அத்தியாயம் – 19
அசுரனாகிய ஹிரண்யாட்சனைக் கொல்லுதல்
பதம் 3.19.1
மைத்ரேய உவாச
அவதார்ய விரிஞ்சஸ்ய நிர்வ்யலீகாம்ருதம் வச:
ப்ரஹஸ்ய ப்ரேம-கர்பேண ததபாங்கேன ஸோக்ரஹீத்
மைத்ரேய உவாச – மைத்ரேயர் கூறினார்; அவதார்ய-கேட்ட பிறகு; விரிஞ்சஸ்ய- பிரபு பிரம்மாவின்; நிர்வ்யலீக-பாவமான காரணங்களிலிருந்து விடுபட்டு; அம்ருதம்- அமிழ்தம்; வச -வார்த் தைகள்; ப்ரஹஸ்ய-மனமாறச் சிரித்து; ப்ரேம கர்பேண—அதிகமான அன்புடன்; தத் -அந்தச் சொற்கள்; அபாங்கேந-பார்வையுடன்; ஸ -பரமபுருஷ பகவான்; அக்ரஹீத்—ஒப்புக் கொண்டார்.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: படைப்புக் கடவுளாகிய பிரம்மாவின், பாவ காரணத்திலிருந்து விடுபட்ட, அமிழ்தம் போன்ற இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பகவான் மனமாறச் சிரித்து, அன்பு நிறைந்த பார்வையுடன் அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.
பதம் 3.19.2
தத: ஸபத்நம் முகதஸ்சரந்தமகுதோ-பயம்
ஜகாநோத்பத்ய சுதயா ஹநாவஸூரமக்ஷஜ:
தத- பிறகு; ஸபத்தம்- எதிரி; முகத—அவரின் முன்னால்; சாந்தம்.- வீறாப்பு நடை; அகுதோபயம்-பயமின்றி; ஜகாந-அடித்து; உத்பத்ய பாய்ந்த பிறகு; கதயா-கதையுடன்; ஹநா-முகவாய்க்கட்டையில்; அஸூரம் – தீயவன்; அக்ஷஜ:-பிரம்மாவின் மூக்குத் துளையிலிருந்து பிறந்த பகவான்.
பிரம்மாவின் மூக்குத் துளையிலிருந்து பிறந்த பகவான், அவரின் முன்னால் பயமின்றி, வீறாப்பு நடை நடந்த அசுரனாகிய ஹிரண்யாட்சனின் முகவாய்க் கட்டையை நோக்கித் தன் கதாயுதத்தால் குறிவைத்தார்.
பதம் 3.19.3
ஸா ஹதா தேன கதயா விஹதா பகவத் -கராத்
விகூர்ணிதாபதத் ரேஜே தத் அத்புதம் இவாபவத்
ஸா—அந்தக் கதை; ஹதா-அடித்து; தேன- ஹிரண்யாட்சனால்; கதயா—அவன் கதையுடன்; விஹதா-நழுவி: பகவத் – பரமபுருஷ பகவானின்; கராத்-கையிலிருந்து; விகூர்ணிதா—சுழன்று; அபதத்— கீழே விழுந்தது; ரேஜே -ஒளிவீசியது; தத் -அந்த; அத்புதம் – அற்புதம்; இவ உண்மையில்; அபவத்—இருந்தது.
அசுரனின் கதையால் தாக்கப்பட்டு, எப்படியோ பகவானின் கையிலிருந்து கதை நழுவிக் கீழே விழுந்தது. சுழன்று கொண்டே அது கீழே விழும்போது மிகவும் ஒளி விட்டுத் திகழ்ந்தது. கதாயுதம் ஒளிவிட்டுப் பிரகாசித்த காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.
பதம் 3.19.4
ஸ ததா லப்த தீர்தோ பி நபபாதே- நிராயுதம்
மானயன் ஸ ம்ருதே தர்மம் விஷ்வக்ஸேனம் ப்ரகோபயன்
ஸ-அந்த – ஹிரண்யாக்ஷன்; ததா-பிறகு; லப்த தீர்த-மிகச் சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றதும்; அபி-ஆனாலும்; ந-இல்லை; பபாதே தாக்கி; நிராயுதம்- ஆயுதமின்றி; மானயன்—மதித்து; ஸ -ஹிரண்யாட்சன்; ம்ருதே-போர்க்களத்தில்; தர்மம்-போரின் தர்மத்தை; விஷ்வக்ஸேனம்—பரமபுருஷ பகவான்; ப்ரகோ பயன்—சினமூட்டி.
ஆயுதமின்றி இருந்த தன் எதிரியை, எந்தத் தடங்கலும் இல்லாமல் அடிக்க அசுரனுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருந்த போதிலும், அவன் போரின் விதியை மதித்தான். அதன் மூலம் பகவானின் கோபத்தைக் கிளறினான்.
பதம் 3.19.5
கதாயாம் அபவித்தாயாம் ஹாஹா-காரே விநிர்கதே
மானயாமாஸ தத் -தர்மம் ஸூநாபம் சாஸ்மரத் விபு:
கதயாம்- அவருடைய கதையானது; அபவித்தாயாம் – விழுந்தது; ஹாஹா காரே- அபாய அறிவிப்பொலி; விநிர்கதே – எழுந்தது; மானயாம் ஆன—ஒப்புக் கொண்டார்; தத்-ஹிரண்யாக்ஷனின்; தர்மம்— நேர்மை; ஸதாபம்- ஸூதர்ஸந சக்கரம்; ச-மற்றும்; அஸ்மரத்- நினைவுபடுத்திக் கொண்டார்; விபு:-பரமபுருஷ பகவான்.
பகவானின் கதை கீழே பூமியில் விழுந்த போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடமிருந்து அபாய் அறிவிப்பொலி எழுந்தது. அசுரனின் அன்புடனான நேர்மையை முழுமுதற் கடவுள் ஒப்புக் கொண்டார். அதனால் அவருடைய சுதர்சன் சக்கரத்தை வணங்கி வரவழைத்தார்.
பதம் 3.19.6
தம் வ்யக்ர-சக்ரம் திதி-புத்ராதமேந
ஸ்வ-பார்ஷத -முக்யேந விஷஜ்ஜமானம்
சித்ரா வாசோ தத்-விதாம் கே-சரணாம்
தத்ர ஸ்மாஸன் ஸ்வஸ்தி தேமும் ஜஹிதி
தம் – பரமபுருஷ பகவானின் இடமாக; வ்யக்ர-சுழன்று; சக்கரம்—அவருடைய சக்கரம்; திதிபுத்ர-திதியின் மகன்; அதமேந- இழிந்த; ஸ்வ பார்ஷத-துணைவர்களின்; முக்யேந-தலைவனுடன்; விஷஜ்ஜமாநம்-விளையாடி; சித்ரா-பலவித; வாச-உணர்வு வெளிப்பாடு; அதத்விதாம்-தெரியாதவர்களுக்கு; கே சராணாம்-வானில் பறந்து கொண்டு; தத்ர-அங்கு; ஸ்ம ஆஸன்—நிகழ்ந்தது; ஸ்வஸ்தி— அதிர்ஷ்டம்; தே-உன்னிடம்; அமும்—அவனை; ஜஹி-தயவு செய்து கொல்லுங்கள்; இதி-இவ்வாறு.
பகவானின் கைகளில் அந்தச் சக்கரம் சுழல ஆரம்பித்த பொழுது, பகவானுக்கு எல்லாத் திசைகளிலும் மனநிறைவு தரும்படியான அவரின் வைகுண்டத் தொண்டர்களின் தலைவன், ஹிரண்யாட்சனாகப் பிறந்தவன். திதியின் இழிந்த மகனுடன் அவர் நெருங்கிப் போரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்தும், விநோதமான உணர்ச்சிகள் வானூர்தியிலிருந்து பார்த்தவர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு பகவானின் மெய்மையைப் பற்றி எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை. “உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்; அவனை விரைவாக ஒழித்து விடும்படி வேண்டுகிறோம். அவனுடன் மேலும் விளையாட வேண்டாம்” என்று கூறினார்கள்.
பதம் 3.19.7
ஸ தம் நிஸாம்யாத்த -ரதாங்கம் அக்ரதோ
வ்யவஸ்திதம் பத்ம-பலாஸ-லோசனம்
விலோக்ய சாமர்வு -பரிப்லுதேந்த்ரியோ
ருஷா ஸ்வ-தந்தச்-சதம் ஆதஸக்ச்வஸன்
ஸ-அந்த அசுரன்; தம்-பரமபுருஷ பகவான்; நிஸாம்ய- பார்த்தபிறகு: ஆத்தரதாங்கம்–சுதர்சனம் சக்ராயுதத்துடன்; அக்ரதி— அவனுக்கு முன்னால்; வ்யவஸ்திதம்—நிலையில் நின்று கொண்டு; பத்ம-தாமரை மலர்; பலாஸ் – இதழ்கள்; லோசனம் – கண்கள்; விலோக்ய-பார்த்த பின்னர்; ச- மற்றும்; அமர்ஷ- கடுஞ்சினத்தால்; பரிப்லுத-அடக்க முடியாதனவாகி; இந்த்ரிய-அவன் புலன்கள், ருஷா- மிகுந்த வன்மத்துடன்; ஸ்வ தந்த சதம்—அவனுடைய உதட்டை; ஆதஸத்-கடித்து; ஸ்வஸன்-சீறிக்கொண்டு.
தாமரை இதழ்கள் போன்ற கண்களையும், சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகவும் கொண்டு, பரமபுருஷ பகவான் தனக்கு முன்னால் நிலையாக நின்று கொண்டிருப்பதைக் கண்டபொழுது, அசுரனுடைய புலன்கள் கடுஞ்சினத்தால் பொங்கின. அவன் மிகுந்த சீற்றத்துடன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு, பாம்பு போல் பிறத் தொடங்கினான்.
பதம் 3.19.8
கரால தம்ஷ்ட்ரஸ் க்ஷக்ஷ ர்ப்யாம் சஞ்சக்ஷாணோ தஹந்நிவ
அபிப்லுத்ய- ஸ்வகதயா ஹதோ ஸீத்யாஹநத் தரிம்
கராலபயம் – தரத்தக்க; தம்ஷ்ட்ரா-கொம்புகளைக் கொண்டு; சர்ப்யாம்-இரு கண்களுடனும்; சஞ்சக்ஷாண-உற்றுப் பார்த்து; தஹந் – எரித்து: இவ-போல; அபிப்லுத்ய- தாக்கி; ஸ்வகதயா- அவன் கதையுடன்; ஹதா-அழிந்தாய்; அஸி- நீ; இதி-இவ்வாறு; ஆஹநத்-அடித்து ; ஹரிம் ஹரியிடம்.
அச்சந்தரத்தக்க கொம்புகளை உடைய அசுரன், பரமபுருஷ பகவானை கண்களால் எரித்துவிடுவது போல் உற்றுப் பார்த்தான். வானில் பாய்ந்து, தன் கதையைப் பகவானுக்குக் குறிவைத்து, அதே சமயத்தில் “நீ அழிந்தாய்” என்று கூக்குரலிட்டான்.
பதம் 3.19.9
பதா ஸ்வயேண தாம் ஸாதோ பகவான் யக்ஞ- சுகர:
லீலயா மிஷத: ஸத்ரோ: ப்ராஹரத் வாத -ரம்ஹஸம்
பதா—அவருடைய திருவடியுடன்; ஸவ்யேன-இடது; தாம்- அந்தக் கதை; ஸாதோ—ஓ விதுரனே; பகவான்-பரமபுருஷ பகவான்; யக்ஞ ஸூகர—அவருடைய காட்டுப் பன்றி வடிவத்தில், எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவர்; லீலயா-விளையாட்டாக; மிஷத— பார்த்துக் கொண்டு; சத்ரோ-எதிரியின் (ஹிரண்யாக்ஷன்); ப்ராஹாத்- கீழே தள்ளி; வாத ரம்ஹஸம்-சூறாவளியின் வேகம் கொண்டு.
ஓ. புனித விதுரனே, எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லா வேள்வியின் அவிர்ப்பாகத்தைப் பெறுபவரும், காட்டுப் பன்றி யின் வடிவிலிருந்தவருமாகிய பகவான், விளையாட்டாக, தன் இடது திருவடியால் அந்தக் கதையைக் கீழே தள்ள, அது சூறாவளியின் வேகத்துடன் அவனை நோக்கி வந்தது.
பதம் 3.19.10
ஆஹ தாயுமாதத்ஸ்வ கடஸ்வ த்வம் ஜிகீஷஸி
இத்யுத்த: ஸ ததா பூயஸ்தாடயன் வ்யநதத் ப்ருசம்:
ஆஹ – அவர் கூறினார்; ச – மற்றும்; ஆயுதம்- படைக்கலன்; ஆதத்ஸ்வ – எடுத்துக் கொள்; கடஸ்வ – முயற்சி செய்; த்வம் – நீ; ஜிகீஷஸி – வெற்றி கொள்ளும் ஆர்வம்; இதி-இவ்வாறு; உக்த – அறை சுவப்பட்டு; ஸ – ஹிரண்யாட்சன்; ததா – அந்த நேரத்தில்; பூய- மீண்டும்; தாடயன் -அடிக்க; வ்யநதத் – கர்ஜித்து; ப்ருசம் -சப்தமாக.
பகவான் பின்னர் கூறினார்: “என்னை வெற்றி கொள்ள நீ ஆர்வத்துடன் இருப்பதால், உன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் முயற்சி செய்”. இந்தச் சொற்களால் அறைகூவல் விடப்பட்ட அசுரன் தன் கதையை பகவானுக்குக் குறிபார்த்து எய்யும் போது மீண்டும் ஒருமுறை பலமாகக் கர்ஜித்தான்.
பதம் 3.19.11
தாம் ஸ ஆபத்தீம் வீக்ஷ்ய பகவான் ஸமவஸ்தித:
ஜக்ராஹ் ஜீலயாப்ராப்தம் கருதிமால் இவ பந்நகீம்
தாம்–அந்த கதை; ஸ-அவன்; ஆபததீம் – நோக்கிப் பறந்து; வீஷ்ய-பார்த்த பின்னர்; பகவான் -பரமபுருஷ பகவான்; ஸமவஸ் நித-உறுதியாக நின்று; ஐக்ராஹ-பிடித்து; லீலயா-எளிதாக; ப்ராப்தம்-அவர் முன்பாக நுழைந்து; கருத்மான்-கருடன்; இவ- போல; பந்நகீம்- பாம்பு.
கதை தன்னை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டதும், தான் நின்ற இடத்திலேயே பகவான் உறுதியாக நின்று, பறவைகளின் அரசனான கருடன், பாம்பைப் பிடிப்பது போல, அந்தக் கதையை எளிதாகப் பிடித்தார்.
பதம் 3.19.12
ஸ்வ பௌருஷே ப்ரதிஹதே ஹதமாநோ மஹாஸூர:
நைசத்கதாம் தீயமானாம் ஹரிணா விகத- ப்ரப:
ஸ்வ பௌருஷே—அவனுடைய வீரம்; ப்ரநிஹதே-குலைந்து; ஹத-அழிந்து; மான-செருக்கு; மஹாஸூர—பெரிய தீயவன்; நஜசத்— விருப்பமின்றி (எடுக்க); கதாம் கதையை; தீயமானாம்—கொடுக்கப் பட்ட போது; ஹரிணா – ஹரியால்; விகத ப்ரப-ஒளி குறைந்து.
அவன் வீரம் இவ்வாறு அழிந்து, அசுரனின் செருக்கு குலைந்து, அவன் முகம் வெளிறினான். பரமபுருஷ கவான் கதையைக் கொடுத்த பொழுது, அவன் அதனைத் திருப்பி எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
பதம் 3.19.13
ஜக்ராஹ த்ரி-ஸிகம் சூலம் ஜ்வலஜ்- ஜ்வலன-லோலுபம்
யக்ஞாய த்ருத-ரூபாய விப்ராயாபிசரம் யதா
ஜக்ராஹ-எடுத்துக் கொண்டு; த்ரிஸிகம்— மூன்று முளையுள்ள; சூலம்-சூலாயுதம்; ஜ்வலத்-கொழுந்து விட்டெரியும்; ஜ்வலன- நெருப்பு; லோலுபம்—உயிர் வேட்டையாடும்; யக்ஞாய-எல்லா வேள்விகளையும்அனுபவிப்பவரிடம்;த்ருதரூபாய—வராக வடிவத்தில்; விப்ராய-பிராமணனிடம்; அபிசரன்—தீங்கு செய்வதில் ஆர்வமுடைய; யதா—போல.
அவன் இப்போது நெருப்பு போல் ஒளிவிட்டுத் திகழும் ஒரு குலாயுதத்தை எடுத்துக் கொண்டு, எல்லா வேள்விகளையும் அனுபவிப் பவராகிய பகவானுக்கு எதிராகச் சுழற்றி எறிந்தான். அது எப்படி இருந்ததென்றால், தவத்தையும் தீய நோக்கோடு ஒரு பிராமணனுக்கு எதிராக உபயோகிப்பவனின் செயலைப் போன்றிருந்தது.
பதம் 3.19.14
ததோஜஸா தைத்ய- மஹா-படார்பிதம்
சகாஸதந்த: க உதீர்ண-தீதிதி:
சக்ரேண சிச்சேத நிசாத-னேமினா
ஆ ஹரிர்யதா தார்க்ஷ்ய-பதத்ரம் உஜ்ஹிதம்
தத்- அந்தச் சூலாயுதம்; ஒஜஸா—அவனுடைய முழு பலத்துடன்; தைத்ய—அசுரர்களில்; மஹாபட-வல்லமை பொருந்திய போரிடு பவரால்; அர்பிதம்-சுழன்று; சகாஸத்—ஒளிவீசி; அந்த கே-வானின் தடுவில்; உதீர்ண—அதிகரித்து: தீதிதி-ஒளிவிட்டு; சக்ரேண- சுதர்சன சக்கரத்தால்; சிச்சேத-துண்டுகளாக வெட்டி; திசாத- கூர் தீட்டி; நேமிதா-விளிம்பு; ஹரி-இந்திரன்: யதர-போல; தார்க்ஷ்ய-கருடனின்; ததத்ரம் இறகு; உஜ்ஹிதம் கைவிடப்பட்டது (வெட்டப்பட்டது).
வலிமை மிக்க அகரனால், பலத்துடன் சுழற்றி விடப்பட்ட சூலாயுதம், பறந்த வானின் ஒளி வீசித் திகழ்ந்தது. ஆயினும், ஒரு சமயம் இந்திரன் கருடனின் இறகை வெட்டியது போல, கூர்மையான முனையுடைய விளிம்பைக் கொண்ட தன்னுடைய சுதர்ஸன சக்கரத்தால் பகவான் அந்தச் சூலாயுதத்தைத் துண்டுகளாக ஆக்கினார்.
பதம் 3.19.15
வ்ருக்ணே -ஸ்வசூலே பஹூதாரிணா ஹரே:
ப்ரத்தேத்ய விஸ்தீர்ணமுரோ விபூதிமத்
ப்ரவ்ருத்த -ரோஷ: ஸ கடோர-முஷ்டினா
நதன் ப்ரஹ்ருத்யாந்தர தீயதாஸூர:
ஸ்ருக்ணே -வெட்டப்படும் பொழுது; ஸ்வருலே-அவன் சூலா யுதம்; பஹூதா- பல துண்டுகளாக; அரிணா—ஸூதர்ஸன சக்கரத்தால்; ஹரே-பரமபுருஷ பகவான்; ப்ரத்யேதிய-நோக்கி முன்னேறிய பின்னர்: விஸ்தீர்ணம்-அகன்ற; உர-மார்பு: விபூதிமத் – அதிர்ஷ்ட தேவதையின் இருப்பிடம்; ப்ரவ்ருந்த—அதிகரித்துக் கொண்டு; ரோஷ – கோபம்; ஸ- ஹிரண்யாக்ஷன்; கடோர—கடினமான; முஷ்டினா- கை முட்டியுடன்; நதன் -கர்ஜித்து; ப்ரஹ்ருத்ய-அடித்த பின்னர்; அந்தரதீயத-மறைந்தது: அஸூர- தீயோன்.
பகவானின் சக்கரத்தால் தன்னுடைய சூலாயுதம் பொடியாகிப் போனதைக் கண்டு, அசுரன் சீற்றமடைந்தான். அதனால், அவன், பகவானை நோக்கி முன்னேறி, சத்தமாக கர்ஜித்துக் கொண்டு, ஸ்ரீவத்ஸம் என்ற மச்சத்தைத் தாங்கிய பகவானின் அகன்ற மார்பில் தன் கடினமான கை முஷ்டியால் அடித்தான். பின்னர் அவன் பார்வையிலிருந்து மறைந்தான்.
பதம் 3.19.16
தேனேத்தமாஹத: க்ஷத்தர்பகவானாதி-சூகர
நாகம்பத மநாக் க்வாபி ஸ்ரஜா ஹத இவ த்விப:
தேன-ஹிரண்யாக்ஷனால்; இத்தம்-இவ்வாறு; ஆஹத- அடித்து; கூத்த—ஓ விதுரனே; பகவான்- பரமபுருஷ பகவான்; ஆகிசூகர- முதல் காட்டுப் பன்றி; நாகம்பத – அதிர்வை உணரவில்லை; மநாக்-சிறிது கூட; க்வஅபி—எங்கும்; ஸ்ரஜா-மலர்களால் ஆன மாலையால்; ஹத -அடித்து; இவ—போல; த்விப-யானை.
ஓ விதுரனே, முதல் காட்டுப் பன்றியாகத் தோன்றிய பகவான், அசுரனால் இந்த முறையில் அடிக்கப்பட்டும். யானை பூ மாலைகளால் தாக்கப்பட்டதைப் போல, தன் உடம்பில் எங்கும் சிறிது கூட எந்தவித அதிர்ச்சியையும் அவர் உணரவில்லை.
பதம் 3.19.17
அதோருதாஸ்ருஜந்மாயம் யோக மாயேஸ்வரே ஹரௌ
யாம் விலோக்ய ப்ரஜாஸ்த்ரஸ்தா மேநிரே ஸ்வோபளம்யமம்
அத- பின்னர்; உருதா-பல வழிகளில்; அஸ்ருஜத் – வீசினான்; மாயாம் -மாய வித்தைகள்; போகமாயயேஸ்வரே – யோக மாயாவின் (தலைவன்) பகவான்; ஹரௌ – ஹரியிடம்ப; யாம்- எந்த; விலோக்ய- பார்த்த பின்னர்; ப்ரஜா – மக்கள்; த்ரஸ்தா-பயந்தரத்தக்க; மேநிரே- எண்ணி; அஸ்ய-அண்டத்தின்; உபஸம்யமம் -உருகுதல்.
அசுரன், யோகமாயாவின் தலைவராகிய பரமபுருஷ பகவானுக்கு எதிராக, பல மாய வித்தைகளை ஏவினான். இதைப் பார்த்தவுடன், மக்கள் பயத்திற்கு ஆளாகி, இந்த அண்டத்தின் முடிவு காலம் நெருங்கி விட்டது என்று நினைத்தார்கள்.
பதம் 3.19.18
ப்ரவவுர்வாயஸ்சண்டாஸ்தம: பாம்ஸவமைரயன்
திக்ப்யோ நிபேதுர் க்ராவாண: க்ஷேபணை: ப்ரஹிதா இவ
ப்ரவவு-வீசின; வாயவ-காற்று; சண்டா-பயந்தரும்; தம- இருள்; பாம்ஸவம்-தூசியினால்; ஜரயன்-பரப்பப்பட்டது; திக்ப்ய- எல்லாத் திசையிலிருந்தும்; நிபேது-கீழே வந்து; க்ராவாண— கற்கள்; க்ஷேபணை-இயந்திரத் துப்பாக்கிகளால்; ப்ரஹிதா- தூக்கியெறியப்பட்டு; இவ-போல.
எல்லாத் திசைகளிலிருந்தும் அச்சம் விளைவிக்கக் கூடிய காற்று வீச ஆரம்பித்தது, தூசியையும் புயலையும் வாய்ப்பாகக் கொண்டு இருளைப் பரப்பியது. எல்லா மூலைகளிலிருந்தும், இயந்திரத் துப்பாக்கிகளால் தூக்கி எறியப்பட்டது போல, கற்கள் தூக்கியெறியப்பட்டன.
பதம் 3.19.19
த்யௌர்நஷ்ட -பகணாப்ரௌகை: ஸவித்யுத்-ஸ்த நயித்னுபி:
வர்ஷத்பி: பூய-கேஸாஸ்ருக் விண்மூத்ராஸ்தீநி சாஸக்ருத்
தியௌ-ஆகாயம்; நஷ்ட-மறைந்து கொண்டு; பகண: ஒளிப் பிழம்புகள்; அப்ர-மேகங்களின்; ஓகை:-கூட்டங்களால்; ஸ -உடன் வந்து; வித்யுத்-மின்னல்; எததயித்னுபி- மற்றும் இடி; வர்ஷத்பி:– மழை; பூய-கீழ்; கேஸ – முடி; அஸ்ருக்-குருதி; வித்—மலம்; மூத்ர- சிறுநீர்; அஸ்தீநி—எலும்புகள்; ச-மற்றும்; அஸக்ருத—மீண்டும் மீண்டும்.
விண்வெளியில் மேகக் கூட்டங்கள் இருளுடன் மிக அதிகமாகக் காணப்பட்டன. உடன் மின்னலும் இடியும் சேர்ந்து வந்ததால் வானின் கண் உள்ள ஒளிப்பிழம்புகள் எல்லாம் மறைந்தன. வானிலிருந்து சீழ், முடி, குருதி, மலம், சிறுநீர் மற்றும் எலும்புகள் மழையாகப் பெய்தன.
பதம் 3.19.20
கிரய: ப்ரத்யத்ருஸ்யந்த- நாநாயுத-முசோ நக
திக் -வாஸலோ யாதுதான்ய: விநியோமுக்த மூர்கஜா:
கிரய:-மலைகள்; ப்ரத்யத்ருஸ்யந்த-தோன்றின; நாநா—பலப்பல; ஆயுத—ஆயுதங்கள்; முசே-வெளியேற்றி; அநக-ஓ பாவமற்ற விதுரனே; திக் வாஸஸ்-நிர்வாணம்; யாதுதான்ய-பெண் பேய்கள்; ஸூவித்ய-சூலாயுதம் ஏந்திக் கொண்டு; முக்த-தளரத் தொங்க விட்டு; மூர்கஜா முடி.
ஓ பாவம் இழைக்காத விதுரனே, மலைகள் பலப்பல ஆயுதங்களை வெளியேற்றின. மற்றும், தலை முடியைத் தளரத் தொங்கவிட்டுக் கொண்டு, சூலாயுதங்களை ஏந்திக் கொண்டு நிர்வாணப் பெண் பேய்கள் தோன்றின.
பதம் 3.19.21
பஹூபிர்ய-ரக்ஷோபி: பத்-யஸ்வ-ரதருஞ்ஞரை:
ஆததாயிபிருத்ஸ்ருஷ்டா ஹிம்ஸ்ரா வாசோ திவைஷஸா:
பஹூபிர்- பலரால்; யக்ஷரக்ஷோபி-யக்ஷர்களும் ராக்ஷஸர்களும்; பத்தி காலால் அணிவகுத்து நடந்து; அஸ்வ-குதிரைகளின் மேல்; ரத-தேர்களின் மேல்; குஞ்ஜரை-யானைகளின் மேல்; ஆததாயிபி- முரடர்கள்; உத்ஸ்ருஷ்டா- வாய் விட்டுரைத்து; ஹிம்ஸ்ரா-கொடிய; வாச-சொற்கள்; அதிவைஷஸா:-கொல்லும் தன்மை படைத்த.
கொடிய, நாகரிகமற்ற வார்த்தைகள், முரட்டுத்தனமான யக்ஷ, ராக்ஷஸக் கூட்டங்களால் கூறப்பட்டன. அவர்கள் கால்நடையாகவோ, குதிரைகள், யானைகள் அல்லது தேர்களின் மீதோ அணிவகுத்துச் சென்றார்கள்.
பதம் 3.19.22
ப்ராதுஷ்க்ருதானாம் மாயாநாமாஸூரீணாம் விநாசயத்
ஸூ தர்ஸநாஸ்த்ரம் பகவான் ப்ராயுங்க்த தயிதம் த்ரி-பாத்
ப்ராதுஷ்க்ருதானாம்- காட்டப்பட்டு; மாயாநாம்—மந்திர சக்திகள்; ஆஸுமரீணாம் – தீயவனால் காட்டப்ட்ட; விநாசயத்- அழிக்க விருப்பம் கொண்டு; சுதர்சந அஸ்த்ரம்—ஸூதர்சந ஆயுதம்; பகவான்- பரமபுருஷ பசுவான்; ப்ராயுங்கீத- எறித்து; தயிதம்-அன்பிற்குரிய; த்ரிபாத்- வேள்விகளால் மகிழ்பவர்.
வேள்விகளால் தனிப்பட்ட முறையில் மகிழ்பவராகிய பகவான், அசுரனால் வெளியிடப்பட்ட மந்திர சக்திகளைச் சிதறடிக்கும் வல்லமை வாய்ந்த, தன் அன்பிற்குரிய சுதர்சனச் சக்கரத்தை ஏவினார்.
பதம் 3.19.23
ததா திதே: ஸமபவத்ஸஹஸா ஹ்ருதிவேபது:
ஸ்மரந்த்யா பர்துராதேஸம் ஸ்தநாச்சாஸ்ருக் ப்ரஸூஸ்ருவே
ததா—அந்த நேரத்தில்; திதே – திதியின்; ஸமபகவத்-நிகழ்ந்தது; ஸஹஸா-திடீரென்று; ஹ்ருதி- இதயத்தில்; வேபது:-நடுக்கம்: ஸ்மரந்திய-நினைவுபடுத்தி; பர்து—கணவனின் (காஸ்யபரின்); ஆதேசம்- சொற்கள்; ஸ்தநாத்- அவள் மார்பிலிருந்து; ச- மற்றும்; அஸ்ருக்-குருதி; ப்ரஸூஸ்ருவே—வழிந்தது.
அந்த நேரத்தில் ஹிரண்யாக்ஷனின் அன்னை திதியின் இதயத்தில் திடீரென்று ஒரு நடுக்கம் பரவியது. அவள் தன் கணவர் காஸ்யபரின் சொற்களை நினைவு கூர்ந்தாள். அவல் மார்புகளிலிருந்து இரத்தம் வழிந்தது.
பதம் 3.19.24
விநஷ்டாஸூ ஸ்வ-மாயாஸூ பூயஸ்சாவ்ரஜ்ய கேசவம்
ருஷோபகூஹ்மானோ மூம் தத்ருசே வஸ்திதம் பஹி:
விதஷ்டாஸூ-மறையச் செய்தபொழுது; ஸ்வமாயாஸூ—அவன் மந்திர சக்திகள்; பூய-மீண்டும்; ச-மற்றும்; ஆவ்ரஜ்ய-முன்னால் வந்த பின்னர்; கேசவம்-பரமபுருஷ பகவான்; ருஷா-கோபத்துடன்; உபகூஹமான —அனைத்து; அமும் – பகவான்; தத்ருசே-பார்த்து; அவஸ்திதம்—நின்று; பஹி—வெளியில்.
அசுரன், அவனுடைய மந்திர சக்திகள் எல்லாம் சிதறடிக்கப் பட்டதைப் பார்த்தபொழுது, அவன் மீண்டும் கேசவனாகிய பரமபுருஷ பகவானுக்கு, முன்னால் வந்தான், மிகுந்த கோபத்துடன், பகவானைத் தன் கரங்களுக்குள் அனைத்து, அவரை நெருக்கிக் கொல்ல முயற்சித்தான். ஆனால் அவன் வியப்பு அடையும்படி பகவான் அவன் கைகள் ஏற்படுத்திய வட்டத்துக்கு வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
பதம் 3.19.25
தம் முஷ்டிபிர் விநிர்கநந்தம் வஜ்ர- ஸாரைரதோக்ஷஜ:
கரேண கர்ண மூலே ஹன் யதா த்வாஷ்ட்ரம் மருத்-பதி:
தம்- ஹிரண்யாட்சன்; முஷ்டிபிர்—அவனுடைய கை முஷ்டியுடன்; விநிர்கநந்தம் – அடித்து; வஜ்ரஸாரை- இடி போல் கடினமாக; அதோ க்ஷஜ- பகவான் அதோக்ஷஜர்; கரேண – கையுடன்; கர்ணமூலே- காதின் வேர்ப்பகுதி; அஹன்-அடித்து; யதா-போல; தீவாஷ்ட்ரம்-தீயோனாகிய வ்ருத்திரன் (த்வஷ்ட்டாவின் மகன்); மருத்பதி-இந்திரன் மருதத்தின் தெய்வம்.
அசுரன் இப்பொழுது தன்னுடைய கடினமான முஷ்டியால் பசுவா னைத் தாக்க ஆரம்பித்தான். ஆனால் பகவான் அதோக்ஷஜர், மருதத்தின் பிரபுவாகிய இந்திரன், அசுரனாகிய உருத்திரனை அடித்தது போல, அவன் காதின் வேர்ப்பகுதியில் அறைந்தார்.
பதம் 3.19.26
ஸ ஆஹதோ விஸ்வ-ஜிதா ஹயவக்ஞயா
பரிப்ரமத் காத்ர உதஸ்த- லோசன:
விசீர்ண பாஹ்-வங்க்ரி- சிருஹோ பதத்
யதா நகேந்த்ரோ லுலிதோ நபஸ்வதா
ஸ—அவன்; ஆஹத—அடிக்கப்பட்டு; விஸ்வஜிதா-பரமபுருஷ பகவானால்; ஹி-ஆயினும்; அவக்குயா-சிறிது மோசாக; பரிப்ரமத்- உருண்டு; கத்ரா-உடல்; உதஸ்த—புடைத்து வெளி வந்து; லோசன— கண்கள்; விஸூர்ண—உடைந்து; பாஹூ-கைகள்; அங்க்ரி—கால்கள்; சிர குஹ-தலைமுடி; அபதத்- கீழே விழுந்து; யதா-போல; நக இந்த்ர-பெரிய மரம்; லுலித-வேருடன்; நபஸ்வதா—காற்றால்.
எல்லாவற்றையும் வெல்பவராகிய பகவானால் மோசமாகத் தாக்கப் பட்ட அசுரனின் உடல் உருளத் தொடங்கியது. அவனுடைய விழிகள், விழிப் பள்ளத்திலிருந்து பிதுங்கி வெளியில் வந்தன. அவன் கைகளும் கால்களும் முறிந்தன. அவன் தலைமுடி சிதறியது. ஒரு பெரிய மரம் காற்றால் வேருடன் விழுவதைப் போல, அவன் கீழே விழுந்து இறந்தான்.
பதம் 3.19.27
க்ஷிதெள சயானம் தமகுண்ட-வர்சஸம்
கராலதமஷ்ட்ரம் பரிதஷ்டதச்சதம்
அஜாதயோ வீக்ஷ்ய சசம்ஸூராகதா
அஹோ இமாம் கோ நு லபேத ஸம்ஸ்திதிம்
க்ஷிதௌ-பூமியில்; சயானம்-படுத்து (விழுந்து); தம்-இரண் யாட்சன்; அகுண்ட-மங்கிப் போகாமல்; வர்சஸம்- ஒளி ; கரால- பயம் தரத்தக்க; தம்ஷ்ட்ரம்—பற்கள்; பரிதஷ்ட—கடித்து; தச்சதம்- உதடு; அஜ அதயோ-பிரம்மாவும் பிறரும்; வீக்ஷ்ய-பார்த்துக் கொண்டு; சசம்ஸு -வியந்து பாராட்டிக் கூறினர்; ஆகதா-வந்து சேர்த்து; அஹோ – ஒ; இயல் – இந்த கா-யார்; நு-உண்மையில்; லபேத-சந்திக்க முடியும்; ஸம்ஸ்திதிம்- மரணம்.
உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு, அச்சம் தரத்தக்க கொம்புகளையுடைய அசுரன் பூமியில் விழுந்து கிடப்பதைக் காண அஜனும் (பிரம்மாவும்,) பிறரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவனுடைய முகத்தில் இருந்த ஒளி மங்கவில்லை. பிரம்மா வியந்து பாராட்டிக் கூறினார். “ஓ. அருள்தன்மை பெற்ற இத்தகைய மரணத்தை யாரால் பெற முடியும்?”
பதம் 3.19.28
யம் யோகினோ யோக-ஸமாதினா ரஹோ
த்யாயந்தி லிங்காதஸதோ முமுக்ஷயா
தஸ்யைஷ தைத்ய- த்ருஷப: பதாஹதோ
முகம் ப்ரபச்யம்ஸ்தனுமுத்ஸஸர்ஜ ஹ
யம் – யாரை; யோகின— யோகிகள்; யோகஸமாதினா—அறிவுசார்ந்த மெய்ம்மறந்த நிலை; ரஹ-தனிமையில்; த்யாயந்தி-தியானித்து; லிங்காத்-உடலிலிருந்து;அஸத-பொய்ம்மை;முமுக்ஷடியா — விடுதலை யை விரும்பி; தஸ்ய- அவரிடம்; ஈஷ்-இந்த; தைத்ய-திதியின் மகள்; த்ருஷப -தலையணி; பதா—பாதித்தால்; ஆஹத—தாக்கப்பட்டு; முகம் -முகபாவம்; ப்ரபச்யம் – உற்றுப் பார்வையிட்ட பொழுது; தனும்- உடல்; உத்ஸஸர்ஜ-தூக்கியெறிந்து ; ஹ-உண்மையில்.
பிரம்மா தொடர்ந்தார்: பொய்யான ஜடவுலக உடல்களிலிருந்து விடுதலையை விரும்பி, தனியிடத்தில் அமர்ந்து அறிவு சார்ந்த மெய் மறந்த நிலையில் யோகிகள் பகவானைத் தியானிப்பர். அந்தப் பசுவானுடைய பாதத்தின் முன்புறத்தால் அசுரன் தாக்கப்பட்டான். பகவானது முகபாவத்தை உற்று பார்த்த நிலையிலேயே, திதியின் தலை சிறந்த பிள்ளையாகிய இவன் மனித வாழ்க்கையாகிய புயலில் இருந்து தூக்கியெறியப்பட்டான்.
பதம் 3.19.29
ஏதௌ தௌ பார்ஷதாவஸ்ய சாபாத்யாதா- வஸத்கதிம்
புனு: கதிபயை: ஸ்தானம் ப்ரபத்ஸ்யேதே ஹ ஐந்மபி:
ஏதௌ-இந்த இருவரும்; தௌ—இருவரும்; பார்ஷத -அந்தரங்கப் பணியாளர்கள்; அஸ்ய-பரமபுருஷ பகவானால்; சாபாத்-சபிக்கப் பட்டதால்; யாத-சென்று; அஸத் கதிம்-தீய குடும்பத்தில் பிறப்பு எடுக்க; புன-மீண்டும்; கதிபயை-சில; ஸ்தானம்—சொந்த இடம்: ப்ரபத்ஸ்யேதே-திரும்பப் பெறுதல்; ஹ-உண்மையில்; ஜன்மபி- பிறப்புகளின் பின்பு.
பகவானின் இந்த இரண்டு அந்தரங்கப் பணியாளர்களும் அவரால் சபிக்கப்பட்ட பின் அசுர குலத்தில் பிறக்க வேண்டும் என்று விதிக்கப் பட்டவர்கள். அது மாதிரி, சில பிறவிகள் எடுத்தபின், அவர்கள் தங்களின் சொந்த நிலைக்குத் திரும்புவர்.
பதம் 3.19.30
தேவா ஊசு:
நமோ நமஸ்தே இலயக்ஞ-தந்தவே
ஸ்திதௌ க்ருஹீதாமல- அத்வு-மூர்த்தயே
திஷ்டயா ஹதோ யம் ஜகதாமருந்துதஸ்
த்வத் – பாத பக்த்யா வயம் ஈச நிர்வ்ருதா:
தேவர்- தேவர்கள்; ஊசு:-கூறினர்; நம -வணக்கம்; நம -வணக்கங்கள்; தே-உங்களுக்கே; அகிலயக்ஞதந்தவே-வேள்விகளால் மகிழ்பவர்; ஸ்திதெள-பாதுகாக்கும் பொருட்டு; க்ருஹீத-ஊகித்து; அமல்-(புனித) தூய்மை; ஸத்வ-நன்மை; மூர்த்தயே- வடிவம்; திஷ்ட்யா—அதிர்ஷ்டவசமாக; ஹத-கொன்று; அயம்- இந்த; ஜகதாம் —உலகங்களுக்கு; அருந்துத-தொல்லை கொடுத்து; த்வத்பாத- உன் பாதத்திற்கு; பக்த்யா-பக்தியுடன்; வயம்- தாங்கள்; ஈசி ஓ-பகவானே; நிர்வ்ருதா-மகிழ்ச்சி அடைந்து.
தேவர்கள் பகவானை அழைத்தார்கள். எல்லா வணக்கங்களும் உங்களுக்கு உரித்தாகுக. நீங்கள் எல்லா வேள்விகளையும் அனுபவித்து மகிழ்பவர். நீங்கள் இந்த உலகைப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தின் காரணமாக காட்டுப் பன்றியின் வடி வத்தை ஏற்றுக் கொண்டீர்கள். அதிர்ஷ்டவசமாக, உலகங்களுக்குத் தொல்லையாக இருந்த இந்த அசுரன் உங்களால் கொல்லப்பட்டான். நாங்களும், பகவானே, உங்கள் தாமரைப் பாதங்களில் வழிபாடு செய்து கொண்டு, தொல்லையின்றி இருக்கிறோம்.
பதம் 3.19.31
மைத்ரேய உவாச
ஏவம் ஹிரண்யாக்ஷ்ம் அஸஹ்ய -விக்ரமம்
ஸ ஸாதயித்வா ஹரிர் ஆதி-ஸூகர:
ஜகம் லோகம் ஸ்வம் அகண்டிதோத்ஸ வம்
ஸமீடித: புஷ்கர-விஷ்டராதிபி:
மைத்ரேய உவாச- ஸ்ரீ மைத்ரேயர் கூறுகிறார்; ஏவம்—இவ்வாறு; ஹிரண்யாட்சம்-ஹிரண்யாட்சன்; அஸஹ்ய விக்ரமம்-மிருந்த சக்தியுள்ள; ஸ-பகவான்; ஸாதயித்வா-கொன்ற பிறகு; ஹரிர்- பரமபுருஷ பகவான்; ஆதிசூகர-காட்டுப்பன்றி உயிரினங்களின் மூலம்; ஜகம்- திரும்பி; லோகம் தன் இருப்பிடத்திற்கு; ஸ்வம்—தன்னுடைய; அகண்டி-குறுக்கீடுஇன்றி; உத்ஸவம்-திருவிழா; ஸமீடித – பாராட்டப்பட்டு; புஷ்கரவிஷ்டா-தாமரை இருக்கை (தாமரை பிரம் மாவின் இருக்கை); ஆதிபி-பிறரும்.
ஸ்ரீ மைத்ரேயர் தொடர்ந்தார் அச்சம் தரும் தோற்றமுடைய அசுரனாகிய ஹிரண்யாட்சனைக் கொன்ற பிறகு, காட்டுப் பன்றி உயிரினத்துக்கு மூலமாகிய பகவான் ஹரி, குறுக்கீடு இல்லாத எப்போதும் விழாக்கள் நடைபெறுகின்ற, தன்னுடைய இருப்பிடம் திரும்பினார். பகவான், பிரம்மாவால் தலைமை தாங்கப்பட்ட எல்லா தேவர்களாலும் போற்றப் பெற்றார்.
பதம் 3.19.32
மயா யதானூக்தம் அவாதி தே ஹரே:
க்ருதாவதாரஸ்ய சுமித்ர சேஷ்டிதம்
யதா ஹிரண்யாக்ஷ உதார-விக்ரமோ
மஹா-ம்ருதே க்ரீடனவன் நிராக்ருத:
மயா – என்னால்; யதா-போல; அனூக்தம்- கூறிய; ஆவதி- விளக்கப்பட்டது; தே-உன்னிடம்; ஹரே:- பரமபுருஷ பகவான்; க்ருத அவதாரஸ்ய—அவதாரத்தை மேற்கொண்டவர்; சுமித்ர—ஓ அன்பான விதுரனே; சேஷ்டிதம்-செயல்கள்; யதா-போல: ஹ்ரண்யாக்ஷ- ஹ்ரண்யாக்ஷன்; உதார -மிகவும் விரிவான; விக்ரம- வல்லமை; மஹாம்ருதே- சிறந்த போரில்; க்ரீடன—வத்—விளையாட்டுப் பொருள் போல; திராக்குத—கொல்லப்பட்டான்.
மைத்ரேயர் தொடர்ந்தார்: என் அன்பான விதுரனே, பரமபுருஷ பகவான் முதலில் காட்டுப் பன்றி அவதாரமாக இறங்கி வந்து, ஈடு இணையற்ற வல்லமை பெற்ற அசுரனை, ஒரு விளையாட்டுப் பொருள் போலக் கருதிக் கொன்றார் என்பதை நான் உனக்கு விளக்கினேன். நான் என் முன்னோரான ஆன்மீக குருவிடமிருந்து கேட்ட வண்ணமே, இது என்னால் வர்ணிக்கப்பட்டுள்ளது.
பதம் 3.19.33
ஸூத உவாச
இதி கௌஷாரவாக்யாதாமாஸ்ருத்ய பகவத்க-தாம்
கூத்தானந்தம் பரம் லேபே ஹா- பாகவதோ த்விஜ
ஸூத-ஸூத கோஸ்வாமி; உவாச-கூறினார்; இதி-இவ்வாறு; கௌஷாரவ – மைத்ரேயரிடமிருந்து (கௌஷாருவின் மகன்); ஆக்யதாம் -கூறினார்; ஆஸ்ருத்ய-கேட்டதும்; பகவத் கதாம்—பகவானைப் பற்றிய வர்ணனை; க்ஷத்தா—விதுரர்; ஆனந்தம்- மகிழ்ச்சி; பரம் -:உன்னதம்; லேபே-செய்து முடித்தல்; மஹாபாகவத- சிறந்த பக்தன்; த்விஜ- ஓ ப்ராமணா (சௌனகர்).
ஸ்ரீ சூத கோஸ்வாமி தொடர்ந்தார்: என் அன்பான பிராமணனே, பகவானின் சிறந்த பக்தன் ஆகிய விதுரன் பரமபுருஷ பகவானின் பொழுதுபோக்கு (விளையாட்டு) பற்றிய வருணனையைக் கேட்டதால் உன்னதமான இன்பத்தை அடைத்தார். இதை முனிவர் கௌஷரவரின் (மைத்ரேயர்) ஆதாரபூர்வமான செய்திகளிலிருந்து கேட்டு, மகிழ்ச்சி அடைந்தார்.
பதம் 3.19.34
அந்யேஷாம் புணய -ஸ்லோகாநாம் உத்தாம-யசாஸாம் ஸதாத்
உபஸ்ருத்ய பவேந்மோத: ஸ்ரீவத்னாங்கஸ்ய கிம் புன:
அந்யேஷாம் – பிறரின்; புண்ய ஸ்லோகாநாம் – நற்பெயர்; உத்தாம யசஸாம்- எல்லா இடங்களிலும் அவர் புகழ் பரவி; ஸதாத்- பக்தர்களின்; உபஸ்ருத்ய-கேட்டதால்; பவேத்-தோன்றும்; மோத- இன்பம்; ஸ்ரீவத்ஸ அங்கஸ்ய – ஸ்ரீவத்ஸம் எனும் அடையாளம் உடைய பகவானின்; கிம்புன- என்ன பேசுவது என்று.
ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம் கொண்ட மார்புடைய பகவானின் விளையாடலைக் கேட்பதைப் பற்றி என்ன பேசுவது என்றும் இறவாத புகழுடைய பக்தர்களின் செயல்கள் பற்றிக் கேட்டாலும் கூட, மக்கள் உன்னத இன்பம் பெறுவார்கள்.
பதம் 3.19.35
யோ கஜேந்த்ரம் ஜஷக்-ரஸ்தம் த்யாயந்தம் சரணாம் புஜம்
க்ரோசந்தீனாம் கரேணூனாம் க்ருச்சரதோ மோசயத் த்ருதம்
ய-அவர்; கஜேந்த்ரம்—யானைகளின் அரசன்; ஜ்ஷு- முதலை; க்ரஸ்தம்-தாக்கப்பட்டு; தியாயந்தம்-தியானித்து; சரண-திருப் பாதங்கள்; அம்புஜம்- தாமரை; கிரோசத்தீனாம்-அழும்பொழுது; கரேணூனாம்—பெண் யானைகள்; க்ருச்சரத-ஆபத்திலிருந்து; அமேச யத்-விடுபட்டு; த்ருத-விரைவாக.
பரமபுருஷ பகவான், யானைகளின் அரசன் ஆகிய கஜேந்திரன் முதலையால் தாக்கப்பட்டபோது, பகவானின் தாரமை போன்ற திருவடிகளைத் தியானம் செய்ய அந்த யானையை அதிலிருந்து இறைவன் விடுவித்தார். அந்த நேரத்தில் அந்த யானையுடன் வந்த பெண் யானைகள் அழுதன. பகவான் அவற்றுக்கு, வர இருந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றினார்.
பதம் 3.19.36
தம் சூகாராத்யம்குஜூபிரனநயகரணைர்ந்ருபி:
க்ருதக்ஞ: கோ ந ஸேவேத துராராத்யமஸாதுபி:
தம் -அவரிடம்; ஸுக – எளிதாக; ஆராத்யம்- வழிபட்டு; ருஸூபி—போலிப் பெருமையில்லாத; அருத்ய-வேறில்லை; சரணை- பாதுகாப்பு பெறுதல்; ந்ருபி:-மனிதர்களால்; க்ருதக்ஞ:-நன்றியுள்ள ஆன்மா; க-என்ன; ந-இல்லை; லஸவேத-தொண்டு செய்பவர்; துராராத்யம் வழிபட இயலாது; அஸாதுபி-பக்தரல்லாதாரால்.
சிறந்த குருவாகிய பரமபுருஷ பகவானுக்குத் தன் தொண்டினைச் செய்யாத நன்றியுள்ள ஆத்மா இவ்வுலகில் இருக்கிறதா? பாதுகாப் பிற்காக, தனிப்பட்ட முறையில் பசுவானைச் சரணம் அடையும் குறை யில்லாத பக்தர்களால் பகவானை எளிதாக மகிழச் செய்ய இயலும். ஆயினும் நேர்மையற்ற மனிதனால் இறைவனின் சினத்தைத் தணிவித்தல் மிகவும் கடினமாகும்.
பதம் 3.19.37
யோ வை ஹிரண்யாகவதம் மஹாத்புதம்
விக்ரீடிதம் காரண-ஸுகராத்மன:
ஸ்ருணோதி காயத்மனுமோததேஞ்ஜஸா
விமுஞ்யதே ப்ரம்ம-வதாதபித்விஜா:
ய-அவர்; வை-உண்மையில்; ஹிரண்யாட்சவதம்-ஹிரண்யாட்சகைக் கொன்றதால்; மஹா அத்புதம் -மிகவும் அற்புதமான; விக்ரீடிதம்—விளையாட்டு; காரண-பூமியைக் கடலிலிருந்து எடுத்துக் கொண்டு எழுதல் போன்ற காரணங்களுக்காக; சூகர-காட்டுப்பன்றியின் வடிவத்தில் தோன்றி; ஆத்மன-பரமபுருஷ பகவானின்; ஸ்ருணோதி—கேட்டல்; காயதி—உச்சரித்தல்; அனு மோததே- இன்பம் பெற்று; அஞ்ஜலா-உடனே; விமுஞ்யதே-விடுதலை அடைந்து; ப்ரம்மவதாத்-பிராமணனைக் கொன்ற பாவத்திலிருந்து; அபி-கூட; த்விஜா-ஓ பிராம்மணர்களே.
ஓ பிராமணர்களே, முதன் முதலாக பகவான் காட்டுப் பன்றியின் வடிவத்தில் தோன்றி உலகை விடுவித்ததற்காக, அசுரனாகிய ஹிரண்யாக்ஷனைக் கொன்ற அற்புதமான வர்ணனையைக் கேட்பவர், சொல்பவர் அல்லது இன்பம் அடைபவர், யாவரோ அவர்கள் ஒரு பிராமணனைக் கொன்றிருந்தாலும் கூட, உடனே பாவச் செயல்களின் முடிவிலிருந்து விடுபடுவார்கள்.
பதம் 3.19.38
ஏதந்மஹா-புண்யமலம் பவித்ரம்
தந்யம் யசாஸ்யம் பதமாயுரா-சிஷாம்
ப்ராணோந்திரியாணாம் யுதி செவுர்ய-வர்தனம்
நாராயணோந்தே கதிர் அங்க ஸ்ருண்வதாம்
ஏதத்—இந்த வர்ணனை; மஹா புண்யம்-சிறந்த நன்மைகளை அள்ளித் தரும்; அலம்- மிகவும்; பவித்ரம் -புனிதமான; தந்யம்- செல்வத்தை அள்ளித்தரும்; யசால்யம் – புகழ்தாங்கி; பதம்-பெறுவது; ஆயு—நீண்ட ஆயுள்; ஆசிஷாம்-ஒருவருடைய ஆசைப் பொருள்; பிராண—உயிர்நிலையான புலன்கள்; இந்த்ரியானாம்—புலன்களின் செயலால்; யுதி-போர்க்களத்தில், சௌர்ய-பலம்; வர்தனம்- அதிகரித்து; நாராயண – பகவான் நாராயணர்; அந்தே – வாழ்வின் முடிவில்; கதிர்—பாதுகாப்பு; அங்க-ஓ அன்பான ஸௌனகரே; ஸ்ருண்வதாம் – கேட்பவர்களில்.
இந்த மிகவும் புனிதமான காதை அதீதமான நன்மை, செல்வம், புகழ், நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் விரும்பும் எல்லாப் பொருள்களையும் அள்ளித் தருகிறது. போர்க்களத்தில், இது ஒருவனின் உயிர்நிலையான புலன்களின் பலத்தையும், அவற்றின் செயலையும் அதிகரிக்கிறது. ஓ அன்பான ஸெளனகரே, வாழ்வின் மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் இதைக் கேட்டால், அவர் பகவானின் உயர்ந்த இருப்பிடத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “அசுரனாகிய ஹிரண்யாட்சனைக் கொல்லுதல்” எனும் தலைப்பைக் கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.