c. பீன்ஸ் பொறியல்

தேவையான பொருட்கள்
- பீன்ஸ் ஒரு கப் சிறிதாக நறுக்கியது
- தேங்காய் துருவல் ஒரு டீ ஸ்பூன்
- தேவைக்கேற்ப உப்பு
தாளிக்க:-
- சிறிதளவு எண்ணெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கருவேப்பிலை
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்த பின் சிறிதாக நறுக்கிய பீன்ஸை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக நீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு:-
கேரட், வெண்டைக்காய், முட்டைகோஸ், அவரைக்காய் போன்ற காய்களிலும் இதேபோல் பொறியல் (No Onion) செய்துகொள்ளலாம்.

