அத்தியாயம் – 7
தட்சன் நடத்திய வேள்வி
பதம் 4.7.1
மைத்ரேய உவாச
இதி அஜேனானுனீதேன பவேன பரிதுஷ்யதா
அப்யதாயி மஹா-பாஹோ ப்ரஹஸ்ய ஸ்ரூயதாம் இதி
மைத்ரேய:—மைத்ரேயர்; உவாச—கூறினார்; இதி—இவ்வாறு; அஜேன—பிரம்மதேவன்; அனுனீதேன—அமைதிப்படுத்துதல்; பவேன—சிவபெருமானால்; பரிதுஷ்யதா—முற்றும் அமைதியடைந்து; அப்யதாயி—கூறினார்; மஹா-பாஹோ—ஓ, விதுரனே; ப்ரஹஸ்ய—புன்னகைத்து; ஸ்ரூயதாம்—கேட்டு; இதி—இவ்வாறு.
மைத்ரேய முனிவர் கூறினார்: ஒ, வலிமையான கரங்களையுடைய விதுரனே, பிரம்மதேவனின் இவ்விளக்கங்களினால் சமாதானமடைந்த சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்று பின்வருமாறு பதில் கூறினார்.
பதம் 4.7.2
மஹாதேவ உவாச
நாகம் ப்ரஜேஸ பாலானாம் வர்ணயே நானுசிந்தயே
தேவ மாயாபி பூதானாம் தண்டஸ் தத்ரு த்ருதோ மயா
மஹாதேவ:—சிவபெருமான்; உவாச—கூறினார்; ந—இல்லை; அகம்—குற்றம்; ப்ரஜா-ஈஸ—ஓ, உயிர்களைப் படைத்தவரே; பாலானாம்—குழந்தைகளைப்போல்; வர்ணயே—என்னைப் பொறுத்தவரை; ந—இல்லை; அனுசிந்தயே—நான் கருதுகிறேன்; தேவ-மாயா—பகவானின் புறச்சக்தி; அபிபூதானாம்—மயக்கப்பட்டிருப்போர்; தண்ட:—கைத் தண்டம்; தத்ர— அங்கே; த்ருத:— பயன்படும்; மயா—என்னால்.
சிவபெருமான் கூறினார்: எனதன்பான தந்தை பிரம்ம தேவனே! தேவர்கள் இழைத்த குற்றத்தினை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் தேவர்கள் குழந்தைத்தனமாகவும் புத்தியின்றியும் நடந்து கொண்டனர். அவர்களது செயலை தான் கடுமையாகக் கருதவில்லை. இருந்தாலும் அவர்களைத் திருத்துவதற்காகவே நான் தண்டித்தேன்.
பதம் 4.7.3
பிரஜாபதேர் தக்த-ஸீர்ஷ்ணோ பவதவ அஜ-முகம் ஸிர:
மித்ரஸ்ய சக்ஷுஷேக்ஷேத பாகம் ஸ்வம் பர்ஹிஷோ பக:
ப்ரஜாபதே:—பிரஜாபதி தக்ஷனின்; தக்த-ஸீர்ஷ்ண:—அவரது தலை சாம்பலாக எரிக்கப்பட்டுவிட்டது; பவது—அது அப்படியே ஆகுக; அஜ-முகம்—ஒரு ஆட்டின் முகம்; ஸிர:—தலை; மித்ரஸ்ய—மித்திரனின்; சக்ஷுஷா—கண்களின் மூலம்; ஈக்ஷேத—காணலாம்; பாகம்—அவிர்பாகம்; ஸ்வம்—அவரது சுயமாக; பர்ஹிஷ:—வேள்வியின்; பக:—பகன்.
சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: தக்கனின் தலை எரிந்து சாம்பலாகிப் போய்விட்டதினால், அவர் ஒரு ஆட்டின் தலையைப் பெறுவாராக. பகன் என்றும் தேவன் மித்திரனின் கண்களைப் பெற்று அதன் மூலம் அவனுக்குரிய அவிர்பாகத்தினைக் காண்பானாக.
பதம் 4.7.4
பூஷாத யஜமானஸ்ய தத்பிர் ஜக்ஷது பிஷ்ட-புக்
தேவா: ப்ரக்ருத-ஸர்வாங்க யே ம உச்சேஷனம் தது:
பூஷா—பூஷன்; து—ஆனால்; யஜமானஸ்ய—வேள்வியின் தலைவர்; தத்பி:—பற்களுடன்; ஜக்ஷது—மென்று; பிஷ்ட-புக்—மாவினைத் தின்ன; தேவா:—தேவர்கள்; ப்ரக்ருத—செய்த; ஸர்வ-அங்கா:—முழுவதும்; யே—எவர்; மே—எனக்கு; உச்சேஷணம்—வேள்வியின் அவிர்பாகம்; தது:—அளித்தல்.
பூஷன் என்னும் தேவன் தன் சீடர்களின் பற்களின் மூலமே மென்று அவன் தனியே இருந்தானென்றால் தட்டைப் பயறு மாவினை மட்டுமே உண்பான். அவ்வேள்வியில் எனக்குரிய பொருளைத்தர ஒத்துக் கொண்ட அனைத்துத் தேவர்களும் தங்கள் காயம் குணமாகி நலம் அடைவார்களாக.
பதம் 4.7.5
பாஹுப்யாம் அஸ்வினோ: பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் க்ருத-பாஹவ:
பவந்து அத்வர்யவஸ் சான்யே பஸ்த-ஸ்மஸ்ருர் ப்ருகுர் பவேத்
பாஹுப்யாம்—இரு தோள்களையும்; அஸ்வினோ:—அஸ்வினீ குமாரர்களின்; பூஷ்ண:—பூஷனின்; ஹஸ்தாப்யாம்—இரு கரங்கள்; க்ருத-பாஹவ:—தோள்களை இழந்தோர்; பவந்து—பெறுவாராக; அத்வர்யவ:—புரோகிதர்கள்; ச—மேலும்; அன்யே—பிறர்; பஸ்த-ஸ்மஸ்ரு:—ஆட்டின் தாடி; ப்ருகு—பிருகு; பருவத்—பெறுவாராக.
இருபுஜங்களும் வெட்டுண்டு போனவர்கள் அசுவினி குமாரர்களின் புஜங்களினால் செயல்படுவாராக. இரு கரங்களும் வெட்டுண்டு போனவர்கள் பூஷனின் கரங்களினால் செயல்படுவாராக. புரோகிதர்களும் அவ்வாறே செயல்படட்டும். பிருகுவைப் பொறுத்தமட்டில் அவர் ஆட்டின் தாடியைப் பெறுவாராக!
பதம் 4.7.6
மைத்ரேய உவாச
ததா ஸர்வாணி பூதாணி ஸ்ருத்வா மீடுஷ்டமோதிகம்
பரி துஷ்டாத்மபிஸ் தாத ஸாது ஸாத்வ இதி அதாப்ருவன்
மைத்ரேய:—மைத்ரேய முனிவர்; உவாச—கூறினார்; ததா—அந்த நேரம்; ஸர்வாணி—எல்லோரும்; பூதானி—நபர்கள்; ஸ்ருத்வா—கேட்ட பிறகு; மீடு:-தம—வரமருள்பவரில் சிறந்தவர் (சிவபெருமான்); உதிதம்—கூறியதினால்; பரிதுஷ்ட—திருப்தியுற்று; ஆத்மபி:—ஆத்மா மற்றும் மனதினால்; தாத—என தன்பான விதுரனே; ஸாது ஸாது—நன்று, நன்று; இதி—இவ்வாறு; அதஅப்ருவன்—நாம் சொல்லியிருக்கின்றபடி.
மைத்ரேய முனிவர் கூறினார்: எனதன்பான விதுரனே,
நலமருள்வதில் மிகச் சிறந்தவரான சிவபெருமானின் வார்த்தைகளைக் கேட்டு அங்கு குழுமி இருந்த அனைவரும் மனப்பூர்வமாகவும், ஆன்ம நேயத்தோடும் மகிழ்ச்சியடைந்தனர்.
பதம் 4.7.7
ததோ மீட்வாம் ஸம் ஆமந்த்ரிய ஸுனாஸுரா: ஸுஹர்ஷிபி:
பூயஸ் தத் தேவ-யஜனம் ஸ-மீட்வத்-வேதஸோ யயு:
தத:—அதன் பின்னர்; மீட்வாம்ஸம்—சிவபெருமான்; அமந்த்ரி—அழைக்கப்பெற்று; ஸுனாஸுரா:—இந்திரன் தலைமையின் கீழுள்ள தேவர்கள்; ஸஹ ரிஷிபி:—பிருகு முனிவரால் தலைமை தாங்கப்பட்ட அனைத்து முனிவர்களும்; பூய—மீண்டும்; தத்—அந்த; தேவ-யஜனம்—தேவர்கள் வணங்கப்படும் இடம்; ஸ-மீட்வத்—சிவபெருமானுடன்; வேதஸ:—பிரம்மதேவனுடன்; யயு:—சென்றனர்.
அதன்பின்னர் முனிவர்களின் தலைவரான பிருகு முனிவர் வேள்வியில் கலந்து கொள்ளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டார். அதன்பேரில் சிவபெருமானும், பிரம்மதேவனும், தேவர்களும், முனிவர்களும், புடைசூழ அப்பெரிய வேள்வி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
பதம் 4.7.8
விதாய கார்த்ஸுன்யேன சதத் யத் ஆஹ பகவான் பவ:
ஸந்தது: கஸ்ய காயேன ஸவனீய-பஸோ: ஸிர:
விதாய—நிறைவேற்றுவதற்கு; கார்த்ஸுன் யேன—எல்லாம்; ச—மேலும்; தத்—அந்த; யத்—எது; ஆஹ—கூறப்பட்டது; பகவான்—பகவான்; பவ:—சிவபெருமான்; ஸந்தது:—நிறைவேற்றப்பட்டது; கஸ்ய—உயிரின் (தக்ஷன்); காயேன—உடலுடன்; ஸவனீய—வேள்விக்குரிய; படுஸா:—விலங்கின; ஸிர:—தலை.
சிவபெருமானின் கட்டளையின்படி எல்லாம் நிறைவேற்றப்பட்டவுடன் வேள்வியில் பலியிடுவதற்காக வைத்திருந்த ஆட்டின் தலையினை தக்கனது உடலில் பொருத்தினர்.
பதம் 4.7.9
ஸாந்தீயமானே ஸிரஸி தக்ஷோ ருத்ராபிவீக்ஷித:
ஸத்ய: ஸுப்த இவோத்தஸ்தௌ தத்ருஸே சாக்ரதோ ம்ருடம்
ஸந்தீயமானே—நிறைவேற்றப்பட்டு; ஸிரஸி—தலையினால்; தக்ஷ:—தக்கன் எனும் மன்னர்; ருத்ர-அபிவீக்ஷித:—ருத்திரனால் (சிவபெருமான்) காணப்பட்டு; ஸத்ய:—உடனடியாக; ஸுப்தே—உறக்கம்; இவ—போல; உத்தஸ்தௌ—விழித்தார்; தத்ருஸே—கண்டு; ச—மேலும்; அக்ரத:—முன்னர்; மிருடம்—சிவபெருமான்.
ஆட்டின் தலை தக்கனின் உடலுடன் பொருத்தப்பட்டவுடன், தக்கன் உணர்வுபெற்று உறக்கத்தினின்று விழிப்பதுபோல் எழுந்து தன் முன்னே சிவபெருமான் நிற்பதைக் கண்டான்.
பதம் 4.7.10
ததா வ்ருஷத்வஜ-த்வேஷ-கலிலாத்மா ப்ரஜாபதி:
ஸிவாவலோகாத் அபவச் சரத்-த்ரத இவாமல:
ததா—அந்தநேரம்; வ்ருஷ-த்வஜ—காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவபெருமான்; த்வேஷ—துவேஷம்; கலிலா-ஆத்மா—அழுக்கான மனம்; ப்ரஜாபதி:—தக்ஷ மன்னர்; ஸிவ—சிவபெருமான்; அவலோகாத்—அவரைக் கண்டு; அபவத்—ஆனார்; ஸரத்—சரத் காலம்; ஹ்ரத:—ஏரி; இவ—போல; அமல:—தூய்மையடைந்தது.
காளை வாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தந்த சிவபெருமானைக் கண்டவுடன் தக்கனது காழ்ப்புற்ற அழுக்கு மனம் சரத் காலத்து மழையினால் குளத்து நீர் தூய்மையடைவது போல் உடனே தூய்மையடைந்தது.
பதம் 4.7.11
பவ-ஸ்தவாய க்ருத-தீர் நாஸக்நோத் அனுநாகத்:
ஒளட்கண்டயாத் பாஷ்ப-கலயா ஸம்பரேதம் ஸுதாம் ஸ்மரன்
பவ-ஸ்தவாய—சிவபெருமானைத் துதிப்பதற்காக; க்ருததீ:—நினைத்தாலும்; ந—இல்லை; அஸக்னோத்—இயல்வது; அனுராகத்:—உணர்ச்சிவயப்பட்டு; ஓளத்கண்ட்யாத்—ஆர்வத்தின் காரணமாக; பாஷ்ப-கவயா—கண்களில் நீர் பெருக; ஸம்பரேதம்—மறைந்த; ஸுதாம்—மகள்; ஸ்மரன்—நினைத்து.
தக்கன் சிவபெருமானைத் துதிக்க விரும்பினார். ஆனால் அவர் தன் அருமை மகள் சதீயின் அநியாய மரணத்தை எண்ணி கண்களில் நீர் பெருக, சோகத்தினால் குரல் கம்ம ஒன்றும் கூறாது இருந்தார்.
பதம் 4.7.12
க்ருச்ச்ராத் ஸம்ஸ்தப்ய ச மன: ப்ரேம விஹ்வலித: ஸுதீ:
ஸஸம்ஸ நிர்வ்யலீகேன பாவேநேஸம் ப்ரஜாபதி:
க்ருச்ச்ராத்—கடுமையான முயற்சியுடன்; ஸம்ஸ்தப்ய—சாந்தப்படுத்தி; ச—மேலும்; மன:—மனம்; ப்ரேம-விஹ்வலித:—அன்பினாலும், பாசத்தினாலும் குழப்பமுற்று; ஸு-தீ:— தன் சுய நினைவு வந்து; ஸஸம்ஸ—போற்றினார்; நிர்வ்யலீகேன—எவ்விதப் பொய்மையுமின்றி; பாவேன—உணர்ச்சியில்; ஈஸம்—சிவபெருமானுக்கு; ப்ரஜாபதி:—தக்க மன்னர்.
இவ்வாறு அன்பினாலும், பாசத்தினாலும் தன்னிலை மறந்திருந்த தக்கன் சுய உணர்வு பெற்றவராக மாறினார். கடுமையாக முயற்சித்து தன் மனதினைச் சாந்தப்படுத்தி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவர் தூய உணர்வுடன் சிவபெருமானை வணங்கத் தொடங்கினார்.
பதம் 4.7.13
தக்ஷ உவாச
பூயான் அநுக்ரஹ அஹோ பவதா க்ருதோ மே
தண்டஸ் த்வயா மயி ப்ருதோ யத் அபி ப்ரலப்த:
ந ப்ரஹ்ம-பந்துஷு ச வாம் பகவன்ன அவஜ்ஞா
துப்யம் ஹரேஸ் ச குத ஏவ த்ருத-வ்ரதேஷு
தக்ஷ—தக்கன்; உவாச—கூறினார்; பூயான்—மிகச்சிறந்த; அனுக்ரஹ:—சலுகை; அஹோ—அந்தோ; பவதா—உம்மால்; க்ருத:—செய்யப்பட்ட; மே—எனக்கு; தண்ட:—தண்டனை; த்வயா—உம்மால்; மயி—எனக்கு; ப்ருத:—செய்யப்பட்ட; யத்சுபி—இருந்தாலும்; ப்ரலப்த:—தோற்றது; ந—இல்லை; ப்ரஹ்ம-பந்துஷு—தகுதியில்லாத அந்தணனுக்கு; ச—மேலும்; வாம்—நீங்கள் இருவரும்; பகவான்—பகவான்; அவஜ்ஞா—புறக்கணித்தல்; துப்யம்—உம்மால்; ஹரே: ச—பகவான் விஷ்ணு; குத:—எங்கே; ஏவ—நிச்சயமாக; த்ருத-வ்ரதேஷு—வேள்வி செய்வதில் ஈடுபட்டிருப்போன்.
மன்னர் தக்கன் கூறினார்: போற்றுதற்குரிய சிவபெருமானே உம்மிடத்தில் நான் மிகப்பெரிய குற்றம் புரிந்துவிட்டேன். ஆனாலும் நீர் மிக்க அன்புடையவராதலால் உமது கருணையினை திரும்பப் பெற்று கொண்டபோதிலும் என்னைத் தண்டித்ததின் மூலம் எனக்கு மிகப் பெரிய நன்மை புரிந்துள்ளீர். நீவிரும், பகவான் விஷ்ணுவும் பயனும், தகுதியுமற்ற அந்தணர்களைக் கூடப் புறக்கணித்ததில்லை. ஆகையினால் வேள்விச் செயல்களில் ஈடுபடுகின்ற என்னை நீர் ஏன் புறக்கணக்கப் போகிறீர்?
பதம் 4.7.14
வித்யா-தபோ-வ்ரத-தரான் முகத: ஸ்ம விப்ரான்
ப்ரஹ்மாத்ம-தத்த்வம் அவிதும் ப்ரதமம் த்வம் அஸ்ராக்
தத் ப்ராஹ்மணான் பரம ஸர்வ-விபத்யஸு பாஸி
பால: பஸுன் இவ விபோ ப்ரக்ருஹீத-தண்ட:
வித்யா—கற்பது; தப—தவம்; வ்ரத—விரதம்; தரான்—பின்பற்றுவோர்; முகத:—வாயினின்று; ஸ்ம—இருந்தார்; விப்ரான்—அந்தணர்கள்; ப்ரஹ்மா—பிரம்ம தேவன்; ஆத்ம-தத்வம்—ஆத்ம உணர்வு; அவிதும்—பரப்புவதற்காக; ப்ரதமம்—முதல்; தவம்—நீர்; அஸ்ராக்—படைத்தது; தத்—ஆகையினால்; ப்ராஹ்மணன்—அந்தணர்கள்; பரம—ஓ, உன்னதமானவரே; ஸர்வ—எல்லாம்; விபத்ஸு—ஆபத்தில்; பாஸி—நீர் பாதுகாக்கின்றீர்; பால:—பாதுகாப்பவர் போல; பஸுன்—விலங்குகள்; இவ—போல; விபோ—ஓ, சிறந்தவரே; ப்ரக்ருஹீத—கையில் வைத்திருப்பது; தண்ட:—தண்டம்.
எனதன்பிற்குரிய சிறப்பும், வலிமையும் உடைய சிவபெருமானே, அந்தணர்கள் கல்வியும், தவமும், விரதமும், ஆத்ம உணர்வும் தொடர்ந்து பெறுவதைப் பாதுகாப்பதற்காக நீர் பிரம்மதேவனின் வாயிலிருந்து முதன் முதலாகப் படைக்கப்பட்டீர். மாடு மேய்ப்போன் தன் கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு எவ்வாறு மாடுகளைப் பாதுகாக்கின்றானோ அதுபோல் நீர் அந்தணர்களையும், அவர்கள் பின்பற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பாதுகாக்கின்றீர்.
பதம் 4.7.15
யோ ‘ஸௌ மயாவிதித-தத்த்வ-த்ருஸாஸபாயாம்
க்ஷிப்தோ துருக்தி- விஸிகைர் விகனய்ய தன் மாம்
அர்வாக் பதந்தம் அர்ஹத்தம நித்தயாபாத்
த்ருஷ்ட்யார்த்ரயா ஸ பகவான் ஸ்வ க்ருதேன-துஷ்யேத்
ய—யார்; அஸௌ—அந்த; மயா—என்னால்; அவிதித-தத்த்வ—உண்மை என்ன என்பதறியாது; த்ருஸா—அனுபவத்தினால்; ஸபாயாம்—சபையில்; க்ஷிப்த:—குற்றம் சாட்டினேன்; துருக்தி—அன்பில்லாத வார்த்தைகள்; விஸிகை:—அம்புகளைப் போல் கூர்மையான; விகனய்ய—கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை; தத்—அந்த; மாம்—எனது; அர்வாக்—கீழ்முகம்; பதந்தம்—நரகத்திற் சரிந்தேன்; அர்ஹத்-தம—மிகவும் மரியாதைக்குரிய; நிந்தயா—பழிதூற்றலினால்; அபாத்—காப்பாற்றப்பட்டு; த்ருஷ்ட்யா—கண்டு; ஆர்த்ரயா—கருணையினால்; ஸ:—அந்த; பகவான்—தங்கள் மேலாண்மையின் கீழ்; ஸ்வ-க்ருதேன—உமது சொந்த கருணையினால்; துஷ்யேத்—திருப்தியடைதல்.
சிவபிரானே! உமது முழுப் புகழையும் நான் அறிந்தேனில்லை. இக்காரணத்தினாலேயே அம்பினும் கொடிய வார்த்தைகளை நான் ஒரு சபையில் உம்மீது பிரயோகித்தேன். ஆனாலும் அவற்றை நீர் பொருட்படுத்தவில்லை. உம்போன்ற மரியாதைக்குரியவரைப் பணியாததினால் நான் கீழான நரகத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் என் மீது கருணை கொண்டு என்னைத் தண்டித்ததின் மூலம் நீர் காத்தருளினீர், எனது வார்த்தைகளினால் உம்மைத் திருப்திப்படுத்த இயலாது. ஆதலினால் உமது சுய கருணையினாலேயே நீர் திருப்தியடைய வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
பதம் 4.7.16
மைத்ரேய உவாச
க்ஷமாப்யைவம் ஸ மீட்வாம்ஸம் ப்ரஹ்மணா சானுமந்த்ரித:
கர்ம ஸந்தானயாம் ஆஸ ஸோபாத்யாயர்த்விக் ஆதிபி:
மைத்ரேய:—மைத்ரேய முனிவர்; உவாச—கூறினார்; க்ஷமா—மன்னித்தல்; ஆப்ய—பெற்று; ஏவம்—இவ்வாறு; ஸ:—தக்ஷ மன்னர்; மீட்வாம்ஸம்—சிவபெருமானுக்கு; ப்ரஹ்மணா—பிரம்மதேவனுடன்; ச—மேலும்; அனுமந்த்ரித:—அனுமதிக்கப்பட்டு; கர்ம—வேள்வி; ஸந்தானாயாம் ஆஸ—மீண்டும் தொடங்கினார்; ஸ—உடன் சேர்ந்து; உபாத்யாய—கற்றறிந்த முனிவர்கள்; ருத்விக்—புரோகிதர்கள்; ஆதிபி:—மற்றவர்களும்.
மைத்ரேய மாமுனிவர் கூறினார்: சிவபெருமானால் மன்னித்தருளப்பட்ட தட்சன் பிரம்ம தேவனின் அனுமதியுடன், கற்றறிந்த முனிவர்களுடனும், புரோகிதர்களுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து மீண்டும் வேள்வியினைச் செய்யத் துவங்கினார்.
பதம் 4.7.17
வைஷ்ணவம் யஜ்ஞ-ஸந்தத்யை த்ரி-கபாலம் த்வஜோத்தமா:
புரோடாஸம் நிரவபம் வீர-ஸம்ஸர்க் ஸுத்தயே
வைஷ்ணவம்—பகவான் விஷ்ணு அல்லது அவர் பக்தர்களைக் குறிப்பது; யஜ்ஞ—வேள்வி; ஸந்தத்யை—செய்வதற்காக; த்ரி-கபாலம்—மூன்று வகையான அர்ப்பணிப்புகள்; த்விஜ-உத்தமா:—அந்தணர்களில் சிறந்தவர்; புரோடாஸம்—புரோதாஸம் என்னும் நைவேத்தியம்; நிரவபன்—அர்ப்பணித்து; வீர—வீரபத்திரன் மற்றும் சிவபெருமானின் அடியவர்கள்; ஸம்ஸர்க—அவர்களது தொடுதலினால் ஏற்பட்ட தோஷம்; ஸுத்தயே—தூய்மை செய்வதற்காக.
அதன்பிறகு வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னதாக அந்தணர்கள் முதலில் வீரபத்திரனாலும், சிவபெருமானது பூத கணங்களினாலும் வேள்விச் சாலையில் ஏற்பட்ட பழுதினைச் சுத்தம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். பிறகு அவர்கள் வேள்வித் தீயில் ‘புரோதாஷம்’ என்னும் நைவேத்தியத்தினை ஆகுதி செய்வதற்குரிய ஏற்பாட்டினைச் செய்தனர்.
பதம் 4.7.18
அத்வர்யுணாத்த-ஹவிஷா யஜமானோ விஸாம்பதே
தியா விஸுத்தயா தத்யெள ததா ப்ராது ராபூத் தரி:
அத்வர்யுணா—யஜுர் வேதத்துடன்; ஆத்த—கொண்டு; ஹவிஷா—சுத்தமான வெண்ணையுடன்; யஜமானே:—மன்னர் தக்ஷன்; விஸாம்-பதே—ஓ, விதுரனே; தியா—தியானத்தில்; விஸுத்தயா—புனிதம் செய்யப்பட்டது; தத்யௌ—அர்ப்பணித்தல்; ததா—உடனடியாக; ப்ராது:—வெளிப்படல்; அபூத்—ஆனார்; ஹரி:—ஹரி பகவான்.
மாமுனி மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: எனதன்பிற்குரிய விதுரனே, தட்சன் தூய்மையான தியானத்தில் சுத்தம் செய்யப்பட்ட வெண்ணையை, யஜுர் வேத மந்திரங்களை ஓதி அர்ப்பணித்தவுடன் பகவான் விஷ்ணு தனது மூல வடிவமான நாராயணராக அங்கே தோன்றினார்.
பதம் 4.7.19
ததா ஸ்வ-ப்ரபயா தேக்ஷாம் த்யோதயந்த்யா திஸோ தஸ
முஷ்ணம்ஸ் தேஜ உபானீதஸ் தார்க்ஷ்யேண ஸ்தோத்ர வாஜினா
ததா—அந்தச் சமயம்; ஸ்வ-ப்ரபயா—அவரது சுய ஒளியினால்; தேக்ஷாம்—அனைவரும்; த்யோதயந்த்யா—ஒளிர்ந்ததினால்; திஸ:—திசைகள்; தஸ—பத்து; முஷ்ணன்—குறைந்தது; தேஜ:—ஒளி ஜோதி; உபானீத:—கொண்டு; தார்க்ஷ்யேன—கருடனால்; ஸ்தோத்ர-வாஜினா—அவர் இறக்கைகள் பிருஹத் மற்றும் ரதந்திரம் என்று அழைக்கப்படுகின்றன.
பகவான் நாராயணர் பெரிய இறக்கைகளையுடைய ஸ்தோத்திரம் எனப் பெயரிய கருடனின் தோள்களின் மீது அமர்ந்திருந்தார். பகவான் அங்கே தோன்றியபோது எல்லாத் திசைகளும் ஒளிர்ந்தன. அத்தகைய பேரொளி அங்கிருந்த பிரம்மதேவன் உள்ளிட்ட அனைவரது ஒளியினையும் மங்கச் செய்தது.
பதம் 4.7.20
ஸ்யாமோ ஹிரண்ய-ரஸனோ ‘ர்க-க்ரீட-ஜுஷ்டோ
நீலாக-ப்ரமா-மண்டித-குண்டலாஸ்ய:
ஸங்காப்ஜ-சக்ர-ஸர-சாப-கத-சர்ம
வ்யக்ரைர் ஹிரண்மய-புஜைர் இவ கர்ணிகார:
ஸ்யாம:—கருமையான; ஹிரண்ய–ரஸன:—பொன்னைப் போன்ற ஆடை; அர்க-க்ரீட-ஜுஷ்ட:—சூரியனைப் போல் ஒளிரும் கிரீடம்; நீல-அகல—நீலச் சுருள்முடி; ப்ரமா—பெரிய கரிய தேனீக்கள்; மண்டித-குண்டல-ஆஸ்ய:—குண்டலம் அணிந்த காதுகளினால் அழகு செய்யப்பட்ட முகம்; ஸங்க—சங்கு; அப்ஜ—தாமரை மலர்; சக்ர—சக்கரம்; ஸர—அம்புகள்; சாப—வில்; கதா—கதாயுதம்; அஸி—வாள்; சர்ம—கேடயம்; வ்யக்ரை:—நிரம்பப் பெற்று; ஹிரண்மய—பொன்னாலான (காப்பு மற்றும் கைவளை); புஜை:—கரங்களுடன்; இவ—போல; கர்ணிகார:—பூ மரம்.
அவரது நிஜம் கருமையானது, அவரது ஆடைகள் பொன்னிறமான மஞ்சள் வண்ணத்தால் ஆகியது. அவர் தலையில் சூடியிருந்த முடி சூரியனைப் போல் தகதகத்தது. அவரது சுருண்ட தலைமுடி கரிய வண்டுகளைப் போல் கருநீலமாயிருந்தது. அவரது காதுக் குண்டலங்கள் முகத்திற்கு எழில் செய்தன. பொன்னாலான காப்புகளும், வளைகளும் அணிந்திருந்த தன் எட்டுக் கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரைமலர், அம்பு, வில், கேடயம் மற்றும் வாள் போன்றவற்றை வைத்திருந்தார். பல்வேறு அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிய ஒரு மரம் போன்று அவரது தோற்றம் கண்களைப் பறித்தது.
பதம் 4.7.21
வக்ஷஸி அதிஸ்ரித-வதூர் வன- மாலி உதார-
ஹாஸாவலோக-கலயா ரமையம்ஸ் சவிஸ்வம்
பார்ஸ்வ-ப்ரமத்-வ்யஜன-சாமர-ராஜ-ஹம்ஸ:
ஸ்வேதாத்பத்ர-ஸஸினோபரி ரஜ்யமான:
வக்ஷஸி—நெஞ்சின் மேல்; அதிஸ்ரித—இருப்பது; வதூ—ஒரு பெண் (லக்ஷ்மி என்னும் அதிர்ஷ்ட தேவதை); வன-மாலீ—காட்டுமலர்களைக் கொண்ட மாலையினை அணிந்திருப்பவர்; உதார—அழகு; ஹாஸ—புன்னகை; அவலோக—பார்வை; கலயா—ஒரு சிறுபாகம்; ரமயன்—ரம்மியமானது; ச—மேலும்; விஸ்வம்—முழுப் பிரபஞ்சமும்; பார்ஸ்வ—பக்கம்; ப்ரமத்—முன்னும், பின்னும் அசைவது; வ்யஜன-சாமர—சாமரங்கள்; ராஜஹம்ஸ:—அன்னம்; ஸ்வேத-ஆதபத்ர-ஸஸினா—நிலவினைப் போன்ற வெண் கொற்றக் குடை; உபரி—மேலே; ரஜ்யமான:—எழில்மிகு தோற்றம்.
பகவான் விஷ்ணு பார்ப்பதற்கு மிகவும் எழில் வாய்ந்தவராக இருந்தார். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதையான செல்வத்துக்குரிய இலக்குமியும் மலர் மாலையோடு அவர் மார்பில் இடம் பெற்று அணி செய்தாள். உலகம் முழுவதையும் குறிப்பாகப் பக்தர்களை ஈர்க்கும் புன்னகையினால் அவரது முகம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு அன்னப் பறவைகள் போல் வெண்மையான இரு சாமரங்கள் அவருக்கு இருபுறமும் இருந்தன. அவரது தலைக்கு மேலுள்ள வெண்கொற்றக் குடையானது முழு வெண்ணிலவு போல் தோற்றம் அளித்தது.
பதம் 4.7.22
தம் உபாகதம் ஆலக்ஷ்ய ஸர்வே ஸுர-கணாதய:
ப்ரணேமு: ஸஹஸொத்தாய ப்ரஹ்மேந்த்ர-த்ரயக்ஷ-நாயகா:
தம்—அவரது; உபாகதம்—வந்தவுடன்; ஆலக்ஷ்ய—பார்த்தவுடன்; ஸர்வே—அனைவரும்; ஸுர-கண-ஆதய—தேவர்களும், பிறரும்; ப்ரணேமு—வந்தனங்கள்; ஸஹஸா—உடனடியாக; உத்தாய—எழுந்து நின்று; ப்ரஹ்ம—பிரம்மதேவன்; இந்த்ர—தேவேந்திரன்; த்ரி-அக்ஷ:—சிவபெருமான் (முக்கண்ணுடையவர்); நாயகா:—தலைமையில்.
பகவான் விஷ்ணு தோன்றியவுடன் அங்கிருந்த பிரம்ம தேவன், சிவபெருமான், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரது திருவடிகளில் விழுந்து தங்கள் மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்தனர்.
பதம் 4.7.23
தத் தேஜஸா ஹத-ருச: ஸன்ன-ஜிஹ்வா: ஸ-ஸாத்வஸா:
மூர்த்னா த்ருதாஞ்ஜலி-புடா உபதஸ்துர் அதோக்ஷஜம்
தத்—தேஜஸா அவர் உடலிலிருந்து வீசிய ஒளிவெள்ளத்தில்; ஹத-ருச:—ஒளி மங்கியது; ஸன்ன-ஜிஹ்வா:—பேச்சு மூச்சின்றி அமைதியாயிருத்தல்; ஸ-ஸாத்வஸா:—அவரிடம் கொண்ட அச்சத்தினால்; மூர்த்னா—தலையுடன்; த்ருத-அஞ்ஜலி-புடா:—தலைமீது கரம் குவித்து; உபதஸ்து:—வணங்கினர்; அதோக்ஷம்—அதோக்ஷஜர் என்னும் முழுமுதற் கடவுளுக்கு.
பகவான் நாராயணரின் உடலிலிருந்து வீசிய பரந்த ஒளி வெள்ளத்தில் அங்கிருந்த அனைவரும் தத்தமது ஒளி இழந்தனர். அவரவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதி ஆயினர். தங்கள் கரங்களைத் தலையின் மேல் குவித்த வண்ணம் முழுமுதற் கடவுளாகிய அதோட்சருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகினர்.
பதம் 4.7.24
அபி அர்வாக்-வ்ருத்தயோ யஸ்ய மஹி த்வ ஆத்மபுவ்-ஆதய:
யதா-மதி க்ருணந்தி ஸ்ம க்ருதானுக்ரஹ-விக்ரஹம்
அபி—மேலும்; அர்வாக்-வ்ருத்தய:—கற்பனைக் கெட்டாத; யஸ்ய—எவருடையது; மஹி—மகிமை; து—ஆனால்; ஆத்மபூ-ஆதய:—பிரம்மா முதலியோர்; ஸ்ம—பிரார்த்தித்தனர்; க்ருத-அனுக்ரஹ—அவரது அருளினால்; விக்ரஹம்—உன்னத வடிவில்.
முழுமுதற் கடவுளின் பெருமையானது பிரம்ம தேவன் போன்ற தேவர்களினால் கூட மனத்தினால் உணர முடியாததாகும். அதனால் முழுமுதற் கடவுளின் அருளினாலேயே அவரது உன்னத வடிவினை மனத்துள் வாங்க முயன்றனர். அவர் அருளினாலேயே, அவரவர் தகுதிக்கேற்ப அவர்கள் தங்கள் வழிபாட்டினைச் செய்தனர்.
பதம் 4.7.25
தக்ஷோ க்ருஹீதார்ஹண-ஸாதனோத்தமம்
யக்ஜேஸ்வரம் விஸ்வ-ஸ்ருஜாம் பரம் குரும்
ஸுநந்த-நந்தாதி-அநுகைர் வ்ருதம் முதா
க்ருணன் ப்ரபேதே ப்ரயத: க்ருதாஞ்ஜலி:
தக்ஷ:—தக்ஷன்; க்ருஹீத—ஏற்றுக் கொள்ளல்; அர்ஹண—உரிமையுள்ள; ஸாதன-உத்தமம்—வேள்விப் பாத்திரம்; யஜ்ஞ-ஈஸ்வரம்—அனைத்து வேள்விகளுக்கும் நாயகன்; விஸ்வ-ஸ்ருஜாம்—அனைத்து பிரஜாபதிகளின்; பரம்—பரம; குரும்—குரு; ஸுநந்த-நந்த-ஆதி-அநுகை:—சுநந்தன் மற்றும் நந்தனைப் போன்ற துணைவர்களினால்; வ்ருதம்—சூழப்பட்டு; முதா—மிகுந்த மகிழ்ச்சியுடன்; க்ருணன்—மரியாதைக்குரிய பிரார்த்தனைகளை அர்ப்பணித்து; ப்ரபேதே—அடைக்கலம் புகுந்து; ப்ரயத:—அடங்கிய மனதைப் பெறுதல்.
பகவான் விஷ்ணு வேள்வியில் படைக்கப்பட்ட வழிபடு பொருட்களை ஏற்றுக் கொண்டவுடன் பிரஜாபதி தட்சன் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்குத் தனது மரியாதை மிகுந்த பிரார்த்தனைகளைத் தொடங்கினார். முழுமுதற் கடவுளே உண்மையில் வேள்விகளின் நாயகனும், பிரஜாபதிகளின் குருவும் ஆவார். மேலும் அவர் சுநந்தன் மற்றும் நந்தன் போன்றவர்களினால் கூட வணங்கித் தொண்டு செய்யப்படுகிறார்.
பதம் 4.7.26
தக்ஷ உவாச
ஸுத்தம் ஸ்வ-தாம்னி உபரதாகில-புத்தி-அவஸ்தம்
சின்-மாத்ரம் ஏகம் அபயம் ப்ரதிஷித்ய மாயாம்
திஷ்டம்ஸ் தயைவ புருஷத்வம் உபேத்ய தஸ்யாம்
ஆஸ்தே பவான் அபரிஸுத்த இவாத்ம-தந்தர:
தக்ஷ:—தக்கன்; உவாச—கூறினார்; ஸுத்தம்—சுத்தம்; ஸ்வ-தாம்னி—உமது இருப்பிடத்தில்; உபரத-அகில—முற்றிலும் பின்னால் திரும்பிய; புத்தி-அவஸ்தம்—புத்தி அவஸ்தை; சித்-மாத்ரம்—முற்றிலும் ஆன்மீகமான; ஏகம்—இரண்டற்ற ஒன்று; அபயம்—அச்சமின்றி; ப்ரதிஷித்ய—கட்டுப்படுத்தி; மாயாம்—பௌதீக சக்தி; திஷ்டன்—இருக்கின்ற; தயா—அவருடன் (மானய); ஏவ—உறுதியாக; புருஷத்வம்—கண்காணிப்பவர்; உபேத்ய—உள்ளே நுழைகின்ற; தஸ்யாம்—அவளுள்; ஆஸ்தே—இருக்கிறது; பவான்—தாங்கள்; அபரிஸுத்த—தூய்மையற்றது; இவ—போன்று; ஆத்ம-தந்த்ர—சுய நினைவு உடையவர்.
முழுமுதற் கடவுளைத் தக்கன் பிரார்த்தித்தார்: எனது வணக்கத்திற்குரிய பகவானே! அனைத்து யூக நிலைகளுக்கும் மேலானவராக விளங்குகிறீர். நீவிர் முற்றிலும் ஆன்மீகமானவர். அச்சம் என்பது அறவே இல்லாதவர், பெளதீகச் சக்தியினை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர். பெளதீகச் சக்தியில் நீவிர் தோன்றிய போதிலும் உன்னதமான நிலையில் இருப்பவர். எப்போதும் உலகியல் குற்றங்களினின்றும் விடுதலை பெற்றவராக நீங்கள் விளங்குகின்றீர், ஏனென்றால் நீவிர் முற்றிலும் தன்னிறைவு பெற்றவர் ஆவீர்.
பதம் 4.7.27
ருத்விஜ ஊசு:
தத்த்வம் ந தே வயம் அனஞ்ஜன ருத்ர-ஸாபாத்
கர்மணி அவக்ரஹ -தியோ பகவன் விதாம:
தர்மோபலக்ஷணம் இதம் த்ரிவ்ருத் அத்வராதக்யம்
ஞாதம் யத்-அர்தம் அதிதைவம் அதோ வ்ய வஸ்தா:
ருத்விஜ:—புரோகிதர்கள்; ஊசு:—கூறத் தொடங்கினர்; தத்த்வம்—உண்மை; ந—இல்லை; தே—உமது மேலாண்மை மிக்க; வயம்—நாங்கள் எல்லாம்; அனஞ்ஜன—ஜட மாசுக்களினின்று; ருத்ர—சிவபெருமான்; ஸபாத்—அவரது சாபத்தினால்; கர்மணி—பலன்தரும் செயல்களில்; அவக்ரஹ—மிகுந்த பற்றுடையோராய்; திய:—இதுபோன்ற புத்தியினால்; பகவான்—ஓ, பகவானே; விதாம:—அறிதல்; தர்ம—சமயம்; உபவக்ஷணம்—சின்னமாக; இதம்—இந்த; த்ரி-வ்ருத்—வேத ஞானத்தின் மூன்று துறைகள்; அத்வர—வேள்வி; ஆக்யம்—நாமத்தின்; ஞாதம்—நாங்களறிந்த; யத்—அந்த; அர்த்தம்—விஷயத்திற்காக; அதிதைவம்—தேவர்களை வணங்குவதற்காக; அத:—இந்த; வ்யவஸ்தா:—ஏற்பாடு.
புரோகிதர்கள் தங்கள் பிரார்த்தனையில் கூறினர்: ஓ, பௌதீக மாசுக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பகவானே, சிவபெருமானது வீரர்களின் சாபத்தினால், நாங்கள் பலன் தரும் செயல்களில் பற்றுடையவர்களானோம். இவ்விழிவுள்ள நிலையினால் உம்மைப் பற்றி எதுவும் அறிந்திலம். அதற்கு மாறாக, வேள்விச் சடங்குகளைச் செயல்களில் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலினால் நாங்கள் இப்பொழுது வேத அறிவின் மூன்று நெறிமுறைகளுடன் ஒன்றிப் போயிருக்கிறோம். நீரே தேவர்களுக்குரிய அவிர் பாகத்தினை விநியோகிக்கும் ஏற்பாட்டினைச் செய்திருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம்.
பதம் 4.7.28
ஸதஸ்யா ஊசு:
உத்பத்தி-அத்வனி அஸரண உரு-க்லேஸ்-துர்கே ‘ந்த கோக்ர
வ்யலான் விஷ்டே விஷய-ம்ருக-த்ரிஷி ஆத்ம-கேஹோருபார:
த்வந்தவ-ஸ்வப்ரே கல-ம்ருக-பயே ஸோக தாவே’ஜ்ஞஸார்த:
பாதௌகஸ் தே ஸரணத கதா யாதி காமேபஸ்ருஷ்ட:
ஸதஸ்யா:—வேள்விச் சாலையில் இருந்தோர்; ஊசு:—கூறினர்; உத்பத்தி—மீண்டும் மீண்டும் ஜனன மரணத்தில்; அத்வனி—பாதையில்; அஸரண—தஞ்சம் புகுவதற்கு இடமின்றி; உரு—சிறந்த; க்லேஸ—துன்பனிலை; துர்கே—அச்சக் கோட்டையினுள்; அந்தக—இறுதி; உக்ர—கொடிய; வ்யால—பாம்புகள்; அன்விஷ்டே—மொய்க்கப்பட்டு; விஷய— பௌதீக இன்பத்தில்; ம்ருக-த்ரிஷி:—கானல் நீர்; ஆத்ம—உடல்; கேஹ—இல்லம்; உரு—கனத்த; பார:—சுமை; த்வர்த்வ—இளமை; ஸ்வப்ரே—துளைகள், இன்ப துன்பப் பள்ளங்கள்; கல—கொடிய; ம்ருக—விலங்குகள்; பயே—அச்சங்கொண்டு; ஸோக-தாவே—சோகப் புலம்பல் என்னும் காட்டுத் தீ; அஜ்ஞ-ஸ-அர்த:—துஷ்டர்களின் நலனுக்காக; பாத-ஒக:—உமது தாமரைத் திருவடியின் சரணம்; தே—உமக்கு; ஸரண த—சரணிப்பது; கதா—அப்பொழுது; யாதி—மறையும்; காம-உபஸ்ருஷ்ட:—பீடிக்கப்பட்டுள்ள அனைத்து ஆசைகளும்.
அவ்வேள்விச் சாலையில் கூடியிருந்த அனைவரும் பகவானிடம் கூறினர்: அச்சந்தரும் அரணுக்குள் காலம் என்னும் நாகம் தீண்டுவதற்குக் காத்திருக்க, அதனுள் துன்ப வாழ்க்கை வாழும் அனைவருக்கும் நீரே இறுதிப் புகலிடமாக விளங்குகிறீர். இவ்வுலகம் முழுவதும் இன்ப துன்பமெனும் பள்ளங்கள் நிறைந்தது. மேலும் கொடிய விலங்குகளும் எப்போதும் தாக்குவதற்குத் தயாராக இருக்கின்றன. அச்சத்தீ தீ அருகில் எரிந்து கொண்டிருந்தும் கானல் நீர்க் கவர்ச்சியில் ஆட்பட்டோருக்கு அவற்றினின்று அடைக்கலம் இல்லை. இவ்வாறு மூட மனிதர்கள் பிறப்பு இறப்பெனும் சுழற்சியில் வாழ்ந்து கொண்டு அவர்கள் கடமையினை நிறைவேற்றுவதற்கு அதிகத் துன்பமுறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் உமது திருவடித் தாமரைகளைச் சரணடைவது எப்போது என்பதை யாங்கள் அறியோம்.
பதம் 4.7.29
ருத்ர உவாச
தவ வரத வராங்ரால் ஆஸிஷோஹாகிலார்தே
ஹி அபி முனிபிர் அஸக்தைர் ஆதரேணார்ஹணீயே
யதி ரசித-தியம் மாவிட்தய-லோகோ ‘பவித்தம்
ஜபதி ந கணயே தத் த்வத்-பரானுக்ரஹேண
ருத்ர:-உவாச—சிவபெருமான் கூறினார்; தவ—உமது; வர-த-ஓ—பரம வரம் அருள்பவரே; வர-அங்க்ரௌ—பெருமைமிகு திருடிவத் தாமரைகள்; ஆஸிஷா—ஆசையினால்; இஹ—இந்த உலகில்; அகில-அர்ஹே—நிறைவேற்றுவதற்காக; ஹி-அபி—நிச்சயமாக; முனிபி—முனிவர்களால்; அஸக்தை:—விடுதலைபெற்று; ஆதரேண—எச்சரிக்கையுடன்; அர்ஹணீயே—துதிக்கத்தக்க; யதி—ஒருவேளை; ரசித-தியம்—மனதை வைத்து; மா—எனக்கு; அவித்ய-லோக:—அறியாமை மிக்கோர்; அபவித்தம்—சுத்தமற்ற செயல்; ஜபதி—ஓதினால்; ந கணயே—மதிப்பதில்லை; தத்—அது; தத்-பர அனுக்ரஹேண—உமது கருணையினைப் போன்று.
சிவபெருமான் கூறினார்: எனதன்பிற்குரிய பகவானே! எனது மனமும், உணர்வும் எப்போதும் உமது திருவடித் தாமரைகளின் மீதே நிலைபெற்றிருக்கின்றன. அவைகளே அனைத்து வரங்களின் ஆதாரமாகவும், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவனவாகவும் விளங்குகின்றன. மேலும் அவை வீடுபேறு அடைந்த சிறந்த முனிவர்களாலும் வணங்கப்படுகின்றன. ஏனெனில் அவையே வணங்குவதற்குரியனவாக விளங்குகின்றன. எனது மனம் உமது தாமரைத் திருவடிகளின் மீது நிலைபெற்றதினால் எனது செயல்கள் தூய்மையற்றன என்று என்னை நிந்திப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் அக்குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் கொள்ளாது, நீர் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் உமது கருணையினை அருள்கின்றீரோ, அதுபோல் அவர்கள் மீது கொண்ட கருணையினால் நானும் அவர்களை மன்னித்தருள்கிறேன்.
பதம் 4.7.30
ப்ருகுர் உவாச
யன் மாயயா கஹனயாபஹ்ருதாத்ம-போத
ப்ரஹ்மாதயஸ் தனு-ப்ருதஸ் தமஸி ஸ்வபந்த:
நாத்மன்-ஸ்ரிதம் தம விதந்தி அதுனாபி தத்த்வம்
ஸோ ‘யம் ப்ரஸீதது பவான் ப்ரணதாத்ம-பந்து:
ப்ருகு உவாச—ஸ்ரீ பிருகு கூறினார்; யத்—யார்; மாயயா—மாயையினால்; கஹனயா—கடக்க முடியவில்லை; அபஹ்ருத—மறந்து; ஆத்ம-போதா:—உண்மை நிலை பற்றிய அறிவு; ப்ரஹ்ம-ஆதய:—பிரம்மதேவன் முதலானோர்; தனு-ப்ருத:—உடல் பெற்ற உயிர் வாழிகள்; தமஸி—மாயையின் இருளில்; ஸ்வபந்த:—கீழே விழுந்து; ந—இல்லை; ஆத்மன்—உயிரில்; ஸ்ரிதம்—இருப்புக் கொண்டு; தவ—உமது; விதந்தி—புரிந்து; அதுனா—இப்பொழுது; அபி—உறுதியாக; தத்த்வம்—நிறைவான நிலை; ஸ:—நீர்; அயம்—இந்த; ப்ரஸிதது—அன்புடன்; பவான்—தங்களின் கீழ்; ப்ரணத ஆத்ம—சரணடைந்த ஆத்மா; பந்து:—நபர்.
ஸ்ரீ பிருகு முனிவர் கூறினார்: எனதன்பான பகவானே! மிகவுயர்ந்த பிரம்மதேவன் தொடங்கி சாதாரண சிற்றெரும்பு வரை கடக்க முடியாத மாயா சக்தியின் பாதிப்பின் கீழ் இருப்பதினால் அவர்கள் தமது உண்மையான நிலையினை அறியாதிருக்கின்றனர். எல்லோரும் உடலியற் கருத்தொன்றினையே நம்புகின்றனர். ஆகையினால் அவர்கள் மாயையின் இருளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் ஒவ்வொரு உயிரிடத்தும் எவ்வாறு நீர் பரமாத்மாவாக விளங்குகின்றீர் என்பதனையோ அல்லது உமது உண்மை நிலையினையோ அறிய முடியாதிருக்கின்றனர். ஆனால் நீர் ஒருவரே சரணடைந்த அனைத்து ஆத்மாக்களுக்கும் நண்பராகவும், பாதுகாவலராகவும் இருக்கின்றீர். ஆகையினால் எங்கள் மீது அன்பு கூர்ந்து நாங்கள் செய்த குற்றங்களை மன்னித்தருள்வீராக.
பதம் 4.7.31
ப்ரஹ்மோவாச
நைதத் ஸ்வரூபம் பவதோ ‘ஸௌ பதார்த
பேத்-க்ரஹை: ப்ருஷோ யாவத் ஈக்ஷேத்
ஜ்ஞானஸ்ய சார்தஸ்ய குணஸ்ய சாஸ்ரயோ
மாயாமயாத் வ்யதிரிக்தோ மதஸ் த்வம்
ப்ரஹ்மா உவாச—பிரம்ம தேவன் கூறினார்; ந—இல்லை; ஏதத்—இந்த; ஸ்வரூபம்—நித்திய வடிவம்; பவத:—உமது; அஸௌ—அடுத்தது; பத-அர்த்த—அறிவு; பேத—வேற்றுமை; க்ரஹை:—அடைந்தமையினால்; புருஷ—நபர்; யாவத்—எதுவரை; ஈக்ஷேத்—காணவிரும்புதல்; ஜ்ஞானஸ்ய—ஞானம்; ச—மேலும்; அர்தஸ்ய—பொருளின்; குணஸ்ய—அறிவுக் கருவியின்; ச—மேலும்; ஆஸ்ரய:—அடிப்படை; மாயா-மயாத்—மாயையினால் செய்யப்பட்ட; வ்யதிரிக்த—வேறுபாடு; மத—சம்பந்தப்பட்ட; த்வம்—நீர்.
பிரம்மதேவன் கூறினார்: எனதன்பிற்குரிய பகவானே, பல்வேறு வழிகளில் அடையப் பெற்ற ஞானம் பெற்றவர்களுக்குக்கூட உமது நிலையான வடிவமும், தன்மையும் அறிவதற்குரியதாகும். பௌதீகப் படைப்புகளுக்கெல்லாம் மேலானதாக நீவிர் விளங்குகின்றீர். ஆனால், அனுபவ அறிவினால் உம்மை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் முயற்சியோ, அதன் நோக்கமும், கருவிகளும் போலப் பௌதீகமானதேயாகும்.
பதம் 4.7.32
இதம் அபி அச்யுத விஸ்வ-பாவனம்
வபுர் ஆனந்த-கரம் மனோ-த்ருஸாம்
ஸுர-வித்விட்-க்ஷபணைர் உதாயுதைர்
புஜ-தண்டைர் உபபன்னம் அஷ்டபி:
இந்த்ர: உவாச—தேவேந்திரன் கூறினான்; இதம்:—இந்த; அபி:—உறுதியாக; அச்யித:—ஓ, குற்றம் இல்லாதவரே; விஸ்வ-பாவனம்:—பிரபஞ்ச நன்மைக்காக; வபு:—உன்னத வடிவம்; ஆனந்த-கரம்:—மகிழ்வின் மூலகாரணம்; மன:-த்ருஸாம்:—மனதிற்கும் கண்ணுக்கும்; ஸுர-வித்வித்:—உமது பக்தர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி; க்ஷபணை:—தண்டனையினால்; உத்-ஆயுதை:—ஏந்திய ஆயுதங்களினால்; புஜ-தண்டை:—புஜங்களுடன்; உபபன்னம்:—வைத்திருப்பதின்; அஷ்டபி:—எட்டு.
தேவேந்திரன் கூறினான்: எனதன்பான இறைவனே, இப்பிரபஞ்சம் அனைத்தையும் காப்பதற்காக எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தியிருக்கின்ற உமது உன்னதமான வடிவம் மனதிற்கும், கண்களினால் பார்ப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. இது போன்ற ஓர் வடிவத்திலேயே தாங்கள் எப்போதும் உமது பக்தர்களின் மீது பகைமை பாராட்டும் அசுரர்களை அழிப்பதற்குத் தயாராக உள்ளீர்கள்.
பதம் 4.7.33
பத்னிய ஊசு:
யஜ்ஜோ ‘யம் தவ யஜனாய கேன ஸ்ருஷ்டோ
வித்வஸ்த: பஸு பதினாத்ய, தக்ஷ-கோபாத்
தம் நஸ் த்வம் ஸவ-ஸயனாப-ஸாந்த-மேதம்
யஜ்ஞாத்மன் நளின-ருசா த்ருஸா புனீ:
பத்னிய ஊசு:—யாகத்தைச் செய்வோரின் மனைவியர் கூறினர்; யஜ்ஞா:—வேள்வி; ஆயம்:—இந்த; தவ:—உமது; யஜனாய:—துதிக்கின்ற; கேன:—பிரம்மனால்; ஸ்ருஷ்ட:—ஏற்பாடு செய்யப்பட்டது; வித்வஸ்த:—அழிக்கப்பட்டது; பஸுபதினா:—சிவபெருமானால்; அத்ய:—இன்று; தக்ஷ-கோபாத்:—தக்ஷனிடம் கொண்ட கோபத்தினால்; தம்:—இது; ந:—எமது; த்வம்:—நீர்; ஸவ-ஸயன:—பிணங்கள்; ஆப:—போன்று; ஸாந்த-மேதம்:—வேள்விக்குரிய விலங்குகள்; யஜ்ஞா-ஆதமன்—ஓ, வேள்வியின் நாயகனே; நளின— தாமரை; ருசோ—அழகு; த்ருஸா—உமது விழிகளின் பார்வையினால்; புனீ—புனிதமானது.
வேள்வி செய்வோரின் மனைவியர் கூறினர்: “எமது போற்றுதலுக்குரிய இறைவனே, இவ்வேள்வியானது பிரம்ம தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, தக்கன் மீது கொண்ட ஆத்திரத்தினால் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அவரது கோபத்தின் விளைவாக வேள்விக்குரிய விலங்குகள் மாண்டு கிடக்கின்றன. ஆகையினால் வேள்வி செய்வதற்குரியனவெல்லாம் அழிந்து விட்டன. இப்பொழுது உமது சொந்தாமரை விழியின் பார்வை பட்டு இவ்வேள்விச் சாலையானது புனிதமடைவதாக”.
பதம் 4.7.34
ருஷய: ஊசு:
அனன்விதம் தே பகவன் விசேஷ்டிதம்
யத் ஆத்மனா சரஸி ஹி கர்ம் நாஜ்யஸே
விபூதயே யத உபஸேதுர் ஈஸ்வரீம்
ந மன்யதே ஸ்வயம் அனுவர்ததீம் பவான்
ரிஷய:—ரிஷிகள்; ஊசு:—கூறினார்; அனன்விதம்—ஆச்சரியம்; தே—உமது; பகவன்—அனைத்து வளங்களும் நிரம்பியவர்; விசே-ஷ்டிதம்—செயல்கள்; யத்—எந்த; ஆத்மனா—உமது சக்தியினால்; சரஸி—நீர் செய்கிறீர்; ஹி—உறுதியாக; கர்ம—அச்செயல்களுக்கு; ந அஜ்யஸோ—நீர் பற்று வைப்பதில்லை; விபூதயே—அவன் கருணை வேண்டி; யத—எவனிடமிருந்து; உபஸேது:—துதிக்கப்படுதல்; ஈஸ்வரீம்—லக்ஷ்மி அதிர்ஷ்ட தேவதை; நமன்யதே—பற்றுருவதில்லை; ஸ்வயம்—உமது; அனுவர்ததீம்—உமது கீழ்ப்படிதலுள்ள பணியாள் (லக்ஷமி); பவான்—தாங்கள்.
போற்றுதலுக்குரிய பகவானே, உமது செயல்கள் மிகவும் வியப்பிற்குரியவனவாகும். உமது பல்வேறு சக்திகளினால் நீர் எல்லாவற்றையும் செய்யினும் அச்செயல்களினிடத்து நீர் பற்று வைப்பதில்லை. பிரம்மதேவனும் அவனது கருணை வேண்டி வழிபடும் அதிர்ஷ்ட தேவதை லக்ஷ்மியிடம் கூட நீர் பற்று வைப்பதில்லை என்று முனிவர்கள் கூறினர்.
பதம் 4.7.35
ஸித்தா ஊசு:
அயம் தவ்த் கதா ம்ருஷ்ட-பியூஷ நத்யாம்
மனோ-வாரண: க்வேஸ்-தாவாக்னி-தக்த:
த்ருஷார்தோ ‘வகாடோ ந ஸஸ்மார தாவம்
ந நிஷ்க்ராமதி ப்ரஹ்ம-ஸம்பன்னவன் ந:
ஸித்த:—சித்தர்கள்; ஊசு:—பிரார்த்தித்தனர்; அயம்—இந்த; த்வத்-கதா—உமது திருவிளையாடல்கள்; ம்ருஷ்ட—தூய்மையானவை; பீயூஷ—அமிர்தத்தின்; நாத்யாம்—ஆற்றில்; மன—மனது; வாரண:—யானை; க்லேஸ—துன்பங்கள்; தாவ-அக்னி—காட்டுத் தீயினால்; தக்த:—எரிந்தது; த்ருஷா—தாகம்; ஆர்த:—பீடிக்கப்பட்டு; அவகாட:—மூழ்குகின்ற; ந ஸஸ்மார—நினைப்பதில்லை; தாவம்—காட்டுத் தீ அல்லது துன்பங்கள்; ந நிஷ்க்ராமதி—வெளிவருவதில்லை; ப்ரஹ்ம—பிரம்மம்; ஸம்பன்ன-வத்—இணைவது போன்று; ந:—எமது.
சித்தர்கள் பிரார்த்தித்தனர்: காட்டுத் தீயில் சிக்கிக் கொண்ட யானை அதிலிருந்து தப்பி ஆற்று நீரில் இறங்கியவுடன் எவ்வாறு தனது துன்பத்தை மறக்கின்றதோ, அது போன்று ஓ, பகவானே, எமது மனங்களும் எப்போதும் உமது உன்னதமான லீலைகள் என்னும் அமிர்த ஆற்றில் இணைந்திருப்பதினால், பூரணமான பிரம்மத்துடன் இணைவதினால் கிடைக்கும் இன்பத்திற்கு ஒப்பான அந்த மிகதுயர்ந்த இன்பத்தினை விட்டுப் பிரிய அவையும் நினைப்பதில்லை.
பதம் 4.7.36
யஜமானி உவாச
ஸ்வாகதம் தே ப்ரஸீதேஸ துப்யம் நம:
ஸ்ரீ நிவாஸ ஸ்ரியா காந்தயா த்ராஹி ந:
த்வாம் ருதே ‘தீஸ நாங்கைர் மக: ஸோபதே
ஸீர்ஷ-ஹீன: க-பந்தோ யதா புருஷ:
யஜமானீ—தட்சனின் மனைவி; உவாச—கூறினாள்; ஸு-ஆகதம்—மங்கலத் தோற்றம்; தே—உமது; ப்ரஸுத—மகிழ்ச்சி கொண்டு; ஈஸ—எனது மரியாதைக்குரிய பகவானே; துப்யம்—உமக்கு; நம:—மரியாதை மிகுந்த வணக்கங்கள்; ஸ்ரீ நிவாஸ—ஓ, அதிர்ஷ்ட தேவதையின் இருப்பிடமே; ஸ்ரியா—லக்ஷ்மியுடன்; காந்தயா—உமது மனைவி; த்ராஹி—பாதுகாப்பு; ந—எமக்கு; த்வாம்—நீர்; ருதே—இன்றி; அதீஸ—ஓ, பரம நெறியாளரே; ந—இல்லை; அங்கை:—உடல் அங்கங்களுடன்; மக:—வேள்விச் சாலை; ஸோபதே—அழகாயிருக்கிறது; ஸுர்ஷ-ஹீன:—தலையின்றி; க—பந்த உடலை மட்டுமே கொண்டு; யதா—இருக்கின்ற; புருஷ—நபர்.
தட்சனின் மனைவி பின்வருமாறு வழிபட்டாள்: எனது அன்பிற்குரிய இறைவனே, இவ்வேள்விச் சாலையில் நீர் தோன்றியது மிகுந்த நல்வினையாகும். எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துவதோடு நீர் இவ்விழாவினால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். தலையில்லாத உடல் எவ்வாறு அழகாயிருப்பதில்லையோ அது போல் நீர் இல்லாத வேள்விச் சாலையும் மங்கலகரமாக இருக்காது.
பதம் 4.7.37
லோகபாலா ஊசு:
த்ருஷ்ட: கிம் நோ த்ருக்பிர் அஸத்-க்ரனஹஸ்த்வம்
ப்ரத்யக்-த்ரஷ்டா த்ருஸ்யதே யேன விஸ்வம்
மாயா ஹி ஏஷா பவதீயா ஹி பூமான்
யஸ்த்வம் ஷஷ்ட: பஞ்சபிர் பாஸி பூதை:
லோக பாலா:—வெவ்வேறு உலகின் ஆளுநர்கள்; ஊசு:—கூறினர்; த்ருஷ்ட:—கண்டு; கிம்—எவ்வாறு; ந:—எம்மால்; த்ருக்பி:—ஜடப் புலன்களினால்; அஸத் க்ரனஹ:—உலகத் தோற்றத்தின் வெளிப்பாடு; த்வம்—நீர்; ப்ரத்யக்-த்ரஷ்டா—அகச்சாட்சி; த்ருஸ்யதே—காணப்படுகின்ற; யேன—எவரால்; விஸ்வம்—பிரபஞ்சம்; மாயா—பௌதீக உலகு; ஹி—ஏனென்றால்; ஏஷா—இந்த; பவதீயா—உமது; ஹி—உறுதியாக; பூமான்—ஓ, பிரபஞ்சத்தை உடையவரே; ய—ஏனென்றால்; த்வம்—நீர்; ஸஷ்ட—ஆறாவது; பஞ்சபி:—ஐந்துடன்; பாஸி—தோன்றியது; பூதை:—பூதங்களுடன்.
பல்வேறு உலகின் ஆளுனர்கள் பின்வருமாறு கூறினர்: போற்றுதலுக்கும், வணங்குவதற்குமுரிய பகவானே, எங்கள் கண்ணால் காண்பவற்றை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். ஆனால் சூழ்நிலைகளின் கீழ் எமது ஜடப்புலன்களோடு உம்மை உண்மையில் பார்த்திருக்கிறோமா என்பதை நாங்கள் அறியாதிருக்கிறோம். எங்களது ஜடப் புலன்களினால் இவ்வுலகை மட்டுமே எங்களால் உணர முடிகிறது. நீரோ பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவராக விளங்குகின்றீர். நீரே ஆறாவதாக இருக்கின்றீர். ஆகையினால் பரு உலகின் ஒரு படைப்பாகவே உம்மை நாங்கள் பார்க்கிறோம்.
பதம் 4.7.38
யோகேஸ்வரா ஊசு:
ப்ரேயான் ந தே ‘ன்யோ அமுதஸ்த்வயி ப்ரபோ:
விஸ்வாத்மனீக்ஷேன் ந ப்ருதக் ய ஆத்மன:
அதாபி பக்த்யேஸ தயோபதாவதாம்
அனன்ய-வ்ருத்த்யானுக்ருஹாண வத்ஸல
யோக-ஈஸ்வரா:—சிறந்த யோகிகள்; ஊசு:—கூறினர்; ப்ரேயான்—மிகுந்த அன்பு; ந—இல்லை; தே—உமது; அன்ய:—மற்றொரு; அஸ்தி—அங்கே; அமுத:—அதிலிருந்து; த்வயி—உம்மில்; ப்ரபோ—அன்பான பகவானே; விஸ்வ-ஆத்மனி—அனைத்து உயிர்களிலுமுள்ள பரமாத்மாவின்; ஈக்ஷேத்—காண்பது; ந—இல்லை; ப்ருதக்—வேறுபாடான; ய:—யார்; ஆத்மன:—உயிர் வாழிகள்; அத-அபி—ஏராளமாக; பக்த்ய—பக்தியுடன்; ஈஸ—ஓ, பகவானே; தயா—அதனுடன்; உபதாவதாம்—துதிப்பவர்களின்; அனன்ய-வ்ருத்த்யா—தோல்வியில்லாத; அனுக்ரஹான—கருணை; வத்ஸல—ஓ, கருணைக் கடலே.
சிறந்த யோகிகள் கூறினர்: போற்றுதலுக்குரிய இறைவனே, தம்மிடமிருந்து உம்மைப் பிரித்துப் பார்க்காதவர்கள் நீரே அனைத்துயிர்களிலும் உள்ள பரமாத்மா என்று அறிந்திருப்பதினால் அவர்களிடம் நீர் மிக, மிக அன்பாக இருக்கின்றீர். உம்மைத் தலைவராகவும், தம்மைப் பணியாளர்களாகவும் ஏற்றுக் கொண்டு பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்களிடம் நீர் மிக்க கருணை உடையவராக விளங்குகின்றீர். உமது கருணையினால் நீர் எப்போதும் அவர்களின் நலத்தின்பால் நாட்டமுடையவராக இருக்கின்றீர்.
பதம் 4.7.39
ஜகத்-உத்பவ-ஸ்திதி-லயேஷு தைவதோ
பஹு-பித்யமான-குணயாத்ம-மாயயா
ரசிதாத்ம-பேத-மதயே ஸ்வ-ஸம்ஸ்தயா
விநிவர்தித-ப்ரம-குணாத்மனே நம:
ஜகத்—பரு உலகம்; உத்பவ—படைப்பு; ஸ்திதி—காத்தல்; லயேஷு—அழித்தல்; தைவத:—விதி; பஹு—பல; பித்யமான—பல்வகை வேறுபாடுகள்; குணயா—பௌதீகக் குணங்கள்; ஆத்ம-மாயயா—அவரது உலகியல் சக்தியின்; ரசித—செய்யப்பட்டு; ஆத்ம—உயிர்களினிடத்தில்; பேத-மதயே—பல்வேறு வகையான நாட்டங்களை உண்டுபண்ணுபவர்; ஸ்வ-ஸ்ம்ஸ்தயா—அவரது அகச்சக்தியினால்; விநிவர்தித—நிறுத்துவதற்கு காரணம்; பரம—ஒன்றுடன் மற்றொன்றின் வினைத் தொடர்பு; குண—ஜடக் குணங்களின்; ஆத்மனே—அவருக்கு அவரது தனிப்பட்ட வடிவத்திற்கு; நம—வந்தனங்கள்.
எமது மரியாதைக்குரிய வந்தனங்களை, பல்வேறு வகைத் தோற்றங்களைப் படைத்து அவற்றைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் நியமித்திற்காக உலகின் முக்குணங்களின் கீழ் வைத்திருக்கும் பரமபுருஷனுக்குச் செலுத்துகிறோம். அவர் தன்னைப் புறச் சக்தியின் கீழ் வைத்திருக்கவில்லை, அவரது தனிப்பட்ட வடிவத்தில் அவர் பல்வேறுபட்ட உலகியல் தோற்றங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராக விளங்குகிறார். மேலும் அவரைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் இயலாது.
பதம் 4.7.40
ப்ரஹ்மோவாச
நமஸ் தே ஸ்ரித-ஸத்த்வாய தர்மாதீனாம் ச ஸுதயே
நிர்குணாய ச யத்-காஷ்டாம் நாஹம் வேதாபரே ‘பி ச
ப்ரஹ்ம—வேதங்களின் உருவமானவர்கள்; உவாச—கூறினர்; நம:—வந்தனம்; தே—உமக்கு; ஸ்ரித-ஸத்த்வாய—நற்குணங்களின் இருப்பிடம்; தர்ம-சூதீனாம்—அனைத்து சமயங்களும், தவமும், விரதமும்; ச—மேலும்; ஸுதயே—ஆதாரம்; நிர்குணாய—உலகியல் தன்மைகளுக்கும் மேலான; ச—மேலும்; யத்—எவரது (பரமபுருஷரின்); காஷ்டாம்—நிலை; ந—இல்லை; அஹம்—நான்; வேத—அறிவது; அபரே—அடுத்தவர்; அபி—உறுதியாக; ச—மேலும்.
வேதங்களின் உருவமானவர்கள் கூறினர்: பகவானே, உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்கள், நற்குணங்களின் உறைவிடமாக நீர் இருப்பதினால் நீரே அனைத்துத் தர்மங்களுக்கும், தவத்திற்கும், துறவு நெறிக்கும் மூலாதாரமாக விளங்குகின்றீர். நீர் அனைத்து உலகியற் குணங்களையும் கடந்த உன்னதமானவராக விளங்குவதினால் உம்மையும், உமது உண்மை நிலையினையும் யாரும் அறிந்திலர்.
பதம் 4.7.41
அக்னிர் உவாச
யத்-தேஜஸாஹம் ஸுஸமித்த-தேஜா
ஹவ்யம் வஹே ஸவத்வர ஆஜ்ய-ஸிக்தம்
தம் யஜ்ஞியம் பஞ்ச-விதம் ச பாஞ்சபி:
ஸ்விஸ்டம் யஜுர்பி: ப்ரணதோ ‘ஸ்மி யக்ஞம்
அக்னி:—அக்கினித் தேவர்; உவாச—கூறினார்; யத்-தேஜஸா—யாருடைய ஒளியினால்; அஹம்—நான்; ஹவ்யம்—அர்ப்பணித்தல்; வஹே—நான் ஏற்றுக் கொள்கிறேன்; ஸு-அத்வரே—வேள்வியில்; ஆஜ்யா-ஸிக்தம்—வெண்ணெயுடன் கலந்து; தம்—அந்த; யஜ்ஞியம்—வேள்வியின் பாதுகாவலர்; ச—மேலும்; பஞ்சபி—ஐந்தினால்; ஸுஇஷ்டம்—துதிக்கப்படுதல்; யஜுர்பி—வேதப்பண்கள்; ப்ரணத—மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணித்தல்; அஸ்மி—நான்; யஜ்ஞம்—யஜ்ஞருக்கு (விஷ்ணு).
அக்கினிதேவன் கூறினார்: எனது போற்றுதலுக்கும், அன்பிற்கும் உரிய பகவானே, எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் செலுத்துகிறேன். உமது கருணையினாலேயே நான் பற்றி எரியும் நெருப்பாக ஒளி பெற்று விளங்குகிறேன். மேலும் நான் வெண்ணெயுடன் சேர்ந்து வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களையும் ஏற்றுக் கொள்கிறேன். யசுர் வேதம் கூறுகின்ற ஐந்து வகையான அர்ப்பணிப்புகளும் உமது ஐந்து வேறுபட்ட சக்திகளாகும். நீரே ஐந்து விதமான வேதப் பண்களினாலும் துதிக்கப்படுகிறவர் ஆவீர். வேள்வியின் பொருள் முழுமுதற் கடவுளான உம்மையே குறிக்கும்.
பதம் 4.7.42
தேவ ஊசு:
புரா கல்பாபாயே ஸ்வ-க்ருதம் உதரீ-க்ருத்ய விக்ருதம்
த்வம் ஏவாத்யஸ் தஸ்மின் ஸலில உரகேந்த்ராஷியனே
புமான் ஸேஷ ஸித்தைர் ஹ்ருதி விம்ருஸிதாத்யாத்ம- பதவி:
ஸ ஏவாத்யாக்ஷ்ணோர் ய: பதி சரஸிப்ருத்யான் அவஸி ந:
தேவா:—தேவர்கள்: ஊசு:—கூறினர்; புரா—வெகு காலத்திற்கு முன்னர்; கல்ப-அபாயே—கல்பத்தின் அழிவுக் காலத்தில்; ஸ்வ-க்ருதம்—சுய உற்பத்தி; உதரீக்ருத்ய—உமது வயிற்றினுள் வைத்துக் கொண்டீர்; விக்ருதம்—பாதிப்பு; த்வம்—நீர்; ஏவ—உறுதியாக; ஆத்ய:—மூலம்; தஸ்மின்—அதில்; ஸலில—நீர்; உரக-இந்த்ர—சேஷன் மீது; அதிஷயனே—படுக்கையில்; புமான்—சிறந்தவர்கள்; ஸேஷே—துயில் கொள்பவர்; ஸித்தை:—விடுதலை பெற்ற ஆத்மாக்களான சித்தர்கள் (சனகர் போன்றவர்கள்); ஹ்ருதி—இதயத்தில்; விம்ருஸித—தியானித்தல்; அத்யாத்ம—பதவி; தத்துவார்த்த—யூகத்தின் பாதை; ஸ:—அவர்; ஏவ—உறுதியாக; அத்ய—இப்பொழுது; அக்ஷ்ணோ:—இரு விழிகளின்; ய:—யார்; பதி—பாதையில்; சரஸி—உமது அசைவு; ப்ருத்யான்—ஊழியர்கள்; அவஸி—பாதுகாப்பு; ந—எமது.
தேவர்கள் கூறினர்: அன்பான பகவானே, முன்னர் உலகத்திற்கு அழிவு ஏற்பட்டபொழுது பௌதீக தோற்றத்தின் பல்வேறு சக்திகளையும் நீர் உமது வயிற்றுனுள் வைத்துக் காத்தருளினீர். அச்சமயம் சனகர் போன்ற முக்தி பெற்ற ஆத்மாக்களை உடைய தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் தத்துவார்த்தச் சிந்தனைகளால் உம்மைத் தியானித்துக் கொண்டிருந்தனர். ஆகையினால் நீரே மூல புருஷர் ஆவீர். மேலும் அந்த ஊழிக்கால வெள்ளத்தில் சேஷன் எனப்படும் பாம்புப் படுக்கையில் நீர் அரிதுயில் கொண்டிருந்தீர். இப்போது உமது தொண்டர்களை எங்களுக்கு காட்சி தந்து அருளியிருக்கிறீர், அருள் கூர்ந்து எம்மைக் காப்பீராக.
பதம் 4.7.43
கந்தர்வ ஊசு:
அம்ஸாம் ஸாஸ் தே தேவ-மரீசி-ஆதய ஏதே
ப்ரஹ்மேந்த்ராத்யா தேவ-கணா ருத்ர-புரோகா:
க்ரீட-பாண்டம் விஸ்வம் இதம் யஸ்ய விபூமன்
தஸ்மை நித்யம் நாத நமஸ் தே கரவாம
கந்தர்வா:—கந்தர்வர்கள்; ஊசு:—கூறினர்; அம்ஸ-அம்ஸா:—உமது உடலின் முக்கியமான பாகம்; தே—உம்முடைய; தேவ—அன்புள்ள பகவானே; மரீசி-ஆதய:—மரீசி போன்ற மாமுனிவர்கள்; ஏதே—இவர்கள்; ப்ரஹ்ம-இந்த்ர-ஆத்யா:—பிரம்ம தேவன் மற்றும் இந்திரன் தலைமையில்; தேவ-கணா:—தேவர்கள்; ருத்ர-புரோகா:—சிவபெருமானைத் தலைவராகப் பெற்றிருக்கின்றனர்; க்ரீடா-பாண்டம்—ஒரு விளையாட்டுப் பொருள்; விஸ்வம்—முழுப் படைப்பும்; இதம்—இந்த; யஸ்ய—எவரது; விபூமன்—மிகச் சிறந்த பரம்பொருள்; தஸ்மை—அவருக்கு; நித்யம்—எப்போதும்; நாத—ஓ, பகவானே; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; தே—உமக்கு; கரவாம—நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.
கந்தர்வர்கள் கூறினர்: அன்பிற்குரிய பகவானே, சிவபெருமான், பிரம்ம தேவன், இந்திரன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும், மரீசி போன்ற முனிவர்களும் உமது அங்கத்தின் பல்வேறுபட்ட முக்கியமான பாகங்களாவர். நீரே மிகச்சிறந்த பரம்பொருளாக விளங்குகிறீர். இப்பிரபஞ்சப் படைப்பு முழுதுமே உமக்கு ஓர் விளையாட்டுப் பொம்மை போன்றது. முழுமுதற் கடவுளாக உம்மையே நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எமது மரியாதைக்குரிய வணக்கத்தை உமக்குச் செலுத்துகிறோம்.
பதம் 4.7.44
வித்யாதர ஊசு:
த்வன்-மாயயார்தம் அபிபத்ய கலேவரே ‘ஸ்மின்
க்ருத்வா மமாஹம் இதி துர்மதிர் உத்பதை: ஸ்வை:
க்ஷிப்தோ ‘பி அஸத்-விஷய-லாலஸ ஆத்ம-மோஹம்
யுஷ்மத்-கதாம்ருத-நிஷேவக உத்வ்யுதஸ்யேத்
வித்யாதரா:—வித்யாதரர்கள்; ஊசு:—கூறினர்; த்வத்-மாயயா—உமது புறச் சக்தியினால்; அர்தம்—மானிட உடல்; அபிபத்ய—பெற்ற பிறகு; கலேவரே—உடலில்; அஸ்மின்—இந்த; க்ருத்வா—தவறான அடையாளங்கொண்டு; மம—எனது; அஹம்—நான்; இதி—இவ்வாறு; துர்மதி:—அறியாமையுடையோன்; உத்பத்தை:—தவறான வழியில்; ஸ்வை:—ஒருவனது சுய உடைமைகளினால்; க்ஷிப்த:—கவனத்தை மாற்றி; அபி—கூட; அஸத்—நிலையில்லாத; விஷய-லாலஸ:—அவனது புலனுகர்ச்சிக்குரிய பொருட்களின் இன்பத்தில்; ஆத்ம-மோஹம்—உடலே ஆத்மா என்னும் மாயையினால்; யுஷ்மத்—உமது; கதா—கருத்துக்கள்; அம்ருத—அமிர்தம்; நிஷேவக:—சுவையான; உத்—வெகு தொலைவில் இருந்து; வ்யுதஸ்யேத்—மீட்கப்படுவர்.
வித்யாதரர்கள் கூறினர்: போற்றுதலுக்குரிய பகவானே! மானுட உடல் பெற்றதின் பொருள் உயர்ந்த, நிறைவான இலட்சியத்தினை அடைவதற்காகவே. ஆனால் உமதுப் புறச் சக்தியின் தூண்டுதலினால் உலகில் வாழ்வோன் தன்னை உடலும், பௌதீகச் சக்தியும் என்று அடையாளம் காண்கிறான். ஆகையினால் மாயையின் பாதிப்பினால் அவன் பௌதீக இன்பங்களில் மகிழ்ச்சி காண்பவனாக மாறுகிறான். இவ்வாறு அவன் திசை திருப்பப்பட்டு நிலையற்ற மாயா இன்பங்களினால் கவரப்படுகிறான். ஆனால் உமது உன்னதமானச் செயல்களோ மிகுந்த சக்தியுடையன. ஆகையினால் அவற்றைப் பற்றி ஒருவன் கேட்பது, ஓதுவது என்பவற்றில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டால் அவன் மாயையிலிருந்து நிச்சயம் மீட்கப்படுவான்.
பதம் 4.7.45
ப்ராஹ்மணா ஊசு:
த்வம் க்ரதுஸ் த்வம் ஹவிஸ் த்வம் ஹுதாஸ: ஸ்வயம்
த்வம் ஹி மந்த்ர: ஸமித்-தர்ப-பாத்ராணி ச
த்வம் ஸதஸ்யர்த்விஜோ தம்பதீ தேவதா
அக்னிஹோத்ரம் ஸ்வதா ஸோம ஆஜ்யம் பஸு:
ப்ராஹ்மணா:—அந்தணர்கள்; ஊசு:—கூறினர்; த்வம்—நீர்; க்ரது:—வேள்வி; த்வம்—நீர்; ஹவி:—அர்ப்பணிக்கப்படும் சுத்தமான வெண்ணெய்; ஹுத-ஆஸ:—நெருப்பு; ஸ்வயம்—உருவமானவர்; த்வம்—நீர்; ஹி—ஆக; மந்த்ர:—வேத மந்திரங்கள்; ஸ்மித்-தர்ப-பாத்ராணி—சமித்து, தர்பைப்புல் மற்றும் வேள்விக் கலசங்கள்; ச—மேலும்; த்வம்—நீர்; ஸதஸ்ய—சபையின் உறுப்பினர்கள்; ருத்விஜ:—புரோகிதர்கள்; தம்பதீ—வேள்வியின் தலைவர் மற்றும் அவரது மனைவி; தேவதா—தேவர்கள்; அக்னி-ஹோத்ரம்—புனித அக்கினிச் சடங்கு; ஸ்வதா—முன்னோர்களுக்கு அர்ப்பணித்தல்; ஸோம:—ஸோமரஸம்; ஆஜ்யம்—சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெய்; பஸு:—வேள்விக்குரிய விலங்கு.
அந்தணர்கள் கூறினர்: அன்பிற் சிறந்த பகவானே! நீரே வேள்வியின் உருவம், நீரே வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெய், நீரே நெருப்பு, நீரே வேத மந்திரங்கள், நீரே சமித்து, நீரே ஜுவாலை, நீரே தர்பைப்புல், மேலும் நீரே வேள்விக் கலசங்களாகவும் விளங்குகிறீர். வேள்வியை நடத்தும் புரோகிதர்களும் நீரே, நீரே இந்திரனால் தலைமை தாங்கப்பட்டத் தேவர்களும் ஆவீர். மேலும் நீரே வேள்விக்குரிய விலங்காகவும் இருக்கின்றீர். வேள்வியில் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் நீவிராக அல்லது உமது சக்தியாக இருக்கின்றது.
பதம் 4.7.46
த்வம் புரா காம் ரஸாயா மஹா-ஸுகரோ
தம்ஷ்ட்மரயா பத்மினீம் வாரணேந்த்ரோ யதா
ஸ்தூயமானோ நதல் லீலயா யோகிபிர்
வ்யுஜ்ஜஹர்த த்ரயீ-காத்ர யஜ்ஞ-க்ரது:
த்வம்—நீர்; புரா—முன்னர்; காம்—பூமி; ரஸாயா:—தண்ணீரின் அடியிலிருந்து; மஹா-ஸுகர:—சிறந்தவராக அவதாரம்; தம்ஷ்ட்ரயா—உமது தந்தத்தினால்; பத்மினீம்—ஒரு தாமரை மலர்; வாரண-இந்த்ர:—ஓர் யானை; யதா—போன்று; ஸ்தூய-மான:—பிரார்த்தனைகளை அர்ப்பணித்து; நதன்—அதிர்வு; லீலயா—மிக எளிதில்; யோகிபி:—சனகர் போன்ற மகாமுனிவர்கள்; வ்யுஜ்ஜஹர்த—எடுத்து; த்ரயீ-காத்ர—வேத ஞானத்தின் உருவமே; யஜ்ஞ-க்ரது:—வேள்வியின் வடிவமாக.
அன்பிற்குரிய பகவானே, வேதங்களில் ஞான உருவமோ, நீண்ட நெடு நாட்களுக்கு முன்னர் கடந்த யுகத்தில் நீர் வராகமாகப் பிறந்து தண்ணீரினுள் மூழ்கியிருந்த பூமியினை ஓர் யானை குளத்திலிருந்து தாமரை மலரினை எடுப்பது போல் மிகவும் எளிதாக வெளியே எடுத்தீர். அவ்வாராக இருக்கும்பொழுது நீர் எழுப்பிய உன்னத ஒலியே வேத மந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சனகர் போன்ற மகாமுனிவர்கள் அதனையே சித்தித்து உம்மைப் போற்றிப் பிரார்த்தித்தனர்.
பதம் 4.7.47
ஸ ப்ரஸீத த்வம் கஸ்மாகம் ஆகாங்க்ஷதாம்
தர்ஸனம் தே பரிப்ரஷ்ட-ஸத்-கர்மணாம்
கீர்த்யமானே ந்ருபிர் நாம்னி யஜ்ஞேஸ தே
யஜ்ஞ-விக்னா: க்ஷயம் யாந்தி தஸ்மை நம:
ஸ:—அதே நபர்; ப்ரஸீத—மகிழ்வீராக; த்வம்—நீர்; அஸ்மாகம்—எங்கள் மீது; ஆகாங்க்ஷதாம்—காத்திருக்கின்றோம்; தர்ஸனம்—தரிசனத்திற்காக; தே—உமது; பரிப்ரஷ்ட—கீழே வீழ்ந்து; ஸத்-கர்மணாம்—யாருக்காக வேள்வி செய்யப்படுகிறதோ; கீர்த்யமானே—ஜெபித்து; ந்ருபி:—மனிதர்களினால்; நாம்னி—உமது புனித நாமம்; யஜ்ஞ-ஈஸ—ஓ, வேள்வியின் நாயகனே; தே—உமது; யஜ்ஞ-விக்னா:—தடைகள்; க்ஷயம்—அழிவு; யாந்தி—எய்துதல்; தஸ்மை—உமக்கு; நம:—மரியாதை மிகுந்த வந்தனங்கள்.
அன்பார்ந்த பகவானே, நாங்கள் உமது பார்வைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் வேத நெறிமுறைகளுக்கு ஏற்றாற்போல் வேள்வி செய்வதற்கு நாங்கள் இயலாதவர்களாக இருந்தோம். உம்மைப் பிரார்த்திக்கின்றோம். எம்மைப் பற்றி மகிழ்வீராக உமது புனிதத் திருப்பெயரை வழிபடுவதன் மூலமே எளிதாக ஒருவன் அனைத்துத் தடைகளையும் கடந்து விடுகிறான். ஆகையினால் உமக்கு உம் முன்னிலையில் எமது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செலுத்துகிறோம்.
பதம் 4.7.48
மைத்ரேய உவாச
இதி தக்ஷ: கவிர் யஜ்ஞம் பத்ர ருத்ராபிமர்ஸிதம்
கீர்த்யமானே ஹ்ருஷீகேஸே ஸன்னின்யே யஜ்ஞ-பாவனே
மைத்ரேய:—மைத்ரேயர்; உவாச—கூறினார்; இதி—இவ்வாறு; தக்ஷ:—தட்சன்; கவி:—தூய்மையான உணர்வு பெற்றமையினால்; யஜ்ஞம்—வேள்வி; பத்ர—ஓ, விதுரனே; ருத்ர-அபிமர்ஸிதம்—வீரபத்திரனால் அழிக்கப்பட்டு; கீர்த்யமானே—புகழப்பட்டு; ஹ்ருஷிகேஸ—இருஷிகேஸன் (பகவான் விஷ்ணு); ஸன்னின்யே—மீண்டும் துவங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தல்; யஜ்ஞ-பாவனே—வேள்வியினைப் பாதுகாப்பவர்.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பகவான் விஷ்ணு இவ்வாறு எல்லோராலும் புகழப்பட்ட பின்னர், உணர்வுத் தூய்மைபெற்ற தட்சன் சிவபெருமானின் அடியவர்களால் அழிக்கப்பட்ட வேள்வியினை மீண்டும் தொடங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
பதம் 4.7.49
பகவான் ஸ்வேன பாருகன ஸர்வாத்மா ஸர்வ-பாக-புக்
தக்ஷம் பபாஷ ஆபாஷ்ய ப்ரீயமாண இவானக:
பகவான்—பகவான் விஷ்ணு; ஸ்வேன—அவரது சுயமான; பாகேன—பாகத்துடன்; ஸர்வ-ஆத்ம—அனைத்து உயிர்களிடமும் உள்ள பரமாத்மா; ஸர்வ-பாக-புக்—அனைத்து வேள்விகளின் பலனை அனுபவிப்பவர்; தக்ஷம்—தக்ஷன்; பபஷே—கூறினார்; ஆபாஷ்ய—கூறினார்; ப்ரீயமாண—திருப்தியடைதல்; இவ—போல; அனக—ஓ பாவமற்ற விதுரனே!
மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய பாவமற்ற விதுரனே, பகவான் விஷ்ணுவே அனைத்து வேள்வியின் பலன்களையும் அனுபவிப்பவர் ஆவார். மேலும் அவர் அனைத்து உயிர்களின் பரமாத்மாவாக விளங்குவதினால் வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் அவருக்குரிய அவிர்பாகத்தின் மூலமே அவர் எளிதில் திருப்தியடைந்துவிடுவார். ஆகையால் அவர் தட்சனிடம் மகிழ்ச்சியுடன் உரையாடலானார்.
பதம் 4.7.50
ஸ்ரீ பகவான் உவாச
அஹம் ப்ரஹ்மா ச ஸர்வஸ்ச ஜகத: காரணம் பரம்
ஆத்மேஸ்வர உபத்ரஷ்டா ஸ்வயன்-த்ருக் அவிஸேஷண:
ஸ்ரீ-பகவான்—பகவான் விஷ்ணு; உவாச—கூறினார்; அஹம்—நான்; ப்ரஹ்மா—பிரம்மன்; ச—மேலும்; ஸர்வ:—சிவபெருமான்; ஜகத:—பௌதீக தோற்றங்கள்; காரணம்—காரணம்; பரம்—பரம; ஆத்ம-ஈஸ்வர:—பரமாத்மா; உபத்ரஷ்டா—சாட்சி; ஸ்வயம்-த்ருக்—தன்னிறைவு; அவிஸேஷண:—வேறுபாடு இல்லை.
பகவான் விஷ்ணு பதில் கூறினார்: நானும், சிவபெருமானும், பிரம்ம தேவனும் உலகத் தோற்றங்களுக்கான மூல காரணர்கள் ஆவோம். நானே தன்னிறைவு பெற்ற சாட்சியான பரமாத்மாவாக விளங்குகிறேன். ஆனால் பிரம்ம நிலையில் எனக்கோ, சிவபெருமானுக்கோ, பிரம்ம தேவனுக்கோ எந்தவித வேறுபாடும் கிடையாது.
பதம் 4.7.51
ஆத்ம-மாயாம் ஸமாவிஸ்ய சூஸழ ‘ஹம் குணமயீம் த்விஜ
ஸ்ருஜன் ரக்ஷன் ஹரன் விஸ்வம் தத்ரே ஸம்ஞாம் க்ரியோசிதாம்
ஆத்ம-மாயாம்—எனது சக்தி; ஸமாவிஸ்ய—நுழைகின்றது; ஸ:—எனது; அஹம்—நான்; குண-மயீம்—ஜட இயற்கையின் குணங்களினால் தொகுக்கப் பெற்ற; த்வி-ஜ—ஓ, இருபிறவி பெற்ற தக்ஷனே; ஸ்ருஜன்—படைக்கின்ற; ரக்ஷன்—காக்கின்ற; ஹரன்—அழிக்கின்ற; விஸ்வம்—பிரபஞ்சத் தோற்றங்கள்; தத்ரே—பிறப்பதற்கு நான் காரணம்; ஸம்ஞாம்—ஒரு பெயர்; க்ரியா-உசிதாம்—செயலைப் பொறுத்து.
பகவான் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய தட்ச த்விஜனே, நானே முழுமுதற் கடவுள், ஆயினும் இப்பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றை எனது பெளதீக சக்தியின் மூலம் செயற்படுத்துகிறேன். அச்செயலின் பல்வேறு தன்மைகளைப் பொறுத்து எனது குண அவதாரங்களுக்குப் பல்வேறு பெயர்கள் இடப்படுகின்றன.
பதம் 4.7.52
தஸ்மின் ப்ரஹ்மணி அத்விதீயே கேவலே பரமாத்மணி
ப்ரஹ்ம-ருத்ரௌ ச பூதானி பேதேனாஞோ ‘னு பஸ்யதி
தஸ்மின்—அவர்; ப்ரஹ்மணி—பரப் பிரம்மம்; அத்விதீயே—இரண்டற்ற ஒருவர்; கேவலே—ஒருவரே; பரம-ஆத்மனி—பரமாத்மா; ப்ரஹ்ம-ருத்ரௌ—பிரம்ம தேவனும், சிவபெருமானும்; ச—மேலும்; பூதானி—உயிர்கள்; பேதேன—பிரிவுடன்; அஜ்ஞ:—முறையான அறிவில்லாதவர்; அனுபஸ்யதி—நினைக்கிறான்.
பகவான் தொடர்ந்து கூறினார்: முறையான அறிவில்லாத ஒருவன் சிவபெருமான், பிரம்மதேவன் போன்ற தேவர்கள் சுதந்திரமானவர்கள் என்றும் ஏன், உயிர்கள் கூட சுதந்திரமானவர்கள் என்றும் நினைக்கிறான்.
பதம் 4.7.53
யதா புமான் ந ஸ்வாங்கேஷுஸிர:-பாணி-ஆதிஷு க்வசித்
பாரக்ய-புத்திம் குருதே ஏவம் பூதேஷு மத்-பர:
யதா—போன்று; புமான்—ஒருவன்; ந—இல்லை; ஸ்வ-அங்கேஷு—தனது சொந்த உடலில்; ஸிர:-பாணி-அதிஷு—உடலில் தலை, கரம் மற்றும் பிற பாகங்களுக்கிடையே; க்வசித்—சில நேரம்; பாரக்ய-புத்திம்—வேறுபாடுகள்; குருதே—செய்தல்; ஏவம்—இவ்வாறு; பூதேஷு—உயிர்களுக்கிடையில்; மத்-பர:—எனது பக்தன்.
சாதாரண அறிவுடைய ஒருவன் உடலிலிருந்து தலை மற்றும் பிற பாகங்கள் எல்லாம் தனியானவை என்று கருதமாட்டான். அது போன்று எனது பக்தன் எங்கும் பரந்திருக்கும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவை எவற்றிடமிருந்தும் அல்லது எந்த உயிரிடமிருந்தும் வேறுபடுத்திக் காணமாட்டான்.
பதம் 4.7.54
த்ரயாணாம் ஏக-பாவானாம் யோ ந பஸ்யதி வை பிதாம்
ஸர்வ-பூதாத்மனாம் ப்ரஹ்மன் ஸ ஸாந்திம் அதிகச்சதி
த்ரயாணம்—மூன்றின்; ஏக-பாவனாம்—ஒன்றின் இயற்கையினால்; ய:—யார்; ந பஸ்யதி—பார்க்காதவன்; வை—உறுதியாக; பிதாம்—பிரித்து; ஸர்வ-பூத—ஆத்மனாம்—அனைத்து உயிர்களின் பரமாத்மா; ப்ரஹ்மன்—ஓ, தக்ஷனே; ஸ:—அவன்; ஸாந்திம்—அமைதி; அதிகச்சதி—உணர்கிறான்.
பகவான் தொடர்ந்தார்: பிரம்ம தேவன், சிவபெருமான் மற்றும் அனைத்து உயிர்களையும் பரம்பொருளிடம் இருந்து பிரித்துப் பார்க்காது பிரம்மத்தை அறிந்தவன் எவனோ அவன் அமைதியை உணர்கிறான். மற்றவர்கள் அதனை உணரார்.
பதம் 4.7.55
மைத்ரேய உவாச
ஏவம் பகவதாதிஷ்ட: ப்ரஜாபதி-பதிர் ஹரிம்
அர்சித்வா க்ரதுனா ஸ்வேன தேவான் உபயதோ ‘யஜத்
மைத்ரேய:—மைத்ரேயர்; உவாச—கூறினார்; ஏவம்—இவ்வாறு; பகவதா—முழுமுதற் கடவுளினால்; ஆதிஷ்ட:—அறிவுறுத்தப்பட்டு; ப்ரஜாபதி-பதி:—அனைத்துப் பிரஜாபதிகளின் தலைவர்; ஹரிம்—ஹரி; அர்சித்வா—பிரார்த்தித்த பின்னர்; க்ரதுனா—வேள்விச் சடங்குகளுடன்; ஸ்வேன—அவரது; தேவா—தேவர்கள்; உபயத:—தனியே; அஜயத்—பூஜித்தனர்.
மைத்ரேய முனிவர் கூறினார்: தக்கன் முழுமுதற் கடவுளினால் இவ்வாறு நன்கு உபதேசிக்கப்பட்டவுடன், பகவான் விஷ்ணுவை வணங்கினார். அவரை குறிப்பிட்ட வேள்விச் சடங்குகளின் மூலம் வழிபட்ட தக்கன், பிரம்ம தேவனையும், சிவபெருமானையும் தனித்தனியே வழிபட்டார்.
பதம் 4.7.56
ருத்ரம் ச ஸ்வேன பாகேன ஹி உபாதாவத் ஸமாஹித: கர்மணோதவஸானேன ஸோமபான் இதரான் அபி
உதவஸ்ய ஸஹர்த்விக்பி: ஸஸ்னாவ் அவப்ருதம் தத:
ருத்ரம்—சிவபெருமான்; ச—மேலும்; ஸ்வேன—அவருக்குரிய; பாகேன—அவிர்பாகம்; ஹி—இருந்து; உபாதாவத்—அவர் வழிபட்டார்; ஸமாஹித:—ஒருமுகப்படுத்திய மனத்துடன்; கர்மணா—செயலினால்; உதவஸானேன—முடித்து வைப்பதற்கானச் செயல்; ஸேம-பான்—தேவர்கள்; இதரான்—பிற; அபி—கூட; உதவஸ்ய—நிறைவேறிய பின்னர்; ஸஹ—அதனுடன்; ருத்விக்பி—புரோகிதர்களுடன்; ஸஸ்னென—நீராடினார்; அவப்ருதம்—அவப்ருத நீராடல்; தத—பிறகு.
சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தினை அவருக்குப் படைத்து முழுமரியாதையுடன் தக்கன் அவரை வழிபட்டார். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு அவர் அனைத்துத் தேவர்களையும், அங்கு குழுமி இருந்த பிறரையும் நிறைவு பெறச் செய்தார். புரோகிதர்களுடன் சேர்ந்து இக்கடமைகளை நிறைவேற்றிய பின்னர், அவர் நீராடி மனநிறைவு அடைந்தார்.
பதம் 4.7.57
தஸ்மா அபி அனுபாவேன ஸ்வேனைவா வாப்த-ராதஸே
தர்ம ஏவ மதிம் தத்த்வா த்ரிதஸாஸ் தே திவம் யயு:
தஸ்மை—அவருக்கு (தக்ஷன்); அபி—கூட; அனுபாவேன—பரமபுருஷ பகவானை வழிபடுவதினால்; ஸ்வேன—அவருக்குரிய; ஏவ—உறுதியாக; அவாப்த-ராதேஸ—முழு நிறைவெய்தி; தர்மே—சமயத்தின்; ஏவ—நிச்சயமாக; மதிம்—புத்தி; தத்த்வா—அளிக்கப்பட்டு; த்ரிதஸா:—தேவர்கள்; தே—அவர்கள்; திவம்— தேவலோகங்களுக்கு; யயு:—சென்றனர்.
வேள்விச் சடங்குகளினால் முழுமுதற் கடவுளாகிய விஷ்ணுவை இவ்வாறு வழிபட்ட பிறகு தக்கன் தர்மத்தின் பாதையில் நிலைபெற்றார். மேலும் அங்கு குழுமியிருந்த தேவர்கள் அனைவரும், அவர் மேலும் மேலும் அவரது புண்ணியச் செயல்களில் வளர்ச்சிபெற வேண்டும் என்று வாழ்த்தி அங்கிருந்து சென்றனர்.
பதம் 4.7.58
ஏவம் தாக்ஷாயணீ ஹித்வா ஸதீ பூர்வ-கலேவரம்
ஜஜ்ஞே ஹிமவத: க்ஷேத்ரே மேனாயாம் இதி ஸுஸ்ருடி
ஏவம்—இவ்வாறு; தாக்ஷாயணீ—தக்கனின் புதல்வி; ஹித்வா—துறந்தபிறகு; ஸதீ—சதீ; பூர்வ-கலேவரம்—அவளது முந்தைய உடலை; ஜஜ்ஞே—பிறந்தாள்; ஹிமவத:—இமவானின்; க்ஷேத்ரே—மனைவியினிடத்தில்; மேனாயாம்—மேனாவினிடத்தில்; இதி—இவ்வாறு; ஸுஸ்ரும—நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மைத்ரேயர் கூறினார்: தட்சனிடமிருந்தே பெற்ற உடலை அவனது மகளாகிய தாட்சாயணி துறந்த பிறகு இமாலயத்தில் பிறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவள் மேனா என்பவளுக்குப் புதல்வியாகப் பிறந்தாள். இதனை நான் ஆதாரப்பூர்வமான இடங்களில் இருந்தே கேள்விப்பட்டேன்.
பதம் 4.7.59
தம் ஏவ தயிதம் பூய ஆவ்ருங்க்தே பதிம் அம்பிகா
அநன்ய-பாவைக-கதிம் ஸக்தி: ஸுப்தேவ பூருஷம்
தம்—அவரை (சிவபெருமான்); ஏவ—உறுதியாக; தயிதம்—அன்பிற்குரியவர்; பூய:—மீண்டும்; ஆவ்ருங்க்தே—ஏற்றுக் கொள்ளல்; பதிம்—அவள் கணவராக; அம்பிகா—அம்பிகை அல்லது சதீ; அநன்ய-பாவா—மற்றவர்கள் மீது பற்றின்றி; ஏக-கதிம்—ஒரே லட்சியம்; ஸக்தி:—பெண்பால் சக்திகள் (இடை மற்றும் புறச் சக்திகள்); ஸுப்தா—ஒடுங்கிக் கிடத்தல்; இவ—போன்று; பூருஷம்—ஆண்பால் (பரமபுருஷ பகவானின் பிரதிநிதியான சிவபெருமான்).
அம்பிகை (துர்கை) எனப்படும் தாட்சாயணி (சதீ) மீண்டும் சிவபெருமானையே தன் கணவனாக அடைந்தாள். இது முழுமுதற் கடவுளின் பல்வேறு சக்திகள் புதுப் படைப்புக் காலத்தில் செயல்படுவது போன்றதாகும்.
பதம் 4.7.60
ஏதத் பகவத: ஸம்போ: கர்ம தக்ஷாத்வர-த்ருஹ:
ஸ்ருதம் பாகவதாச் சிஷ்யாத் உத்தவான் மே ப்ருஹஸ்பதே:
ஏதத்—இந்த; பகவத:—அனைத்து வளங்களையும் உடையவரின்; ஸம்போ:—சம்புவின் (சிவபெருமான்); கர்ம—கதை; தக்ஷ-அத்வர-த்ருஹ:—தக்ஷனின் வேள்வியை அழித்தவர்; ஸ்ருதம்—கேட்கப்பட்டு; பாகவதாத்—சிறந்த பக்தரிடமிருந்து; ஸிஷ்யாத்—சீடரிடமிருந்து; உத்தவாத்—உத்தவரிடமிருந்து; மே—என்னால்; ப்ருஹஸ்பதே:—பிருகஸ்பதியின்.
மைத்ரேயர் கூறினார்: எனதன்பான விதுரனே, சிவபெருமானால் அழிக்கப்பட்ட தட்ச யக்ஞத்தைப் பற்றி நான், மிகச் சிறந்த பக்தரும் பிருகஸ்பதியின் சீடருமான உத்தவரிடமிருந்தே அறிந்தேன்.
பதம் 4.7.61
இதம் பவித்ரம் பரம் ஈஸ-சேஷ்டிதம்
யஸஸ்யம் ஆயுஷ்யம் அகௌக-மர்ஷணம்
யோ நித்யதாகர்ண்ய நரோ ‘னுகீர்தயேத்
துநோதி அகம் கெளரவ பக்தி-பாவத:
இதம்—இந்த; பவித்ரம்—தூய; பரம்—பரம; ஈஸ-சேஷ்டிதம்—பரமபுருஷ பகவானின் திருவிளையாடல்; யஸஸ்யம்—புகழ்; ஆயுஷ்யம்—ஆயுள்; அக-ஒக-மர்ஷணம்—பாவங்களை அழித்து; ய:—யார்; நித்யதா—எப்போதும்; ஆகர்ண்ய—கேட்டபிறகு; நர:—ஒரு மனிதன்; அனுகீர்தயேத்—சொல்லவும்; துநோதி—நீக்குகிறது; அகம்—பௌதீக மாசு; கௌரவ—ஓ, குருகுலத் தோன்றலே; பக்தி-பாவத:—பக்தியுடனும் நம்பிக்கையுடனும்.
மாமுனிவர் மைத்ரேயர் இறுதியாகக் கூறினார்: ஓ, குருகுலத் தோன்றலே, முழுமுதற் கடவுளான விஷ்ணுவினால் நடத்தி வைக்கப்பட்ட இந்தத் தட்சயக்ஞம் பற்றிய வரலாற்றினை ஒருவன் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் கேட்கவும், கேட்டதை மீண்டும் மீண்டும் பிறருக்கு எடுத்துரைக்கவும் செய்தால் உலக வாழ்வின் அனைத்து மாசுக்களும் நீங்கி அவன் தூய்மையடைவான்.
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “தட்சன் நடத்திய வேள்வி” எனும் தலைப்பைக் கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.