8. ஜவ்வரிசி ரொட்டி

தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – 1 கப்
- வறுத்த தேங்காய் – தேவையான அளவு
- துருவிய உருளைக்கிழங்கு – 1 கப்
செய்முறை
- ஜவ்வரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு நன்றாக அரைக்கவும்.
- அரைத்த மாவில் வறுத்த தேங்காய், துருவிய உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ரொட்டி மாவு போல பதமாக செய்து கொள்ளவும்.
- தோசைக்கல்லில் அடை போல தட்டி, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக சுடவும்.

