அத்தியாயம் – 9
பகவானின் மோஹினி:மூர்த்தி அவதாரம்
பதம் 8.9.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, அசுரர்கள் ஒருவரோடொருவர் விரோதம் கொண்டனர். தங்களுடைய சிநேகத்தைக் கைவிட்டு அமிர்த கலசத்தை எறிவதும் பறிப்பதுமாக இருந்தனர். இதற்கிடையில் அழகியதோர் இளம் மங்கை தங்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டனர்.
பதம் 8.9.2 : அந்த அழகிய பெண்ணைக் கண்டதும் அசுரர்கள் கூறினர். ஐயோ, இவளது அழகு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது, இவளது தேகத்தின் ஒளி எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. இவளது இளம் வயதின் அழகு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!” இவ்வாறு பேசிக் கொண்டு, அவளை அனுபவிக்க வேண்டுமெனும் காம ஆசை நிரம்பியவர்களாய், அவர்கள் வேகமாக அவளை அணுகி, பலவிதமாக அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.
பதம் 8.9.3 : அதியற்புத அழகுடைய மங்கையே, உனக்கு ஒரு தாமரைப் பூவின் இதழ்களையொத்த எவ்வளவு அழகிய கண்கள் உள்ளன! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? நீ இங்கு வந்ததன் நோக்கமென்ன? நீ யாருக்குச் சொந்தமானவள்? அசாதாரணமான அழகு வாய்ந்த தொடைகளை உன்னைக் காண்பதாலேயே எங்களது மனங்கள் சஞ்சலம் அடைகின்றன.
பதம் 8.9.4 : மனிதர்களைப் பற்றி என்னவென்று சொல்வது, தேவர்கள், அசுரர்கள், சித்தர்கள், கந்தவர்கள், சாரணர்கள் மற்றும் பிரபஞ்சத்தின் அநேக நிர்வாகஸ்தர்களாகிய பிரஜாபதிகளும்கூட, இதற்குமுன் உன்னை ஒருபோதும் தொட்டதில்லை. உன்னைப் பற்றி நாங்கள் எதுவும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல.
பதம் 8.9.5 : அழகிய புருவங்களைக் கொண்ட அழகு மங்கையே, எங்களுடைய புலன்களையும், மனங்களையும் திருப்திபடுத்துவதற்காகவே, நிச்சயமாக பகவான் அவரது அகாரணமான கருணையால் உன்னை இங்கு அனுப்பியுள்ளார். இதுதான் உண்மை, அல்லவா?
பதம் 8.9.6 : அமிர்த கலசமெனும் இந்த ஒரு விஷயத்தினால், நாங்களனைவரும் இப்போது எங்களுக்கிடையில் விரோதம் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும் எங்களுடைய விரோதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மெல்லிய இடையைக் கொண்ட மங்கையே நீ போற்றத்தக்க பெரும் அழகு வாய்ந்தவளாக இருக்கிறாய். ஆகவே எங்களுடைய வாக்குவாதத்தைத் தீர்த்து எங்களுக்கு உதவ வேண்டுகிறோம்.
பதம் 8.9.7 : அசுரர்களும், தேவர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒரே தந்தையாகிய கஸ்யபருக்குக் பிறந்தவர்களாவோம். இவ்வாறாக நாங்கள் சகோதரர்கள் எனும் உறவு கொண்டுள்ளோம். ஆனால் இப்போது ஒரு சச்சரவில் எங்களுடைய சொந்த திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே எங்களது சச்சரவைத் தீர்த்து, அமிர்தத்தை எங்களுகிடையில் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்.
பதம் 8.9.8 : இவ்வாறு அசுரர்களால் வேண்டிக்கொள்ளப்பட்டதும், ஓரழகிய பெண்ணுருவை ஏற்ற பரமபுருஷ பகவான், புன்னகை செய்யத் துவங்கினார். கவர்ச்சியான பெண்மைக்குரிய அபிநயங்களுடன் அவர்களைப் பார்த்தவாறு, அவர் பின்வருமாறு பேசினார்.
பதம் 8.9.9 : மோஹினி வடிவத்திலிருந்த பரமபுருஷ பகவான் அசுரர்களிடம் கூறினார்: கஸ்யப முனிவரின் மைந்தர்களே, சாதாரண ஒரு விலைமாது நான். என்னிடம் உங்களுக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது? அறிவுள்ளவன் ஒருபோதும் ஒரு பெண்ணிடம் நம்பிக்கை வைக்கமாட்டான்.
பதம் 8.9.10 : அசுரர்களே, குரங்குகள், குள்ள நரிகள் மற்றும் நாய்கள் ஆகியவை தங்களின் பாலுறவில் ஒழுக்கமின்றி, ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்களைத் தேடுவதைப் போலவே, சுதந்திரமாக வாழும் பெண்களும் தினமும் புதுப்புது நண்பர்களைத் தேடுகின்றனர். இத்தகைய ஒரு பெண்ணுடனான சிநேகம் ஒருபோதும் நிரந்தரமானதல்ல. இதுவே கற்றறிந்த பண்டிதர்களின் கருத்தாகும்.
பதம் 8.9.11 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: கேலி செய்வதைப் போல் பேசிய மோஹினி-மூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்ட அசுரர்கள் அவளிடம் பெரும் நம்பிக்கை கொண்டனர். அவர்கள் வெற்றியுடன் நகைத்து, இறுதியில் அமிர்த கலசத்தை அவளது கைகளில் ஒப்படைத்தனர்.
பதம் 8.9.12 : அதன்பிறகு, அமிர்த கலசத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பரமபுருஷ பகவான், புன்முறுவல் செய்து, கவர்ச்சியான வார்த்தைகளால் பின்வருமாறு கூறினார்: என்னருமை அசுரர்களே, நான் எதைச் செய்தாலும், அது நேர்மையாகவோ அல்லது நேர்மையற்றதாகவோ இருப்பினும், அதை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அமிர்தத்தை உங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.
பதம் 8.9.13 : அசுரத் தலைவர்கள் முடிவெடுப்பதில் அவ்வளவு திறமைசாலிகளாக இருக்கவில்லை. மோஹினி-மூர்த்தியின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டதும், உடனே அவர்கள் சம்மதித்தனர். “ஆம், நீ கூறியது சரிதான்” என்று பதில் கூறி அவளது முடிவை ஏற்க அசுரர்கள் சம்மதித்தனர்.
பதங்கள் 8.9.14 – 8.9.15 : தேவர்களும், அசுரர்களும் பிறகு உபவாசம் மேற்கொண்டனர். குளித்தபின், அவர்கள் யாகத்தீயில் நெய் வார்த்து நிவேதனங்களை அர்ப்பணம் செய்தனர். பிறகு பசுக்கள், பிராமணர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற பிரிவினர்களாகிய க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோருக்கு தான தருமங்களைச் செய்தனர். அவரவர் தகுதிகளுக்கேற்ப அனைவருக்கும் வெகுமானம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, பிராமணர்களின் தலைமையின் கீழ் தேவர்களும், அசுரர்களும் மதச் சடங்குகளை நிறைவேற்றினர். பிறகு அவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப, புத்தாடைகளாலும், ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். பிறகு நாணல் புற்களாலான ஆசனங்களின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்தனர்.
பதங்கள் 8.9.16 – 8.9.17 : ராஜனே, தேவர்களும், அசுரர்களும், மலர் மாலைகளால், முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு, தீபங்களும், தூபப் புகைகளின் நறுமணமும் சூழ்ந்த ஓர் அரங்கத்தில் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்திருந்தனர். அச்சமயத்தில், மிகவும் அழகியதொரு சேலையை உடுத்திக் கொண்டு, கால் கொலுசுகள் சலங்கையொலி எழுப்ப, அப்பெண், அவளுடைய பெரிய தாழ்வான இடுப்புகளின் காரணத்தால் மிகவும் மெதுவாக நடந்தவாறு அரங்கத்தினுள் பிரவேசித்தாள். இளமை வேகத்தின் காரணத்தால் அவளது கண்கள் அமைதியற்றிருந்தன. அவளது மார்பகங்கள் நீர் ஜாடிகளைப் போல் காட்சியளித்தன. அவளது தொடைகள் யானைகளின் தும்பிக்கைகளை ஒத்திருந்தன. மேலும் நீர்க்குடம் ஒன்றை அவள் தனது கரத்தில் ஏந்தியிருந்தாள்.
பதம் 8.9.18 : அவளது கவர்ச்சியான மூக்கும், கன்னங்களும், தங்கத் தோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது செவிகளும், அவளது முகத்திற்கு அழகூட்டின. அவள் அசைந்து வரும்போது அவளுடைய மார்பகங்களின் மேலிருந்த சேலையின் கரை இலேசாக விலகியது. தங்களைப் பார்த்து இலேசாகப் புன்னகை செய்த மோஹினி-மூர்த்தியின் அழகிய இந்த அம்சங்களைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் அவற்றால் முற்றிலும் வசீகரிக்கப்பட்டனர்.
பதம் 8.9.19 : அசுரர்கள் இயற்கையாகவே பாம்புகளைப்போல் யோக்கியம் இல்லாதவர்கள். ஆகவே, அமிர்தத்தில் ஒரு பாகத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்பது நடைமுறைக்குச் சிறிதும் ஏற்றதல்ல. ஏனெனில் இது ஒரு பாம்புக்கு பாலை வார்ப்பது போல் ஆபத்தானதாகும். இதைக் கருத்திற்கொண்டு ஒருபோதும் வீழ்ச்சி அடையாதவரான பரமபுருஷர், அமிர்தத்தின் ஒரு பாகத்தை அசுரர்களிடம் ஒப்படைக்கவில்லை.
பதம் 8.9.20 : மோஹினி-மூர்த்தியாகத் தோன்றியவரும் பிரபஞ்சத்தின் எஜமானருமாகிய முழுமுதற் கடவுள், ஆசனங்களை வெவ்வேறு வரிசைகளில் அடுக்கி வைத்து, தேவர்களையும், அசுரர்களையும் அவரவர் அந்தஸ்துக்கு ஏற்றவாறு அமரச் செய்தார்.
பதம் 8.9.21 : அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் எடுத்துக் கொண்டு, முதலில் அவள் அசுரர்களை அணுகி, இனிய வார்த்தைகளால் அவர்களை திருப்திப்படுத்தினாள். இவ்வாறாக அவர்களுக்குச் சேர வேண்டிய அமிர்தத்தின் பாகத்தை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை ஏமாற்றினாள். பிறகு தூரமான ஓரிடத்தில் அமர்ந்திருந்த தேவர்களை பலவீனம், முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து விடுவிப்பதற்காக, அமிர்தத்தை அவள் தேவர்களுக்குக் கொடுத்தாள்.
பதம் 8.9.22 : ராஜனே, அப்பெண் எதைச் செய்தாலும், அது நியாயமானதோ அல்லது நியாயமற்றதோ, அதை ஏற்றுக் கொள்வதாக அசுரர்கள் வாக்குறுதி செய்திருந்ததால், இப்போது அவ்வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவும், தங்களுடைய சமநிலையை காட்டிக் கொள்வதற்காகவும் மேலும் ஒரு பெண்ணுடன் சண்டை செய்வதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டனர்.
பதம் 8.9.23 : அசுரர்கள் மோஹினி-மூர்த்தியின் மீது பற்றையும், ஒரு வகையான நம்பிக்கையும் பெருக்கிக் கொண்டனர். மேலும் அத்தகைய உறவுமுறையை கெடுத்துக்கொள்ள அவர்கள் அஞ்சினர். ஆகவே அவளது வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து, அவளிடம் தங்களுக்கிருந்த சினேகத்தை குலைத்துவிடக்கூடிய எதையுமே கூறாமல் மௌனமாக இருந்து விட்டனர்.
பதம் 8.9.24 : சூரிய, சந்திர கிரகணங்களை விளைவிப்பவனாகிய ராகு எனும் அசுரன், ஒரு தேவரின் உடையால் தன்னை மறைத்துக் கொண்டு, தேவர்களின் கூட்டத்தினுள் நுழைந்து, அமிர்தத்தைக் குடித்து விட்டான். ஒருவரும் இதை கவனிக்கவில்லை. பகவானும் கூட இதை கவனிக்கவில்லை. ஆனால் ராகுவிடம் தங்களுக்கிருந்த நிரந்தர விரோதத்தின் காரணத்தால், சந்திரனும் சூரியனும் நிலைமையைப் புரிந்துகொண்டனர். இவ்வாறாக, ராகு கண்டுபிடிக்கப்பட்டான்.
பதம் 8.9.25 : பரமபுருஷரான, ஹரி சவரக் கத்தியைப் போலிருந்த தமது கூரிய சக்கரத்தை உபயோகித்து, ராகுவின் தலையை உடனே துண்டித்து விட்டார். இராகுவின் சிரம் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டதும், அவனது உடல் அமிர்த்ததால் தொடப்படாததால் அதனால் ஜீவித்திருக்க முடியவில்லை.
பதம் 8.9.26 : ஆயினும், இராகுவின் தலை அமிர்தத்தால் தொடப்பட்டதால் அது அழிவற்றதானது. இவ்வாறாக பிரம்ம தேவர் இராகுவின் தலையைக் கிரகங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டார். ராகு சந்திர, சூரியர்களுக்கு நித்தியமான விரோதி என்பதால், அவன் எப்பொழுதும் பெளர்ணமி மற்றும் அமாவாசை இரவுகளில் அவர்களைத் தாக்க முயல்கிறான்.
பதம் 8.9.27 : பரம்புருஷ பகவானே மூவுலகங்களுக்கும் நண்பரும், அவற்றைப் பராமரிப்பவருமாவார். இவ்வாறாக தேவர்கள் அமிர்தத்தைப் பருகி முடிக்கப் போகும் வேளையில், பகவான் அசுரர்களின் முன்னிலையில், தமது சுய ரூபத்தை வெளிப்படுத்தினார்.
பதம் 8.9.28 : இடம், காலம், காரணம், நோக்கம், செயல் மற்றும் குறிக்கோள் ஆகியவை தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தேவர்கள் பெற்ற பலன் ஒன்று, அசுரர்கள் பெற்ற பலன் வேறு, தேவர்கள் எப்பொழுதும் பகவானுடைய தாமரைப் பாதங்களின் தூசுகளிடம் சரணாகதி அடைந்திருப்பதால், அவர்களால் சுலபமாக அமிர்தத்தைப் பருகி அதன் பலனை அடைய முடிந்தது. ஆனால் பகவானுடைய தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்ளாத அசுரர்களால், தாங்கள் விரும்பிய பலனை அடைய முடியவில்லை.
பதம் 8.9.29 : மனித சமூகத்தில் ஒருவரின் செல்வத்தையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன. இச்செயல்கள் ஒருவரின் வார்த்தைகளாலும், மனதாலும், கருமங்களாலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் ஒருவரின் சொந்த அல்லது விரிவடைந்த புலன் நுகர்வை நோக்கமாகக் கொண்டவையும், சரீரத்தை அடிப்படையாகக் கொண்டவையும் ஆகும். இச்செயல்கள் அவருக்குத் தோல்வியை உண்டாக்குகின்றன. ஆனால் அதே செயல்கள் பகவானின் திருப்திக்காக செய்யப்படும் போது, நன்மையளிக்கும் பலன்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது, ஒரு மரத்தின் வேருக்கு ஊற்றப்படும் நீர், மரத்தின் எல்லாப் பாகங்களுக்கும் விநியோகிக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.