அத்தியாயம் – 4
துர்வாசர் அம்பரீஷருக்குச் செய்த குற்றம்
பதம் 9.4.1
ஸ்ரீ-சுக உவாச
நாபாகோ நபகாபத்யம் யம் ததம் ப்ராதர: கவிம்
யவிஷ்டம் வ்யபஜன் தாயம் ப்ரஹ்மசாரிணம் ஆகதம்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நாபாக:—நாபாகன்; நபக-அபத்யம்—நபக மகாராஜனின் மகனாவார்; யம்—யாருக்கு; ததம்—தந்தையை; ப்ராதர:—மூத்த சகோதரர்கள்; கவிம்—கற்றறிந்த; யவிஷ்டம்—இளையவர்; வ்யபஜன்—பிரித்தனர்; தாயம்—சொத்தை; ப்ரஹ்மசாரிணம்—நிரந்தரமான பிரம்மச்சாரி (நைஷ்டிக) வாழ்வை ஏற்று; ஆகதம்—திரும்பி வந்தார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நபகனின் மகனான நாபாகன் தன் ஆன்மீக குருவின் ஆசிரமத்திலேயே நீண்ட காலம் வசித்து வந்தார். எனவே, அவர் திரும்பிவந்து ஒரு குடும்பஸ்தராக வாழமாட்டார் என்றெண்ணிய சகோதரர்கள், அவருக்கென ஒரு பாகத்தை ஒதுக்காமல், தந்தையின் சொத்தை தங்களுக்கிடையில் பங்கு போட்டுக் கொண்டனர். தன் ஆன்மீக குருவின் இடத்திலிருந்து நாபாகன் திரும்பிய போது, தங்களுடைய தந்தையையே அவருடைய பங்காக அவருக்குக் கொடுத்தனர்.
பதம் 9.4.2
ப்ராதரோ ‘பாங்க்த கிம் மஹ்யம் பஜாம பிதரம் தவ
த்வாம் மமார்யாஸ் ததாபாங்க்ஷுர் மா புத்ரக தத் ஆத்ருதா:
ப்ராதர:—என் சகோதரர்களே; அபாங்க்த—தந்தையின் சொத்தில் பங்காக நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்; கிம்—எதை; மஹ்யம்—எனக்கு; பஜாம—நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்; பிதரம்—தந்தையையே; தவ—உன்னுடைய பாகமாக; த்வாம்—உங்களை; மம—எனக்கு; ஆர்யா:—என் மூத்த சகோதரர்கள்; தத—தந்தையே; அபாங்க்ஷு:—பாகமாகக் கொடுத்துள்ளனர்; மா—வேண்டாம்; புத்ரக—அருமை மகனே; தத்—இந்த வார்த்தைகளுக்கு; ஆத்ருதா:—எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்க.
நாபாகன் கேட்டார், “அருமைச் சகோதரர்களே, தந்தையின் சொத்தில் எனக்கென்ன பாகம் வைத்திருக்கிறீர்கள்?” மூத்த சகோதரர்களும், “நம் தந்தையையே உன்னுடைய பாகமாக நாங்கள் வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தனர். ஆனால் தந்தையிடம் சென்ற நாபாகன், “அருமை தந்தையே, என் மூத்த சகோதரர்கள் சொத்தில் என்னுடைய பங்காக உங்களையே கொடுத்துள்ளனர்” என்று கூறினார். தந்தையும், “அருமைப் புதல்வனே அவர்களுடைய ஏமாற்று வார்த்தைகளை நீ நம்ப வேண்டாம். நான் உன்னுடைய சொத்தல்ல” என்று பதிலளித்தார்.
பதம் 9.4.3
இமே அங்கிரஸ: ஸத்ரம் ஆஸதே ‘த்ய ஸுமேதஸ:
ஷஷ்டம் ஷஷ்டம் உபேத்யாஹ: கவே முஹ்யந்தி கர்மணி
இமே—இவ்வெல்லா; அங்கிரஸ:—அங்கிரஸ வம்சத்தினர்கள்; ஸத்ரம்—யாகம்; ஆஸதே—செய்கின்றனர்; அத்ய—இன்று; ஸுமேதஸ:—மிகவும் புத்திகூர்மை உள்ளவர்களான அவர்கள்; ஷஷ்டம்—ஆறாவது; ஷஷ்டம்—ஆறாவது; உபேத்ய—அடைந்தபின்; அஹ:—நாள்; கவே—கற்றோரில் சிறந்தவனே; முஹ்யந்தி—குழப்பம் அடைவார்கள்; கர்மணி—கர்ம அனுஷ்டான முறையில்.
நாபாகனின் தந்தை கூறினார்: அங்கிரஸ வம்சத்தினர்கள் அனைவரும் இப்பொழுது ஒரு சிறந்த யாகத்தை நடத்தப் போகிறார்கள். ஆனால் அவர்கள் சிறந்த புத்திகூர்மை உள்ளவர்கள் என்ற போதிலும், ஒவ்வொரு ஆறாவது நாள் வரும்போதும், அவர்கள் யாகம் செய்வதில் குழப்பமடைந்து, அன்றாடக் கடமைகளில் தவறுகளைச் செய்வார்கள்.
பதங்கள் 9.4.4 – 9.4.5
தாம்ஸ் த்வம் சம்ஸய ஸுக்தே த்வே வைஸ்வதேவே மஹாத்மன:
தே ஸ்வர் யந்தோ தனம் ஸத்ர-பரிசேஷிதம் ஆத்மன:
தாஸ்யந்தி தே ‘த தான் அர்ச்ச ததா ஸ க்ருதவான் யதா
தஸ்மை தத்வா யயு: ஸ்வர்கம் தே ஸத்ர-பரிசேஷணம்
தான்—அவர்களுக்கு; த்வம்—நீ; சம்ஸய—சொல்லிக்கொடு; ஸுக்தே—சூக்தங்களையும் (வேத மந்திரங்களை); த்வே—இரு; வைஸ்வதேவே—பரமபுருஷரான விஸ்வதேவருடன் தொடர்பு கொண்ட; மஹாத்மன:—அந்த மகாத்மாக்கள் அனைவருக்கும்; தே—அவர்கள்; ஸ்வயந்த:—சுவர்க்க லோகங்களிலுள்ள அவரவர் இலக்குகளுக்குச் செல்லும்பொழுது; தனம்—தனத்தை; ஸத்ர-பரிசேஷிதம்—யாக முடிவில் மிஞ்சும்; ஆத்மன:—அவர்களது சொந்த சொத்துக்களை; தாஸ்யந்தி—கொடுப்பார்கள்; தே—உனக்கு; அத—எனவே; தான்—அவர்களிடம்; அர்ச்ச—அங்கு செல்; ததா—அவ்வாறு (அவரது தந்தையின் கட்டளைப்படி); ஸ:—அவர் (நாபாகன்); க்ருதவான்—நிறைவேற்றினார்; யதா—அவரது தந்தையின் அறிவுரைப்படி; தஸ்மை—அவருக்கு; தத்வா—கொடுத்தபின்; யயு:—சென்றனர்; ஸ்வர்கம்—சுவர்க்க லோகங்களுக்கு; தே—அவர்கள் அனைவரும்; ஸத்ர-பரிசேஷணம்—யாகத்தில் மிஞ்சியவைகளை.
நாபாகனின் தந்தை தொடர்ந்து கூறினார்: “மகாத்மாக்களான அவர்களிடம் சென்று வைஸ்வதேவரைப் பற்றிய இரு வேத மந்திரங்களையும் விளக்கிச் சொல். அச்சிறந்த முனிவர்கள் யாகத்தை நிறைவேற்றி, சுவர்க்க லோகங்களுக்குச் செல்லும் பொழுது, யாகத்தில் மிஞ்சிய அவர்களுடைய தனங்களை உனக்குக் கொடுப்பார்கள். எனவே உடனே அங்கு செல். “இவ்வாறாக தன் தந்தையின் அறிவுரைப்படியே நாபாகனும் செயற்பட்டார். அங்கிரஸ வம்சத்து முனிவர்களும் தங்களுடைய தனங்களை எல்லாம் அவருக்குக் கொடுத்தபின், சுவர்க்க லோகங்களுக்குச் சென்றனர்.
பதம் 9.4.6
தம் கஸ்சித் ஸ்வீகரிஷ்யந்தம் புருஷ: க்ருஷ்ண-தர்சன:
உவாசோத்தரதோ ‘ப்யேத்ய மமேதம் வாஸ்துகம் வஸு
தம்—நாபாகனிடம்; கஸ்சித்—யாரோ ஒருவன்; ஸ்வீகரிஷ்யந்தம்—மாமுனிவர்களால் அளிக்கப்பட்ட தனங்களைச் சேகரிக்கும் பொழுது; புருஷ:—ஒரு புருஷன்; க்ருஷ்ண-தர்சன:—கருத்த மேனியுள்ள; உவாச—கூறினான்; உத்தரத:—வடக்கிலிருந்து; அப்யேத்ய—வந்த; மம—என்னுடையவை; இதம்—இவை; வாஸ்துகம்—யாகத்தில் மிஞ்சிய; வஸு—எல்லாச் செல்வங்களும்.
பிறகு, நாபாகன் அச்செல்வங்களைச் சேகரிக்கும்பொழுது, வடதிசையிலிருந்து வந்த கருத்த மனிதனொருவன், “இந்த யாகசாலையிலுள்ள எல்லாச் செல்வங்களும் எனக்குச் சொந்தமானவை” என்று அவரிடம் கூறினான்.
பதம் 9.4.7
மமேதம் ரிஷிபிர் தத்தம் இதி தர்ஹிஸ்ம மானவ:
ஸ்யான் நௌ தே பிதரி ப்ரஸ்ன: ப்ருஷ்டவான் பிதரம் யதா
மம—எனது; இதம்—இவையனைத்தும்; ரிஷிபி:—சிறந்த முனிவர்களால்; தத்தம்—கொடுக்கப்பட்டன; இதி—இவ்வாறு; தர்ஹி—எனவே; ஸ்ம—உண்மையாகவே; மானவ:—நாபாகன்; ஸ்யாத்—நடக்கட்டும்; நௌ—நம்முடைய; தே—உமது; பிதரி—தந்தையிடம்; ப்ரஸ்ன:—விசாரணை; ப்ருஷ்டவான்—அவரும் விசாரித்தார்; பிதரம்—அவரது தந்தையிடம்; யதா—கேட்டுக் கொண்டபடி.
நாபாகன் கூறினார், “மாமுனிவர்கள் இச்செல்வங்கள் என்னிடம் ஒப்படைத்ததால் இவை எனக்குச் சொந்தமானவையாகும். “நாபாகன் இப்படிச் சொன்னதும், கருப்பு மனிதனும், “உமது தந்தையிடம் சென்று இப்பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம்” என்று கூறினான். இதைப்பற்றி நாபாகனும் தன் தந்தையிடம் வினவினார்.
பதம் 9.4.8
யக்ஞ-வாஸ்து-கதம் ஸர்வம் உச்சிஷ்டம் ரிஷய: க்வசித்
சக்ருர் ஹி பாகம் ருத்ராய ஸ தேவ: ஸர்வம் அர்ஹதி
யக்ஞ-வாஸ்து-கதம்—யாகசாலைக்குச் சொந்தமான பொருட்கள்; ஸர்வம்—அனைத்தும்; உச்சிஷ்டம்—எஞ்சியிருப்பவை; ரிஷய:—மாமுனிவர்கள்; க்வசித்—சிலசமயங்களில் தட்ச-யாகத்தில்; சக்ரு:—செய்தனர்; ஹி—உண்மையில்; பாகம்—பாகம்; ருத்ராய—சிவபெருமானுக்கு; ஸ:—அந்த; தேவ:—தேவர்; ஸர்வம்—அனைத்திற்கும்; அர்ஹதி—உரியவர்.
நாபாகனின் தந்தை கூறினார்: தட்ச-யாகசாலையில் மாமுனிவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டவை அனைத்தும் சிவபெருமானின் பாகமாக அவருக்கு அளிக்கப்பட்டவையாகும். எனவே, யாகசாலையில் உள்ளவை அனைத்தும் சிவபெருமானுக்குச் சொந்தமானவை என்பதில் சந்தேகமில்லை.
பதம் 9.4.9
நாபாகஸ் தம் ப்ரணம்யாஹ தவேச கில வாஸ்துகம்
இதி ஆஹ மே பிதா ப்ரஹ்மஞ் சிரஸா த்வாம் ப்ரஸாதயே
நாபாக:—நாபாகன்; தம்—அவரை (சிவபெருமானை); ப்ரணம்ய—வணங்கி; ஆஹ—கூறினார்; தவ—உங்களுடையவை; ஈச—பெருமானே; கில—நிச்சயமாக; வாஸ்துகம்—யாகசாலையிலுள்ள அனைத்தும்; இதி—இவ்வாறு; ஆஹ—கூறினார்; மே—என்; பிதா—தந்தை; ப்ரஹ்மன்—பிராமணரே; சிரஸா—தலைவணங்குகிறேன்; த்வாம்—தங்களிடம்; ப்ரஸாதயே—தங்களுடைய கருணையை வேண்டுகிறேன்.
உடனே சிவபெருமானை வணங்கிய நாபாகன் பின்வருமாறு கூறினார்: வணக்கத்திற்குரியவரே, இந்த யாகசாலையில் உள்ள அனைத்தும் உங்களுடையவை என்று என் தந்தை வலியுறுத்துகிறார். எனவே நான் பெரும் மரியாதையுடன் தங்கள் முன் சிரம் தாழ்த்தி வணங்கி, என்னிடம் கருணை கொள்ளும்படி வேண்டுகிறேன்.
பதம் 9.4.10
யத் தே பிதாவதத் தர்மம் த்வம் ச ஸத்யம் ப்ரபாஷஸே
ததாமி தே மந்த்ர-த்ருசோ ஞானம் ப்ரஹ்ம ஸனாதனம்
யத்—எதையெல்லாம்; தே—உன்; பிதா—தந்தை; அவதாத்—விளக்கினாரோ; தர்மம்—உண்மை; த்வம் ச—நீயும்; ஸத்யம்—உண்மை; ப்ரபாஷஸே—பேசுகிறாய்; ததாமி—நான் கொடுப்பேன்; தே—உனக்கு; மந்த்ர-த்ருச:—மந்திர வித்தையை அறிந்துள்ள; ஞானம்—அறிவு; ப்ரஹ்ம—உன்னதமான; ஸனாதனம்—நித்தியமான.
சிவபெருமான் கூறினார்: உன் தந்தை கூறியதெல்லாம் உண்மைதான். நீயும் அதே உண்மையைத்தான் பேசுகிறாய். எனவே, வேத மந்திரங்களை அறிந்துள்ள நான் உனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறேன்.
பதம் 9.4.11
க்ருஹாண த்ரவிணம் தத்தம் மத்-ஸத்ர-பரிசேஷிதம்
இதி உக்த்வாந்தர்ஹிதோ ருத்ரோ பகவான் தர்ம-வத்ஸல:
க்ருஹான—தயவுசெய்து இப்பொழுது எடுத்துக்கொள்; த்ரவிணம்—எல்லாச் செல்வங்களையும்; தத்தம்—(நான் உனக்கு) கொடுக்கிறேன்; மத்-ஸத்ர-பரிசேஷிதம்—என் சார்பாக செய்யப்பட்ட யாகத்தில் எஞ்சியிருப்பதை; இதி உக்த்வா—இப்படி பேசியபின்; அந்தர்ஹித:—மறைந்தார்; ருத்ர:—சிவபெருமான்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த தேவரான; தர்ம-வத்ஸல:—சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றும்.
சிவபெருமான் கூறினார், “யாகத்தில் எஞ்சியுள்ள எல்லாச் செல்வங்களையும் நான் உனக்களிப்பதால், இப்பொழுது அவற்றை நீ எடுத்துக் கொள்ளலாம்.” இவ்வாறு கூறியபின், சமயக் கொள்கைகளை நன்கு அனுஷ்டிப்பவரான சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார்.
பதம் 9.4.12
ய ஏதத் ஸம்ஸ்மரேத் ப்ராத: ஸாயம் ச ஸுஸமாஹித:
கவிர் பவதி மந்த்ர-ஜ்ஞோ கதிம் சைவ ததாத்மன:
ய—யாரொருவர்; ஏதத்—இச்சம்பவத்தைப் பற்றி; ஸம்ஸ்மரேத்—நினைக்கிறாரோ; ப்ராத:—காலையில்; சாயம் ச—மாலையிலும்; ஸுஸமாஹித:—கவனத்துடன்; கவி:—கல்விமான்; பவதி—ஆவார்; மந்த்ர-ஜ்ஞ:—வேத மந்திரங்களை நன்கு அறிந்தவராக; கதிம்—கதி; ச—கூட; ஏவ—உண்மையில்; ததா ஆத்மன—தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களைப் போல்.
இக்கதையைக் காலையிலும், மாலையிலும் மிகவும் கவனத்துடன் கேட்பவர், சொல்பவர் அல்லது நினைப்பவர், நிச்சயமாக கற்றறிந்தவராகவும், வேத மந்திரங்களை அறிவதில் அனுபவமுள்ளவராகவும், தன்னுணர்வில் கைதேர்ந்தவராகவும் ஆவர்.
பதம் 9.4.13
நாபாகாத் அம்பரீஷோ ‘பூன் மஹா-பாகவத: க்ருதீ
நஸ்ப்ருசத் ப்ரஹ்ம-சாபோ ‘பி யம் ந ப்ரதிஹத: க்வசித்
நாபாகாத்—நாபாகனிலிருந்து; அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜன்; அபூத்—பிறந்தார்; மஹா-பாகவத:—மிகச் சிறந்த பக்தரான; க்ருதீ—பெரும் புகழ்பெற்ற; ந அஸ்ப்ருசத்—தொட முடியவில்லை; ப்ரஹ்ம-சாப: அபி—ஒரு பிராமணரின் சாபம் கூட; யம்—யாரிடம் (அம்பரீஷ மகாராஜனிடம்); ந—இல்லை; ப்ரதிஹத:—பலிக்கவில்லை; க்வசித்—எச்சமயத்திலும்.
நாபாகனிலிருந்து அம்பரீஷ மகாராஜன் பிறந்தார். மிகச்சிறந்த பக்தரான அவர், அவரது புண்ணியச் செயல்களினால் புகழ் பெற்று விளங்கினார். என்றும் தவறாத வாக்குடைய ஒரு பிராமணரால் அவர் சபிக்கப்பட்ட போதிலும், அச்சாபத்தால் அவரைத் தொடக்கூட முடியவில்லை.
பதம் 9.4.14
ஸ்ரீ-ராஜோவாச
பகவான் ச்ரோதும் இச்சாமி ராஜர்ஷேஸ் தஸ்ய தீமத:
ந ப்ரபூத் யத்ர நிர்முக்தோ ப்ரஹ்ம-தண்டோ துரத்யய:
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; பகவன்—சிறந்த பிராமணரே; ஸ்ரோதும் இச்சாமி—(தங்களிடமிருந்து) நான் கேட்க ஆசைப்படுகிறேன்; ராஜர்ஷே:—சிறந்த அரசரான அம்பரீஷரின்; தஸ்ய—அவரின்; தீமத:—மிகச்சிறந்த சாந்த சொரூபியான; ந—இல்லை; ப்ராபூத்—செயற்பட இயலும்; யத்ர—யாரிடம் (அம்பரீஷ மகாராஜனிடம்); நிர்முக்த:—விடுவிக்கப்பட்டு; ப்ரஹ்ம-தண்ட:—பிராமணரின் சாபம்; துரத்யய:—வெல்ல முடியாததான.
பரீட்சித்து மகாராஜன் வினவினார்: சிறந்த புண்ணிய புருஷரே, அம்பரீஷ மகாராஜன் ஒழுக்கசீலரும், புகழுக்குரியவருமாவார் என்பதில் சந்தேகமில்லை. அவரைப் பற்றி கேட்க நான் ஆசைப்படுகிறேன். என்ன ஆச்சரியம், வெல்ல முடியாததான பிராமண சாபத்தால் கூட அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே!
பதங்கள் 9.4.15- 9.4.16
ஸ்ரீ-சுக உவாச
அம்பரீஷோ மஹா-பாக: ஸப்த-த்வீபவதீம் மஹீம்
அவ்யயாம் ச ஸ்ரியம் லப்த்வா விபவம் சாதுலம் புவி
மேனே ‘தி துர்லபம் பும்ஸாம் ஸர்வம் தத் ஸ்வப்ன-ஸம்ஸ்துதம்
வித்வான் விபவ-நிர்வாணம் தமோ விசதி யத் புமான்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜன்; மஹா-பாக:—மகா பாக்கியசாலியான அரசர்; ஸப்த-த்வீப-வதீம்—ஏழு தீவுகளைக் கொண்ட; மஹீம்—முழு உலகமும்; அவ்யயம் ச—மற்றும் குறையாத; ஸ்ரியம்—அழகு; லப்த்வா—அடைந்த பின்; விபவம் ச—மற்றும் செல்வங்கள்; அதுலம்—எல்லையற்ற; புவி—இப்புவியில்; மேனே—அவர் முடிவு செய்தார்; அதி-துர்லபம்—மிகவும் அரிதாக அடையப்படுவது; பும்ஸாம்—பலருடைய; ஸர்வம்—(அவர் அடைந்துள்ள) அனைத்தும்; தத்—அது; ஸ்வப்ன-ஸம்ஸ்துதம்—கனவில் கண்டதைப் போல்; வித்வான்—முற்றிலும் அறிந்து; விபவ-நிர்வாணம்—அச்செல்வத்தின் அழிவு; தம:—அறியாமையில்; விசதி—விழுந்துவிடும்; யத்—எதன் காரணத்தால்; புமான்—ஒருவன்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மகா பாக்கியசாலியான அம்பரீஷ மகாராஜன், பூமியில் வற்றாததும், எல்லையற்றதும், செழிப்புடையதுமான, ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலக ஆட்சியையும் பெற்றிருந்தார். இத்தகைய ஒரு நிலையை அடைவது மிகவும் அரிது. இருப்பினும் அம்பரீஷ மகாராஜன் அதில் சிறிதும் சிரத்தை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் இத்தகைய செல்வம் பெளதிகமானது என்பதையும், கனவில் காணப்படும் பொருளைப் போல் இத்தகைய செல்வம் முடிவில் அழிந்துவிடும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இத்தகைய ஐசுவரியத்தை அடையும் பக்தரல்லாத ஒருவன் தமோ குணத்தில் ஆழ்ந்துவிடுகிறான் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
பதம் 9.4.17
வாஸுதேவே பகவதி தத்-பக்தேஷு ச ஸாதுஷு
ப்ராப்தோ பாவம் பரம் விஸ்வம் யேனேதம் லோஷ்ட்ரவத் ஸ்ம்ருதம்
வாஸுதேவே—எங்கும் நிறைந்துள்ள பரமபுருஷரிடம்; பகவதி—பரமபுருஷ பகவானிடம்; தத்-பக்தேஷு—அவரது பக்தர்களிடம்; ச—கூட; ஸாதுஷு—சாதுக்களிடம்; ப்ராப்த:—அடைந்தவர்; பாவம்—பய பக்தியை; பரம்—உன்னதமான; விஸ்வம்—ஜட பிரபஞ்சம் முழுவதுமே; யேன—எதனால் (ஆன்மீக உணர்வினால்); இதம்—இது; லோஷ்ட்ர-வத்—ஒரு மண் கட்டியைப் போல் அற்பமானதாக; ஸ்ம்ருதம்—(அத்தகைய பக்தர்களால்) ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பரமபுருஷரான வாசுதேவனிடத்திலும், பகவத் பக்தர்களான சாதுக்களிடத்திலும் அம்பரீஷ மகாராஜன் சிறந்த பக்தி கொண்டிருந்தார். இந்த பக்தியினால், பிரபஞ்சம் முழுவதையும் ஒரு மண் கட்டியைப் போல் அற்பமானதாகவே அவர் எண்ணினார்.
பதங்கள் 9.4.18 – 9.4.20
ஸ வை மன: கிருஷ்ண-பதாரவிந்தயோர்
வாசாம்ஸி வைகுண்ட குணானுவர்ணனே
கரௌ ஹரேர் மந்திர-மார்ஜனாதிஷு
ஸ்ருதிம் சகாராச்யுத-ஸத்-கதோதயே
முகுந்த-லிங்காலய-தர்சனே த்ருசௌ
தத்-ப்ருத்ய-காத்ர-ஸ்பர்சே’ங்க ஸங்கமம்
க்ராணம் ச தத்-பாத-ஸரோஜ-சௌரபே
ஸ்ரீமத்-துளஸ்யா ரஸனாம் தத்-அர்பிதே
பாதெள ஹரே: க்ஷேத்ர-பதானுஸர்பனே
சிரோ ஹ்ரிஷீகேச-பதாபிவந்தனே
காமம் ச தாஸ்யே ந து காம காம்ய்யா யதோத்தமஸ்லோக-ஜனாஸ்ரயா ரதி:
ஸ:—அவர் (அம்பரீஷ மகாராஜன்); வை—உண்மையில்; மன:—அவரது மனதை; க்ருஷ்ண-பத-அரவிந்தயோ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இரு தாமரைப் பாதங்களில் (பதித்தார்); வாசாம்ஸி—அவரது சொற்களை; வைகுண்ட-குண-அனுவர்ணனே—கிருஷ்ணரின் பெருமைகளை விவரித்து; கரெள—அவரது இரு கரங்களை; ஹரே: மந்திர-மார்ஜனாதிஷு—பரமபுருஷரான ஹரியின் ஆலயத்தை சுத்தம் செய்வதைப் போன்ற செயல்களில்; ஸ்ருதிம்—அவரது செவியை; சகார—ஈடுபடுத்தினார்; அச்யுத—இழிவற்றவரான கிருஷ்ணரின் அல்லது கிருஷ்ணரைப் பற்றி; ஸத்-கதா-உதயே—திவ்யமான கதைகளைக் கேட்பதில்; முகுந்த-லிங்க-ஆலய-தர்சனே—முகுந்தனின் விக்கிரகத்தையும், ஆலயங்களையும், புனித ஸ்தலங்களையும் காண்பதில்; த்ருசௌ—அவரது இரு கண்களை; தத்-ப்ருத்ய—கிருஷ்ணரது தொண்டர்களின்; காத்ர-ஸ்பர்சே—உடல்களைத் தொடுவதிலும்; அங்க-ஸங்கமம்—அவரது தேகத்தின் தொடர்பு; க்ராணம் ச—மற்றும் அவரது முகரும் புலனை; தத்-பாத—அவரது தாமரைப் பாதங்களை; ஸரோஜ—தாமரை மலரின்; ஸௌரபே—வாசனையை (முகருவதில்); ஸ்ரீமத்-துளஸ்யா:—துளசி இலைகளின்; ரஸனாம்—அவரது நாக்கை; தத்-அர்பிதே—பகவானுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தில்; பாதெள—அவரது இரு கால்களை; ஹரே:—பரமபுருஷரின்; க்ஷேத்ர—ஆலயத்தை அல்லது பிருந்தாவனம் மற்றும் துவாரகையைப் போன்ற புனிதமான இடங்களை; பத-அனுஸர்பணே—அந்த இடங்களுக்கு நடப்பதில்; சிர:—தலையை; ஹ்ரிஷீகேச—புலன்களின் எஜமானரான கிருஷ்ணரின்; பத-அபிவந்தனே—பத்ம பாதங்களை வணங்குவதில்; காமம் ச—மற்றும் அவரது ஆசைகள்; தாஸ்யே—ஒரு தொண்டனாக ஈடுபட்டிருப்பதில்; ந—இல்லை; து—உண்மையில்; காம-காம்யயா—புலனின்ப ஆசையுடன்; யதா—போல்; உத்தமஸ்லோக ஜன-ஆஸ்ரயா—பிரகலாதரைப் போன்ற ஒரு பக்தரை ஒருவர் தஞ்சமடைந்தால்; ரதி:—பற்று.
அம்பரீஷ மகாராஜன் எப்பொழுதும் தன் மனதைக் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை தியானிப்பதிலும், வார்த்தைகளை பகவானின் பெருமைகளை விவரிப்பதிலும், கரங்களை பகவானின் ஆலயத்தைச் சுத்தம் செய்வதிலும், மற்றும் செவிகளை கிருஷ்ணரைப் பற்றி அல்லது கிருஷ்ணரால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதிலும் ஈடுபடுத்தினார். அவர் தன் கண்களை, கிருஷ்ணரின் விக்கிரகத்தையும், ஆலயங்களையும் மற்றும் பிருந்தாவனம், மதுரா போன்ற இடங்களையும் காண்பதில் ஈடுபடுத்தினார். அவர் தன் ஸ்பரிச உணர்வை பகவத் பக்தர்களின் உடல்களைத் தொடுவதிலும், முகரும் புலனை பகவானுக்கு நிவேதம் செய்யப்பட்ட துளசியின் நறுமணத்தை முகர்வதிலும், மற்றும் நாக்கை பகவானின் பிரசாதத்தைச் சுவைப்பதிலும் ஈடுபடுத்தினார். தன் கால்களைப் புண்ணிய ஸ்தலங்களுக்கும், பகவானின் ஆலயங்களுக்குச் செல்வதிலும், தலையை பகவான் முன் வணங்குவதிலும் மற்றும் தன் விருப்பங்களை எல்லாம் பகவானுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தொண்டு செய்வதிலும் ஈடுபடுத்தினார். உண்மையில், அம்பரீஷ மகாராஜன் தன் புலன் நுகர்வுக்காக எதையுமே விரும்பியதில்லை. அவர் தனது புலன்களை எல்லாம் பகவானுக்குச் சம்பந்தப்பட்ட பல்வேறு பக்தித் தொண்டுகளில் ஈடுபடுத்தினார். பகவானிடமுள்ள பற்றை அதிகரிப்பதற்கும், பெளதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதற்கும் இதுதான் வழி.
பதம் 9.4.21
ஏவம் ஸதா கர்ம-கலாபம் ஆத்மன:
பரே ‘தியக்ஞே பகவதி அதோக்ஷஜே
ஸர்வாத்ம-பாவம் விததன் மஹீம் இமாம்
தன்-நிஷ்ட-விப்ராபிஹித: சசாஸ ஹ
ஏவம்—இவ்வாறு (பக்தி வாழ்வை மேற்கொண்டு); ஸதா—எப்பொழுதும்; கர்ம-கலாபம்—ஒரு க்ஷத்திரிய அரசருக்குரிய வர்ணாஸ்ரமக் கடமைகள்; ஆத்மன:—தானே தனது (அரசரின்); பரே—பரமபுருஷருக்கு; அதியக்ஞே—பரம அனுபவிப்பாளரும், உரிமையாளருமான; பகவதி—பரமபுருஷருக்கு; அதோக்ஷஜே—பெளதிக புலனறிவிற்கு அப்பாற்பட்டவருக்கு; ஸர்வ-ஆத்ம-பாவம்—பல வகைப்பட்ட பக்தித் தொண்டை; விததத்—நிறைவேற்றி, அளித்து; மஹீம்—பூமி; இமாம்—இந்த; தத்-நிஷ்ட—பகவானிடம் விசுவாசமுள்ள பக்தர்களான; விப்ர—அத்தகைய பிராமணர்களால்; அபிஹித:—வழிகாட்டப்பட்டு; சசாஸ—ஆண்டார்; ஹ—முன்பு.
அம்பரீஷ மகாராஜன் தமது அரச கடமைகளின் பயன்கள் அனைத்தையும், பௌதிக புலன்களால் அறியப்பட முடியாதவரும், பரம புருஷருமான ஸ்ரீ கிருஷ்ணருக்கே எப்பொழுதும் அர்ப்பணித்து வந்தார். அவர் பகவானிடம் விசுவாசம் கொண்ட பக்தர்களான பிராமணர்களின் அறிவுரையை ஏற்று, சிரமமின்றி உலகை ஆண்டு வந்தார்.
பதம் 9.4.22
ஈஜே ‘ஸ்வமேதைர் அதியக்ஞம் ஈஸ்வரம்
மஹா-விபூத்யோபசிதாங்க-தக்ஷிணை:
ததைர் வஸிஷ்டாஸித-கௌதமாதிபிர்
தன்வனி அபிஸ்ரோதம் அஸௌ ஸரஸ்வதீம்
ஈஜே—வழிபட்டார்; அஸ்வமேதை:—அஸ்வமேத யாகம் செய்து; அதியக்ஞம்—யாகபதியை திருப்திப்படுத்த; ஈஸ்வரம்—பரமபுருஷரை; மஹா-விபூத்யா—பெரும் ஐசுவரியத்துடன்; உபசித-அங்க-தக்ஷிணை:—தேவையான எல்லாப்பொருட்களுடனும், பிராமணதட்சிணைகளுடனும்; ததை:—நிறைவேற்றினார்; வஸிஷ்ட-அஸித-கௌதம-ஆதிபி:—வசிஷ்டர், அசிதர் மற்றும் கௌதமரைப் போன்ற பிராமணர்களால்; தன்வனி—பாலைவனத்தில்; அபிஸ்ரோதம்—நதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட; அஸௌ—அம்பரீஷ மகாராஜன்; ஸரஸ்வதீம்—சரஸ்வதி நதிக்கரையில்
சரஸ்வதி நதி ஓடிய பாலைவன நாடுகளில், அம்பரீஷ மகாராஜன் அஸ்வமேத யாகத்தைப் போன்ற பெரும் யாகங்களைச் செய்து, யாகங்களுக்கெல்லாம் எஜமானரான பரமபுருஷரை திருப்திப்படுத்தினார். அத்தகைய யாகங்கள் செல்வச் சிறப்புடனும், தகுந்த உபகரணங்களுடனும் இயற்றப்பட்டன. மேலும் யாகத்தை இயற்றிய அரசரைப் பிரதிநிதித்த மாமுனிவர்களான வசிஷ்டர், அசிதர் மற்றும் கௌதமரைப் போன்றவர்களின் மேற்பார்வையில் செயற்பட்ட பிராமணர்களுக்கும் சன்மானங்கள் அளிக்கப்பட்டன.
பதம் 9.4.23
யஸ்ய க்ரதுஷு கீர்வாணை: ஸதஸ்யா ரித்விஜோ ஜனா:
துல்ய-ரூபாஸ் சானிமிஷா வ்யத்ருஸ்யந்த ஸுவாஸய:
யஸ்ய—யாருடைய (அம்பரீஷ மகாராஜனுடைய); க்ரதுஷு—(அவரால் இயற்றப்பட்ட) யாகங்களில்; கீர்வாணை:—தேவர்களுடன்; ஸதஸ்யா:—யாகமியற்றும் அங்கத்தினர்கள்; ரித்விஜ:—புரோகிதர்கள்; ஜனா:—மற்றும் பிற நிபுணர்களும்; துல்ய-ரூபா:—அதேபோன்று தோன்றும்; ச—மேலும்; அனிமிஷா:—தேவர்களுடையதைப் போன்ற சிமிட்டாத கண்களுடன்; வ்யத்ருஸ்யந்த—காணப்பட்டு; ஸு-வாஸய:—விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து.
அம்பரீஷ மகாராஜனால் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்தில், அவை உறுப்பினர்களும், புரோகிதர்களும் (குறிப்பாக ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா மற்றும் அத்வர்யு ஆகியோர்) பகட்டாக உடையணிந்து, தேவர்களைப் போலவே காணப்பட்டனர். அவர்கள் யாகத்தை முறையாக நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.
பதம் 9.4.24
ஸ்வர்கோ ந ப்ரார்திதோ யஸ்ய மனுஜைர் அமர-ப்ரிய:
ஸ்ருண்வத்பிர் உபகாயத்பிர் உத்தமஸ்லோக-சேஷ்டிதம்
ஸ்வர்க:—சுவர்க்க வாழ்வு; ந—இல்லை; ப்ரார்தித:—விரும்பத்தக்க ஒரு விஷயம்; யஸ்ய—யாருடைய (அம்பரீஷ மகாராஜனுடைய); மனுஜை:—பிரஜைகளால்; அமர-ப்ரிய:—தேவர்களுக்கும் மிகப்பிரியமான; ஸ்ருண்வத்பி:—கேட்கப் பழகியவர்கள்; உபகாயத்பி:—மற்றும் பாடிப் பழக்கப்பட்டவர்கள்; உத்தமஸ்லோக—பரமபுருஷரின்; சேஷ்டிதம்—புகழுக்குரிய செயல்களைப்பற்றி.
அம்பரீஷ மகாராஜனின் இராஜ்யத்தைச் சேர்ந்த பிரஜைகள், பரமபுருஷரின் புகழுக்குரிய செயல்களைப் பற்றி கேட்பதிலும், பேசுவதிலும் பழக்கப்பட்டிருந்தனர். இதனால், தேவர்களுக்கும் மிகப்பிரியமான சுவர்க்கலோகங்களுக்கு உயர்த்தப்படுவதைக் கூட அவர்கள் விரும்பவில்லை.
பதம் 9.4.25
ஸம்வர்தயந்தி யத் காமா: ஸ்வாராஜ்ய-பரிபாவிதா:
துர்லபா நாபி ஸித்தானாம் முகுந்தம் ஹ்ருதி பஸ்யத:
ஸம்வர்தயந்தி—அதிகரிக்கும் மகிழ்ச்சி; யத்—ஏனெனில்; காமா:—அத்தகைய விருப்பங்கள்; ஸ்வா-ராஜ்ய—பகவானுக்குத் தொண்டு செய்வதெனும் தனது சுய நிலையில் நிலைபெற்றுள்ள; பரிபாவிதா:—இத்தகைய விருப்பங்களில் ஊறிய; துர்லபா:—மிகவும் அரிதாக அடையப்படும்; ந—இல்லை; அபி—கூட; ஸித்தானாம்—பெரும் யோகிகளின்; முகுந்தம்—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரை; ஹ்ருதி—இதயத்தில்; பஸ்யத:—எப்பொழுதும் காண்பதில் பழக்கப்பட்டவர்கள்.
பரமபுருஷருக்குத் தொண்டு செய்யும் உன்னத ஆனந்தத்தில் மூழ்கியவர்கள், பெரும் யோகிகளால் அடையப்படும் சித்திகளைக் கூட விரும்புவதில்லை. ஏனெனில், எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றியே இதயத்தில் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பக்தரால் உணரப்படும் உன்னத ஆனந்தத்தை, இத்தகைய சித்திகள் அதிகரிப்பதில்லை.
பதம் 9.4.26
ஸ இத்தம் பக்தி-யோகேன தபோ-யுக்தேன பார்திவ:
ஸ்வ-தர்மேண ஹரிம் ப்ரீணன் ஸர்வான் காமான் சனைர் ஜஹௌ
ஸ:—அவர் (அம்பரீஷ மகாராஜன்); இத்தம்—இவ்வாறு; பக்தி-யோகேன—பக்தித் தொண்டினால்; தப:-யுக்தேன—அதே சமயம் சிறந்த தவ முறையுமாகும்; பார்திவ:—அரசர்; ஸ்வ-தர்மேண—அவரது சுய தர்மச் செயல்களினால்; ஹரிம்—பரமபுருஷரை; ப்ரீணன்—திருப்திப்படுத்தி; ஸர்வான்—எல்லா வகையான; காமான்—பெளதிக ஆசைகளையும்; சனை:—படிப்படியாக; ஜஹௌ—கைவிட்டார்.
இவ்வுலகின் பேரரசரான அம்பரீஷ மகாராஜன் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு, கடுந்தவத்தை மேற்கொண்டார். தன் சுய தர்ம அனுஷ்டானங்களால் பரமபுருஷ பகவானை எப்பொழுதும் திருப்திப்படுத்திய அவர், படிப்படியாக எல்லா பெளதிக ஆசைகளையும் விட்டுவிட்டார்.
பதம் 9.4.27
க்ருஹேஷு தாரேஷு ஸுதேஷீ பந்துஷு
த்விபோத்தம-ஸ்யந்தன-வாஜி வஸ்துஷு
அக்ஷய்ய-ரத்னாபரணாம்பராதிஷு
அனந்த-கோசேஷு அகரோத் அஸன்-மதிம்
க்ருஹேஷு—வீடுகளில்; தாரேஷு—மனைவிகளில்; ஸுதேஷு—குழந்தைகளில்; பந்துஷு—நண்பர்கள் மற்றும் உறவினர்களில்; த்விப-உத்தம—சக்திவாய்ந்த சிறந்த யானைகளில்; ஸ்யந்தன—சிறந்த இரதங்களில்; வாஜி—முதல்தர குதிரைகளில்; வஸ்துஷு—இத்தகைய எல்லாப் பொருட்களிலும்; அக்ஷய்ய—மதிப்புக் குறையாத; ரத்ன—இரத்தினங்களில்; ஆபரண—ஆபரணங்களில்; அம்பர-ஆதிஷு—இத்தகைய ஆடை அணிகலன்களில்; அனந்த-கோசேஷு—வற்றாத ஒரு பொக்கிஷத்தில்; அகரோத்—ஏற்றார்; அஸத்-மதிம்—பற்றின்மையை.
அம்பரீஷ மகாராஜன் மனைவிகள், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற எல்லா குடும்பப் பற்றுகளையும் துறந்தார். சக்தி மிக்க சிறந்த யானைகள், இரதங்கள், குதிரைகள், குறையாத இரத்தினங்கள், ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் குறையாத பொக்கிஷம் ஆகியவற்றில் வைத்திருந்த பற்றுகளையும் அவர் கைவிட்டார். அவையனைத்தும் நிலையற்ற, பெளதிகமானவை என்றெண்ணி அவற்றில் தமக்கிருந்த எல்லாப் பற்றுகளையும் அவர் கைவிட்டார்.
பதம் 9.4.28
தஸ்மா அதாத் தரிஸ் சக்ரம் ப்ரத்யனீக-பயாவஹம்
ஏகாந்த-பக்தி-பாவேன ப்ரீதோ பக்தாபிரக்ஷணம்
தஸ்மை—அவருக்கு (அம்பரீஷ மகாராஜனுக்கு); அதாத்—கொடுத்தார்; ஹரி:—பரமபுருஷர்; சக்ரம்—அவரது சக்கரத்தை; ப்ரத்யனீக-பய-அவஹம்—பகவானின் பகைவர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் பெரும் அச்சத்தை உண்டாக்கக்கூடிய பகவானின் சக்கரம்; ஏகாந்த-பக்தி-பாவேன—தூய பக்தித் தொண்டை அவர் செய்ததால்; ப்ரீத:—மிகவும் திருப்தியடைந்த பகவான்; பக்த-அபிரக்ஷணம்—அவரது பக்தர்களின் பாதுகாப்பிற்காக.
அம்பரீஷ மகாராஜனின் தூய பக்தியில் மிகவும் திருப்தியடைந்த பரமபுருஷர், அரசருக்குத் தமது சக்கரத்தைத் தந்தருளினார். பகைவர்களை பீதியடையச் செய்யும் அச்சக்கரம் பக்தர்களை எப்பொழுதும் எதிரிகளிடமிருந்தும், துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறது.
பதம் 9.4.29
ஆரிராதயிஷு: க்ருஷ்ணம் மஹிஷ்யா துல்ய-சீலயா
யுக்த: ஸாம்வத்ஸரம் வீரோ ததார த்வாதசீ-வ்ரதம்
ஆரிராதயிஷு:—வழிபட விரும்பிய; க்ருஷ்ணம்—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரை; மஹிஷ்யா—அவரது ராணியுடன்; துஸ்ய-சீலயா—அம்பரீஷ மகாராஜனுக்கு இணையான தகுதி பெற்றிருந்த; யுக்த:—ஒன்றாக; ஸாம்வத்ஸரம்—ஒரு வருஷம்; வீர:—அரசர்; ததார—ஏற்றார்; த்வாதசீ-வ்ரதம்—ஏகாதசி மற்றும் துவாதசியை அனுஷ்டிக்கும் விரதத்தை.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய அம்பரீஷ மகாராஜன், தமக்கு இணையான தகுதியைப் பெற்றிருந்த தமது ராணியுடன் ஒரு வருஷம் ஏகாதசி, துவாதசி விரதத்தை அனுஷ்டித்தார்.
பதம் 9.4.30
வ்ராந்தே கார்திகே மாஸி த்ரி-ராத்ரம் ஸமுபோஷித:
ஸ்னாத: கதாசித் காலிந்யாம் ஹரிம் மதுவனே ‘ர்சயத்
வ்ரத-அந்தே—விரத முடிவில்; கார்த்திகே—கார்த்திகை (அக்டோபர்-நவம்பர்) மாதத்தில்; மாஸி—அந்த மாதத்தில்; த்ரி-ராத்ரம்—மூன்று இரவுகள்; ஸமுபோஷித:—விரதத்தை நிறைவேற்றிய பின்; ஸ்னாத:—குளித்த பின்; கதாசித்—ஒரு சமயம்; காலிந்யாம்—யமுனைக் கரையில்; ஹரிம்—பரமபுருஷரான ஹரியை; மதுவனே—பிருந்தாவனத்தில் மதுவனம் என்ற அப்பகுதியில்; அர்சயத்—பகவானை வழிபட்டார்.
ஒரு வருஷம் அவ்விரதத்தை அனுஷ்டித்தபின், கார்த்திகை மாதத்தில், மூன்று இரவுகள் உபவாசம் இருந்து, யமுனையில் குளித்தபின் அம்பரீஷ மகாராஜன், பரமபுருஷரான ஹரியை மதுவனத்தில் வழிபட்டார்.
பதங்கள் 9.4.31 – 9.4.32
மஹாபிஷேக-விதினா ஸர்வோபஸ்கர-ஸம்பதா
அபிஷிச்யாம்பராகல்பைர் கந்த-மால்யார்ஹணாதிபி:
தத்-கதாந்தர-பாவேன பூஜயாம் ஆஸ கேசவம்
ப்ராஹ்மணாம்ஸ் ச மஹா-பாகான் ஸித்தார்தான் அபி பக்தித:
மஹா-அபிஷேக-விதினா—விக்கிரக அபிஷேகத்திற்குரிய முறைப்படி; ஸர்வ-உபஸ்கர-ஸம்பதா—விக்கிரக ஆராதனைக்குரிய எல்லா பொருட்களாலும்; அபிஷிச்ய—அபிஷேகம் செய்தபின்; அம்பர-ஆகல்பை:—சிறந்த ஆடை அணிகலன்களுடனும்; கந்த-மால்ய—நறுமணமுள்ள மலர் மாலைகளுடன்; அர்ஹண-ஆதிபி:—விக்கிரக ஆராதணைக்குரிய மற்ற பொருட்களுடனும்; தத்-கத-அந்தர-பாவேன—பக்திப்பரவசமான மனநிலையுடன்; பூஜயாம் ஆஸ—அவர் பூஜித்தார்; கேசவம்—கிருஷ்ணரை; ப்ரஹ்மணான் ச—மற்றும் பிராமணர்களையும்; மஹா-பாகான்—பெரும் பாக்கியசாலிகளான; ஸித்த-அர்தான்—எத்தகைய வழிபாட்டிற்கும் காத்திராத சுயதிருப்தியுடைய; அபி—கூட; பக்தித:—மிகவும் பக்தியுடன்.
மகாபிஷேகத்திற்குரிய விதிகளைப் பின்பற்றிய அம்பரீஷ மகாராஜன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு, எல்லாப் பொருட்களாலும் அபிஷேகம் செய்தார். பிறகு ஆடை அணிகலன்களாலும், நறுமணமுள்ள மலர் மாலைகளாலும், பிற பொருட்களாலும் பகவானைப் பூஜித்தார். கிருஷ்ணரையும், பௌதிக ஆசைகளிலிருந்து விடுபட்ட மகாபாக்கியசாலிகளான பிராமணர்களையும் அவர் வழிபட்டார்.
பதங்கள் 9.4.33 – 9.4.35
கவாம் ருக்ம-விஷாணீனாம் ருப்யாங்ரீணாம் ஸுவாஸஸாம்
பயஹ்சீல-வயோ-ரூப-வத்ஸோபஸ்கர ஸம்பதாம்
ப்ராஹிணோத் ஸாது-விப்ரேப்யோ க்ருஹேஷு ஞர்புதானி ஷட்
போஜயித்வா த்விஜான் அக்ரே ஸ்வாது அன்னம் குணவத்தமம்
லப்த-காமைர் அனுக்ஞாத: பாரணாயோபசக்ரமே
தஸ்ய தர்ஹி அதிதி: ஸாக்ஷாத் துர்வாஸா பகவான் அபூத்
கவாம்—பசுக்களை; ருக்ம-விஷாணீனாம்—கொம்புகள் தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருந்த; ரூப்ய-அங்ரீணாம்—குளம்புகள் வெள்ளித் தகடுகளால் மூடப்பட்டிருந்த; ஸு-வாஸஸாம்—துணிமணிகளால் நன்கு அலங்கரிக்கப்பட்ட; பய:-சீல—பால் நிரம்பிய மடிகளுடன்; வய:—இளமையான; ரூப—அழகிய; வத்ஸ-உபஸ்கர-ஸம்பதாம்—அழகிய கன்றுகளுடன்; ப்ராஹிணோத்—தானம் கொடுத்தார்; ஸாது-விப்ரேப்ய:—பிராமணர்களுக்கும், சாதுக்களுக்கும்; க்ருஹேஷு—வீட்டிற்கு வந்த; ஞர்புதானி—பத்து கோடி; ஷட்—ஆறு மடங்குகள்; போஜயித்வா—அவர்களுக்கு உணவளித்து; த்விஜான் அக்ரே—முதலில் பிராமணர்களுக்கு; ஸ்வாது-அன்னம்—அறுசுவை உணவுவகைகளை; குணவத்-தமம்—மிகவும் சுவையுள்ள; லப்த-காமை:—மிகவும் திருப்தியடைந்த அந்த பிராமணர்களால்; அனுக்ஞாத:—அவர்களது அனுமதியுடன்; பாரணாய—துவாதசியைப் பூர்த்தி செய்ய; உபசக்ரமே—கடைசிச் சடங்கை நிறைவேற்றும் தறுவாயில் இருந்த; தஸ்ய—அவரின் (அம்பரீஷரின்); தர்ஹி—உடனடியாக; அதிதி:—விரும்பத்தகாத அல்லது அழையா விருந்தாளி; ஸாக்ஷாத்—நேரடியாக; துர்வாஸா:—மகா யோகியான துர்வாசர்; பகவான்—பெரும் சக்திபடைத்த; அபூத்—அதிதியாக அங்கு தோன்றினார்.
பிறகு வீட்டிற்கு வந்திருந்த எல்லா அதிதிகளையும், குறிப்பாக எல்லா பிராமணர்களையும் அம்பரீஷ மகாராஜன் திருப்திப்படுத்தினார். தங்கத்தகடுகளால் மூடப்பட்ட கொம்புகளையும், வெள்ளித் தகடுகளால் மூடப்பட்ட குளம்புகளையும் கொண்ட அறுபது கோடி பசுக்களையும், அவற்றுடன் கன்றுகளையும் அவர் தானம் செய்தார். ஆடைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எல்லாப் பசுக்களும், பால் நிரம்பிய மடிகளைக் கொண்டிருந்தன. அவை சாந்தமும், இளமையும் கொண்டு அழகுடன் விளங்கின. அப்பசுக்களைத் தானம் செய்தபின், அரசர் முதலில் எல்லா பிராமணர்களுக்கும் விருந்தளித்தார். அவர்கள் திருப்தியடைந்ததும், அவர்களுடைய அனுமதியுடன் தமது ஏகாதசி விரதத்தை அவர் முடித்துக்கொள்ளத் தயாரானார். ஆனால் அச்சமயத்தில், சக்திவாய்ந்த மகாயோகியான துர்வாச முனிவர் அழையா விருந்தாளியாக அங்கு தோன்றினார்.
பதம் 9.4.36
தம் ஆனர்சாதிதிம் பூப: ப்ரத்யுத்தானாஸனார்ஹணை:
யயாசே ‘ப்யவஹாராய பாத-மூலம் உபாகத:
தம்—அவரை (துர்வாசரை); ஆனர்ச—வழிபட்டார்; அதிதிம்—அழையா விருந்தாளி என்றாலும்; பூப:—அரசர் (அம்பரீஷர்); ப்ரத்யுத்தான—எழுந்து நின்றும்; ஆஸன—ஆசனமளித்தும்; அர்ஹணை:—மற்றும் வழிபாட்டுப் பொருட்களாலும்; யயாசே—வேண்டிக் கொண்டார்; அப்யவஹாராய—உணவருந்தும்படி; பாத-மூலம்—அவரது பாதங்களில்; உபாகத:—விழுந்து.
துர்வாச முனிவரை வரவேற்பதற்காக எழுந்து நின்ற அம்பரீஷ மகாராஜன், அவருக்கு ஆசனமளித்து, அவரை வழிபட்டார். பிறகு அந்த மாமுனிவரின் காலடியில் அமர்ந்து, உணவருந்தும்படி அரசர் அவரை வேண்டிக் கொண்டார்.
பதம் 9.4.37
ப்ரதினந்ய ஸ தாம் யாச்ஞாம் கர்தும் ஆவஸ்யகம் கத:
நிமமஜ்ஜ-ப்ருஹத் த்யாயன் காலிந்தீ-ஸலிலே கபே
ப்ரதினந்ய—மகிழ்ச்சியுடன் ஏற்ற; ஸ:—துர்வாச முனி; தாம்—அந்த; யாச்ஞாம்—வேண்டுகோளை; கர்தும்—செய்ய; ஆவஸ்யகம்—அவசியமான அனுஷ்டானத்தை; கத:—சென்றார்; நிமமஜ்ஜ—நீரில் மூழ்கினார்; ப்ருஹத்—பரப்பிரம்மனை: த்யாயன்—தியானித்தவாறு; காலிந்தீ—யமுனையின்; ஸலிலே—நீரில்; கபே—மிகவும் மங்களகரமான.
அம்பரீஷ மகாராஜனின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட துர்வாச முனி, அவசியமான அனுஷ்டானத்தை முடித்துவர யமுனை நதிக்குச் சென்றார். அங்கு அவர் அருவ பிரம்மத்தை தியானித்தவாறு மங்களகரமான யமுனை நீரில் மூழ்கினார்.
பதம் 9.4.38
முஹுர்தார்தாவசிஷ்டயாம் த்வாதஸ்யாம் பாரணம் ப்ரதி
சிந்தயாம் ஆஸ தர்ம-க்ஞோ த்விஜைஸ் தத்-தர்ம-ஸங்கடே
முஹுர்த-அர்த-அவசிஷ்டாயாம்—அரை முகூர்த்தம் மட்டுமே எஞ்சியிருந்து; த்வாதஸ்யாம்—துவாதசி தினத்தில்; பாரணம்—விரதத்தை முடித்துக் கொள்ள; ப்ரதி—அனுஷ்டிக்க; சிந்தயாம் ஆஸ—அதைப்பற்றி சிந்திக்கத் துவங்கினார்; தர்ம-க்ஞ:—தர்மமறிந்தவர்; த்விஜை:—பிராமணர்களால்; தத்-தர்ம—அம்மதக் கோட்பாடு சம்பந்தமாக; ஸங்கடே—அத்தகைய ஆபத்தான ஒரு நிலையில்.
இதற்கிடையில், துவாதசி தினத்தில் விரதத்தை முடித்துக் கொள்வதற்கு ஒரு நாழிகை மட்டுமே எஞ்சியிருந்து. இதனால் அவசரமாக விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆபத்தான இச்சூழ்நிலையில், அரசர் பிராமண பண்டிதர்களுடன் கலந்தாலோசித்தார்.
பதங்கள் 9.4.39 – 9.4.40
ப்ராஹ்மனாதிக்ரமே தோஷோ த்வாதஸ்யாம் யத் அபாரணே
யத் க்ருத்வா ஸாது மே பூயாத் அதர்மோ வா ந மாம் ஸ்ப்ருசேத்
அம்பஸா கேவலேநாத கர்ஷ்யே வ்ரத-பாரணம்
ஆஹுர் அப்-பக்ஷணம் விப்ரா ஹி அசிதம் நாசிதம் ச தத்
ப்ராஹ்மண-அதிக்ரமே—பிராமணர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மீறுவதில்; தோஷ:—குற்றம் உள்ளது; த்வாதஸ்யாம்—துவாதசி நாளன்று; யத்—ஏனெனில்; அபாரணே—தகுந்த நேரத்தில் விரதத்தை முடிக்கத் தவறுவதில்; யத் க்ருத்வா—எதைச் செய்தபின்; ஸாது—மங்களகரமானது; மே—எனக்கு; பூயாத்—ஆகிவிடுமே; அதர்ம:—அதர்மமானது; வா—எது; ந—இல்லை; மாம்—எனக்கு; ஸ்ப்ருசேத்—தொடலாம்; அம்பஸா—நீரை; கேவலேன—மட்டுமே; அத—எனவே; கரிஷ்யே—நான் நிறைவேற்றப் போகிறேன்; வ்ரத-பாரணம்—விரதத்தின் பூர்த்தி; ஆஹு:—கூறினார்; அப்-பக்ஷணம்—நீரைக் குடிப்பது; விப்ரா:—பிராமணர்களே; ஹி—உண்மையில்; அசிதம்—உண்பதாகும்; ந அசிதம் ச—உண்ணாததுமாகும்; தத்—அத்தகைய ஒரு செயல்.
அரசர் கூறினார்: “பிராமணர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மீறுவது பெருங்குற்றம். அதேசமயம், துவாதசி தினத்தன்று விரதத்தை முடிக்கவில்லை என்றால் விரதத்தில் குறையுண்டாகும். எனவே, பிராமணர்களே, நீரைப் பருகி என் விரதத்தை நான் முடித்துக் கொள்வது மங்களகரமானதாகவும், தர்மத்தை மீறாததாகவும் இருக்குமானால், அதை நான் செய்து விடுகிறேன்.” அரசர் பிராமணர்களின் கருத்துப்படி, நீரைப் பருகுவது சாப்பிட்டதுமாகும், சாப்பிடாததுமாகும் என்பதால், அவர்களைக் கலந்தாலோசித்தபின் அரசர் இந்த முடிவுக்கு வந்தார்.
பதம் 9.4.41
இதி அப: ப்ராஸ்ய ராஜர்ஷிஸ் சிந்தயன் மனஸாச்யுதம்
ப்ரத்யசஷ்ட குரு-ஸ்ரேஷ்ட த்விஜாகமனம் ஏவ ஸ:
இதி—இவ்வாறாக; அப:—நீரை; ப்ராஸ்ய—பருகியபின்; ராஜர்ஷி:—சிறந்த அரசரான அம்பரீஷர்; சிந்தயன்—தியானித்து; மனஸா—மனதால்; அச்யுதம்—பரமபுருஷரை; ப்ரத்யசஷ்ட—காத்திருக்கத் துவங்கினார்; குரு-ஸ்ரேஷ்ட—குரு அரசர்களில் சிறந்தவரே; த்விஜ-ஆகமனம்—பிராமணரும், மகா யோகியுமான துர்வாச முனிவரின் வரவுக்காக; ஏவ—உண்மையில்; ஸ:—அரசர்.
குரு வம்சத்தில் சிறந்தவரே, அம்பரீஷ மகாராஜன் சிறிது நீரைப் பருகியபின், இதயத்தில் பரமபுருஷரை தியானித்தவாறு, மகாயோகியான துர்வாச முனிவரின் வரவுக்காகக் காத்திருந்தார்.
பதம் 9.4.42
துர்வாஸா யமுனா-கூலாத் க்ருதாவஸ்யக ஆகத:
ராஜ்ஞாபினந்திதஸ் தஸ்ய புபுதே சேஷ்டிதம் தியா
துர்வாஸா:—மகா முனிவர்; யமுனா-கூலாத்—யமுனைக் கரையிலிருந்து; க்ருத—செய்யப்பட்டு; ஆவஸ்யக:—அவசியமான அனுஷ்டானங்களைச் செய்தவர்; ஆகத:—திரும்பினார்; ராஜ்ஞா—அரசரால்; அபினந்தித:—நன்கு வரவேற்கப்பட்டார்; தஸ்ய—அவர்; புபுதே—புரிந்துகொள்ள முடிந்தது; சேஷ்டிதம்—செயலை; தியா—புத்தியால்.
நடுப்பகலில் செய்ய வேண்டிய அனுஷ்டானத்தை நிறைவேற்றிய பின், துர்வாசர் யமுனைக் கரையிலிருந்து திரும்பினார். அரசர் அவரை நன்கு வரவேற்று, எல்லா மரியாதைகளையும் அளித்தார். ஆனால் தன் அனுமதியின்றி அம்பரீஷ மகாராஜன் நீர் பருகியதைத் தன் யோக சக்தியால் துர்வாச முனிவர் அறிந்தார்.
பதம் 9.4.43
மன்யுனா ப்ரசலத்-காத்ரோ ப்ரு-குடீ-குடிலானன:
புபுக்ஷிதஸ் ச ஸுதராம் க்ருதாஞ்சலிம் அபாஷத
மன்யுணா—பெருங்கோபத்தால் அமைதியிழந்து; ப்ரசலத்-காத்ர:—அவரது உடல் நடுங்க; ப்ரு-குடீ—புருவங்களால்; குடில—வளைந்த; ஆனன:—முகம்; புபுக்ஷித: ச—அதேசமயம் பசியுடனும்; ஸுதராம்—மிகவும்; க்ருத-அஞ்சலிம்—கூப்பிய கரங்களுடன் அங்கு நின்றிருந்த அம்பரீஷ மகாராஜனிடம்; அபாஷத—அவர் கூறினார்.
உடல் நடுங்க, கண்ணிமைகள் வளைந்து, முகம் சுளித்து, இன்னமும் பசியோடிருந்த துர்வாச முனிவர், தன்முன் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த அம்பரீஷ மகாராஜனிடம் பின்வருமாறு கோபத்துடன் பேசினார்.
பதம் 9.4.44
அஹோ அஸ்ய ந்ரு-சம்ஸஸ்ய ஸ்ரியோன்மத்தஸ்ய பஸ்யத
தர்ம-வ்யதிக்ரமம் விஷ்ணோர் அபக்தஸ்யேச-மானின:
அஹோ—ஐயகோ; அஸ்ய—இந்த மனிதனின்; ந்ரு-சம்ஸஸ்ய—மிகவும் இரக்கமற்ற; ஸ்ரியா-உன்மத்தஸ்ய—பெரும் ஐசுவரியத்தால் திமிர் பிடித்த; பஸ்யத—எல்லோரும் சற்று பாருங்கள்; தர்ம-வ்யதிக்ரமம்—மதக் கோட்பாடுகளின் அத்துமீறலை; விஷ்ணோ:-அபக்தஸ்ய—பகவான் விஷ்ணுவின் பக்தனல்லாத இவன்; ஈச-மானின:—தன்னையே பரமபுருஷரென்றும், சுதந்திரமானவனென்றும் கருதும்.
ஐயகோ! இரக்கமற்ற இந்த மனிதனின் நடத்தையைச் சற்று கவனியுங்கள்! இவன் ஒரு விஷ்ணு பக்தனல்ல. பௌதிக செல்வத்தாலும், தன் பதவியினாலும் திமிர்பிடித்தவனாகி, தன்னையே இவன் கடவுளென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். மதக் கோட்பாடுகளை எப்படி இவன் அத்துமீறிப் போனான் என்பதைச் சற்று கவனியுங்கள்.
பதம் 9.4.45
யோ மாம் அதிதிம் ஆயாதம் ஆதித்யேன நிமந்த்ரிய ச
அதத்வா புக்தவாம்ஸ் தஸ்ய ஸத்யஸ் தே தர்சயே ஃபலம்
ய:—இந்த மனிதன்; மாம்—என்னை; அதிதிம்—அழையா விருந்தாளியாக; ஆயாதம்—இங்கு வந்த; ஆதித்யேன—ஒரு விருந்தினருக்குரிய வரவேற்புடன்; நிமந்த்ரிய—என்னை வரவேற்றபின்; ச—கூட; அதத்வா—(உணவு) கொடுக்காமல்; புக்தவான்—அவன் முதலில் சாப்பிட்டான்; தஸ்ய—அவனுடைய; ஸத்ய:—உடனடியாக; தே—உனக்கு; தர்சயே—நான் காட்டுகிறேன்; ஃபலம்—பலனை.
அம்பரீஷ மகாராஜனே, அதிதியாக வந்த என்னைச் சாப்பிட அழைத்துவிட்டு, எனக்கு உணவளிக்காமல் நீ முதலில் சாப்பிட்டு விட்டாய். உன் கெட்ட நடத்தையால், உனக்குப் பாடம் கற்பித்து உன்னைத் தண்டிக்கிறேன் பார்.
பதம் 9.4.46
ஏவம் பிருவான உத்க்ருத்ய ஜடாம் ரோஷ-ப்ரதீபித:
தயா ஸ நிர்மமே தஸ்மை க்ருத்யாம் காலானலோபமாம்
ஏவம்—இவ்வாறு; ப்ருவாண:—கூறி; உத்க்ருத்ய—பிடுங்கி; ஜடாம்—ஜடை மயிரை; ரோஷ-ப்ரதீபித:—கோபத்தால் சிவந்த; தயா—தன் ஜடையிலிருந்து பிடுங்கியெடுத்த ஜடை மயிரால்; ஸ:—துர்வாச முனி; நிர்மமே—உண்டாக்கினார்; தஸ்மை—அம்பரீஷரைத் தண்டிப்பதற்காக; க்ருத்யாம்—ஒரு துர்தேவதையை; கால-அனல-உபமாம்—காலாக்னியைப் போலவே தோன்றும்.
இதைச் சொன்ன துர்வாச முனிவரின் முகம் கோபத்தால் சிவந்தது. அம்பரீஷ மகாராஜனைத் தண்டிப்பதற்காக, தன் தலையிலுள்ள ஜடாமுடியைக் கிள்ளியெடுத்து, காலாக்னியைப் போன்றதொரு துர்தேவதையை அவர் உண்டாக்கினார்.
பதம் 9.4.47
தாம் ஆபதந்தீம் ஜ்வலதீம் அஸி-ஹஸ்தாம் பாத புவம்
வேபயந்தீம் ஸமுத்வீக்ஷ்ய ந சசால் பதான் ந்ருப:
தாம்—அந்த (அரக்கன்); ஆபதந்தீம்—அவரைத் தாக்குவதற்கு முன்னால் வந்தான்; ஜீவலதீம்—தீபோல் கொழுந்து விட்டெரியும்; அஸி-ஹஸ்தாம்—கையில் ஒரு சூலத்துடன்; பதா—அவனது பாதங்களால்; புவம்—பூமியை; வேபயந்தீம்—அதிரச் செய்து; ஸமுத்வீக்ஷ்ய—அவனை நன்றாகப் பார்த்து; ந—இல்லை; சசால—அசைந்தார்; பதாத்—அவரது இடத்திலிருந்து; ந்ருப:—அரசர்.
தீப்போன்ற அந்த துர்தேவதை, பூமி அதிர, கையில் ஒரு சூலத்துடன் அம்பரீஷ மகாராஜனை நோக்கி நடந்து வந்தது. ஆனால் அதைக் கண்டு சிறிதும் கலக்கமடையாத அரசர், கொஞ்சங்கூட அசையாமல் அங்கேயே நின்றிருந்தார்.
பதம் 9.4.48
ப்ராக் திஷ்டம் ப்ருத்ய-ரக்ஷாயாம் புருஷேண மஹாத்மனா
ததாஹ க்ருத்யாம் தாம் சக்ரம் க்ருத்தாஹிம் இவ பாவக:
ப்ராக் திஷ்டம்—முன்பே திட்டமிட்டபடி; ப்ருத்ய-ரக்ஷாயாம்—அவரது பக்தர்களின் பாதுகாப்புக்காக; புருஷேண—பரமபுருஷரால்; மஹா-ஆத்மனா—பரமாத்மாவால்; ததாஹ—சாம்பலாக எரிக்கப் பட்டது; க்ருத்யாம்—படைக்கப்பட்ட அந்த துஷ்ட தேவதையை; தாம்—அதை; சக்ரம்—சக்கரம்; க்ருத்த—கோபம் கொண்ட; அஹிம்—ஒரு பாம்பு; இவ—போல்; பாவக:—நெருப்பு.
காட்டுத் தீ கோபங்கொண்ட பாம்பை உடனே எரித்து சாம்பலாக்குகிறது. அதுபோலவே, பக்தர்களின் பாதுகாப்புக்காக பகவானால் முன்பே அளிக்கப்பட்டிருந்த அவரது சுதர்ன சக்கரம், துஷ்ட தேவதையை உடனே எரித்துச் சாம்பலாக்கி பக்தரைக் காப்பாற்றியது.
பதம் 9.4.49
தத்-அபித்ரவத் உத்வீக்ஷ்ய ஸ்வ-ப்ரயாஸம் ச நிஷ்ஃபலம்
துர்வாஸா துத்ருவே பீதோ திக்ஷு ப்ராண-பரீப்ஸயா
தத்—அச்சக்கரத்தை; அபித்ரவத்—தன்னை நோக்கிப் பாயும்; உத்வீக்ஷ்ய—கண்டதும்; ஸ்வ-ப்ராயாஸம்—தன் சொந்த முயற்சி; ச—மேலும்; நிஷ்ஃபலம்—தோல்வியடைந்ததை; துர்வாஸா:—துர்வாச முனி; துத்ருவே—ஓட்டம் பிடித்தார்; பீத:—பெரும் பயத்துடன்; திக்ஷு—நாற்புறமும்; ப்ராண-பரீப்ஸயா—தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையுடன்.
தன் சொந்த முயற்சி தோல்வியடைந்ததையும், சுதர்சன சக்கரம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருவதையும் கண்ட துர்வாச முனி, மிகவும் பயந்து, தன்னுயிரைக் காத்துக் கொள்ள நாற்புறமும் ஓடினார்.
பதம் 9.4.50
தம் அன்வதாவத் பகவத்-ரதாங்கம்
தாவாக்னிர் உத்தூத-சிகோ யதாஹிம்
ததானுஷக்தம் முனிர் ஈக்ஷமானோ
குஹாம் விவிக்ஷு: ப்ரஸஸார மேரோ:
தம்—துர்வாசரை; அன்வதாவத்—பின்தொடர ஆரம்பித்தது; பகவத்-ரத-அங்கம்—பகவானின் தேர்ச் சக்கரத்திலிருந்து தோன்றிய சக்கராயுதம்; தாவ-அக்னி:—ஒரு காட்டுத் தீயைப் போல்; உத்தூத—உயரமாகக் கொழுந்துவிட்டெரியும்; சிக:—பிழம்புகளைக் கொண்டு; யதா அஹிம்—ஒரு பாம்பை அது பின்தொடர்வதுபோல்; ததா—அதே போன்று; அனுஷக்தம்—துர்வாசரின் முதுகைத் தொடுவது போல்; முனி:—முனிவர்; ஈக்ஷமாண:—அதைக்கண்டு; குஹாம்—குகைக்குள்; விவிக்ஷு:—புக விரும்பினார்; ப்ரஸஸார—வேகமாக ஓடத் துவங்கினார்; மேரோ:—மேரு மலையின்.
கொழுந்து விட்டெரியும் காட்டுத்தீ பாம்பைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, பரமபுருஷ பகவானின் சக்கரம் துர்வாச முனிவரை விரட்டத் துவங்கியது. சக்கரம் தன் முதுகைத் தொடும் அளவிற்கு நெருங்கிவிட்டதைக் கண்ட துர்வாசர், மேரு மலையிலுள்ள ஒரு குகைக்குள் புகுந்துவிட எண்ணி, மிகவும் வேகமாக ஓடினார்.
பதம் 9.4.51
திசோ நப: க்ஷ்மாம் விவரான் ஸமுத்ரான்
லோகான் ஸபாலாம்ஸ் த்ரிதிவம் கத: ஸ:
யதோ யதோ தாவதி தத்ர தத்ர
ஸுதர்சனம் துஷ்ப்ரஸஹம் ததர்ச
திச:—எல்லாத் திசைகளிலும்; நப:—ஆகாயத்தில்; க்ஷ்மாம்—பூமியில்; விவரான்—துவாரங்களுக்குள்ளும்; ஸமுத்ரான்—சமுத்திரத்தினுள்ளும்; லோகான்—எல்லா இடங்களின்; ஸ-பாலான்—அவற்றின் ஆளுனர்களின்; த்ரிதிவம்—சுவர்க்க லோகங்களுக்கும்; கத:—சென்றார்; ஸ:—துர்வாச முனி; யத: யத:—யாரிடமெல்லாம்; தாவதி—அவர் சென்றாரோ; தத்ர தத்ர—எங்கெல்லாம்; ஸுதர்சனம்—பகவானின் சக்கரத்தை; துஷ்ப்ரஸஹம்—மிகவும் பயங்கரமான; ததர்ச—துர்வாச முனி கண்டார்.
துர்வாச முனி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஆகாயத்திலும், பூமியிலும், குகைகளுக்குள்ளும், கடலுக்குள்ளும், மூவுலகிலுள்ள லோக பாலகர்களின் வெவ்வேறு கிரகங்களுக்கும் மற்றும் சுவர்க்க லோகங்களுக்கும் கூட ஓடினார். ஆனால் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம், சுதர்சன சக்கரத்தின் சகிக்க முடியாத தீ உடனே தன்னைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டார்.
பதம் 9.4.52
அலப்த-நாத: ஸ ஸதா குதஸ்சித்
ஸந்த்ரஸ்த சித்தோ ‘ரணம் ஏஷமாண:
தேவம் விரிஞ்சம் ஸமகாத் விதாதஸ்
த்ராஹி ஆத்ம-யோனே ‘ஜித-தேஜஸோ மாம்
அலப்த-நாத:—தன்னைக் காக்கக் கூடியவரைக் காணாமல்; ஸ:—துர்வாச முனி; ஸதா—எப்பொழுதும்; குதுஸ்சித்—எங்கோ; ஸந்த்ரஸ்ட-சித்த:—அச்சம் கொண்ட மனதுடன்; அரணம்—புகலிடம் அளிக்கக் கூடிய ஒருவரை; ஏஷமாண:—தேடி; தேவம்—இறுதியாக முக்கிய தேவரான; விரிஞ்சம்—பிரம்மதேவரை; ஸமகாத்—அணுகினார்; விதாத:—ஓ பிரபு; த்ராஹி—தயவுசெய்து காப்பாற்றுங்கள்; ஆத்ம-யோனே—பிரம்மதேவரே; அஜித-தேஜஸ:—பரமபுருஷரான அஜிதரால் ஏவப்பட்ட தீயிலிருந்து; மாம்—என்னை.
அச்சம் தோய்ந்த மனதுடன், துர்வாச முனி பாதுகாப்பைத் தேடி இங்குமங்கும் சென்றார். ஆனால் எங்கும் பாதுகாப்பு கிடைக்காததால், இறுதியில் அவர் பிரம்மதேவரை அணுகி, “பிரம்ம தேவரே! பரம புருஷரால் அனுப்பப்பட்ட கொழுந்து விட்டெரியும் சுதர்சன சக்கரத்திலிருந்து தயவுசெய்து எனக்கு பாதுகாப்புக் கொடுங்கள்” என்று கூறினார்.
பதங்கள் 9.4.53 – 9.4.54
ஸ்ரீ ப்ரஹ்மோவாச
ஸ்தானம் மதீயம் ஸஹ-விஸ்வம் ஏதத்
கீரிடாவஸானே த்வி-பரார்த-ஸம்க்ஞே
ப்ரூ-பங்க-மாத்ரேண ஹி ஸந்திதக்ஷோ:
காலத்மனோ யஸ்ய த்ரோபவிஷ்யதி
அஹம் பவோ தக்ஷ-ப்ருகு-ப்ரதானா:
ப்ரஜேச-பூதேச-ஸுரேச-முக்யா:
ஸர்வே வயம் யன்-நியமம் ப்ரபன்னா
மூர்த்ன்யார்பிதம் லோக-ஹிதம் வஹாம:
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்ம தேவர் கூறினார்; ஸ்தானம்—நானிருக்கும் இடம்; மதீயம்—எனது வசிப்பிடமான பிரம்மலோகம்; ஸஹ—உடன்; விஸ்வம்—முழு பிரபஞ்சமும்; ஏதத்—இந்த; க்ரீடா-அவஸானே—பகவானுடைய திருவிளையாடல்கள் முடிவுபெறும் கடைசி கட்டத்தில்; த்வி-பரார்த-ஸம்ஞே—ஒரு “த்வி-பரார்தத்தின்” முடிவு என்ற காலம்; ப்ரூ-பங்க-மாத்ரேண—வெறுமனே புருவங்களை அசைப்பதன் மூலம்; ஹி—உண்மையில்; ஸந்திதக்ஷோ:—முழு பிரபஞ்சத்தையும் பரமபுருஷர் எரித்து விட விரும்பும்போது; கால ஆத்மன:—அழிவு ரூபத்தின்: யஸ்ய—யாருடைய; த்ரோப விஷ்யதி—அழிந்துவிடுமோ; அஹம்—நான்; பவ:—சிவபெருமான்; தக்ஷ—பிரஜாபதி தட்சன்; ப்ருகு—பிருகு மாமுனி; ப்ரதானா:—மற்றும் அவர்களை தலைமையாகக் கொண்ட பிறர்; ப்ரஜா-ஈச—பிரஜைகளை ஆள்பவர்கள்; பூத-ஈச—ஜீவராசிகளை ஆள்பவர்கள்; ஸீர-ஈச—தேவர்களை ஆள்பவர்கள்; முக்யா:—அவர்களை தலைமையாகக் கொண்ட; ஸர்வே—அவர்களனைவரும்; வயம்—நாங்களும்; யத்-நியமம்—யாருடைய நியமங்களுக்கு; ப்ரபன்னா:—சரணடைந்திருக்கிறோம்; மூர்த்ன்யா அர்பிதம்—நாங்கள் தலை வணங்குகிறோம்; லோக-ஹிதம்—அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக; வஹாம:—ஜீவராசிகளை ஆளும் கட்டளைகளை நிறைவேற்றுகிறோம்.
பிரம்ம தேவர் கூறினார்: த்வி-பரார்தத்தின் முடிவில், அதாவது, பகவான் விஷ்ணுவின் லீலைகள் ஒரு முடிவுக்கு வரும்பொழுது, அவர் தமது கண்ணிமைகளை அசைப்பதன் மூலம், எங்களுடைய வசிப்பிடங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையுமே அழித்து விடுகிறார். நான், சிவபெருமான், தட்சன், பிருகு மற்றும் எங்களுக்கொப்பான
பிற முனிவர்கள், அத்துடன் ஜீவராசிகளை ஆள்பவர்கள், மனித சமூகத்தை ஆள்பவர்கள், மற்றும் தேவர்களை ஆள்பவர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் பரமபுருஷராகிய அந்த பகவான் விஷ்ணுவிடம் சரணடைகிறோம். அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக, அவருக்கு சிரம் பணிந்து, அவரது கட்டளைகளை நிறைவேற்றுகிறோம்.
பதம் 9.4.55
ப்ரத்யாக்யாதோ விரிஞ்சேன விஷ்ணு-சக்ரோபதாபித:
துர்வாஸா: சரணம் யாத: சர்வம் கைலாஸ-வாஸினம்
ப்ரத்யக்யாத:—மறுக்கப்பட்டு; விரிஞ்சேன—பிரம்மதேவரால்; விஷ்ணு-சக்ர-உபதாபித:—கொழுந்து விட்டெரியும் பகவான் விஷ்ணுவின் சக்கரத்தால் தகிக்கப்பட்டு; துர்வாஸ:—மகா யோகியான துர்வாசர்; சரணம்—சரணடைய; யாத:—சென்றார்; சர்வம்—சிவபெருமானிடம்; கைலாஸ-வாஸினம்—கைலாசவாசியான.
சுதர்சன சக்கரத்தின் தீப்பிழம்பினால் பெரிதும் பாதிப்புற்ற துர்வாசர் பிரம்மதேவரால் கைவிடப்பட்டு, கைலாசவாசியான சிவபெருமானிடம் சரணடைய முயன்றார்.
பதம் 9.4.56
ஸ்ரீ-சங்கர உவாச
வயம் ந தாத ப்ரபவாம பூம்னி
யஸ்மின் பரே ‘ன்யே ‘பி அஜ-ஜீவ-கோசா:
பவந்தி காலே ந பவந்தி ஹீத்ருசா:
ஸஹஸ்ரசோ யத்ர வயம் ப்ரமாம:
ஸ்ரீ-சங்கர: உவாச—சிவபெருமான் கூறினார்; வயம்—நாங்கள்; ந—இல்லை; தாத—அருமைப் புதல்வனே; ப்ரபவாம:—போதுமான தகுதி; பூம்னி—சிறந்த பரமபுருஷரிடம்; யஸ்மின்—எவரில்; பரே—பரத்தில்; அன்யே—மற்றவர்கள்; அபி—கூட; அஜ—பிரம்மதேவர்; ஜீவ—ஜீவராசிகள்; கோசா:—பிரபஞ்சங்கள்; பவந்தி—ஆக முடியும்; காலே—காலப்போக்கில்; ந—இல்லை; பவந்தி—ஆக முடியும்; ஹி—உண்மையில்; ஈத்ருசா:—அதைப்போன்ற; ஸஹஸ்ரச:—பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான; யத்ர—எங்கு; வயம்—நாங்கள் அனைவரும்; ப்ரமாம:—சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
சிவபெருமான் கூறினார்: அருமைப் புதல்வனே, நானும், பிரம்மதேவரும், மற்ற தேவர்களும், நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் இப்பிரபஞ்சத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கிறோம். பரமபுருஷருடன் போட்டியிடும் சக்தி எங்களுக்கில்லை. ஏனெனில், பகவானின் சாதாரண உத்தரவினாலேயே எண்ணற்ற பிரபஞ்சங்களும், அவற்றின் வாசிகளும் படைக்கப்பட்டு, மீண்டும் அழிக்கப்படுகின்றன.
பதங்கள் 9.4.57 – 9.4.59
அஹம் ஸனத்-குமாரஸ்ச நாரதோ பகவான் அஜ:
கபிலோ ‘பாந்தரதமோ தேவலோ தர்ம ஆஸுரி:
மரீசி ப்ரமுகாஸ் சான்யே ஸித்தேசா: பார-தர்சனா:
விதாம ந வயம் ஸர்வே யன்-மாயாம் மாயயாவ்ருதா:
தஸ்ய விஸ்வேஸ்வரஸ்யேதம் சஸ்த்ரம் துர்விஷஹம் ஹி ந:
தம் ஏவம் சரணம் யாஹி ஹரிஸ் தே சம் விதாஸ்யதி
அஹம்—நான்; ஸனத்-குமார: ச—மற்றும் நான்கு குமாரர்கள் (சனகர் சனாதனர், சனந்தனர் மற்றும் சனத் குமாரர்); நாரத:—தேவரிஷி நாரதர்; பகவான் அஜ:—பிரபஞ்சத்தின் பரம ஜீவனான பிரம்மா; கபில:—தேவஹுதி புத்திரர்; அபாந்தரதம:—வியாசதேவர்; தேவல:—மாமுனிவரான தேவலர்; தர்ம:—யமராஜர்; ஆசுரி:—மகாமுனிவர் ஆசுரி; மரீசி—மகாமுனிவர் மரீசி; ப்ரமுகா:—முதலான; ச—கூட; அன்யே—மற்றவர்கள்; ஸித்த-ஈசா:—ஞான சித்தி பெற்ற அவர்களனைவரும்; பார-தர்சனா:—ஞானத்தின் முடிவைக் கண்டவர்கள்; விதாம:—புரிந்துகொள்ள முடியும்; ந—இல்லை; வயம்—நாங்கள் அனைவரும்; ஸர்வே—மொத்தத்தில்; யத்-மாயாம்—யாருடைய மாயச் சக்தி; மாயயா—அந்த மாயச் சக்தியால்; ஆவ்ருதா:—மூடப்பட்டு; தஸ்ய—அவரது; விஸ்வ-ஈஸ்வரஸ்ய—அகிலலோகநாதனின்; இதம்—இந்த; சஸ்த்ரம்—ஆயுதம் (சக்கரம்); துர்விஷஹம்—பொறுக்க முடியாததாகும்; ஹி—உண்மையில்; ந:—எங்களால்; தம்—அவரிடம்; ஏவம்—எனவே; சரணம் யாஹி—சென்று சரணடை; ஹரி:—பரமபுருஷர்; தே—உனக்கு; சம்—மங்களம்; விதாஸ்யதி—அருள்வார்.
பூரணத்துவம் அடைந்தவர்களான நான் (சிவபெருமான்), சனத் குமாரர்கள், நாரதர், மரியாதைக்குரிய பிரம்மதேவர், கபிலர் (தேவஹுதி) புத்திரர்); அபாந்தரமர் (பகவான் வியாசதேவர்), தேவலர், யமராஜர், ஆசுரி, மரீசி, அவரை தலைமையாகக் கொண்ட பல முனிவர்கள் மற்றும் வேறு பலர் ஆகிய நாங்கள் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களை அறிந்தவர்கள். இருப்பினும், நாங்கள் பகவானின் மாயச் சக்தியால் மூடப்பட்டிருப்பதால், அந்த மாயச் சக்தி எவ்வளவு பரந்தது என்பதை எங்களால் அறிய முடியவில்லை. இந்த சுதர்சன சக்கரம் எங்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியாதது என்பதால், நீ அப்பரமபுருஷரிடமே சென்று உதவி தேடிக்கொள். பகவான் விஷ்ணுவையே சரணடை. அவர் உனக்கு சர்வ மங்களத்தையும் அருள்வார்.
பதம் 9.4.60
ததோ நிராசோ துர்வாஸா: பதம் பகவதோ யயௌ
வைகுண்டாக்யம் யத் அத்யாஸ்தே ஸ்ரீனிவாஸ: ஸ்ரியா ஸஹ
தத:—அதன்பிறகு; நிராச:—ஏமாற்றமடைந்த; துர்வாஸா:—மகா யோகியான துர்வாசர்; பதம்—இடத்திற்கு; பகவத:—பரமபுருஷரான விஷ்ணுவின்; யயௌ—சென்றார்; வைகுண்ட-ஆக்யம்—வைகுண்டம் என்ற இடத்திற்கு; யத்—எங்கு; அத்யாஸ்தே—நித்தியவாசம் செய்யும்; ஸ்ரீனிவாஸ:—பகவான் விஷ்ணு; ஸ்ரியா—ஸ்ரீ தேவியுடன்; ஸஹ—உடன்.
அதன்பிறகு, சிவபெருமானிடம் சரணடைவதிலும் ஏமாற்றமடைந்த துர்வாச முனிவர், பரமபுருஷரான நாராயணர் லக்ஷ்மி தேவியுடன் நித்திய வாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் சென்றார்.
பதம் 9.4.61
ஸந்தஹ்யமானோ ‘ஜித-சஸ்த்ர-வஹ்னினா
தத்-பாத-மூலே பதித: ஸவேபது:
ஆஹாச்யுதானந்த ஸத்-ஈப்ஸித ப்ரபோ
க்ருதாகஸம் மாவஹி விஸ்வ-பாவன
ஸந்தஹ்யமான:—வெப்பத்தால் தாக்கப்பட்டு; அஜித-சஸ்த்ர-வஹ்னினா—பரமபுருஷருடைய ஆயுதத்தின் தீப்பிழம்பினால்; தத்-பாத-மூலே—அவரது பாத கமலங்களில்; பதித:—விழுந்து; ஸ-வேபது:—உடல் நடுக்கத்துடன்; ஆஹ—கூறினார்; அச்யுத—எம்பெருமானே, அழிவற்றவரே; அனந்த—எல்லையற்ற சக்தி படைத்தவரே; ஸத்-ஈப்ஸித—சாதுக்களின் விருப்பத்திற்குரிய பகவானே; ப்ரபோ—பரமபுருஷரே; க்ருத-ஆகஸம்—மிகப்பெரிய குற்றவாளியான; மா—எனக்கு; அவஹி—பாதுகாப்புக் கொடுங்கள்; விஸ்வ-பாவன—முழு பிரபஞ்சத்தையும் காப்பவரே.
சுதர்சன சக்கரத்தினால் தாக்கப்பட்ட மகா யோகியான துர்வாச முனி, உடல் நடுங்க பகவான் நாராயணரின் பத்ம பாதங்களில் விழுந்து பின்வருமாறு வேண்டினார்: அழிவற்றவரே, எல்லையற்ற பகவானே, முழு பிரபஞ்சத்தையும் காத்து இரட்சிப்பவரே, தாங்கள் ஒருவரே எல்லா பக்தர்களுக்கும் விரும்பத்தக்க பொருளாக இருக்கிறீர்கள். பெருமானே நான் ஒரு பெரிய குற்றவாளி. தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
பதம் 9.4.62
அஜானதா தே பரமானுபாவம்
க்ருதம் மயாகம் பவத: ப்ரியாணாம்
விதேஹி தஸ்யாபசிதிம் விதாதர்
முச்யேத யன்-நாம்னி உதிதே நாரகோ ‘பி
அஜானதா—அறிவில்லாமல்; தே—தங்களுடைய; பரம-அனு பாவம்—எல்லையற்ற சக்தியை; க்ருதம்—செய்யப்பட்டது; மயா—என்னால்; அகம்—பெருங்குற்றம்; பவத:—தங்களுடைய; ப்ரியாணாம்—பக்தர்களின் பாதங்களில்; விதேஹி—தயவுகூர்ந்து இப்பொழுது வேண்டியதைச் செய்யுங்கள்; தஸ்ய—இத்தகைய ஒரு குற்றத்தின்; அபசிதிம்—தடுப்பை; விதாத:—பரம ஆளுனரே; முச்யேத—விடுவிக்க முடியும்; யத்—யாருடைய; நாம்னி—நாமம்; உதித—எழுப்பப்படும் பொழுது; நாரக: அபி—நரகம் செல்லத் தகுதியுடையவன் கூட.
எம்பெருமானே! பரம ஆளுனரே! அவர்களுடைய எல்லையற்ற சக்தியை அறியாமல் உங்களுக்கு மிகப்பிரியமான பக்தருக்கு நான் தீங்கிழைத்து விட்டேன். இக்குற்றத்தின் விளைவிலிருந்து தயவுசெய்து என்னைக் காத்தருள வேண்டும். தங்களால் எதையும் செய்ய முடியும். ஏனெனில், ஒருவன் நரகம் செல்லத் தகுதியுடையவனாக இருந்தாலும், அவனது இதயத்தில் தங்களுடைய புனித நாமத்தை எழச் செய்வதாலேயே அவனை உங்களால் காத்தருள முடியும்.
பதம் 9.4.63
ஸ்ரீ பகவான் உவாச
அஹம் பக்த-பராதீனோ ஹி அஸ்வதந்த்ர இவ த்விஜ
ஸாதுபிர் க்ரஸ்த-ஹ்ருத்யோ பக்தைர் பக்த-ஜன-ப்ரிய:
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; அஹம்—நான்; பக்த-பராதீன:—என் பக்தர்களின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தவன்; ஹி—உண்மையில்; அஸ்வதந்தர:—நான் சுதந்திரமானவனல்ல; இவ—அதேபோன்று; த்விஜ—பிராமணரே; ஸாதுபி:—எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ள தூய பக்தர்களால்; க்ரஸ்த-ஹ்ருதய:—என்னுடைய இதயம் அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளது; பக்தை:—அவர்கள் பக்தர்களாக இருப்பதால்; பக்த-ஜன-ப்ரிய:—என்னுடைய பக்தன் மட்டுமின்றி, பக்தனின் பக்தனும் எனக்கு மிகவும் பிரியமானவனாவான்.
பரமபுருஷர் பிராமணரிடம் கூறினார்: நான் முற்றிலும் என் பக்தர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறேன். உண்மையில், பக்தர்களுக்கு நான் அடிமைப்பட்டவன். எனது பக்தர்கள் பெளதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவர்கள் என்பதால், அவர்களுடைய இதய ஆழத்தில் மட்டுமே நான் அமர்ந்தவனாக இருக்கிறேன். என் பக்தனின் பக்தர்களும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆதலால், என் பக்தர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
பதம் 9.4.64
நாஹம் ஆத்மானம் ஆசாஸே மத்-பக்தை: ஸாதுபிர் வினா
ஸ்ரியம் சாத்யந்திகீம் ப்ரஹ்மன் யேஷாம் கதிர் அஹம் பரா
ந—இல்லை; அஹம்—நான்; ஆத்மானம்—உன்னத ஆனந்தத்தை; ஆசாஸே—விரும்புகிறேன்; மத்-பக்தை:—என் பக்தர்களுடன்; ஸாதுபி:—சாதுக்களுடன்; வினா—அவர்களின்றி; ஸ்ரியம்—எனது ஆறு ஐசுவரியங்களையும்; ச—கூட; ஆத்யந்திகீம்—மிகச்சிறந்த; ப்ரஹ்மன்—பிராமணரே; யேஷாம்—எவரின்; கதி:—இலக்கு; அஹம்—நானே; பரா—முடிவான.
பிராமணர்களில் சிறந்தவரே, என்னை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ள சாதுக்கள் இல்லாமல், எனது உன்னத ஆனந்தத்தையும், பரம ஐசுவரியங்களையும் தனியாக அனுபவிக்க நான் விரும்பவில்லை.
பதம் 9.4.65
யே தாராகார-புத்ராப்த-ப்ராணன் வித்தம் இமம் பரம்
ஹித்வா மாம் சரணம் யாதா: கதம் தாம்ஸ் த்யக்தும் உத்ஸஹே
யே—என்னுடைய அந்த பக்தர்கள்; தார—மனைவி; அகார—வீடு; புத்ர—குழந்தைகள், மகன்கள்; ஆப்த—உறவினர்கள், சமூகம்; ப்ராணன்—உயிரையும் கூட; வித்தம்—செல்வம்; இமம்—இவை அனைத்தையும்; பரம்—சுவர்க்க லோகங்களுக்கு உயருதல் அல்லது பிரம்மத்துடன் கலந்து ஒன்றாகுதல்; ஹித்வா—(இவ்வெல்லா நோக்கங்களையும், பொருட்களையும்) கைவிட்டு; மாம்—என்னிடம்; சரணம்—சரணம்; யாதா:—அடைவதால்; கதம்—எப்படி; தான்—இத்தகையவர்களை; த்யக்தும்—அவர்களைக் கைவிடுவது; உத்ஸஹே—என்னால் அப்படி நினைக்க முடியும் (அது சாத்தியமில்லை).
தூய பக்தர்கள் எனக்குத் தொண்டு செய்வதற்காக, இப்பிறவியிலோ, அடுத்ததிலோ பெளதிக முன்னேற்றமடையும் விருப்பம் இல்லாமல், தங்களுடைய வீடு, மனைவி, மக்கள், உறவினர்கள், செல்வம் மற்றும் உயிரையும் கூட தியாகம் செய்கின்றனர் என்பதால் அத்தகைய பக்தர்களை என்னால் எப்படி கைவிட முடியும்?
பதம் 9.4.66
மயி நிர்பத்த-ஹ்ருதயா: ஸாதவ: ஸம-தர்சனா:
வசே குர்வந்தி மாம் பக்த்யா ஸத்-ஸ்த்ரிய: ஸத்-பதிம் யதா
மயி—என்னிடம்; நிர்பத்த-ஹ்ருத்யா:—இதயத்தில் உறுதியான பற்றுக் கொண்டுள்ள; ஸாதவ:—தூய பக்தர்கள்; ஸம-தர்சனா:—அனைவரிடமும் சமநோக்குக் கொண்டவர்கள்; வசே—கட்டுப்பாட்டின் கீழ்; குர்வந்தி—கொண்டு வருகின்றனர்; மாம்—என்னை; பக்த்யா—பக்தித் தொண்டால்; ஸத்-ஸ்த்ரிய:—கற்புடைய பெண்கள்; ஸத்-பதிம்—நல்ல கணவனை; யதா—போல்.
கற்புடைய பெண்கள் சேவையால் தங்களுடைய நல்ல கணவன்களை வசப்படுத்துவது போல், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர்களும், என்னிடம் பூரணமான பற்றுக் கொண்டிருப்பவர்களுமான தூய பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர்.
பதம் 9.4.67
மத்-ஸேவயா ப்ரதீதம் தே ஸாலோக்யாதி-ச-துஷ்டயம்
நேச்சந்தி ஸேவயா பூர்ணா: குதோ ‘ன்யத் கால-விப்லுதம்
மத்-ஸேவயா—எனது உன்னத அன்புத் தொண்டில் பூரணமாக ஈடுபட்டிருப்பதன் மூலம்; ப்ரதீதம்—தானாகவே அடையப்படுகின்றன; தே—அத்தகைய தூய பக்தர்கள் பூரண திருப்தியடைந்துள்ளனர்; ஸாலோக்ய-ஆதி-சதுஷ்டயம்—நான்கு வகையான முக்திகள் (சாலோக்யம், சாரூப்யம், சாமீப்யம் மற்றும் சார்ஷ்டி, சாயுஜ்ய முக்தியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை); ந—இல்லை; இச்சந்தி—ஆசை; ஸேவயா—பக்தித் தொண்டினாலேயே; பூர்ணா:—பூரணமான; குத:—என்னென்று சொல்வது; அன்யத்—பிறவற்றை; கால-விப்லுதம்—காலப்போக்கில் முடிந்துவிடும்.
எனது அன்புத் தொண்டில் ஈடுபட்டிருப்பதில் எப்பொழுதும் திருப்தியடையும் என் பக்தர்கள், நான்கு வகை முக்திகளில் கூட (சாலோக்யம், சாரூப்யம், சாமீப்யம் மற்றும் சார்ஷ்டி) சிரத்தையற்றவர்களாக உள்ளனர். என்றாலும் அவர்களது சேவையால் இவை தானாகவே அடையப்படுகின்றன. உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுவதைப் போன்ற, அழியக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி என்னென்று சொல்வது?
பதம் 9.4.68
ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம் ஸாதூனாம் ஹ்ருதயம் து அஹம்
மத்-அன்யத் தே ந ஜானந்தி நாஹம் தேப்யோ மனாக் அபி
ஸாதவ:—தூய பக்தர்கள்; ஹ்ருதயம்—இதய ஆழத்தில்; மஹ்யம்—எனது; ஸாதூனாம்—தூய பக்தர்களும் கூட; ஹ்ருதயம்—இதயத்தில்; து—உண்மையில்; அஹம்—நான்; மத்-அன்யத்—என்னைத் தவிர வேறெதையும்; தே—அவர்கள்; ந—இல்லை; ஜானந்தி—அறிவார்கள்; ந—இல்லை; அஹம்—நான்; தேப்ய:—அவர்களைத் தவிர; மனாக் அபி—சிறிதளவும்.
தூய பக்தன் எப்பொழுதும் என் இதய மத்தியில் வாழ்கிறான். நான் எப்பொழுதும் தூய பக்தனின் இதயத்தில் வாழ்கிறேன். எனது பக்தர்கள் என்னையன்றி வேறெதையும் அறியார்கள். நானும் அவர்களையன்றி வேறெவரையும் அறியேன்.
பதம் 9.4.69
உபாயம் கதயிஷ்யாமி தவ விப்ர ஸ்ருணுஷ்வ தத்
அயம் ஹி ஆத்மாபிசாரல் தே யதஸ் தம் யாஹி மா சிரம்
ஸாதுஷு ப்ரஹிதம் தேஜ: ப்ரஹர்து: குருதே ‘சிவம்
உபாயம்—ஆபத்தான இந்நிலையிலிருந்து தப்பும் வழியை; கதயிஷ்யாமி—நான் உமக்குக் கூறுகிறேன்; தவ—இந்த ஆபத்திலிருந்து நீர் விடுபடுவதற்குரிய; விப்ர—பிராமணரே; ஸ்ருணுஷ்வ—என்னிடமிருந்து கேளும்; தத்—நான் கூறுவதை; அயம்—உம்மால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை; ஹி—உண்மையில்; ஆத்ம-அபிசார:—சுய விரோதமாகும் (உமது மனமே உமக்கு எதிரியாகிவிட்டது); தே—உமக்கு; யத:—யாரால்; தம்—அவரிடமே (அம்பரீஷர்); யாஹி—உடனே செல்லும்; மா சிரம்—ஒரு கணமும் தாமதிக்க வேண்டாம்; ஸாதுஷு—பக்தர்கள் மீது; ப்ரஹிதம்—பிரயோகிக்கப்பட்ட; தேஜ:—சக்தி; ப்ரஹர்து:—செய்பவருக்கு; குருதே—செய்கிறது; அசிவம்—அமங்களத்தை.
பிராமணரே, உனது சொந்த பாதுகாப்பிற்காக எனது அறிவுரையை இப்பொழுது கேளும். அம்பரீஷ மகாராஜக்குத் தீங்கிழைத்ததால், உமக்கே விரோதமான காரியத்தை நீர் செய்துவிட்டீர். எனவே ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே அவரிடம் நீர் செல்ல வேண்டும். ஒருவன் தன் சக்தியை பக்தனுக்கெதிராக பிரயோகிக்கும் போது, அதைப் பிரயோகித்தவனுக்கே அது கெடுதியாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. எனவே கெடுதி செய்தவனுக்குத்தான் கெடுதி விளையும்.
பதம் 9.4.70
தபோ வித்யா ச விப்ராணாம் நிஹ்ஸ்ரேயஸ-கரே உபே
த ஏவ துர்வினீதஸ்ய கல்பேதே கர்துர் அன்யதா
தப:—தவங்கள்; வித்யா—அறிவு; ச—கூட; விப்ராணாம்—பிராமணர்களின்; நிஹ்ஸ்ரேயஸ—முன்னேற்றத்திற்கு மிகவும் சாதகமாக இருப்பதன்; கரே—காரணங்களாகும்; உபே—அவ்விரண்டும்; தே—அத்தகைய தவமும், அறிவும்; ஏவ—உண்மையில்; துர்வினீதஸ்ய—அத்தகைய ஒருவர் நற்பண்புகள் இல்லாதவராக இருக்கும் போது; கல்பதே—ஆகிறார்; கர்து:—செய்பவருக்கு; அன்யதா—நேர்மாறான.
பிராமணர் ஒருவருக்குத் தவமும், கல்வியும் உயர்ந்த நன்மையளிப்பவை ஆகும். நற்பண்புகள் இல்லாத ஒருவனுக்கு அத்தகைய தவமும், கல்வியும் மிகவும் ஆபத்தானவையாகும்.
பதம் 9.4.71
பிரஹ்மம்ஸ் தத் கச்ச பத்ரம் தே நாபாக-தனயம் ந்ருபம்
க்ஷமாபய மஹா-பாகம் தத: சாந்திர் பவிஷ்யதி
ப்ரஹ்மன்—பிராமணரே; தத்—எனவே; கச்ச—செல்லும்; பத்ரம்—மங்களமுண்டாகும்; தே—உமக்கு; நாபாக-தனயம்—நாபாக மகாராஜனின் குமாரனிடம்; ந்ருபம்—அரசர் (அம்பரீஷர்); க்ஷமாபய—அவரை சமாதானப்படுத்த முயலும்; மஹா-பாகம்—மகா புருஷரான, தூய பக்தரான; தத:—அதன்பிறகு; சாந்தி:—சாந்தி; பவிஷ்யதி—உண்டாகும்.
எனவே பிராமண சிரேஷ்டரே, நீர் உடனே நாபாக மகாராஜனின் புத்திரரான அம்பரீஷ மகாராஜனிடம் செல்லும். உமக்கு மங்களம் உண்டாகட்டும். அம்பரீஷ மகாராஜனை உம்மால் திருப்திப்படுத்த முடியுமானால், பிறகு சாந்தி ஏற்படும்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “துர்வாசர் அம்பரீஷருக்குச் செய்த குற்றம்” எனும் தலைப்பை கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.