அத்தியாயம் – 12
ஸ்ரீ ராம புத்திரர், குசன் வம்சம்
பதம் 9.12.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராமச்சந்திரரின் புத்திரர் குசன், குசனின் மகன் அதிதி, அதிதியின் மகன் நிஷதன், நிஷதனின் மகன் நபன். நபனின் மகனான புண்டரீகரிலிருந்து க்ஷேமதன்வர் என்ற மகன் வந்தார்.

பதம் 9.12.2 : க்ஷேமதன்வனின் மகன் தேவானீகன், தேவானீகனின் மகன் அநீஹன், அநீஹனின் மகன் பாரியாத்ரன், பாரியாத்ரனின் மகன் பலஸ்தலன், பலஸ்தலனின் மகன் வஸ்ரநாபன். இவர் சூரிய தேவனின் பிரகாசத்திலிருந்து பிறந்ததாக கூறப்படுகிறார்.

பதங்கள் 9.12.3 – 9.12.4 : வஜ்ரநாபரின் மகன் சகணன். அவரது மகன் வித்ருதி. வித்ருதியின் மகன் ஹிரண்யநாபன். இவர் ஜைமினியின் சீடராகி, அஷ்டாங்க யோகத்தின் சிறந்த ஆசார்யராக விளங்கினார். ஹிரண்யநாபரிடம் இருந்துதான் மாமுனிவரான யாக்ஞவல்கியர் மிகச்சிறந்த அஷ்டாங்க யோக முறையைப் பயின்றார். ஆத்யாத்ம-யோகம் எனப்படும் இந்த யோக முறையினால், இதயத்திலுள்ள ஜடப்பற்றெனும் முடிச்சை அவிழ்க்க முடியும்.

பதம் 9.12.5 : ஹிரண்யநாபரின் மகன் புஷ்பன். புஷ்பனின் மகன் துருவஸந்தி. துருவஸந்தியின் மகன் சுதர்சனர். அவரது மகன் அக்னிவர்ணன். அக்னிவர்ணனின் மகன் சீக்ரன், அவரது மகன் மரு.

பதம் 9.12.6 : அஷ்டாங்க யோகத்தில் பூரணத்துவம் அடைந்துள்ள மரு, கலாப கிராமம் என்ற இடத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார். கலியுகத்தின் முடிவில், ஒரு புத்திரனைப் பெறுவதன் மூலமாக மறைந்து போன சூரிய வம்சத்தை அவர் மீண்டும் விருத்தி செய்வார்.

பதம் 9.12.7 : மருவிலிருந்து பிரசுஸ்ருதன் என்ற ஒரு மகன் பிறந்தார். பிரசுஸ்ருதனிலிருந்து சந்தி வந்தார். சந்தியிலிருந்து அமர்ஷணர் வந்தார். அமர்ஷரிலிருந்து மஹஸ்வான் என்ற ஒரு மகன் வந்தார். மஹஸ்வானிலிருந்து விஸ்வபாஹு பிறந்தார்.

பதம் 9.12.8 : விஸ்வபாஹுவிலிருந்து பிரசேனஜித் என்ற மகன் வந்தார். பிரசேனஜித்திடமிருந்து தக்ஷகன் வந்தார். தக்ஷகனிலிருந்து பிருஹத்பவன் வந்தார். இவர் உமது தந்தையால் ஒரு போரில் கொல்லப்பட்டார்.

பதம் 9.12.9 : இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த இவ்வரசர்கள் எல்லோரும் காலமடைந்துவிட்டனர். இனி பிறக்கப் போகும் அரசர்களைப் பற்றி நான் விவரிப்பதை தயவுசெய்து கேளும். பிருஹத்பலனிலிருந்து பிருஹத்ரணன் வருவார்.

பதம் 9.12.10 : ஊருக்ரியன் பிருஹத்ரணனின் மகனாக பிறப்பார். ஊருக்ரியனுக்கு வத்ஸவிருத்தன் என்ற மகன் பிறப்பார். வத்ஸவிருத்தனுக்கு பானு என்ற ஒரு மகன் பிறப்பார். பானுவிலிருந்து திவாகன் என்ற சிறந்த சேனாதிபதி ஒருவர் பிறப்பார்.

பதம் 9.12.11 : அதன்பிறகு, திவாகனிலிருந்து சஹதேவன் என்ற மகன் வருவார். சஹதேவனிலிருந்து பிருஹதஸ்வன் என்ற ஒரு சிறந்த வீரன் வருவார். பிருஹதஸ்வனிலிருந்து பானுமான் வருவார். பானுமானிலிருந்து பிரதீகாஸ்வன் வருவார். பிரதீகாஸ்வனின் மகனாக சுப்ரதீகன் இருப்பார்.

பதம் 9.12.12 : அதன்பிறகு, சுப்ரதீகனிலிருந்து மருதேவன் வருவார்; மருதேவனிலிருந்து, சுனக்ஷத்ரன்; சுனக்ஷத்ரனிலிருந்து, புஷ்கரன்; மற்றும் புஷ்கரனிலிருந்து அந்தரிக்ஷன் ஆகியோர் வருவார்கள். அந்தரிக்ஷரின் மகனாக சதபா பிறப்பார். அவரது மகனாக அமித்ரஜித் பிறப்பார்.

பதம் 9.12.13 : அமித்ரஜித்திலிருந்து பிருஹத்ராஜன் என்றொரு மகன் வருவார். பிருஹத்ராஜனிலிருந்து கிருதஞ்சயன் வருவார். கிருதஞ்சயனின் மகன் ரணஞ்சயன் எனப்படுவார். அவரிலிருந்து சஞ்சயன் என்றொரு மகன் வருவார்.

பதம் 9.12.14 : சஞ்சயனிலிருந்து சாக்யன் வருவார். சாக்யனிலிருந்து சுத்தோதன் வருவார். சுத்தோதனிலிருந்து லங்கலன் வருவார். லங்கலனிலிருந்து பிரசேனஜித் வருவார். பிரசேனஜித்திலிருந்து க்ஷுத்ரகன் வருவார்.

பதம் 9.12.15 : க்ஷுத்ரகனிலிருந்து ரணகன் வருவார். ரணகனிலிருந்து சுரதன் வருவார். சுரதனிலிருந்து சுமித்ரன் வருவார். இவரோடு வம்சம் முடிவுறும். இது பிருஹத்பல வம்சத்தின் ஒரு விவரணையாகும்.

பதம் 9.12.16 : இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி அரசராக சுமித்ரர் இருப்பார்; சுமித்ரருக்குப்பின் சூரிய வம்சத்தில் வேறு மகன்கள் இல்லை. இவ்வாறாக இவ்வம்சம் ஒரு முடிவுக்கு வரும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare