அத்தியாயம் –5
நந்த மகாராஜனும் வசுதேவரும் சந்தித்தல்
பதங்கள் 10.5.1 — 10.5.2
ஸ்ரீ-சுக உவாச
நந்தஸ் தீவ் ஆத்மஜ உத்பன்னே ஜாத்ஹ்லாதோ மஹா-மனா:
ஆஹூய விப்ரான் வேத-ஜ்ஞான் ஸ்னாத: கசிர் அலங்க்ருத:
வாசயித்வா ஸ்வஸ்த்யயனம் ஜாத-கர்மாத்மஜஸ்ய வை
காரயம் ஆஸ விதிவத் பித்ரு-தேவார்ச்சனம் ததா
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நந்த:—நந்த மகாராஜன்; து:—உண்மையில்; ஆத்மஜே—அவரது மகன்; உத்பன்னே— பிறந்ததால்; ஜாத—ஆழ்ந்தார்; ஆஹ்லாத:—பேரானந்தத்தில்; மஹா-மனா:—தயாள குணமுடையவர்; ஆஹூய—வரவேற்றார்; விப்ரான்—பிராமணர்களை; வேத-க்ஞான்—வேத ஞானத்தில் நன்கு பரிச்சயமுள்ள; ஸ்னாத—முழு ஸ்நானம் செய்து; கசி:—தம்மைத் தூய்மை செய்துகொண்டு; அலங்க்ருத:—புத்தாடைகளையும், அணிகலன்களையும் நன்கு அணிந்துகொண்டு; வாசயித்வா—ஒதச் செய்தபின்; ஸ்வஸ்தி-அயனம்—(பிராமணர்களைக் கொண்டு) வேத மந்திரங்களை; ஜாத-கர்ம—குழந்தையின் பிறந்தநாள் விழாவை; ஆதிமஜஸ்ய—அவரது சொந்த மகனின்; வை—உண்மையில்; காரயாம் ஆஸ—நிறைவேற்றச் செய்தார்; விதி-வத்—வேத விதிகளுக்கேற்ப; பித்ரு-தேவ-அர்சனம்—பிதருக் மற்றும் தேவர்களின் வழிபாட்டை; தத—தவிரவும்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நந்த மகாராஜன் இயல்பாகவே மிகவும் தயாள குணமுடையவராக இருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மகனாகத் தோன்றியபொழுது அவர் ஆனந்தத்தில் மூழ்கிப்போனார். எனவே, குளித்து தம்மைத் தூய்மை செய்துகொண்டு, நன்கு உடுத்திக் கொண்ட பின், வேத மந்திரங்களை ஓதத் தெரிந்த பிராமணர்களை அழைத்து ஒதச் செய்தார். பின், வேத விதிமுறைகளுக்கேற்ப, தமது புத்தினம் குழந்தைக்கு வேதமுறைப்படி பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தேவர்கள் மற்றும் பிதுருக்களின் வழிபாட்டுக்குரிய ஏற்பாடுகளையும் அவர் செய்தார்.
பதம் 10.5.3
தேனூனாம் நியுதே ப்ராநாத் விப்ரேப்யா: ஸமலங்க்ருதே
திலாத்ரீன் ஸபத் ரத்னௌக-சதகெளம்பாம்பராவ்ருதான்
தேனூனாம்—கறவைப் பசுக்களை; நியுதே—20 லட்சம்; ப்ராதாத்—தானம் செய்தார்; விப்ரேப்ய:—பிராமணர்களுக்கு; ஸமலங்க்ருதே—முழுமையாக அலங்கரிக்கப்பட்ட; தில-அத்ரீன்—தானியக் குன்றுகள்; ஸப்த—ஏழு; ரத்ன-ஓக-சாத-கெளம்பா-அம்பர-ஆவ்ருதான்—தங்க ஜரிகையுடைய துணிகளாலும், ஆபரணங்களாலும் மூடப்பட்ட.
நந்த மகாராஜன் துணியாலும், ஆபரணங்களாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட இருபது லட்சம் பசுக்களை பிராமணர்களுக்கு தானம் செய்தார். மேலும் இரத்தினங்களாலும், தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட துணியாலும் மூடப்பட்டிருந்த ஏழு தானியக் குன்றுகளையும்கூட அவர்களுக்கு அவர் தானம் செய்தார்.
பதம் 10.5.4
காலேன ஸ்நான-சௌசாப்யாம் ஸம்ஸ்காரைஸ் தபஸேஜ்யயா
கத்யந்தி தானை: ஸந்துஷ்ட்யா த்ரவ்யானி ஆத்மாத்ம-வித்யயா
காலேன—காலப்போக்கினால் (நிலமும், மற்ற பௌதிக பொருட்களும் தூய்மையடைகின்றன); ஸ்நான-சௌசாப்யாம்—குளிப்பதால் (உடல் தூய்மையடைகின்றன); மேலும் சுத்தம் செய்வதால் (அசுத்தமான பொருட்கள் தூய்மையடைகின்றன); ஸம்ஸ்காரை:—சம்ஸ்காரத்தால் (பிறப்பு தூய்மையடைகிறது); தபஸா—தவத்தால் (புலன்கள் தூய்மையடைகின்றன); இஜ்யயா—வழிபாட்டினால் ( பிராமணர்கள் தூய்மையடைகின்றனர்); கத்யந்தி—தூய்மையடைகிறது; தானை:—தானத்தால் (செல்வம் தூய்மையடைகிறது); ஸந்துஷ்ட்யா—திருப்தியால் (மனம் தூய்மையடைகிறது); த்ரவ்யாணி—பசுக்கள், நிலம் மற்றும் தங்கம் போன்ற எல்லா பௌதிக உடைமைகளும்; ஆத்மா—ஆத்மா (தூய்மையடைகிறது); ஆத்ம-வித்யயா—தன்னுணர்வினால்.
அரசே, காலத்தின் போக்கினால் நிலமும் மற்ற பௌதிக உடைமைகளும் தூய்மையடைகின்றன; குளிப்பதால் உடல் தூய்மையடைகிறது; மேலும் சுத்தம் செய்வதால் அசுத்தமான பொருட்கள் தூய்மையடைகின்றன; சம்ஸ்காரத்தினால் (தூய்மைச் சடங்கு) பிறப்பு தூய்மையடைகின்றது; தவத்தினால் புலன்கள் தூய்மையடைகின்றன; மேலும் பிராமண வழிபாட்டாலும், தானத்தாலும் பௌதிக உடைமைகள் தூய்மையடைகின்றன. போதுமென்ற மன நிலையால் மனது தூய்மையடைகிறது; மேலும் தன்னுணர்வினால், அல்லது கிருஷ்ண உணர்வினால் ஆத்மா தூய்மையடைகிறது.
பதம் 10.5.5
ஸௌமங்கல்ய-கிரோ விப்ரா: ஸூத-மாகத-வந்தின:
காயகாஸ் ச ஜகுர் நேதுர் பேர்யோ துந்துபயோ முஹு:
ஸௌமங்கல்ய-கிரா:—அவர்கள் ஓதிய மந்திரங்களின் அதிர்வுகள் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தின; விப்ரா:—பிராமணர்கள்; ஸூத—சரித்திரங்களை ஓதுவதில் நிபுணர்களான; மாகத—விசேஷமான அரசகுடும்பங்களின் சரித்திரங்களைப் பாடுவதில் நிபுணர்கள்; வந்தின:—பாடிப் பிழைப்பவர்கள்; காயகா:—பாடகர்கள்; ச—மற்றும்; ஜகு:—பாடினர்; நேது:—ஒலித்தனர்; பேர்ய:—பேரிகைகளை; துந்துபய:—துந்துபிகளை; முஹு—இடையறாது.
பிராமணர்கள் ஓதிய மங்களகரமான வேத மந்திரங்கள், அவற்றின் அதிர்வுகளினால் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தின. புராணங்களைப் போன்ற பழைய சரித்திரங்களைப் பாடுவதில் நிபுணர்கள், அரச குடும்பங்களின் சரித்திரங்களைப் பாடுவதில் நிபுணர்கள் மற்றும் பொதுப் பாடகர்கள் ஆகிய அனைவரும் பாடினர். பாடகர்கள் பாடும் பொழுது, பேரிகைகளும் துந்துபிகளும் பக்கவாத்தியமாக இசைத்தன.
பதம் 10.5.6
வ்ரஜ ஸம்குஷ்ட-ஸம்ஸிக்த-த்வாராஜிர-க்ருஹாந்தர:
சித்ர-த்வஜ பதாகா-ஸ்ரக் சைல பல்லவ-தோரணை;
வ்ரஜ—நந்த மகாராஜனின் வசிப்பிடமான விரஜபூமி; ஸம்ருஷ்ட—நன்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தன; ஸம்ஸிக்த—நன்கு கழுவப்பட்டிருந்தன; த்வார—எல்லாக் கதவுகளும், வாயில்களும்; அஜிர—முற்றங்கள்; க்ருஹ-அந்தர:—வீட்டிலுள்ள அனைத்தும்; சித்ர—பலவகையான; த்வஜ—தோரணங்களின்; பதாகா—கொடிகளின்; ஸ்ரக்—மலர் மாலைகளின்; சைவ—துண்டுத் துணிகளின்; பல்லவ—மாவிலைகளின்; தோரணை:—வெவ்வேறு இடங்களிலுள்ள நுழைவாயில்களால் (அலங்கரிக்கப்பட்ட).
நந்த மகாராஜனின் வசிப்பிடமான விரஜபுரம், பலவகையான தோரணங்களாலும், கொடிகளாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெவ்வேறு இடங்களில் பலவகையான மலர் மாலைகளாலும், துண்டுத் துணிகளாலும், மாவிலைகளாலும் வாயில்கள் செய்யப்பட்டிருந்தன. முற்றங்களும், சாலைகளுக்கருகிலுள்ள வாயில்களும், மற்றும் வீடுகளின் அறைகளுக்குள்ளும் உள்ள அனைத்தும் நன்கு பெருக்கி நீரினால் கழுவப்பட்டிருந்தன.
பதம் 10.5.7
காவோ வ்ருஷா வத்ஸதரா ஹரித்ரா-தைல-ரூஷிதா
விசித்ர-தாது-பர்ஹஸ்ரக் வஸ்த்ர-காஞ்சன-மாலின:
காவ:—பசுக்கள்; வ்ருஷா:—காளைகள்; வத்ஸதரா:—கன்றுகள்; ஹரித்ரா—ஒரு மஞ்சள் கலவையால்; தைல—மற்றும் தைலம்; ரூஷிதா:—அவற்றின் உடல் முழுவதும் பூசப்பட்டிருந்தது; விசித்ர—பலவிதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன; தாது—வண்ண தாதுப் பொருள்; பர்ஹ-ஸ்ரக்—மயிலிறகு மாலைகள்; வஸ்த்ர—துணிகள்; காஞ்சன—தங்க ஆபரணங்கள்; மாலின:—மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு.
பசுக்களும், காளைகளும், கன்றுகளும், மஞ்சள் தைலம் மற்றும் பலவகையான தாதுப் பொருட்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு நன்றாக பூசப்பட்டிருந்தன. அவற்றின் தலைகள் மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், அவைமாலைகள் அணிவிக்கப்பட்டு, துணிகளாலும், தங்க ஆபரணங்களாலும் மூடப்பட்டிருந்தன.
பதம் 10.5.8
மஹார்ஹ-வஸ்த்ராபரண கஞ்சுகோஷ்ணீஷ-பூஷிதா:
கோபா: ஸ்மாயயூ ராஜன் நானோபாயன-பாணய:
மஹா-அர்ஹ—மிகவும் விலையுயர்ந்த; வஸ்திர-ஆபரண—ஆடை அணிகலன்களுடன்; கஞ்சுக—பிருந்தாவனத்தில் உபயோகிக்கப்படும் ஒரு குறிப்பிட்டவகையான ஆடையால்; உஷ்ணீஷ—தலைப்பாகைகளுடன்; பூஷிதா—நன்கு உடையனிந்து; கோபா:—இடையர்கள் அனைவரும்; ஸமாயயு:—அங்கு சென்றனர்; ராஜன்—அரசே (பரீட்சித்து மகாராஜனே); நானா—பல்வேறு; உபாயன—பரிசுகளை; பானய:—கைகளில் ஏந்தியபடி.
பரீட்சித்து மகாராஜனே, இடையர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களுடனும் மேல் சட்டை மற்றும் தலைப்பாகை போன்ற துணிமனிகளுடனும் செல்வச் சிறப்புடன் ஆடை அணிந்திருந்தனர், இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் பல்வேறு பரிசுகளைக் கைகளில் ஏந்தியபடி, நந்த மகாராஜனின் வீட்டை அணுகினர்.
பதம் 10.5.9
கோப்யஸ சாகர்ண்ய முதிதா யசோதாயா: ஸுதோத்பவம்
ஆத்மானம் பூஷயாம் சக்ருர் வஸ்த்ராகல்பாஞ்ஜனாதிபி:
கோப்ய:—பெண்கள் பிரிவினர், இடையர்களின் மனைவிகள்; ச—கூட; ஆகர்ண்ய—கேட்ட பின்; முதிதா:—மிகவும் மகிழ்ந்தனர்; யசோதாயா:—தாய் யசோதைக்கு; ஸுத-உத்பவம்—ஓர் ஆண் குழந்தை பிறந்திருப்பதை; ஆத்மானம்—தங்களை; பூஷயாம் சக்ரு:—விழாவில் பங்கு கொள்ள நன்றாக உடுத்திக் கொண்டனர்; வஸ்த்ர-ஆகல்ப-அஞ்ஜன-ஆதிபி:—தகுதியான ஆடை ஆபரணங்கள், கருப்புமை போன்றவைகளால்.
தாய் யசோதை ஓர் ஆண் குழந்தையை ஈன்றிருப்பதைக் கேள்விப்பட்ட இடையர்களின் மனைவிகளான கோபியர்கள் தகுதியான ஆடைகள், ஆபரணங்கள், கண்களுக்குரிய மை போன்றவைகளால் தங்களை மிகவும் நன்றாக அலங்கரித்துக் கொள்ளத் துவங்கினர்.
பதம் 10.5.10
நவ-குங்கும-கிஞ்ஜல்க-முக-பங்கஜ-பூதய:
பலிபிஸ் த்வரிதம் ஜக்மு: ப்ருது-ஸ்ரோண்யஸ் சலத்-குசா:
நவ-குங்கும-கிஞ்ஜல்க—புதிதாக மலர்ந்த குங்குமப் பூக்களால்; முக-பங்கஜ-பூதய:—அவர்களது தாமரை போன்ற முகங்களில் ஓர் அசாதாரணமான அழகை வெளிப்படுத்தி; பலிபி:—தங்கள் கைகளில் பரிசுப்பொருட்களுடன்; த்வரிதம்—மிகவும் விரைவாக; ஜக்மு:—(தாய் யசோதையின் வீட்டிற்கு) சென்றனர்; ப்ருது-ஸ்ரோண்ய:—நிறைந்த இடைகளுடன், பெண்மைக்குரிய, அழகு நிரம்பியவர்களாக; சலத்-குசா:—அவர்களது பருத்த ஸ்தனங்கள் அசைந்தாடின.
தாமரை போன்ற அவர்களுடைய முகங்கள் அசாதாரண அழகுடன் விளங்க, புதிதாக மலர்ந்த குங்குமப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இடையர்களின் மனைவிகள், தங்கள் கைகளில் பரிசுப் பொருட்களுடன் தாய் யசோதையின் வீட்டிற்கு விரைந்தனர். இயற்கையான அழகின் காரணத்தால், அவர்கள் நிறைந்த இடைகளையும் மார்பகங்களையும் பெற்றிருந்தனர். விரைந்து சென்ற அவர்களது மார்பகங்கள் அசைந்தாடின.
பதம் 10.5.11
கோப்ய: ஸும்ருஷ்ட-மணி-குண்டல-நிஷ்க-கண்டியஸ்
சித்ராம்பரா: பதி சிகா-ச்யுத-மால்ய-வர்ஷா:
நந்தாலயம் ஸ-வளயா வ்ரஜதீர் விரேஜுர்
வ்யாலோல-குண்டல-பயோதர-ஹார-சோபா:
கோப்ய:—கோபியர்கள்; ஸு-ம்ருஷ்ட—பிரகாசிக்கும்; மணி—மணிகளாலான; குண்டல—காதணிகளை அணிந்து; நிஷ்க-கண்டிய:—மேலும் சின்னஞ்சிறு சாவிகளும், பதக்கங்களும் தங்கள் கழுத்துகளிலிருந்து தொங்க; சித்ர-அம்பரா:—பலவகையான வண்ண ஜரிகைகள் கொண்ட ஆடைகளை அணிந்து; பதி—யசோதையின் வீட்டிற்குச் செல்லும் வழியில்; சிகா-ச்யுத—அவர்களது கூந்தல்களிலிருந்து விழுந்தன; மால்ய-வர்ஷா:—ஏராளமான மலர் மாலைகள்; நந்த-ஆலயம்—நந்த மகாராஜனின் வீட்டிற்கு; ஸ-வளயா:—கைகளில் வளையல்களுடன்; வ்ரஜதீ:—(அந்த ஆடைகளுடன்) செல்லும்பொழுது; விரேஜு:—அவர்கள் மிகமிக அழகுடன் காணப்பட்டனர்; வ்யாலோல—அசையும்; குண்டல—காதணிகளுடன்; பயோதர—ஸ்தனங்களுடன்; ஹார—மலர் மாலைகளுடன்; சோபா:—மிகவும் அழகாக காணப்பட்டனர்.
கோபியர்களின் செவிகளில், இரத்தினங்கள் பதித்த தோடுகள் பிரகாசமாக ஜொலித்தன. கழுத்துகளில் தங்கப் பதக்கங்கள் தொங்கின. அவர்களது கைகள் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்களது ஆடைகள் பலவித வண்ணங்கள் உடையவையாய் இருந்தன. மேலும் அவர்களது கூந்தல்களிலிருந்து ஏராளமான மலர்கள் வீதியில் விழுந்தன. இவ்வாறாக கோபியர்கள் நந்த மகாராஜனின் வீட்டிற்குச் செல்லும்பொழுது, அசைந்தாடிய அவர்களது தோடுகளும். மார்பகங்களும், மாலைகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.
பதம் 10.5.12
தா ஆசிஷ: ப்ரயுஞ்ஜானாஸ் சிரம் பாஹீதி பாலகே
ஹரித்ரா-சூர்ண-தைலாத்பி: ஸிஞ்சந்த்யோ ‘ஜனம் உஜ்ஜகு:
தா:—இடையர்களின் மனைவிகள் மற்றும் புதல்விகள் முதலான எல்லாப் பெண்களும்; ஆஸிஷ:—ஆசீர்வாதங்கள்; ப்ரயுஞ்ஜானா:—அளித்து; சிரம்—நீண்ட காலத்திற்கு; பாஹி—நீங்கள் விரஜ மன்னராகி, அதன் வாசிகளையெல்லாம் காப்பாற்ற வேண்டும்; இதி—இவ்வாறு; பாலகே—புத்திளம் குழந்தையின் மீது; ஹரித்ரா-சூர்ண—மஞ்சள் பொடியை; தைல-அத்பி:—தைலத்துடன் கலந்த; ஸிஞ்சந்த்ய:—தெளித்து; அஜனம்—பிறப்பற்றவரான பரமபுருஷர்; உஜ்ஜகு—பிரார்த்தனைகள் செய்தனர்.
இடையர்களின் மனைவிகளும், புதல்விகளும், “நீ விரஜ மன்னனாகி, அதன் வாசிகளை நீண்ட காலத்திற்குக் காத்தருள வேண்டும்” என்று கூறி, புத்திளம் குழந்தையான கிருஷ்ணரை ஆசீர்வதித்தனர். பிறகு பிறப்பற்ற பரமபுருஷரின் மீது, மஞ்சள் பொடி, தைலம் மற்றும் நீர் ஆகியவை அடங்கிய கலவையைத் தெளித்து பிரார்த்தனைகள் செய்தனர்.
பதம் 10.5.13
அவாத்யந்த விசித்ராணி வாதித்ராணி மஹோத்ஸவே
க்ருஷ்ணே விஸ்வேஸ்வரே ‘நன்தே நந்தஸ்ய வ்ரஜம் ஆகதே
அவாத்யந்த—வசுதேவரின் புதல்வரைக் கொண்டாடும் வகையில் ஒலித்தன; விசித்ராணி—அநேக; வாதித்ராணி—வாத்தியக் கருவிகள்; மஹா-உத்ஸவே—இந்த மாபெரும் விழாவில்; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; விஸ்வ-ஈஸ்வரே—முழு பிரபஞ்சத் தோற்றத்திற்கும் எஜமானரான; அநந்தே—எல்லையற்றபடி; நந்தஸ்ய—நந்த மகாராஜனின்; வ்ரஜம்—விரஜ பூமிக்கு; ஆகதே—அவ்வாறு வருகையளித்துள்ள.
பிரபஞ்சத் தோற்றத்தின் எஜமானரும், சர்வ வியாபகமுடையவரும், எல்லையற்றவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது நந்த மகாராஜனின் தோட்டத்திற்கு வந்திருப்பதால், இப்பெரும் விழாவைக் கொண்டாடும் வகையில் பலவிதமான வாத்தியக்கருவிகள் ஒலித்தன.
பதம் 10.5.14
கோபா: பரஸ்பரம் ஹ்ருஷ்டா ததி-க்ஷீர-கிருதாம்புபி:
ஆஸிஞ்சந்தோ விலிம்பந்தோ நவநீதைஸ் ச சிக்ஷிபு
கோபா:—இடையர்கள்; பரஸ்பரம்—ஒருவர் மீதொருவர்; ஹ்ருஷ்டா:—மிகவும் மகிழ்ந்த; ததி—தயிருடன்; க்ஷீர—கூடிய பாலுடன்; க்ருத-அம்புபி:—நீர் கலந்த வெண்ணெயுடன்; ஆஸிஞ்சந்த:—தெளித்து; விலிம்பந்த:—தடவி; நவநீதை: ச—மற்றும் வெண்ணெயுடன்; சிக்ஷிபு:—அவர்கள் ஒருவர் மீதொருவர் விசினர்.
இடையர்கள் சந்தோஷத்துடன் தயிர், கட்டிப்பால், வெண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கொண்ட கலவையை ஒருவர் மீதொருவர் தெளித்தும், வெண்ணெயை ஒருவர் மீதொருவர் வீசியும், தடவியும் மகிழ்ந்தனர்.
பதங்கள் 10.5.15 — 10.5.16
நந்தோ மஹா-மனாஸ் தேப்யோ வாஸோ ‘லங்கார-கோ-தனம்
ஸூத-மாகத-வந்திப்யோ யே ‘ன்யே வித்யோபஜீவின:
தைஸ் தை: காமைர் அதீனாத்மா யதோசிதம் அபூஜயத்
விஷ்ணோர் ஆராதனார்தாய ஸ்வ-புத்ரஸ்யோதயாய ச
நந்த:—நந்த மகாராஜன்; மஹா-மனா:—இடையர்களுக்கிடையிலான நீதிமான்களிலேயே மிகச் சிறந்தவர்; தேப்ய:—இடையர்களுக்கு; வாஸ:—ஆடை; அலங்கார—அணிகலன்கள்; கோ-தனம்—மற்றும் பசுக்கள்; ஸூத-மாகத-வந்திப்ய:—(பழைய சரித்திரங்களைப் பாடிப் பிழைக்கும்) ஸூதர்களுக்கு, (அரச குடும்பங்களின் சரித்திரங்களைப் பாடிப் பிழைக்கும்) மாகதர்களுக்கு, மற்றும் (பொதுவான பிரார்த்தனைப் பாடகர்களான) வந்திகளுக்கு; யே-அன்யே—மற்றவர்களுக்கும்; வித்யா-உபஜீவின:—தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் ஜீவனத்தைத் தொடர்பவர்கள்; தை: தை:—எதைக் கொண்டும்; காமை:—ஆசையின் முன்னேற்றங்கள்; அதீன-ஆத்மா—மிகவும் தாராள மனதுடைய நந்த மகாராஜன்; யதா-உசிதம்—பொருந்துவதற்கேற்ப; அபூஜயத்—அவர்களைப் பூஜித்தார் அல்லது திருப்திப்படுத்தினார்; விஷ்ணோ: ஆராதன-அர்தாய—பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக; ஸ்வ-புத்ரஸ்ய—அவரது சொந்த குழந்தையின்; உதயாய—எல்லா வகையான முன்னேற்றத்திற்காக; ச—மேலும்.
பரந்த மனப்பான்மையுள்ள நந்த மகாராஜன். பகவான் விஷ்ணுவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், இடையர்களுக்கு ஆடை ஆபரணங்களையும், பசுக்களையும் தானம் செய்தார். இவ்வாறாக தம் சொந்த மகனின் நிலையை அவர் எல்லா விஷயங்களிலும் முன்னேறச் செய்தார். ஸூதர்கள், மாகதர்கள், வந்திகள் முதலான எல்லா தொழிற் பிரிவினர்களுக்கு அவரவர் தகுதிமுறைகளுக்கேற்ப தான தருமங்களைச் செய்து, ஒவ்வொருவரது விருப்பங்களையும் அவர் திருப்திப்படுத்தினார்.
பதம் 10.5.17
ரோஹிணீ ச மஹா-பாகா தந்த-கோபாபினந்திதா
வ்யசரத் திவ்ய-வாஸ-ஸ்ரக்-கண்டாபரண-பூஷிதா
ரோஹிணி—பலதேவரின் தாய் ரோகிணி; ச—கூட; மஹ-பாகா—(கிருஷ்ணரையும், பலராமரையும் சேர்ந்தாற்போல் வளர்க்கும் வாய்ப்பைப் பெற்றதால்) பெரும் பாக்கியசாலியான பலதேவரின் தாய்; நந்த-கோபா-அபினந்திதா—நந்த மகாராஜனாலும், தாய் யசோதையாலும் கௌரவிக்கப்பட்டு; வ்யசரத்—சுறுசுறுப்பாக இங்குமங்கும் நடமாடினாள்; திவ்ய—அழகிய; வாஸ—ஆடையுடனும்; ஸ்ரக்—மாலையுடனும்; கண்ட-ஆபரண—மற்றும் கழுத்தை மறைக்கும் ஓர் ஆபரணத்துடனும்; பூஷிதா—அலங்கரிக்கப்பட்டு இருந்தாள்.
பெரும் பாக்கியசாலியும், பலதேவரின் தாயுமான ரோகிணி, நந்த மகாராஜனாலும், யசோதையாலும் கௌரவிக்கப்பட்டாள், இவ்வாறாக அவளும் தன்னை அட்டிகை, மாலை மற்றும் பிற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். விழாவில் விருந்தினர்களாக வந்திருந்த பெண்களை வரவேற்பதற்காக அவள் சுறுசுறுப்பாக இங்குமங்கும் நடமாடினாள்.
பதம் 10.5.18
தத ஆரப்ய நந்தஸ்ய வ்ரஜ: ஸர்வ-ஸம்ருத்திமான்
ஹரேர் நிவாஸாத்ம-குணை ரமாக்ரீடம் அபூல் ந்ருப
தத: ஆரப்ய—அந்த நேரத்திலிருந்தே; நந்தஸ்ய—நந்த மகாராஜனின்; வ்ரஜ:—ஆயர்பாடி (பசு பராமரிப்புக்கும், உற்பத்திக்கும் உரிய இடம்); ஸர்வ-ஸம்ருத்திமான்—எல்லா வகையான செல்வம் கொழிக்கும் ஆஸ்திகளை உடைய செல்வந்தரானார்; ஹரே: நிவாஸ—பரமபுருஷரது வசிப்பிடத்தின்; ஆத்ம-குணை:—உன்னத குணங்களால்; ரமா-ஆக்ரீடம்—அதிர்ஷ்ட தேவதையான லக்ஷ்மியின் லீலைகளுக்குரிய இடம்; அபூத்—ஆயிற்று; ந்ருப—அரசே (பரீட்சித்து மகாராஜனே).
பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜனின் வீடு, பரமபுருஷருக்கும் அவரது உன்னத குணங்களுக்கும் நித்திய வசிப்பிடமாகும். எனவே இயல்பாகவே அது எல்லா செல்வச் சிறப்புகளையும் கொண்டிருந்தது, மேலும் அங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றிய நாளிலிருந்து, அது அதிர்ஷ்ட தேவதையின் லீலைகளுக்குரிய இடமாயிற்று.
பதம் 10.5.19
கோபான் கோகுல-ரக்ஷாயாம் நிரூப்ய மதுராம் கத:
நந்த: கம்ஸஸ்ய வார்ஷிக்யம் கரம் தா தும் குரூத்வஹ
கோபான்—இடையர்களை; கோகுல-ரக்ஷாயாம்—கோகுலத்தைப் பாதுகாப்பதில்; நிரூப்ய—நியமித்தபின்; மதுராம்—மதுராவிற்கு; கத:—சென்றார்; நந்த:—நந்த மகாராஜன்; கம்ஸஸ்ய—கம்சனின்; வார்ஷிக்யம்—வருடாந்தர வரியை; கரம்—இலாபத்தின் பங்கை; தாதும்—செலுத்துவதற்காக; குரு-உத்வஹ—குரு வம்சத்தின் சிறந்த காவலரான பரீட்சித்து மகாராஜனே.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். அதன்பிறகு குரு வம்சத்தின் சிறந்த காவலரான பரீட்சித்து மகாராஜனே! கோகுலத்தைப் பாதுகாக்கும் பணிக்கு உள்ளூர் இடையர்களை நியமித்த நந்த மகாராஜன், கம்ச மன்னனுக்கு வருடாந்தர வரியைச் செலுத்துவதற்காக மதுராபுரிக்குச் சென்றார்.
பதம் 10.5.20
வஸுதேவ உபஸ்ருத்ய ப்ராதரம் நந்தம் ஆகதம்
ஞாத்வா தத்த-கரம் ராஜ்ஞே யயௌ தத்-அவமோசனம்
வஸுதேவ:—வசுதேவர்; உபஸ்ருத்ய—அவர் கேள்விப்பட்டதும்; ப்ராதரம்—அவரது அன்புச் சகோதரரும், நண்பருமான; நந்தம்—நந்த மகாராஜன்; ஆகதம்—மதுராவிற்கு வந்துள்ளார்; ஞாத்வா—என்பதை அறிந்த அவர்; தத்த-கரம்—வரியைச் செலுத்திவிட்டு; ராஜ்ஞே—அரசனுக்கு; யயௌ—அவர் சென்றார்; தத்-அவமோசனம்—நந்த மகாராஜனின் வசிப்பிடத்திற்கு.
தமது அன்புச் சகோதரரும், நண்பருமான நந்த மகாராஜன் மதுராவிற்கு வந்திருப்பதையும். வரிகளைக் கட்டி முடிந்தது என்பதையும் கேள்விப்பட்ட வசுதேவர், நந்த மகாராஜனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.
பதம் 10.5.21
தம் த்ருஷ்டவா ஸஹஸோத்தாய தேஹ: ப்ராணம் இவாகதம்
ப்ரீத: ப்ரயதமம் தோர்ப்யாம் ஸஸ்வஜே ப்ரேம-விஹ்வல:
தம்——அவரை (வகதேவரை): திருஷ்ட்வா—கண்டு; ஸஹஸா—திடீரென்று; உத்தாய—எழுந்து; தேஹ:—அதே உடல்; பிராணம்—உயிர்; இவ—போல்; ஆகதம்—திரும்பியது; ப்ரீத:—மிகவும் மகிழ்ந்தார்; ப்ரிய-தமம்—அவரது அன்பு சகோதரரும், நண்பருமான; தோர்ப்யாம்—தம் இரு கரங்களால்; ஸஸ்வ்ஜே—தழுவிக்கொண்டார்; ப்ரேம-விஹ்வல:—அன்பும், பாசமும் மேலிட.
வசுதேவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட நந்த மகாராஜன், அன்பும், பாசமும் மேலிட்டவராய், தம் உயிரே திரும்பி வந்ததுபோல் மகிழ்த்தார். திடீரென்று வசுதேவர் அங்கு நிற்பதைக் கண்ட அவர் எழுந்து, இரு கரங்களாலும் அவரைத் தழுவிக் கொண்டார்.
பதம் 10.5.22
பூஜித: ஸுகம் ஆஸீன: ப்ருஷ்டவானாமயம் ஆத்ருத:
ப்ரஸக்த-தீ: ஸ்வரத்மஜயோர் இதம் ஆஹ விசாம்பதே
பூஜித:—வசுதேவர் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்டு; ஸுகம்-ஆஸீன:—வசதியாக அமர இடம் அளிக்கப்பட்டதும்; ப்ருஷ்ட்வா—விசாரித்து; அனாமயம்—சர்வ மங்களகரமான விசாரணைகளை; ஆத்ருத:—கௌரவித்து, மரியாதையுடன் வரவேற்கப்பட்ட; ப்ரஸ்க்த-தீ:—அவர் மிகவும் பற்றுக் கொண்டிருந்த காரணத்தால்; ஸ்வ-ஆத்மஜயோ:—அவரது சொந்த மகன்களான கிருஷ்ணரிடமும், பலராமரிடமும்; இதம்—பின்வரும்; ஆஹ—வினவினார்; விசாம்பதே—பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே! நந்த மகாராஜனால் இவ்வாறு கௌரவித்து, வரவேற்கப்பட்ட வசுதேவர், அமைதியாக அமர்ந்து, தமது இரு மகன்களிடம் கொண்ட தீவிர அன்பின் காரணத்தால், அவர்களைப் பற்றி விசாரித்தார்.
பதம் 10.5.23
திஷ்ட்யா ப்ராத: ப்ரவயஸ இதானீம் அப்ரஜஸ்ய தே
ப்ரஜாசாயா நிவ்ருத்தஸ்ய ப்ரஜா யத் ஸமபத்யத
திஷ்ட்யா—இது பெரும் அதிர்ஷ்டத்தினால்தான்; ப்ராத:—அருமைச் சகோதரரே; ப்ரவயஸ:—இப்பொழுது வயது சிறிது அதிகமாகிவிட்ட உங்களுக்கு; இதானீம்—தற்பொழுது; அப்ரஜஸ்ய—இதற்குமுன் மகப்பேறு இல்லாதவருக்கு; தே—உங்களுக்கு; ப்ரஜா-ஆசாயா: நிவ்ருத்தஸ்ய—இந்த வயதில் மகப்பேறு உண்டாகும் வாய்ப்பே இல்லாத ஒருவருக்கு; ப்ரஜா—ஒரு மகன்; யத்—எதெல்லாம்; ஸமபத்யத—தற்செயலாக அடையப்பட்டிருப்பது.
அன்புச் சகோதரரான நந்த மகாராஜரே, வயதான பருவத்திலும் உங்களுக்கு மகப்பேறு இல்லை. இனிமேல் ஒரு மகனைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லை. எனவே. இப்பொழுது நீங்கள் ஒரு மகனைப் பெற்றிருப்பது, உங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் அதிர்ஷ்டத்தின் ஓர் அடையாளமாகும்.
பதம் 10.5.24
திஷ்ட்யா ஸம்ஸார-சக்ரே ‘ஸ்மின் வர்தமான புனர்-பவ:
உபலப்தோ பவான் அத்ய துர்லபம் ப்ரிய தர்சனம்
திஷ்ட்யா—இதற்கும் பேரதிர்ஷ்டம்தான் காரணம்; ஸம்ஸார-சக்ரே-அஸ்மின்—ஜனன, மரணமுடைய இவ்வுலகில்; வர்தமான:—நான் இருந்த போதிலும்; புன-பவ:—உங்களை நான் சந்திப்பது மற்றொரு பிறப்பைப் போன்றதாகும்; உபலப்த—என்னால் அடையப்பட்டு; பவான்—நீங்கள்; அத்ய—இன்று; துர்லபம்—இது நடக்கக்கூடியதல்ல என்று காணப்பட்ட போதிலும்; ப்ரிய-தர்சனம்—எனது மிகவும் அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமான உங்களை மீண்டும் காண்பது.
உங்களை நான் காண்பதுவும் நல்லதிர்ஷ்டத்தினால்தான். இவ்வாய்ப்பை பெற்றுள்ள நாம் மீண்டும் பிறவி எடுத்திருப்பதாக உணர்கிறேன். இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும், நெருங்கிய நண்பர்களையும், பிரியமுள்ள உறவினர்களையும் இந்த ஜட உலகில் சந்திப்பதென்பது மிகவும் கடினமாகும்.
பதம் 10.5.25
நைகத்ர ப்ரிய-ஸம்வாஸ: ஸுஹ்ருதாம் சித்ர-கர்மணாம்
ஓகேன வ்யூஹ்யமானானாம் ப்லவானாம் ஸ்ரோதஸோ யதா
ந—இல்லை; ஏகத்ர—ஒரே இடத்தில்; ப்ரிய-ஸம்வாஸ:—நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி வாழ்வது; ஸுஹ்ருதாம்—நண்பர்களின்; சித்ர-கர்மணாம்—கடந்த காலத்தில் பலவகையான வினைப் பயன்களைப் பெற்றுள்ள நம் அனைவரின்; ஒகேன—வலிமையால்; வ்யூஹ்யமானானாம்—அடித்துச் செல்லப்படுகிறோம்; ப்லவானாம்—நீரில் மிதந்துவரும் குச்சிகள் முதலான மற்ற பொருட்களின்; ஸ்ரோதஸ:—அலைகளின்; யதா—போல.
பலவித பலகைகளும், குச்சிகளும் சேர்ந்திருக்க முடியாமல், ஒரு நதியினுடைய அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்படுகின்றன. அதுபோலவே, நண்பர்களுடனும். உறவினர்களுடனும் நாம் நெருங்கிய உறவு கொண்டிருந்த போதிலும். கடந்த காலத்தில் நாம் செய்த பலவகையான செயல்களினாலும் காலத்தின் அலைகளினாலும் நம்மால் இணைந்திருக்க முடிவதில்லை.
பதம் 10.5.26
கச்சித் பசவ்யம் நிருஜம் பூரி-அம்பு-த்ருண-வீருதம்
ப்ருஹத் வனம் தத் அதுனா யத்ராஸ்ஸே த்வம் ஸுஹ்ருத்-வ்ருத:
கச்சித்—உள்ளதா; பசவ்யம்—பசுப் பராமரிப்பு; நிருஜம்—கஷ்டங்கள் அல்லது நோய் இல்லாமல்; பூரி—போதுமான; அம்பு—நீர்; த்ருண—புல்; வீருதம்—தாவரங்கள்; ப்ருஹத் வனம்—பெரிய காடு; தத்—இந்த ஏற்பாடுகளெல்லாம்; அதுனா—இப்பொழுது; யத்ர—எங்கு; ஆஸ்ஸே—வாழ்கிறீர்கள்; த்வம்—நீங்கள்; ஸுஹ்ருத்-வ்ருத:—நண்பர்களால் சூழப்பட்டு.
அன்பிற்குரிய சிநேகிதரான நந்த மகாராஜரே, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் வாழும் இடத்திலுள்ள காடு, பசுக்களுக்கு அனுகூலமாக உள்ளதா? அங்கு நோயோ, அசௌகரியமோ இருக்காது என நம்புகிறேன். அந்த இடம் நீரும், புல்லும், மற்ற தாவரங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
பதம் 10.5.27
ப்ராதர் மம ஸுத: கச்சின் மாத்ரா ஸஹ பவத்-வ்ரஜே
தாதம் பவன்தம் மன்வானோ பவத்ப்யாம் உபலாலித:
ப்ராத:—அன்புள்ள சகோதரரே; மம—எனது; ஸுத:—மகன்; (ரோகிணிக்குப் பிறந்த பலதேவன்); கச்சித்—இருக்கிறானா; மாத்ராஸஹ—அவனது தாய் ரோகிணியுடன்; பவத்-வ்ரஜே—உங்களுடைய வீட்டில்; தாதம்—தந்தையாக; பவன்தம்—உங்களை; மன்வான:—எண்ணி; பவத்ப்யாம்—உங்களாலும், உங்கள் மனைவி யசோதையாலும்; உபலாலித:—நன்கு பராமரிக்கப்படுகிறான்.
உங்களாலும், உங்கள் மனைவி யசோதையாலும் பராமரிக்கப்படும் என் மகன் பலதேவன் உங்களிருவரையும் அவனது தாய், தந்தையராகக் கருதுகிறான். அவன் தன் உண்மையான தாயான ரோகிணியுடன் உங்கள் வீட்டில் மிகவும் அமைதியாக வாழ்கிறானா?
பதம் 10.5.28
பும்ஸஸ் த்ரி-வர்கோ விஹித: ஸுஹ்ருதோ ஹி அனுபாவித:
ந தேஷு க்லிஸ்யமானேஷு த்ரி-வர்கோ ‘ர்தாய கல்பதே
பும்ஸ:—ஒருவனின்; த்ரி-வர்க:—வாழ்வின் மூன்று நோக்கங்கள் (இறையுணர்வு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் நுகர்வு); விஹித:—வேதச் சடங்கு முறைகளுக்கேற்ப உத்தரவிடப்பட்டுள்ள; ஸுஹ்ருத:—உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம்; ஹி—உண்மையில்; அனுபாவித:—அவை சரியானவையாக இருக்கும்பொழுது; ந—இல்லை; தேஷு—அவற்றில்; க்லிஸ்யமானேஷு—அவர்கள் உண்மையாகவே ஏதேனும் கஷ்டத்தில் இருப்பார்களானால்; த்ரி-வாக்:—வாழ்வின் இம்மூன்று குறிக்கோள்களும்; அர்தாய—எந்த நோக்கத்திற்காகவும்; கல்பதே—அப்படி ஆகின்றது.
ஒருவரது நண்பர்களும், உறவினர்களும் நல்ல நிலையில் இருக்கும் பொழுது, அவரது இறையுணர்வு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன்நுகர்வு ஆகியவை, வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டு உள்ளதுபோல், நன்மை பயக்கக்கூடியவை ஆகின்றன. அப்படியல்லாமல், ஒருவரது நண்பர்களும் உறவினர்களும் துன்பத்தில் இருப்பார்களானால், இம்மூன்றும் எந்த மகிழ்ச்சியையும் அளிக்காது.
பதம் 10.5.29
ஸ்ரீ-நந்த உவாச
அஹோ தே தேவகீ-புத்ரா: கம்ஸேன பஹவோ ஹதா:
ஏகாவசிஷ்டாவரஜா கன்யா ஸாபி திவம் கதா
ஸ்ரீ-நந்த: உவாச—நந்த மகாராஜன் கூறினார்; அஹோ—அந்தோ; தே—உமது; தேவகீ-புத்ரா:—உமது மனைவியான தேவகியின் எல்லா மகன்களும்; கம்ஸேன—கம்ச மன்னனால்; பஹவ:—பல; ஹதா:—கொல்லப்பட்டனர்; ஏகா—ஒரு; அவசிஷ்டா—எஞ்சிய குழந்தை; அவரஜா—அனைவருக்கும் இளையவளான; கன்யா—ஒரு மகளும், ஸாஅபி—அவளும் கூட; திவம் கதா—சுவர்க்க லோகங்களுக்குச் சென்று விட்டாள்.
நந்த மகாராஜன் கூறினார்: அந்தோ, தேவிக்குப் பிறந்த உம்முடைய பல குழந்தைகளை கம்ச மன்னன் கொன்றுவிட்டான். மேலும் அனைவருக்கும் இளையவளான உமது ஒரே மகளும் சுவர்க்க லோகங்களுக்கும் சென்று விட்டாள்.
பதம் 10.5.30
நூனம் ஹி அத்ருஷ்ட-நிஷ்டோ ‘யம் அத்ருஷ்ட-பரமோ ஜன:
அத்ருஷ்டம் ஆத்மனஸ் தத்வம் யோ வேத ந ஸ முஹ்யதி
நூனம்—நிச்சயமாக; ஹி—உண்மையில்; அத்ருஷ்ட—கண்ணுக்குத் தெரியாத; நிஷ்ட: அயம்—ஏதோ ஒன்று அங்கு முடிவடைகின்றது; அதிருஷ்ட—கண்ணுக்குப் புலப்படாத விதி; பரம:—முடிவான; ஜன:—இந்த ஐட உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும்; அத்ருஷ்டம்—அந்த விதி; ஆத்மன:—ஒருவரின்; தத்வம்—முடிவான உண்மை; ய:—யாரொருவன்; வேத—அறிகிறான்; ந—இல்லையோ; ஸ:—அவன்; முஹ்யந்தி—குழப்பமடைகிறான்.
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக விதியால் ஆளப்படுகிறான். அந்த விதிதான் ஒருவனது கர்ம பலன்களை நிர்ணயிக்கிறது. அதாவது, கண்ணுக்கு தெரியாத விதியின் காரணத்தால்தான் ஒருவனுக்கு ஒரு மகன் அல்லது மகள் இருக்கின்றாள், மேலும் மகன் அல்லது மகன் இல்லையென்றால், அதற்கும் கண்ணுக்குப் புலப்படாத விதியே காரணம், விதிதான் அனைவரையும் ஆளும் முடிவான சக்தியாகும். இதையறிந்தவன் ஒருபோதும் குழப்பமடைவதில்ல.
பதம் 10.5.31
ஸ்ரீ-வஸுதேவ உவாச
கரோ வை வார்ஷிகோ தத்தோ ராஜ்ஞே த்ருஷ்டா வயம் ச வ:
நேஹ ஸ்தேயம் பஹு-திதம் ஸந்தி உத்பாதாஸ் ச கோகுலே
ஸ்ரீ வஸுதேவ உவாச:—ஸ்ரீ வசுதேவர் பதிலளித்தார்; கர:—வரிகள்; வை—உண்மையில்: வார்ஷிக:—வருடாந்தர; தத்த:—உங்களால் செலுத்தப்பட்டுவிட்டன; ராஜ்ஞே—மன்னனுக்கு; த்ருஷ்டா:—காணப்பட்டுவிட்டேன்; வயம் ச—நாமிருவரும்; வ:—உங்களின்; ந—இல்லை; இஹ—இந்த இடத்தில்; ஸ்தேயம்—இருக்க வேண்டும்; பஹு—திதம்—பல நாட்களுக்கு; ஸந்தி—இருக்கக்கூடும்; உத்பாதா: ச—பல தொல்லைகள்; கோகுலே—கோகுலத்தில், உங்கள் வீட்டில்.
வசுதேவர் நந்த மகாராஜனிடம் கூறினார்: இப்பொழுது, அன்புச் சகோதரரே, கம்சனுக்கு வருடாந்தர வரிகளைச் செலுத்திவிட்டீர்கள், என்னையும் பார்த்துவிட்டீர்கள் என்பதால், இனிமேலும் பல நாட்களுக்கு இந்த இடத்தில் இருக்க வேண்டாம். கோகுலத்தில் ஏதேனும் தொல்லைகள் விளையக்கூடும் என்பதை நானறிவேன் என்பதால், உடனே திரும்பிச் செல்வது நல்லது.
பதம் 10.5.32
ஸ்ரீ-சுக உவாச
இதி நந்தாதயோ கோபா: ப்ரோக்தாஸ் தே சௌரிணா யயு:
அனோபிர் அனடுத்-யுக்தைஸ் தம் அனுக்ஞாப்ய கோகுலம்
ஸ்ரீசுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; நந்த-ஆதய:—நந்த மகாராஜனும் அவரது சகாக்களான; கோபா:—இடையர்களும்; ப்ரோக்தா:—அறிவுரை கூறப்பட்டு; தே—அவர்கள்; சௌரினா—வசுதேவரால்; யயு:—அந்த இடத்திலிருந்து புறப்பட்டனர்; அனோபி:—மாட்டு வண்டிகளை; அனடுத்-யுக்தை:—எருதுகளுடன் பிணைத்தனர்; தம் அனுக்ஞாப்ய—வசுதேவரிடம் அனுமதி பெற்று; கோகுலம்—கோகுலத்திற்கு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: வசுதேவர் நந்த மகாராஜனுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதும். நந்த மகாராஜனும், அவரது சகாக்களான இடையர்களும் வசுதேவரிடம் அனுமதி பெற்றபின், தங்கள் எருதுகளை மாட்டு வண்டிகளுடன் பிணைத்து, கோகுலத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “நந்த மகாராஜனும் வசுதேவரும் சந்தித்தல்” எனும் தலைப்பை கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.