அத்தியாயம் – 2
இதயக் கடவுள்
பதம் 2.2.1
ஸ்ரீ சுக உவாச
எவம் புரா தாரணயாத்ம-யோனிர்
நஷ்டாம் ஸ்மிருதிம் ப்ரத்யவருத்ய துஷ்தாத்
ததா ஸஸர்ஜேதம் அமோக-த்ருஷ்டிர்
யதாப்யயாத் ப்ரக் வ்யவஸாய-புத்தி:

ஸ்ரீ-சுக உவாச-ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்-சரியாக அதே முறையில்: புரா-பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்; தாரணயா- அத்தகைய எண்ணத்தினால்; நஷ்டம்- இழந்த; ஆத்ம-யோனி-பிரம்ம தேவரின்; ஸ்ம்ருதிம்-நினைவு; ப்ரத்யவருத்ய-உணர்வு திரும்பப் பெற்று; துஷ்தாத்-இறைவனை திருப்திபடுத்தியதால்; ததா- அதன் பிறகு; ஸஸர்ஜ-படைத்த; இதம்-இந்த ஜடத்தால்; அமோக த்ருஷ்டி – தெளிவான பார்வையை அடையப் பெற்றவர்; யதா—அப்படியே; அப்யயாத்-படைக்கப்பட்ட; ப்ராக்- முன்பு போலவே; வ்யவஸாய- ஆராய்ந்து அறிந்த; புத்தி- புத்தி.

ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்: முற்காலத்தில், பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன், “விராட்-ரூபத்தை” தியானித்து பகவானை திருப்திப்படுத்தியதால், பிரம்ம தேவர் தமது இழந்த உணர்வை மீண்டும் பெற்றார். இவ்வாறாக, படைப்பை முன்பு இருந்ததைப் போலவேதிரும்பவும் ஏற்படுத்த அவரால் முடிந்தது.

பதம் 2.2.2
சாப்தஸ்ய ஹி ப்ரஹ்மண ஏஷ பந்தா
யன் நாமபிர் த்யாயதி தீர் அபார்தை:
பரிப்மம்ஸ் தத்ர ந வின்டதே ‘ர்தான்
மாயாமயே வாஸனயா சயான:

சாப்தஸ்ய -வேத ஓசையின் (மத்திரங்கள்): ஹி- நிச்சயமாக: ப்ரஹ்மண -வேதங்களின்: ஏஷ:-இவை: ந்தா- வழி: யத்- எது; நாமபி:- வேறுபட்ட பெயர்களால்; த்யாயதி- சித்திக்கிற; தீ-புத்தி; அபார்தை-அர்த்தமற்ற எண்ணங்கள்: பரிப்மம்ஸ்- சுற்றித் திரியும்: தத்ர -அங்கு; ந—எப்பொழுதும் இல்லை; வின்டதே—அனுபவிக்கிறது; அர்தான்-உண்மைகள்: மாயா மயே- மாயையான பொருட்களில்: வாஸனயா வெவ்வேறு ஆசைகளால்: சயான- உறக்கத்தில் கனவு காண்பதைப் போல.

வேத மந்திரங்களில் வழங்கப்பட்டுள்ள முறை மிகவும் குழப்பத்தை உண்டாக்குவதாக இருப்பதால், அதனால் சுவர்க்கலோகங்களைப் போன்ற அர்த்தமற்ற பொருள்களை நோக்கி மக்களின் புத்தியை அது திருப்புகின்றது. கட்டுண்ட ஆத்மாக்கள் மாயையான அத்தகைய சுவர்கம் போன்ற இன்பக் கனவுகளில் மிதக்கின்றனர். ஆனால் உண்மையில், எவ்வித திடமான சந்தோஷத்தையும் அத்தகைய இடங்களில் அவர்கள் அனுபவிப்பதில்லை.

பதம் 2.2.3
அத: கவிர் நாமஸு யாவத் அர்த:
ஸ்யாத் அப்ரமத்தோ வ்யவஸாய-புத்தி:
ஸித்தே ‘ன்யதார்தே ந யதேத தத்ர
பரிஸ்ரமம் தத்ர ஸமீக்ஷமாண:

அத:-இக்காரணத்திற்காக; கவி- ஞானம் பெற்றவர்; நாமஸு- பெயரளவில் மட்டுமே; யாவத்-குறைந்த பட்சம்; அர்த-தேவை ;ஸ்யாத்-இருக்க வேண்டும்; அப்ரமத்த-அவற்றில் தீவிர பற்றுக் கொண்டவனாக இல்லாமல்; வ்யவஸாய-புத்தி-புத்திசாலித்தனமாக நிலைத்து; ஸித்தே- வெற்றிக்காக; அன்யதா-இல்லையெனில்; அர்தே—லாபத்துக்காக; ந- ஒருபோதும் கூடாது; யதேத—அதற்குரிய முயற்சி செய்; தத்ர—அங்கு; பரிஸ்ரமம்- கடினமாக உழைப்பது; தத்ர- அங்கு: ஸமீக்ஷமாண: நடைமுறையில் காண்பவர்.

எனவே அறிவொளி பெற்றவன், பெயர்களை மட்டுமே கொண்டுள்ள இவ்வுலகில் இருக்கும்பொழுது வாழ்வின் குறைந்தபட்ச தேவைகளுக்காக மட்டுமே முயல வேண்டும். அத்தகைய முயற்சிகள் அனைத்தும் பலனற்ற கடின உழைப்பு மட்டுமேயாகும் என்பதை நடைமுறையில் காண்பதற்குரிய தகுதி பெற்றிருப்பதால், தேவையற்ற பொருட்களை அடைய முயலாமல், அவன் புத்தியில் நிலைபெற்றவனாக இருக்க வேண்டும்.

பதம் 2.2.4
ஸத்யாம் க்ஷததௌ கிம் கசிபோ: ப்ரயாஸைர்
பாஹௌ ஸ்வஸித்தே ஹி உபபர்ஹணை: கிம்
ஸதி அஞ்சலௌ கிம் புருதான்ன-பாத்ரியா
திக் -வலகலாதௌ ஸதி கிம் துகூலை:

ஸத்யாம்—உடைமையாக வைத்திருக்கும்பொழுது; க்ஷததௌ-சம் தரைகள்; கிம்- என்ன அவசியம்; கசிபோ:-கட்டில் மெத்தைகளுக்கு; ப்ரயாஸை:-பிரயத்தனம் செய்வது; பாஹௌ- கரங்கள்; ஸ்வ ஸித்தே- சுய தேவை பூர்த்தியுடன் இருக்கும் பொழுது ; ஹி—நிச்சயமாக; உபபர்ஹணை-கட்டிலும், மெத்தையும்; கிம்-என்ன பயன்; ஸதி- இருக்கும் பொழுது ; அஞ்சலௌ—உள்ளங்கைகள்; கிம்- என்ன பயன்; புருதா-பல்வேறு வகையான; அன்ன—உணவு வகைகள்; பாத்ரியா- பாத்திரங்களால்; திக்-திறந்த வெளி; வலகல ஆதௌ-மரங்களின் தோல்கள்; ஸதி-இருக்கும் பொழுது; கிம்- அதனால் என்ன பயன்; துகூலை-ஆடை அணிகலன்கள்.

படுப்பதற்கு ஏராளமான சம தரைகள் இருக்கும் பொழுது, கட்டில் மெத்தைகளுக்கு என்ன அவசியம்? தனது சொந்த கரங்களை ஒருவன் உபயோகிக்க முடியும் என்ற பொழுது ஒரு தலையணைக்கு என்ன அவசியம்? தன் உள்ளங்கைகளை ஒருவன் உபயோகிக்க முடியும் என்றால் பலவகைப்பட்ட பாத்திரங்கள் எதற்கு? மிகுதியான மறைப்புகள் அல்லது மரத்தோல்கள் இருக்கும் பொழுது ஆடை அணிகலன்களுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

பதம் 2.2.5
சீராணி கிம் பதி ந ஸந்தி திசந்தி பிஷாம்
நைவாங்ரிபா: பர-ப்ருத: ஸரிதோ ‘பி அசுஷ்யன்
ருத்தா குஹா: கிம் அஜிதோ ‘வதி நோபஸன்னான்
கஸ்மாத் பஜந்தி கவயோ தன-துர்மதாந்தான்

சீராணி-கிழிந்த ஆடைகள்; கிம்- இரண்டில் எது; பதி- சாலை மீது; ந-இல்லை; ஸந்தி—இருக்கிறது; திசந்தி- தருமம்; பிஷாம்- பிக்ஷாம்; ந-இல்லை; ஏவ-அதுவும்; அங்ரிபா-மரங்கள்; ப்ருத-பிறரைப் பராமரிப்பவர்; ஸரித:-நதிகள்; அபி-அதோடு: அசுஷ்யன்—வற்றிப் போய்விட்டது; ருத்தா—மூடப்பட்டு விட்டன; குஹா:- குகைகள்: கிம்-இரண்டில் எது; அஜித:-சர்வ வல்லமை பொருந்திய பகவான்; அவதி—பாதுகாப்பு அளிக்க; ந- இல்லை; உபஸன்னான்- சரணாகதியடைந்த ஆத்மா; கஸ்மாத்—பின் எதற்காக; பஜந்தி-முகத்துதி செய்கிறார்; கவய:- கற்றறிந்த; தன-செல்வம்; துர்மத அந்தான்—அதனால் அளவுக்கதிகமாய் மதிமயங்கிய.

பொது சாலையில் கிடக்கும் கிழிந்து போன ஆடைகளே இல்லையா? பிறரை பராமரிப்பதற்காகவே வாழும் மரங்கள் தானம் செய்வதை நிறுத்திவிட்டனவா? நதிகள் வறண்டு விட்டதால் தகித்திருப்போருக்கு நீர் கொடுப்பதை அவை நிறுத்திவிட்டனவா? மலைக்குகைகள் இப்பொழுது மூடப்பட்டு விட்டனவா, அல்லது அனைத்திற்கும் மேலாக, பூரண சரணாகதி அடைந்துள்ள ஆத்மாக்களுக்கு சர்வ வல்லமை பொருந்திய பகவான் பாதுகாப்பு அளிக்கவில்லையா? பின் எதற்காக, கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தால் மதிமயங்கிக் கிடப்பவர்களை முகத்துதி செய்வதற்காக கற்றறிந்த முனிவர்கள் செல்கின்றனர்?

பதம் 2.2.6
ஏவம் ஸ்வ-சித்தே ஸ்வத ஏவ ஸித்த
ஆத்மா ப்ரியோ ‘ர்தோ பகவான் அநந்த:
தம் நிர்வ்ருதோ நியதார்தோ பஜேத
ஸம்ஸார-ஹேதுபரமஸ் ச யத்ர

ஏவம்-இவ்வாறாக; ஸ்வ சித்தே-ஒருவரின் சொந்த இதயத்தில்; ஸ்வத—அவரது ஸர்வ வல்லமையினால்; ஏவ-நிச்சயமாக; ஸித்த- முழுமையாகப் பிரதிநிதிக்கும்; ஆத்மா-பரமாத்மா; ப்ரிய-மிகவும் பிரியமுள்ள; அர்த-பொருள்; பகவான்-பரமபுருஷ பகவான்; அநந்த—அளவற்றதான நித்திய; தம்-அவரிடம்; நிர்வ்ருத- உலகப் பற்றிலிருந்து விடுபட்டு; நியத-நிரந்தர; அர்த:-உயர்ந்த லாபம்; பஜேத—ஒருவன் வழிபட வேண்டும்; ஸம்ஸார ஹேது—பந்தப்பட்ட வாழ்வுக்கான காரணம்; உபரம-நிறுத்தம்; ச-நிச்சயமாக; யத்ர- எதிரில்.

இவ்வாறு நிலைபெற்ற பின், தமது சர்வ வல்லமையின் மகத்துவத்தால் ஒருவனின் இதயத்தில் பரமாத்மாவாக வீற்றிருப்பவருக்கு அவன் தொண்டாற்ற வேண்டும். அவர் சர்வ வல்லமை பொருந்திய பரமபுருஷ பகவானாகவும், நித்தியமானவராகவும், அளவற்றவராகவும் இருப்பதால் அவரே வாழ்வின் இறுதி லட்சியமாவார். அவரை வழிபடுவதன் மூலம் வாழ்வின் பந்தப்பட்ட நிலைக்குரிய காரணத்தை ஒருவன் நிறுத்தி விட முடியும்.

பதம் 2.2.7
கஸ் தாம் தீவனாத்ருத்ய பரானுசிந்தாம்
ருதே பசூன் அஸதீம் நாம குர்யாத்
பஸ்யன் ஜனம் பதிதம் வைதரண்யாம்
ஸ்வ-கர்மஜான் பரிதாபான் ஜுஷாணம்

க-வேறு யார்: தாம்-அந்த; து-ஆனால்; அனாத்ருத்ய- அலட்சியம் செய்வதன் மூலம்; பர அனுசிந்தாம் —உன்னத எண்ணங்கள்: ருதே-இல்லாமல்; பசூன்-பௌதிகவாதிகள்; அஸதீம் —நிலையற்றதில்; நாம-பெயர்; பஸ்யன் -தெளிவாகக் கண்டு; ஜனம்-பாமர மக்கள்; குர்யாத்-ஏற்பான்; பதிதம்- வீழ்ந்த வைதரண்யாம்—வைதரணி எனப்படும் துன்ப நதி; ஸ்வகர்மஜான்; ஒருவனின் சுய கர்மத்திலிருந்து உண்டான; பரிதாபான் – துன்பம்; ஜுஷாணம்—கைப்பற்றப்பட்டு.

தங்களின் சுய கர்ம பலன்களை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக துன்பக் கடலில் வீழ்ந்துவிட்ட பாமர மக்களைக் கண்ட பிறகும் இத்தகைய உன்னத சிந்தனையை அலட்சியம் செய்துவிட்டு நிலையற்றவையான பெயர்களை மட்டுமே ஏற்கக் கூடியவர்கள், பௌதிக வாழ்வில் மூழ்கிவிட்ட பௌதிகவாதிகளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

பதம் 2.2.8
கேசித் ஸ்வ-தேஹாந்தர்-ஹ்ருதயாவகாரசே
ப்ராதேச-மாத்ரம் புருஷம் வஸந்தம்
சதுர்-புஜம் கஞ்ச-ரதாங்க-சங்க
கதா-தரம் தாரணயா ஸ்மரந்தி

கேசித்-பிறர்; ஸ்வதேஹ-அந்த உடலுக்குள்; ஹ்ருதயஅவகாசே -இதயப்பிரதேசத்தில்; ப்ராதேச- மாத்ரம்- எட்டு அங்குல உயரம் மட்டுமே உள்ள; புருஷம்-முழுமுதற் கடவுள்; வஸந்தம்- வசிக்கும்; சதுர்-புஜம் – நான்கு கரங்களுடன்; கஞ்ச-தாமரை; அங்க—ஓர் இரதத்தின் சக்கரம்; சங்க-சங்கு: கதா-தரம்—கரத்தில் ஒரு கதையுடன்; தாரணயா—மனதில் இவ்வாறு எண்ணங்கொண்டு; ஸ்மரந்தி-அவரைத் தியானித்து.

உடலுக்குள், இதயப் பிரதேசத்தில் வாழ்பவரும், எட்டு அங்குல அளவு மட்டுமே உள்ளவரும், நான்கு கைகளுடன் முறையே தாமரை, சக்கரம், சங்கு மற்றும் கதை ஆகியவற்றை ஏந்தியவருமான முழுமுதற் கடவுளை மற்றவர்கள் உணர்கின்றனர்.

பதம் 2.2.9
ப்ரஸன்ன-வக்த்ரம் நலினாயதேக்ஷணம்
கடம்ப-கிஞ்சல்க-பிசங்க-வாஸஸம்
லஸன்-மஹா-ரத்ன-ஹிரண்மயாங்கதம்
ஸ்புரன்-மஹா-ரத்ன-கிரீத-குண்டலம்

ப்ரஸன்ன-சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது; வக்த்ரம்—வாய்; நலின ஆயத—ஒரு தாமரையின் இதழ்களைப் போல் விரிந்துள்ளது; ஈஷணம்-கண்கள்; கடம்ப- கடம்ப மலர்; கிஞ்சல்க சூல்முடி: பிசங்க-மஞ்சள் நிறம்; வாஸஸம்-ஆடைகள்; லஸத்-தொங்கிக் கொண்டிருக்கும்; மஹா ரத்ன-விலையுயர்ந்த இரத்தினங்கள்; ஹிரண்மய-தங்கத்தாலான; அங்கதம்- ஆபரணம்; கிரீத-கிரீடம்; குண்டலம்- குண்டலங்கள்.

அவரது வாய் அவருடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. அவரது கண்கள் தாமரை இதழ்களைப் போல் விரிந்துள்ளன. மேலும் கடம்ப மலரைப் போல் மஞ்சள் நிறமாக உள்ள அவரது ஆடைகள் விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவருடைய ஆபரணங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு, இரத்தினங்களால் இழைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரகாசமான தலைப்பாகையையும் குண்டலங்களையும் அவர் அணிந்துள்ளார்.

பதம் 2.2.10
உன்னித்ர-ஹ்ருத்-பங்கஜ-கர்ணிகாலயே
யோகேஸ்வராஸ்தாபித-பாத-பல்லவம்
ஸ்ரீ-லக்ஷணம் கௌஸ்துப-ரத்ன-சுந்தரம்
அம்லான லக்ஷ்ம்யா வன-மாலயாசிதம்

உன்னித்ர-மலரும்; ஸ்குக்- இதயம்; பங்கஜ்-தாமரைப்பூ: கர்ணிகா ஆலயே-வட்டத்தின் மேல் பாகத்தின் மீது: யோக ஈஸ்வர- சிறந்த யோகிகள்; ஆஸ்தாபித – வைத்து; பாத பல்லவம்- தாமரைப் பாதங்கள்: ஸ்ரீ-ஸ்ரீதேவி அல்லது அழகியதோர் கன்றுக்குட்டி; லக்ஷணம்- அவ்வாறு குறியிடப்பட்டு; கௌஸ்துப-கௌஸ்துப மாலை; ரத்ன—மற்ற இரத்தினங்கள்; கந்தரம்- தோளின் மேல்: அம்லான-முற்றிலும் பசுமையான: லக்ஷ்ம்யா-அழகு; வனமாலயா- ஒரு பூமாலையால் ; அசிதம்-மேலே பரவியுள்ள.

அவரது தாமரைப் பாதங்கள், சிறந்த யோகிகளின் தாமரை போன்ற இதயங்களின் மீது வைக்கப்பட்டுள்ளன. அழகிய கன்றுக்குட்டியின் உருவம் இழைக்கப்பட்ட கௌஸ்துப மாலை அவரது மார்பையும் மற்ற இரத்தினங்கள் அவரது தோள்களையும் அலங்கரிக்கின்றன. அவரது உடல் முழுவதும் மிகவும் பசுமையான மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பதம் 2.2.11
விபூஷிதம் மேகலோபங்குலீயகைர்
மஹா-தநைர் நூபுர-கங்கணாதிபி:
ஸ்நிக்தாமலாகுஞ்சித-நீல-குந்தலைர்
விரோசமானானன-ஹாஸ-பேசலம்

விபூஷிதம்-நன்கு அலங்கரிக்கப்பட்ட; மேகலயா -இடுப்பைச் சுற்றி ஓர் அலங்கார ஆபரணத்தால்; அங்குலீயகை:-மோதிரங்களால்; மஹா-தநை-அனைத்தும் அதிக விலை மதிப்புடையவை; நூபுர – ஒலிக்கும் கால் சலங்கைகள்; கங்கணஆதிபி-காப்புகளாலும் கூட: ஸ்நிக்த–சுருட்டையான; நீல-நீல நிறமுடைய: குந்தலை- கூந்தல்; விரோசமான- மிகவும் இன்பமூட்டும். ஆனன-முகம்: ஹாஸ- பூன்சிரிப்பு: பேசலம்- அழகான.

இடுப்பைச் சுற்றியுள்ள விலையுயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மோதிரங்களாலும் அவர் நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். அவரது கால் சலங்கைகள், காப்புகள், எண்ணெய் தடவப்பட்ட இள நீல நிறம் கொண்ட மயிர்ச் சுருள் மற்றும் அவரது அழகிய புன்சிரிப்பு தவழும் முகம் ஆகிய அனைத்தும் மிகவும் இன்பமளிக்கக் கூடியவை ஆகும்.

பதம் 2.2.12
அதீன-லீலா-ஹஸிதேக்ஷணோல்லஸத்
ப்ரூ-பங்க-ஸம்ஸூசித-பூரி-அனுக்ரஹம்
ஈக்ஷேத சிந்தாமயம் ஏனம் ஈஸ்வரம்
யாவன் மனோ தாரணயாவதிஷ்ததே

அதீன-மிகவும் பெருந்தன்மையுள்ள; லீலா-திருவிளையாடல்கள்; ஹஸித-புன்சிரிப்புடைய; ஈஷண-மேலுள்ள பார்வையால்; உல்லஸத-பிரகாசிக்கும்; ப்ரூ-பங்க-புருவத்தின் சைகைகள்; ஸமஸூசித-குறிப்பிடுகிறது; பூரி-பரந்த: அனுக்ரஹம்-அனுக்கிரகம்; ஈசேத்த-மீது ஒருவன் மனதைப் பதிக்க வேண்டும்; சிந்தாமயம்- தெய்வீகமான; ஏனம்-இந்த குறிப்பிட்ட; ஈஸ்வரம்-பரம புருஷம்;யாவத்-அது வரைக்கும்; மன:-மனம்; தாரணயா- தியானத்தால்:அவதிஷ்ததே- நிலைக்கச் செய்ய முடியும்.

பகவானின் பெருந்தன்மையுள்ள திருவிளையாடல்களும், அவரது புன்னகை பொழியும் முகத்தில் பிரகாசிக்கும் பார்வையும் அவரது பரந்த அனுக்கிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, தியானத்தின் வழியாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும் வரை பகவானின் இந்த உன்னத உருவத்தின் மீது தன் மனதை ஒருவன் பதியச் செய்ய வேண்டும்.

பதம் 2.2.13
ஏகைகஸோ ‘ங்கானி தியானுபாவயேத்
பாதாதி யாவத் தஸிதம் கதாப்ருத:
ஜிதம் ஜிதம் ஸதானம் அபோஹ்ய தாரயேத்
பரம் பரம் சுத்தியதி தீர் யதா யதா.

ஏக ஏகஸ:- ஒவ்வொன்றாக, அல்லது ஒன்றன்பின் ஒன்றாக; அங்கானி- அங்கங்கள்; தியா-கவனத்துடன்; அனுபாவயேத்- மீது தியானித்து; பாத ஆதி-பாதங்கள் போன்றவை; யாவத்-வரை; ஹஸிதம்-சிரித்த; கதா-ப்ருத:-முழுமுதற் கடவுள்; ஜிதம் ஜிதம்— படிப்படியாக மனதை கட்டுப்படுத்தி; ஸ்தானம்-இடம்; அபோஹ்ய- விட்டு; தாரயேத்-மீது தியானித்து; பரம் பரம்-உயர உயர; சுத்தியதி- தூய்மையடைந்த; தீ:—புத்தி; யதாயதா—அதைப்போலவே.

தியானத்தை முழுமுதற் கடவுளின் தாமரைப் பாதங்களில் துவங்கி அவரது புன்னகை பூத்த முகம் வரை முன்னேறச் செய்ய வேண்டும். தியானத்தை முதலில் தாமரைப் பாதங்களில் பதித்து, பிறகு கெண்டைக் கால்களிலும் அதன் பின் தொடைகளிலும் பதியச் செய்து இப்படியாக உயர உயரச் செல்ல வேண்டும். அங்கங்களின் வெவ்வேறு பகுதிகளின் மீது ஒவ்வொன்றாக எவ்வளவு அதிகமாக மனம் நிலைக்கிறதோ, அவ்வளவு அதிகமாக புத்தி தூய்மையடைகிறது.

பதம் 2.2.14
யாவன் ந ஜாயேத பராவரே’ஸ்மின்
விஸ்வேஸ்வரே த்ரஷ் பக்தி-யோக
தாவதி ஸ்தவிய புருஷஸ்ய ரூபம்
க்ரியாவஸானே ப்ரயத: ஸ்மரேத

யாவத்—அது வரையில்; ந-இல்லை; ஜாயேத-விருத்திசெய்; பர-ஆன்மீக; அவரே-பௌதிக; அஸ்மின்-இந்த உருவில்; விஸ்வ ஈஸ்வரே- எல்லா உலகங்களுக்கும் பகவான்; த்ரஷ்தரி- காண்பவரிடம் பௌதிகத்தில் ஆழ்ந்துவிட்டவர்கள்; புருஷஸ்ய-விராட் புருஷரின்; பக்தி- யோக-பக்தித் தொண்டு; தாவத்—அதுவரைக்கும்; ஸ்தவிய ரூபம்—விஸ்வரூபம்; க்ரியா அவஸானே— ஒருவரின் விதிக்கப்பட்ட கடமைகளின் முடிவில்; ப்ரயத:-முறையான கவனத்துடன்; ஸ்மரேத- ஒருவன் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆழ்ந்த பௌதிகவாதி, ஆன்மீக மற்றும் ஜட உலகங்கள் ஆகிய இரண்டையும் காண்பவரான பரமபுருஷரிடம் உணர்வை விருத்தி செய்து கொண்டால் பக்தித் தொண்டு அல்லாது, அவளது விதிக்கப்பட்ட கடமைகளின் முடிவில் அவன் பகவானின் விஸ்வரூபத்தை நினைப்பதையோ அல்லது அதைத் தியானிப்பதையோ மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

பதம் 2.2.15
ஸ்திரம் ஸுகம் சாஸனம் ஆஸ்திதோ யதிர்
யதா ஜிஹாஸுர் இமம் அங்க லோகம்
காலே ச தேசே ச மனோ ந ஸஜ்ஜயேத்
ப்ராணான் நியச்சேன் மனஸா ஜிதாஸு:

ஸ்திரம்-கலவரம் அடையாமல்; ஸுகம்-சுகமான; ச-மேலும்; ஆஸனம்-ஆசனம்; ஆஸ்தித:-அமையப்பெற்று: யதி- முனிவர்; யதா-எப்பொழுது வேண்டுமானிலும்; ஜிஹாஸூ-கைவிடவிரும்புகிறாரோ; இமம்- இந்த; அங்க—ஓ மகாராஜனே; லோகம்—இவ்வுடல்; காலே-சரியான நேரத்தில்; ; ச-மேலும்; தேசே-சரியான ஓரிடத்தில்; மன-மனம்; ந-இல்லை; ஸஜ்ஜயேத்—கலக்கமடையாமல்; ப்ராணான்-புலன்கள்; நியச்சேத்- அடக்க வேண்டும்; மனஸா-மனதால்; ஜித அஸு- உயிர்க்காற்றை கட்டுப்படுத்தி.

மகாராஜனே, எப்பொழுதெல்லாம் ஒரு யோகி இந்த மானிடர்களின் கிரகத்தை விட்டு வெளியேற விரும்புகிறானோ, அச்சமயம் சரியான நேரம் அல்லது இடத்தைப் பற்றி அவன் குழப்பமடையாமல் சுகாசனத்தில் அமர்ந்து, உயிர்க்காற்றை கட்டுப்படுத்தி, புலன்களை மனதால் அடக்க வேண்டும்.

பதம் 2.2.16
மன: ஸ்வ-புத்தியாமலயா நியம்ய
க்ஷேத்ர-க்ஞ ஏதாம் நினயேத் தம் ஆத்மனி
ஆத்மானம் ஆத்மனி அவருத்ய தீரோ
லப்தோபசாந்திர் விரமேத க்ருத்யாத்

மன:- மனம்; ஸ்வ-புத்தியா-தனது சுய புத்தியால்; அமலயா- தூய; நியம்ய-ஒழுங்குபடுத்துவதன் மூலம்; க்ஷேத்ரக்ஞே- ஜீவராசியிடம்; ஏதாம்- அவையனைத்தும்; நினயேத்-இரண்டறக் கலந்து; தம் – அந்த; ஆத்மனி-ஆத்மா; ஆத்மானம்-ஆத்மா; ஆத்மனி- பரமாத்மாவில்; அவருத்ய-அடைக்கப்பட்டு; தீர-பூரண திருப்தி அடைந்த; லப்த – உபசாந்தி-பூரண ஆனந்தத்தை அடைந்தவன்; விரமேத-இருந்து நின்றுவிடுகிறான்; க்ருத்யாத்- மற்றெல்லாச் செயல்கள்.

அதற்குப்பின், யோகி தனது தூய புத்தியை உபயோகித்து, தன் மனதை ஜீவனோடு இரண்டறக் கலக்கச் செய்து, பிறகு ஜீவனை பரமாத்மாவுடன் ஐக்கியப் படுத்திவிட வேண்டும். இதைச் செய்வதால் பூரண திருப்தியடைந்த ஜீவராசி, திருப்தியின் மிகவுயர்ந்த நிலையில் அமையப் பெற்று, மற்றெல்லாச் செயல்களையும் நிறுத்திவிடுகிறான்.

பதம் 2.2.17
ந யத்ர காலோ ‘நிமிஷாம் பர: ப்ரபு :
குதோ நு தேவா ஜகதாம் ய ஈசிரே
ந யத்ர ஸத்வம் ந ரஜஸ் தமஸ் ச
ந வை விகாரோ ந மஹான் ப்ரதானம்

ந-இல்லை;யத்ர-எங்கு; கால-அழியக்கூடியகாலம்; அநிமிஷாம்- சுவர்க்க லோகத்து தேவர்களின்; பர-உயர்ந்த; ப்ரபு:-ஆளுநர்; குத-எங்கு இருக்கிறது; நு-நிச்சயமாக; தேவா-தேவர்கள்; ஜகதாம்- பௌதிக பிராணிகள் ; யே-அந்த; ஈசிரே- ஆளுகின்றது; ந-இல்லை; யத்ர-அங்கு; ஸத்வம்-நற்குணம்; ந-அதுவும் இல்லை; ரஜ-தீவிர குணம்; தம-அறியாமை குணம்; ச-மேலும்; ந-இல்லை; வை- நிச்சயமாக; விகார- மாற்றம்; ந-இல்லை; மஹான்-பௌதிக காரணக் கடல்; ப்ரதானம்—ஜட இயற்கை.

“லப்தொபசாந்தி” எனும் இவ்வுன்னத நிலையில், ஜீவன்களை ஆளக்கூடிய சக்தியளிக்கப்பட்டுள்ள சுவர்க்கலோக இகலோக தேவர்களையும் கட்டுப்படுத்துவதான அழிவை உண்டாக்கும் காலம் செல்லாததாகிவிடுகிறது. (இந்நிலையில் தேவர்களைப் பற்றி என்ன சொல்வது?) அந்த நிலையில் பௌதிக ஸத்வ, ரஜோ, தமோகுணங்களோ, பொய்யகங்காரமோ, பௌதிக காரணக் கடலோ, பெளதிக இயற்கையோ இல்லை.

பதம் 2.2.18
பரம் பதம் வைஷ்ணவம் ஆமனந்தி தத்
யன் நேதி நேதீதி அதத் உத்ஸிஸ்ருக்ஷவ:
விஸ்ருஜ்ய தௌராத்மியம் அனன்ய-சௌஹ்ருதா
ஹ்ருதோபகுஹ்யார்ஹ- பதம் பதே பதே

பரம்- தலைமையான; பதம்-நிலை; வைஷ்ணவம்- முழுமுதற் கடவுளிடம் உள்ள உறவில்: ஆமனந்தி—அவர்களுக்குத் தெரிந்த: தத்- அது; யத்—எது; ந இதி—இதுவல்ல ; இதி— இவ்வாறாக; அதத்— இறை சம்பந்தமற்ற; உத்ஸிஸ்ருக்ஷவ-தவிர்க்க விரும்புபவர்கள்; விஸ்ருஜ்ய- முழுமையாக அதைக் கைவிட்டு: தௌராத்மியம்- குழப்பங்கள்; அனன்ய-பரிபூரணமான; சௌஹ்ருதா-இணக்கத்துடன்: ஹ்ருதா உபகுஹ்ய-அவற்றை இதய பூர்வமாக ஏற்று : அர்ஹ—வழிபடுவதற்காக மட்டுமே உள்ள அது; பதம்- தாமரைப் பாதங்கள்; பதே பதே- ஒவ்வொரு நொடியிலும்.

பரமபுருஷரான விஷ்ணுவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள, அந்த மிகவுயர்ந்த நிலையை ஆன்மீகிகள் அறிந்திருப்பதால், தெய்வீகமற்ற அனைத்தையும் விலக்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். எனவே பகவானோடு பரிபூரண இணக்கம் கொண்டுள்ள தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் அவற்றைப் பூஜிக்கிறான்.

பதம் 2.2.19
இத்தம் முனிஸ் தூபரமேத் வ்யவஸ்திதோ
விஞ்ஞான-த்ருக்-வீர்ய-ஸுரந்திதாசய:
ஸ்வ-பார்ஷ்ணினாபீத்ய குதம் ததோ ‘நிலம்
ஸ்தானேஷு ஷத்ஸூன்னமயேஜ் ஜித-க்லம:

இத்தம்—இவ்வாறாக, பிரம்ம உணர்வால்; முனி-தத்துவவாதி; து-ஆனால்; உபரமேத்-ஓய்வு பெற வேண்டும்; வ்யவஸ்தித-நன்றாக அமையப்பெற்று: விஞ்ஞான-த்ருக்-விஞ்ஞான பூர்வமான அறிவால்; வீர்ய-வலிமை; ஸுரந்தித-நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட; ஆசய-வாழ்வின் நோக்கம்; ஸ்வ-பார்ஷ்ணினா—ஒருவனின் குதிகாலால்; ஆபீத்ய-அடைந்துவிடுவதால்: குதம்-காற்று துவாரம்; தத-அதன்பின்; அநிலம்—உயிர்க் காற்று: ஸ்தானேஷு- இடங்களில்; ஷத்ஸூ—ஆறு முக்கியமான: உன்னமயேத்- உயர்த்தப்பட வேண்டும். ஜித-க்லம:—ஐட ஆசைகளை அணைத்துவிடுவதன் மூலம்.

விஞ்ஞான பூர்வமான அறிவின் வலிமையால் ஒருவன் உன்னத உணர்வில் நிலைபெற்றிருக்க வேண்டும். இவ்வாறாக எல்லா பௌதிக ஆசைகளையும் அவனால் அணைத்துவிட முடியும். அதன் பின் காற்றுத் துவாரத்தை (மலம் கழிக்கப்படும் துவாரம்) குதிகாலால் அடைத்து, உயிர்க் காற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு உயர்த்துவதன் மூலமாக ஆறு முக்கிய இடங்களுக்கு அதை உயர்த்தியபின், ஜட உடலை ஒருவன் விட வேண்டும்.

பதம் 2.2.20
நாபியாம் ஸ்திதம் ஹ்ருதி அதிரோப்ய தஸ்மாத்
உதான-கத்யோரஸி தம் நயேன் முனி:
ததோ னுஸந்தாய தியா மனஸ்வீ
ஸ்வ-தாலு-மூலம் சனகைர் நயேத

நாபியாம்-நாபியின் மேல்; ஸிதிதம்—அமைந்துள்ள; ஹ்ருதி- இதயத்தில்; அதிரோப்ய-வைப்பதன் வழியாக ; தஸ்மாத்-அங்கிருந்து; உதான-எழுப்பும்; கத்ய-சக்தி; உரஸி-மார்பின் மேல்; தம் – அதன்பின்; நயேத் -இழுக்க வேண்டும்; முனி-தியானிக்கும் பக்தன்; தத- அவற்றை; அனுஸந்தாய-தேடுவதற்காகவென்றே; தியா-புத்தியால்; மனஸ்வீ-ஆழ்ந்த யோசனையில் இருக்கும்; ஸ்வ-தாலு மூலம் – மேல்வாயின் மூலஸ்தானம்; சனகை:- -மெதுவாக; நயேத- உள்ளே கொண்டு வரப்படக்கூடும்.

தியானத்திலிருக்கும் பக்தன், உயிர் மூச்சை நாபியிலிருந்து மேலேயுள்ள இதயத்திற்கு மெதுவாகத் தள்ளி, அங்கிருந்து மார்புக்கும், பிறகு மேல்வாயின் மூலஸ்தானத்திற்கும் தள்ள வேண்டும். புத்தியால் சரியான இடங்களை அவன் கண்டறிய வேண்டும்.

பதம் 2.2.21
தஸ்மாத் ப்ருவோர் அந்தரம் உன்னயேத
நிருந்த-ஸப்தாயதனோ ‘நபேக்ஷ:
ஸ்தித்வா முஹுர்தார்தம் அகுந்த:- த்ருஷ்டிர்
நிர்பித்ய மூர்தன் விஸ்ருஜேத் பரம் கத:

தஸ்மாத்- அங்கிருந்து: ப்ருவோ:- புருவங்களின்; அந்தரம்-இடையில்: உன்னயேத-உள்ளே கொண்டு வரவேண்டும்; நிருத்த- அடைப்பதன் மூலம்: ஸப்த—ஏழு; ஆயதன-உயிர் மூச்சு வெளியேறும் வழிகள்; அநபேக்ஷ:-எல்லா ஜட இன்பங்களில் இருந்தும் விடுபட்டு; ஸ்தித்வா-வைத்திருப்பதால்; முஹுர்த-நொடி நேரத்தின்; அர்தம்— பாதி; அகுந்த-பரம பதத்தைச் சென்றடைவதற்கு; த்ருஷ்டி- தனது இலக்கை அவ்வாறு பதித்துவிட்டவன்; நிர்பித்ய- குத்தி; மூர்தன்- மூளைத் துவாரம்; விஸ்ருஜேத்-அவன் உடலை உகுத்துவிட வேண்டும்; பரம்-பரமன்; கத:-சென்ற பின்.

அதன் பிறகு பக்தியோகி, உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் மேலே தள்ள வேண்டும். பிறகு, உயிர் மூச்சு வெளியெறும் ஏழு துவாரங்களை அடைத்த பின் பரம் பதத்தைச் சென்றடையும் அவனுடைய குறிக்கோளில் அவன் உறுதியாக இருக்க வேண்டும். ஜட இன்பத்திற்குரிய எல்லா ஆசைகளிலிருந்தும் அவன் முற்றிலும் விடுபட்டவனாக இருந்தால், மூளைத் துவாரத்தை அடையும் அவன், பிறகு பகவானை அடைந்து, தன் பௌதிக தொடர்புகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

பதம் 2.2.22
யதி ப்ரயாஸ்யன் ந்ருப பாரமேஷ்தியம்
வைஹாயஸானாம் உத யத் விஹாரம்
அஷ்டாதிபத்யம் குண-ஸன்னிவாயே
ஸஹைவ கச்சேன் மனஸேந்ரியைஸ் ச

யதி—இருந்தாலும்; ப்ரயாஸ்யன்- ஓர் ஆசையை மரிப்பது; ந்ருப—ஓ அரசனே; பாரமேஷ்தியம் ஜட உலகை ஆளும். கிரகம்; வைஹாயஸானாம்வைஹாயஸஸ் ராசிகளின்; உத-கூறப்படுகிறது; என்று யத் என்ன; இன்பத்துக்குரிய இடம்; அஷ்ட ஆதிபத்யம்-அஷ்ட சித்திகள்; குண ஸன்னிவாயே-மூன்று இயற்கை குணங்களைக் கொண்ட உலகில்; ஸஹ அறியப்படும் விஹாரம் –அத்தோடு; ஏவ- நிச்சயமாக; கச்சேத்-செல்ல வேண்டும்; மனஸா மனம் கூடவே செல்கிறது ; இந்ரியை:-புலன்களும்; கூ -கூட.

ஆனால் அரசனே, மிக உயர்ந்த கிரகமான பிரம்ம லோகத்திற்குச் செல்வது, அல்லது வைஹாயஸர்கள் என்பவர்களுடன் விண்வெளியில் பிரயாணம் அல்லது ஒருவித செய்வது போன்ற அஷ்ட சித்திகளை லட்சக்கணக்கிலுள்ள கிரகங்களில் சூழ்நிலையை விரும்புவது போன்ற ஏதேனும் அடைவது, ஒன்றில் முன்னேற்றமான ஜட இன்பங்களுக்குரிய ஆசையை யோகி வைத்திருப்பானாயின், பௌதிகமான மனதையும், புலன்களையும் அவன் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

பதம் 2.2.23
யோகேஸ்வராணாம் கதிம் ஆஹுர் அந்தர்
பஹிஸ்-த்ரி-லோக்யா: பவனாந்தர்-ஆத்மனாம்
ந கர்மபிஸ் தாம் கதிம் ஆப்னுவந்தி
வித்யா-தபோ-யோக-ஸமாதி-பாஜாம்

மோக ஈஸ்வராணாம்-சிறந்த யோதிகள் அல்லது பக்தர்கள்: கதிம்— கதி: ஆஹு-கூறப்படுகிறது. அந்த—உள்ளே: பஹி:-வெளியே; த்ரிலோக்யா- மூன்று கிரக அமைப்புக்களில்; பவன அந்த- காற்றினுள்: ஆத்மனாம்-சூட்சும உடலின்: ந–என்றுமில்லை; கர்மபி-பலன் நோக்குச் செயல்களால்; தாம்- அந்த: கதிம்-வேகம்: ஆயினுவந்தி—அடைய; வித்யா-பக்தித் தொண்டு: தப: தவங்கள்; யோக -யோக சித்தி: ஸமாதி-அறிவு: பாஜாம்—உபசரிப்பவர்களின்.

ஆன்மீகிகள் ஆன்மீக உடலில் அக்கறை கொண்டுள்ளனர். அதனால் அவர்களுடைய பக்தித் தொண்டு, தவங்கள், யோக சித்தி மற்றும் உன்னத அறிவு ஆகியவற்றின் வலிமையால், ஜட உலகங்களின் உள்ளும் புறமும் நிபந்தனையற்ற முறையில் அவர்களால் இயங்க முடியும். கருமிகளால், அல்லது ஆழ்ந்த பௌதிகவித்களால் அவ்வாறு ஒருபொழுதும் இயங்க முடியாது.

பதம் 2.2.24
வைஸ்வானரம் யாதி விஹாயஸா கத:
ஸுஷும்ண்யா ப்ரஸ்ம-பதேன சோசிஷா
விதூத-கல்கோ “த ஹரேர் உதஸ்தாத்
ப்ரயாதி சக்ரம் ந்ருப சைகமாரம்

வைஸ்வானரம்-அக்னிதேவன்; யாதி-செல்கிறான்; விஹாய- வானத்திலுள்ள பாதையின் வழியாக (பால் வீதி); கத-மேல் கடந்து செல்வதால்; ஸுஷும்ண்யா-சுஸும்ணா வழியில்; ப்ரஸ்ம– பிரம்ம லோகம்; பதேன-செல்லும்வழியில்; சோசிஷா-பிரகாசமான; விதூத தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டதால்; கல்க:மாசு: அத- அதன்பின்: ஹரே:-பகவான் ஸ்ரீ ஹரியின்; உதஸ்தாத்-மேல் நோக்கி; ப்ரயாதி—அடைகிறான்; சக்ரம்-வட்டம்; ந்ருப-ஓ ராஜனே; சைகமாரம்-சிசுமாரம் எனப் பெயர் கொண்ட.

அரசே, அத்தகைய ஒரு யோகி, மிக உயர்ந்த பிரம்மலோகத்தைச் சென்றடைவதற்காக, பிரகாசமான “சுஷீம்ஸு வழியாக பால் வீதியைக் கடந்து செல்லும் பொழுது, முதலி அவன் “வைஸ்வானரம்” எனப்படும் அக்னி தேவனின் கிரகத்திற்கு செல்கிறான். அங்கு எல்லா அழுக்குகளிலிருந்தும் அவன் முற்றிலும் தூய்மை அடைந்த பின், முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ஹரியுடன் சம்பந்தம் கொள்வதற்காக, தொடர்ந்து மேல் நோக்கி சிசுமார வட்டத்திற்குச் செல்கிறான்.

பதம் 2.2.25
தத் விஸ்வ-நாபிம் து அதிவர்த்ய விஷ்ணோர்
அணீயஸா விரஜேனாத் மநைக
நமஸ்க்ருதம் ப்ரஹ்ம-விதாம் உபைதி
கல்பாயுஷோ யத் விபுதா ரமந்தே

தத்-அது: விஸ்வ நாபிம்-பசுவானுடைய விஸ்ஸ ரூபத்தின் நாபி;
து-ஆனால்: அதிவர்த்ய- கடந்து சென்று: விஷ்ணோ:-முமு கடவுளாகிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின்: அணீயஸா -யோக சித்தியால்; விரஜேன-தூய்மை அடைந்தவனால்; ஆத்மனா- ஜீவராசியால்; ஏக- மட்டுமே; நமஸ்க்ருதம்-வழிபாட்டுக்குரியது: ப்ரஹ்மவிதாம்- உன்னத நிலையில் உள்ளவர்களால்: உபைதி-அடைகிறான்; கல்ப ஆயுஷ -4,300,000,000 சூரிய ஆண்டுகள் கொண்ட கால அளவு; யத்-இடம்; விபுதா—தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள்; ரமந்தே – அனுபவிப்பதற்காக.

இந்த சிசுமாரம், முழுபிரபஞ்சமும் சுழல்வதற்குரிய அச்சாக அழைக்கப்படுகிறது. யோகிகள் மட்டுமே இந்த சிசுமார வட்டத்தைக் கடந்து சென்று, 430 கோடி சூரிய ஆண்டுகள் கொண்ட காலத்தை அனுபவிக்கும், பிருகுவைப் போன்ற தூய்மை அடைந்த முனிவர்கள் வாழும் கிரகத்தை (மஹா லோகம்) அடைகின்றனர். உன்னத நிலையிலுள்ள முனிவர்களுக்கும் இக்கிரகம் வழிபாட்டுக்கு உரியதாகும்.

பதம் 2.2.26
அதோ அனந்தஸ்ய முகானலேன
தந்தஹ்யமானம் ஸ நிரீஷ்ய விஸ்வம்
நிர்யாதி சித்தேஸ்வர-யுஷ்த-திஷ்ணயம்
யத் த்வை-பரார்தியம் தத் உ பாரமேஷ்தியம்

அதோ-அதன் பயனாக; அனந்தஸ்ய-பரம் பொருளின் அவதாரமாகிய அநந்தனிடம் இருந்து; : முக அனலேன- அவரது வாயிலிருந்து தோன்றும் தீயால்; தந்தஹ்யமானம்—எரிந்து சாம்பலாகும்; ஸ:-அவன்; நிரீக்ஷ்ய—இதைக் கண்டு; விஸ்வம்-பிரபஞ்சம்; நிர்யாதி-வெளியேறுகிறான்; சித்தேஸ்வர-யுஷ்த-திஷ்ணயம்- சிறந்த தூய்மையடைந்த ஆத்மாக்களால் உபயோகிக்கப்படும் ஆகாய விமானங்கள்; யத்-இடம்; த்வை-பரார்தியம்-15,480,000,000,00 சூரிய ஆண்டுகள்; தத்—அந்த; உ-மேன்மைக்குரிய; பாரமேஷ்தியம்- பிரம்மா வாழும் சத்தியலோகம்.

முழு பிரபஞ்சத்தின் இறுதியான பிரளய காலத்தில் (பிரம்மாவின் ஆயுட்கால முடிவில்), அனந்தனின் வாயிலிருந்து, (பிரபஞ்சத்தின் அடியில்) ஒரு தீச்சுடர் தோன்றுகிறது. பிரபஞ்சத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாவதைக் கண்டு, சிறந்த தூய்மை பெற்ற ஆத்மாக்களால் உபயோகிக்கப்படும் ஆகாய விமானங்களின் மூலம் யோகி சத்தியலோகத்துக்குப் புறப்படுகிறான். சத்தியலோகத்திலுள்ள ஆயுட்காலம் 15,480,000,000,000 கணக்கிடப்பட்டுள்ளது.

பதம் 2.2.27
ந யத்ர சோகோ ந ஜரா ந ம்ருத்யுர்
நார்திர் ந சோத்வேக ருதே குதஸ்சித்
யச் சித் ததோ ‘த: க்ருபயாநிதம்-விதாம்
துரந்த-துக்க-ப்ரபவானுதர்சனாத்

ந-எப்பொழுதும் இல்லை; யத்ர-உள்ளன; சோக:- துக்கம்; ந-அல்லது; ஜரா-மூப்பு; ந- இல்லை; ம்ருத்யு-இறப்பு; ந- இல்லை; அர்தி-துன்பங்கள்; ந இல்லை; ச-மேலும்; உத்வேக- கவலைகள்; ருதே-அதைத்தவிர; குதஸ்சித்-சிலசமயங்களில்; யச்- காரணத்தால்; சித்-உணர்வு; தத-எனவே; அத-இரக்கம்;க்ருபயா-இதயபூர்வமான அனுதாபத்தால்; அன்-இதம்-விதாம் பக்தித் தொண்டு முறையைப் பற்றி அறியாதிருப்பவர்களின்; துரந்த -மிஞ்சப்பட முடியாத; துக்க-துக்கம்; ப்ரபவ-தொடர்ந்த பிறப்பும் இறப்பும்; அனுதர்சனாத்—தொடர்ந்த அனுபவத்தால்.

சத்தியலோகம் எனப்படும் அக்கிரகத்தில், துக்கமோ, அல்லது மரணமோ இல்லை. எவ்வகையான துன்பமும் அங்கு இல்லாத மூப்போ காரணத்தால் அங்கு கவலைகளும் இல்லை. மாறாக, சில சமயங்களில் உணர்வின் காரணத்தால், பக்தித் தொண்டு முறையை அறியாதவர்கள் மீதும், கடக்க முடியாத ஜட உலகத் துன்பங்களுக்கு உட்பட்டவர்கள் மீதும் ஓர் இரக்க உணர்வு அங்கு காணப்படுகிறது.

பதம் 2.2.28
ததோ விசேஷம் ப்ரதிபத்ய நிர்பயஸ்
தேனாத்னாபோ ‘நல – மூர்திர் அத்வரன்
ஜ்யோதிர்மயோ வாயும் உபேத்ய காலே
வாய்வ்- ஆத்மனா கம் ப்ருஹத் ஆத்ம லிங்கம்

தத-அதன்பின்: விசேஷம்—குறிப்பாக; ப்ரதிபத்ய-அடைவதால்; நிர்பய:- எவ்வித சந்தேகமும் இல்லாமல்: தேன் – அதனால்;ஆத்மனா.—தூய ஆத்மா; ஆப:- நீர், அநல- தீ; மூர்தி:– உருவங்கள்; அத்வரன்—கடப்பதன் மூலம்; ஜ்யோதி-மய-பிரகாசமான; வாயும்-வாயு மண்டலம்: உபேத்ய-அங்கு சென்றபின்; காலே- காலப்போக்கில்; வாயு-காற்று; ஆத்மனா-ஆத்மாவால்; கம்-சூட்சுமமான; ப்ருஹத்- மிகச்சிறந்த: ஆத்ம-லிங்கம்—ஆத்மாவின் நிஜருபம்.

சத்திய லோகத்தை அடைந்தபின், பயமின்மையால், தனது உடலை ஸ்தூல உருவிலிருந்து சூட்சும உருவிற்கு மாற்றிக் கொள்ள பக்தனால் முடிகிறது. படிப்படியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக, நிலத்தன்மையில் இருந்து நீர்த்தன்மைக்கும், பிறகு நெருப்பு, பிரகாசம், காற்று மற்றும் ஆகாயம் போன்ற அதிக சூட்சுமமான வாழ்நிலைகளையும் அவன் அடைகிறான்.

பதம் 2.2.29
க்ராணேன கந்தம் ரஸனேன வை ரஸம்
ரூபம் ச த்ருஷ்தீயா ஸ்வஸனம் த்வசைவ
ஸ்ரோத்ரேன சோபேத்ய நபோ-குணத்வம்
ப்ராணேன சாகூதிம் உபைதி யோகீ

கிராணேன-முகர்வதால்; கந்தம்—நறுமணம்; ரஸனேன- சுவையால்; வை—அப்படியே; ரஸம்-சுவை; ரூபம்-வடிவங்கள்; ச-மேலும்;த்ருஷ்த்யா-காட்சியால்; ஸ்வஸனம்—சம்பந்தம்; த்வசா; ஸ்பரிசம்; ஏவ—அதைப்போல் இருந்தால்; ஸ்ரோத்ரேன – செவியின் அதிர்வால் ; ச-மேலும்; உபேத்ய-அடைந்து; நப: குணத்வம்- ஆகாயத்தின் அடையாளம்; ப்ராணேன—புலன் உறுப்புக்களால்; ச- கூட; ஆகூதிம்-ஜடச் செயல்கள்; உபைதி—அடைகிறான்; யோகீ-பக்தன்.

இவ்வாறாக, முகர்வதால் உண்டாகும் நறுமணம், உண்பதால் உண்டாகும் சுவை, வடிவங்களைக் காண்பதால் உண்டாகும் காட்சி தொடர்பால் உண்டாகும் ஸ்பரிசம், ஆகாயத்தால் உண்டாகும் ஒலியதிர்வு மற்றும் பௌதிகச் செயல்களால் உண்டாகும் புலன் உறுப்புக்கள் போன்ற சூட்சுமமான புலன் விஷயங்களை பக்தன் கடந்து விடுகிறான்.

பதம் 2.2.30
ஸ பூத-ஸூக்ஷ்மேந்ரிய-ஸன்னிகர்ஷம்
மனோமயம் தேவமயம் விகார்யம்
ஸம்ஸாத்ய கத்யா ஸஹ தேன யாதி
விஞ்ஞான-தத்வம் குண-ஸன்னிரோதம்

ஸ:—அவன் (பக்தன்); பூத- ஸ்தூலமான; ஸூக்ஷ்ம – மற்றும் சூட்சுமம்; இந்ரிய-புலன்கள்; ஸன்னிகர்ஷம்-நிஷ்பலமாக்கும் நிலை; மன-மயம்-மனப்பரப்பு; தேவ மயம்-நற்குணம் அல்லது சத்வ குணத்தில்; விகார்யம்—அகங்காரம்; ஸம்ஸாத்ய- கடந்து; கத்யா-முன்னேற்றத்தால்; ஸஹு-உடன்; தேன-அவற்றை; யாதி- செல்கிறான்; விஞ்ஞான-பக்குவமான அறிவு; தத்வம்-உண்மை ; குண—ஜடக்குணங்கள்; ஸன்னிரோதம்-முற்றிலும் நிறுத்தி.

பக்தன் இவ்வாறு ஸ்தூல மற்றும் சூட்சும வடிவிலுள்ள திரைகளைக் கடந்து, அகங்காரம் எனும் நிலைக்குள் புகுகிறான். அந்நிலையில் அவன் ஜட இயற்கைக் குணங்களை (ரஜோ, தமோ குணங்கள்) கரைத்துவிடும் நிலையுடன் ஐக்கியமாகி, சத்வ குண அகங்காரத்தை அடைகிறான். இதன் பிறகு, முழு அகங்காரமும் மஹத்-தத்வத்தோடு இரண்டறக் கலந்துவிடுவதால், தூய தன்னுணர்வு நிலைக்கு அவன் வருகிறான்.

பதம் 2.2.31
தேனாத்மனாத்மானம் உபைதி சாந்தம்
ஆனந்தம் ஆனந்தமயோ வஸானே
ஏதாம் கதிம் பாகவதீம் கதோ ய:
ஸ வை புனர் நேஹ விஷஜ்ஜதே ‘ங்க

தேன-தூய்மையடைந்த அவனால்; ஆத்மனா—ஆத்மாவினால்; ஆதீமானம்-பரமாத்மா; உபைதி—அடைகிறான்; சாந்தம்- இளைப்பாறு: ஆனந்தம்-திருப்தி: ஆனந்தமய:-இயற்கையாகவே அவ்வாறிருந்து: அவலானே-எல்லா ஜடக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டு; ஏதாம் அத்தகைய; கதிம்-கதியை; பாகவதீம்-பக்தி நிலையை; கத-அடையப்பட்டு. ய- அந்நபர்; ஸ-அவன்; வை – நிச்சயமாக; புன: மீண்டும்; ந-ஒன்றுமில்லை; இஹ-இந்த ஜட உலகின்; விஷஜ்ஜதே- கவரப்படுகின்றது; அங்க-பரீட்சித்து மகாராஜனே.

தூய்மையடைந்த ஆத்மா மட்டுமே அவனுடைய உண்மையான நிலையில், முழுமுதற் கடவுளுடன் பூரண ஆனந்தத்துடனும், திருப்தியுடனும் உறவாடும் பக்குவத்தைப் பெற முடியும். இத்தகைய பக்தியின் பூரணத்துவத்தை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலுள்ள எவரும் இந்த ஜட உலகினால் மீண்டும் கவரப்படுவதுமில்லை, திரும்பி வருவதுமில்லை.

பதம் 2.2.32
ஏதே ஸ்ருதீ தே ந்ருப வேத-கீதே
த்வயாபிப்ருஷ்தே ச ஸனாதனே ச
யே வே புரா ப்ரஹ்மண ஆஹ துஷ்த்
ஆராதிதோ பகவான் வாஸுதேவ:

ஏதே-விவரிக்கப்பட்டவை எல்லாம்; ஸ்ருதீ – முறை; தே- உம்மிடம் ; ந்ருப —பரீட்சித்து மகாராஜனே ; வேத-கீதே-வேதங்களின் கருத்துக்கேற்றவாறு; த்வயா- மாட்சிமை; அபிப்ருஷ்தே – முறையாக விசாரணை செய்ததால்; ச-மேலும் ஸனாதனே-நித்திய உண்மையெனும் விஷயத்தில்; ச-உண்மையாக; யே- எது; வை -சந்தேகமில்லாமல்; புரா-ஏற்கனவே; ப்ரஹ்மணே- பிரம்மதேவரிடம்; ஆஹ-கூறினார்; துஷ்த:- திருப்தியடைந்து ஆராதித:-வழிபாடு செய்யப்பட்டு; பகவான்—முழுமுதற் கடவுள்ள வாஸுதேவ:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

மாட்சிமை தாங்கிய பரீட்சித்து மகாராஜனே, முறையான உமது விசாரணைக்கு பதிலளிக்கும் முகமாக நான் கூறியவை அனைத்தும் வேதங்களின் கருத்துக்கு உடன்பாடானவையே என்பதையும், அவை நித்தியமான உண்மை என்பதையும் அறிவீராக. பிரம்மனால் முறையாக வழிபாடு செய்யப்பட்டதனால் அவரிடம் திருப்தியடைந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே இதை அவருக்கு விவரித்தார்.

பதம் 2.2.33
ந ஹி அதோ ‘ன்ய: சிவ: பந்தா விசத: ஸம்ஸ்ருதாவ் இஹ
வாஸுதேவே பசுவதி பக்தி-யோகோ யதோ பவேத்

ந—ஒரு பொழுதும் இல்லை; ஹி-நிச்சயமாக; அத:-இதற்கப்பால்; அன்ய:-வேறெந்த; சிவ:-அனுகூலமான; பந்தா—உபாயம்; விசத: சஞ்சரிக்கும்; ஸம்ஸ்ருதவ்-ஜட உலகில்; இஹ-இப்பிறவியில்; வாஸுதேவே-பகவான் வாசுதேவனாகிய கிருஷ்ணரிடம்; பகவதி- முழுமுதற் கடவுள்; பக்தி—யோக-நேர் பக்தித் தொண்டு; யத-எதில்; பவேத்-நேரிடக்கூடும்.

ஜட பிரபஞ்சத்தில் சஞ்சரிப்பவர்களுக்கு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான பக்தித் தொண்டை நோக்கமாகக் கொண்டிருக்கும் வழியைத் தவிர முக்தியளிக்கும் அனுகூலமான உபாயம் வேறில்லை.

பதம் 2.2.34
பகவான் ப்ரஹ்ம கார்த்ஸ்ன்யேன த்ரிர் அன்வீசக்ஷ்ய மனீஷயா
தத் அத்யவஸ்யத் கூத-ஸ்தோ ரதிர் ஆத்மன் யதோ பவேத்

பகவான்- மிகச்சிறந்தவரான பிரம்மா; ப்ரஹ்ம-வேதங்கள்; கார்த்ஸ்ன்யேன-சுருக்குவதன் மூலம்;த்ரி:-மும்முறைகள்; அன்வீஷ்ய -ஆழ்ந்த பரிசோதனை செய்தார்; மனீஷயா-மிகக் கவனத்துடன்; தத்- என்று; அத்யவஸ்யத்—அதை ஆராய்ந்து அறிந்தார்; கூத- ஸ்த- மன ஒருமையுடன்; ரதி-கவர்ச்சி; ஆத்மன்-(ஆத்மனி) பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; யத: -எதனால்; பவேத்-அவ்வாறு நிகழக்கூடிய.

மிகச் சிறந்தவரான பிரம்மா, அதிக கவனத்துடனும், ஒருமையுடனும், வேதங்களை மும்முறைகள் பயின்று அவற்றை மன ஆழ்ந்த பரிசோதனை செய்தபின், பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கவர்ச்சி கொள்வதே மதத்தின் மிக உயர்ந்த பக்குவமாகும் என்பதைக் கண்டறிந்தார்.

பதம் 2.2.35
பகவான் ஸர்வ-பூதேஷு லக்ஷித: ஸ்வாத்மனா ஹரி:
த்ருஸ்யைர் புத்தி-ஆதிபிர் த்ரஷ்டா லக்ஷணைர் அனுமாபகை:

பகவான் – முழுமுதற் கடவுள்; ஸர்வ- எல்லா; உயிரினங்களில்; லக்ஷித:- காணப்படுகிறது; ஸ்வ ஆத்மனா- ஆத்மாவுடன்; ஹரி:- பகவான்; த்ருஸ்யை:-தோற்றமளிப்பதன் மூலம்; பூதேஷு புத்தி-ஆதிபி:-புத்தியில்; த்ரஷ்டா காண்பவன்; லக்ஷணை : -வெவ்வேறு அறிகுறிகளால்; அனுமாபகை:-அநுமானத்தால்

முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தனித்தன்மையுள்ள ஆக்மாக்களுடன் ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் இருக்கிறார். நாம் காணும் செயல்களிலும், புத்தியிடமிருந்து உதவி பெறும் செயல்களிலும் இவ்வுண்மையை நம்மால் உணரவும், அநுமானிக்கவும் முடிகிறது.

பதம் 2.2.36
தஸ்மாத் ஸர்வாத்மனா ராஜன் ஹரி: ஸர்வத்ர ஸர்வதா
ச்ரோதவ்ய: கீர்திதவ்யஸ் ச ஸ்மர்தவ்யோ பகவான் ந்ருணாம்

தஸ்மாத்- ஆகவே; ஸர்வ-எல்லா: ஆத்மனா-ஆத்மா ராஜனே; ஹரி:-கடவுள்; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்; ஸர்வத- எப்பொழுதும்; ச்ரோதவ்ய-செவியுறுதல் அவசியம்; கீர்திதவ்ய- வாழ்த்துதல்; ச -மேலும்; ஸ்மர்தவ்ய:-நினைவில் இரு; பகவான்- முழுமுதற் கடவுள்; ந்ருணாம்-மனிதனால்.

ஆகவே ராஜனே, பரமபுருஷரான பற்றி எப்பொழுதும், எல்லா இடங்களிலும் செவியுறுவதும், அவரை முழுமுதற் வாழ்த்துவதும், நினைவில் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானவையாகும்.

பதம் 2.2.37
பிபந்தி யே பகவத ஆத்மன: ஸதாம்
கதாம்ருதம் ஸ்ரவண-பூதேஷு ஸம்ப்ருதம்
புனந்தி தே விஷய-விதூஷிதாசயம்
வ்ரஜந்தி தச்-சரண-ஸரோருஹாந்திகம்

பிபந்தி—அருந்துபவர்; யே- அவர்கள்; பகவத: முழுமுதற்கடவுளின்; ஆத்மன:-மிகப் பிரியமானவரின்; ஸதாம்-பக்தர்களின்; கதா அம்ருதம்-கதைகளின் அமிர்தம்; ஸ்ரவண-பூதேஷு- செவித் துவாரங்களுக்குள்; ஸம்ப்ருதம்-முழுமையாக நிரப்பி; புனந்தி- புனிதப்படுத்துதல்; தே—அவர்களின்; விஷய—ஜட இன்பம்; விதூஷித ஆசயம்—களங்கப்பட்ட வாழ்வின் நோக்கம்; வ்ரஜந்தி-திரும்பிச் செல்கின்றனர்; தத்-பகவானின்; சரண-பாதங்கள்; ஸரோருஹ அந்திகம்—தாமரைக்கு அருகில்.

பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினத அமிர்தம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள், ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி, பரமபதத்தை, அவரது (முழுமுதற் கடவுள்) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர்.


ஸ்ரீமத் பாகவதம் இரண்டாம் காண்டத்தின், “இதயக் கடவுள்” தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் எனும் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare