VI. புரிக்கு வெளியேயுள்ள திருக்கோயில்கள்
7. பலதேவ வித்யாபூஷணர்
நோக்கங்கள்:
நோக்கம் 2: ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரின் பிறப்பு, சிறுபிள்ளைப் பருவம் மற்றும் கல்வியை அறிதல்.
நோக்கம் 6: ஜெய்ப்பூரில் அவர் எதிர்கொண்ட சவாலும் பெற்ற “வித்யாபூஷணர்” என்னும் பட்டத்தையும் புரிதல்.
அறிமுகம்
நோக்கம் 1 : ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணர் ஒரு மகத்தான கௌடிய வைஷ்ணவ ஆச்சார்யராகவும், அவருடைய இலக்கிய பங்களிப்புகளையும் அறிதல்.
ஒவ்வொரு இஸ்கான் பக்தரும் ஆச்சார்யரான ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரைப் பற்றி அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியம். ஜகந்நாதபுரியில் ஸ்ரீ ராதா தாமோதர பண்டிதரை அவர் சந்தித்தது, அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். சில நாட்கள் ஸ்ரீ ராதா தாமோதரரிடமிருந்து ஞானத்தை கேட்ட பிறகு, அவர் ராதா-கிருஷ்ண மந்திரத்தில் தீட்சை பெற்றார். பின்னர் அவர் ஒரு மகத்தான கௌடிய வைஷ்ணவ ஆச்சார்யராக உயர்ந்தார்.
அவர் பிரம்மா → மத்வாசார்யர் → ஸ்ரீ சைதன்ய மகாபிரபு என்ற சீட பரம்பரையில் வரும் பிரம்மா-மத்வ-கௌடிய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்.
ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரின் வாழ்க்கையில் ஜகந்நாதபுரியில் நிகழ்ந்த சம்பவங்களை நாம் இப்போது அறிந்து கொள்வோம்.
ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷண பிரபு (ஸ்ரீ கோவிந்த தாஸர்) உயர்ந்த நிலை கொண்ட பரிசுத்த பக்தர். அவர் பகவானின் சேவையைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை. புகழ் அல்லது பெயருக்கான எந்த ஆசையும் அவருக்கு இல்லை. மனித பிறவியை பெற்றவர்களின் உன்னத நன்மைக்காக அவர் பல அரிய நூல்களை இயற்றினார்.
வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கமாக “கோவிந்த பாஷ்யம்” என்ற நூலை எழுதியதன் மூலம் அவர் மிகவும் புகழ்பெற்றவர்.
பிறப்பு மற்றும் சிறுபிள்ளைப் பருவம்
நோக்கம் 2 : ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரின் பிறப்பு, சிறுபிள்ளைப் பருவம் மற்றும் கல்வியை அறிதல்.
அவரின் பிறந்த இடம், பெற்றோரின் பெயர்கள் மற்றும் குடும்ப வரலாறு பற்றிய துல்லியமான தகவல்கள் அறியப்படவில்லை. எனவே, அவரது பிறப்பு மற்றும் சிறுபிள்ளைப் பருவத்தின் விவரங்கள் தெளிவாக கிடைக்கவில்லை.
இருப்பினும், சிலர் கூறுவதாவது, அவர் ஒடிசாவில் உள்ள ரேமுணாவிற்கு அருகிலுள்ள பாலேஸ்வரா என்னும் கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தார்.
இளமைக் காலத்திலேயே அவர் சமஸ்கிருத இலக்கணம், கவிதை மற்றும் தர்க்கத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் திக்-விஜய பண்டிதராக (எதிரிகளை வெல்லும் அறிஞர்) உயர்ந்து, பல புனித ஸ்தலங்களுக்கு பயணம் செய்தார். அவர் சென்ற இடமெல்லாம் அங்குள்ள முனிவர்கள், அறிஞர்கள் மற்றும் சந்நியாசிகளை விவாதத்தில் வென்றார்.
இவ்வாறு பல புனித ஸ்தலங்களை சுற்றிப்பார்த்தபின், அவர் ஸ்ரீ மத்வாசார்யரின் தத்துவவாதி மரபினரைச் சேர்ந்தவர்களின் கோவிலில் தங்கினார். அங்கு அவர் தத்துவவாத சித்தாந்தத்தை ஆழமாகக் கற்றார்.
பின்னர் அவர் சந்நியாசம் ஏற்று, தத்துவவாத சித்தாந்தத்தை இந்தியா முழுவதும் உற்சாகமாகப் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீ ராதா தாமோதர பண்டிதரைச் சந்தித்தல்
நோக்கம் 3: ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணர் ஜகந்நாதபுரியில் ஸ்ரீ ராதா தாமோதர பண்டிதரை சந்தித்ததின் முக்கியத்துவத்தை புரிதல்
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவர் மெதுவாக ஜகந்நாதபுரியை அடைந்தார். அங்கு சில நாட்கள் தங்கி பிரசாரம் செய்தார்.
அந்த நேரத்தில், அவர் ரஸிகானந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ ராதா தாமோதர பண்டிதரை சந்தித்தார்.
கௌடிய தத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ராதா தாமோதரர், மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் கொண்டு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் பரம தத்துவ நிலையை விளக்கினார்.
“ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் தான் பரம புருஷோத்தம பகவான். அவர் கிருஷ்ண பிரேமையால் உலகத்தை நிரப்ப வந்தார். வேதாந்த சூத்திரத்திற்கு தனியாக ஒரு விளக்க நூலை எழுத தேவையில்லை என்று அவர் கருதினார், ஏனெனில் அதே வியாசர் எழுதிய ஸ்ரீமத் பகவதமே அதன் இயல்பான விளக்கமாகும்.”
பலதேவரின் கூர்ந்த கவனிப்பு
நோக்கம் 4: ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரின் கூர்ந்த கவனிப்பும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த தீட்சையையும் அறிதல்
ராதா தாமோதரர், ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி எழுதிய ‘பாகவத சந்தர்ப’ நூலைப் படிக்க பலதேவருக்கு ஆலோசனை வழங்கினார். பல நாட்கள் அவர்கள் இந்நூல்களை விவாதித்தனர்.
பலதேவர் கவனித்தது என்னவெனில், ஜீவ கோஸ்வாமி முக்கிய தத்துவங்களில் மத்வாசார்யரிடமிருந்து பெரிதாக விலகவில்லை. ஆனால், அவர் அந்த தத்துவங்களை மிகவும் ஒழுங்காகவும் நுட்பமாகவும் விளக்கியிருந்தார். இது பலதேவரை ஆழமாக கவர்ந்தது.
மேலும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் லீலைகள் மற்றும் உபதேசங்கள், குறிப்பாக சர்வபௌம பட்டாசாரியருடன் நடைபெற்ற உரையாடல்கள் பற்றியும் அவருக்கு போதிக்கப்பட்டது.
இவ்வாறு கௌடிய தத்துவத்தில் உறுதியடைந்த பலதேவர், கௌடிய சம்பிரதாயத்தில் சேர தீட்சை கேட்டார். அவர் ஏற்கனவே தீட்சை பெற்றிருந்ததால், ராதா தாமோதரர் முறையான தீட்சையை வழங்கவில்லை. ஆனால், ஒரு சிறப்பு முறையின் மூலம் அவரை ஏற்றுக்கொண்டார்.
இதனால், பலதேவர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
இதன் மூலம் அவர் கௌடிய சம்பிரதாயத்தில் இணைந்து, குறிப்பாக “அசிந்த்ய பேத அபேத தத்துவத்தை” முழுமையாக அறிந்தார்.
நோக்கம் 5: ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணர் விஷ்வநாத சக்ரவர்த்தி தாகூரரின் சீடராக இருந்ததும், அவருக்குக் கிடைத்த உபதேசத்தையும் அறிதல்
ராதா தாமோதர கோஸ்வாமியுடன் இருந்த பிறகு, அவர் விருந்தாவனத்திற்கு சென்று விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரரிடம் கல்வி கற்குமாறு உபதேசிக்கப்பட்டார்.
நோக்கம் 6: ஜெய்ப்பூரில் அவர் எதிர்கொண்ட சவாலும், பெற்ற “வித்யாபூஷணர்” என்னும் பட்டத்தையும் புரிதல்.
1706 ஆம் ஆண்டு, விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரர் அவரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள கால்தா எனும் இடத்திற்கு அனுப்பினார். மகாபிரபுவின் இயக்கத்தின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ராமானந்திகள், கௌடிய வைஷ்ணவர்களுக்கு வேதாந்த சூத்திரத்திற்கு விளக்க நூல் இல்லை என்பதால், அவர்கள் கோவிந்தஜியை ஆராதிக்க தகுதியற்றவர்கள் என்று சவால் விட்டனர்.
கோவிந்த பாஷ்யம்
இந்த சவாலுக்கு பதிலளிக்க, பலதேவ வித்யாபூஷணர் “கோவிந்த பாஷ்யம்” என்ற வேதாந்த சூத்திர விளக்க நூலை எழுதினார்.
கோவிந்தஜியின் கருணையால், மிகக் குறுகிய காலத்தில் (பாரம்பரியமாக ஏழு நாட்களில்) அவர் இதை நிறைவு செய்தார்.
இந்த நூலின் மூலம், கௌடிய வைஷ்ணவம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான தத்துவ மரபாக உறுதி செய்யப்பட்டது.
அவர் ராமானந்திகளை வெற்றி கொண்டு, ஜெய்ப்பூரில் கோவிந்தஜியின் சேவையில் கௌடிய வைஷ்ணவர்களை மீண்டும் ஈடுபடச் செய்தார்.
இந்த மாபெரும் சாதனைக்காக, அவருக்கு “வித்யாபூஷணர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நோக்கம் 7: ஸ்ரீமத் பலதேவ வித்யாபூஷணரின் பிற நூல்கள், சீடர்கள், அவருடைய குணங்கள், அவரது மறைவு மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் மகிமைப்படுத்தலை அறிதல்.
பிற நூல்கள்
ஸ்ரீ பலதேவ வித்யாபூஷணர் நிஸ்கிஞ்சன பரம பாகவதர் — முழுமையாக துறவறம் கொண்ட உயர்ந்த பக்தர்.
அவர் இருபத்து நான்கு நூல்கள் மற்றும் விளக்க நூல்களை இயற்றி, பக்தர்கள் கௌடிய தத்துவத்தை புரிந்துகொள்ள உதவினார்.
முக்கிய நூல்கள்:
– கோவிந்த பாஷ்யம்
– சித்தாந்த ரத்னம்
– வேதாந்த ஸ்யாமந்தகம்
– பிரமேய ரத்னாவலி
– சித்தாந்த தர்ப்பணம்
– காவ்ய கௌஸ்துபம்
– ஐஸ்வர்ய கடம்பினி
– வியாகரண கௌமுதி
– பதகௌஸ்துபம்
– கீதாபூஷண பாஷ்யம்
தனிப்பட்ட குணங்கள்
– மிகுந்த தாழ்மை
– பொய்யான பெருமை இல்லாதவர்
– முழுமையான பற்றின்மை (நிஸ்கிஞ்சன நிலை)
– கிருஷ்ணரின் சேவைக்கு முழுமையாக அர்ப்பணிப்பு
– கௌடிய வைஷ்ணவத்தை பாதுகாத்தவர்
சீடர்கள் மற்றும் ஆன்மீக அடையாளம்
அவருக்கு இரண்டு உயர்ந்த சீடர்கள் இருந்தனர்: ஸ்ரீ உத்தவ தாஸர் மற்றும் ஸ்ரீ நந்தன மிஷ்ரர்.
ஸ்ரீல பக்திவிநோத தாகூரரின் கருத்துப்படி, சைதன்ய லீலையில் அவர் ஸ்ரீ கோபிநாத ஆச்சார்யராகவும், கிருஷ்ண லீலையில் ரத்னாவளி தேவியாகவும் விளங்குகிறார்.
மறைவு
ஸ்ரீ பலதேவ வித்யாபூஷணர் 1768 ஆம் ஆண்டில் மறைந்தார்.
மகிமைப்படுத்தல்
ஸ்ரீல பிரபுபாதர், கோவிந்த பாஷ்யத்தை மிக அழகாக வெளிப்படுத்தியதற்காக, தமது “பகவத் கீதை உண்மைஉருவில் ” நூலை அவருக்கு அர்ப்பணித்து அவரை மகிமைப்படுத்தினார்.

