ஷட்திலா ஏகாதசி

தல்பிய ரிஷி, பலஸ்ய முனியிடம், “ஆத்மா, ஜட சக்தியுடன் தொடர்பில் வரும் போது, ஒருவர் உடனடியாக திருடுதல், கொலை புரிதல் முறையற்ற கலவி போன்ற தவறுகள் இழைக்கத் தொடங்குவர். இத்தகைய ஆன்மாக்கள் எவ்வாறு நரகத்தில் இருந்து தப்ப இயலும் என்று கூறுங்கள். சிறிய தானம் அளிப்பதால், எவ்வாறு பாவத்தில் இருந்து தப்ப முடியும், என்பதை எடுத்துச் சொல்லுங்கள்,” என்று கேட்டார்.
தல்பிய ரிஷி, “சிவன், விஷ்ணு, பிரம்மா கேட்காத மிக நல்ல வினாவை நீ கேட்டு உள்ளாய். நான் கூறுவதைக் கவனமுடன் கேட்பாயாக”.
மக மாதம் பிறந்ததும் (ஜனவரி_ பிப்ரவரி) முறையாக குளித்து, ஆசை, காமம், குரோதம், பற்று, மற்றவரிடம் குறை காணுதல், பேராசை நீக்கி பகவான் ஶ்ரீகிருஷ்ணரை வணங்க வேண்டும். பின்னர் ஏகாதசியை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும்.
விரதம் இருப்பவர் குளித்து பகவான் கிருஷ்ணரை வழிபட்டு விரதம் முறைப்படி இருப்பதாக பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். சங்கு சக்கரம் கதை ஏந்திய பகவான் பாதங்களுக்கு சந்தனம், கற்பூரம், தூபம், நெய் தீபம் காண்பித்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புருஷ சுக்தம் மற்றும் ஜபம் செய்து. தானியம் விதை தவிர்த்து முறைப்படி ஏகாதசி விரதம் பகலும் இரவும் இருக்க வேண்டும். பகவானுக்கு பூசணி, தேங்காய், கொய்யா பழம் படைக்க வேண்டும். இல்லாவிட்டால், வெற்றிலை பாக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பகவான் கிருஷ்ணரிடம் “ஓ ! பகவானே! நீங்கள் இரக்கம் மிகுந்தவர்! மக்களை கடைத் தேற்றுபவர்! உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். முன்னோருக்கு மூலாதாரமாக விளங்கும் நீங்கள், லக்ஷ்மி தேவியுடன் எங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
ஒரு முறை நாரதர், கிருஷ்ணரிடம், “ஷட்தில ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலனை கூறுவீராக,” என்று கேட்டார்.
கிருஷ்ணர், “நான் கண்ட ஒரு பலனை கூறுகிறேன் கேட்பீராக. நீண்ட நாட்களுக்கு முன் என்னை முறையாக தொழுத பிராமணி ஒருத்தி இருந்தாள். என்னுடைய ஜன்மாஷ்டமி, ராம நவமி, வாமன துவாதசி, நரசிம்ம சதுர்த்தசி, வராஹ துவாதசி, கௌர பூர்ணிமா போன்ற விரதங்களை பக்தியுடன் அனுஷ்டித்து வந்தாள்.
கடுமையான விரதம் இருந்ததால் எலும்பும் தோலுமாக ஆனாள். பிராமணருக்கு, கன்யா பெண்களுக்கு தானம் செய்ததோடு, தன் வீட்டையும் தானமாகக் கொடுத்தாள். ஆனால், பிராமணனுக்கும், தேவர்களுக்கும் உணவு அளிக்க மறந்து விட்டாள். இவளே, வைகுந்தமடைவதற்கு தகுந்தவள், என்று நினைத்து, நேரிடையாக பூலோகத்திற்க்கு சிவ பக்தன் போல் மண்டை ஓட்டு மாலையும், கமண்டலம் ஏந்தி சென்றேன்.
அவள் என்னிடம் நான் வந்த காரணம் வினவ, நான் யாசகம் பெற வந்ததாகக் கூறினேன். உடனே அவள் கோபத்துடன், ஒரு பிடி மண்ணை, என் பாத்திரத்தில் இட்டாள். அவளுடைய தயை மற்றும் கருமித் தனம் பார்த்து வியந்து திரும்பினேன்.
விரதத்தில் சிறந்த இந்தப் பெண், மேலுலகம் வந்த போது, அவள் இட்ட மண் கொண்டு செய்த ஒரு வீட்டை அளித்தேன். அதில், அவள், தானம் அளிக்காத தானியங்களை தவிர்த்ததால், அவள் கோபத்துடன் என்னை அணுகி, காரணம் கேட்டாள். நான் அவளிடம், “நீ, உன் இருப்பிடம் சென்று, தேவர்கள் மனைவிகள் ஆர்வத்துடன் கதவை தட்டும் வரை உள்ளேயே இரு. அவர்களிடம், ஷட்தில ஏகாதசியின் பெருமையை கேட்டு, பின், தாள் திறப்பாய்” என்றேன்.
அதன்படி, அந்தப் பெண், வீட்டிற்குள் சென்று கதவைத் தாள் இட்டாள். தேவர்களின் மனைவிகள் வந்து, கதவைத் தட்டி, அவளை காண விழைந்த போது, அவள் ஷட்தில ஏகாதசி பெருமையை விளக்கக் கேட்டாள். தேவர்களின் மனைவிகள், பதில் தெரியாமல் செல்ல, ஒரு பெண் அதன் பெருமையை விளக்கினாள். பிராமண பெண் கதவைத் திறந்து வெளி வந்த போது, அவள் ஒரு தேவதையோ, கந்தர்வ பெண்ணோ, பூதமோ, நாக பத்தினியோ இல்லாமல் சாதாரண பெண்ணாக இருப்பது கண்டனர்.
அது முதல் முறைப்படி ஏகாதசி விரதம் இருந்து, அந்தப் பெண், தன் வீட்டில் ஏராளமான தானியங்கள் மற்றும் வஸ்துக்களை பெற்றாள். ஜட உருவம் நீங்கி, பேரானந்த, சச்சிதானந்த நிலையை, அழகான உருவத்தை அடைந்தாள்.
ஆக, அந்தப் பெண்ணும், அவளது வீடும், ஷட்தில ஏகாதசியின் பயனாக, தங்கம், வெள்ளி, வைர நகைகளுடன் நிறைந்த அழகான வாழ்வை பெற்றனர்.
ஓ நாரதரே! இந்த செல்வத்தை அடைவதற்காக, சுயநலத்துடன் ஒருவர் இந்த விரதம் அனுஷ்டிக்கக் கூடாது. மாறாக, ஆடை, எள் மற்றும் அன்னம் அவர் அவர் சக்திக்கு ஏற்ப, தானம் அளிக்கும் போது, திடமான உடலையும், ஆன்மீக உணர்வையும், எல்லா பிறவிகளிலும் அடைவர். ஜட உலகத்தில் இருந்து விடுதலையும், ஆன்மீக உலகத்தில் இடமும் பெற்று, பெருவாழ்வு வாழ்வர்.
பலஸ்தியர், “தல்பிய முனியே! ஷட்தில ஏகாதசி விரதம் முறைப்படி இருப்பவர்கள், ஏழ்மை நீங்கி, மன, உடல் ஆன்மீக முன்னேற்றம் பெற்று துரதிர்ஷ்டம், சகுனங்கள், போன்றவை நீங்கி, பெருவாழ்வு வாழ்வர். வேத முறைப்படி, இந்த விரதம் இருப்பவர், இறுதியில், வைகுந்தம் அடைந்து இன்புறுவர்” என்றார்.
இதுவே, மக மாத, கிருஷ்ண பட்ச, ஷட்தில ஏகாதசியின் பெருமையாக ஶ்ரீல கிருஷ்ண த்வய்பையான, வியாச முனிவர், பவிஷ்ய உத்தர புராணத்தில் கூறப்பட்ட செய்தியாகும்.

