அத்தியாயம் – 9
அம்சுமானின் வம்சம்
பதம் 9.9.1
ஸ்ரீ-சுக உவாச
அம்சுமாம்ஸ் ச தபஸ் தேபே கங்கானயன-காம்யயா
காலம் மஹாந்தம் நாசக்னோத் ததி: காலேன ஸம்ஸ்தித:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அம்சுமான்—அம்சுமான் என்ற அரசர்; ச—கூட; தப: தேபே—தவமியற்றினார்; கங்கா—கங்கை; ஆனயன-காம்யயா—தன் முன்னோர்களை விடுவிக்கும் பொருட்டு, கங்கையை ஜட உலகிற்குக் கொண்டுவரும் விருப்பத்துடன்; காலம்—காலம்; மஹாந்தம்—நீண்ட காலமாக; ந—இல்லை; அசக்னோத்—வெற்றியடைந்தார்; தத:—அதன்பிறகு; காலேன—நாளடைவில்; ஸம்ஸ்தித:—மரணமடைந்தார்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் பாட்டனாரைப் போலவே அம்சுமானும், பௌதிக உலகிற்கு கங்கையைக் கொண்டுவர நெடுங்காலம் தவமிருந்தார். எனினும் அதைச் சாதிக்க முடியாமல் நாளடைவில் மரணமடைந்தார்.
பதம் 9.9.2
திலீபஸ் தத்-ஸுதஸ் தத்வத் அசக்த: காலம் ஏயிவான்
பகீரதஸ் தஸ்ய ஸுதஸ் தேபே ஸ ஸுமஹத் தப:
திலீப:—திலீபன் என்ற; தத்-ஸுத:—அம்சுமானின் மகன்; தத்-வத்—அவரது தந்தையைப் போலவே; அசக்த:—கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டுவர முடியாமல்; காலம் ஏயிவான்—காலத்திற்குப் பலியாகி மரணமடைந்தார்; பகீரத: தஸ்ய ஸுத:—அவரது மகன் பகீரதன்; தேபே—தவம் செய்தார்; ஸ:—அவர்; ஸு-மஹத்—கடுமையான; தப:—தவம்.
அம்சுமானைப் போலவே, அவரது மகன் திலீபனும் கங்கையைக் கொண்டு வர முடியாமல் நாளடைவில் காலமானார், பிறகு திலீபனின் மகனான பகீரதன் கங்கையை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதற்காக கடுந்தவங்களைச் செய்தார்.
பதம் 9.9.3
தர்சயாம் ஆஸ தம் தேவீ ப்ரஸன்னா வரதாஸ்மி தே
இதி உக்த: ஸ்வம் அபிப்ராயம் சசம்ஸாவனதோ ந்ருப:
தர்சயாம் ஆஸ—தரிசனமளித்து; தம்—அவருக்கு, பகிரத மகாராஜனுக்கு; தேவீ—கங்காதேவி; ப்ராஸன்னா—மிகவும் திருப்தியடைந்ததால்; வரதா அஸ்மி—வரமளிக்கிறேன்; தே—உனக்கு; இதி உக்த:—இவ்வாறு கூறியதும்; ஸ்வம்—தன் சொந்த; அபிப்ராயம்—விருப்பத்தை; சசம்ஸ—விளக்கினார்; அவனத:—மிகவும் மரியாதையுடன் சிரம் தாழ்த்தி; ந்ருப:—அரசர் (பகீரதன்).
அதன்பிறகு, பகீரத மகராஜனுக்கு கங்கா தேவி தரிசனமளித்து, “உன் தவத்தால் மிகவும் திருப்தியடைந்தேன், விரும்பிய வரத்தைக் கேள்” என்று கூற, அரசரும் அவள் முன் சிரம் பணிந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
பதம் 9.9.4
கோ ‘பி தாரயிதா வேகம் பதந்த்யா மே மஹீ-தளே
அன்யதா பூ-தளம் பித்வா ந்ருப யாஸ்யே ரஸாதளம்
க:—யாரவர்; அபி—உண்மையாகவே; தாரயிதா—தாங்கக் கூடியவர்; வேகம்—அலைகளின் வேகத்தை; பதந்த்யா:—விழும்பொழுது; மே—என்னை; மஹீ-தளே—மண்ணுலகில்; அன்யதா—இல்லையெனில்; பூ-தளம்—பூமியின் தளத்தை; பித்வா—பிளந்து கொண்டு; ந்ருப—அரசே; யஸ்யே—நான் சென்றுவிடுவேன்; ரஸா தளம்—பிரபஞ்சத்தின் அடிப்பகுதியான பாதாளத்திற்கு.
கங்கா தேவி பதிலளித்தாள்: நான் ஆகாயத்திலிருந்து பூமியில் விழும் பொழுது நீரின் கடுமையான வேகத்தைத் தாங்கக் கூடியவர் யார்? தாங்கக் கூடியவர் இல்லையென்றால், நான் பூமியைப் பிளந்து கொண்டு, பிரபஞ்சத்தின் பாதாள பகுதியான ரஸாதளத்திற்குச் சென்று விடுவேன்.
பதம் 9.9.5
கிம் சாஹம் ந புவம் யாஸ்யே நரா மய் ஆம்ருஜந்தி அகம்
ம்ருஜாமி தத் அகம் க்வாஹம் ராஜம்ஸ் தத்ர விசிந்த்யதாம்
கிம் ச—கூட; அஹம்—நானும்; ந—இல்லை; புவம்—மண்ணுலகிற்கு; யாஸ்யே—செல்வேன்; நரா:—பொதுமக்கள்; மயி—என்னுடைய நீரில்; ஆம்ருஜந்தி—கழிப்பார்கள்; அகம்—அவர்களது பாவ விளைவுகளை; ம்ருஜாமி—போக்கிக் கொள்வேன்; தத்—அந்த; அகம்—சேரும் பாவ விளைவுகளை; க்வ—யாரிடம்; அஹம்—நான்; ராஜன்—அரசே; தத்ர—இந்த உண்மையைப்பற்றி; விசிந்த்யதாம்—நீர் நன்கு யோசிக்க வேண்டும்.
அரசே, நான் மண்ணுலகிற்கு இறங்கிச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் பொதுமக்கள் தங்களுடைய பாவ விளைவுகளைப் போக்கிக் கொள்ள என்னுடைய நீரில் குளிப்பார்கள். இவ்வாறு இப்பாவ விளைவுகளெல்லாம் என்னில் சேகரிக்குமானால், அவற்றிலிருந்து எப்படி நான் விடுபடுவேன்? இதை நீ நன்கு யோசித்துப் பார்.
பதம் 9.9.6
ஸ்ரீ-பகீரத உவாச
ஸாதவோ ன்யாஸின: சாந்தா ப்ரஹ்மிஷ்டா லோக-பாவனா:
ஹரந்தி அகம் தே ‘ங்க-ஸங்காத் தேஷு ஆஸ்தே ஹி அக-பித் தரி:
ஸ்ரீ-பகீரத: உவாச—பகீரதன் கூறினார்; ஸாதவ:—சாதுக்கள்; ன்யாஸின:—சந்நியாசிகள்; சாந்தா:—பெளதிகத் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, சாந்தமாக இருக்கும்; ப்ரஹ்மிஷ்டா:—வேத சாஸ்திரத்தின் கட்டுபாட்டு விதிகளைப் பின்பற்றுவதில் கைதேர்ந்த; லோக-பாவனா:—இழிவடைந்த நிலையிலிருந்து உலகை விடுவிப்பதில் ஈடுபட்டுள்ள; ஹாரந்தி—அகற்றி விடுவார்கள்; அகம்—பாவ வாழ்வீன் விளைவுகளை; தே—உங்களுடைய (கங்காதேவி); அங்க-ஸங்காத்—கங்கை நீரில் குளிப்பதால்; தேஷு—தங்களுக்குள்; ஆஸ்தே—இருக்கிறது; ஹி—உண்மையில்; அக-பித்—எல்லா பாவச் செயல்களையும் முறியடிக்கக் கூடிய பரமபுருஷர்; ஹரி:—பகவான்.
பகீரதன் கூறினார். தூய பக்தர்கள் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள காரணத்தால், துறவிகளாகவும், பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதில் கைதேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் எப்பொழுதும் புகழுக்குரியவர்களாகவும், தூய ஒழுக்கம் உடையவர்களாகவும், இழிவடைந்த ஆத்மாக்களை எல்லாம் விடுவிக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். இத்தகயை தூய பக்தர்கள் உங்களுடைய நீரில் குளிக்கும்போது, பொதுமக்களிடமிருந்து கிரகிக்கப்பட்ட பாவ விளைவுகள் செயலிழந்து போகும் என்பது நிச்சயம். ஏனெனில், எல்லாப் பாவ விளைவுகளையும் போக்கக் கூடியவரான பரமபுருஷரையே இத்தகைய பக்தர்கள் எப்பொழுதும் தங்களது இதயங்களில் வைத்துப் போற்றுகின்றனர்.
பதம் 9.9.7
தாரயிஷ்யதி தே வேகம் ருத்ரஸ் து ஆத்மா சரீரிணாம்
யஸ்மின் ஓதம் இதம் ப்ரோதம் விஸ்வம் சாடீவ தந்துஷு
தாரயிஷ்யதி—தாங்குவார்; தே—உங்களுடைய; வேகம்—அலைகளில் வேகத்தை; ருத்ர:—சிவபெருமான்; து—உண்மையில்; ஆத்மா—பரமாத்மா; சரீரிணாம்—உடல் பெற்ற எல்லா ஆத்மாக்களின்; யஸ்மின்—யாருக்குள்; ஓதம்—அதன் நீளவாட்டத்தில் இருக்கும்; இதம்—இப்பிரபஞ்சம் முழுவதும்; ப்ரோதம்—அகலவாட்டம்; விஸ்வம்—முழுபிரபஞ்சமும்; சாடீ—ஒரு துணி; இவ—போல்; தந்துஷு—நூல்களில்.
நூல்களால் பின்னப்பட்டுள்ள ஒரு துணி, நீளவாட்டமாகவும், அகலவாட்டமாகவும் செல்வதைப் போலவே, நீளவாட்டமாகவும் அகலவாட்டமாகவும் பரந்துள்ள இப்பிரபஞ்சம் முழுவதுமே பரமபருஷரின் வெவ்வேறு சக்திகளுக்குக் கீழ்ப்படிந்ததாக உள்ளது. சிவபெருமான் பகவானின் அவதாரம் என்பதால், அவர் பரமாத்மாவின் பிரதிநிதியாக உடல்பெற்ற ஆத்மாவினுள் இருக்கிறார். உங்களுடைய வேகத்தைத் தமது தலைமீது அவரால் தாங்கிக் கொள்ள முடியும்.
பதம் 9.9.8
இதி உக்த்வா ஸ ந்ருபோ தேவம் தபஸாதோஷயச் சிவம்
காலேனால்பீயஸா ராஜம்ஸ் தஸ்யேசஸ் சாஷு அதுஷ்யத
இதி உக்த்வா—இதைக் கூறிய பின்; ஸ:—அவர்; ந்ருப:—அரசர் (பகீரதன்); தேவம்—சிவபெருமானை; தபஸா—தவங்களைச் செய்து; அதோஷயத்—திருப்திப்படுத்தினார்; சிவம்—சர்வ மங்களகரமான சிவபெருமானை; காலேன—காலத்தால்; அல்பீயஸா—குறுகிய; ராஜன்—அரசே; தஸ்ய—அவர்மீது (பகீரதன்); ஈச:—சிவபெருமான்; ச—உண்மையில்; அசு—மிக விரைவில்; ஆதுஷ்யத—திருப்தியடைந்தார்.
இங்ஙனம் கூறியபின், பகீரதனும் தவத்தால் சிவபெருமானை திருப்திப்படுத்தினார். பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமானும் மிக விரைவில் பகீரதனிடத்தில் திருப்தியடைந்தார்.
பதம் 9.9.9
ததேதி ராஜ்ஞாபிஹிதம் ஸர்வ-லோக-ஹித: சிவ:
ததாராவஹிதோ கங்காம் பாத-பூத-ஜலாம் ஹரே:
ததா—அப்படியே ஆகட்டும்; இதி—இவ்வாறாக; ராஜ்ஞா அபிஹிதம்—அரசரால் (பகீரதனால்) கேட்டுக் கொள்ளப்பட்டதும்; ஸர்வ-லோக-ஹித:—அனைவருக்கும் எப்பொழுதும் மங்களம் அருள்பவரான பரமபுருஷர்; சிவ:—சிவபெருமான்; ததார—தாங்கினார்; அவஹித:—மிகவும் கவனத்துடன்; கங்காம்—கங்கையால்; பாத-பூத-ஜலாம்ஹரே:—பரமபுருஷரான விஷ்ணுவின் பாதங்களிலிருந்து வெளிப்படுவதால், உன்னத தூய்மையுடையதாக விளங்கும் நீர்.
பகீரத மகாராஜன் சிவபெருமானை அணுகி, கங்கையின் வேகத்தைத் தாங்கியருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு, சிவபெருமானும், “அப்படியே ஆகட்டும்” என்று கூறினார். அந்த கங்கை நீர் பகவான் விஷ்ணுவின் பாதங்களிலிருந்து உற்பத்தியாவதால், புனிதப்படுத்தும் அந்நீரை மிகவும் கவனமாக சிவபெருமான் தன் தலைமீது தாங்கிக் கொண்டார்.
பதம் 9.9.10
பகீரத: ஸ ராஜர்ஷிர் நின்யே புவன-பாவனீம்
யத்ர ஸ்வ-பித்ரூணாம் தேஹா பஸ்மீபூதா: ஸ்ம சேரதே
பகீரத:—பகீரத மகாராஜன்; ஸ:—அவர்; ராஜ-ரிஷி:—ராஜ ரிஷியான; நின்யே—அழைத்துச் சென்றார்; புவன-பாவனீம்—முழு பிரபஞ்சத்தையும் காப்பாற்றக்கூடிய கங்கா தேவியை; யத்ர—அந்த இடத்தில், எங்கு; ஸ்வ-பித்ரூணாம்—அவரது முன்னோர்களின்; தேஹா:—உடல்கள்; பஸ்மீபூதா:— சாம்பலாக எரிந்துபோய்; ஸ்ம சேரதே—கிடந்தனவோ.
ராஜரிஷியாகிய பகீரதன், வீழ்ந்த ஆத்மாக்களை எல்லாம் காப்பாற்றக்கூடிய கங்கையைத் தன் முன்னோர்களின் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பதம் 9.9.11
ரதேன வாயு-வேகேன ப்ரயாந்தம் அனுதாவதீ
தேசான் புனந்தீ நிர்தக்தான் ஆஸிஞ்சத் ஸகராத்மஜான்
ரதேன—இரதத்திலேறி; வாயு-வேகேன—வாயு வேகத்தில் ஒட்டிக் கொண்டு; ப்ரயாந்தம்—முன் சென்ற பகீரத மகாராஜன்; அனுதாவதீ—பின்னால் ஓடிய; தேசான்—எல்லா நாடுகளையும்; புனந்தீ—புனிதப்படுத்திக்கொண்டு; நிர்தக்தான்—எரித்து சாம்பலாக்கப்பட்டு கிடந்த; ஆஸிஞ்சத்—மீது தெளிக்கப்பட்டது; ஸகர-ஆத்மஜான்—சகர புத்திரர்கள்.
பகீரதன் துரிதமாகச் செல்லும் இரதத்திலேறி, கங்கா தேவியின் முன் இரதத்தை ஓட்டிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற கங்கா தேவியும் பல நாடுகளை புனிதப்படுத்திக் கொண்டே, பகீரதனின் முன்னோர்களான சகர புத்திரர்கள் சாம்பலாகிக் கிடந்த இடத்தை அடைந்தாள். இவ்வாறாக கங்கை நீர் அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பதம் 9.9.12
யஜ்-ஜல-ஸ்பர்ச-மாத்ரேண ப்ரஹ்ம-தண்ட-ஹதா அபி
ஸகராத்மஜா திவம் ஜக்மு: கேவலம் தேஹ-பஸ்மபி:
யத்-ஜல—யாருடைய நீர்; ஸ்பர்ச-மாத்ரேண—தொடுவதாலேயே; ப்ரஹ்ம-தண்ட-ஹதா:—பிரம்மமாகிய ஆத்மாவிற்கு குற்றம் புரிந்ததனால் தண்டிக்கப்பட்டவர்கள்; அபி—என்ற போதிலும்; ஸகர-ஆத்மஜா:—சகர புத்திரர்கள்; திவம்—சுவர்க்க லோகங்களுக்கு; ஜக்மு:—சென்றனர்; கேவலம்—மட்டுமே; தேஹ-பஸ்மபி:—எரிந்த உடல்களின் சாம்பலால்.
சகர மகாராஜனின் புத்திரர்கள் மகா புருஷர் ஒருவருக்குக் குற்றம் புரிந்ததால், அவர்களது உடல்களின் வெப்பம் அதிகரித்து அதனாலேயே எரிந்து சாம்பலாகினர். ஆனால் கங்கை நீர் தெளிக்கப்பட்டதாலேயே அவர்களனைவரும் சுவர்க்க லோகங்களுக்குச் செல்லும் தகுதி பெற்றனர். கங்கை நீரைக் கொண்டு கங்கையையே வழிபடுவோரைப் பற்றி என்னவென்று சொல்வது?
பதம் 9.9.13
பஸ்மீபூதாங்க-ஸங்கேனஸ்வர் யாதா: ஸகராத்மஜா:
கிம் புன: ஸ்ரத்தயா தேவிம் ஸேவந்தே யே த்ருத-வ்ரதா:
பஸ்மீபூத-அங்க—சாம்பலாக எரிந்துபோன உடலால்; ஸங்கேன—கங்கை நீரைத் தொட்டதால்; ஸ்வ: யாதா:—சுவர்க்க லோகங்களுக்குச் சென்றனர்; சகர-ஆத்மஜா:—சகர புத்திரர்கள்; கிம்—என்னவென்று சொல்வது; புன:—மீண்டும்; ஸ்ரத்தயா—சிரத்தையுடனும், பக்தியுடனும்; தேவீம்—கங்கா தேவியை; ஸேவந்தே—வழிபடுபவர்கள்; யே—எவர்கள்; த்ருத-வ்ரதா:—திடமான விரதங்களுடன்.
சாம்பலாய்ப்போன உடல்களில் கங்கை நீர் பட்ட மாத்திரத்தில் சகர புத்திரர்கள் சுவர்க்க லோகங்களுக்கு உயர்த்தப்பட்டனர். அப்படியிருக்க, திட விரதத்துடனும், சிரத்தையுடனும் கங்கையை வழிபடுபவனைப் பற்றி கேட்க வேண்டுமா? அத்தகைய ஒரு பக்தனுக்கு விளையப் போகும் நன்மையைப்பற்றி ஒருவரால் கற்பனைதான் செய்து பார்க்க முடியும்.
பதம் 9.9.14
ந ஹி ஏதத் பரம் ஆஸ்சர்யம் ஸ்வர்துன்யா யத் இஹோதிதம்
அனந்த-சரணாம்போஜ-ப்ரஸூதாயா பவ-ச்சித:
ந—இல்லை; ஹி—உண்மையில்; ஏதத்—இது; பரம்—பரம; ஆஸ்சர்யம்—ஆச்சரியமான விஷயம்; ஸ்வர்துன்யா:—கங்கை நீரின்; யத்—எது; இஹ—இங்கு; உதிதம்—விவரிக்கப்பட்டிருப்பது; அனந்த—பரமபுருஷரின்; சரண-அம்போஜ—பாதத் தாமரைகளிலிருந்து; ப்ரஸூதாயா:—வெளிப்படுவதின்; பவ-சித:—பெளதிக பந்தத்திலிருந்து விடுவிக்கக் கூடியது.
பரமபுருஷராகிய அனந்ததேவரின் தாமரைப் பாதங்களிலிருந்து கங்காதேவி ஊற்றெடுப்பதால், பெளதிக பந்தத்திலிருந்து ஒருவரை விடுவிக்க அவளால் முடிகிறது. எனவே அவளைப்பற்றி இங்கு வர்ணிக்கப்பட்டிருப்பவை எல்லாம் சிறிதும் ஆச்சரியமானவை அல்ல.
பதம் 9.9.15
ஸன்னிவேஸ்ய மனோ யஸ்மிஞ் ச்ரத்தயா முனயோ ‘மலா:
த்ரைகுண்யம் துஸ்த்யஜம் ஹித்வா ஸத்யோ யாதாஸ் தத்-ஆத்மதாம்
ஸன்னிவேஸ்ய—முழுமையாக கவனம் செலுத்தும்; மன:—மனதை; யஸ்மின்—யாரிடம்; ஸ்ரத்தயா—சிரத்தையுடனும், பக்தியுடனும், முனய—மாமுனிவர்கள்; அமலா:—எல்லாப் பாவ அழுக்குகளிலிருந்தும் விடுபட்ட; த்ரைகுண்யம்—ஜட இயற்கையின் முக்குணங்கள்; துஸ்த்யஜம்—கைவிடுவதற்கு மிகவும் கடினம்; ஹித்வா—என்றாலும் அவர்களால் கைவிட முடியும்; ஸத்ய:—உடனே; யாதா:—அடைந்தனர்; தத்-ஆத்மதாம்—பரமனின்; தத்-ஆத்மதாம்—பரமனின் ஆன்மீக குணத்தை.
பெளதிக சிற்றின்ப ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ள மாமுனிவர்கள் தங்களுடைய மனங்களை பகவத் தொண்டில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அத்தகையவர்கள் சிரமமின்றி பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுகின்றனர். அவர்கள் பகவானின் ஆன்மீக குணத்தை அடையப்பெற்று உன்னத படியில் நிலைபெறுகின்றனர். இதுவே பரம புருஷரின் பெருமையாகும்.
பதங்கள் 9.9.16 – 9.9.17
ஸ்ருதோ பகீரதாஜ் ஜக்ஞே தஸ்ய நாபோ ‘பரோ ‘பவத்
ஸிந்துத்வீபஸ் ததஸ் தஸ்மாத் அயுதாயுஸ் ததோ ‘பவத்
ருதூபர்ணோ நௗ-ஸகோ யோ ‘ஸ்வ-வித்யாம் அயான் நலாத்
தத்வாக்ஷ-ஹ்ருதயம் சாஸ்மை ஸர்வகாமஸ் து தத்-ஸுதம்
ஸ்ருதி:—சுருதன் என்ற மகன்; பகீரதாத்—பகீரதனிலிருந்து; ஜக்ஞே—பிறந்தார்; தஸ்ய—சுருதனின்; நாப:—நாபன் என்ற; அபர:—ஏற்கனவே விவரிக்கப்பட்ட நாபனிலிருந்து வேறுபட்டவர்; அபவத்—பிறந்தார்; ஸிந்துத்வீப:—சிந்துத்வீபன் என்ற; தத:—நாபனிலிருந்து; தஸ்மாத்—சிந்துத்வீபனிலிருந்து; அயுதாயு:—அயுதாயு என்ற ஒரு மகன்; தத—அதன்பிறகு; அபவத்—பிறந்தார்; ரிதூபர்ண:—ரிதூபர்ணன் என்ற ஒரு மகன்; நவ-ஸக:—நளனின் ஒரு நண்பனை; ய:—யாரொருவர்; அஸ்வ-வித்யாம்—குதிரைகளை அடிக்கியாளும் கலையை; அயாத்—அடைந்தார்; நளாத்—நளனிடமிருந்து; தத்வா—பதிலாகக் கொடுத்தபின்; அக்ஷ-ஹ்ருதயம்—சூதாட்டக் கலையின் இரகசியத்தை; ச—மேலும்; அஸ்மை—நளனுக்கு; ஸர்வகாம:—சர்வகாமன் என்ற; து—உண்மையில்; தத்-ஸுதம்—அவரது மகன் (ரிதூபர்ணனின் மகன்).
பகீரதனுக்கு சுருதன் என்ற ஒரு மகன் இருந்தார். அவரது மகன் நாபன் இவர் ஏற்கனவே விவரிக்கப்பட்ட நாபனிலிருந்து வேறுபட்டவராவார். நாபனுக்கு சிந்துத்வீபன் என்ற ஒரு மகனிருந்தார். சிந்துத்வீபனிலிருந்து அயுதாயு வந்தார். அயுதாயுவிலிருந்து ருதூபர்ணன் வந்தார். இவர் நளராஜனுக்கு நண்பராவார். ருதூபர்ணன் நளராஜனுக்கு சூதாட்டக் கலையை கற்றுத் தந்தார். நளராஜனோ, குதிரைகளை அடக்கி அவற்றைப் பராமரிக்கும் கலையை ருதூபர்ணனுக்குக் கற்றுத் தந்தார். ரிதூபர்ணனின் மகன் சர்வகாமன்.
பதம் 9.9.18
தத: ஸுதாஸஸ் தத்-புத்ரோ தமயந்தீ-பதிர் ந்ருப:
ஆஹுர் மித்ரஸஹம் யம் வை கல்மாஷாங்ரிம் உத க்வசித்
வஸிஷ்ட-சாபாத் ரக்ஷோ ‘பூத் அனபத்ய: ஸ்வ-கர்மணா
தத:—சர்வகாமனிலிருந்து; ஸுதாஸ:—சுதாஸன் பிறந்தார்; தத்-புத்ர:—சுதாஸனின் மகன்; தமயந்தீ-பதி:—தமயந்தியின் கணவர்; ந்ருப:—அவர் அரசரானார்; ஆஹு:—என்று கூறப்படுகிறது; மித்ரஸஹம்—மித்ரஸஹன்; யம் வை— தவிரவும்; கல்மாஷாங்ரிம்—கல்மாஷபாதனால்; உத—அறியப்படும்; க்வசித்—சிலசமயங்களில்; வஸிஷ்ட-சாபாத்—வசிஷ்டரால் சபிக்கப்பட்டதால்; ரக்ஷ:—ஓர் இராட்சஸனாக; ஆபூத்—ஆனார்; அனபத்ய:—மகனில்லாமல்; ஸ்வ-கர்மணா—அவரது சொந்த பாவச் செயலால்.
சர்வகாமனுக்கு சுதாஸன் என்றொரு மகனிருந்தார். சௌதாஸன் என்ற அவரது மகன் தமயந்தியின் கணவராவார். சௌதாஸன் சிலசமயங்களில் மித்திரஸஹன் அல்லது கல்மாஷபாதன் என்றும் அறியப்பட்டார். கெட்ட செய்கையின் காரணத்தால் புத்திர பாக்கியம் இல்லாதிருந்த இவர், வசிஷ்டரால் சபிக்கப்பட்டு ஒரு இராட்சஸனாக மாறினார்.
பதம் 9.9.19
ஸ்ரீ-ராஜோவாச
கிம் நிமித்தோ குரோ: சாப: ஸௌதாஸஸ்ய மஹாத்மன:
ஏதத் வேதிதும் இச்சாம: கத்யதாம் ந ரஹோ யதி
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; கிம் நிமித்த:—என்ன காரணத்திற்காக; குரோ:—ஆன்மீக குருவின்; சாப:—சாபம்; ஸௌதாஸஸ்ய—சௌதாஸனை; மஹா-ஆத்மன:—சிறந்த ஆத்மாவை; ஏதத்—இதை; வேதிதும்—அறிய; இச்சாம:—நான் விரும்புகிறேன்; கத்யதாம்—தயவு கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள்; ந—இல்லை; ரஹ:—இரகசியம்; யதி—என்றால்.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ஓ சுகதேவ கோஸ்வாமி, சௌதாஸனின் ஆன்மீக குருவான வசிஷ்டர் ஏன் அச்சிறந்த ஆத்மாவைச் சபித்தார்? இதை நான் அறிய விரும்புகிறேன். இதில் இரகசியம் எதுவும் இல்லையென்றால், தயவுசெய்து எனக்குக் கூறியருள வேண்டுகிறேன்.
பதங்கள் 9.9.20 – 9.9.21
ஸ்ரீ-சுக உவாச
ஸௌதாஸோ ம்ருகயாம் கிஞ்சிச் சரன் ர க்ஷோ ஜகான ஹ
முமோச ப்ராதரம் ஸோ ‘த கத: ப்ரதிசிகீர்ஷயா
ஸஞ்சிந்தயன் அகம் ராஜ்ஞ: ஸூத-ரூப-தரோ க்ருஹே குரவே போக்து-காமாய பக்த்வா நின்யே நராமிஷம்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; சௌதாஸ:—சௌதாஸ மகாராஜன்; ம்ருகயம்—வேட்டையாடுவதில்; கிஞ்சித்—சிலசமயங்களில்; சரன்—சுற்றித் திரிந்து; ரக்ஷ:—ஓர் இராட்சஸனை; ஜகான—கொன்றார்; ஹ—கடந்த காலத்தில்; முமோச—விடுதலை செய்தார்; ப்ராதரம்—அந்த இராட்சஸனின் சகோதரனை; ஸ:—அந்த சகோதரன்; அத—அதன்பிறகு; கத:—சென்றான்; ப்ரதிசிகீர்ஷயா—பழிக்குப்பழி வாங்குவதற்கு; சஞ்சிந்தயன்—அவன் நினைத்தான்; அகம்—ஏதோ தீங்கு செய்ய; ராஜ்ஞ:—அரசரின்; ஸூத-ரூப-தர:—ஒரு சமையற்காரனைப் போல் வேடமணிந்து; கிருஹே—வீட்டில்; குரவே—அரசரின் ஆன்மீக குருவிற்கு; போக்து-காமாய—போஜனம் செய்ய அங்கு வந்த; பக்த்வா—சமைத்தபின்; நின்யே—அவருக்குக் கொடுத்தான்; நர-ஆமிஷம்—நர மாமிசத்தை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒரு சமயம் காட்டில் வசிப்பதற்காகச் சென்ற சௌதாஸன் அங்கு ஒரு இராட்சஸனைக் கொன்றார். ஆனால் அந்த இராட்சஸனின் சகோதரனை மன்னித்து விடுதலை செய்தார். ஆயினும், அந்த இராட்சஸனோ, பழிக்குப் பழிவாங்க முடிவு செய்தான். அரசருக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்துடன், அரசரின் வீட்டில் சமையற்காரனாக பொறுப்பேற்றான். ஒரு நாள், அரசரின் ஆன்மீக குருவான வசிஷ்ட முனிவர் பகல் போஜனத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இராட்சஸ சமையற்காரனும் அவருக்கு நர மாமிசத்தைப் பரிமாறினான்.
பதம் 9.9.22
பரிவக்ஷேயமாணம் பகவான் விலோக்யாபக்ஷ்யம் அஞ்ஜஸா
ராஜானம் அசபத் க்ருத்தோ ரக்ஷோ ஹி ஏவம் பவிஷ்யஸி
பரிவேக்ஷ்யமாணம்—உணவு வகைகளைச் சோதிக்கும் பொழுது; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; விலோக்ய—அவர் கண்ட போது; அபக்ஷ்யம்—உண்ணத்தகாதது என்பதை; அஞ்ஜஸா—அவரது யோக சக்தியால் மிகச்சுலபமாக; ராஜானம்—அரசரை; அசபத்—சபித்தார்; க்ருத்த—மிகவும் கோபங்கொண்டு; ரக்ஷ:—ஓர் இராட்சஸனாக; ஹி—உண்மையாகவே; ஏவம்—இவ்வாறாக; பவிஷ்யஸி—நீ ஆகக் கடவாய்.
தனக்கு பரிமாறப்பட்ட உணவுகளைச் சோதித்துப் பார்த்த வசிஷ்டர், அது நர மாமிசமென்பதால் உண்ணத் தகாதது என்பதைத் தன் யோக சக்தியினால் புரிந்து கொண்டார். இதனால் அவர் கடுங்கோபமடைந்து, உடனே சௌதாஸனை ஓர் இராட்சஸனாக மாறும்படி சபித்து விட்டார்.
பதங்கள் 9.9.23 – 9.9.24
ரக்ஷ:-க்ருதம் தத் விதித்வா சக்ரே த்வாதச-வார்ஷிகம்
ஸோ ‘பி அபோ-‘ஞ்ஜலிம் ஆதாய குரும் சப்தும் ஸமுத்யத:
வாரிதோ மதயந்த்யாபோ ருசதீ: பாதயோர் ஜஹௌ
திச: கம் அவனீம் ஸர்வம் பஸ்யஞ் ஜீவமயம் ந்ருப:
ரக்ஷ: க்ருதம்—இராட்சஸன்தான் அதைச் செய்தான்; தத்—அந்த நர மாமிசத்தைப் பரிமாறினான்; விதித்வா—என்பதைப் புரிந்து கொண்டதும்; சக்ரே—(வசிஷ்டர்) செய்தார்; த்வாதச-வார்ஷிகம்—பிராயச்சித்தமாக பன்னிரண்டு ஆண்டுகள் தவம்; ஸ:—அந்த சௌதாஸன்; அபி—கூட; அப:-அஞ்ஜலிம்—உள்ளங்கை நிறைய நீரை; ஆதாய—எடுத்து; குரும்—அவரது குருவான வசிஷ்டரை; சப்தும்—சபிப்பதற்காக; ஸமுத்யத:—தயாரானார்; வாரித:—தடுக்கப்பட்டு; மதயந்த்யா—மதயந்தி என்றும் அறியப்பட்ட அவரது மனைவியால்; அப:—நீர்; ருசதீ:—ஒரு மந்திரத்தை உச்சரித்து; பாதயோ: ஜஹெள—அவரது கால்களின் மீது வீசினார்; திச:—எல்லாத் திசைகளும்; கம்—ஆகாயத்தில்; அவனீம்—உலகில்; ஸர்வம்—எல்லா இடங்களிலும்; பஸ்யன்—கண்டு; ஜீவ-மயம்—ஜீவராசிகள் நிறைந்திருப்பதை; ந்ருப:—அரசர்.
நர மாமிசத்தைப் பரிமாறியது இராட்சஸன்தான், அரசரல்ல என்பதைப் புரிந்து கொண்ட வசிஷ்டர், குற்றமற்ற அவரைச் சபித்துவிட்டதால், தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றினார். இதற்கிடையில் சௌதாஸ மகாராஜன் வசிஷ்டரைச் சபிப்பதற்காக, நீரை எடுத்து சாப மந்திரத்தை உச்சரிக்கத் தயாரானார். ஆனால் அவரது மனைவியான மதயந்தி அவ்வாறு செய்யாமல் அவரைத் தடுத்துவிட்டாள். பிறகு பத்து திசைகளிலும், ஆகாயத்திலும், பூமியிலும், எல்லா இடங்களிலும் ஜீவராசிகள் நிறைந்திருப்பதை அரசர் கண்டார்.
பதம் 9.9.25
ராக்ஷஸம் பாவம் ஆபன்ன: பாதே கல்மாஷதாம் கத:
வ்யவாய-காலே தத்ருசே வனௌகோ தம்பதீ த்விஜௌ
ராக்ஷஸம்—இராட்சஸ; பாவம்—குணத்தை; ஆபன்ன:—பெற்று; பாதே—காலில்; கல்மாஷதாம்—ஒரு கருப்புப் புள்ளி; கத:—பெற்றார்; வ்யவாய-காலே—சிற்றின்ப விவகாரத்தின் போது; தத்ருசே—அவர் கண்டார்; வன-ஓக:—காட்டில் வாழும்; தம்-பதீ—ஒரு கணவனும், மனைவியும்; த்விஜௌ—பிராமணர்களாக இருந்த.
இவ்வாறாக சௌதாஸன் ஓர் இராட்சஸனின் குணத்தையும், காலில் ஒரு கரும் புள்ளியையும் பெற்றார். இதனால் அவர் கல்மாஷபாதன் எனப்பட்டார். ஒரு சமயம் கல்மாஷபாத மகாராஜன், வனத்தில் ஒரு பிராமண சதிபதிகள் சிற்றின்ப விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.
பதங்கள் 9.9.26 – 9.9.27
க்ஷுதார்தோ ஜக்ருஹே விப்ரம் தத்-பத்னி ஆஹாக்ருதார்தவத்
ந பவான் ராக்ஷஸ: ஸாக்ஷாத் இக்ஷ்வாகூணாம் மஹா-ரத:
மதயந்த்யா: பதிர் வீர நாதர்மம் கர்தும் அர்ஹஸி
தேஹி மே ‘பத்ய-காமாயா அக்ருதார்தம் பதிம் த்விஜம்
க்ஷுதா-ஆர்த:—பசியால் துன்புறுத்தப்பட்டு; ஜக்ருஹே—பற்றினார்; விப்ரம்—பிராமணரை; தத்-பத்னீ—அவரது மனைவி; ஆஹ—கூறினாள்; அக்ருத-அர்த-வத்—திருப்தியடையாமலும், பசியுடனும் இருந்த; ந—இல்லை; பவான்—நீங்கள்; ராக்ஷஸ:—ஓர் இராட்சஸன்; ஸாக்ஷாத்—நேரடியாக அல்லது உண்மையில்; இக்ஷ்வாகூணாம்—இக்ஷ்வாகு மகாராஜனின் வம்சத்தில் வந்த; மஹா-ரத:—ஒரு சிறந்த வீரர்; மதயந்த்யா:—மதயந்தியின்; பதி:—கணவர்; வீர—வீரரே; ந—அல்ல; அதர்மம்—அதர்மத்தை; கர்தும்—செய்ய; அர்ஹஸி—தகுந்தவர்; தேஹி—தயவு செய்து விட்டுவிடுங்கள்; மே—என்னுடைய; அபத்ய-காமாயா:—ஒரு மகனைப் பெற விரும்பும்; அக்ருத-அர்தம்—என்னுடைய ஆசை இன்னும் நிறைவேறவில்லை; பதிம்—கணவரை; த்விஜம்—பிராமணரான.
இராட்சஸ குணத்தாலும்; பெரும் பசியாலும் தூண்டப்பட்ட சௌதாஸ மகாராஜன் அந்த பிராமணரைப் பற்றினார். பிறகு, இரங்கத்தக்க நிலையிலிருந்த பிராமணரின் மனைவி, அரசரிடம் கூறினாள்: வீரரே, உண்மையில் நீங்கள் ஓர் இராட்சஸனல்ல; மாறாக, இக்ஷ்வாகு மகாராஜனின் வம்சத்தில் வந்தவர். உண்மையில், நீங்கள் ஒரு சிறந்த வீரரும், மதயந்தியின் கணவருமாவீர். எனவே, எனக்கு இன்னும் குழந்தையைத் தராத தன் கணவரைத் தயவு செய்து என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.
பதம் 9.9.28
தேஹோ ‘யம் மானுஷோ ராஜன் புருஷஸ்யாகிலார்தத:
தஸ்மாத் அஸ்ய வதோ வீர ஸர்வார்த-வத உச்யதே
தேஹ:—உடல்; அயம்—இந்த; மானுஷ:—மனித; ராஜன்—அரசே; புருஷஸ்ய—ஜீவராசியின்; அகில—பிரபஞ்சத்தின்; அர்த-த—நன்மைக்காக; தஸ்மாத்—எனவே; அஸ்ய—என் கணவரின் உடலை; வத:—கொல்வது; வீர—வீரரே; ஸர்வ-அர்த-வத:—பயனுள்ள எல்லா வாய்ப்புகளையும் கொல்வதாகும்; உச்யதே—என்று கூறப்படுகிறது.
அரசே, வீரரே, இந்த மனித உடல் பிரபஞ்சத்தின் நன்மைக்குரியது. இவ்வுடலை நீங்கள் அகால மரணமடையச் செய்தால், மனித வாழ்வின் எல்லா நன்மைகளையும் நீர் கொன்றவராவீர்.
பதம் 9.9.29
ஏஷ ஹி ப்ராஹ்மணோ வித்வாம்ஸ் தப:-சீல-குணான்வித:
ஆரிராதயிஷுர் ப்ரஹ்ம மஹா-புருஷ-ஸம்ஞீதம்
ஸர்வ-பூதாத்ம-பாவேன பூதேஷு அந்தர்ஹிதம் குணை:
ஏஷ:—இந்த; ஹி—உண்மையில்; ப்ராஹ்மண:—தகுதியுள்ள ஒரு பிராமணர்; வித்வான்—வேத ஞானத்தை அறிந்தவர்; தப:—தவம்; சீல—நன்னடத்தை; குண-அன்வித:—எல்லா நற்குணங்களையும் உடைய; ஆரிராதயிஷு:—வழிபாட்டில் ஈடுபட விரும்பி; ப்ரஹ்ம—பரபிரம்மம்; மஹா-புருஷ—பரமபுருஷரான கிருஷ்ணரை; ஸம்ஞிதம்—எனப்படும்; ஸர்வ-பூத—அனைத்து ஜீவராசியிலும்; ஆத்ம-பாவனே—பரமாத்மாவாக; பூதேஷு—ஒவ்வொரு ஜீவராசியிலும்; அந்தர்ஹிதம்—இதய மத்தியில்; குணை:—குணங்களால்.
இவர் மிகவும் கற்றறிந்த தகுதியுடைய ஒரு பிராமணராவார். தவ வாழ்வை மேற்கொண்டுள்ள இவர், அனைத்து ஜீவராசிகளின் இதய மத்தியிலும் உறையும் பரமபுருஷரான பரமாத்மாவை வழிபட பெரும் ஆவல் கொண்டுள்ளார்.
பதம் 9.9.30
ஸோ ‘யம் ப்ரஹ்மர்ஷி வர்யஸ் தே ராஜர்ஷி-ப்ராவராத் விபோ
கதம் அர்ஹதி தர்ம-க்ஞ வதம் பிதுர் இவாத்மஜ:
ஸ:—இவர், இந்த பிராமணர்; அயம்—இந்த; ப்ரஹ்ம-ரிஷி-வர்ய:—ஒரு பிராமணர் மட்டுமல்லாமல், மாமுனிவர்களில் அல்லது பிரம்ம ரிஷிகளிலேயே சிறந்தவர்; தே—மேலும் தங்களிடமிருந்துதான்; ராஜ-ரிஷி-ப்ரவராத்—ராஜ ரிஷிகளிலேயே சிறந்தவரான; விபோ—நாட்டின் தலைவரே; கதம்—எப்படி; அர்ஹதி—தகுந்தவர்; தர்ம-க்ஞ—சமயக் கோட்பாடுகளை தாங்கள் நன்கறிந்தவர்; வதம்—கொல்வது; பிது:—தந்தையிடமிருந்து; இவ—போல்; ஆத்மஜ:—மகன்.
பிரபுவே, தாங்கள் சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். தந்தையால், ஒரு மகன் கொல்லத் தகாதவனாவான். அதைப்போலவே, இந்த பிராமணரும் அரசரால் பாதுகாக்கப்பட வேண்டியவராவர். உங்களைப் போன்ற ஒரு ராஜரிஷியால் அவர் எப்படி கொல்லத் தகுந்தவராவார்?
பதம் 9.9.31
தஸ்ய ஸாதோர் அபாபஸ்ய ப்ரூணஸ்ய ப்ரஹ்ம-வாதின:
கதம் வதம் யதா பப்ரோர் மன்யதே ஸன்-மதோ பவான்
தஸ்ய—அவரின்; ஸாதோ:—சிறந்த சாதுவின்; அபாபஸ்ய—பாவத்தையே செய்தறியாதவரின்; ப்ரூணஸ்ய—கருவின்; ப்ரஹ்ம-வாதின:—வேத ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்களின்; கதம்—எப்படி; வதம்—கொல்வது; யதா—போன்றது; பப்ரோ:—ஒரு பசுவின்; மன்யதே—நீர் நினைக்கிறீர்; ஸத்-மத:—கற்றோரால் நன்கு அறியப்பட்ட; பவான்—தாங்கள்.
தாங்கள் பிரசித்திபெற்றவரும், கற்றோருக்கிடையில் வணங்கப்படுபவருமாவீர். பாவமறியாத ஒரு சாதுவும், வேத வல்லுனருமான இந்த பிராமணரைக் கொல்ல எப்படித் துணிந்தீர்? இவரைக் கொல்வது, கர்ப்பத்திலுள்ள ஒரு கருவைக் கொல்வது போலாகும், அல்லது ஒரு பசுவைக் கொல்வது போலாகும்.
பதம் 9.9.32
யதி அயம் க்ரியதே பக்ஷ்யஸ் தர்ஹி மாம் காத பூர்வத:
ந ஜீவிஷ்யே வினா யேன க்ஷணம் ச ம்ருதகம் யதா
யதி—என்றால்; அயம்—இந்த பிராமணர்; க்ரியதே—ஏற்றுக் கொள்ளப்படுகிறார்; பக்ஷ்ய:—உணவுப் பொருளாக; தர்ஹி—பின்; மாம்—என்னை; காத—தின்றுவிடுங்கள்; பூர்வத:—அதற்கு முன்; ந—மாட்டேன்; ஜீவிஷ்யே—நான் உயிர் வாழ; வினா—இல்லாமல்; யேன—அவர் (என் கணவர்); க்ஷணம் ச—ஒரு கணமும்; ம்ருதகம்—ஓர் உயிரற்ற உடலை; யதா—போன்றவள்.
என்னால் என் கணவரின்றி ஒரு கணமும் உயிர் வாழ முடியாது. அவரின்றி நான் ஒரு சவத்திற்கு ஒப்பாவேன். எனவே இவரை நீங்கள் தின்ன விரும்பினால், முதலில் என்னைத் தின்றுவிடுவது நல்லது.
பதம் 9.9.33
ஏவம் கருண-பாஷிண்யா விலபந்த்யா அனாதவத்
வ்யாக்ர: பசும் இவாகாதத் ஸௌதாஸ: சாப-மோஹித:
ஏவம்—இவ்வாறாக; கருண-பாஷிண்யா:—பிராமணரின் மனைவி பரிதாபப்படத்தக்க வகையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது; விலபந்த்யா:—மிகவும் வருத்தத்துடன்; அனாத-வத்—காவலனற்ற ஒரு பெண்ணைப் போலவே; வ்யாக்ர:—ஒரு புலி; பசும்—பலிகடா; இவ—போல்; அகாதத்—தின்றுவிடுவதை; ஸௌதாஸ்:—சௌதாஸ மகாராஜனும்; சாப—சாபத்தினால்; மோஹித:—தண்டிக்கப்பட்டதால்.
வசிஷ்டரின் சாபத்தால் தண்டிக்கப்பட்ட சௌதாஸ மகாராஜன், ஒரு புலி அதன் இரையைப் புசிப்பதுபோல் அந்த, பிராமணரை விழுங்கினார். பிராமணரின் மனைவி மிகவும் பரிதாபகரமான வகையில் பேசிய போதிலும், சௌதாஸன் அவளது துயரத்திற்குச் சிறிதும் அசையவில்லை.
பதம் 9.9.34
ப்ராஹ்மணீ வீக்ஷ்ய திதிஷும் புருஷாதேன பக்ஷிதம்
சோசந்தி ஆத்மானம் உர்வீசம் அசபத் குபிதா ஸதீ
ப்ரஹ்மணீ—பிராமணரின் மனைவி; வீக்ஷ்ய—கண்ட பின்; திதிஷும்—ஒரு குழந்தைக்கு வித்தளிக்கும் தறுவாயிலிருந்த அவளது கணவர்; புருஷ-அதேன—இராட்சஸனால்; பக்ஷிதம்—விழுங்கப்பட்டதை; சோசந்தீ—மிகவும் விசனப்பட்டு; ஆத்மானம்—அவளுக்காக அல்லது அவளது உடலுக்காக; உர்வீசம்—அரசரை; அசபத்—சபித்தாள்; குபிதா—கோபத்துடன்; ஸதீ—பதிவிரதை.
பதிவிரதையான அந்த பிராமண பெண்மணி, குழந்தைப் பேறளிக்கும் தறுவாயிலிருந்த தன் கணவர் அந்த இராட்சஸனால் விழுங்கப்பட்டதைக் கண்டு, துயரமும், வருத்தமும் மேலிட, கோபத்துடன் அரசரைச் சபித்தாள்.
பதம் 9.9.35
யஸ்மான் மே பக்ஷித: பாப காமார்தாயா: பதிஸ் த்வயா
தவாபி ம்ருக்யுர் ஆதானாத் அக்ருத-ப்ரக்ஞ தர்சித:
யஸ்மான்—என்பதால்; மே—என்; பக்ஷித:—விழுங்கப்பட்டார்; பாப—பாவியே; காம-ஆர்தாயா:—காம இச்சையால் மிகவும் அலைக்கழிக்கப்பட்ட ஒரு பெண்ணின்; பதி:—கணவர்; த்வயா—உன்னால்; தவ—உனது; அபி—கூட; ம்ருத்யு:—மரணம்; ஆதானாத்—உன் மனைவிக்கு குழந்தைப் பேறளிக்க முயலும் போது; அக்ருத-ப்ரக்ஞ—கொலைப் பாதகனே; தர்சித:—உனக்கு இச்சாபத்தை கொடுக்கிறேன் .
பாவியான முட்டாளே, ஒரு குழந்தைக்குரிய வித்தைப் பெறும் ஆசையில் நான் காம வசப்பட்டிருந்த போது, நீ என் கணவரைத் தின்றுவிட்டாய். எனவே உன் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க முயலும்போது நீ மரணமடைவாய். அதாவது, சிற்றின்ப இச்சையுடன் உன் மனைவுடன் கூடும்போது நீ மரணமடைவாய்.
பதம் 9.9.36
ஏவம் மித்ரஸஹம் சப்த்வா பதி-லோக-பராயணா
தத்-அஸ்தீனி ஸமித்தே ‘க்னேள ப்ராஸ்ய பர்துர் கதிம் கதா
ஏவம்—இவ்வாறாக; மித்ரஸஹம்—சௌதாஸ மகாராஜனை; சப்த்வா—சபித்த பின்; பதி-லோக-பராயணா—அவளது கணவருடன் செல்லவிரும்பி; தத்-அஸ்தீனி—தன் கணவரின் எலும்புகளை; ஸமித்தே அக்னௌ—எரியும் நெருப்பில்; பிராஸ்ய—வைத்தபின்; பர்து:—தன் கணவரின்; கதிம்—சென்ற இடத்திற்கு; கதா—அவளும் சென்றாள்.
இவ்வாறாக பிராமணரின் மனைவி, மித்திரஸஹன் என்ற சௌதாஸ மகாராஜனைச் சபித்தாள். பிறகு தன் கணவருடன் செல்ல விரும்பிய அவள், தீமூட்டி, தன் கணவரின் எலும்புகளை அதில் போட்டு, தானும் தீக்குளித்து, தன் கணவர் சென்ற இடத்திற்குச் சென்றாள்.
பதம் 9.9.37
விசாபோ த்வாதசாப்தாந்தே மைதுனாய் ஸமுத்யத:
விக்ஞாப்ய ப்ராஹ்மணீ-சாபம் மஹிஷ்யா ஸ நிவரித:
விசாப:—சாபம் நீங்கியதும்; த்வாதச-அப்த-அந்தே—பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின்; மைதுனாய—தன் மனைவியுடன் உடலுறவு கொள்ள; ஸமுத்யத:—சௌதாஸன் தயாரான போது; விக்ஞாப்ய—பற்றி அவருக்கு ஞாபகமூட்டினாள்; ப்ராஹ்மணி-சாபம்—பிராமண பெண்மணியால் கொடுக்கப்பட்ட சாபத்தை; மஹிஷ்யா—ராணியால்; ஸ:—அவர் (அரசர்); நிவாரித:—தடுக்கப்பட்டார்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின், வசிஷ்டரின் சாபம் நீங்கப் பெற்ற சௌதாஸ மகாராஜன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பினார். ஆனால் பிராமணப் பெண்ணின் சாபத்தைப் பற்றி ராணியால் நினைவுபடுத்தப்பட்டு அவர் உடலுறவு கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டார்.
பதம் 9.9.38
அத ஊர்த்வம் ஸ தத்யாஜ ஸ்த்ரீ-ஸுகம் கர்மணாப்ரஜா:
வஸிஷ்டஸ் தத்-அநுக்ஞாதோ மதயந்த்யாம் ப்ரஜாம் அதாத்
அத:—இவ்வாறாக; ஊர்த்வம்—வெகு விரைவில்; ஸ:—அவர், அரசர்; தத்யாஜ—கைவிட்டார்; ஸ்த்ரீ-ஸுகம்—உடலுறவு சுகத்தை; கர்மணா—விதி வசத்தால்; அப்ரஜா:—மகன் இல்லாமலிருந்தார்; வஸிஷ்ட:—மாமுனிவர் வசிஷ்டர்; தத்-அநுக்ஞாத:—ஒரு மகனைப் பெறுவதற்கு அரசரால் அனுமதிக்கப்பட்டு; மதயந்த்யாம்—சௌதாஸ மகாராஜனின் மனைவியான மதயந்தியின் மூலமாக; ப்ரஜாம்—ஒரு குழந்தையை; அதாத்—பெற்றார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின், எதிர்கால உடலுறவு சுகத்தைக் கைவிட்ட அரசர், விதிவசத்தால் மகனில்லாமலேயே இருந்தார். பிறகு, அரசரின் அனுமதியுடன், மாமுனிவரான வசிஷ்டர், மதயந்தியின் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றார்.
பதம் 9.9.39
ஸ வை ஸப்த ஸமா கர்பம் அபிப்ரன் ந வ்யஜாயத
ஜக்னே ‘ஸ்மனோதரம் தஸ்யா: ஸோ ‘ஸ்மகஸ் தேன கத்யதே
ஸா—அவள், மதயந்தி; வை—உண்மையில்; ஸப்த—ஏழு; ஸமா:—ஆண்டுகள்; கர்பம்—கர்பத்திலுள்ள குழந்தையை; அபிப்ரத்—தொடர்ந்து தாங்கிவந்தாள்; ந—இல்லை; வ்யஜாயத—பிரசவித்தாள்; ஜக்னே—அடித்தார்; அஸ்மனா—ஒரு கல்லால்; உதரம்—கர்பப்பயை; தஸ்யா:—அவளுக்கு; ஸ:—ஒரு மகன்; அஸ்மக:—அஸ்மகன் என்ற பெயரால்; தேன—இதனால்; கத்யதே—அழைக்கப்பட்டான்.
மதயந்தி ஏழு ஆண்டுகளாக குழந்தையை கர்பத்தில் சுமந்த போதிலும் அவளுக்குப் பிரசவம் ஆகவில்லை. எனவே, வசிஷ்டர் அவளது கர்பப்பையை ஒரு கல்லால் அடித்தார். இதனால் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக குழந்தை அஸ்மகன் (“கல்லிலிருந்து பிறந்தவன்”) என்று அழைக்கப்பட்டான்.
பதம் 9.9.40
அஸ்மகாத் பாலிகோ ஜக்ஞே ய: ஸ்த்ரீபி: பரிரக்ஷித
நாரீ-கவச இதி உக்தோ நிஹ்க்ஷத்ரே மூலகோ ‘பவத்
அஸ்மகாத்—அஸ்மகன் என்ற அந்த மகனிலிருந்து; பாலிக:—பாலிகன் என்ற ஒரு மகன்; ஜக்ஞே—பிறந்தான்; ய:—பாலிகன் என்ற இக்குழந்தை; ஸ்த்ரீபி:—பெண்களால்; பரிரக்ஷித:—பாதுகாக்கப்பட்டார்; நாரீ-கவச:—பெண்களாலான ஒரு கேடயத்தைப் பெற்றதால்; இதி உக்த:—அவ்வாறு அழைக்கப்பட்டார்; நிஹ்க்ஷத்ரே—(க்ஷத்திரியர்கள் அனைவரும் பரசுராமரால் அழிக்கப்பட்டு) க்ஷத்திரியர்களே இல்லாத சமயத்தில்; மூலக:—மூலகர், க்ஷத்திரியர்களுக்கு காரணகர்த்தாவாக; அபவத்—அவர் ஆனார்.
அஸ்மகனிலிருந்து பாலிகன் பிறந்தார். பாலிகன் பெண்களால் சூழப்பட்டிருந்ததால், பரசுராமரின் கோபத்திலிருந்து தப்பினார். இதனால் அவர் நாரீகவசன் (“பெண்களால் பாதுகாக்கப்படுபவர்”) என்று அழைக்கப்பட்டார். பரசுராமர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழித்துவிட்ட போது, பிறகு தோன்றிய க்ஷத்திரியர்களுக்கு பாலிகன் காரணகர்த்தா ஆனார். எனவே அவர் மூலகன், (“க்ஷத்திரிய வம்சத்தின் மூலம்”) எனப்பட்டார்.
பதம் 9.9.41
ததோ தசரதஸ் தஸ்மாத் புத்ர ஐடவிடிஸ் தத:
ராஜா விஸ்விஸஹோ யஸ்ய கட்வாங்கஸ் சக்ரவர்தி அபூத்
ததோ:—பாலிகனிலிருந்து; தசரத:—தசரதன் என்ற ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து; புத்ர:—ஒரு மகன்; ஐடவிடி:—ஐடவிடி என்ற; தத:—அவரிலிருந்து; ராஜா விஸ்வஸஹ:—புகழ்பெற்ற விஸ்வஸஹ மகாராஜன் பிறந்தார்; யஸ்ய—யாரிலிருந்து; கட்வாங்க:—கட்வாங்கன் என்ற அரசர்; சக்ரவர்தீ—சக்ரவர்த்தி; அபூத்—ஆனார்.
பாலிகனிலிருந்து தசரதன் என்ற மகன் வந்தார். தசரதனிலிருந்து ஐடவிடி எனறு ஒரு மகன் வந்தார். ஐடவிடியிலிருந்து விஸ்வஸஹ மகாராஜன் வந்தார். விஸ்வஸஹ மகாராஜனின் மகன் புகழ் பெற்ற கட்வாங்க மகாராஜனாவார்.
பதம் 9.9.42
யோ தேவைர் அர்திதோ தைத்யான் அவதீத் யுதி துர்ஜய:
முஹூர்தம் ஆயுர் ஞாத்வைத்ய ஸ்வ-புரம் ஸந்ததே மன:
ய:—கட்வாங்க மகாராஜன்; தேவை:—தேவர்களால்; அர்தித:—கேட்டுக் கொள்ளப்பட்டதால்; தைத்யான்—அசுரர்களை; அவதீத்—கொன்றார்; யுதி—ஒரு போரில்; துர்ஜய:—மிகவும் கொடூரமான; முஹூர்தம்—ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே; ஆயு:—ஆயுட்காலம்; ஞாத்வா—அறிந்து; ஏத்ய—அணுகினார்; ஸ்வ-புரம்—அவரது சொந்த நகரத்தை; ஸந்ததே—பதித்தார்; மன:—மனதை.
கட்வாங்க மகாராஜன் போரில் ஜயிக்க முடியாதவரானார். அவர் தேவர்களின் வேண்டுதலுக்கிணங்கி, தேவர்களின் பக்கம் நின்று அசுரர்களை வென்றார். இதனால் திருப்தியடைந்த தேவர்கள் அவருக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினர். எனவே அரசரும் தமது ஆயுட் காலத்தைப் பற்றி வினவியதற்கு, இன்னும் ஒரு நொடிப் பொழுது மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று தேவர்கள் பதிலளித்தனர். இவ்வாறாக உடனே ராஜமாளிகையை விட்டு வெளியேறி, தமது சொந்த வசிப்பிடத்திற்கு சென்ற அரசர், அங்கு தம் மனதை முழுமையாக பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்தினார்.
பதம் 9.9.43
ந மே ப்ரஹ்ம-குலாத் ப்ராணா: குல-தைவான் ந சாத்மஜா:
ந ஸ்ரியோ ந மஹீ ராஜ்யம் ந தாராஸ் சாதிவல்லபா:
ந—இல்லை; மே—எனது; ப்ரஹ்ம-குலாத்—பிராமண பிரிவினரை விட; ப்ராணா:—உயிர்; குல-தைவாத்—எங்களது குல தெய்வங்களை விட; ந—இல்லை; ச—கூட; ஆத்மஜா:—புத்திரர்களும், புத்திரிகளும்; ந—அல்லது; ஸ்ரிய:—செல்வம்; ந—அல்லது; மஹீ—பூமி; ராஜ்யம்—இராஜ்யம்; ந—அல்லது; தாரா:—மனைவி; ச—கூட; அதி-வல்லபா:—மிகவும் பிரியமான.
கட்வாங்க மகாராஜன் எண்ணினார்: எங்கள் குல தெய்வங்களான பிராமண பண்பாட்டையும், பிராமணர்களையும்விட, எனக்கு என் உயிர்கூட அவ்வளவு பிரியமானதல்ல. எனவே என் இராஜ்யம், பூமி, மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிராமணர்களைவிட எனக்கு அதிக பிரியமுள்ளது வேறொன்றுமில்லை.
பதம் 9.9.44
ந பால்யே ‘பி மதிர் மஹ்யம் அதர்மே ரமதே க்வசித்
நபஸ்யம் உத்தமஸ்லோகாத் அன்யத் கிஞ்சன வஸ்து அஹம்
ந—இல்லை; பால்யே—குழந்தைப் பருவத்தில்; அபி—உண்மையில்; மதி:—கவர்ச்சி; மஹ்யம்—எனக்கு; அதர்மே—அதர்மத்தில்; ரமதே—இன்புறுகிறார்; க்வசித்—எந்த சமயத்திலும்; ந—அல்லது; அபஸ்யம்—நான் கண்டேன்; உத்தமஸ்லோகாத்—பரமபுருஷரை விட; அன்யத்—வேறெதையும்; கிஞ்சன—எதையும்; வஸ்து—பொருளையும்; அஹம்—நான்.
சிறுவயதில்கூட நான் அற்பப் பொருட்களாலோ அல்லது அதர்மக் கொள்கைகளாலோ ஒரு போதும் கவரப்பட்டதில்லை. பரமபுருஷரை விட அதிக பெருமானமுள்ள எதையும் நான் கண்டதுமில்லை.
பதம் 9.9.45
தேவை: காம-வரோ தத்தோ மஹ்யம் த்ரி-புவனேஸ்வரை:
ந வ்ருணே தம் அஹம் காமம் பூதபாவன-பாவன:
தேவை:—தேவர்களால்; காம-வர:—விரும்பிய வரம்; தத்த:—கொடுக்கப்பட்டது; மஹ்யம்—எனக்கு; த்ரி-புவன-ஈஸ்வரை:—மூவுலக நாயகர்களாகிய தேவர்களால் (ஜட உலகில் விரும்பியதைச் செய்யக் கூடியவர்கள்); ந வ்ருணே—ஏற்கவில்லை; தம்—அதை; அஹம்—நான்; காமம்—ஜட உலகில் விரும்பத்தக்க எதையும்; பூத பாவன-பாவன:—பரமபுருஷரில் முற்றிலும் ஆழ்ந்திருப்பதால் (பௌதிகமான எதிலும் விருப்பம் கொள்ளவில்லை).
மூவுலக நாயகர்களாகிய தேவர்கள், நான் விரும்பிய வரத்தைக் கொடுக்க விரும்பினர். ஆனால் இந்த ஜட உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவரான பரமபுருஷரிடம் நான் அக்கறை கொண்டிருப்பதால், அவர்களது வரத்துக்கு நான் ஆசைப்படவில்லை. எல்லா பெளதிக வரங்களையும் விட, நான் பரமபுருஷரிடம் அதிக விருப்பம் கொண்டுள்ளேன்.
பதம் 9.9.46
யே விக்ஷிப்தேந்ரிய-தியோ தேவாஸ் தே ஸ்வ-ஹ்ருதி ஸ்திதம்
ந விந்தந்தி ப்ரியம் சஸ்வத் ஆத்மானம் கிம் உதாபரே
யே—யார்; விக்ஷிப்த-இந்ரிய-திய:—பெளதிக சூழ்நிலைகளின் காரணத்தால், புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை எப்பொழுதும் அலைக்கழிக்கப்பட்டவர்கள்; தேவா:—தேவர்களைப் போன்ற; தே—அத்தகைய நபர்கள்; ஸ்வ-ஹ்ருதி—இதய மத்தியில்; ஸ்திதம்—உள்ள; ந—இல்லை; விந்தந்தி—அறிய; ப்ரியம்—பிரியமுள்ள பரமபுருஷர்; சஸ்வத்—இடைவிடாமல், நித்தியமாக; ஆத்மானம்—பரமபுருஷர்; கிம் உத—பற்றி கேட்க வேண்டுமா; அபரே—(மனிதர்களைப் போன்ற) மற்றவர்களை.
உயர் கிரகங்களில் வாழும் உயர்ந்த நிலையை தேவர்கள் பெற்றிருந்தாலும், அவர்களது புலன்களும், மனங்களும், புத்தியும் பௌதிக சூழ்நிலைகளால் சிதறிக் கிடக்கின்றன. எனவே, உயர்ந்த நிலையிலுள்ள அவர்கள் கூட இதயத்தில் நித்திய வாசம் புரிபவரான பரமபுருஷரை அறிந்து கொள்ளவில்லை. எனவே குறைந்த அனுகூலங்களைப் பெற்றுள்ள மனிதர்களைப் போன்றோரைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?
பதம் 9.9.47
அதேச-மாயா-ரசிதேஷு ஸங்கம்
குணேஷு கந்தர்வ-புரோபமேஷு
ரூடம் ப்ரக்ருத்யாத்மனி விஸ்வ-கர்துர்
பாவேன ஹித்வா தம் அஹம் ப்ரபத்யே
அத—எனவே; ஈச-மாயா—பகவானின் பகிரங்க சக்தியினால்; ரசிதேஷு—படைக்கப்பட்ட பொருட்களில்; ஸங்கம்—பற்று; குணேஷு—ஜட இயற்கைக் குணங்களில்; கந்தர்வ-புர-உபமேஷு—காட்டில், அல்லது ஒரு குன்றின்மீது காணப்படும் மாயையான கந்தர்வ நகருக்கு ஒப்பான; ரூடம்—மிகவும் சக்திவாய்ந்தவை; ப்ரக்ருத்யா—ஜட இயற்கையால்; ஆத்மனி—பரமாத்மாவிடம்; விஸ்வ-கர்து:—பிரபஞ்ச சிருஷ்டிக் கர்த்தாவின்; பாவேன—பக்தித் தொண்டால்; ஹித்வா—கைவிட்டு; தம்—அவரிடம் (பகவானிடம்); அஹம்—நான்; ப்ரபத்யே—சரணடைகிறேன்.
எனவே பகாவனின் சக்தியால் உண்டாக்கப்பட்ட பொருட்களின் மீது எனக்குள்ள பற்றை இப்பொழுது நான் துறந்து விட வேண்டும். பகவத் சிந்தனையில் ஈடுபட்டு, அவரையே நான் சரணடைய வேண்டும். இந்த பெளதிக சிருஷ்டி பகவானின் பகிரங்க சக்தியால் படைக்கப்பட்டது என்பதால், இது காட்டில் அல்லது குன்றின் மீது காணப்படும் கற்பனையான ஒரு நகரத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு பந்தப்பட்ட ஆத்மாவிற்கும் பெளதிகப் பொருட்களில் இயற்கையான கவர்ச்சியும், பற்றும் உள்ளன. ஆனால் இப்பற்றைத் துறந்து, ஒருவர் பரமபுருஷரிடம் சரணைடய வேண்டும்.
பதம் 9.9.48
இதி வ்யவஸிதோ புத்யா நாராயண-க்ருஹீதயா
ஹித்வான்ய-பாவம் அஞ்ஞானம் தத: ஸ்வம் பாவம் ஆஸ்தித:
இதி—இவ்வாறாக; வ்யவஸித—தீர்மானமாக முடிவு செய்து; புத்யா—சரியான புத்தியால்; நாராயண-க்ருஹீதயா—பரமபுருஷரான நாராயணரின் கருணையால் முழுமையாகக் கட்டுப்படுத்தினார்; ஹித்வா—கைவிட்டு; அன்ய-பாவம்—கிருஷ்ண உணர்வைத் தவிர்த்த பிற உணர்வு; அஞ்ஞானம்—அது இடையறாத அறியாமையும், இருளுமேயன்றி வேறல்ல; தத:—அதன்பிறகு; ஸ்வம்—கிருஷ்ணரின் நித்திய தொண்டரெனும் அவரது சுயநிலை; பாவம்—பக்தித் தொண்டு; ஆஸ்தித:—நிலை பெற்றார்.
இவ்வாறாக பகவானுக்குத் தொண்டு செய்வதெனும் முன்னேற்றமான புத்தியைக் கொண்டு, கட்வாங்க மகாராஜன், அறியாமை நிறைந்த உடலுடனான பொய்யான அடையாளத்தைக் கைவிட்டார். நித்தியத் தொண்டரெனும் தமது சுயநிலையில் பகவானுக்குத் தொண்டு செய்வதில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 9.9.49
யத் தத் ப்ரஹ்ம பரம் ஸூக்ஷ்மம் அசூன்யம் சூன்ய-கல்பிதம்
பகவான் வாஸுதேவேதி யம் க்ருணந்தி ஹி ஸாத்வதா:
யத்—எது; தத்—அத்தகைய; ப்ரஹ்ம பரம்—பரப்பிரம்மன், பரம புருஷராகிய கிருஷ்ணர்; ஸூக்ஷ்மம்—பெளதிக எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக தன்மையுடையவர்; அசூன்யம்—அருவமானவரோ அல்லது சூனியமானவரோ அல்ல; சூன்ய-கல்பிதம்—புத்தி குறைந்தவர்களால் சூன்யமானவராக கருதப்படுகிறார்; பகவான்—பரமபுருஷ பகவான்; வாஸுதேவ—கிருஷ்ணர்; இதி—இவ்வாறாக; யம்—யாரை; க்ருணந்தி—பற்றி பாடுகின்றனர்; ஹி—உண்மையில்; ஸாத்வதா:—தூய பக்தர்கள்.
பரமபுருஷ பகவானாகிய வாசுதேவன், கிருஷ்ணர், அருவமானவரோ, சூன்யமானவரோ அல்ல என்றாலும், அவரை நினைக்கும் குறைந்த புத்தியுடையவர்களுக்கு அவரை அறிவது மிகவும் கடினம். எனவே பகவான் தூய பக்தர்களால் அறிந்து கொள்ளப்பட்டு துதிக்கப்படுகிறார்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “அம்சுமானின் வம்சம்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.