைச் சண்டை செய்வதற்காக தேடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் பகவான் வந்து தன்னிடம் வரும்படி அறைகூவல் விடுத்தவுடன் குதிரை வடிவமாக நின்ற அசுரன் ஒரு சிங்கத்தைப் போல் பதிலுக்குக் கர்ஜித்தான்.
பதம் 10.37.3
ஸ தம் நிஸாம்யாபிமுகோ முகேன கம்
பிபன்ன் இவாப்யத்ரவத் அதி-அமர்ஷண:
ஜகான பத்ப்யாம் அரவிந்த-லோசனம்
துராஸதஸ் சண்ட-ஜவோ துரத்யய:
ஸ:—அவன், கேசி; தம்—அவரை, கிருஷ்ணரை; நிஸாம்ய—கண்டு; அபிமுக:—தன் முன்னால்; முகேன—அவனது வாயினால்; கம்—வானத்தை; பிபன்—பருகுதல்; இவ—போன்று; அப்யத்ரவத்—முன்னோக்கி ஓடினான்; அதி-அமர்ஷண:—மிகுந்த ஆத்திரத்துடன்; ஜகான—அவன் தாக்கினான்; பத்ப்யாம்—அவனது முன்னங்கால்கள் இரண்டினால்; அரவிந்த-லோசனம்—தாமரை விழியுடைய பகவானை; துரா ஸத:—நெருங்குதற்கரிய; சண்ட—மூர்க்கமான; ஜவ:—அவனது வேகம்; துரத்யய:—வெல்வதற்கரியது.
தன் முன்னால் பகவான் நிற்பதைக் கண்ட கேசி மூர்க்கமுடன் அவரை நோக்கி ஓடினான். அவனது வாய் வானத்தையே விழுங்குவது போல் அகல விரிந்திருந்தது. நெருங்குதற்கரிய, வெல்வதற்கரிய குதிரையசுரன் கடுமையான வேகத்தில் ஓடி செந்தாமரை விழியுடைய பகவானைத் தனது முன்னங்கால்கள் இரண்டினால் தாக்க எத்தனித்தான்
பதம் 10.37.4
தத் வஞ்சயித்வா தம் அதோக்ஷஜோ ருஷா
ப்ரக்ருஹ்ய தோர்ப்யாம் பரிவித்ய பாதயோ:
ஸாவஜ்ஞம் உத்ஸ்ருஜ்ய தனு:-ஸதாந்தரே
யதோரகம் தார்க்ஷ்ய-ஸுதோ வ்யவஸ்தித:
தத்—அது; வஞ்சயித்வா—விலக்கினார்; தம்—அவனை; அதோக்ஷஜ:—உன்னதமான பகவான்; ருஷா—சினத்துடன்; ப்ரக்ருஹ்ய—பற்றி; தோர்ப்யாம்—தமது கரங்களினால்; பரிவித்ய—சுழற்றி; பாதயோ:—கால்களை; ஸ-அவஜ்ஞம்—ஏளனமாக; உத்ஸ்ருஜ்ய—தூக்கி எறிந்தார்; தனு:—அளவுகள்; ஸத—நூறு; அந்தரே—தூரத்தில்; யதா—போன்று; உரகம்—ஒரு பாம்பினை; தார்க்ஷ்ய—கர்தம முனிவரின்; ஸுத:—மைந்தன் (கருடன்); வ்யவஸ்தித:—நின்றார்.
ஆனால் உன்னதமான பகவானோ கேசியின் தாக்குதலைத் தடுத்துத் தமது கரங்களினால் பெருஞ்சினத்துடன் அவ்வசுரனின் கால்களைப் பற்றித் தூக்கி வானில் சுழற்றி கருடன் ஒரு பாம்பைத் தூக்கி எறிவது போல் அவனை ஏளனமாக நூறு தனு அளவுகள் தூரத்தில் தூக்கி எறிந்தார். பின்னர் பகவான் கிருஷ்ணர் அங்கேயே நின்றார்.
பதம் 10.37.5
ஸ: லப்த-ஸம்ஜ்ஞ: புனர் உத்திதோ ருஷா
வ்யாதாய கேஸீ தரஸாபதத் தரிம்
ஸோ ‘பி அஸ்ய வக்த்ரே புஜம் உத்தரம் ஸ்மயன்
ப்ரவேஸயாம் ஆஸ யதோரகம் பிளே
ஸ:—அவன்; கேசி; லப்த—மீண்டும் பெற்று; ஸம்ஜ்ஞ:—உணர்வினை; புன:—மீண்டும்; உத்தித:—எழுந்தான்; ருஷா—சினத்துடன்; வ்யாதாய—திறந்தான் (அவனது வாயினை) பெரிதாக; கேஸீ—கேசி; தரஸா—வேகமாக; அபதத்—ஓடினான்; ஹரிம்—கிருஷ்ணரை நோக்கி; ஸ:—அவர், பகவான் கிருஷ்ணர்; அபி—மேலும்; அஸ்ய—அவனது; வக்த்ரே—வாயினுள்; புஜம்—தமது கரத்தினை; உத்தரம்—இடது; ஸ்மயன்—புன்னகையுடன்; ப்ரவேஸயாம் ஆஸ—அதனுள் இட்டார்; யதா—போன்று; உரகம்—ஒரு பாம்பு; பிளே—ஒரு பொந்தினுள் (புகுதல்).
உணர்வுபெற்று எழுந்த கேசி சினத்துடன் தனது வாயினைப் பெரிதாகத் திறந்தபடி மீண்டும் பகவான் கிருஷ்ணரைத் தாக்குவதற்காக ஓடினான். ஆனால் பகவானோ புன்னகை பூத்தபடி, நிலத்திலுள்ள பொந்தில் பாம்பு நுழைவது போல் தமது இடது கரத்தினை அக்குதிரையின் வாயினுள் எளிதாக நுழைத்தார்.
பதம் 10.37.6
தந்தா நிபேதுர் பகவத்-புஜ-ஸ்ப்ருஸஸ்
தே கேஸினஸ் தப்த-மய-ஸ்ப்ருஸோ யதா
பாஹுஸ் ச தத்-தேஹ கதோ மஹாத்மனோ
யதாமய: ஸம்வவ்ருதே உபேக்ஷித:
தந்தா—பற்கள்; நிபேது:—வீழ்ந்தன; பகவத்—பரமபுருஷ பகவானின்; புஜ—கரம்; ஸ்ப்ருஸ:—தொட்டதனால்; தே—அவை; கேஸின:—கேசியின்; தப்த-மய—நெருப்பில் காய்ச்சிய (இரும்பு); ஸ்ப்ருஸ்:—தொடுதல்; யதா—போன்று; பாஹு:—கரம்; ச—மற்றும்; தத்—அவனுடைய, கேசியினுடைய; தேஹ—உடல்; கத:—புகுந்தது; மஹா-ஆத்மன:—பரமாத்மாவின்; யதா—போன்று; ஆமய:—நோயுற்ற நிலையில் (குறிப்பாக வயிற்றின் வீக்கம்); ஸம்வவ்ருதே—அளவில் பெரிதாக வளர்ந்து; உபேக்ஷித:—புறக்கணிப்பினால்.
பரமபுருஷ பகவானின் கரம் நெருப்பில் காய்ச்சிய இரும்புத் துண்டம் போல் கேசிக்குக் கொதித்தது. அவனது பற்கள் அதன் மீது பட்டவுடன் உடைந்து வீழ்ந்தன. சரியான கவனிப்பின்மையினால் நோயுற்ற வயிறு பெரிதாக வீங்குவதுபோல் முழுமுதற் கடவுளின் கரம் கேசியின் உடலினுள் மிகப் பெரிதாக விரிந்தது.
பதம் 10.37.7
ஸமேதமானேன ஸ க்ருஷ்ண-பாஹுனா
நிருத்த-வாயுஸ் சரணாம்ஸ் ச விக்ஷிபன்
ப்ரஸ்வின்ன-காத்ர: பரிவ்ருத்த-லோசன:
பபாத லண்டம் விஸ்ருஜன் க்ஷிதௌ வ்யஸு:
ஸமேதமானேன—விரிந்து; ஸ:—அவன்; க்ருஷ்ண-பாஹுனா—பகவான் கிருஷ்ணரின் கரத்தினால்; நிருத்த—நிறுத்தப்பட்டது; வாயு:—அவனுடைய சுவாசம்; சரணான்—அவனுடைய கால்கள்; ச—மற்றும்; விக்ஷிபன்—எறிதல்; ப்ரஸ்வின்ன—வியர்வையினை; காத்ர:—அவனது உடல்; பரிவ்ருத்த—சுழன்றன; லோசன:—அவனது விழிகள்; பபாத—அவன் கீழே விழ்ந்தான்; லண்டம்—மலம்; விஸ்ருஜன்—கழிந்து வெளியேறுதல்; க்ஷிதெள—நிலத்தில்; வ்யஸு:—உயிரின்றி.
வளர்ச்சிபெற்ற பகவான் கிருஷ்ணரின் கரம் கேசியின் சுவாசத்தினை முற்றிலும் தடுத்து நிறுத்தியவுடன் அவனுடைய கால்கள் துடி துடித்தன, உடலெங்கும் வியர்வை ஊற்றெடுத்தது, அவனுடைய விழிகள் சுற்றிக் சுழன்றன. பின்னர் அவ்வசுரன் தன்னையறியாது மலம் கழித்து நிலத்தில் வீழ்ந்து இறந்தான்.
பதம் 10.37.8
தத்-தேஹத: கர்கடிகா-பலோபமாத்
வ்யஸோர் அபாக்ருஷ்ய புஜம் மஹா-புஜ:
அவிஸ்மிதோ ‘யத்ன-ஹதாரிக: ஸுரை:
ப்ரஸூன-வர்ஷைர் வர்ஷத்பிர் ஈடித:
தத்-தேஹத:—கேசியின் உடலிலிருந்து; கர்கடிகா-பல—கர்கடிகா பழம்; உபமாத்—அது ஒத்திருந்தது; வ்யஸோ:—அதிலிருந்து சுவாசக் காற்று செல்வது; அபாக்ருஷ்ய—எடுத்துக் கொண்டார்; புஜம்—அவரது கரத்தினை; மஹா-புஜ:—வலிமைமிக்க கரத்தினையுடைய பகவான்; அவிஸ்மித:—எந்தவிதக் கர்வமுமின்றி; அயத்ன—முயற்சி எதுவுமின்றி; ஹத—கொன்றார்; அரிக:—அவரது பகைவனை; ஸுரை:—தேவர்களால்; ப்ரஸூன—மலர்களின்; வர்ஷை:—மாரிபொழியப்பட்டது; வர்ஷத்பி:—அவர்மீது பொழிந்தனர்; ஈடித:—வழிபட்டனர்.
உறுதிமிக்க கரத்தினையுடைய பகவான் கிருஷ்ணர் ‘கர்கடிகா’ பழத்தினைப் போல் தற்போது தோன்றும் தமது கரத்தினை கேசியின் உடலிலிருந்து வெளியே எடுத்தார். அவரது பகைவனை முயற்சியேதுமின்றிக் கொன்றும் சிறிதளவும் கர்வமுமின்றிப் பகவான், வானிலிருந்து தேவர்கள் தம் மீது மலர் மாரி பொழிந்து வணங்கியதை ஏற்றுக் கொண்டார்.
பதம் 10.37.9
தேவர்ஷிர் உபஸங்கம்ய பாகவத-ப்ரவரோ ந்ருப
க்ருஷ்ணம் அக்லிஷ்ட-கர்மாணம் ரஹஸி ஏதத் அபாஷத
தேவ-ரிஷிர்:—தேவரிஷி (நாரதமுனிவர்); உபஸங்கம்ய—அணுகினார்; பாகவத—பகவானின் பக்தர்களின்; ப்ரவர:—மேன்மை மிக்க; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து); க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணரை; அக்லிஷ்ட—துன்பமின்றி; கர்மாணம்—அவருடைய செயல்கள்; ரஹஸி—தனிமையில்; ஏதத்—இது; அபாஷத—கூறினார்.
அன்பிற்குரிய அரசனே! அதன்பிறகு, தேவரிஷியான நாரத முனிவர் பகவான் கிருஷ்ணரை தனிமையான இடம் ஒன்றில் சந்தித்தார். தமது லீலைகளை முயற்சி எதுவுமின்றிச் செய்யும் பகவானிடம் மேன்மைமிக்க பக்தரான நாரதர் பின்வருமாறு கூறினார்.
பதங்கள் 10.37.10 – 10.37.11
க்ருஷ்ண க்ருஷ்ணாப்ரமேயாத்மன் யோகேஸ ஜகத்-ஈஸ்வர
வாஸுதேவாகிலாவாஸ ஸாத்வதாம் ப்ரவர ப்ரபோ
த்வம் ஆத்மா ஸர்வ-பூதானாம் ஏகோ ஜ்யோதிர் இவைதஸாம் கூடோ
குஹா-ஸய: ஸாக்ஷி மஹா-புருஷ ஈஸ்வர:
க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா; அப்ரமேய-ஆத்மன்—ஓ, அளவிடற்கரியவரே; யோக-ஈஸ—ஓ, யோக ஸித்திகளின் மூலமே; ஜகத்-ஈஸ்வர—ஓ, ஜகதீஸ்வரரே; வாஸுதேவ—ஓ, வசுதேவரின் மைந்தனே; அகிலஆவாஸ—ஓ, அனைவர்க்கும் அடைக்கலமாக இருப்பவரே; ஸாத்வதாம்—யது குலத்தின்; ப்ரவர—நீரே தலைசிறந்தவராவீர்; ப்ரபோ—பிரபுவே; த்வம்—நீர்; ஆத்மா—பரமாத்மா; ஸர்வ—அனைத்து; பூதானாம்—படைக்கப்பட்ட உயிர்களின்; ஏக:—தனி ஒருவராக; ஜ்யோதி:—நெருப்பு; இவ—போன்று; ஏதஸாம்—விறகில்; கூட:—மறைந்துள்ள; குஹா—மனக்குகையினுள்; ஸய:—அமர்ந்திருக்கும்; ஸாக்ஷி—சாட்சியாவீர்; மஹா-புருஷ:—முழுமுதற் கடவுள்; ஈஸ்வர:—பரம நெறியாளர்.
(நாரதமுனிவர் கூறினார்:) ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா அளவிடற்கரிய பகவானே, யோக ஸித்திகளின் மூலாதாரமே, ஜகதீஸ்வரரே! ஓ, வாசுதேவா, அனைவரின் அடைக்கலமே, யது குலத்தில் சிறந்தவரே! ஓ, தலைவரே, நீரே படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் பரமாத்மாவாக அவற்றின் மனக் குகையினுள், விறகில் நெருப்பு உறைந்திருப்பதுபோல், கண்ணுக்குப் புலப்படாமல் அமர்ந்திருக்கின்றீர். நீரே, அனைவரின் அகத்தினுள்ளும் சாட்சியாக விளங்கும் முழுமுதற் கடவுளும், பரம நெறியாளரும் ஆவீர்.
பதம் 10.37.12
ஆத்மனாத்மாஸ்ரய: பூர்வம் மாயயா ஸஸ்ருஜே குணான்
தைர் இதம் ஸத்ய-ஸங்கல்ப: ஸ்ருஜஸி அத்ஸி அவஸீஸ்வர:
ஆத்மனா—உமது சுயச் சக்தியால்; ஆத்ம—ஆத்மாவின்; ஆஸ்ரய:—அடைக்கலம்; பூர்வம்—பூர்வத்தில்; மாயயா—உமது படைப்புச் சக்தியால்; ஸஸ்ருஜே—நீர் உருவாக்கினீர்; குணான்—ஜட இயற்கையின் அடிப்படைக் குணங்களை; தை:—அவற்றின் மூலம்; இதம்—இந்த, (பிரபஞ்சம்); ஸத்ய—எப்போதும் சத்தியத்தினை உணர்ந்து; ஸங்கல்ப:—அவருடைய விருப்பங்கள்; ஸ்ருஜஸி—நீர்படைத்து; அத்ஸி—அழித்து; அவஸி—காக்கும்; ஈஸ்வர:—நெறியாளர் ஆவீர்.
நீரே, அனைத்து ஆத்மாக்களின் அடைக்கலமாக இருக்கின்றீர். பரம நெறியாளரானதினால் உமது விருப்பத்திற்கேற்ப உமது இச்சைகளை நீர் நிறைவேற்றிக் கொள்கின்றீர். உமது சுயபடைப்புச் சக்தியால் ஆதியில் நீர் ஜட இயற்கையின் அப்படைப்பு குணங்களை உருவாக்கினீர். அவற்றின் துணையின் மூலம் நீர் இப்பிரபஞ்சத்தினை படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கின்றீர்.
பதம் 10.37.13
ஸ த்வம் பூதர-பூதானாம் தைத்ய-ப்ரமத-ரக்ஷஸாம்
அவதீர்ணோ விநாஸாய ஸாதூனாம் ரக்ஷணாய ச
ஸ:—அவர்; த்வம்—நீரே ஆவீர்; பூ-தர—அரசர்களாக; பூதானாம்—தோற்றமளிப்பவர்கள்; தைத்ய-ப்ரமத-ரக்ஷஸாம்—பல்வேறு வகையான அசுரர்கள்; அவதீர்ண:—நீர் அவதரித்திருக்கின்றீர்; விநாஸாய—அழிப்பதற்காகவும்; ஸாதூனாம்—சாதுக்களின்; ரக்ஷணாய—காப்பதற்காகவும்; ச—மற்றும்.
படைப்பவரான நீரே, இப்போது இங்கே அரசர்களாகத் தோன்றும் தைத்யர், பிரமதர், ராட்சசர் போன்ற அசுரர்களை அழிக்கவும், தெய்வீக அருளாளர்களான சாதுக்களைக் காக்கவும் இப்பூமியில் தோன்றியுள்ளீர்.
பதம் 10.37.14
த்ருஷ்ட்யா தே நிஹதோ தைத்யோ லீலயாயம் ஹயாக்ருதி:
யஸ்ய ஹேஷித-ஸந்த்ரஸ்தாஸ் த்யஜந்தி அனிமிஸா திவம்
த்ருஷ்ட்யா—(எமது) நல்லதிர்ஷ்டத்தினால்; தே—உம்மால்; நிஹத:—கொல்லப்பட்டான்; தைத்ய:—அசுரன்; லீலயா—ஒரு விளையாட்டாக; அயம்—இது; ஹய-ஆக்ருதி:—ஒரு குதிரையின் வடிவம் பூண்டு; யஸ்ய—எவருடைய; ஹேஷித—களைப்பினால்; ஸந்த்ரஸ்தா:—நடுங்கச் செய்து; த்யஜந்தி—நீங்கினர்; அனிமிஷா—தேவர்கள்; திவம்—சொர்க்கம்.
குதிரை வடிவம் மேற்கொண்ட அசுரனின் பயங்கரமான கனைப்பொலி தேவர்களை நடுங்கச் செய்து அவர்களை சொர்க்கத்தினை விட்டே நீங்கச் செய்தது. ஆனால் எங்கள் நல்லதிர்ஷ்டத்தின் காரணமாக அவனைக் கொல்வதை நீங்கள் ஒரு விளையாட்டாகச் செய்து மகிழ்ந்தீர்.
பதங்கள் 10.37.15 -10.37.20
சாணூரம் முஷ்டிகம் சைவ மல்லான் அன்யாம்ஸ் ச
ஹஸ்தினம் கம்ஸம் ச நிஹதம் த்ரக்ஷ்யே பரஸ்வோ ‘ஹனி தே விபோ
தஸ்யானு ஸங்க-யவன முராணாம் நரகஸ்ய ச பாரிஜாதாபஹரணம்
இந்த்ரஸ்ய ச பராஜயம்
உத்வஹம் வீர-கன்யானாம் வீர்ய-ஸுல்காதி-லக்ஷணம்
ந்ருகஸ்ய மோக்ஷணம் ஸாபாத் த்வாரகாயாம் ஜகத்-பதே
ஸ்யமந்தகஸ்ய ச மணேர் ஆதானம் ஸஹ பார்யயா
ம்ருத-புத்ர-ப்ரதானம் ச ப்ராஹ்மணஸ்ய ஸ்வ-தாமத:
பௌண்ட்ரகஸ்ய வதம் பஸ்சாத் காஸி-புர்யாஸ் ச தீபனம் தந்தவக்ரஸ்ய
நிதனம் சைத்யஸ்ய ச மஹா-க்ரதெள
யானி சான்யானி வீர்யாணி த்வாரகாம் ஆவஸன் பவான்
கர்தா த்ரக்ஷ்யாமி அஹம்தானி கேயானி கவிபிர் புவி
சாணூரம்—சாணூரன்; முஷ்டிகம்—முஷ்டிகன்; ச—மற்றும்; ஏவ—கூட; மல்லான்—மல்லர்கள்; அன்யான்—பிறர்; ச—மற்றும்; ஹஸ்தினம்—யானை (குவலயபீடம்); கம்சம்—கம்ச மன்னன்; ச—மற்றும்; நிஹதம்—கொல்லப்படுவதை; த்ரக்ஷ்யே—நான் காண்பேன்; பர-ஸ்வ:—நாளை மறுநாள்; அஹனி—அந்த நாளில்; தே—உம்மால்; விபோ—ஓ, எல்லாம் வல்ல பகவானே; தஸ்ய-அனு—அதன் பின்னர்; ஸங்க-யவன-முராணாம்—சங்கன் (பாஞ்சஜனன்), காலயவனன், முரன்-என்னும் அசுரர்களின்; நரகஸ்ய—நரகாசுரனின்; ச—மற்றும்; பாரிஜாத—சொர்க்கத்திலுள்ள பாரிஜாதமலர்; அப-ஹரணம்—திருடிக் கொண்டு; இந்த்ரஸ்ய—பகவான் இந்திரனின்; ச—மற்றும்; பராஜயம்—தோல்வியுறச் செய்து; உத்வாஹம்—திருமணம்; வீர—வீரம் செறிந்த மன்னர்களின்; கன்யானாம்—கன்னியர்களை; வீர்ய—உமது வீரத்தினால்; ஸுல்க—கன்னிகைக்குக் கொடுக்கப்படும் சீதனப்பணம்; ஆதி—முதலானவை; லக்ஷணம்—இலட்சணங்களும்; ந்ருகஸ்ய—நிருக மன்னனின்; மோக்ஷணம்—விமோசனமளித்தல்; ஸாபாத்—அவனது சாபத்திலிருந்து; த்வாரகாயாம்—துவாரகாபுரியின்; ஜகத்-பதே—ஓ, பிரபஞ்சத் தலைவரே; ஸ்யமந்தகஸ்ய—சியமந்தகம் என்னும்; ச—மற்றும்; மனே:—மணியின்; ஆதானம்—எடுத்துக்கொண்டு; ஸஹ—உடன்; பார்யயா—மனைவி (ஜாம்பவதி); ம்ருத—மரணமடைந்த; புத்ர—புத்திரனை; ப்ரதானம்—கொடுத்தல்; ச—மற்றும்; ப்ராஹ்மணஸ்ய—ஓர் அந்தணரின்; ஸ்வ-தாமத:—சுய இருப்பிடம் (அதாவது மரணத்தின் உறைவிடத்திலிருந்து); பௌண்ட்ரகஸ்ய—பௌண்ட்ரகனின்; வதம்—வதம் செய்தல்; பஸ்சாத்—பின்னர்; காஸி-புர்யா:—காசி நகரின் (பெனாரஸ்); ச—மற்றும்; தீபனம்—எரித்தல்; தந்தவக்ரஸ்ய—தந்தவக்ரனின்; நிதனம்—மறைவு; சைத்யஸ்ய—சைத்யாவின் (சிசுபாலனின்); ச—மற்றும்; மஹா-க்ரதௌ—மகாயாகம் நடைபெறும் வேளையில் (மகாராஜா யுதிஷ்டிரனின் இராஜசூய யாகம்); யானி—இவைகளும்; ச—மற்றும்; அன்யானி—பிறவும்; வீர்யாணி—வீரச்செயல்கள்; த்வாரகாம்—துவாரகையில்; ஆவஸன்—வசித்துக்கொண்டு; பவான்—தாங்கள்; கர்தா—நிகழ்த்தப்போவதையும்; த்ரக்ஷ்யாமி—காண்பேன்; அஹம—நான்; தானி—அவற்றை; கேயானி—பாடப்படும்; கவிபி:—கவிஞர்களால்; புவி—இப்புவியின்மேல்.
இன்னும் இரண்டும் நாட்களில், எல்லாம் வல்ல பகவானே! சாணூரன், முஷ்டிகன், மற்றும் பிற மல்லர்களும், குவலயபீடம் என்னும் யானையும், கம்ச மன்னனும் எல்லோரும் உமது கரணத்தினால் மரணமடையப் போவதை நான் காண்பேன். மேலும் நீர், காலயவனன், முரன், நரகன், மற்றும் சங்காசுரன் போன்றவர்களைக் கொல்வதையும் நான் காண்பேன். பாரிஜாத மலரை நீர் திருடி இந்திரனைத் தோற்கடிப்பதையும் கூட நான் காண்பேன். பின்னர், வீரம் செறிந்த அரசர்கள் பலரின் கன்னிகைகளை உமது வீரத்தினை சீதனமாகக் கொடுத்து நீர் மணம் புரிவதையும் நான் காண்பேன். ஓ, பிரபஞ்ச நாயகரே! பிறகு நீர் துவாரகையில் நிருக மன்னருக்கு சாபவிமோசனம் அளிப்பதையும், மற்றொரு மனைவியுடன் சியாமந்தக மணியைச் சேர்த்துப் பெறுவீர். ஒரு அந்தணனின் இறந்து போன மகனை நீர், உமது பணியாளனான யமராஜனின் உறைவிடத்திலிருந்தும் மீட்டும் வரச்செய்வீர். அதன் பின்னர் நீர் பௌண்ட்ரகனைக் கொன்று, காசி நகரை எரித்து, தந்தவக்ரனை அழித்து இராஜ சூய மகாயக்ஞத்தில் சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும் வதம் செய்வீர். நீர் துவாரகையில் இருக்கும் பொழுது இவை போன்ற லீலைகளையும், இன்னும் பிறவற்றையும் கூட நான் காண்பேன். இந்த லீலைகள் அனைத்தும் இப்புவியில் உன்னதக் கவிஞர்களால் போற்றிப் பாடப்படும்.
பதம் 10.37.21
அத தே கால-ரூபஸ்ய க்ஷபயிஷ்ணோர் அமுஷ்ய வை
அக்ஷௌஹிணீனாம் நிதனம் தரக்ஷ்யாமி அர்ஜுன-ஸாரதே:
அத—பின்னர்; தே—உம்மால்; கால-ரூபஸ்ய—காலத்தின் வடிவமாகத் தோன்றியிருப்பவரே; க்ஷபயிஷ்ணோ:—அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பவர்; அமுஷ்ய—இவ்வுலகின் (பாரத்தினை); வை—உண்மையில்; அக்ஷௌஹிணீனாம்—இராணுவம் முழுவதின்; நிதனம்—அழிப்பதையும்; தரக்ஷ்யாமி—நான் காண்பேன்; அர்ஜுன-ஸாரதே:—அர்ச்சுனனின் ரதசாரதியாக இருந்து.
இதனையடுத்து காலத்தின் வடிவமாகத் தோன்றியிருக்கும் நீர் அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்து, புவியின் பாரத்தினை நீக்குவதற்காக போர்ப்படை வீரர்கள் அனைவரையும் அழிப்பதையும் நான் காண்பேன்.
பதம் 10.37.22
விஸுத்த-விஜ்ஞான-கனம் ஸ்வ-ஸம்ஸ்தயா
ஸமாப்த-ஸர்வார்தம் அமோக-வாஞ்சிதம்
ஸ்வ-தேஜஸா நித்ய-நிவ்ருத்த-மாயா-
குண-ப்ரவாஹம் பகவந்தம் ஈமஹி
விஸுத்த—நிறைவுடைய தூய்மை; விஜ்ஞான—ஆன்மீக விழிப்புணர்வு; கனம்—முற்றிலும்; ஸ்வ-ஸம்ஸ்தயா—அவருடைய மூலத்தன்மையில்; ஸமாப்த—ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது; ஸர்வ—அனைத்து; அர்தம்—நோக்கங்களும்; அமோக—குலைவதில்லை; வாஞ்சிதம்—அவருடைய விருப்பங்கள்; ஸ்வ-தேஜஸா—அவருடைய சுயசக்தியினால்; நித்ய—நித்தியமாக; நிவ்ருத்த—தவிர்த்திருத்தல்; மாயா—மாயா பெளதிக சக்தியின்; குண—தோன்றிய குணங்களின்; ப்ரவாஹம்—வினைத்தொடர்புப் பிரவாகத்திலிருந்து; பகவந்தம்—முழுமுதற்கடவுள்; ஈமஹி—நாங்கள் அணுகுவோமாக.
அடைக்கலம் பெறுவதற்காக முழுமுதற்கடவுளாகிய உம்மை நாங்கள் அணுகுவோமாக. நீர் முற்றிலும் நிறைவான தூய ஆன்மீக உணர்வுடையவராகவும், எப்போதும் உமது மூலத் தன்மையில் நிலைத்தும் இருக்கின்றீர். உமது விருப்பம் ஒருபோதும் குலைவதில்லை. ஆதலினால் நீர் ஏற்கெனவே உமது விருப்பத்திற்குரிய அனைத்தையும் எய்தப் பெற்றிருக்கின்றீர். உமது ஆன்மீகச் சக்தியின் ஆற்றலினால் நீர் பெளதிக மாயா சக்தியின் குணப் பிரவாகத்தினின்று தனித்து இருக்கின்றீர்.
பதம் 10.37.23
த்வாம் ஈஸ்வரம் ஸ்வாஸ்ரயம் ஆத்ம-மாயயா
விநிர்மிதாஸேஷ-விஸேஷ-கல்பனம்
க்ரீடார்த்தம் அத்யாத்த-மனுஷ்ய-விக்ரஹம்
நதோ ‘ஸ்மி துர்யம் யது-வ்ருஷ்ணி-ஸாத்வதாம்
த்வாம்—உமக்கு; ஈஸ்வரம்—பரம நெறியாளர்; ஸ்வா-ஆஸ்ரயம்—தன்னுள் கொண்டிருப்பவர்; ஆத்ம—உமக்குரிய; மாயயா—படைப்புச் சக்தியால்; விநிர்மிதா—கட்டியிருக்கின்றீர்; அஸேஷ—அளவற்ற; விஸேஷ—குறிப்பிட்ட; கல்பனம்—ஏற்பாடுகள்; க்ரீடா—விளையாட்டின்; அர்த்தம்—ஆக; அத்ய—இப்பொழுது; ஆத்த—மேற்கொண்டுள்ளீர்; மனுஷ்ய—மனிதர்களிடையில்; விக்ரஹம்—யுத்தம்; நத:—தலை வணங்குகிறேன்; அஸ்மி—நான்; துர்யம்—மிகச்சிறந்தவருக்கு; யது-வ்ருஷ்ணி-ஸாத்வதாம்—யது, விருஷ்ணி மற்றும் சாத்வத குலங்களின்.
உம்மை மட்டுமே சார்ந்திருக்கும் பரம ஆளுனரான உம்மை நான் தலைவணங்குகின்றேன். உமது சக்தியால் நீர் இப்பிரபஞ்சத்தில் அளவற்ற குறிப்பிட்ட ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கின்றீர். இப்போது நீர் யது, விருஷ்ணி மற்றும் சாத்வத குலங்களின் தலைசிறந்த வீரராக அவதரித்து மனிதயுத்த நடவடிக்கையில் பங்கு பெறத் தீர்மானித்திருக்கின்றீர்.
பதம் 10.37.24
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம் யது-பதிம் க்ருஷ்ணம் பாகவத-ப்ரவரோ முனி:
ப்ரணிபத்யாப்யனுஜ்ஞாதோ யயௌ தத்-தர்ஸனோத்ஸவ:
ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; யது-பதிம்—யது குலத் தலைவருக்கு; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; பாகவத—பக்தர்களில்; ப்ரவர:—மிகச் சிறந்த; முனி:—நாரத முனிவர்; ப்ரணிபத்ய—மரியாதையுடன் தலைவணங்கி; அப்யனுஜ்ஞாத:—விடைபெற்றுக் கொண்டார்; யயௌ—சென்றார்; தத்—அவரை, கிருஷ்ணரை; தர்ஸன—தரிசித்ததினால்; உத்ஸவ:—மிக்கமகிழ்ச்சியடைந்து.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: “இவ்வாறு யதுகுலத் தலைவரான பகவான் கிருஷ்ணரிடம் கூறிய நாரதர் கீழே விழுந்து அவருக்குத் தமது வந்தனங்களை அர்ப்பணித்தார். பிறகு மாமுனிவரும், மிகச் சிறந்த பக்தருமான நாரதர் பகவானை நேரில் தரிசித்ததினால் பெருமகிழ்ச்சி கொண்டு அவரிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றார்.”
பதம் 10.37.25
பகவான் அபி கோவிந்தோ ஹத்வா கேஸினம் ஆஹவே
பஸூன் அபாலயத் பாலை: ப்ரீதைர் வ்ரஜ-ஸுகாவஹ:
பகவான்—பரமபுருஷ பகவான்; அபி—மற்றும்; கோவிந்த:—கோவிந்தன்; ஹத்வா—கொன்றார்; கேஸினம்—கேசி என்னும் அசுரனை; ஆஹவே—யுத்தத்தில்; பஸூன்—விலங்குகள்; அபாலயத்—அவர் மேய்த்துக் கொண்டும்; பாலை:—ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து; ப்ரீதை:—மகிழ்ச்சியளிக்கச் செய்தார்; வ்ரஜ—விருந்தாவனவாசிகளை; ஸுக—மகிழ்ச்சியினை; ஆவஹ:—கொணர்ந்தார்.
யுத்தத்தில் கேசி என்னும் அசுரனைக் கொன்றபிறகு முழுமுதற் கடவுள் தமது மகிழ்ச்சிமிக்க ஆயர்குலச் சிறுவர்களின் துணையுடன் தொடர்ந்து பசுக்களையும் பிற விலங்குகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார். இவ்வாறு அவர் விருந்தாவனவாசிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துக் கொண்டிருந்தார்.
பதம் 10.37.26
ஏகதா தே பஸுன் பாலாஸ் சாரயந்தோ ‘த்ரி-ஸானுஷு
சக்ருர் நிலாயன-க்ரீடாஸ் சோர-பாலாபதேஸத:
ஏகதா—ஒருநாள்; தே—அவர்கள்; பஸுன்—விலங்குகள்; பாலா:—ஆயர்குலச்சிறுவர்கள்; சாரயந்த:—மேய்த்துக்கொண்டு; அத்ரி—ஒரு மலையினை; ஸானுஸு—பகுதிகளில்; சக்ரு:—அவர்கள் மேற்கொண்டனர்; நிலாயன—”கண்ணாம்பூச்சி” என்னும்; க்ரீடா:—விளையாட்டு; சோர—திருடர்கள்; பால—மற்றும் பாதுகாவலர்கள்; அபதேஸத:—வேடங்களில் நடித்தனர்.
ஒரு நாள் ஆயர்குலச் சிறுவர்கள் மலைச் சரிவுகளில் தங்கள் விலங்குகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது திருடர்கள் மற்றும் மேய்ப்பவர்கள் என்று தம்மைப் பாவித்துக் கொண்டு தேடிப்பிடித்து விளையாடும் விளையாட்டில் ஈடுபட்டனர்.
பதம் 10.37.27
தத்ராஸன் கதிசிச் சோரா: பாலாஸ் ச கதிசின் ந்ருப
மேஷாயிதாஸ் ச தத்ரைகே விஜஹ்ருர் அகுதோ-பயா:
தத்ர—அதில்; ஆஸன்—இருந்தனர்; கதிசித்—சிலர்; சோரா:—திருடர்கள்; பாலா:—மேய்ப்பவர்கள்; ச—மற்றும்; கதிசித்—சிலர்; ந்ருப—ஓ, மன்னனே (பரீக்ஷித்து); மேஷாயிதா:—ஆடுகள் போன்றும் நடித்து; ச—மற்றும்; தத்ர—அவ்விடத்தில்; ஏகே—சிலர்; விஜஹ்ரு:—விளையாடினர்; அகுத:-பயா:—எந்தவித அச்சமுமின்றி.
ஓ, மன்னனே! அவ்விளையாட்டில் சிலர் திருடர்கள் போன்றும், சிலர் மேய்ப்பவர்கள் போன்றும் சிலர் ஆடுகள் போன்றும் தம்மை பாவித்துக் கொண்டனர். எந்தவித அச்சமுமின்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பதம் 10.37.28
மய-புத்ரோ மஹா-மாயோ வ்யோமோ கோபால-வேஷ த்ருக்
மேஷாயிதரன் அபோவாஹ ப்ராயாஸ் சோராயிதோ பஹுன்
மய-புத்ர:—மயன் என்னும் அசுரனின் புதல்வன்; மஹா-மாய:—சக்தி மிக்க மந்திரவாதி; வ்யோம:—வியோமன் என்னும் பெயரினன்; கோபால—கோபாலர்களின்; வேஷ—வேடத்தில்; த்ருக்—மேற்கொண்டு; மேஷாயிதான்—ஆடுகள் போன்ற நடித்தச் சிறுவர்களை; அபோவாஹ—அவன் தூக்கிச் சென்றான்; ப்ராய:—பெரும்பாலும் அனைவரையும்; சோராயித:—திருடனைப் போல் நடித்து; பஹுன்—பலரை.
பின்னர், மயன் என்னும் அசுரனின் புதல்வனும், சக்தி மிக்க மந்திரவாதியுமான வியோமன் என்பவன் ஆயர்குலச் சிறுவனின் வடிவம் பூண்டு அங்கு வந்தான். அந்த விளையாட்டில் திருடனைப்போல் நடித்துக் கொண்டு அவன், ஆடுகளைப் போல் நடித்துக் கொண்டிருந்த சிறுவர்களின் பெரும் பகுதியினரைத் திருடத் தலைப்பட்டான்.
பதம் 10.37.29
கிரி-தர்யாம் விநிக்ஷிப்ய நீதம் நீதம் மஹாஸுர:
ஸிலயா பிததே த்வாரம் சது:-பஞ்சாவஸேஷிதா:
கிரி—மலையில்; தர்யாம்—ஒரு குகையினுள்; விநிக்ஷிப்ய—எறிந்து; நீதம்-நீதம்—அவர்களை படிப்படியாகக் கொண்டுவந்து; மஹா-அஸுர:—மகா அசுரன்; ஸிலயா—ஒரு பெரிய கல்லினால்; பிததே—அவன் மூடினான்; த்வாரம்—வாயிலை; சது:-பஞ்ச—நான்கைந்து பேர்கள்; அவஸேஷிதா:—மீதமிருந்தனர்.
மெல்ல மெல்ல அம்மகா அசுரன் ஆயர்குலச் சிறுவர்களை மேலும் மேலும் திருடி ஒரு மலைக்குகையினுள் வைத்து அக்குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லினால் அடைத்து வைத்தான். இறுதியில் அவ்விளையாட்டில் ஆடுகளாக நடித்த சிறுவர்களில் நான்கைந்து பேர்களே மீதமிருந்தனர்.
பதம் 10.37.30
தஸ்ய தத் கர்ம விஜ்ஞாய க்ருஷ்ண: ஸரண-த: ஸதாம்
கோபான் நயந்தம் ஜக்ரா: வ்ருகம் ஹரிர் இவௌஜஸா
தஸ்ய—அவனது, வியோமாசுரனின்; தத்—அந்த; கர்ம—செயலை; விஜ்ஞாய—முற்றிலும் அறிந்து கொண்ட; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; ஸரண—சரணம்; த:—அளிப்பவர்; ஸதாம்—பக்தர்களுக்கு; கோபான்—கோபாலர்கள்; நயந்தம்—இட்டுச் செல்பவர்; ஜக்ரா:—அவர் தடுத்து நிறுத்தினார்; வ்ருகம்—ஒரு ஓநாய்; ஹரி:—ஒரு சிங்கம்; இவ—போன்று; ஓஜஸா—பலவந்தமாக.
சாதுக்களான பக்தர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கும் பகவான் கிருஷ்ணர் வியோமாசுரனின் செயலினை நன்கு அறிந்து கொண்டார். சிங்கம் ஓநாயைப் பற்றுவதைப் போன்று கிருஷ்ணர், ஆயர்குலச் சிறுவர்கள் பலரை அவன் எடுத்துச் செல்லும் போது அவனைப் பலவந்தமாகப் பற்றி நிறுத்தினார்.
பதம் 10.37.31
ஸ நிஜம் ரூபம் ஆஸ்தாய கிரிந்த்ர-ஸத்ருஸம் பலீ
இச்சன் விமோக்தும் ஆத்மானம் நாஸக்னோத் க்ரஹணா துர:
ஸ:—அவன், அவ்வசுரன்; நிஜம்—அவனது உண்மையான; ரூபம்—வடிவத்தினை; ஆஸ்தாய—மேற்கொண்டான்; கிரி-இந்த்ர—மலையரசனை; ஸத்ருஸம்—போன்று; பலீ—சக்தியுடையவனாக; இச்சன்—விருப்பம் கொண்டான்; விமோக்தும்—விடுவிக்க; ஆத்மானம்—தன்னை; ந அஸக்னோத்—அவனால் இயலவில்லை; க்ரஹண—பலமாகப் பற்றப்பட்டிருந்ததினால்; ஆதுர:—சோர்வுற்றான்.
அவ்வசுரன் தனது உண்மை வடிவத்திற்கு மாறினான். அது மலையைப் போன்று பெரிதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது. ஆனால் அவன் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற போது அவனால் முடியவில்லை. ஏனெனில் அவன் பகவான் கிருஷ்ணரின் இறுக்கமான பிடியினால் தனது பலத்தினை இழந்திருந்தான்.
பதம் 10.37.32
தம் நிக்ருஹ்யாச்யுதோ தோர்ப்யாம் பாதயித்வா மஹீ-தலே
பஸ்யதாம் திவி தேவானாம் பஸு-மாரம் அமாரயத்
தம்—அவனை; நிக்ருஹ்ய—விரைந்து பற்றி; அச்யுத:—பகவான் கிருஷ்ணர்; தோர்ப்யாம்—தமது கரங்களினால்; பாதயித்வா—விழச்செய்தார்; மஹீ-தலே—நிலத்தில்; பஸ்யதாம்—அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது; திவி—தேவலோகங்களில்; தேவானாம்—தேவர்கள்; பஸு-மாரம்—யாகத்திற்கான விலங்கு பலியிடப்படுவது போல்; அமாரயத்—அவர் அவனைக் கொன்றார்.
பகவான் அச்சுதன், வியோமாசுரனைத் தமது கரங்களுக்கிடையில் இறுகப்பற்றி நிலத்தில் எறிந்தார். பிறகு தேவலோகத்தில் இருந்து தேவர்கள் பார்த்துக்கொண்டிருக்க கிருஷ்ணர் யாகத்தில் ஒரு விலங்கினைப் பலியிடுவது போல் அவனைக் கொன்றார்.
பதம் 10.37.33
குஹா— பிதானம் நிர்பித்ய கோபான் நி: ஸர்ய க்ருச்ச்ரத:
ஸ்தூயமான: ஸுதரைர் கோபை: ப்ரவிவேஸ ஸ்வ-கோகுலம்
குஹா—குகையின்; பிதானம்—தடுப்பினை; நிர்பித்ய—உடைத்து; கோபான்—கோபாலர்களை; நி: ஸார்ய—வெளிக்கொணர்ந்தார்; க்ருச்ச்ரத:—அந்த அபாயகரமான இடத்திலிருந்து; ஸ்தூயமான:—போற்றப்பட்டு; ஸுதரை:—தேவர்களாலும்; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களாலும்; ப்ரவிவேஸ—அவர் நுழைந்தார்; ஸ்வ—தமது; கோகுலம்—கோகுலத்தினுள்.
பின்னர் கிருஷ்ணர், குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருந்த பாறாங்கல்லைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்து, பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களைப் பத்திரமாக வெளிக்கொணர்ந்தார். அதன்பிறகு தேவர்களும், ஆயர்குலச் சிறுவர்களும் அவரது கீர்த்திகளைப் போற்றிப் பாட அவர் தமது கோகுலத்திற்குத் திரும்பினார்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கேசி மற்றும் வியாமசுரனை அழித்தல்” எனும் தலைப்பை கொண்ட முப்பத்தேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.