அத்தியாயம் – 9
படைப்புச் சக்திக்காக பிரம்மதேவர் செய்த பிரார்த்தனைகள்
பதம் 3.9.1
ப்ரஹ்மோவாச
ஜ்ஞாதோ ‘ஸி மே ‘த்ய ஸுசிரான் நனு தேஹ-பாஜாம்
ந ஜ்ஞாயதே பகவதோ கதிர் இதி அவத்யம்
நான்யத் த்வத் அஸ்தி பகவன் அபி தன் ந சுத்தம்
மாயா-குண-வ்யதிகராத் யத் உருர் விபாஸி

ப்ரஹ்மா உவாச- பிரம்ம தேவர் கூறினார்; ஜ்ஞாத: -அறியப்படுகிறீர்கள்; அஸி -நீர்; மே -என்னால்: அத்ய-இன்று; ஸுசிராத் —நீண்ட நாட்களுக்குப் பிறகு; நனு-ஆனால்; தேஹ- பாஜாம்-ஜடவுடல் பெற்ற ஒருவர்; ந-இல்லை: ஜ்ஞாயதே. அறியப்படுதல்; பகவத:-முழுமுதற் கடவுளின்; கதி:-புகலிடம்; இதி-ஆகையினால்; அவத்யம்—பெருங்குற்றம்; ந அன்யத்- மேல் எவருமிலர்; த்வத் -நீர்; அஸ்தி-இருக்கின்றீர்; பகவன்—ஒ எந்தன் பகவானே; அபி—அவ்வாறிருந்த போதிலும்; தத்—ஏதேனும் இருந்தாலும்; ந-இல்லை; சுத்தம்-முழுமையான; மாயா-பௌதீக சக்தி; குண-வ்யதிகராத்—இயற்கை குணங்களின் கலப்பின் காரணாக; யத்—அதற்கு ; உரு:-உன்னதமான; விபாஸி-நீர் விளங்குகிறீர்.

பிரம்ம தேவர் கூறினார்: ஒ பகவானே, நெடுங்காலமாகத் தவம் செய்து உம்மை அறியும் அறிவைப் பெற்றிருக்கிறேன். ஒ, உம்மை அறிவதற்கில்லாத உடலைப் பெற்றிருக்கும் உயிர்ப் பொருள்களின் துர்பாக்கிய நிலையினை என்னென்பேன்! எனது பகவானே, நீர் ஒருவரே அறிந்து கொள்ளத் தக்கவர், ஏனென்றால் உம்மை விட உயர்ந்தது எதுவுமில்லை. அவ்வாறு ஒன்று இருக்குமென்றால் அது முழுமையுடையதாயிராது. பொருள்களின் படைப்புச் சக்தியினை வெளிப்படுத்தியதின் மூலம் நீரே பரமனாக விளங்குகிறீர்.

பதம் 3.9.2
ரூபம் யத் எதத் அவபோத-ரஸோதயேன
சஸ்வன் – நிவ்ருத்த-தமஸ: ஸத்-அநுக்ரஹாய
ஆதௌ க்ருஹீதம் அவதார-சதைக-பீஜம்
யன்-நாபி-பத்ம-பவனாத் அஹம் ஆவிராஸம்

ரூபம்- வடிவம்; யத்-எந்த; ஏதத்—அது; அவபோத-ரஸ-உமது அகச்சக்தியின்; உதயேன—தோற்றத்துடன்; சஸ்வத்- எக்காலத்திற்கும்; நிவ்ருத்த—இருந்து விடுதலை; தமஸ:- ஜட மாசுக்கள்; ஸத்- அநுக்ரஹாய —பக்தர்களின் நன்மைக்காக; ஆதௌ-பிரபஞ்ச படைப்புச் சக்தியின் மூலம்; க்ருஹீதம்- ஏற்றுக் கொள்ளல்; அவதார— அவதாரங்களின்; சத—ஏக-பீஜம் -நூற்றுக்கணக்கானவற்றின் மூல காரணம்; யத்- அதிலிருந்து; நாபி-பத்ம -நாபிக் கமல மலர்: பவனாத்- இல்லத்திலிருந்து; அஹம்-நான்; ஆவிராஸம் உற்பத்தியானேன்.

நான் காணும் வடிவமானது ஜட மாசுக்களிலிருந்து நித்திய விடுதலை பெற்றது என்பதோடு, அது பக்தர்களிடத்துக் கருணை காட்டுவதற்காக வந்த அகச்சக்தியின் வெளிப்பாடுமாகும். இவ்வவதாரமானது பல்வேறு அவதாரங்களுக்குக் காரணமான மூல அவதாரமாகும். மேலும் நான் உமது நாபி என்னும் இல்லத்திலிருந்து வளர்ந்த தாமரை மலரில் பிறந்தவனுமாவேன்.

பதம் 3.9.3
நாத: பரம் பரம யத் பவத: ஸ்வரூபம்
ஆனந்த-மாத்ரம் அவிகல்பம் அவித்த-வர்ச:
பஸ்யாமி விஸ்வ-ஸ்ருஜம் ஏகம் அவிஸ்வம் ஆத்மன்
பூதேந்த்ரியாத்மக-மதஸ் த உபாஸ்ரிதோ ‘ஸ்மி

ந -இல்லை; அத: பரம்-இதன் பிறகு: பரம-ஒ பரமபுருஷரே: யத்—அதை; பவத: -உமது ஆளுமையின் கீழ்: ஸ்வரூபம்- நித்திய வடிவம்; ஆனந்த -மாத்ரம்—அருவ பிரம்மஜோதி; அவிகல்பம்- எந்தவித மாற்றமுமின்றி; அவித்த- வர்ச:—சக்தியின் அழிவு சிறிதுமின்றி; பஸ்யாமி-தான் காண்கிறேன்; விஸ்வ- ஸ்ருஜம் பிரபஞ்சத் தோற்றத்தினைப் படைத்தவர்; ஏகம்-மணித்துவியுமின்றி; அவிஸ்வம்-ஆயினும் விஷயத்தினால் இன்றுவரை; ஆத்மன்-ஓ மூல காரணரே; பூத-உடல்; இந்த்ரிய- புலன்கள் ; ஆத்மக-அதுபோன்ற அடையாளத்தின்; மத:- செருக்கு; தே உமக்கு : உபாஸ்ரித: சரணடைதல்; அஸ்மி-நான் இருக்கிறேன்.

ஒ, பகவானே, நீர் இப்பொழுதிருக்கின்ற சச்சிதானந்த வடிவத்தைக் காட்டிலும் ஒர் உயர்ந்த வடிவினை நான் கண்டதே இல்லை. ஆன்மீக வானில் இருக்கும் உமது அருவ பிரம்மஜோதிக்கு, எப்பொழுதேனும் ஏற்படுகின்ற மாற்றமோ, அல்லது அகச்சக்தியினால் ஏற்படும் அழிவோ இல்லை. நான் உம்மைச் சரணடைகிறேன், ஏனெனில் நான் எனது ஜடவுடல் மற்றும் புலன்களினால் வீண் கர்வம் கொண்டிருக்க, மேலாண்மைக்குரியத் தாங்களோ பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்தும், விஷய சம்பந்தம் ஏதும் இல்லாதவராக விளங்குகிறீர்.

பதம் 3.9.4
தத் வா இதம் புவன-மங்கள மங்களாய
த்யானே ஸ்ம நோ தர்ஸிதம் த உபாஸகானாம்
தஸ்மை நமோ பகவதே ‘னுவிதேம துப்யம்
யோ ‘நாத்ருதோ நரக-பாக்பிர் அஸத் – ப்ரஸங்கை:

தத்—முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர்; வா—அல்லது; இதம்- தற்போதுள்ள இந்த வடிவம்; புவன-மங்கள—அனைத்து பிரபஞ்சங்களுக்கும் சர்வ மங்களகரமானவராக விளங்கும் நீங்கள்; மங்களாய—எல்லா வளத்திற்காகவும்; த்யானே-தியானத்தில்;ஸ்ம- இருந்ததுபோல; ந:-எமக்கு; தர்ஸிதம்—வெளிப்படுத்திய; தே- உமது; உபாஸ்கானாம்— பக்தர்களின்; தஸ்மை-அவருக்கு; நம:- எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே முழுமுதற் கடவுளுக்கு; அனுவிதேம-நான் நிறைவேற்றுகிறேன்; துப்யம்—உமக்கு; ய:-அது; அநாத்ருத: -புறக்கணிக்கப்படுகிறது; நரக-பாக்பி: நரகம் புகும் மனிதர்கள்; அஸத் -ப்ரஸங்கை:-பௌதிகக் கருப்பொருள்களினால்.

முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் இப்போதைய வடிவை அல்லது உட்புலனுக்கு மேற்பட்ட ஓர் உன்னதமான வடிவம் அனைத்து உலகங்களுக்கும் மங்களகரமானதேயாகும். மேலும் நீர், உமது பக்தர்கள் உளமுருகி வணங்கும் தனிப்பட்ட நித்திய வடிவிலேயே தோன்றியிருக்கிறீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன். நரகத்தின் பாதையில் பயணம் செய்வதற்காகப் பிறந்தவர்கள் உமது தனிப்பட்ட வடிவினைப் புறக்கணிக்கின்றனர், ஏனெனில், உலகியல் பொருட்களின் மீது தமது கவனத்தை அவர்கள் செலுத்துகின்றனர்.

பதம் 3.9.5
யே து-த்வதீய-சரணாம்புஜ-கோஸ கந்தம்
ஜிக்ரந்தி கர்ண-விவரை: ச்ருதி-வாத-நீதம்
பக்த்யா க்ருஹீத-சரண: பரயா ச தேஷாம்
நாபைஷி நாத ஹ்ருதயாம்புருஹாத் ஸ்வ-பும்ஸாம்

யே – அவர்கள்; து-ஆனால்; த்வதீய-உமது: சரண-அம்புஜ தாமரைத் திருவடி; கோஸ-உள்ளே; கந்தம்-நறுமணம்: ஜிக்ரந்தி- வாசனை; கர்ண-விவரை:-செவி துளைகளின் வழியே; ச்ருதி- வாத- நீதம் – வேத ஓசை எனும் காற்றினால் சுமந்து செல்லப்படும். பக்த்யா—பக்தித் தொண்டினால்; க்ருஹீத-சரண:-தாமரைத் திருவடிகளை ஏற்றுக்கொண்டு; பரயா உன்னதமான ; ச-மேலும் தேஷாம் – அவர்களைப்; ந-ஒருபோதும் இல்லை ; அபைஷி – பிரிதல்: நாத-பகவானே; ஹ்ருதய-இருதயம்; அம்பு-ருஹாத் – தாமரையிலிருந்து; ஸ்வ-பும்ஸாம்- உமது சொந்த பக்தர்களின்.

பகவானே, உமது தாமரைத் திருவடிகளின் நறுமண சுகந்தத்தினை சுவாசித்தும், காற்றில் வரும் வேத ஒலிகளைச் செவிகளில் வாங்கிக் கொண்டும் மனிதர்கள் உமது பக்தித் தொண்டினை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில் நீங்கள் அவர்களது இதயத் தாமரைகளிலிருந்து பிரித்திருப்பதேயில்லை.

பதம் 3.9.6
தாவத் பயம் த்ரவிண தேஹ-ஸுஹ்ருன்-நிமித்தம்
சோக: ஸ்ப்ருஹா பரிபவோ விபுலஸ் ச லோப:
தாவன் மமேதி அஸத்-அவக்ரஹ ஆர்தி-மூலம்
யாவன் ந தே ‘ங்க்ரிம் அபயம் ப்ரவ்ருணீத லோக:

தாவத்-அதுவரை; பயம் -பயம்; த்ரவிண- செல்வம்; தேஹு- உடல்; ஸுஹ்ருத்—சொந்தங்கள்; நிமித்தம்-விஷயத்திற்காக; சோக- சோகம்; ஸ்ப்ருஹா-ஆசை; பரிபவ:-பொருள்கள்; விபுல:- மிகச்சிறந்த: ச-மேலும்; லோப:-பேராசை; தாவத்-அந்நேரம் வரை; மம-எனது; இதி-இவ்வாறு: அஸத்—அழியக் கூடிய; அவக்ரஹ— ஏற்றுக் கொள்ளுதல்; ஆர்தி—மூலம்-முற்றிலும் கவலை வயப்படுதல்; யாவத்-அதுவரை; ந-இல்லை; தே-உமது; அங்க்ரிம் அபயம்- பாதுகாப்பானத் தாமரைத் திருவடிகள்; ப்ரவ்ருணீத—அடைக்கலம் கொள்ளல்; லோக:-உலக மக்கள்.

ஒ, பகவானே, உலகிலுள்ள மக்கள் அனைவரும் தங்களது உலகியல் கவலைகளினால் நிலை தடுமாறுகின்றனர். அவர்கள் எப்பொழுதும் அஞ்சுகின்றனர். அவர்கள் எப்பொழுதும் செல்வத்தையும், உடலையும், நண்பர்களையும் பாதுகாக்க முயல்கின்றனர். அவர்கள் சோகத்தினாலும், சட்டத்திற்குப் புறம்பான ஆசைகளினாலும், உடைமைகளினாலும் கவலைப்படுகின்றனர். மேலும் அவர்கள் பேராசையின் அடிப்படையில் “நான்”“எனது ” என்னும் அழியக்கூடியக் கருத்துக்களின் மீதே எதனையும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எத்தனைக் காலம் உமது திருவடித் தாமரைகளைச் சரணடையாதிருக்கின்றனரோ அத்தனைக் காலமும் இத்தகைய கவலைகளில் ஆழ்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

பதம் 3.9.7
தைவேன தே ஹத-தியோ பவத: ப்ரஸங்காத்
ஸர்வாஸுபோபஸமனாத் விமுகேந்த்ரியா மே
குர்வந்தி காம-ஸுக-லேஸ-லவாய தீனா
லோபாபிபூத – மனஸோ ‘குஸலானி சஸ்வத்

தைவேன—துரதிர்ஷ்ட விதியினால்; தே—அவர்கள்; ஹத – திய:நினைவு தொலைந்தவர்களாய்; பவத: -உமது; ப்ரஸங்காத்— விஷயங்களில் இருந்து: ஸர்வ-எல்லாம்; அஸுப—அசுபம்; உபஸமனாத்-கீழாகச் சரிதல்; விமுக – எதிராக திரும்புதல்; இந்த்ரியா:—புலன்கள்; யே-அவர்கள்; குர்வந்தி—செயல்; காம—புலனுகர்ச்சி; ஸுக -ககம்; லேஸ-விரிவான; லவாய- ஒரு கணம் மட்டும்; தீனா-அறியாத ஏழைகள், லோப – அபிபூத -பேராசை வயப்பட்டு; மனஸ-ஒருவனது மனம்: அகுஷலானி-அமங்களச் செயல்கள்; சஸ்வத்-எப்பொழுதும்.

ஒ, பகவானே, உமது உன்னதச் செயல்களைப் பற்றி கேட்டல் மற்றும் ஓதுதல் என்னும் அனைத்து மங்கள காரியங்களைத் தொலைத்தவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகளே. மேலும் அவர்கள் தங்கள் தற்புத்தியினையும் இழந்தவர்களே ஆவர். அவர்கள் அமங்களச் செயல்களில் ஈடுபட்டு புலனுகர்ச்சி இன்பங்களில் சிறிது காலத்திற்குத் திளைத்திருப்பர்.

பதம் 3.9.8
க்ஷுத்-த்ருத் – த்ரிதாதுபிர் இமா முஹுர் அர்த்யமானா:
சீதோஷ்ண – வாத – வரஷைர் இதரேதராச் ச
காமாக்னினாச்யுத-ருஷா ச ஸுதர்பரேண
ஸம்பஸ்யதோ மன உருக்ரம ஸீததே மே

க்ஷுத் -பசி; த்ருத்-தாகம்; த்ரி -தாதுபி: – மூன்று தாதுக்கள் (சலி வாயு, பித்தம்); இமா:-அவர்களெல்லாம்; முஹு: எப்பொழுதும்; அர்த்யமானா:-குழப்பமுற்று; சீத – சீதம்: உஷ்ண- உஷ்ணம்: வாத-காற்று: வரஷை – மழை; இதர – இதராத் – மேலும் பல இடையூறுகளினால்; ச-மேலும்; காம —அக்னினா—காம அக்கினியினால்; அச்யுத- ருஷா- சிறிதும் குறையாத ஆத்திரம்; ச – மேலும்; ஸுதுர்பரேண-தாங்க முடியாத; ஸம்பஸ்யத:- மிகுந்த கவனமுடன்; மன:-மனம்; உருக்ரம—ஓ, சிறந்த நடிகரே; ஸீததே — நம்பிக்கையிழந்து ; மே-எனது.

ஓ, எந்தன் பகவானே, இவ்வேழை ஜென்மங்கள் எல்லாம் பசி, தாகம், வாதம், பித்தம், சிலேட்டுமம் போன்றவற்றினால் குழப்பமுறுகின்றனர். மேலும் அவை உயிரை உறையச் செய்யும் பனி, எரியச் செய்யும் வெயில், மழை போன்ற பல இயற்கை இடையூறுகளினால் இடருற்று காமாக்கினியினாலும், ஆற்ற முடியாத சினத்தாலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றனர். நான் அவர்கள் மீது மிகுந்த இரக்கமும் கவலையும் கொள்கிறேன்.

பதம் 3.9.9
யாவத் ப்ருதக்த்வம் இதம் ஆத்மன இந்திரியார்த
மாயா-பலம் பகவதோ ஜன ஈஸ பஸ்யேத்
தாவன் ந ஸம்ஸ்ருதிர் அஸௌ ப்ரதிஸங்க்ரமேத
வ்யர்தாபி து:க-நிவஹம் வஹதீ க்ரியார்தா

யாவத்—அதுவரை: ப்ருதக்த்வம்- பிரித்துணர்தல்; இதம்- இந்த; ஆத்மன :-உடலின்; இந்த்ரிய- அர்த—புலனுகர்ச்சிக்காக: மாயா- பலம்—மாயா சக்தியின் பாதிப்பினால்; பகவத:முழுமுதற் கடவுளின்; ஜன:- ஒரு மனிதன்; ஈஸ- ஒ, பகவானே; பஸ்யேத்-காண்பது: தாவத்—நீண்டகாலம்; ந-இல்லை ; ஸம்ஸ்ருதி:–பௌதிக வாழ்வின் பாதிப்பினால்; அஸௌ-அந்த மனிதன்; ப்ரதிஸங்க்ரமேத—வெற்றி கொள்ள; வ்யர்தா அபி—அர்த்தமற்றதாயிருந்த போதிலும்; து:க நிவஹம் பெருகுகின்ற துன்பங்கள்; வஹதீ- கொண்டுவரும்; க்ரியா அந்தா—பலன் தரும் செயல்களுக்கு.

ஒ, பகவானே, உலகியற் துன்பங்கள் என்பவை ஆத்மாவைப் பொறுத்தவரை துன்பங்களே அல்ல. ஆயினும் மேலும் பந்தப்பட்ட ஆத்மா உடலை புலனின்பத்திற்கானது என்று எண்ணும் வரை அவன் உமது புறச்சக்தி என்னும் மாயையினால் பாதிக்கப்பட்டு உலகியற் துன்பங்கள் என்னும் வலையிலிருந்து மீளவே முடியாது.

பதம் 3.9.10
அஹ்னி ஆப்ருதார்த-கரணா நிஸி நிஹ்ஸயானா
நானா-மனோரத-தியா க்ஷண-பக்ன – நித்ரா:
தைவாஹதார்த-ரசனா ருஷயோ ‘பி தேவ
யுஷ்மத்-ப்ரஸங்க-விமுகா இஹ ஸம்ஸரந்தி

அஹ்னி—பகல் வேளையில்; ஆப்ருத- ஈடுபடுதல்; ஆர்த-துன்பந்தரும் வேலை ; கரணா:-புலன்கள்; நிஸி-நடுஇரவில்;நிஹ்ஸயானா:-உறக்கமின்றி ; நானா—பல்வேறு;மனோரத-மனயூகங்கள்; தியா- புத்தியினால்; க்ஷண -தொடர்ந்து; பக்ன-உடைதல்; நித்ரா:நித்திரை; தைவ-தெய்வம்; ஆஹத -அர்த-எண்ணக் குலைவு: ரசனா:-திட்டங்கள்; ருஷய:-மாமுனிவர்கள்; அபி—கூட: தேவ-ஓ எந்தன் தேவனே; யுஷ்மத்-தங்கள் மேலாண்மையின் கீழ்: ப்ரஸங்க- விவாதப் பொருள்; விமுகா:-எதிராகத் திரும்புதல்; இஹ-இகத்தில் (பௌதிக உலகில்); ஸம்ஸரந்தி-கழலச் செய்தல்.

இத்தகைய பக்தரல்லாதார் தங்கள் புலன்களைத் துன்பந் தருகின்ற விரிவான வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். அதனால் அவர்கள் இரவில் உறக்கமின்றி அவதியுறுகின்றனர். காரணம் அவர்கள் புத்தியானது பல்வேறு மன யூகங்களைச் செய்து அவர்கள் தூக்கத்தைத் தொடர்ந்து கெடுக்கிறது. இயற்கை மீறிய சக்தியினால் அவர்களது பல்வேறு திட்டங்களும் சீர்குலைவதினால் அவர்கள் சோர்வுறுகின்றனர். ஏன் உம்மைப்பற்றிய உன்னத சித்தனைக்கு எதிரான மாமுனிவர்கள் கூட நடப்பு உலகில் கற்றிச் சுழல வேண்டியவர்களாகின்றனர்.

பதம் 3.9.11
த்வம் பக்தி – யோக – பரிபாவித – ஹ்ருத் -ஸரோஜ
ஆஸ்ஸே ஸ்ருதேஷித – பதோ நனு நாத பும்ஸாம்
யத் – யத் – தியா த உருகாய விபாவயந்தி
தத் – தத் – வபு: ப்ரணயஸே ஸத் – அநுக்ரஹாய

தீவம்-உமக்கு; பக்தி-யோக-பக்தித் தொண்டில், பரிபாவித – நூறு விழுக்காடு ஈடுபடுதல்; ஹ்ருத் -இதயத்தின்; ஸரோஜே- தாமரை மலர் மீது: ஆஸ்ஸே-நீர் உறைகின்றீர்; ஸ்ருத- ஈக்ஷித- காதுகளின் மூலம் காண்பர்; பதி:-பாதை; நனு—இப்பொழுது: நாத-ஓ நாதனே; பும்ஸாம்: – பக்தர்களின்; யத் – யத் – எதுவாயினும்; தியா – தியானத்தினால்;தே – உமது; உருகாய—ஓ, பல்வேறு புகழுடையோனே; விபாவயந்தி – அவர்கள் குறிப்பாக நினைக்கின்றனர்; தத் – தத்- அதுவே; வபு:- உன்னதமான வடிவம்; ப்ரணயஸே—நீர் மேற்கொண்ட தோற்றம்; ஸத் -அநுக்ரஹாய—உமது காரணமற்றக் கருணையினை காட்டுவதற்காக.

பகவானே, சரியான முறையில் உம்மைப் பற்றிக் கேட்பதின் மூலம் உமது பக்தர்கள் தங்கள் காதுகளினாலேயே உம்மைக் காண்கின்றனர். அவ்வாறு அவர்கள் தங்கள் இதயங்களைச் சுத்தி செய்து கொண்ட பின்னர் நீர் அங்கே வந்தமர்கிறீர். நீர் உமது பக்தர்கள் மீது அளவற்ற கருணையுடையவராக விளங்குகிறீர். அதனால்தான் அவர்கள் உம்மை எந்நேரமும் தியானிக்கும் உமது குறிப்பிட்ட நித்திய வடிவத்திலேயே நீர் காட்சி தருகிறிர்.

பதம் 3.9.12
நாதிப்ரஸீததி ததோபசிதோபசாரைர்
ஆராதித: ஸுர – கணைர் ஹ்ருதி பத்த – காமை:
யத் ஸர்வ பூத-தயயாஸத்-அலப்யயையகோ
நானா-ஜனேஷ்வ் அவஹித: ஸுஹ்ருத் அந்தர் – ஆத்மா

ந – இல்லை; அதி-அதிகமாக; ப்ரஸீததி- திருப்தியடைதல்; ததா-போன்று; உபசித-ஆடம்பர ஏற்பாடுகளினால்; உபசாரை: மிகுதியான வழிபடுவதற்குரிய பொருள்களுடன்; ஆராதித-வழிபட்டு; ஸுர—கணை:-விண்ணுலகத் தேவர்கள்; ஹ்ருதி பத்த-காமை: – இதயம் முழுவதும் அனைத்து வகையான பெளதிக ஆசைகள்; யத்— அந்த; ஸர்வ—எல்லா; பூத-உயிர்வாழிகள்; தயயா – அவர்களுக்குக் அகாரணமான கருணையினை காண்பிப்பதன் மூலம்; அஸத் – பக்தரல்லாதார்; அலப்யயா—எய்துவதில்லை; ஏக:-கணப்பொழுதும் இன்றி இருப்பவர்; நானா-பல்வேறு; ஜனேஷு-உயிர்வாழிகளின்; அவஹித:-உணரப்படுதல்; ஸுஹ்ருத்-நலன் விரும்பும் நண்பன்; அந்த:-உள்ளே; ஆத்மா-பரமாத்மா.

எந்தன் பகவானே, பல்வேறு பூஜைப் பொருட்களுடன் மிகவும் ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்கள் மீது நீர் மனநிறைவு அடைவதில்லை. ஏனெனில் அவர்கள் லௌகீகப் பேராசைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். நீர் உமது அகாரணமான கருணையினைக் காட்டுவதற்காக அனைவரின் உள்ளங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கிறீர். மேலும் நீரே காலந்தோறும் மக்கள் நலனை விரும்புகின்றீர். ஆயினும் பக்தரல்லாதார்க்கு நீர் கானல் நீர் போன்று காணமுடியாது ஒதுங்கி விடுகின்றீர்.

பதம் 3.9.13
பும்ஸாம் அதோ விவித-கர்மபிர் அத்வராத்யைர்
தானேன சோக்ர-தபஸா பரிசர்யயா ச
ஆராதனம் பகவதஸ் தவ ஸத்-க்ரியார்தோ
தர்மோ ‘ர்பித: கர்ஹிசித் ம்ரியதே யத்ர

பும்ஸாம்- மக்களின்; அத:–அதனால்; விவித-கர்மபி: – பல்வேறு பலன் தரும் செயல்களினால்; அதிவர-ஆத்யை:-வேள்விச் சடங்குகளைச் செய்வதினால்; தானேன-தானங்களினாலும்; ச – மேலும்; உக்ர—மிகக் கடினமான; தபஸா-தவம்; பரிசர்யயா – உன்னதச் செயலினால்; ச – மேலும்; ஆராதனம் – வழிபாடு; பகவத:-முழுமுதற் கடவுள்; தவ—உமது; ஸத்-க்ரியா-அர்த: – உம்மை திருப்திப்படுத்துவதற்காக; தர்ம:-சமய அறநெறி; அர்பித: அர்ப்பணிக்கப்பட்டு; கர்ஹிசித்—எந்த நேரத்திலும்; ம்ரியதே -வெற்றி கொள்ளப்படுதல் ; ந—இல்லை; யத்ர— அங்கே.

மக்களின் புண்ணியச் செயல்களான, தானம், தவம், துறவு மற்றும் வேள்விகள்
போன்றவையும், உம்மை வழிபடுவதற்காகச் செய்யப்படும் இறைபணிச் செயல்கள். நீர் திருப்தியுறும் வண்ணம் உமக்கு அர்ப்பணிக்கப்படும் அச்செயல்களின் பலன்கள் போன்றவை அனைத்தும் நன்மை தருவனவேயாகும். இவை போன்ற அறநெறிச் செயல்கள் என்றும் வீணாகப் போவதில்லை.

பதம் 3.9.14
சஸ்வத் ஸ்வரூப-மஹஸைவ நிபீத-பேத-
மோஹாய போத-திஷணாய நம: பரஸ்மை
விஸ்வோத்பவ-ஸ்திதி-லயேஷு நிமித்த-லீலா-
ராஸாய தே நம இதம் சக்ருமேஸ்வராய

சஸ்வத் – நித்தியமாக; ஸ்வரூப-உன்னத வடிவம்; மஹஸா – பெருமைகளினால்; ஏவ-உறுதியாக: நிபீத-வேறுபடுத்திக் காட்டல்; பேத – வேறுபாடு; மோஹாய-மாயக் கருத்திற்கு; போத-சுய அறிவு: திஷணாய -புத்தி; நம-வந்தனங்கள்; பரஸ்மை – உன்னதமானவருக்கு; விஸ்வ- உத்பவ -பிரயஞ்சத் தோற்றத்தின் படைப்பு: ஸ்திதி – காத்தல்; லயேஷு —அழித்தாலுங்கூட; நிமித்த – நிமித்தமாக; லீலா – லீலைகளினால்; ராஸாய – அனுபவிப்பதற்காக; தே-உமக்கு; நம:-வந்தனங்கள்; இதம்-இந்த; சக்ரும – நான் செய்வது; ஈஸ்வராய – பரம்பொருளுக்கு.

தமது அகச்சக்தியினால் தம்மை நித்தியமாக வேறுபடுத்திக் காட்டுபவரும், எல்லாம் கடந்த பரம்பொருளாக விளங்குபவருக்கும் எனது வந்தனங்களை நான் சமர்ப்பிக்கிறேன். தன்னுணர்வு பெறுவதற்கான புத்தியின் மூலமே அவரது வேறுபாடில்லாத அருவத் தன்மையானது அறிந்து கொள்ளப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய செயல்களை தமது லீலைகளினால் அனுபவித்து மகிழ்பவருக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 3.9.15
யஸ்யாவதார-குண-கர்ம-விடம்பனானி
நாமானி யே ‘ஸு விகமே-விவஸா க்ருணந்தி
தே ‘னைக-ஜன்ம-சமலம் ஸஹஸைவ ஹித்வா
ஸம்யாந்தி அபாவ்ருதாம்ருதம் தம் அஜம் ப்ரபத்யே

யஸ்ய-அவரது; அவதார—அவதாரங்கள்; குண—உன்னதகுணங்கள்; கர்ம – செயல்கள்; விடம்பனானி-அனைத்து மறைந்திருக்கும்; நாமானி – உன்னத நாமங்கள்; யே- அவை; அஸு-விகமே – இந்த வாழ்க்கை முடிந்து வெளியேறும் பொழுது: விவஸா:-தானாகவே; க்ருணந்தி – தொழுதால்; தே—அவைகள்; அனைக—அனேக; ஜன்ம-பிறவிகள்; சமலம்—செய்த பாவங்கள் அனைத்தும்; ஸஹஸா—உடனடியாக; ஏவ – உறுதியாக; ஹித்வா-நீங்கும்; ஸம்யாந்தி-எய்துதல்: அபாவ்ருத – திறந்த; அம்ருதம் – இறவாமை; தம் —அவரது; அஜம்-பிறப்பற்ற; ப்ரபத்யே—நான் சரண் அடைகிறேன்.

லோகாயதச் செயல்களைப் போன்று புரியாத பாவனைகளாகத் தோன்றும் அவரது அவதாரங்கள், குணங்கள் மற்றும் செயல்களைக் கொண்ட பகவானின் தாமரைத் திருவடிகளை நான் சரணடைவேனாக. சுய உணர்வு இழந்த நிலையில் இவ்வாழ்வு நீங்கி வெளியேறும்பொழுதுகூட ஒருவன், அவரது புனித நாமங்களை உச்சரித்தானென்றால், அவன் பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் உடனடியாக நீங்குவதோடு, பகவானை நிச்சயம் அடைகின்றவனாகவும் ஆகிறான்.

பதம் 3.9.16
யோ வா அஹம் ச கிரிஸஸ் ச விபு: ஸ்வயம் ச
ஸ்திதி-உத்பவ-ப்ரளய ஹேதவ ஆத்ம-மூலம்
பித்வா த்ரி-பாத் வவ்ருத ஏக உரு-ப்ரரோஹஸ்
தஸ்மை நமோ பகவதே புவன-த்ருமாய

ய:- எவர்; வை -உறுதியாக; அஹம் ச – நான் கூட; கிரிஸ: ச – சிவபெருமானும் கூட; விபு:-எல்லாம் வல்ல பகவான்; ஸ்வயம் – தாங்கள் (விஷ்ணு பகவான்); ச – மேலும்; ஸ்திதி-காத்தல்; உத்பவ-படைத்தல்; ப்ரளய – அழித்தல்; ப்ரளய—அழித்தல்; ஹேதவ:-காரணங்கள்; ஆத்ம – மூலம் – தானே வேர் ஊன்றிய; பித்வா-ஊடுருவிச் சென்ற; த்ரி-பாத் – மூன்று அடிமரங்கள்; வவ்ருதே – வளர்த்து: ஏக: – இரண்டில்லாத ஒருவர்; உரு-அனேக; ப்ரரோஹ :-கிளைகள்; தஸ்மை – அவருக்கு; நம:-வந்தனங்கள்; பகவதே-முழுமுதற் கடவுளுக்கு; புவன – த்ருமாய – பிரபஞ்ச அமைப்பு என்னும் மரத்திற்கு.

இறைவனாகிய தாங்களே பிரபஞ்ச அமைப்பின் மூலவேராக விளங்குகிறீர். இம்மரமானது, தனது மூன்று அடிமரங்களினால் – யான், சிவபெருமான் மற்றும் பகவானான தாங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்பவையாக முதலில் இயற்கையினை ஊடுருவி வளர்ந்து, மேலும் நாம் மூவரும் பல கிளைகளாகவும் வளர்ச்சி பெற்றோம். ஆகையினால் பிரபஞ்சத் தோற்றம் என்னும் மரமாக விளங்கும் உமக்கு எனது வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.9.17
லோகோ விகர்ம-நிரத: குஸலே ப்ரமத்த:
கர்மணி அயம் த்வத்-உதிதே பவத்-அர்சனே ஸ்வே
யஸ் தாவத் அஸ்ய பலவான் இஹ ஜீவிதாஸாம்
ஸத்யஸ் சினந்தி அநிமிஷாய நமோ அஸ்து தஸ்மை

லோக:-பொதுமக்கள்; விகர்ம-மதியற்ற வேலை: நிரத:- அதில் ஈடுபட்டிருத்தல்; குஸலே-பயன்தரும் செயலில்; ப்ரமத்த: – புறக்கணித்தல்; கர்மணி-செயலில்; அயம் – இந்த ; த்வத்— உம்மால்; உதிதே-விளக்கமாக உரைத்தல்; பவத்-உமது; அர்சனே வழிபடுவதில்; ஸ்வே-அவர்களுக்குச் சொந்தமான;ய:-எவர்; தாவத்—அதுவரை; அஸ்ய-பொதுவாக மக்களின்: பலவான் – மிகவும் வலிமையான; இஹ-இந்த; ஜீவித-ஆஸாம்-வாழ்க்கைப் போராட்டம்; ஸத்ய:-நேரடியாக; சினத்தி— துண்டுதுண்டாக உடைதல்; அநிமிஷாய—நித்திய காலத்தினால் ; நம:- எனது வந்தனங்கள்; அஸ்து— உரியதாகுக; தஸ்மை – அவருக்கு.

பொதுவாக மக்கள் எல்லோரும் மூடச் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர். அம்மூடச்செயல்கள் எல்லாம் அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உம்மால் நேரடியாக விளக்கியருளப்பட்ட பயன்தரும் செயல்கள் அன்று. மூடச் செயல்களிடத்து அவர்கள் உறுதியுடன் இருக்கும் வரையில் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகவே செய்யும். ஆகையினால் நான் எனது வணக்கங்களைக் காலந்தோறும் அழியாமல் செயல்படும் தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 3.9.18
யஸ்மாத் பிபேமி அஹம் அபி த்விபரார்த-திஷ்ண்யம்
அத்யாஸித: ஸகல-லோக-நமஸ்க்ருதம் யத்
தேபே தபோ பஹு-ஸவோ ‘வருத்ஸமானஸ்
தஸ்மை நமோ பகவதே ‘திமகாய துப்யம்

யஸ்மாத் எவரிடமிருந்து: பிபேமி- அச்சம்; அஹம் – நான்; அபி – கூட ; த்வி-பரார்த-4,300,000,000 x 2 x 30 x 12 x 100 சூரிய வருடங்கள் வரையறைக்குட்பட்ட; திஷ்ண்யம்—இடம்; அத்யாஸித: – இருத்தல்; ஸகல—லோக—எல்லா லோகங்களிலும்; நமஸ்க்ருதம் – சிறப்பிக்கப்படுதல்; யத்-அந்த; தேபே-ஈடுபடுதல்; தப – தவங்கள்; பஹு – ஸவ:- பற்பல வருடங்கள்; அவருருத்ஸமான:-உம்மை அடைவதற்கான விருப்பங்கொண்டு; தஸ்மை—அவருக்கு; நம: – நான் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன்; பகவதே-முழுமுதற் கடவுளுக்கு: அதிமகாய-வேள்விகள் அனைத்தின் பலன்களையும் அனுபவிப்பவருக்கு; துப்யம்—உமக்கு.

எந்தன் மேலான பகவானே. தளர்ச்சியடையாக் காலமாகவும், அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவராகவும் விளங்கும் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கிறேன். இரண்டு பரார்தங்கள் வரை தொடர்ந்திருக்கும் ஓர் உலகில் நான் இருந்த போதிலும், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களுக்கும் நானே தலைவனாக இருந்த போதிலும், எண்ணற்ற தவங்களை நான் தன்னுணர்வு பெறுவதற்காகச் செய்திருந்த போதிலும் கூட நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.9.19
திர்யங் – மனுஷ்ய – விபுதாதிஷு ஜீவ-யோனிஷ்வ்
ஆத்மேச்சயாத்ம-க்ருத-ஸேது-பரீப்ஸயா ய:
ரேமே நிரஸ்த – விஷயோ ‘பி அவருத்த – தேஹஸ்
தஸ்மை நமோ பகவதே புருஷோத்தமாய

திர்யக்-மனிதர்களை விட இழிந்த மிருகங்கள்; மனுஷ்ய – மனிதர்கள் போன்ற; விபுத – ஆதிஷு – தேவர்களுக்கு மத்தியில்; ஜீவ – யோனிஷு – பல்வேறு வகையான உயிர்கள்; ஆத்ம-தனது; இச்சயா— இச்சையினால்; ஆத்ம-க்ருத-தானே செய்த; ஸேது—கடப்பாடுகள்; பரீப்ஸயா- தக்கவைத்துக் கொள்வதற்கான விருப்பம்; ய:-எவர்; ரேமே – செய்யும் உன்னத லீலைகள்; நிரஸ்த-பாதிக்கப்படுவதில்லை; விஷய:-பௌதிக அசுத்தங்கள்; அபி-உறுதியாக; அவருத்த- வெளிப்படுத்துதல்; தேஹ:-உன்னத உடல்; தஸ்மை – அவருக்கு; நம:-எனது வணக்கங்கள்; பகவதே – முழுமுதற் கடவுளுக்கு; புருஷோத்தமாய-ஆதிபுருஷ பகவான்.

ஓ எந்தன் பகவானே, நீர் உமது உன்னத லீலைகளை நடத்திக் காட்ட வேண்டுமெனும் விருப்பத்தின் பேரில் மனிதர்களை விட இழிந்த விலங்குகளாகவும், அவர்களை விட மேலான தேவர்களாகவும் அவதரிக்கின்றீர். நீர் உலகியல் மாசுக்களினால் பாதிக்கப்படுவதே இல்லை. நீர் உமக்குச் சொந்தமான உமது சமய அறநெறிகளை நிறைவேற்றும் நோக்கத்தின் பேரிலேயே இங்கு வருகை தருகிறீர். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் தோன்றும் முழுமுதற் கடவுளாகிய தங்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதம் 3.9.20
யோ ‘வித்ய யானுபஹதோ ‘பி தஸார்த-வ்ருத்யா
நித்ராம் உவாஹ ஜடரீ-க்ருத-லோக-யாத்ர:
அந்தர்-ஜலே ‘ஹி-கஸிபு-ஸ்பர்ஸானுகூலாம்
பீமோர்மி-மாலினி ஜனஸ்ய ஸுகம் விவ்ருண்வன்

ய:-ஒருவர்; அவித்யயா-அறியாமையினால் பாதிக்கப்படுதல்; அனுபஹத:-பாதிக்கப்படாதவர்; அபி-பதிலாக; தஸ—அர்த—-ஐந்து; வ்ருத்யா-எதிரெதிர் செயல்கள்; நித்ராம்-நித்திரை; உவாஹ—ஏற்றுக் கொள்ளப்படுதல்; ஜடரீ-உதரத்தினுள்ளே; க்ருத-செய்வதினால்; லோக – யாத்ர —பல்வகைத் தோற்றங்களின் காப்பிற்காக; அந்த – ஐலே-பிரளய வெள்ளத்தினுள்; அஹி – கஸிபு-பாம்புப் படுக்கையில்; ஸ்பர்ஸ-அனுகூலாம்—தொடுதலினால் வரும் சுகம்: பீம – ஊர்மி – சீறிவரும் அலைகள்; மாலினி-மாலையின்; ஜனஸ்ய-புத்தியுள்ள மனிதனின்; ஸுகம் – மகிழ்ச்சி ; விவ்ருண்வன்-காண்பித்தல்.

யுக இறுதிக் காலத்தில் மோதிக் கொண்டு வரும் அலைகளையுடைய பிரளய வெள்ளத்தில் நித்திரை கொள்வது உமக்கு சுகமானதாகும். மேலும் பாம்புப் படுக்கையின் மீது பள்ளி கொண்டு நீர் உமது மகிழ்ச்சியினைப் புத்தியுள்ள உமது பக்தர்களுக்கு காட்டியருள்கிறீர். அந்நேரம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களும் உமது அடிவயிற்றில் அடக்கமாகி உள்ளன.

பதம் 3.9.21
யன் நாபி-பத்ம-பவனாத் அஹம் ஆஸம் ஈட்ய
லோக-த்ரயோபகரணோ யத்-அநுக்ரஹேண
தஸ்மை நமஸ் த உதர-ஸ்த-பவாய யோக –
நித்ராவஸான-விகஸன்-நளினேக்ஷணாய

யத்—எவரது; நாபி-நாபி; பத்ம-தாமரை; பவனாத்—என்னும் வீட்டிலிருந்து; அஹம்—நான்; ஆஸம்-வெளிப்பட்டேன்; ஈட்ய-ஓ போற்றுதற்குரிய ; லோக – த்ரய – மூன்று உலகங்கள்; உபகரண: – படைப்பதற்குரிய துணைக் கருவியாக; யத்—எவரது; அநுக்ரஹேண – கருணையினால்; தஸ்மை—அவருக்கு; நம: எனது வந்தனங்கள்; தே – உமக்கு : ஸ்த—உதரத்தினுள் இருத்தல்; பவாய-பிரபஞ்சத்தினைப் பெற்று: யோக – நித்ரா-அவஸான—அவ்வுன்னத நித்திரையின் இறுதியில்; விகஸத் – மலர்கிறது; நளின – ஈக்ஷணாய-செந்தாமரை மலர்கள் போல் சிரிக்கும் விழிகளையுடையவருக்கு.

ஓ. நான் வழிபடுவதற்குரிய குறிக்கோளாக விளங்குபவரே, நான் உமது கருணையினால், பிரபஞ்சத்தினைப் படைப்பதற்கென்றே உமது நாபிக் கமலத்திலிருந்து பிறந்தேன். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களும் நீர் மகிழ்ச்சியாக நித்திரை கொள்ளும் பொழுது உமது உன்னத வயிற்றினுள் நிலைபெற்றுள்ளன. இப்பொழுது உமது துயில் களைந்து விட்டது. உமது விழிகளோ எழில் மிக்க செந்தாமரை மலர்கள் போல் அலர்ந்து சிரிக்கின்றன.

பதம் 3.9.22
ஸோ ‘யம் ஸமஸ்த-ஜகதாம் ஸுஹ்ருத் ஏக ஆத்மா
ஸத்வேன யன் ம்ருடயதே பகவான் பகேன
தேனைவ மே த்ருஸம் அநுஸ்ப்ருஸதாத் யதாஹம்
ஸ்ரக்ஷ்யாமி பூர்வவத் இதம் ப்ரணத-ப்ரியோ ‘ஸென

ஸ:- அவர்; அயம்-பகவான்; ஸமஸ்த – ஜகதாம் – பிரபஞ்சங்கள் அனைத்தின்; ஸுஹ்ருத் ஏக:-ஒரே நண்பனும், வழிகாட்டியுமாவார்; ஆத்மா-பரமாத்மா; ஸதிவேன – சத்வ குணத்தினால்; யத்-அவர்; ம்ருதயதே – இன்பத்திற்குக் காரணம்; பகவான் – முழுமுதற் கடவுள்; பகேன- ஆறுவகையான வளங்களுடன்; தேன-அவரால்; ஏவ – உறுதியாக; மே-எனக்கு: திருஸம்-அகநோக்கு: அநுஸ்ப்ருஸதாத் – அவர் அளிப்பாராக; யதா-போன்று; அஹம் – நான்; ஸ்ரக்ஷ்யாமி – படைப்பதற்கான திறமை மிக்க; பூர்வ – வத்- முன்பிருந்தபடி; இதம் – இப்பிரபஞ்சம்; ப்ரணத-சரணடைதல் ; ப்ரிய:-பிரியமானது; அஸௌ-அவர் (பகவான்).

முழுமுதற் காரணமாகிய பகவான் என்மீது தமது கருணையினைப் பொழிவாராக. அவர் ஒருவரே இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களின் ஒரே நண்பரும் ஆத்மாவும் ஆவார். மேலும் அவர் தமது ஆறுவகை வளங்களினால் அவர்கள் இறுதி இன்பம் பெறுவதற்காக அவர்களைக் காக்கவும் செய்கிறார். நானும் பகவானுக்கு மிகவும் விருப்பமான சரணடைந்த ஆத்மா ஆதலினால் அவர் முன்பு போல் நான் படைப்பதற்குரிய அகநோக்கினை கொடுத்து அருள் புரிவாராக.

பதம் 3.9.23
ஏஷ ப்ரபன்ன-வரதோ ரமயாத்ம-சக்த்யா
யத் யத் கரிஷ்யதி க்ருஹீத-குணாவதார:
தஸ்மின் ஸ்வ-விக்ரமம் இதம் ஸ்ருஜதோ ‘பி சேதோ
யஞ்ஜீத கர்ம-சமலம் ச யதா விஜஹ்யாம்

ஏஷ:- இந்த; ப்ரபன்ன—சரணடைந்த ஒருவர்; வர-த: – வரமருள்பவர்; ரமயா-அதிர்ஷ்ட தேவதை(லக்ஷ்மி)யுடன் எப்பொழுதும் மகிழ்பவர்; ஆத்ம – சக்த்யா – அவரது அகச் சக்தியுடன்; யத் – யத் எதுவாயினும்; கரிஷ்யதி – அவர் செயல் புரியலாம்; க்ருஹீத – ஏற்றுக் கொள்ளுதல்; குண—அவதார:-சத்வ குணத்தின் அவதாரமானவர்; தஸ்மின்- அவருக்கு: ஸ்வ – விக்ரமம் -சர்வ வல்லமையுடன்; இதம்— இப்பிரபஞ்சத் தோற்றத்தின்; ஸ்ருஜத:-படைக்கின்ற; அபி-பதிலாக; சேத:- இதயம் ; யுஞ்ஜீத-ஈடுபடுதல்; கர்ம-தொழில்; சமலம் – பௌதிகப் பற்று ;ச-மேலும்; யதா—அதுபோன்று; விஜஹ்யாம்-நான் விடுவதற்குரியேன்.

முழுமுதற் கடவுளான பரமபுருஷ பகவானே எப்பொழுதும் தம்மைச் சரணடைந்த ஆத்மாக்களுக்கு வரமருள்பவராக இருக்கிறார். அவரது செயல்கள் அனைத்தும் அவரது அகச்சக்தியான ரமா அல்லது அதிர்ஷ்ட தேவதையின் மூலமே சட்டமாக்கப்படுகிறது. அவரது செயலான படைப்புத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே நான் அவரை வழிபடுகிறேன். மேலும் நான் எனது தொழிலின் மூலம் உலகப் பற்றால் பாதிப்படையக் கூடாது என்றும் பிரார்த்திக்கிறேன். ஏனெனில் அதுவே தான் படைக்கிறேன் என்னும் ஆணவத்திலிருந்து என்னைக் காக்கக் கூடியதாகும்.

பதம் 3.9.24
நாபி-ஹ்ரதாத் இஹ ஸதோ ‘ம்பஸி யஸ்ய பும்ஸோ
விக்ஞான-ஸக்திர் அஹம் ஆஸம் அனந்த-ஸக்தே:
ரூபம் விசித்ரம் இதம் அஸ்ய விவ்ருண்வதோ மே
மா ரீரிஷீஷ்ட நிகமஸ்ய கிராம் விஸர்க:

நாபி – ஹ்ரதாத்-உந்திச் சுழி என்னும் குளத்திலிருந்து: இஹ – இந்த யுகத்தில்; ஸத:-துயிலுதல்; அம்பஸி-நீரில்; யஸ்ய-அவரது; பும்ஸ: -முழுமுதற் கடவுளின்: விக்ஞான – பிரபஞ்சம் முழுதும், ஸக்தி:-சக்தி: அஹம் – நான்: ஆஸம்-பிறந்தேன்; அனந்த – எண்ணற்ற: ஸக்தே:-சக்தியின்; ரூபம் – வடிவம்: விசித்ரம் – பல்வகை வேறுபாடுகள்; இதம் – இந்த; அஸ்ய அவரது விவ்ருண்வத; -தோன்றுகின்ற; மே – எனக்கு: மா – இல்லாமலும்; ரீரிஷீஷ்ட – மறைதல்; நிகமஸ்ய-வேதங்களின்; கிராம்-ஒலிகளின்; விஸர்க: அதிர்வு.

பகவானின் சக்திகள் எண்ணற்றன. அவர் பிரளய வெள்ளத்தில் அறிதுயில் கொண்டிருந்தபொழுது அவர் உந்திச் சுழி என்னும் குளத்திலிருந்து தோன்றிய தாமரை மலரில் மொத்தப் பிரபஞ்சத்தின் சக்தியாக நான் பிறந்தேன். நான் இப்பொழுது, அவரது வேறுபாடுடையர் சக்திகளை பிரபஞ்சத் தோற்றத்தின் வடிவமாக வெளிப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறேன். ஆகையினால் பௌதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வேத மந்திரங்களின் ஒலி அதிர்வுகளிலிருந்து நான் விலகி விடாதிருக்கும்படி வரமருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பதம் 3.9.25
ஸோ ‘ஸாவ் அதப்ர-கருணோ பகவான் விவ்ருத்த
ப்ரேம-ஸ்மிதேன நயனாம்புருஹம் விஜ்ரும்பன்
உத்தாய விஷ்வ-விஜயாய ச நோ விஷாதம்
மாத்வ்யா கிராபனயதாத் புருஷ: புராண:

ஸ:- அவர் (பகவான்); அஸௌ—அந்த; அதப்ர—அளவற்ற; கருண: – கருணை; பகவான் – முழுமுதற் கடவுள்; விவ்ருத்த—அதீத; ப்ரேம – அன்பு; ஸ்மிதேன—புன்னகையினால்; நயன—அம்புருஹம் – தாமரை விழிகள்; விஜ்ரும்பம்-திறப்பதினால்; உத்தாய – வளமடைவதற்கு; விஸ்வ-விஜயாய -பிரபஞ்சப் படைப்பின் புகழுக்காக; ச—மேலும்; ந:-எமது; விஸாதம் – அழுக்குகளை; மாத்வ்யா-இனிய; கிரா – வார்த்தைகளினால்; அபனயதாத் – அவர் அன்புடன் தீக்குவாராக; புருஷ:- பரமபுருஷர்; புராண:-ஆதியானவர்.

பரமபுருஷரும், ஆதியானவருமான பகவான் அளவற்ற கருணை உடையவர். அவர் தமது தாமரை விழிகளைத் திறந்து என்னை நோக்கி, புன்னகையுடன் தமது கருணையினை எனக்கு அளிப்பாராக, மேலும் அவர் இப்பிரபஞ்சம் முழுவதையும் மேம்படுத்தும் வன்மை மிக்கவர் என்பதோடு தமது அறிவுரைகளை அன்புடன் கூறி நமது அழுக்குகளை நீக்குபவரும் ஆவார்.

பதம் 3.9.26
மைத்ரேய உவாச
ஸ்வ-ஸம்பவம் நிஷாம்யைவம் தபோ-வித்யா-ஸமாதிபி:
யாவன் மனோ-வச: ஸ் துத்வா விரராம ஸ கின்னவத்

மைத்ரேய: உவாச – மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்; ஸ்வ – ஸம்பவம் – தனது தோற்றத்திற்கான ஆதாரம்;நிஸாம்ய-காண்பதினால்; ஏவம்-இவ்வாறு; தப:- தவம்; வித்யா – அறிவு; ஸமாதிபி: மனதினை ஒருமுகப்படுத்துவதினாலும் கூட; யாவத் – கூடியவரை; மன:- மனம் ; வச:-வார்த்தைகள்; ஸ்துத்வா-பிரார்த்தித்து; விரராம – அமைதியானார்; ஸ:-அவர் (பிரம்மா); கின்ன—வத்-சோர்வுற்றாற் போன்று.

மைத்ரேய முனிவர் கூறினார்: ஒ, விதுரரே, முழுமுதற் கடவுளே தனது பிறப்பிற்கு ஆதாரம் என்பதை நினைவு கூர்ந்த பிரம்ம தேவர் அவரைத் தனது மனம் மற்றும் வாக்கினால் எந்த அளவிற்குப் பிரார்த்திக்க முடியுமோ அந்த அளவிற்கு அவரது கருணையினை வேண்டிப் பிரார்த்தித்தார். பிறகு அவர் தனது தவம், ஞானம் மற்றும் மனதின் ஒருமுகத் தன்மை போன்ற செயல்களினால் களைப்படைந்தவர் போன்று அமைதியாக இருந்தார்.

பதங்கள் 3.9.27 – 3.9.28
அதாபிப்ரேதம் அன்வீக்ஷ்ய ப்ரஹ்மணோ மதுஸூதன
விஷண்ண-சேதஸம் தேன கல்ப-வ்யதிகராம்பஸா
லோக-ஸம்ஸ்தான-விக்ஞான ஆத்மன: பரிகித்யத:
தம் ஆஹாகாதயா வாசா கஷ்மலம் ஸமயன் இவ

அத—அதன்பின்னர்; அபிப்ரேதம்—எண்ணம்; அன்வீக்ஷ்ய – கவனித்து: ப்ரஹ்மண:-பிரம்மாவின்; மதுஸூதன;-மது என்னும் அரக்கனை அழித்தவர்; விஷன்ன—விசனம்; சேதஸம்—இதயத்தின்; தேன-அவரால்; கல்ப-கல்பம்: வ்யதிகர- அம்பஸா – பிரளய வெள்ளம்; லோக – ஸம்ஸ்தான —உலக அமைப்பு முறையின் இருப்பு: விக்ஞானே – விஞ்ஞானத்தில்; ஆத்மன: – அவருக்கு; பரிகித்யத – மிகவும் கவலை; தம்—அவருக்கு; ஆஹ-கூறினார் ; அகாதயா— ஆழ்ந்த சிந்தனை வயப்படுதல்; வாசா-வார்த்தைகளினால்; கஷ்மலம்- அசுத்தமானவை; மையன் – நீக்குதல்; இவ-போன்று.

பிரம்ம தேவர் பல்வேறு உலகங்களை நிர்மாணித்தல் மற்றும் அவற்றிற்காகத் திட்டமிடுதல் போன்றவற்றில் ஆர்வமும், பிரளய வெள்ளத்தைக் கண்டு கவலையும் அடைந்திருப்பதை பகவான் கண்டார். பிரம்ம தேவரின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட பகவான் அவரிடம் எழுந்துள்ள மாயையினைப் போக்கும் நோக்கத்தில் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசினார்.

பதம் 3.9.29
ஸ்ரீ-பகவான் உவாச
மா வேத-கர்ப காஸ் தந்த்ரீம் ஸர்க உத்யமம் ஆவஹ
தன் மயாபாதிதம் ஹி அக்ரே யன் மாம் ப்ரார்தயதே பவான்

ஸ்ரீ பகவான் உவாச-முழுமுதற் கடவுளான பகவான் கூறினார்; மா – வேண்டாம்; வேத-கர்ப ஓ. வேத ஞானத்தின் ஆழத்தை அறிந்தவரே; கா:-தந்த்ரீம்-சோர்வடைதல்; ஸர்கே – படைப்பதற்காக; உத்யமம்— கடுமையானப் பணி; தத்—அது (நீர் விரும்பியது); மயா—என்னால்; ஆபாதிதம் – நிறைவேற்றப்பட்டது; ஹி – உறுதியாக; அக்ரே – முன்னர்; யத்—அந்த; மாம் – என்னிடமிருந்து; ப்ரார்தயதே-வேண்டிக் கொண்டது; பவான்-நீர்.

முழுமுதற் கடவுள் பின்னர் கூறினார்: ஒ, பிரம்மதேவனே, வேத ஞானத்தின் ஆழம் அறிந்தவரே, படைப்புத் தொழிலை நிறைவேற்றுவதற்காக நீர் கவலையோ மனச்சோர்வோ அடைய வேண்டிய தேவையில்லை. நீர் என்னிடம் என்ன வேண்டிக் கேட்டீரோ, அது ஏற்கனவே உமக்கு அருளப்பட்டு விட்டது.

பதம் 3.9.30
பூயஸ் தீவம் தப ஆதிஷ்ட
வித்யாம் சைவ மத்-ஆஸ்ரயாம்
தாப்யாம் அந்தர்-ஹ்ருதி ப்ரஹ்மன்
லோகான் த்ரக்ஷ்யஸி அபாவ்ருதான்

பூய:-மீண்டும்; த்வம்-உமது; தப:- தவம்; ஆதிஷ்ட-இருத்தல்; வித்யாம் – அறிவில்; ச-மேலும்; ஏவ—உறுதியாக; மத்—எனது; ஆஸ்ரயாம் – -பாதுகாவலின் கீழ்; தாப்யாம்—அந்தத் தகுதிகளினால்; அந்த:-உள்ளே; ஹ்ருதி-இதயத்தில்; ப்ரஹ்மன்-ஓ, அந்தணரே; லோகான்- எல்லா உலகங்களும்; த்ரஷ்யஸி – _நீர் காண்பீர்; அபாவ்ருதான்-அனைத்தும் விளக்கப்படுதல்.

பிரம்மனே. எனது தயவினைப் பெறுவதற்காக எப்பொழுதும் தவத்திலும் தியானத்திலும் இருந்து ஞானத்திற்குரிய விதிகளைப் பின்பற்றுவீராக. இச்செயல்களினால் நீர் உமது உள்ளுணர்வாலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.

பதம் 3.9.31
தத ஆத்மனி லோகே ச பக்தி-யுக்த: ஸமாஹித:
த்ரஷ்டாஸி மாம் ததம் ப்ரஹ்மன் மயி லோகாம்ஸ் த்வம் ஆத்மன:

தத:- அதன்பிறகு; ஆத்மனி-உமது உள்ளத்தில்; லோகே – பிரபஞ்சத்தின்; ச – மேலும்; பக்தி—யுக்த:-பக்தித் தொண்டில் நிலை பெறுதல்; ஸமாஹித:-முற்றிலும் தன்னை ஒப்படைத்து; த்ரஷ்டா அஸி – நீர் காண்பீர்; மயி -என்னிடத்தில், லோகான்—அனைத்து உலகங்களையும்; தவம்-நிர்; ஆதிமன :-உயிர்வாழிகள்.

ஓ, பிரம்மனே, நீர் உமது படைப்புத் தொழிலைச் செய்யும் பொழுது பக்தித் தொண்டில் முற்றிலும் ஈடுபடுவீரானால் நீர் உமது உள்ளத்தில் மட்டுமல்லாது இப்பிரபஞ்சம் அனைத்திலும் என்னைக் காண்பீர், மேலும் என்னிடத்தில் உம்மையும், இப்பிரபஞ்சத்தையும் அனைத்து உயிர்களையும் கூடக் காண்பீர்.

பதம் 3.9.32
யதா து ஸர்வ-பூதேஷு தாருஷு அக்னிம் இவ ஸ்திதம்
ப்ரதிசக்ஷீத மாம் லோகோ ஜஹ்யாத் தர்ஹி ஏவ கஸ்மலம்

யதா—அப்பொழுது; து—ஆனால்; ஸர்வ—அனைத்தும்; பூதேஷு உயிர்வாழிகளிடத்தில்; தாருஷு – விறகில்; அக்னிம்-அக்னி; இவ – போன்று; ஸ்திதம் – இருத்தல்; ப்ரதிசக்ஷீத —நீர் காணலாம்; மாம் – என்னை; லோக:-பிரபஞ்சமும்; ஜஹ்யாத்-விடக்கூடும்; தர்ஹி – பிறகு உடனடியாக; ஏவ-உறுதியாக; கஸ்மலம்-மாயை.

விறகினுள் தீ இருப்பதைப் போன்று அனைத்து உயிர்ப் பொருள்களிடத்தும், அனைத்துப் பிரபஞ்சங்களிடத்தும் நான் இருப்பதை நீர் காணலாம். மனவாசகங் கடந்த பார்வையினை நீர் பெறும் பொழுதே அனைத்து வகையான மாயைகளிடம் இருந்தும் நீர் விடுதலை பெறமுடியும்.

பதம் 3.9.33
யதா ரஹிதம் ஆத்மானம் பூதேந்த்ரிய-குணாஸயை:
ஸ்வரூபேண மயோபேதம் பஷ்யன் ஸ்வாராஜ்யம் ருச்சதி

யதா – அப்பொழுது; ரஹிதம்-இருந்து விடுதலை; ஆத்மானம் – சுயம்; பூத-பூதங்கள்; இந்த்ரிய-ஜடப்புலன்கள்; குண—ஆஸயை; ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்பின் கீழ்; ஸ்வ-ரூபேண – தூய வாழ்வில் மயா—என்னால்; உபேதம் – அணுகுதல்; பஷ்யன்— காண்பதினால்; ஸ்வாராஜ்யம்-ஆன்மீக இராஜ்ஜியம்; ருச்சதி -மகிழ்தல்.

ஸ்தூல மற்றம் சூட்கமக் கருத்துக்களிலிருந்து நீர் விடுதலை பெறும் பொழுதும், ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்புக்களிலிருந்து உமது புலன்கள் விடுதலை பெறும் பொழுதும், என்னுடனான தொடர்பில் உமது தூய வடிவத்தினை நீர் உணரலாம். அச்சமயமே நீர் உமது தூய உணர்வில் நிலைபெற முடியும்.

பதம் 3.9.34
நானா-கர்ம-விதானேனப்ரஜா பஹ்வீ: ஸிஸ்ருக்ஷத:
நாத்மாவஸீததி அஸ்மிம்ஸ் தே வர்ஸீயான் மத்-அநுக்ரஹ:

நானா—கர்ம—தொண்டின் பல வகைகள்; விதானேன – விரிதலினால்; ப்ரஜா:-மக்கட் தொகை: பஹ்வீ:-எண்ணற்றவை; ஸிஸ்ருக்ஷத – அதிகரிப்பதற்காக விருப்பம்; ந – எப்பொழுதும் இல்லை; ஆத்மா—தன்னை ; அவஸீததி-இழப்பது; அஸ்மின்-இவ்விஷயத்தில்; தே-உமது; வர்ஷீயான் – எப்பொழுதும் அதிகரிக்கிறது; மத்-எனது; அநுக்ரஹ:-அளவற்ற கருணை

மக்கட்தொகையினை எண்ணற்ற அளவிற்குப் பெருக்க வேண்டும் என்று நீர் விருப்பங் கொண்டிருப்பதினாலும் மேலும் உமது தொண்டினைப் பலவகையாக நீர் விரிவுபடுத்தியிருப்பதினாலும் இதுபற்றிய எதையும் நீர் இழக்கப்போவதில்லை. ஏனெனில் நான் உம்மீது வைத்திருக்கும் அளவற்ற கருணையானது காலா காலங்களுக்கும் உயரக் கூடிய தன்மையுடையதாகும்.

பதம் 3.9.35
ருஷிம் ஆத்யம் ந பத்னாதி பாபீயாம்ஸ் த்வாம் ரஜோ-குண:
யன் மனோ மயி நிர்பத்தம் ப்ரஜா: ஸம்ஸ்ருஜதோ ‘பி தே

ருஷிம் – மாமுனிவருக்கு; ஆத்யம்—இவ்வகையில் முதலாமவர்; ந -இல்லை; பத்னாதி—எல்லை மீறுதல்; பாபீயான்—ஒழுக்கக்கேடு; த்வாம்—நீர்; ரஜ:-குண:-ராஜோ குணம்; யத்-ஏனென்றால்; மன: – மனம்; மயி – என்னில்; நிர்பத்தம்-நெருக்கடி; ப்ரஜா:- பிரஜைகள்; ஸம்ஸ்ருஜத:-உற்பத்தி; அபி-இருப்பினும்; தே-உமது.

நீரே ஆதி ரிஷியாவீர், உமது உள்ளம் எப்பொழுதும் என்மீது கட்டுண்டு இருப்பதனால், நீர் பல்வேறு வகையான பிரஜைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் ஒழுக்கக் குறைவான பேராசைக் குணமானது (ரஜோ குணம்) உம்மை அத்துமீறிக் கொண்டு வளர்வதில்லை.

பதம் 3.9.36
ஜ்ஞாதோ அஹம் பவதா த்வ அத்ய துர்விஜ்ஞேயோ ‘பி தேஹினாம்
யன் மாம் த்வம் மன்யஸே ‘யுக்தம் பூதேந்த்ரிய-குணாத்மபி:

ஜ்ஞாத:-அறிந்து கொள்ளுதல்; அஹம்-நான்; பவதா-உம்மால்; து-ஆனால்; அத்ய-இன்று; து:கடினம்; விஜ்ஞேய-அறிந்து கொள்வதற்கு; அபி—அதற்குப் பதிலாக; தேஹினாம்-பந்தப்பட்ட ஆத்மாவிற்கு; யத்—ஏனென்றால்; மாம் -என்னை; த்வம் – நீர்; மன்யஸே-புரிந்து கொள்ளுதல்; அயுக்தம்—செய்யப்பட்டதில்லை; பூத—ஜட பூதங்கள்; இந்த்ரிய—ஜட புலன்கள்; குண—ஜடக் குணங்கள்; ஆத்மபி:-பந்தப்பட்ட ஆத்மாவிடம் காணப்படும் தவறான ஆணவம்.

ஏதேனும் தளையால் கட்டுண்ட ஆத்மா என்னை அறிதற்கு இயலாது. ஆயினும் நீர் எம்மை அறிந்து கொண்டதற்குக் காரணம் நான் எந்தவித ஜடப்பொருளுமன்று, அதிலும் குறிப்பாக யாம் பஞ்ச பூதங்களினாலும் மூன்று நுண்மைப் பொருட்களினாலும் ஆக்கப்பட்டவன் இல்லை என்பதை நீர் அறிந்து கொண்டதினாலேயாம்.

பதம் 3.9.37
துப்யம் மத்-விசிகித்ஸாயாம்ஆத்மா மே தர்ஸிதோ ‘பஹி:
நாளேன ஸலிலே மூலம் புஷ்கரஸ்ய விசின்வத:

துப்யம்-உமக்கு; மத்- என்னை: விசிகித்ஸாயாம்- கண்டு கொள்ளும் உமது முயற்சி; ஆத்மா – தனது; மே-எனது; தர்ஸித: காட்சிப்படுத்துதல்; அபஹி:-உள்ளிருந்து; நாளேன—நாளத்தின் வழியாக; ஸலிலே தண்ணீரில்; மூலம் -வேர்; புஷ்கரஸ்ய – தாமரையின்; மூல-ஆதாரத்தினை; விசின்வத :-ஆய்ந்தறிதல்.

நீவிர் பிறந்த தாமரை மலரின் தண்டிற்கு ஆதாரமான இடம் ஒன்று இருக்கிறதா என்று அறிய அத்தண்டின் நாளத்தின் வழியே உட்புகுந்து சென்றும் உம்மால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அதே சமயம் நான் எனது வடிவத்தினை உமக்கு உள்ளிருந்து வெளிப்படுத்துவேன்.

பதம் 3.9.38
யச் சகர்தாங்க மத்-ஸ்தோத்ரம் மத்-கதாப்யுதயாங்கிதம்
யத் வா தபஸி தே நிஷ்டா ஸ ஏஷ மத்-அநுக்ரஹ:

யத்—அந்த; சகர்த—செய்யப்பட்டது; அங்க—ஒ பிரம்ம தேவனே; மத்-ஸ்தோத்ரம்—எனக்கான பிரார்த்தனைகள்; மத்—கதா—எனது செயல்களைப் பற்றிய வார்த்தைகள்; அப்புத்ய – அங்கிதம் எனது உன்னதப் பெருமைகளின் எண்ணிக்கைகள்; யத்-அல்லது, அந்த; வா – ஏதேனுமொன்று; தபஸி-தவத்தில்; தே-உமது: நிஷ்டா—நம்பிக்கை; ஸ:—அந்த; ஏஷ்:-இவையெல்லாம்; மத்—எனது; அநுக்ர:-அளவற்ற கருணை.

ஒ, பிரம்ம தேவரே, மனவாசகங்கடந்த எனது செயல்களை நீர் போற்றிப் புகழ்ந்த பிரார்த்தனைகள், என்னை அறிந்து கொள்வதற்காக நீர் செய்த தவங்கள், என்மீது நீர் கொண்ட நம்பிக்கை – இவையனைத்தும் எனது அளவற்றக் கருணையாகக் கருதப்படுதல் வேண்டும்.

பதம் 3.9.39
ப்ரீதோ ‘ஹம் அஸ்துபத்ரம் தே லோகானாம் விஜயேச்சயா
யத் அஸ்தௌஷீர் குணமயம் நிர்குணம் மானுவர்ணயன்

ப்ரீத:-மகிழ்ச்சியடைதல்;அஹம்-எனது; அஸ்து—அவ்வாறே ஆகட்டும்;பத்ரம்—அனைத்துவரங்களும்;தே-உமக்கு:லோகானாம் – உலகங்களின்; விஜய-புகழ்வதற்காக; இச்சயா-உமது இச்சையினால்; யத்—எதை; அஸ்தௌஷீ:-நீர் பிரார்த்தித்தது; குண – மயம் உன்தை குணங்கள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம்; நிர்குணம்—அனைத்து பௌதிகக் குணங்களிலிருந்தும் தான் விடுதலை பெற்றிருந்த போதிலும்; மா- எனது; அனுவர்ணயன்—அழகான விளக்கம்.

லோகாயதவாதிகளுக்கு லோகாயதமாகத் தோன்றும் எனது உன்னதக் குணங்களின் மூலம் என்னை நீர் விளக்கியது கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உமது செயல்களினால் அனைத்து உலகங்களிலும் நான் புகழப்பட வேண்டும் என்னும் உமது விருப்பத்திற்கு எனது எல்லா ஆசிகளும் உரியதாகும்.

பதம் 3.9.40
ய ஏதேன புமான் நித்யம் ஸ்துத்வா ஸ்தோத்ரேண மாம் பஜேத்
தஸ்யாஸு ஸம்ப்ரஸீதேயம் ஸர்வ-காம-வரேஷ்வர:

ய:-எவரும்; ஏதேன-இவ்வாறு: புமான்-மனிதன்; நித்யம் – தொடர்ந்து; ஸ்துத்வா-பிரார்த்தனை; ஸ்தோத்ரேண-ஸ்தோத்திரங்களினால்; மாம் – என்னை; பஜேத் – வழிபடலாம்; தஸ்ய—அவனது; ஆஷு-மிக விரைவில், ஸம்ப்ரஸீதேயம் – நான் நிறைவேற்றுவேன்; ஸர்வ—அனைத்து; காம – விருப்பங்கள்; வர-ஈஷ்வர:-எல்லா வரங்களும் அளிக்கும் பகவான்.

பிரம்ம தேவரைப் போன்று எந்தவொரு மனிதனும் என்னை வணங்கினால் நான் அவனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவேன். நானே அனைத்து வரங்களுக்கும் தலைமை ஆவேன்.

பதம் 3.9.41
பூர்தேன தபஸா யஜ்ஞைர் தானைர் யோக-ஸமாதினா
ராத்தம் நி: ஸ்ரேயஸம் பும்ஸாம் மத்-ப்ரீதிஸ் தத்வவின் மதம்

பூர்தேன-மரபுவழியில் வரும் தற்செயல்களினால்; தபஸா – தவங்களினால்; யஜ்ஞை – வேள்விகளினால்; தானை – தானங்களினால்; யோக-யோகத்தினால்; ஸமாதின.-சமாதி நிலையினால்; ராத்தம்—வெற்றி ; நிஹ்ஸ்ரேயஸம்-இறுதியில் நன்மையளிப்பவர்; பும்ஸாம்-மனித இனத்தின்; மத்—எனது; ப்ரீதி: – திருப்தி; தத் – த்வ – வித்—தேர்ந்த உன்னதமானவர்; மதம்-கருத்து.

மரபு வழியே செய்யப்பட்டு வரும் நற்செயல்களின் இறுதி லட்சியம், தவங்கள், வேள்விகள், தானங்கள், யோகங்கள் மற்றும் சமாதி நிலைகள் எல்லாம் எனது திருப்திக்காகத் தொழுது செய்யப்படுபவன என்பது தேர்ந்த ஞானிகளின் கருத்தாகும்.

பதம் 3.9.42
அஹம் ஆத்மாத்மனாம் தாத: ப்ரேஷ்ட: ஸன் ப்ரேயஸாம் அபி
அதோ மயி ரதிம் குர்யாத் தேஹாதிர் யத்-க்ருதே ப்ரிய:

அஹம்—நான்; ஆத்மா—பரமாத்மா; ஆத்மனாம் – அனைத்து ஆத்மாக்களின்; தாத:-இயக்குநர்; ப்ரேஷ்ட:-அன்புக்குரிய; ஸன் – இருப்பவர் ; ப்ரேயஸாம்—அனைத்து விருப்பமான பொருட்கள்; அபி—உறுதியாக; அத:-ஆகையினால்; மயி – எனக்கு ; ரதிம்-பற்று; குர்யாத் – ஒருவன் செய்தல் வேண்டும்; தேஹ-ஆதி:-உடலும் மனமும்; யத்—க்ருதே—அவரது கணிப்பில்; ப்ரிய:- மிகவும் அன்பான.

ஒவ்வொரு தனிப்பட்டவரிடமும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். அனைவரிடத்தும் நானே பரம இயக்குநரும் மிகவும் அன்புடையோனுமாக இருக்கிறேன். மக்கள் தவறாகப் பூத மற்றும் நுண்ணுடல்களின் மேல் பற்றுடையோராயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்மீது மட்டுமே பற்றுடையோராயிருத்தல் வேண்டும்.

பதம் 3.9.43
ஸர்வ வேத மயேயேதம் ஆத்மனாத்மாத்ம-யோனினா
ப்ரஜா: ஸ்ருஜ யதா-பூர்வம் யஸ் ச மய் அநுசேரதே

ஸர்வ – எல்லாம்; வேத-மயேன வேதத்தின் முழு ஞானத்தின் கீழ்: இதம்- இந்த; ஆத்மனா—உடலினால்; ஆத்மா-நீர்; ஆத்ம-யோனினா – பகவானிடமிருந்து நேரடியாகப் பிறந்தவர்; ப்ரஜா-உயிர்வாழிகள்; ஸ்ருஜ – உற்பத்தி; யதா—பூர்வம் அன்றிருந்தது போன்றே இன்றும்; யா:-அது; ச-மேலும்; மயி—என்னிடத்தில்; அநுசேரதே-கிடத்தல்.

எனது அறிவுரைகளைப் பின்பற்றுவதின் மூலம் நீர் அன்று போலவே இன்றும் உயிர்களை உமது முழு வேத ஞானத்தினாலும் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக விளங்கும் என்னிடமிருந்து பெற்ற உடலினாலும் படைக்கக் கூடியவராவீர்.

பதம் 3.9.44
மைத்ரேய உவாச
தஸ்மா ஏவம் ஜகத் -ஸ்ரஷ்ட்ரே ப்ரதான புருஷேஸ்வர:
வ்யஜ்யேதம் ஸ்வேன ரூபேண கஞ்ஜ-நாபஸ் திரோததே

மைத்ரேய:-உவாச-மைத்ரேய முனிவர் கூறினார்; தஸ்மை – அவருக்கு; ஏவம்-இவ்வாறு; ஜகத்-ஸ்ரஷ்ட்ரே – ஜகத்தினை சிருஷ்டிப்பவருக்கு: ப்ரதான – புருஷ – ஈஷ்வர:-ஆதி புருஷர், முழுமுதற் கடவுள்; வ்யஜ்ய-இதம் இதனை அறிவுறுத்திய பின்னர்; ஸ்வேன—அவரது தனிப்பட்ட; ரூபேண – வடிவத்தினால: கஞ்ஜ – நாப: – முழுமுதற் கடவுளான நாராயணர்; திரோததே – மறைந்தார்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: பிரபஞ்சத்தினைப் படைப்பவராகிய பிரம்ம தேவருக்கு அதனை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பதற்கான அறிவுரைகளைக் கூறிய பின்னர் ஆதி புருஷரும், அவரது தனிப்பட்ட வடிவத்தில் வந்த முழுமுதற் கடவுளும் ஆகிய நாராயணர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “படைப்புச்சக்திக்கான பிரம்மதேவரின் வழிபாடுகள்” எனும் தலைப்பைக் கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare