அத்தியாயம் – 40
அக்ரூரரின் பிரார்த்தனைகள்
பதம் 10.40.1 : ஸ்ரீ அக்ரூரர் கூறினார்: “காரணங்கள் அனைத்தின் காரணமும், ஆதியானவரும், குறைவற்றவருமான பரம புருஷர் நாராயணருக்கு எனது தலைதாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக. உமது நாபியிலிருந்து தோன்றிய தாமரை மலரின் இதழ் அடுக்குகளிலிருந்து பிரம்ம தேவன் தோன்றினார். அவரது செயல் துணையினால் இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது.”
பதம் 10.40.2 : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் அவற்றின் ஆதாரமான ஆணவம், மகத்தத்துவம், ஒட்டு மொத்தப் பௌதிக இயற்கை மற்றும் அதன் ஆதாரமான பரமபுருஷ பகவானின் புருஷவிரவு, மனம், புலன்கள், புலன்பொருட்கள், மற்றும் புலன்களின் ஆதிபத்தியத் தெய்வங்கள் இப்பிரபஞ்சத் தோற்றத்தின் அனைத்துக் காரணங்களும் உமது உன்னத உடலிலிருந்தே தோன்றின.
பதம் 10.40.3 : பிரக்ருதி எனப்படும் ஒட்டு மொத்த ஜடஇயற்கையும், மற்றும் இவை போன்ற பிற படைப்புப் பொருட்களும், உயிரற்ற ஜடத்தின் வரையறைக்கள் தோன்றியதினால் அவை உம்மை உள்ளபடியே நிச்சயம் அறிய முடியாது. நீர் ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்டவராதலினால், அக்குணங்களில் கட்டுண்டிருக்கும் பிரம்ம தேவனால் கூட உமது உண்மை வடிவினை அறிய முடியவில்லை.
பதம் 10.40.4 : தூய்மையான யோகிகள், உயிர்கள், உயிர்களின் உடல்களை உருவாக்கும் பௌதிகப் பூதங்கள் மற்றும் அப்பூதங்களின் ஆதிபத்தியத் தேவர்கள் என்னும் மூவகை வடிவமாக உம்மை உணர்வதின் மூலம். முழுமுதற்கடவுளாகிய உம்மை வழிபடுகின்றனர்.
பதம் 10.40.5 : மூன்று புனித அக்கினிகளின் நியதிகளைப் பின்பற்றும் அந்தணர்கள் மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை ஓதி, விரிவான அக்னி யக்ஞங்களை பல்வேறு வடிவங்களும், நாமங்களுமுடைய பல்வேறு தேவர்களுக்கு அக்னி யக்ஞங்களை செய்வதின்மூலம் உம்மை வணங்குகின்றனர்.
பதம் 10.40.6 : ஞானம் வேண்டும் சிலர் உலகியற் செயல்கள் அனைத்தையும் துறந்து, அமைதிபெற, ஞானம் அனைத்தின் உண்மை வடிவமான உம்மை, ஞானம் பெறுவதற்கான வேள்வியின் மூலம் வழிபடுகின்றனர்.
பதம் 10.40.7 : மேலும், தூய்மையான புத்தியுடைய பிறர், உம்மால் அருளப்பட்ட வைணவ சாத்திரங்களின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். உமது நினைவில் தமது மனங்களை ஒருமுகப்படுத்தி பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் ஒரே பரமபுருஷ பகவான் நீர்தானென்று உம்மை வழிபடுகின்றனர்.
பதம் 10.40.8 : மற்றுஞ்சிலர், பரமபுருஷ பகவான் உம்மை, சிவபெருமான் வடிவத்தில் வழிபடுகின்றனர். அவர்கள் சிவபெருமானால் அருளப்பட்டு பல ஆச்சாரியர்களால் பல்வேறு வழிகளில் விளக்கமளிக்கப்படும் மார்க்கத்தினைப் பின்பற்றுகின்றனர்.
பதம் 10.40.9 : ஆயினும் எந்தன் பிரபுவே, இவர்கள் அனைவரும் உம்மிடமிருந்தும் தங்கள் கவனத்தைத் திருப்பிப் பிற தேவர்களை வழிபட்ட போதிலும், ஓ, அனைத்துத் தேவர்களின் உருவமாகத் திகழ்பவரே, அவர்கள் உண்மையில் உம்மைத் தான் வழிபடுகின்றனர்.
பதம் 10.40.10 : மலைகளில் பிறந்து, மழைநீரினால் நிரப்பப்படும் எல்லா நதிகளும், பல்வேறு திசைகளில் பாய்ந்தோடி இறுதியில் கடலில் கலக்கின்றன. அதுபோல் இப்பல்வேறு பாதைகளும் இறுதியில் உம்மையே அடைகின்றன ஒ, பிரபுவே.
பதம் 10.40.11 : உமது ஜட இயற்கையின் முக்குணங்களான சத்துவம், இரஜோ, தமோ குணங்கள், அசையாத உயிர்களிலிருந்து பிரம்ம தேவன் வரையிலான அனைத்து ஆத்மாக்களையும் சிக்க வைக்கின்றன.
பதம் 10.40.12 : எல்லா உயிர்களின் பராமாத்மாவாக இருந்து, அனைவரின் உணர்வினையும் நடுநிலையுடன் நோக்கும் சாட்சியான உமக்கு நான் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். அறியாமையின் வலிமையால் உருவான, உமது உலகியற் குணங்களின் பிரவாகமானது, தேவர்களாகவும், மனிதர்களாகவும், விலங்குகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அனைத்து உயிர்களிடையும் மிக்க வன்மையுடன் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
பதங்கள் 10.40.13 – 10.40.14 : நெருப்பு உமது முகம், நிலம் உமது பாதங்கள், சூரியன் உமது விழி, வானம் உமது நாபி, திசைகள் உமது செவிப்புலன்கள், தலைமைத்தேவர்கள் உமது கரங்கள், கடல்கள் உமது அடிவயிறு, தேவலோகம் உமது சிரம், காற்று உமது பிராணன் மற்றும் உடல் வலிமையாகும். மரங்களும், செடிகளும் உமது உடலிலுள்ள உரோமங்கள், மேகங்கள் உமது தலையிலுள்ள மயிர்க்குழல்கள், மலைகள், பரமபுருஷரே! உமது எலும்புகளும், நகங்களுமாகும். இரவு பகல் என்றும், இவற்றின் பாதை உமது கண் இமைத்தலாகும். மனித குலத்தின் பிரஜாபதி உமது பிறப்புறுப்பு, மழை உமது சுக்கிலமாகும்.
பதம் 10.40.15 : எல்லா உலகங்களும் அவற்றின் ஆதிபத்தியத்தேவர்களோடும், மக்கட்கூட்டங்களோடும் அழிவற்ற முழுமுதற் கடவுளான உமக்குள்ளேயே படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், நீர்வாழ் உயிர்கள் கடலில் நீந்துவது போன்றும் அல்லது ‘உதும்பர’ பழத்தினுள் சிறு பூச்சிகள் இருப்பது போன்றும் மனம் மற்றும் புலன்களின் அடிப்படையாக விளங்கும் உமக்குள் பயணம் செய்கின்றன.
பதம் 10.40.16 : உமது லீலைகளில் மகிழ்வதற்காக, நீர் உம்மை இப்பௌதிக உலகில், பல்வேறு வடிவங்களாகத் தோற்றுவிக்கின்றீர். இவ்வாதாரங்கள் உமது கீர்த்திகளை மகிழ்ச்சியுடன் பாடுகின்றவர்களின் துக்கத்தினை அறவே நீக்குகின்றன.
பதங்கள் 10.40.17 – 10.40.18 : ஊழிக்காலப் பிரளய வெள்ளத்தில் நீந்திச் சென்ற பகவான் மச்சாவதாரத்திற்கும், மது, கைடபர் என்னும் அசுரர்களைக் கொன்ற பகவான் ஹயக்ரீவருக்கும், மந்தர மலையினைத் தாங்கிய மிகப் பெரிய ஆமைக்கும் (பகவான் கூர்மாவதாரம்), பூமியைத் தூக்கி மகிழ்ந்த பன்றி அவதாரத்திற்கும் (பகவான் வராகர்) படைப்பின் மூல காரணரான உமக்கும் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 10.40.19 : உமது சாதுக்களான பக்தர்களின் அச்சத்தினை நீக்கும் அற்புத சிங்கத்திற்கும் (பகவான் நரசிம்மன்), மூன்று உலகங்களையும் தமது பாதத்தினால் அளந்த வாமன அவதாரத்திற்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.40.20 : இறுமாப்புடைய சத்திரியர்கள் என்னும் வம்சாவளியினை வெட்டி வீழ்த்திய பிருகு குலத்தின் தலைவருக்கும் (பரசுராமர்) மற்றும் இராவணனின் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்த இரகு குல திலகரான பகவான் இராமச்சந்திர மூர்த்திக்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.40.21 : சாத்வத குலத்தின் தலைவரான உமக்கும், உமது வடிவங்களான வாசுதேவருக்கும், சங்கர்ஷணருக்கும், பிரதியும்நருக்கும், அநிருத்தருக்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.40.22 : தைத்யர்கள் மற்றும் தானவர்களைக் குழப்பமுறச் செய்த குற்றமற்ற உமது பகவான் புத்தர் அவதாரத்திற்கும், மன்னர்கள் என்னும் போர்வையில் மாமிசம் உண்ணும் மிலோச்சர்களை அழிக்கின்ற உமது கல்கி அவதாரத்திற்கும் எனது வந்தனங்கள் உரித்தாகுக.
பதம் 10.40.23 : ஓ, பரமபுருஷ பகவானே, இவ்வுலகிலுள்ள உயிர்கள் உமது மாயா சக்தியினால் குழப்பமடைகின்றனர். “நான்” “எனது” என்னும் பொய்யான கருத்துக்களைக் கொண்டிருப்பதினால் அவர்கள் பலன்தரும் செயலின் பாதைகளில் பலவந்தமாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பதம் 10.40.24 : ஓ, எல்லாம் வல்ல பகவானே! நானும்கூட இவ்வாறு குழப்பப்பட்டு, மூடத்தனமாக, ஒரு கனவினைப் போல் பொய்யான எனது உடல், குழந்தைகள், இல்லம், மனைவி, செல்வம் மற்றும் உறவினர்களை உண்மையானவை என்று கருதிக் கொண்டிருக்கின்றேன்.
பதம் 10.40.25 : இவ்வாறு அநித்யமானவற்றை நித்தியமானவையென்றும், எனது உடலை எனது ஆத்மாவாகவும், துன்பத்திற்குக் காரணமானவற்றை, இன்பத்திற்குக் காரணமானவை என்றும் நேர் எதிரிடையாக கருதி நான் உலகியல் இருமைகளில் இன்பம் காண முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறு அறியாமையினால் மூடப்பட்டதினால், உம்மை எனது அன்பிற்குரிய உண்மைப் பொருளாக நான் அறியமுடியவில்லை.
பதம் 10.40.26 : செடி கொடிகளாலும் பாசியினாலும் மூடப்பட்டிருந்த நீர் நிலையினை மேலாட்டமாகப் பார்த்த ஒருவன் அங்கே நீரில்லை என்று கருதி கானல் நீரின் பின்னே ஓடியது போல் நானும் உம்மிடம் பராமுகமாக இருந்து விட்டேன்.
பதம் 10.40.27 : எனது புத்தி ஊனமுடையதாக இருப்பதினால் எனது மனதினை அடக்கம் வலிமையினை என்னால் எங்கும் காண முடியவில்லை. எனது மனம் இச்சைகளினாலும், உலக செயல்களினாலும் தொல்லைக்காளாகி கட்டுக்கடங்காத எனது வலிய புலன்களினால் தொடர்ந்து இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகின்றது.
பதம் 10.40.28 : இவ்வாறு இழிவற்ற நான் அடைக்கலம் வேண்டி உமது திருவடிகளை அணுகுகின்றேன். ஏனென்றால் ஓ, பகவானே! தூய்மையற்றவர்கள் உமது திருவடிகளை அடைய முடியாது என்ற போதிலும் கூட, உமது கருணையினால் அது சாத்தியமே என்று நான் கருதுவதினால் தான். ஓ, பத்மநாப பகவானே, ஒருவனது உலக வாழ்க்கை முடிவுறும் பொழுது, உமது தூய பக்தர்களுக்குத் தொண்டு செய்வதின் மூலமே, அவனால் உமது உணர்வில் வளர்ச்சி பெற முடியும்.
பதம் 10.40.29 : அளவற்ற சக்திகளைத் தம்மிடத்தே கொண்டிருக்கும் பரம முழு மெய்ப் பொருளுக்கு எனது வந்தனங்கள். அவரே தூய உன்னத ஞானத்தின் உருவமாகத் திகழ்பவர். எல்லாவிதமான ஞானங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர். உயிர்களை ஆளும் ஜடவியற்கைச் சக்திகளின் பரம ஆளுநரும் அவரேயாவார்.
பதம் 10.40.30 : எல்லா உயிர்களின் உறைவிடமான, வசுதேவரின் மைந்தராகிய உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக. மனம் மற்றும் புலன்களின் தலைவரே, உமக்கு எனது வந்தனங்களை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஓ, பிரபுவே, உம்மைச் சரண்புகுந்த என்னைக் காத்தருள்வீராக.