b. கிரீன் பீஸ் மசாலா

தேவையான பொருட்கள்
  • முந்திரி 10 – 12 – வென்னீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  • தக்காளி – 4 ( அரைத்துக் கொள்ளவும்)
  • பட்டாணி – 1கப் வேக வைத்தது
  • இஞ்சி – 1 துண்டு
  • பிரியாணி இலை – 2
  • லவங்கம் – 2
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • ஏலக்காய் – 2
  • இவை அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
செய்முறை:
  • முதலில் கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிறகு மிதமான சூட்டில் 2 பிரியாணி இலை, 2 லவங்கம், 1 சிறிய பட்டை , 2 ஏலக்காய், சிறு ஜாதிபத்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • 1 இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய் மற்றும் 1 சிட்டிகைப் பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின் இதில் அரைத்து வைத்த தக்காளி மற்றும் முந்திரி பேஸ்டை சேர்க்கவும்.
  • அவை நன்றாக கொதித்த பிறகு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீ ஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இரண்டு டீஸ்பூன் அளவு தயிர் (அடித்து வைத்ததை) சேர்க்கவும்.
  • அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பின் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare