ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம்

பல்லவி
ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்
ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
மாராபி ராமனுக்கு, மன்னு பரந்தாமனுக்கு,
ஈராறு நாமனுக்கு, ரவிகுல சோமனுக்கு

மாராபி ராமனுக்கு, மன்னு பரந்தாமனுக்கு,
ஈராறு நாமனுக்கு, ரவிகுல சோமனுக்கு

ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்

கொண்டல்மணி வண்ணனுக்கு, கண்ணனுக்கு மங்களம்.
கோசலை குமாரனுக்கு, வீரனுக்கு மங்களம்

கொண்டல்மணி வண்ணனுக்கு, கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு, வீரனுக்கு மங்களம்

புண்டரீகத் தாளனுக்கு, பூச்சக்கிரவாளனுக்கு,
தண்டுவளத் தோளனுக்கு, ஜானகி மணாளனுக்கு

புண்டரீகத் தாளனுக்கு, பூச்சக்கிரவாளனுக்கு,
தண்டுவளத் தோளனுக்கு, ஜானகி மணாளனுக்கு

ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்

கோவைமணி வாயனுக்கு, மாயனுக்கு மங்களம்
கோதண்ட கையனுக்கு, மெய்யனுக்கு மங்களம்.

கோவைமணி வாயனுக்கு, மாயனுக்கு மங்களம்
கோதண்ட கையனுக்கு, மெய்யனுக்கு மங்களம்.

தாவுகுண சீலனுக்கு, சத்தியவி லாசனுக்கு, – தேவர்
அனுகூலனுக்கு, தசரதன் பாலனுக்கு

தாவுகுண சீலனுக்கு, சத்தியவி லாசனுக்கு, – தேவர்
அனுகூலனுக்கு, தசரதன் பாலனுக்கு

ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்

மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு

மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு

ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் – நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம்
சுபமங்களம் சுபமங்களம்

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare