a. மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
- சாதம் – 1 கப்
- பெரிய மாங்காய் – 1 (நன்றாக துருவியது)
- காய்ந்தமிளகாய் – 2
- எள்ளு – 1 டீஸ்பூன்
- வேர்க்கடலை – 2 டீஸ்பூன் (வறுத்தது)
- பச்சை மிளகாய் – 1
- துருவிய தேங்காய் – 1/2 மூடி
- வெல்லம் – சிறிதளவு
- நல்லெண்ணை – 3 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
தாளிக்க
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கடலைப்பருப்பு
- காய்ந்தமிளகாய் இரண்டு
செய்முறை:
- மிக்ஸியில் எள்ளு, காய்ந்தமிளகாய் பாதி வறுத்த நிலக்கடலை, பச்சைமிளகாய், தேங்காய், வெல்லம், மாங்காய் துருவல் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.
- பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நிலக்கடலை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
- அதே கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கருவேப்பிலை தாளித்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், வறுத்த நிலக்கடலை, அரைத்து வைத்த மாங்காய் கலவையை சேர்த்து நன்றாக வதக்கி பின் வேக வைத்த சாதத்துடன் சேர்த்து கலக்கவும்.

