அத்தியாயம் – 17
புரூரவஸ் புத்திரர்களின் வம்சங்கள்
பதங்கள் 9.17.1 – 9.17.3
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ய: புரூரவஸ: புத்ர ஆயுஸ் தஸ்யாபவன் ஸுதா:
நஹுஷ: க்ஷத்ரவ்ருத்தஸ் ச ரஜீ ராபஸ் ச வீர்யவான்

அவேன இதி ராஜேந்ர ஸ்ருணு க்ஷத்ரவ்ருத்தோ ‘ன்வயம் க்ஷத்ரவ்ருத்த-ஸுதஸ்யாஸன் ஸுஹோத்ரஸ்யாத்மஜாஸ் த்ரய:

காஸ்ய குசோ க்ருத்ஸமத இதி க்ருத்ஸமதாத் அபூத் சுனக: சௌனகோ யஸ்ய பஹ்வ்ருச-ப்ரவரோ முனி:

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவகோஸ்வாமி கூறினார்; ய:—யாரொருவர்; புரூரவஸ:—புரூரவஸ்ஸின்; புத்ர:—மகன்; ஆயு:—அவரது பெயர் ஆயு; தஸ்ய—அவருக்கு; அபவன்—இருந்தனர்; ஸுதா:—மகன்கள்; நஹுஷ:—நஹுஷன்; க்ஷத்ரவ்ருத்த: ச—மற்றும் க்ஷத்ரவிருத்தன்; ரஜீ—ரஜீ; ராப:—ராபன்; ச—கூட; வீர்யவான்—மிகவும் சக்திவாய்ந்த; அனேனா:—அனேனர்; இதி—இவ்வாறாக; ராஜ-இந்ர—பரீட்சித்து மகாராஜனே; ஸ்ருணு—என்னிடமிருந்து கேளும்; க்ஷத்ரவ்ருத:—க்ஷத்ரவிருத்தரின்; அன்வயம்—வம்சம்; க்ஷத்ரவ்ருத்த—க்ஷத்ரவிருத்தனின்; ஸுதஸ்ய—மகனின்; ஆஸன்—இருந்தனர்; ஸுஹோத்ரஸ்ய—சுஹோத்ரரின்; ஆத்மஜா:—மகன்கள்; த்ரய:—மூவர்; காஸ்ய:—காஸ்யன்; குச:—குசன்; க்ருத்ஸமத:—கிருத்ஸமதன்; இதி—இவ்வாறாக; க்ருத்ஸமதாத்—கிருத்ஸமதனியிருந்து; ஆபூத்—வந்தார்; சுனக:—சுனகர்; செளனக:—சௌனகர்; யஸ்ய—எவரிலிருந்து (சுனகரிலிருந்து); பஹு-ருச-ப்ரவர:—ரிக் வேதப் புலமையுள்ளவர்களில் சிறந்தவரான; முனி:—ஒரு சிறந்த முனிவர்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: புரூரவஸ்ஸிலிருந்து ஆயு என்ற ஒரு மகன் வந்தார். அவருடைய சக்திவாய்ந்த மகன்கள்: நஹுஷன், க்ஷத்ரவிருத்தன், ரஜீ, ராபன் மற்றும் அனேனர் ஆகியோராவர். பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது க்ஷத்ரவிருத்தனின் வம்சத்தைப் பற்றிக் கேளும். க்ஷத்ரவிருத்தனின் மகன் சுஹோத்ரன். அவருக்கு காஸ்யர், குசன், கிருத்ஸமதன் என்று மூன்று மகன்கள் இருந்தனர். கிருத்ஸமதனிலிருந்து சுனகர் வந்தார். அவரிலிருந்து சௌனகர் வந்தார். இவர் மாமுனிவரும், ரிக்வேதப் புலமையுள்ளவர்களில் மிகச் சிறந்தவருமாவார்.

பதம் 9.17.4
காஸ்யஸ்ய காசிஸ் தத்-புத்ரோ ராஷ்ட்ரோ தீர்கதம:-பிதா
தன்வந்தரிர் தீர்கதமஸ ஆயுர்-வேத-ப்ரவர்தக:
யக்ஞ-புக் வாஸுதேவாம்ச: ஸ்ம்ருத-மாத்ரார்தி-நாசன:

காஸ்யஸ்ய—காஸ்யரின்; காசி:—காசி; தத்-புத்ர—அவரது மகன்; ராஷ்ட்ர:—ராஷ்டிரர்; தீர்கதம:-பிதா—அவர் தீர்கதமரின் தந்தையானார்; தன்வந்தரி:—தன்வந்தரி; தீர்கதமஸ:—தீர்கதமரிலிருந்து; ஆயு:-வேத-ப்ரவர்தக:—மருத்துவ விஞ்ஞானமான ஆயுர் வேதத்தை ஆரம்பித்து வைத்தவர்; யக்ஞ-புக்—யாகப் பலன்களை அனுபவிப்பவர்; வாஸுதேவ-அம்ச:—பகவான் வாசுதேவரின் அவதாரம்; ஸ்ம்ருத-மாத்ர—அவர் நினைவு கூறப்பட்டால்; ஆர்தி-நாசன:—உடனே எல்லா வகையான நோய்களையும் அழித்துவிடும்.

காஸ்யரின் மகன் காசி. அவரது மகன் தீர்கதமரின் தந்தையான ராஷ்டிரர் தீர்கதமருக்கு தன்வந்தரி என்ற ஒரு மகன் இருந்தார். அவர் யாகப் பலன்களை அனுபவிப்பவரான பகவான் வாசுதேரின் ஓர் அவதாரமும், மருத்துவ விஞ்ஞானத்தை ஆரம்பித்து வைத்தவருமாவார். தந்வந்தரியின் பெயரை நினைப்பவர் எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுபடுவார்.

பதம் 9.17.5
தத்-புத்ர கேதுமான் அஸ்ய ஜக்ஞே பீமரதஸ் தத:
திவோதாஸோ த்யுமாம்ஸ் தஸ்மாத் ப்ரதர்தன இதி ஸ்ம்ருத:

தத்-புத்ர:—அவரது மகன் (தன்வந்தரியின் மகன்); கேதுமான்—கேதுமான்; அஸ்ய—அவரது; ஜக்ஞே—பிறந்தார்; பீமரத:—பீமரதன் என்ற ஒரு மகன்; தத:—அவரிலிருந்து; திவோதாஸ:—திவோதாஸர் என்ற ஒரு மகன்; த்யுமான்—தியுமான்; தஸ்மாத்—அவரிலிருந்து; ப்ரதர்தன:—பிரதர்தனன்; இதி—இவ்வாறு; ஸ்ம்ருத:—அறியப்படும்.

தன்வந்தரியின் மகன் கேதுமான். அவரது மகன் பீமரதன். பீமரதனின் மகன் திவோதாஸர். மேலும் திவோதாஸரின் மகன் பிரதர்தனன் என்றும் அறியப்படும் தியுமான்.

பதம் 9.17.6
ஸ ஏவ சத்ருஜித் வத்ஸ ருதத்வஜ இதீரித:
ததா குவலயாஸ்வேதி ப்ரோக்தோ ‘லர்காதயஸ் தத:

ஸ:—அந்த தியுமான்; ஏவ—உண்மையில்; சத்ருஜித்—சத்ருஜித்; வத்ஸ:—வத்ஸன்; ருதத்வஜ:—ருதத்வஜன்; இதி—அவ்வாறு; ஈரித:—அறியப்பட்டார்; ததா—என்று கூட; குவலயாஸ்வ—குவலயாஸ்வர்; இதி—இவ்வாறு; ப்ரோக்த:—புகழ் பெற்ற; அலர்க-ஆதய:—அலர்கரும்; மற்ற மகன்களும்; தத:—அவரிலிருந்து.

தியுமான் என்பவர், சத்ருஜித், வத்ஸன், ருதத்வஜர் மற்றும் குவலயாஸ்வர் என்றும் அறியப்பட்டார். அவரிலிருந்து அலர்கனும் மற்ற மகன்களும் பிறந்தனர்.

பதம் 9.17.7
ஷஷ்டிம் வர்ஷ-ஸஹஸ்ராணி ஷஷ்டிம் வர்ஷ-சதானி ச
நாலர்காத் அபரோ ராஜன் புபுஜே மேதினீம் யுவா

ஷஷ்டிம்—அறுபது; வர்ஷ-ஸஹஸ்ராணி—இத்தகைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள்; ஷஷ்டிம்—அறுபது; வர்ஷ-சதானி—நூற்றுக்கணக்கான ஆண்டுகள்; ச—தவிரவும்; ந—இல்லை; அலர்காத்—அலர்கரைத் தவிர; அபர:—வேறெவரும்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; புபுஜே—அனுபவித்தார்; மேதினீம்—உலகை; யுவா—ஒரு வாலிபனாக.

பரீட்சித்து மகாராஜனே, தியுமானின் மகனான அலர்கன் அறுபதாயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டு வந்தார். ஒரு வாலிபனாக வேறெவரும் பூமியை இவ்வளவு நீண்ட காலம் ஆண்டதில்லை.

பதம் 9.17.8
அலர்காத் ஸந்ததிஸ் தஸ்மாத் ஸுனீதோ ‘த நிகேதன:
தர்மகேது: ஸுதஸ் தஸ்மாத் ஸத்யகேதுர் அஜாயத

அலர்காத்—அலர்கனிலிருந்து; ஸந்ததி:—சந்ததி என்ற ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து; ஸுனீத:—சுனீதர்; அத—அவரிலிருந்து; நிகேதன:—நிகேதனர் என்ற ஒரு மகன்; தர்மகேது:—தர்மகேது; ஸுத:—ஒரு மகன்; தஸ்மாத்—மேலும் தர்மகேதுவிலிருந்து; ஸத்யகேது:—சத்யகேது; அஜாயத—பிறந்தார்.

அலர்கனிலிருந்து சந்ததி என்றொரு மகன் வந்தார். அவரது மகன் சுனீதர். சுனீதரின் மகன் நிகேதனர். நிகேதனரின் மகன் தர்மகேது மேலும் தர்மகேதுவின் மகன் சத்யகேது.

பதம் 9.17.9
த்ருஷ்டகேதுஸ் ததா தஸ்மாத் ஸுகுமார: க்ஷிதீஸ்வர:
வீதிஹோத்ரோ ‘ஸ்ய பர்கோ ‘தோ பார்கபூமிர் அபூன் ந்ருப

திருஷ்டகேது:—திருஷ்டகேது; தத:—அதன்பிறகு; தஸ்மாத்—திருஷ்டகேதுவிலிருந்து; ஸுகுமார:—சுகுமாரர் என்றொரு மகன்; க்ஷிதி-ஈஸ்வர:—முழு உலகிற்கும் சக்கரவர்த்தி; வீதிஹோத்ர—வீதிஹோத்ரர் என்ற ஒரு மகன்; அஸ்ய—அவரது மகன்; பர்க:—பர்கர்; அத:—அவரிலிருந்து; பார்கபூமி:—பார்கபூமி என்ற ஒரு மகன்; அபூத்—உற்பத்தியானார்; ந்ரூப—அரசே.

பரீட்சித்து மகாராஜனே, சத்யகேதுவிலிருந்து திருஷ்டகேது என்ற ஒரு மகன் வந்தார். மேலும் திருஷ்டகேதுவிலிருந்து உலகச் சக்கரவர்த்தியான சுகுமாரர் வந்தார். சுகுமாரரிலிருந்து வீதிஹோத்ரர் என்ற ஒரு மகன் வந்தார்; வீதிஹோத்ரரிலிருந்து பர்கரும்; மற்றும் பர்கரிலிருந்து பார்கபூமியும் வந்தனர்.

பதம் 9.17.10
இதீமே காசயோ பூபா: க்ஷத்ரவ்ருத்தான்வயாயின:
ராபஸ்ய ரபஸ: புத்ரோ கம்பீரஸ் சாக்ரியஸ் தத:

இதி—இவ்வாறு; இமே—இவர்களனைவரும்; காசய—காசி வம்சத்தில் பிறந்த; பூபா:—அரசர்கள்; க்ஷத்ரவ்ருத்த-அன்வய-ஆயின—க்ஷத்ரவிருத்தரின் வம்சத்திலும்; ராபஸ்ய—ராபஸ்ஸிலிருந்து: ரபஸ:—ரபஸர்; புத்ர:—ஒரு மகன்; கம்பீர:—கம்பீரர்; ச—தவிரவும்: அக்ரிய:—அக்ரியர்; தத:—அவரிலிருந்து.

பரீட்சித்து மகாராஜனே, இந்த அரசர்கள் அனைவரும் காசி வம்சத்தவர்களாவர். இவர்களை க்ஷத்ரவிருத்தரின் வம்சத்தவர்கள் என்றும் அழைக்கலாம். ராபரின் மகன் ரபஸர். ரபஸரிலிருந்து கம்பீரர் வந்தார் மற்றும் கம்பீரரிலிருந்து அக்ரியர் என்ற ஒரு மகன் வந்தார்.

பதம் 9.17.11
தத்-கோத்ரம் ப்ரஹ்மவிஜ் ஜக்ஞே ஸ்ருணு வம்சம் அனேனஸ:
சுத்தஸ் தத: சுசிஸ் தஸ்மாச் சித்ரக்ருத் தர்மஸாரதி:

தத்-கோத்ரம்—அக்ரியரின் வம்சத்தவர்; ப்ரஹ்மவித்—பிரம்மவித்; ஜக்ஞே—பிறந்தார்; ஸ்ருணு—சற்று கேளும்; வம்சம்—வம்சத்தினர்; அனேனஸ:—அனேனரின்; சுத்த:—சுத்தர் என்ற ஒரு மகன்; தத:—அவரிலிருந்து; சுசி:—சுசி; தஸ்மாத்—அவரிலிருந்து; சித்ரக்ருத்—சித்ரக்ருத்; தர்மஸாரதி:—தர்மசாரதி.

அரசே, அக்ரியரின் மகன் பிரம்மவித் எனப்பட்டார். இப்பொழுது அனேனரின் வம்சத்தினரைப் பற்றி கேளும். அனேனரிலிருந்து சுத்தன் என்ற ஒரு மகன் வந்தார். அவரது மகன் சுசி. சுசியின் மகன் சித்ரக்ருத் என்றும் அழைக்கப்படும் தர்மசாரதி.

பதம் 9.17.12
தத: சாந்தரஜோ ஜஜ்ஞே க்ருத-க்ருத்ய: ஸ ஆத்மவான்
ரஜே: பஞ்ச-சதானி ஆஸன் புத்ராணாம் அமிதெளஜஸாம்

தத:—சித்ரகிருத்திலிருந்து; சாந்தரஜ:—சாந்தரஜன் என்ற ஒரு மகன்; ஜஜ்ஞே—பிறந்தார்; க்ருத-க்ருத்ய:—எல்லா வகையான கிரியைகளையும் செய்தார்; ஸ:—அவர்; ஆத்மவான்—தன்னுணர்வு பெற்ற ஆத்மா ஆவார்; ரஜே:—ரஜீயின்; பஞ்ச-சதானி—ஐநூறு; ஆஸன்—இருந்தனர்; புத்ராணாம்—மகன்கள்; அமித-ஒஜஸாம்—மிக, மிக சக்திவாய்ந்த.

சித்ரகிருத்திலிருந்து சாந்தரஜர் என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னுணர்வு பெற்ற ஓராத்மாவான இவர், எல்லா வகையான வேதக் கிரியைகளையும் நிறைவேற்றினார். எனவே இவருக்குச் சந்ததி இல்லை. ரஜீயின் மகன்கள் ஐநூறு பேர்கள். இவர்களனைவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாவர்.

பதம் 9.17.13
தேவைர் அப்யர்திதோ தைத்யான் ஹத்வேந்ராயாததாத் திவம்
இந்தரஸ் தஸ்மை புனர் தத்வா க்ருஹீத்வா சரனௌ ரஜே:
ஆத்மானம் அர்பயாம் ஆஸ ப்ரஹ்ராதாதி-அரி-சங்கித:

தேவை:—தேவர்களால்; அபயர்தித:—வேண்டிக் கொள்ளப்பட்டு; தைத்யான்—அசுரர்களை; ஹத்வா—கொன்று; இந்ராய—சுவர்க்க ராஜனான இந்திரனிடம்; அததாத்—கொடுத்தார்; திவம்—சுவர்க்க இராஜ்யத்தை; இந்ர:—சுவர்க்க ராஜன்; தஸ்மை—அவரிடம், ரஜீயிடம்; புன:—மீண்டும்: தத்வா—திருப்பிக் கொடுத்து; க்ருஹீத்வா—கைப்பற்றி; சரணௌ—பாதங்களை; ரஜே:—ரஜீயின்; ஆத்மானம்—தன்னை; அர்பயாம் ஆஸ—அர்ப்பணித்துக் கொண்டார்; ப்ரஹ்ராத-ஆதி—பிரகலாதரையும், மற்றவர்களையும்; அரி-சங்கித:—போன்ற இத்தகைய எதிரிகளிடம் அச்சம் கொண்டு.

தேவர்களுடைய வேண்டுகோளின்படி, ரஜீ அசுரர்களைக் கொன்று சுவர்க்க இராஜ்யத்தை தேவேந்திரனிடம் திருப்பித் தந்தார். ஆனால் பிரகலாதரைப் போன்ற அசுரர்களுக்கஞ்சிய இந்திரன், சுவர்க்கலோக இராஜ்யத்தை ரஜீயிடமே திருப்பிக் கொடுத்து, ரஜீயின் தாமரைப் பாதங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பதம் 9.17.14
பிதரி உபரதே புத்ரா யாசமானாய நோ தது:
த்ரிவிஷ்டபம் மஹேந்ராய யஜ்ஞ-பாகான் ஸமாதது:

பிதரி—அவர்களுடைய தந்தை; உபரதே—இறந்ததும்; புத்ரா:—மகன்கள்; யாசமானாய—அவர்களிடம் வேண்டிக்கொண்ட போதிலும்; ந—இல்லை; தது:—திருப்பிக் கொடுத்தனர்; த்ரிவிஷ்டபம்—சுவர்க்க லோக இராஜ்யத்தை; மஹேந்ராய—மகேந்திரனிடம்; யக்ஞ-பாகான்—யாகப் பங்குகளை; ஸமாதது:—கொடுத்தனர்.

ரஜீயின் மரணத்திற்குப்பின், சுவர்க்க லோகத்தைத் திருப்பித்தரும்படி இந்திரன் ரஜீயின் மகன்களிடம் யாசித்தார். ஆனால் யக்ஞங்களின் போது இந்திரனின் பாகத்தைக் கொடுக்க அவர்கள் சம்மதித்திருந்த போதிலும் அதை அவர்கள் கொடுக்கவில்லை.

பதம் 9.17.15
குருணா ஹூயமானே ‘க்னௌ பலபித் தனயான் ரஜே:
அவதீத் ப்ரம்சிதான் மார்கான் ந கஸ்சித் அவசேஷித:

குருணா—ஆன்மீக குருவினால் (பிருஹஸ்பதி); ஹூயமானே அக்னௌ—யாகத் தீயில் நிவேதனம் செய்யும் பொழுது; பலபித்—இந்திரன்; தனயான்—மகன்களை; ரஜே:—ரஜீயின்; அவதீத்—கொன்றார்; ப்ரம்சிதான்—விழுந்த; மார்காத்—அறநெறிகளிலிருந்து; ந—இல்லை; கஸ்சித்—எவரும்; அவசேஷித:—உயிருடன் இருந்தவர்.

அதன்பிறகு, தேவர்களின் குருவான பிருஹஸ்பதி, ரஜீயின் புத்திரர்கள் அறநெறியிலிருந்து வழுவ வேண்டும் என்பதற்காக அக்னியில் நிவேதம் செய்தார். இவ்வாறு அவர்கள் இழிவடைந்த காரணத்தால், தேவேந்திரன் அவர்களை சுலபமாகக் கொன்று விட்டார். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

பதம் 9.17.16
குசாத் ப்ரதி: க்ஷாத்ரவ்ருத்தாத் ஸஞ்ஜயஸ் தத்-ஸுதோ ஜய:
தத: க்ருத: க்ருதஸ்யாபி ஜக்ஞே ஹர்யபலோ ந்ருப:

குசாத்—குசனிலிருந்து; ப்ரதி:—பிரதி என்ற ஒரு மகன்; க்ஷாத்ரவ்ருத்தாத்—க்ஷத்ரவிருத்தரின் பேரன்; ஸஞ்ஜய:—சஞ்சயன் என்ற ஒரு மகன்; தத்-ஸுத:—அவரது மகன்; ஜய:—ஜயன்; தத:—அவரிலிருந்து; க்ருத:—கிருதன்; க்ருதஸ்ய—கிருதரிலிருந்து; அபி—மேலும்; ஜக்ஞே—பிறந்தார்; ஹர்யபல:—ஹர்யபலன்; ந்ருப:—அரசர்.

க்ஷத்ரவிருத்தரின் பேரனான குசனிலிருந்து பிரதி என்ற ஒரு மகன் பிறந்தார். பிரதியின் மகன் சஞ்சயன். மேலும் சஞ்சயனின் மகன் ஜயன். ஜயனிலிருந்து கிருதன் பிறந்தார். மேலும் கிருதரிலிருந்து மன்னர் ஹர்யபலர் பிறந்தார்.

பதம் 9.17.17
ஸஹதேவஸ் ததோ ஹீனோ ஜயஸேனஸ் து தத்-ஸுத:
ஸங்க்ருதிஸ் தஸ்ய ச ஜய: க்ஷத்ர-தர்மா மஹா-ரத: க்ஷத்ரவ்ருத்தான்வயா பூபா இமே ஸ்ருணு அத நாஹுஷான்

ஸஹதேவ:—சஹதேவர்; தத:—ஸஹதேவரிலிருந்து; ஹீன:—ஹீனர் என்ற ஒரு மகன்; ஜயஸேன:—ஜயசேனர்; து—கூட; தத்-ஸுத:—ஹீனரின் மகன்; ஸங்க்ருதி:—சங்க்ருதி; தஸ்ய—சங்க்ருதியின்; ச—மேலும்; ஜய:—ஜயன் என்ற ஒரு மகன்; க்ஷத்ர-தர்மா—க்ஷத்திரிய கடமைகளில் திறமையுள்ள; மஹா-ரத:—மிகவும் சக்திவாய்ந்த ஒரு வீரரான; க்ஷத்ரவ்ருத்த-அன்வயா:—க்ஷத்ரவிருத்தரின் வம்சத்தில்; பூபா:—அரசர்கள்; இமே—இவ்வெல்லா; ஸ்ருணு—என்னிடமிருந்து கேளும்; அத—இப்பொழுது; நாஹுஷான்—நஹுஷனின் வம்சத்தினர்.

ஹர்யபலனிலிருந்து சஹதேவர் என்ற ஒரு மகன் வந்தார். சஹதேவரிலிருந்து ஹீனர் வந்தார். ஹீனரின் மகன் ஜயசேனர். ஜயசேனரின் மகன் சங்க்ருதி. சங்க்ருதியின் மகனான ஜயன், சக்திமிக்கவரும், திறமையான போர் வீரருமாவார். இந்த அரசர்கள் க்ஷத்ரவிருத்தரின் வம்சத்தவர்களாவர். இப்பொழுது நஹுஷரின் வம்சத்தைப் பற்றி உமக்கு நான் விவரிக்கப் போகிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “புரூரவஸ் புத்திரர்களின் வம்சங்கள்” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare