அத்தியாயம் – 21
கிருஷ்ணரின் குழலிசையைக் கோபியர்கள் போற்றுதல்
பதம் 10.21.1 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: இவ்வாறு விருந்தாவனக் காடு இலையுதிர் காலத்துத் தெளிந்த நீர் உடையதாகவும், தாமரைப் பூக்கள் நிரம்பிய தடாகத்திலிருந்து வீசிய இனிய நறுமணமுடைய காற்றினால் குளிர்ச்சியுடையதாகவும் விளங்கியது. குற்றமற்ற பகவான் தமது பசுக்களுடனும் ஆயர்குல நண்பர்களுடனும் விருந்தாவனக் காட்டிலும் நுழைந்தார்.
பதம் 10.21.2 : விருந்தாவன மலைகளிலும், குளங்களிலும், நதிகளிலும் நறுமணமிக்க மலர்களையுடைய மரங்களை நோக்கி விரைந்த வண்டுகள் மற்றும் பறவைக் கூட்டங்களின் ஒலியானது எதிரொலித்தது. ஆயர்குலச் சிறுவர்களுடனும், பலராமருடனும் மதுபதி (ஸ்ரீ கிருஷ்ணர்) அக்காட்டினுள் நுழைந்தார். பசுக்களை மேய்க்கும் பொழுது அவர் தமது புல்லாங்குழலிலிருந்து இனிய இசையினை ஒலிக்கத் தொடங்கினார்.
பதம் 10.21.3 : விரஜத்திலுள்ள ஆயர்குல இளம் பெண்கள், மன்மதனின் பாதிப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையினைக் கேட்டவுடன் சிலர் தங்களது நெருங்கிய தோழிமார்களிடம் கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றித் தனியே விவரிக்கத் தொடங்கினர்.
பதம் 10.21.4 : ஆயர்குலப் பெண்கள் கிருஷ்ணரைப் பற்றிப் பேசத் தொடங்கினர். ஆனால் அவரது லீலைகளைப் பற்றி நினைத்தவுடன் ஓ, பரீக்ஷித்து மன்னனே, மன்மதனது சக்தியானது அவர்களது மனங்களை அலைக்கழித்தது. அதனால் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
பதம் 10.21.5 : தலையில் அழகிய மயிலிறகு அணி செய்ய, நீல “கர்ணிகர” மலர்கள் அவர் காதுகளை அலங்கரிக்க, பொன்னைப் போல் மின்னும் மஞ்சள் வண்ணப்பட்டுப் பீதாம்பரம் உடுத்தி வைஜந்தி மலர்மாலை அணிந்து பகவான் கிருஷ்ணர் சிறந்த நாட்டியக் கலைஞர்களைப் போன்று தமது உன்னத வடிவத்தினை வெளிப்படுத்தி விருந்தாவனக் காட்டில் நுழைந்து தமது காலடித் தடங்களினால் அதனை அழகு செய்தார். அவர் தமது புல்லாங்குழலின் துவாரங்களைத் தமது அதரங்களின் அமிர்தத்தினால் நிரப்பினார். ஆயர்குலச் சிறுவர்கள் அவரது கீர்த்திகளைப் போற்றிப் பாடினர்.
பதம் 10.21.6 : ஓ, மன்னனே, அனைத்து உயிர்களின் மனங்களையும் கொள்ளை கொள்ளும், கிருஷ்ணரின் குழலோசனையினைக் கேட்டவுடன் விரஜத்தில் இருந்த கன்னிப் பெண்கள் ஒருத்தி மற்றொருத்தியைத் தழுவியபடி அதனைப் பற்றி விவரிக்கத் தொடங்கினர்.
பதம் 10.21.7 : ஆயர்குலப் பெண்கள் கூறினர்; ஓ சகிப் பெண்களே! நந்த மகாராஜாவின் எழில் சிந்தும் திருமுகங்களைக் காணக் கொடுத்து வைத்த கண்கள் நிச்சயம் பாக்கியம் செய்தவையே ஆகும். அவர்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் சூழ பசுக்களை ஒட்டிக் கொண்டு காட்டிற்குள் வரும்பொழுது அவர்கள் தம்மிடமுள்ள புல்லாங்குழல்களைத் தமது இதழ்களில் வைத்து வாசித்தபடி காதல் ஒழுகும் பார்வையினால் விருந்தாவனவாசிகளைப் பார்த்தனர். கண்ணுடையவர்களுக்கு இதனை விடவும் சிறந்த காட்சி வேறொன்றிருப்பதாக நாங்கள் கருதவில்லை.
பதம் 10.21.8 : மனதைக் கவரும் ஆடைகள் அதன்மேல் மலர்மாலைகள் அணிந்து, மயிலிறகு, தாமரை, அல்லி, மாவின் இளந்தளிர் மற்றும் மலர் மொட்டுக்களினால் தம்மை அலங்கரித்துக் கொண்டு கிருஷ்ணரும் பலராமரும் ஆயர்குலச் சிறுவர்களின் மத்தியில் ஒளிவீச நின்றனர். அவர்கள் மேடையில் தோன்றி ஆடிப்பாடும் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல் காணப்பட்டனர்.
பதம் 10.21.9 : தோழிப்பெண்களே, கிருஷ்ணரின் அதரங்களிலிருந்து வழியும் அமிர்தம் நமக்குரியதாகும், ஆனால் நமக்கு அதன் சுவையை மட்டும் வைத்துவிட்டு, அமிர்தம் அனைத்தையும் தான் மட்டுமே உண்பதற்கு அப்புல்லாங்குழல் என்ன தவம் செய்ததோ! புல்லாங்குழலின் முன்னோர்களான மூங்கில் மரங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன. அதன் அன்னையான நதிப் பெண்ணின் கரையில்தான் புல்லாங்குழலுக்கான மூங்கில் பிறந்து, அவள் ஆனந்தம் எய்தினாள், அதன் காரணமாக அவள் உடலில் மலர்ந்த தாமரை மலர்கள் அவள் மயிர்க் கூச்செறிந்தது போல் காணப்பட்டன.
பதம் 10.21.10 : ஓ, சகிப்பெண்ணே! தேவகீ நந்தன் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளின் செல்வம் எய்தப் பெற்றமையினால் விருந்தாவனம் பூமியின் கீர்த்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. கோவிந்தனின் குழலோசை கேட்டு, மயில்கள் மதிமயங்கி ஆடுகின்றன. அவற்றின் நடனத்தை மலை உச்சியில் இருந்து காணும் பிற உயிரினங்கள் எல்லாம் அசையாது அப்படியே நிற்கின்றன.
பதம் 10.21.11 : பகுத்தறிவில்லாத இம்மான்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டனவாகும். ஏனென்றால் அவை ஆடம்பரமாக ஆடை அணிந்து புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்த நந்த மகாராஜாவின் மைந்தன் அருகில் இருந்தன. உண்மையில் பெண்மான்களும் ஆண்மான்களும் காதலும், பாசமும் கொண்ட பார்வைகளினால் பகவானை வழிபட்டன.
பதம் 10.21.12 : கிருஷ்ணரின் அழகும், குணமும் அனைத்துப் பெண்களிடமும் ஓர் உற்சாகத்தை உண்டாக்கின. உண்மையில் தமது கணவர்களுடன் புஷ்பக விமானத்தில் பறந்துசென்ற தேவ மங்கையர் கிருஷ்ணரின் எழில் உருவத்தைக் கண்டும் அவரது குழலின் இனிய இசையினைக் கேட்டும் மன்மதனால் இதயம் கிளர்ச்சியடையப் பெற்றனர். அவர்களது மதிமயங்கியது. கூந்தலிலிருந்த மலர்கள் உதிர்ந்தன. இடையில் அணிந்திருந்த மேகலைகள் நெகிழ்ந்தன.
பதம் 10.21.13 : பசுக்கள் தமது குத்திட்டு நின்ற செவிகளையே பாத்திரங்களாக்கி கிருஷ்ணரின் வாயிலிருந்து வழிந்த புல்லாங்குழல் இசையின் அமிர்தத்தினைப் பருகின. கன்றுகளோ, தமது தாய் மடியில் வாய் வைத்தபடியே பாலை உறிஞ்சாமலும் வாயை எடுக்காமலும் அசைவற்று அப்படியே நின்றன. அவை கண்ணீர் பெருகும் தமது விழிகளின் மூலம் கோவிந்தனை தம்முள் வாங்கி அவரைத் தமது இதயத்தில் வைத்துத் தழுவிக் கொண்டன.
பதம் 10.21.14 : ஓ, அன்னையே, இக்காட்டிலுள்ள எல்லாப் பறவைகளும் கிருஷ்ணரைக் காண்பதற்காக மரங்களின் அழகிய உயர்ந்த கிளைகளின் மீது ஏறிக்கொள்கின்றன. கண்களை மூடியவாறே அவை அவரது குழலின் இனிய இசையினை அமைதியுடன் கேட்டு மகிழ்கின்றன. அவை வேறு எந்தவிதமான ஓசையினாலும் கவரப்படுவதில்லை. நிச்சயமாக இப்பறவைகள் மாமுனிவர்களுக்கு இணையானவையாகும்.
பதம் 10.21.15 : கிருஷ்ணரின் குழலிசையினைக் கேட்ட நதிகளின் மனங்கள் அவரை விரும்பத் தொடங்குகின்றன. பெருக்கெடுத்து ஓடும் அவற்றின் வேகம் தடைப்படுகின்றது. நீர் கொந்தளித்துச் சுழல்கின்றது. பிறகு தமது அலைக்கரங்களினால் முராரியின் தாமரைத் திருவடிகளைப் பற்றித் தழுவிக் கொண்டு தாமரை மலர்களை அர்ப்பணிக்கின்றன.
பதம் 10.21.16 : சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யிலில் கூட பகவான் கிருஷ்ணர், பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் மாடுகளை ஒட்டிக்கொண்டே தொடர்ந்து தமது குழலிலிருந்து இனிய இசையினை எழுப்பிப் கொண்டு சென்றார். இதனைக் கண்ணுற்ற வான் மேகம் அன்பின் காரணமாகத் தன்னை விரித்துக் கொண்டது. அது வானில் உயரே எழுந்து, தனது உடலின் பூப்போன்ற மென்மையான குளிந்த நீர்த்துளிகளால் தனது நண்பனுக்காக ஒரு பெரிய குடையினை உருவாக்கியது.
பதம் 10.21.17 : விருந்தாவனத்தின் பழங்குடிப் பெண்கள், புற்களின்மீது சிவந்த நிறக் குங்குமக் கறையினைக் கண்டு காம இச்சையினால் துன்புற்றனர். கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளின் வண்ணத்தினைப் பெற்ற அக்குங்குமத் துகள் உண்மையில் அவரது நேசத்திற்குரிய பெண்களின் மார்பகங்களில் தொய்யில் எழுதப்பட்டவையாகும். ஆதிவாசிப் பெண்கள் அவற்றைத் தம் முகங்களிலும், மார்பகங்களிலும் பூசியவுடன் தமது துயர் நீங்கப் பெற்றனர்.
பதம் 10.21.18 : பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்! ஓ, தோழிப் பெண்களே, இம்மலை கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் அவர் தம் கன்றுகளுக்கும், பசுக்களுக்கும் மற்றும் ஆயர்குலச் சிறுவர்களுக்கும் தேவையான அனைத்தையும் அளிக்கின்றது. பருகுதற்கு நீர், மென்மையான பசும்புற்கள், குகைகள், கனிகள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பொருள்கள் இவ்வாறு இம்மலை பகவானுக்குத் தனது மரியாதையினை அளிக்கின்றது. கிருஷ்ணர் மற்றும் பலராமரின் திருவடித்தாமரைகளின் ஸபரிசம் பட்டதினால் கோவர்தனகிரி மகிழ்ச்சி மிக்கதாக விளங்குகின்றது.
பதம் 10.21.19 : தோழிப்பெண்களே, கிருஷ்ணரும் பலராமரும் ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு பசுக்களை ஓட்டிச் செல்லும் பொழுது, பால்கறக்கும் போது பசுக்களின் பின்னங்கால்களைப் பிணைத்துக் கட்டும் தாம்புக் கயிறுகளையும் எடுத்துச் செல்லுகின்றனர். கிருஷ்ணர் தமது புல்லாங்குழலை இசைக்கும் பொழுது அதிலிருந்து வரும் சுநாதத்தினால் புளகாங்கிதமடைந்து அசையும் உயிர்கள் அசைவற்று அப்படியே நிற்கின்றன. அசையாத மரங்களோ மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. நிச்சயமாக இச்செயல்கள் அனைத்தும் விந்தை மிகுந்தவையே.
பதம் 10.21.20 : முழுமுதற்கடவுள் விருந்தாவனக் காடுகளில் அலைந்து திரிந்து நடத்திய லீலா வினோதங்களை ஒருத்தி மற்றொருத்தியிடம் இவ்வாறாக விவரித்த பின்னர் கோபியர்கள் அவரது நினைவுகளில் முற்றிலும் ஆழ்ந்தனர்.