அத்தியாயம் – 1
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்:
அறிமுகம்
பதம் 10.1.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ‘பிரபுவே, சந்திர, சூரிய வம்சங்களைப் பற்றியும், அற்புதமான உயர்ந்த நல்லொழுக்கமுடைய அவற்றின் அரசர்களைப் பற்றியும் முன்பே தாங்கள் விவரமாக விளக்கினீர்கள்.’
பதம் 10.1.2 : முனிசிரேஷ்டரே, சிறந்த புண்ணியவான்களும், தர்ம சீலர்களுமான யது-வம்சத்தினரைப் பற்றியும் தாங்கள் விவரித்தீர்கள். இப்பொழுது தாங்கள் விரும்பினால், அந்த யது-வம்சத்தில், தமது அம்சமான பல தேவருடன் தோன்றிய பகவான் விஷ்ணுவின் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைவாய்ந்த செயல்களை அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 10.1.3 : பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமான பரமாத்மாவும், பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணர், யது—வம்சத்தில் தோன்றினார். அவரது வாழ்வின் துவக்கத்திலிருந்து முடிவுரையுள்ள அவருடைய பெருமைக்குரிய செயல்களைப் பற்றியும், குணத்தைப் பற்றியும் தயவுகூர்ந்து விவரமாக எனக்குக் கூறியருளுங்கள்.
பதம் 10.1.4 : பரமபுருஷரைத் துதிப்பதானது பரம்பரை முறையில் செய்யப்படுகிறது. அதாவது அது ஆன்மீக குருவால் சீடனுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இவ்வாறு துதித்துப் போற்றும் முறையானது, ஜடப் பிரபஞ்சத்தில் பொய்யான, நிலையற்ற புகழ்ச்சி முறையைக் கைவிட்டவர்களால் சுவைத்து அனுபவிக்கப்படுகிறது. பிறவிச் சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கும் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு, பகவானைப் பற்றிய வர்ணணைதான் சரியான மருந்தாகும். எனவே, கசாப்புக்காரனைத் தவிர, அதாவது தன் ஆத்மாவையே கொல்பவனைத் தவிர வேறு யார், பகவானின் மேன்மைகளைக் கேட்பதை நிறுத்துவான்?
பதங்கள் 10.1.5 — 10.1.7 :ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களெனும் படகை ஏற்றதால், என் பாட்டனாரான அர்ஜுனனும், மற்றவர்களும் தங்களை மிகவும் சுலபமாக விழுங்கியிருக்கக்கூடிய பெரிய திமிங்கிலங்களை ஒத்த பீஷ்மதேவர் முதலான சேனாதிபதிகள் பங்கேற்ற குருசேத்திரப் போர்க்களமெனும் சமுத்திரத்தைக் கடந்தனர். பகவானின் கருணையால் கடப்பதற்கரிய இப்பெரும் சமுத்திரத்தை என் பாட்டனார்கள், ஒரு கன்றின் குளம்படியை ஒருவர் சுலபமாகத் தாண்டிவிடுவதுபோல் எளிதில் கடந்துவிட்டனர். என் தாய் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சரணடைந்ததால், சுதர்சனச் சக்கரத்தைக் கையிலேந்திய பகவான், அவளது கருப்பைக்குள் புகுந்தார். பிறகு அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிடும் நிலையிலிருந்ததும், குருக்கள் மற்றும் பாண்டவர்களுடைய வம்சத்தில் எஞ்சியிருந்த சந்ததியின் கடைசி உடலாக இருந்ததுமான என்னுடலை அவர் காப்பாற்றினார். பகவான் நித்திய காலத்தின் வடிவில், தமது சுயசக்தியின் மூலமாக, பரமமாத்வாகவும், விராட்ரூபமாகவும், பௌதிக உடல் பெற்ற எல்லா ஜீவராசிகளின் உள்ளும், புறமும் தோன்றுகிறார். அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இரக்கமற்ற மரணத்தின் வடிவில் அல்லது வாழ்வின் வடிவில் அனைவருக்கும் முக்தியளித்தார். தயவுகூர்ந்து அவரது உன்னத இயல்புகளை எடுத்துக்கூறி அன்புடன் எனக்கு ஞானோபதேசம் செய்யுங்கள்.
பதம் 10.1.8 : அன்பிற்குரிய சுகதேவ கோஸ்வாமியே, இரண்டாவது சதுரங்கத்தைச் சேர்ந்த சங்கர்ஷணர், பலராமர் என்ற பெயருடன் ரோகிணியின் புதல்வராகத் தோன்றினார் என்று முன்பே நீங்கள் விளக்கினீர்கள். பலராமர் ஓருடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாற்றப்படவில்லை என்றால், முதலில் அவர் தேவகியின் கர்ப்பத்திலிருந்து, பிறகு ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டது எப்படி சாத்தியமாயிற்று? தயவுகூர்ந்து இதை விளக்க வேண்டுகிறேன்
பதம் 10.1.9 : பரமபுருஷரான கிருஷ்ணர் ஏன் தமது தந்தையான வசுதேவரின் வீட்டிலிருந்து பிருந்தாவனத்திலுள்ள நந்த மகாராஜனின் வீட்டிற்குத் தம்மை மாற்றிக் கொண்டார்? யது வம்சத்தின் பிரபுவான பகவான் பிருந்தாவனத்தில் அவரது உறவினர்களுடன் எந்த இடத்தில் வாழ்ந்து வந்தார்?
பதம் 10.1.10 : பிருந்தாவனம் மற்றும் மதுராபுரி ஆகிய இரு இடங்களிலும் வாழ்ந்துவந்த கிருஷ்ணர், அந்த இடங்களில் என்ன செய்தார்? தம் தாயின் சகோதரரான கம்சனை அவர் ஏன் கொன்றார்? இந்தகைய கொலை சாஸ்திரங்களில் சிறிதும் அனுமதிக்கப்படவில்லையே?
பதம் 10.1.11 : பரமபுருஷரான கிருஷ்ணருக்கு பௌதிக உடல் இல்லையென்றாலும், அவர் ஒரு மனிதனைப்போல் தோன்றுகிறார். விருஷ்ணி வம்சத்தினருடன் எத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்தார்? எத்தனை மனைவிகளை அவர் மணந்தார்? எத்தனை ஆண்டுகள் அவர் துவாரகையில் வாழ்ந்தார்?
பதம் 10.1.12 : கிருஷ்ணரைப் பற்றிய அனைத்தையும் அறிந்துள்ள மாமுனிவரே, நான் கேட்ட கிருஷ்ணரின் செயல்கள் மற்றும் நான் கேட்காமல் விட்ட செயல்கள் ஆகியவற்றில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவற்றைப் பற்றிக் கேட்க நான் மிகவும் ஆவல் கொண்டவனாக இருக்கிறேன். எனவே தயவுகூர்ந்து அவற்றையெல்லாம் முழுமையாக விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 10.1.13 : எனது விரதத்தின் காரணத்தால், மரணத் தருவாயில் நீர் பருகுவதையும் நான் விட்டுவிட்டேன். எனினும் பிரபுவான தங்களுடைய தாமரைத் திருவாயிலிருந்து வெளிவரும் கிருஷ்ண-கதை எனும் அமுதத்தை நான் பருகிக் கொண்டிருப்பதால், பொறுக்க இயலாத பசியும், தாகமும்கூட எனக்கு இடைஞ்சலாக இல்லை.
பதம் 10.1.14 : சூத கோஸ்வாமி கூறினார்: பிருகு புத்திரரே (சௌகை ரிஷியே), மிகவும் மரியாதைக்குரிய பக்தரும், வியாச புத்திரருமான சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனின் புண்ணியமான கேள்விகளைக் கேட்டபின், மிகவும் மரியாதையுடன் அரசருக்கு நன்றி கூறினார். பிறகு இக்கலியுக துன்பங்களுக்கெல்லாம் பரிகாரமான கிருஷ்ண-கதையை அவர் கூறத் துவங்கினார்.
பதம் 10.1.15 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாட்சிமை தங்கிய பேரரசே, ராஜரிஷிகளில் சிறந்தவரே, வாசுதேவரைப் பற்றிய கதைகளால் நீர் மிகவும் கவரப்பட்டிருப்பதால், உமது புத்தி ஆன்மீகப் புரிந்துணர்வில் நிலைபெற்றுள்ளது. இதுவே மனித குலத்திற்குரிய ஒரே நோக்கமாகும். உம்முடைய அக்கவர்ச்சி நிறுத்தமற்றதாக இருப்பதால், அது பரிசுத்தமானது என்பதில் ஐயமில்லை.
பதம் 10.1.16 : பகவான் விஷ்ணுவின் பாதத்திலிருந்து பெருகும் கங்கை. உயர்ந்த, மத்திய மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களான மூவுலங்களையும் தூய்மைப்படுத்துகிறது. அதுபோலவே, பகவான் வாசுதேவரின் குணங்களையும், லீலைகளையும் பற்றி ஒருவர் கேள்வி கேட்கும்பொழுது, பேச்சாளர், கேள்வி கேட்பவர் மற்றும் கதை கேட்கும் பொதுமக்கள் ஆகிய இம்மூன்று வகையான மனிதர்களும் தூய்மையடைகின்றனர்.
பதம் 10.1.17 : ஒருசமயம் பூமிதேவியானவள், பெயரால் மட்டும் அரசர்களாகவும் உண்மையில் திமிர்பிடித்த அசுரக் கூட்டங்களாகவும் இருந்தவர்களின் படை பலத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிக பாரத்தால் வருந்தி பிரம்ம தேவரைச் சரணடைந்தாள்.
பதம் 10.1.18 : மிகவும் துன்பத்திற்குள்ளான பூமிதேவி ஒரு பசுவின் உருவை ஏற்று கண்களில் கண்ணீருடன் பிரம்மதேவர் முன் தோன்றி, அவரிடம் தன் துரதிர்ஷடத்தைப் பற்றிக்கூறினாள்.
பதம் 10.1.19 : அதன்பிறகு, பூமிதேவியின் துன்பதைப்பற்றிக் கேட்ட பிரம்மதேவர் அவளுடனும், சிவபெருமானுடன், மற்றெல்லாத் தேவர்களுடனும், பாற்கடலின் கரையை அணுகினர்.
பதம் 10.1.20 : பாற்கடலின் கரையை அடைந்த தேவர்கள், முழு பிரபஞ்சத்திற்கும் இறைவனும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுபவரும், எல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவரும், தேவாதி தேவரும், பரமபுருஷருமான பகவான் விஷ்ணுவை வணங்கினார். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் விஷ்ணுவை, புருஷ-சூக்தம் என்ற வேத மந்திரங்களால், மிகவும் கவனத்துடன் அவர்கள் வழிபட்டனர்.
பதம் 10.1.21 : சமாதி நிலையிலிருந்து பிரம்மதேவர் ஆகாயத்தில் ஒலித்த பகவான் விஷ்ணுவின் அசரீரியைக் கேட்டபின், தேவர்களிடம் பின்வருமாறு கூறினார்; தேவர்களே, பரமபுருஷரான க்ஷீரோதகசாயி விஷ்ணுவின் உத்தரவை என்னிடமிருந்து கேட்டு தாமதமின்றி அதை நிறைவேற்றுங்கள்.
பதம் 10.1.22 : பிரம்மதேவர் தேவர்களிடம் அறிவித்தார்: பகவானிடம் நான் விண்ணப்பம் செய்யும் முன்பே, பூமியின் துன்பத்தை அவர் அறிந்திருக்கிறார். இதன் விளைவாக பகவான் கால ரூபமான தமது சுய சக்தியின் மூலமாக பூபாரத்தைக் குறைப்பதற்கு இந்த பூமியில் சஞ்சரிக்கும்வரை, தேவர்களான நீங்கள் உங்களுடைய விரிவங்களின் மூலமாக யது குலத்தில் மகன்களாகவும், பேரன்களாகவும் தோன்ற வேண்டும்.
பதம் 10.1.23 : பூரண சக்தியுடையவரும், பரமபுருஷருமான ஸ்ரீ கிருஷ்ணர், தானே வசுதேவரின் புதல்வராக தோன்றுவார். எனவே அவரை திருப்திப்படுத்த, எல்லா தேவ பத்தினிகளும்கூட தோன்ற வேண்டும்.
பதம் 10.1.24 : கிருஷ்ணரின் முதன்மையான தோற்றம், அனந்தர் எனப்படும் சங்கர்ஷணராவார். இந்த ஜட உலகில் தோன்றும் எல்லா அவதாரங்களுக்கும் இவர்தான் மூலம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றத்திற்கு முன், அவரது உன்னத லீலைகளில் அவரை திருப்திப்படுத்துவதற்கு, இந்த மூல சங்கர்ஷணர் பலராமராகத் தோன்றுவார்.
பதம் 10.1.25 : பரமபுருஷருக்கு இணையானதான, விஷ்ணு-மாயா எனப்படும் அவரது சக்தியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தோன்றும், வெவ்வேறு நிலைகளில் செயற்படும் இச்சக்தி, ஜட மற்றும் ஆன்மீக உலகங்களை எல்லாம் வசியப்படுத்தும். இச்சக்தி, பகவானின் செயலை நிறைவேற்றும் பொருட்டு, தன் பிரபுவின் ஆணைப்படி, தனது வெவ்வேறு சக்திகளுடன் தோன்றும்.
பதம் 10.1.26 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; இவ்வாறு தேவர்களுக்கு அறிவுரை கூறி, பூமிதேவியை சமாதானப்படுத்தியபின், மிகவும் சக்திவாய்ந்தவராகவும், மற்றெல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவராகவும் இருப்பதால் ப்ரஜாபதி-பதி எனப்படுபவருமான பிரம்மதேவர், தமது சொந்த உலகமான பிரம்மலோகத்திற்கு திரும்பிச் சென்றார்.
பதம் 10.1.27 : முன்பு, யது வம்சத்தின் தலைவரான சூரஸேனர் வாழ்வதற்கு மதுராபுரிக்குச் சென்றார். அங்கு அவர் மாதுரம் மற்றும் சூரஸேனம் என்ற இடங்களை ஆண்டு அனுபவித்து வந்தார்.
பதம் 10.1.28 : அன்று முதல் மதுராபுரி, யதுகுல மன்னர்கள் அனைவருக்கும் தலைநகராக விளங்கியது. மதுராபுரியில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நித்தியவாசம் புரிவதால், மதுரா மாவட்டமும், மதுரா நகரமும் கிருஷ்ணருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.
பதம் 10.1.29 : ஒருசமயம் தேவ குடும்பத்தை (அல்லது சூர வம்சத்தை) சேர்ந்த வசுதேவர் தேவகியை மணந்தார். திருமணத்திற்குப்பின் தன் வீடு திரும்ப அவர் புதிதாக மணந்த தன் மனைவியுடன் தனது இரதத்தில் ஏறினார்.
பதம் 10.1.30 : உக்ரசேனின் மகனான கம்சன், தன் தங்கையான தேவகியின் திருமணத்தின்போது அவளை மகிழ்விப்பதற்காக, நூற்றுக்கணக்கான தங்க இரதங்களால் சூழப்பட்டிருந்த அந்த இரதத்திற்குச் சாரதியாக அதில் ஏறி, குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான்.
பதங்கள் 10.1.31 — 10.1.32 : தேவகியின் தந்தையான தேவக மகாராஜன், தன் புதல்வியிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். எனவே அவளும், அவனது கணவரும் வீடு திரும்பும்பொழுது, சீதனமாக தங்க மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்ட 400 யானைகளையும், 10,000 குதிரைகளையும், 18,000 இரதங்களையும், மற்றும் ஆபரணங்களால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்த 200 மிகவும் அழகான பணிப்பெண்களையும் அளித்தார்.
பதம் 10.1.33 : அன்பு மகனான பரீட்சித்து மகாராஜனே, மணமகனும், மணமகளும் புறப்படத் தயாராக இருந்தபொழுது, அவர்களது பயணம் மங்களகரமாக அமையும் பொருட்டு சங்குகளும், ஊது கொம்புகளும், மிருதங்கங்களும் மற்றும் பேரிகைகளும் பொருத்தமாக இசைக்கப்பட்டன.
பதம் 10.1.34 : கம்சன், குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்தபடி தேரை ஓட்டிச் சென்றபொழுது, நடுவழியில் அசரீரியொன்று அவனை நோக்கிப் பின்வருமாறு கூறிற்று: “அறிவு கெட்டவனே, நீ தேரில் ஏற்றிச் செல்லும் பெண்ணின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப்போகிறது.”
பதம் 10.1.35 : கம்சன் துஷ்டனாகவும் பாவியாகவும் இருந்ததால், அவன் போஜ வம்சத்தைக் களங்கப்படுத்துபவனாக இருந்தான். எனவே, இந்த ஆகாசவாணியைக் கேட்டதும், தன் தங்கையின் தலைமுடியை இடது கரத்தால் பற்றிக்கொண்ட அவன், வலது கரத்தால், தன் வாளை உருவி, அவளை சிரச்சேதம் செய்யத் தயாரானான்.
பதம் 10.1.36 : வெட்கமில்லாமல் தன் தங்கையைக் கொல்லவும் தயாராக இருந்த கொடூரமும் பொறாமையும் மிக்க கம்சனை சமாதானப்படுத்த விரும்பி, மகாத்மாவும், கிருஷ்ணரின் தந்தையாக இருக்கப் போகின்றவருமான வசுதேவர், அவனிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 10.1.37 : வசுதேவர் கூறினார்: எனதன்புள்ள மைத்துனரான கம்சனே, நீர் போஜ வம்சத்தின் பெருமைக்குரியவர். சிறந்த வீரர்களும் உமது குணங்களைப் போற்றுகின்றனர். இத்தகைய தகுதிகளுடைய உம்மைப் போன்ற ஒருவரால் ஒரு பெண்ணை, அதுவும் சொந்த தங்கையை குறிப்பாக அவளது திருமண ஊர்வலத்தின்போது எப்படி கொல்ல முடியும்?
பதம் 10.1.38 : சிறந்த வீரனே, மரணம் உடலுடனேயே பிறந்துள்ளது என்பதால், பிறந்தவன் மரணமடைவது நிச்சயம். ஒருவன் இன்றோ அல்லது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகோ மரணமடையக் கூடும் ஆனால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் மரணம் நிச்சயம்.
பதம் 10.1.39 : தற்போயை உடல் தூசியாக மாறி, மீண்டும் ஐந்து மூலப்பொருட்களாக. (மண், நீர். நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்) உருமாற்றம் பெறும்பொழுது, உடலின் உரிமையாளனான ஜீவராசி, தன்கர்ம வினைகளுக்கேற்ப தானாகவே பௌதிக மூலப்பொருட்களாலான மற்றொரு உடலைப் பெறுகிறான். அடுத்த உடலைப் பெறும் பொழுது, தற்போதைய உடலை அவன் கைவிடுகிறான்.
பதம் 10.1.40 : சாலையில் நடந்து செல்பவன் ஒரு பாதத்தைத் தரையில் வைத்த பிறகு மற்றொரு பாதத்தைத் தரையிலிருந்து அகற்றுவது போலவே, அல்லது ஒரு செடியிலுள்ள புழு ஓரிலைக்கு தன்னை மாற்றிக் கொண்ட பின் முந்திய இலையை விட்டுவிடுவது போலவே, பந்தப்பட்ட ஆத்மாவும் ஓருடலைத் தஞ்சமடைந்த பின், முன்பிறந்த உடலைக் கைவிடுகிறான்.
பதம் 10.1.41 : ஒன்றைக் காண்பதால் அல்லது அதைப்பற்றிக் கேட்பதால் ஒருவித சூழ்நிலையை அனுபவித்துள்ள ஒருவன், அச்சூழ்நிலையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறான் அல்லது மனக்கோட்டை கட்டுகிறான். இவ்வாறாக தனது தற்போதைய உடலை கருத்திற்கொள்ளாமல், அதனிடம் ஒருவன் சரணடைகிறான். அதுபோலவே, இரவில் ஒருவன் தன் உண்மை நிலையை மறந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறுபட்ட உடல்களில் தான் வாழ்வதாக கனவு காண்கிறான். இதே முறையில் தான் ஒருவன் தற்போதைய உடலைக் கைவிட்டு மற்றொரு உடலை ஏற்கிறான் (ததா தேஹாந்தா-ப்ராப்தி:).
பதம் 10.1.42 : பலன்நோக்குக் கருமங்களில் ஈடுபட்டுள்ள மனதின் எண்ணம் உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றிற்கேற்ப, மரணத்தின்போது ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலைப் பெறுகிறான். அதாவது, மனதின் செயல்களுக்கேற்ப உடல் விருத்தியடைகிறது. உடல் மாற்றங்கள் நிலையற்ற மனதினால் விளைகின்றன. இல்லையெனில் ஆத்மாவால் அதன் சுயமான ஆன்மீக உடலிலேயே இருக்க முடியும்.
பதம் 10.1.43 : ஆகாயத்தில் ஒளிரும் பொருட்களான சந்திரன், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள் போன்றவை, எண்ணெய் அல்லது நீர் போன்ற திரவங்களில் பிரதிபலிக்கும்பொழுது, அவை காற்றினுடைய அசைவுகளின் காரணத்தால் வெவ்வேறு வடிவங்களில்-சிலசமயம் உருண்டையாகவும், சில சமயம் நீளமாகவும் காணப்படுகின்றன. அதுபோலவே, ஜீவராசி அல்லது ஆத்மா பௌதிக சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது, அறியாமையின் காரணத்தால், பல்வேறு தோற்றங்களைத் தனது சுயரூபமாக ஏற்றுக் கொள்கிறான். அதாவது, ஜட இயற்கைக் குணங்களிலிருந்து வரும் சலனத்தின் காரணத்தால், ஒருவன் மனக்கற்பனைகளில் ஈடுபட்டுக் குழப்பமடைகிறான்.
பதம் 10.1.44 : எனவே, பொறாமை மிகுந்த பாவச் செயல்கள் அடுத்த பிறவியில் ஒருவன் உடலை வருத்துவதால், ஒருவன் ஏன் பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்? தனது நன்மையைக் கருதியாவது, யாரிடமும் ஒருவன் பொறாமை கொள்ளாமல் இருக்கவேண்டும். ஏனெனில், பொறாமையுள்ள ஒருவன் இப்பிறயிலும், அடுத்ததிலும் தன் எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே எப்பொழுதும் வாழ வேண்டியிருக்கும்.
பதம் 10.1.45 : உமது தங்கையும், குற்றமற்றவளுமான இந்த தேவகி, உமது சொந்த மகளைப் போன்றவளும், பாசத்துடன் பாதுகாக்கத் தகுந்தவளும் ஆவாள். நீர் கருணையுள்ளவர் என்பதால், இவளைக் கொன்றுவிடக்கூடாது. உண்மையில், இவள் உமது பாசத்தைப் பெறத் தகுந்தவளாவாள்.
பதம் 10.1.46 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குரு வம்சத்தில் சிறந்தவரே, மிகவும் கொடூரமான கம்சன் உண்மையில் இராட்சஸர்களைப் போன்றவனாவான். எனவே, வசுதேவரின் நல்லுபதேசங்களால் அவனைச் சாந்தப்படுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ முடியவில்லை. இப்பிறவியிலோ அல்லது அடுத்ததிலோ கிடைக்கப்போகும் பல விளைவுகளைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
பதம் 10.1.47 : கம்சன் தன் தங்கையான தேவகியைக் கொல்ல உறுதி கொண்டிருப்பதைக் கண்ட வசுதேவர், ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். வரப்போகும் மரண ஆபத்தைக் கருத்தில் கொண்ட அவர், கம்சனைத் தடுப்பதற்குரிய வேறொரு திட்டதைப் பற்றி எண்ணினார்.
பதம் 10.1.48 : புத்திசாலியொருவன் தனக்குப்புத்தியும், தேகபலமும் எஞ்சியுள்ளவரை மரணத்தைத் தடுக்க முயலவேண்டும். இது, உடல்பெற்ற ஒவ்வொரு நபருக்கும் கடமையாகும். ஆனால், மரணத்தைத் தடுக்க முயன்றும் அது இயலாவிடில், மரணத்தை எதிர்நோக்குபவன் குற்றம் செய்தவனாகான்.
பதங்கள் 10.1.49 — 10.1.50 : வசுதேவர் கருதினார்: மரண சொரூபமான கம்சனிடம் என்னுடைய மகன்களையெல்லாம் ஒப்படைப்பதாகக் கூறி தேவகியின் உயிரை நான் காப்பாற்ற வேண்டும் ஒருவேளை, என் மகன்கள் பிறப்பதற்கு முன்பே கம்சன் இறந்துவிடக்கூடும். அல்லது என் மகனின் கரங்களால் அவன் மடியவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், என் மகன்களுள் ஒருவன் அவனைக் கொன்றுவிடக் கூடும். இப்போதைக்கு என் மகன்களைக் கம்சனிடம் ஒப்படைப்பதாக நான் வாக்குறுதி செய்ய வேண்டும். இதனால் கம்சன் இந்த திடீர் ஆபத்தைக் கைவிடுவான். மேலும் தாலப்போக்கில் கம்சன் இறந்துவிடுவானாயின் நான் அஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது.
பதம் 10.1.51 : புரியாத ஒரு காரணத்தினால் ஒரு நெருப்பு ஒரு கட்டையிலிருந்து அடுத்ததற்குப் பாய்ந்து அதை தீப்பற்றிக்கொள்ளச் செய்யுமானால், அதற்கு விதிதான் காரணம் அதுபோலவே ஒரு ஜீவராசி ஒருவித உடலை ஏற்று மற்றொன்றை விட்டுவிடுவதற்கு, கண்ணுக்குப் புலப்படாத விதியைத் தவிர வேறு காரணம் இல்லை.
பதம் 10.1.52 : இவ்வாறு தமது அறிவிற்கு எட்டியவரை இவ்விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு, வசுதேவர் மிகவும் மரியாதையுடன் பாவியான கம்சனிடம் தன் திட்டத்தைக் கூறினார்.
பதம் 10.1.53 : தன் மனைவி ஆபத்தை எதிர்நோக்கி இருந்ததால், வசுதேவரின் மனதில் கவலை நிறைந்திருந்தது. ஆனால் கொடூரமானவனும், வெட்கமற்றவனும், பாவியுமான கம்சனை மகிழ்விப்பதற்காக, வசுதேவர் வெளிப்படையாகப் புன்னகை செய்து பின்வருமாறு அவனிடம் கூறினார்.
பதம் 10.1.54 : வசுதேவர் கூறினார்: நிதானமுள்ளவருள் சிறந்தவரே, அசரீரி கூறியதை நீர் கேட்ட போதிலும், உமது தங்கையான தேவகியிடம் நீர் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. அவளுடைய மகன்கள்தான் உமது மரணத்திற்குத் காரணமாக இருக்கப் போகிறார்கள். யாரிடமிருந்து உமக்கு பயம் எழுந்துள்ளதோ, அந்த மகன்களை அவள் பெற்றெடுக்கும் பொழுது, உம்மிடம் ஒப்படைப்பதாக நான் வாக்களிக்கிறேன்.
பதம் 10.1.55 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வசுதேவரின் ஞான வாதத்தை கம்சன் ஒப்புக்கொண்டான். இவ்வாறு வசுதேவரின் வார்த்தைகளில் முழு நம்பிக்கைக் கொண்ட கம்சன், தன் தங்கையைக் கொல்வதை நிறுத்திக் கொண்டான். கம்சனிடம் திருப்தியடைந்த வசுதேவர், அவனை மேலும் சமாதானப்படுத்திவிட்டு தமது சொந்த வீட்டிற்குச் சென்றார்.
பதம் 10.1.56 : அதன்பிறகு, பகவானுக்கும் எல்லாத் தேவர்களுக்கும் தாயான தேவகி, காலப்போக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். இவ்வாறாக ஒவ்வொரு குழந்தையாக எட்டு மகன்களையும். சுபத்திரை என்ற ஒரு மகளையும் அவன் பெற்றாள்.
பதம் 10.1.57 : வார்த்தை பொய்யாவதற்கு அஞ்சிய வசுதேவர் அமைதியை இழந்து மிகவும் வருத்தத்துடன் தமது முதல் குமாரனான கீர்த்திமான் என்பவனைக் கம்சனிடம் ஒப்படைத்தார்.
பதம் 10.1.58 : உண்மையில் உறுதியாகப் பின்பற்றும் சாதுக்களுக்குத் துன்பம் தருவது எது? பரமபுருஷரே சாராம்சம் என்பதை அறிந்துள்ள தூய பக்தர்களுக்கு எப்படி சுதந்திரம் இல்லாதிருக்கக்கூடும்; மிகத் தாழ்ந்த ஒழுக்கம் உடையவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள செயல்கள் என்னென்ன? மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடைந்தவர்களுக்கு கிருஷ்ணரின் பொருட்டு விட முடியாதது எது?
பதம் 10.1.59 : அன்புள்ள பரீட்சித்து மகாராஜனே, வசுதேவர் சத்தியத்தில் நிலையாக இருந்தையும், தன்னிடம் குழந்தையை ஒப்படைப்பதில் முற்றிலும் சமத்துவ நிலையில் இருந்ததையும் கண்ட கம்சன், மிகவும் மகிழ்ந்து புன்னகை பூத்த முகத்துடன் பின்வருமாறு கூறினான்.
பதம் 10.1.60 : வசுதேவரே, இக்குழந்தையை எடுத்துக்கொண்டு நீர் வீடு திரும்பலாம். உம்முடைய முதல் குழந்தையிடம் எனக்கு பயம் இல்லை. உமக்கும் தேவகிக்கும் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தைதான் என் கவலைக்குக் காரணம். ஏனெனில், அக்குழந்தையால்தான் நான் கொல்லப்படுவேன் என்று விதிக்கப்பட்டுள்ளது.
பதம் 10.1.61 : இதற்குச் சம்மதித்த வசுதேவர், குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். கம்சனுக்கு ஒழுக்கமும், புலனடக்கமும் இல்லையென்பதால் அவனுடைய வார்த்தைகளை நம்பமுடியாது என்பதை வசுதேவர் அறிந்திருந்தார்.
பதங்கள் 10.1.62 — 10.1.63 : பரதகுலத்தில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, நந்த மகாராஜன் முதலான கோபர்கள், அவர்களது மனைவிகள் ஆகிய பிருந்தாவன வாசிகளும், வசுதேவர் முதலான விருஷ்ணி குலத்தவர்களும், யது வம்சத்தைச் சேர்ந்த தேவகி முதலான பெண்களும், தேவலோக வாசிகளேயன்றி வேறில்லை. நந்த மகாராஜன் மற்றும் வசுதேவர் ஆகியோரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம்விரும்பிகள் ஆகியோரும், வெளித்தோற்றத்தில் கம்சனின் ஆட்களைப் போல் காணப்பட்டவர்களும் கூட தேவர்களேயாவர்.
பதம் 64 : ஒருசமயம் மாமுனிவரான நாரதர் கம்சனை அணுகி, பூமிக்குப் பெரும் பாரமாக உள்ள அசுரர்கள் எப்படி கொல்லப்படப் போகிறார்கள் என்பத அவனிடம் அறிவித்தார். இவ்விதமாக கம்சன் பெரும்பயத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளானான்.
பதங்கள் 10.1.65 — 10.1.66 : மாமுனிவரான நாரதர் புறப்பட்டுச் சென்றபின், யது வம்சத்தின் அங்கத்தினர் அனைவரும் தேவர்களே என்றும், தேவகியின் கர்ப்பத்தில் பிறந்த எந்தவொரு குழந்தையும் விஷ்ணுவாக இருக்கக்கூடும் என்றும் கம்சன் எண்ணினான். தன் மரணத்திற்கு அஞ்சிய கம்சன் வசுதேவரையும், தேவகியையும் கைது செய்து அவர்களை விலங்கிலிட்டான். விஷ்ணு தன்னைக் கொல்வார் என்ற அசரீரியின் வாக்குப்படி, ஒவ்வொரு குழந்தையும் விஷ்ணுவாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்து, அவர்களை ஒருவர் பின் ஒருவராக கம்சன் கொன்றான்.
பதம் 10.1.67 : இந்த பூமியில் புலன் நுகர்வில் பேராசை கொண்டுள்ள அரசர்கள், கிட்டத்தட்ட எப்பொழுதுமே தங்களுடைய எதிரிகளைக் கண்மூடித்தனமாகக் கொலை செய்கின்றனர்; தங்களுடைய திடீர் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள, சொந்த தாய் தந்தைகள், சகோதரர்கள் அல்லது நண்பர்களைக்கூட அவர்கள் கொன்றுவிடக்கூடும்.
பதம் 10.1.68 : முற்பிறவியில், காலநேமி என்ற பெரிய அசுரனாக விளங்கிய கம்சன், விஷ்ணுவால் கொல்லப்பட்டான், நாரதரிடமிருந்து இத்தகவலை அறிந்து கம்சன், யது வம்சத்துடன் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவரிடமும் பொறாமை கொண்டான்.
பதம் 10.1.69 : உக்ரசேனரின் மிகவும் சக்திவாய்ந்த மகனான கம்சன், யது, போஜ மற்றும் அந்தக வம்சங்களின் அரசராக இருந்த தன் சொந்தத் தந்தையைக்கூட சிறையிலடைத்து, சூரசேனம் என்ற நாடுகளைத் தானே ஆண்டு வந்தான்.