அத்தியாயம் – 38
அக்ரூரர் விருந்தாவனம் வருதல்
பதம் 10.38.1 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: அன்றைய இரவினை மதுராபுரியில் கழித்த உயர்மனமுடைய அக்ரூரர், மறுநாள் காலை தனது இரதத்தில் ஏறிக் கொண்டு நந்த மகாராஜாவின் கோகுலத்திற்குப் புறப்பட்டார்.
பதம் 10.38.2 : தனது பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது மகாத்மா அக்ரூரர் செந்தாமரைக் கண்ணனான முழுமுதற் கடவுளிடத்து அதீதப் பக்தியினை உணர்ந்தார். அதனால் அவர் பின்வருமாறு கருதத் தொடங்கினார்.
பதம் 10.38.3 : (ஸ்ரீ அக்ரூரர் நினைத்தார்:) பகவான் கேசவனை இன்று நான் காணப்போவதற்கு என்ன புண்ணியச் செயல்கள் செய்தேன்? கடுமையான தவங்கள் என்ன செய்தேன்? என்ன வழிபாட்டினைச் செய்தேன்? அல்லது எதைத் தானம் கொடுத்தேன்?
பதம் 10.38.4 : புலனுகர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் லோகாயதவாதியாக நான் இருக்கின்ற காரணத்தினால் உத்தம சுலோகரான பகவானைத் தரிசிக்கும் பாக்கியம் நான் பெற்றது சூத்திர குலத்தில் பிறந்த ஒருவன் வேதம் மந்திரங்களை ஒதுவதற்கு அனுமதிக்கப்படுவது போல் எனக்கு மிகவும் அரியதாகும் என்று நான் கருதுகின்றேன்.
பதம் 10.38.5 : போதும் இதுபோன்ற நினைவுகள்! சாதாரண இழிந்த ஆத்மாவான என்னைப் போன்றவனுக்கே குற்றமற்ற பகவானின் தரிசனத்திற்கான பாக்கியம் கிட்டும் என்றால், காலம் என்னும் நதியில் இழுத்துச் செல்லப்படும் பந்தப்பட்ட ஆத்மாக்களில் யாரோ ஒருவன் சில சமயம் கரையினை அடையலாம்.
பதம் 10.38.6 : யோகிகளால் தியானிக்கப்படும் பரமபுருஷ பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு நான் எனது வந்தனங்களை அர்ப்பணிக்கப் போவதினால் இன்று எனது அனைத்துப் பாவங்களின் பலன்களும் நீங்கப் பெற்றன. எனது பிறப்பு பயனுடையதாயிற்று.
பதம் 10.38.7 : இவ்வுலகில் இப்போது அவதரித்திருக்கும் பகவான் ஹரியின் தாமரைத் திருவடிகளைத் தரிசிப்பதற்காக மன்னன் கம்சன் என்னை அனுப்பியதின்மூலம் இன்று அவன் எனக்குப் பெருங்கருணை காட்டியுள்ளான். அவர் கால் விரல்களின் நகங்களின் ஒளியினால் ஏராளமான ஆத்மாக்கள் முன்னர் கடப்பதற்கரிய பெளதிக வாழ்வின் இருளினைக் கடந்து விடுதலை பெற்றிருக்கின்றனர்.
பதம் 10.38.8 : அத்தாமரைத் திருவடிகள் பிரம்ம தேவனாலும், சிவபெருமானாலும், அனைத்துத் தேவர்களாலும், ஸ்ரீ தேவியாலும், மாமுனிவர்களாலும், வைணவர்களாலும் வழிபடப்படுகின்றன. அத்தாமரைத் திருவடிகளினால் பகவான் தமது நண்பர்களுடன் பசுக்களை மேய்க்கும் பொழுது வனத்தில் நடந்துசெல்கின்றார். அத்தாமரைத் திருவடிகளில் கோபியர்களின் மார்பகங்களிலுள்ள குங்குமத்துக்கள்கள் படிந்திருக்கின்றன.
பதம் 10.38.9 : மான்கள் என்னை வலப்புறமாகக் கடந்து செல்வதினால் நான் நிச்சயம் பகவான் முகுந்தனின் திருமுகத்தைத் தரிசிப்பேன். சுருண்ட மயிர்க்குழல்களினால் மறைக்கப்பட்டிருக்கும் அவரது திருமுகம், அவரது எழில்மிக்க கன்னங்கள், எடுப்பான நாசி, அவரது புன்னகை ததும்பும் பார்வைகள் மற்றும் அவரது சிவந்த செந்தாமரை விழிகளினால் அழகு செய்யப்படுகின்றது.
பதம் 10.38.10 : பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகத் தமது இனிய விருப்பத்தின் பேரில் மனித வடிவம் மேற்கொண்டவரும், எழில் நலம் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவருமான பரமபுருஷ பகவான் விஷ்ணுவைத் தரிசிக்கப் போகின்றேன். அதனால் எனது விழிகள் தமது தோற்றத்தின் பரிபூரணத்துவத்தை எய்தப்போவதில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை.
பதம் 10.38.11 : பௌதிகக் காரணம் மற்றும் விளைவிற்குச் சாட்சியாக அவரே விளங்குகின்றார். இருந்தும் அவற்றுடனான தவறான அடையாளத்திலிருந்து அவர் எப்போதும் விலகியே இருக்கின்றார். அவருடைய சுய சக்தியால் பிரிதல் மற்றும் குழப்பத்தின் இருளினை நீக்குகின்றார். தமது உலகியல் படைப்புச் சக்தியினை அவர் பார்ப்பதினால் உண்டாகும் இவ்வுலகிலுள்ள தனிப்பட்ட ஆத்மாக்கள் தங்கள் பிராணன், புலன்கள் மற்றும் புத்தியின் செயல்களினால் அவரை மறைமுகமாக உணர்கின்றனர்.
பதம் 10.38.12 : பரமபுருஷ பகவானின் குணங்கள், செயல்கள் மற்றும் தோற்றங்களினால் எல்லாப் பாவங்களும் அழிக்கப்பட்டு, எல்லா நன்மைகளும் உண்டாக்கப்படுகின்றன. இம்மூன்றினைப் பற்றியும் விவரிக்கும் வார்த்தைகள் இவ்வுலகிற்கு உயிரும், எழிலும் அளிப்பதோடு, அதனைத் தூய்மையும் செய்கின்றன. இதற்கு மாறாக அவரது கீர்த்திகளைப் புகழாத வார்த்தைகள் உயிரற்ற பிணத்திற்கு அழகு செய்வது போன்றவையாகும்.
பதம் 10.38.13 : அப்பரமபுருஷ பகவான் அவர் உருவாக்கிய அறநெறிகளைப் பேணுகின்ற உயர்ந்த தேவர்களை மகிழ்விப்பதற்காக சாத்வத குலத்தில் அவதரித்திருக்கின்றார். தேவர்கள் பாடல்களின் மூலம் போற்றி, சர்வமங்களங்களும் அளிக்கின்ற அவரது புகழினை விருந்தாவனத்தில் இருந்து அவரே பரப்புகின்றார்.
பதம் 10.38.14 : மகாத்மாக்களின் கதியாகவும், ஆன்மீக குருவாகவும் விளங்கும் அவரை இன்று நான் நிச்சயம் காண்பேன். இப்பிரபஞ்சத்தின் அழகே உருவாக விளங்கும் அவரைக் காண்பது விழி பெற்ற அனைவர்க்கும் விழாக்கால மகிழ்ச்சியினை அளிக்கும். உண்மையில் அவரது வடிவமே, அதிர்ஷ்ட தேவதை விரும்பும் புகலிடமாகும். இப்பொழுது எனது வாழ்வின் விடி வெள்ளி மங்களமுடையதாகின்றது.
பதம் 10.38.15 : பின்னர் நான் உடனடியாக எனது இரதத்திலிருந்து இறங்கி முழுமுதற் கடவுள்களான கிருஷ்ண, பலராமரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்குவேன். அவர்களின் அத்தாமரைத் திருவடிகளையே தன்னுணர்வு பெறுவதற்காகப் பெருமுயற்சிசெய்யும் யோகிகள் தங்கள் மனங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நான் பகவானின் ஆயர்குல நண்பர்களையும், விருந்தாவனத்தில் வாழும் அனைவரையும் கூட வணங்குவேன்.
பதம் 10.38.16 : மேலும் நான் அவரது திருவடிகளில் வீழும்பொழுது எல்லாம்வல்ல பகவான் தமது தாமரை மலர்க்கரத்தினை எனது தலையின் மீது வைப்பார். ஆற்றல்மிக்க காலம் என்னும் சர்ப்பத்தினால் பெரிதும் வருந்தி அவரது அடைக்கலம் நாடுபவர்களின் அனைத்துப் பயங்களையும் அவரது மலர்க்கரம் நீக்குகின்றது.
பதம் 10.38.17 : அத்தாமரைக் கரங்களுக்கு தானமளித்ததினால் புரந்தரனும் பலிச் சக்கரவர்த்தியும் தேவலோகத்தின் அரசபதவியான இந்திர பதவியை அடைந்தனர். ‘ராஸ’ நடனத்தின்போது பகவான் கோபியர்களின் முகத்திலுள்ள வியர்வை முத்துக்களைத் தமது கரத்தினால் துடைத்து அவர்களின் களைப்பினைப் போக்குவார். அப்போது அவர்களின் முக ஸ்பரிசம், இனிய நறுமணமிக்க மலரைப் போல் அவரது கரத்தினை நறுமணம் கமழச் செய்யும்.
பதம் 10.38.18 : கம்சன் தனது தூதனாக என்னை இங்கே அனுப்பியுள்ள போதிலும் குற்றமற்ற பகவான் என்னைத் தமது பகைவனாகக் கருதமாட்டார். எல்லாம் அறியவல்ல பகவானே இப்பெளதிக உடல் களத்தினை உண்மையில் அறிபவர் ஆவார். அவருடைய நிறைவான பார்வையினால் அவர் பந்தப்பட்ட ஆத்மாவின் இதயத்தில் உள்ளும் புறமும் நடைபெறும் எல்லாச் செயல்களையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
பதம் 10.38.19 : குவித்த கரங்களுடன் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கும் என்னை அவர் புன்னகையுடனும், பாசமிகு பார்வையுடனும் நோக்குவார். பின்னர் எனது மாசுக்கள் அனைத்தும் உடனே நீங்கப் பெறும். எனது ஐயங்கள் அனைத்தையும் ஒழித்து நான் மிகவுயர்ந்த இன்பம் எய்துவேன்.
பதம் 10.38.20 : என்னைத் தமது நெருங்கிய நண்பனாகவும், உறவினனாகவும் கருதி, கிருஷ்ணர் தமது உறுதிமிக்கக் கரங்களினால் தழுவிக் கொள்வார். அதன்மூலம் எனது உடலினைப் புனிதப்படுத்தி, பலன் தரும் செயல்களின் காரணமாக விளைந்த எனது தளைகள் அனைத்தையும் இல்லா தொழிப்பார்.
பதம் 10.38.21 : அனைத்துக் கீர்த்திகளுமிக்க பகவான் கிருஷ்ணரால் தழுவப்பெற்றவுடன், நான் அவர் முன்பு வணங்கிய தலையுடனும், குவித்த கரங்களுடனும் பணிவுடன் நிற்பேன். அப்போது அவர் என்னை “அன்பிற்குரிய அக்ரூரா” என்று அழைப்பார். அக்கணம் எனது வாழ்க்கை லட்சியம் நிறைவு பெறும். உண்மையில் முழுமுதற் கடவுளினால் அங்கீகரிக்கப்படாத எவனுடைய வாழ்க்கையும் இரங்கத்தக்கதேயாகும்.
பதம் 10.38.22 : முழுமுதற்கடவுளுக்கு, உயிரினும் இனிய, நெருங்கிய நண்பர் என்று எவருமிலர், அதுபோல் அவர் எவரையும் விரும்பத்தகாதவராகவோ, வெறுக்கத்தக்கவராகவோ அல்லது புறக்கணிக்கக் கூடியவராகவோ கருதுவதுமில்லை. தேவலோகத்திலுள்ள கற்பக விருட்சம் அதனை நாடிச் செல்பவர்களின் விருப்பங்களைத் தீர்த்து வைப்பதுபோல் அவர் எல்லோரிடத்தும் சமமாக, நம்மைத் தமது பக்தர்கள் எந்த முறையில் வழிபட்டாலும் அவர் அன்புடன் அவர்களுக்குக் கைம்மாறு செய்கின்றார்.
பதம் 10.38.23 : பின்னர் யதுகுலத்தில் சிறந்தவரும், பகவான் கிருஷ்ணரின் மூத்த சகோதரருமான பகவான் பலராமர் நான் தலைவணங்கியபடி நிற்கும் பொழுது எனது குவித்த கரங்களைத் தமது கரங்களினால் பற்றி என்னை மார்புடன் தழுவிக் கொள்வார். பிறகு என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே அவர் சகலவிதமான மரியாதைகளுடன் என்னை வரவேற்றுக் கெளரவப்படுத்துவார். அதன்பின் கம்சன் தமது உறவினர்களை எவ்வாறு நடத்துகின்றான் என்று என்னிடம் வினவுவார்.
பதம் 10.38.24 : சுகதேவகோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய அரசனே! சுவபல்கரின் மைந்தரான அக்ரூரர் வழியெங்கும் இவ்வாறு கிருஷ்ணரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு சூரியன் மறையும் வேளையில் கோகுலத்தினை அடைந்தார்.
பதம் 10.38.25 : எவருடைய தாமரைத் திருவடிகளிலுள்ளத் தூசியினை இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களின் ஆளுநர்களும் தங்கள் கிரீடங்களின் மீது தாங்கிக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களின் காலடிச் சுவடுகளை அக்ரூரர் கண்டார். பகவானின் அக்காலடிச் சுவடுகள் தாமரை, தானியம், மற்றும் அங்குசம் போன்ற அடையாளங்களினால் சிறப்புடையதாக விளங்கின. மேலும் அக்காலடிச்சுவடுகள் நிலத்தினை எழில் பெறச் செய்தன.
பதம் 10.38.26 : பகவானின் காலடிச் சுவடுகளைக் கண்ட ஆனந்த மெய்மறத்தலினால் அவர் அதிகமாகக் கிளர்ச்சியடைந்தார். அவருடைய தூய காதலினால் அவர் உடலிலுள்ள ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவருடைய கண்கள் கண்ணீரினால் நிரப்பப்பட்டன. தனது இரதத்திலிருந்து கீழே குதித்த அக்ரூரர் நிலத்தில் வீழ்ந்து அக்காலடிச் சுவடுகளின் மீது புரண்டவாறே “ஆ, எனது பிரபுவின் திருவடிகளிலுள்ள தூசி இதுவேயாகும்” என்று வியந்து கூவினார்.
பதம் 10.38.27 : கம்சனின் கட்டளையினைப் பெற்றவுடன் அக்ரூரர் தனது ஆணவம், அச்சம், துக்கம் எல்லாவற்றையும் துறந்து பகவான் கிருஷ்ணரை நினைவுறுத்தும் அடையாளங்களைப் பார்த்தல், அவற்றைப் பற்றிக் கேட்டல், பிறர்க்கு எடுத்துரைத்தல் போன்றவற்றில் தன்னை மறந்து எய்திய இந்தப் பெரியதோர் ஆனந்தம்தான் உடல்பெற்ற உயிர்கள் அனைத்தின் வாழ்க்கை இலட்சியமாக இருக்கின்றது.
பதங்கள் 10.38.28 – 10.38-33 : பின்னர் அக்ரூரர், விரஜ கிராமத்தில் கிருஷ்ணரும், பலராமரும் பசுக்களிடம் பால் கறக்கச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். கிருஷ்ணர் மஞ்சள் வண்ணப் பட்டாடையும், பலராமர் நீல வண்ணப் பட்டாடையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரின் விழிகளும் சரத்காலத் தாமரை மலர்களை ஒத்திருந்தன. வலிமைமிக்க கரங்களை உடையவர்களாகவும் அதிர்ஷ்ட தேவதையின் அடைக்கலங்களுமான அவ்விரு இளைஞர்களில் ஒருவர் கருநீல நிறமுடையவராகவும், மற்றொருவர் வெண்மை நிறம் உடையவராகவும் விளங்கினார். நேர்த்தியான முக அமைப்புடன் அவர்களிருவரும் எல்லோரையும் விட எழில்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இளமைமிக்க இரண்டு யானைகள் போல் அவர்கள் நடந்து சென்றனர். கருணையும் புன்னகையும் நிறைந்த பார்வையுடைவர்களாக இருந்தனர். தமது காலடிச் சுவடுகளினால் அம்மேன்மைமிக்க இருவரும் ஆயர்பாடியை அழகுபடுத்தினர். அவர்கள் பாதங்களில் கொடி, வஜ்ராயுதம், அங்குசம் மற்றும் தாமரை அடையாளங்கள் இருந்தன. பெருந்தன்மை மிக்கதும், மனதினை ஈர்ப்பதுமான லீலைகளைச் செய்யும் அவ்விரு பகவான்களும் நவ இரத்தினங்களினாலான கழுத்தணிகளும், மலர் மாலைகளும் அணிந்திருந்தனர். அப்போது தான் குளித்து முடித்து தங்கள் அங்கங்களில், புனித வாசனையுடைய திரவியங்கள் பூசி, கறையற்ற சுத்தமான ஆடைகள் அணிந்திருந்தனர். அவர்கள் ஆதி புருஷர்கள், பிரபஞ்சங்களின் மூல காரணர்கள் மற்றும் தலைவர்கள் பூமியின் நன்மைக்காக அவர்கள் கேசவர் மற்றும் பலராமர் என்னும் தங்கள் சிறப்புமிகு வடிவங்களில் அவதரித்திருக்கின்றனர். ஒ, பரீக்ஷித்து மன்னனே, அவர்கள் இருவரில் ஒருவர் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பச்சை மரகதமலை போன்றும் மற்றொருவர் வெள்ளிமலை போன்றும் விளங்கினர். தங்கள் ஒளியினால் அவர்கள் வானத்து இருளை எல்லாத் திசைகளிலும் நீக்கினர்
பதம் 10.38.34 : பாசத்தினால் உணர்ச்சிவயப்பட்டவராக, அக்ரூரர் தனது இரதத்திலிருந்து வேகமாகக் கீழே குதித்து கிருஷ்ணர் மற்றும் பலராமரின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக ஒரு தண்டத்தைப் போல் வீழ்ந்தார்.
பதம் 10.38.35 : ஓ! மன்னனே. பரமபுருஷ பகவானைக் கண்டதினால் அவருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தது. புளகாங்கிதத்தினால் அவர் உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தார். ஆர்வத்தினால் உணர்ச்சிவயப்பட்டு அவர் தன்னை அறிமுகப்படுத்தவும் வார்த்தை வாராது திணறினார்.
பதம் 10.38.36 : அக்ரூரரை அடையாளம் கண்டுகொண்ட பகவான் கிருஷ்ணர் இரதத்தின் சக்கரக் குறியுடைய தமது கரத்தினால் அவரைத் தூக்கித் தமது மார்புறத் தழுவிக் கொண்டார். தம்மைச் சரண் புகுந்த பக்தர்களிடம் மிகவும் பிரியமுடன் நடப்பவராதலினால் கிருஷ்ணர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
பதங்கள் 10.38.37 – 10.38-38 : தலைவணங்கி நின்ற அக்ரூரரின் குவித்த கரங்களை பகவான் சங்கர்ஷணர் (பலராமர்) தமது கரங்களினால் பற்றிக் கொண்டார்; பின்னர் பலராமர், கிருஷ்ணருடன் சேர்ந்து அக்ரூரரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அக்ரூரரிடம் அவரது பயணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா என்று வினவிய பின்னர் பலராமர் அவருக்கு உயர்ரக இருக்கை அளித்து, அவரது பாதங்களைச் சாத்திர நெறிமுறைக்கேற்ப நீராட்டி மரியாதையுடன் அவருக்குத் தேன்கலந்த பாலினைப் பருகுவதற்கு அளித்தார்.
பதம் 10.38.39 : எல்லாம் வல்ல பகவானான பலராமர் அக்ரூரருக்கு ஒரு பசுமாட்டினைப் பரிசாக அளித்து, அவரது பாதங்களைத் தமது கரத்தினால் பிடித்துவிட்டு அவரது களைப்பினைப் போக்கி, மிக்க மரியாதையுடனும், சிரத்தையுடனும் அவருக்குப் பல்வேறு சுவையுடைய உணவுகளை அளித்து உண்ணச் செய்தார்.
பதம் 10.38.40 : அக்ரூரர் மிக்க திருப்தியுடன் உணவு உண்டு முடித்த பின்னர், தர்ம நெறிகளை நன்கறிந்த பரமரான பகவான் பலராமர் அவரது வாய்க்கு இனிய சுவையளிக்கும் வாசானாதி மூலிகைகளை அவருக்கு அளித்தார். மேலும் அவருக்கு நறுமணமிக்க மலர் மாலையினையும் அளித்தார். அதனால் அக்ரூரர் மீண்டும் ஒருமுறை உயர் இன்பத்தினை அனுபவித்தார்.
பதம் 10.38.41 : நந்த மகாராஜா அக்ரூரரிடம் வினவினார்: ஒ, தாஸார் ஹ குலத்தைச் சேர்ந்தவரே, இரக்கமற்ற பாவியான கம்சன் இன்னும் உயிருடனிருக்கையில் நீங்கள் எல்லாம் எவ்வாறு உங்களைக் காத்து கொள்கின்றீர்கள்? ஒரு கசாப்புக் கடைக்காரனின் பாதுகாப்பில் இருக்கும் ஆடு போன்றவர் நீங்கள்.
பதம் 10.38.42 : அக்கொடிய சுயநலக்காரனான கம்சன் தனது தங்கையின் முன்னால் அவள் கதறிக்கதறி அழ, அவளது பச்சிளங்குழந்தைகளைக் கொன்றான். அதனால் அவனது குடிமக்களாகிய உங்களின் நலத்தைப் பற்றி நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?
பதம் 10.38.43 : உண்மையும், இனிமையும் நிறைந்த நந்த மகாராஜாவின் வார்த்தைகளினால் உபசரிக்கப்பட்டவுடன் அக்ரூரர் தனது பயணக் களைப்பினை மறந்தார்.