c. காலிஃப்ளவர் சப்பாத்தி

தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 2 கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- காலிஃப்ளவர் – 1 துருவியது
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – தேவைக்கேற்ப
- கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- கோதுமை மாவில் உப்பு, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- துருவிய காலிஃப்ளவர்ல், பச்சமிளகாய்,இஞ்சி ,உப்பு, கரம் மசாலா சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு சப்பாத்தி மாவு தேய்த்துப் பிறகு அதனுள் இந்த காலிஃப்ளவர் கலவையை வைத்து திரும்பவும் சப்பாத்தி தேய்த்து வேகவைக்கவும்.

