VI. புரிக்கு வெளியேயுள்ள திருக்கோயில்கள்

4. லிங்கராஜர்

நோக்கங்கள்

நோக்கம் 1: புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிதல்.

நோக்கம் 2: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எகாம்ர காணனம் (புவனேஸ்வர்) பகுதியை சிவபெருமானுக்கு தங்கும் இடமாக அருளியதை அறிதல்.

நோக்கம் 3: லிங்கராஜர் கோவிலில் வழிபடப்படும் தெய்வங்களை (ஹரிஹரர் திருவுருவாக இருக்கும் லிங்கராஜர் உட்பட) அறிதல்.

நோக்கம் 4: லிங்கராஜர் கோவிலின் கட்டிட அமைப்பை அறிதல்.

நோக்கம் 5: லிங்கராஜர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை அறிதல்.

நோக்கம் 6: லிங்கராஜர் கோவிலுக்கு எளிதாக செல்லும் வழியை அறிதல்.

அறிமுகம்

நோக்கம் 1: புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை அறிதல்.

புவனேஸ்வரில் இருக்கும் லிங்கராஜர் கோவில் மிகவும் பெரியதும் புனிதமான கோவிலும் ஆகும். இந்த கோவில் ஹரிஹரர் (விஷ்ணு மற்றும் சிவன் ஒன்றாக இருக்கும் திருவுரு)க்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது 11ஆம் நூற்றாண்டில் ஜஜாதி கேசரி மன்னனால் கட்டப்பட்டது.

இந்த கோவிலில் சிவபெருமானும் மற்றும் விஷ்ணுவும் ஒரே தெய்வமாக பக்தர்களால் வழிபடப்படுகின்றனர். கோவில் கோபுரத்தின் உச்சியில் திரிசூலம் அல்லது சக்கரம் இல்லை. அதற்கு பதிலாக ஸ்ரீ ராமரின் அம்பு சின்னம் உள்ளது.

இந்த கோவில் இன்றும் பக்தர்கள் வழிபடும் புனித தலமாக உள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதி உண்டு. தூய்மையை கடைபிடித்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்றவர்கள் கோவிலை வெளியிலிருந்து தரிசனம் செய்யலாம்.

லிங்கராஜர் கோவில் வரலாறு – புவனேஸ்வர்

நோக்கம் 2: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எகாம்ர காணனம் (புவனேஸ்வர்) பகுதியை சிவபெருமானுக்கு தங்கும் இடமாக அருளியதை அறிதல்.

புராணங்களில், குறிப்பாக ஸ்கந்த புராணத்தில் ஒரு அழகான நிகழ்வு சொல்லப்படுகிறது. காசியை ஆண்ட ஒரு மன்னன் சிவபெருமானின் பெரிய பக்தனாக இருந்தான் . ஆனால் அவன் மனதிலிருந்த ஆசைகள் நிறைவேறவில்லை. அவன் குறிப்பாக ஶ்ரீ கிருஷ்ணரை வெல்ல வேண்டும் என்று விரும்பினான்.அதனால் அவன் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் செய்தான்.

அவனுடைய தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், “நீ போய் கிருஷ்ணருடன் போரிடு, நான் உனக்கு துணை இருப்பேன்” என்று அருள் செய்தார். அந்த மன்னன் போருக்கு சென்றான்; சிவபெருமானும் தன் கணங்களுடன் அவன் பின்னால் சென்றார்.

இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் அந்த மன்னனையும் அவனுடன் இருந்தவர்களையும் அழித்தது. காசி நகரமே சுடுகாட்டைப் போல ஆனது.

இதைக் கண்ட சிவபெருமான் கோபத்தில் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினார். ஆனால் அதனால் சுதர்சன சக்கரத்துக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சிவபெருமான், “என்னை காப்பாற்ற கிருஷ்ணர் மட்டுமேமுடியும் ” என்று உணர்ந்து, அவரிடம் சரணடைந்தார்.

அப்போது சிவபெருமான் பணிவுடன், ஶ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டார்: “என் இறைவா, நான் எங்கு தங்க வேண்டும்?”

அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அருள் செய்து, “புருஷோத்தம க்ஷேத்திரத்தின் வடக்கில் ஏகாம்ர காணனம் என்ற புனிதமான இடம் உள்ளது. அது மிக அழகானதும், பக்தர்களுக்கு பயனும் மோக்ஷமும் தரக்கூடியதும் ஆகும். நீ அங்கே தங்கி, அந்த தலத்தின் காவலராக ‘க்ஷேத்ரபாலன்’ ஆக இருப்பாய். அங்கு நீ ‘புவனேஸ்வரர்’ எனப் புகழப்படுவாய்” என்று அருளினார்.

அதனால் அந்த இடம் புவனேஸ்வர் என அழைக்கப்படுகிறது. இது ஹேமாசலமும், ஸ்வர்ணாதி க்ஷேத்திரமும் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு எண்ணற்ற சிவலிங்கங்கள் உள்ளன. இது அஷ்ட தீர்த்தங்கள் கொண்ட புனித தலம்.

இந்த தலம் காசியைவிடவும் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது; கைலாசத்தைவிடவும் இனிமையானது என்று கூறப்படுகிறது.

ஏகாம்ர புராணம் கூறுவது என்னவெனில், இந்த லிங்கம் துவாபர மற்றும் கலி யுகங்களில் வெளிப்பட்டது. இன்றுள்ள லிங்கம் ஸ்வயம்பு (தானாக தோன்றிய) திருவுருவாக, சக்தி பீடத்தின் மேல் அமைந்துள்ளது.

இவ்வாறு, பகவான் கிருஷ்ணரின் அருளால் சிவபெருமான் புவனேஸ்வரில் தங்கி, பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

லிங்கராஜர் கோவில் தெய்வங்கள்

நோக்கம் 3: லிங்கராஜர் கோவிலில் வழிபடப்படும் தெய்வங்களை (ஹரிஹரர் திருவுருவாக இருக்கும் லிங்கராஜர் உட்பட) அறிதல்.

லிங்கராஜர் (முக்கிய தெய்வம் – ஹரிஹரர் திருவுரு)
லிங்கராஜர் ஸ்வயம்பு (தானாக தோன்றிய) சிவலிங்கமாக வழிபடப்படுகிறார். அவர் ஹரிஹரர் (சிவன் + விஷ்ணு) எனக் கருதப்படுகிறார். அவரை வழிபட்டால் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் அருள் இரண்டும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த லிங்கம் சுமார் 8 அடி விட்டம் கொண்டது. தினமும் அபிஷேகம், ஆரத்தி, நைவேதியம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

விஷ்ணு (சாலிகிராம ரூபம்)
விஷ்ணு பெருமாள் இங்கு சாலிகிராமமாக இருக்கிறார். இது லிங்கராஜருக்குள் விஷ்ணுவின் இருப்பை காட்டுகிறது. இதன் மூலம் சைவ- வைஷ்ணவ ஒற்றுமையை வலியுருத்துகிறது.

பார்வதி தேவீ (அன்னபூர்ணேஸ்வரி)
பார்வதி அம்மன் தனி சன்னதியில் வழிபடப்படுகிறார். லிங்கராஜருக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேதியம் அவருக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது. இது தெய்வீக ஒருமையை காட்டுகிறது.

நந்தி
நந்தி, சிவபெருமானின் வாகனம், கருவறையை நோக்கி நிற்கிறது.நந்தியானவர் பக்தர்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார் என்று நம்பப்படுகிறது.

பிற தெய்வங்கள்
இந்த கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட சிறிய சன்னதிகள் உள்ளன. விநாயகர், முருகன், கௌரி, மற்றும் சிவன், விஷ்ணு ஆகியோரின் பல திருவுருக்கள் இங்கு வழிபடப்படுகின்றன. இதனால் இந்த கோவில் முழுமையான ஆன்மீக மையமாக உள்ளது.

கட்டிட அமைப்பு & சிறப்புகள்

நோக்கம் 4: லிங்கராஜர் கோவிலின் கட்டிட அமைப்பை அறிதல்.

லிங்கராஜர் கோவில் கலிங்கக் கட்டிடக் கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. இந்த கோவில் பெரிய கல் சுவரால் சூழப்பட்டுள்ளது (சுமார் 22,720 சதுர மீட்டர்).

முக்கிய கோபுரம் சுமார் 180 அடி உயரம் கொண்டது. அது மிகவும் உயரமாக இருந்து தொலைவிலிருந்தே தெளிவாக காணப்படுகிறது. கோவிலின் உள்ளே சுமார் 150 சிறிய சன்னதிகள் உள்ளன.

இந்த கோவில் சிவப்பு மணற்கல் மற்றும் லேட்டரைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதனால் கோவில் வெளிப்புறம் சற்று கருமையான தோற்றம் கொண்டுள்ளது. சுவர்களில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் மலர் வடிவங்கள் போன்ற அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன.

கோவிலின் உயரமான சுவர்கள் கோட்டை போல் தோன்றுகின்றன. கோவில் வளாகம் சுமார் 520 × 465 அடி பரப்பளவு கொண்டது.

முக்கிய நுழைவாயில் கிழக்கு திசையில் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு திசைகளிலும் மற்ற வாயில்கள் உள்ளன. முக்கிய வாசலில் ஒரு பக்கத்தில் சிவபெருமான் மற்றும் திரிசூலம், மறுபக்கத்தில் விஷ்ணு மற்றும் சக்கரம் சின்னமாக உள்ளன.

கோவில் நான்கு முக்கிய பகுதிகளால் அமைந்துள்ளது:

  • கருவறை கோபுரம்
  • சங்கம மண்டபம்
  • விழா மண்டபம்
  • நைவேத்ய மண்டபம்

இந்த பகுதிகள் அனைத்தும் ஒரே வரிசையில் அமைந்து, கருவறை நோக்கி உயரம் அதிகரிக்கிறது.
கோவிலுக்கு அருகில் பிந்து சாகர் தீர்த்தம் உள்ளது. இது கோவில் வளாகத்தில் அடியில் இருந்து வரும் நீரால் நிரம்புகிறது என்று நம்பப்படுகிறது. இந்த நீர் ஆன்மீகத்திற்கும், உடல்நலத்திற்கும் புனிதமானது என்று பக்தர்கள் கருதுகின்றனர்.

திருவிழாக்கள்

நோக்கம் 5: லிங்கராஜர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களை அறிதல்.

லிங்கராஜர் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள்

● மகா சிவராத்திரி – மிக முக்கியமான திருவிழா. பக்தர்கள் நோன்பிருந்து, வில்வ இலைகளை சமர்ப்பித்து, இரவு முழுவதும் இறைவனை வழிபடுகிறார்கள்.

● ருகுண ரதயாத்திரை (அஷோகாஷ்டமி) – ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம். இந்த நாளில் லிங்கராஜர் பெரிய தேரில் அருகில் உள்ள ராமேஸ்வரர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

இராமர் லங்கையை வென்று திரும்பும் போது சீதாதேவி சிவபெருமானை இங்கு வழிபட வேண்டும் என்று கேட்டார். அதனால் இராமர் இங்கு லிங்கம் நிறுவினார் என்று கூறப்படுகிறது.

இந்த திருவிழாவில் லிங்கராஜர் நான்கு நாட்கள் அங்கு தங்கி அருள் செய்கிறார்.

● சந்தன யாத்திரை – 22 நாட்கள் நடைபெறும் திருவிழா. பிந்து சாகர் தீர்த்தத்தில் படகு ஊர்வலம் நடைபெறும். தெய்வங்களுக்கு சந்தனம் பூசி சிறப்பாக வழிபடுகிறார்கள்.

மற்ற திருவிழாக்கள்:

பிரதமாஷ்டமி, பிரவரண ஷஷ்டி, புஷ்யாபிஷேகம், கிற்தகம்பள விழா, மாக சப்தமி, தமனபஞ்சிகா, பரசுராமாஷ்டமி, சயன சதுர்தசி, பவித்ராரோபணம், யம த்விதியா, உத்தாபன சதுர்தசி போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

இந்த திருவிழாக்கள் அனைத்தும் மிகுந்த பக்தியுடனும், ஆயிரக்கணக்கான பக்தர்களால் கொண்டாடப்படுகின்றன.

பிரதமாஷ்டமி, பிரவரண ஷஷ்டி, புஷ்யாபிஷேகம், கிற்தகம்பள விழா, மாக சப்தமி, தமனபஞ்சிகா, பரசுராமாஷ்டமி, சயன சதுர்தசி, பவித்ராரோபணம், யம த்விதியா, உத்தாபன சதுர்தசி போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

கோவிலின் அமைவிடம் மற்றும் செல்லும் வழி

நோக்கம் 6: லிங்கராஜர் கோவிலுக்கு எளிதாக செல்லும் வழியை அறிதல்.

  • புவனேஸ்வர் பழைய நகரப் பகுதியில் அமைந்துள்ளது
  • விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ
  • ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ
  • புவனேஸ்வர்–புரி முக்கிய சாலையிலிருந்து சுமார் 0.5 கி.மீ> சுமார் 0.5 கி.மீ

பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ

சுமார் 0.5 கி.மீ

  • பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ
  • நகர பேருந்துகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது

நகரத்தின் எந்தப் பகுதிகளிலிருந்தும் ஆட்டோ ரிக்ஷா மூலம் எளிதாக செல்லலாம் .

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare