அத்தியாயம் – 3
சுகன்யை, சியவன முனி திருமணம்
பதம் 9.3.1
ஸ்ரீ-சுக உவாச
சர்யாதிர் மானவோ ராஜா ப்ரஹ்மிஷ்ட: ஸம்பபூவ ஹ
யோ வா அங்கிரஸாம் ஸத்ரே த்விதீயம் அஹர் ஊசிவான்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; சர்யாதி:—சர்யாதி என்ற அரசர்; மானவ:—மனு புத்திரரான; ராஜா—அரசர்; ப்ரஹ்மிஷ்ட:—வேத ஞானத்தை நன்கு உணர்ந்த; ஸம்பபூவ ஹ—அவர் அப்படியானார்; ய:—யாரொருவர்; வா—அல்லது; அங்கிரஸாம்—அங்கிர வம்சத்தினரின்; ஸத்ரே—யாக அரங்கத்தில்; த்விதீயம் அஹ:—இரண்டாவது நாள் செய்ய வேண்டிய கிரியைகளை; ஊசிவான்—எடுத்துக் கூறினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, மனுவின் மற்றொரு மகனான சர்யாதி வேத ஞானத்தைப் பூரணமாக அறிந்த அரசராவார். அங்கிர வம்சத்தினரின் யாகத்தில், இரண்டாவது நாள் செய்ய வேண்டிய கிரியைகளைப் பற்றி அவர் எடுத்துக் கூறினார்.
பதம் 9.3.2
ஸுகன்யா நாம தஸ்யாஸீத் கன்யா கமல-லோசனா
தயா ஸார்தம் வன-கதோ ஹி அகமச் ச்யவனாஸ்ரமம்
ஸுகன்யா—சுகன்யை; நாம—எனும் பெயர் கொண்ட; தஸ்ய—அவரின் (சர்யாதியின்); ஆஸீத்—இருந்தாள்; கன்யா—ஒரு மகள்; கமல-லோசனா—கமலக் கண்களுடைய; தயா ஸார்தம்—அவளுடன்; வன-கத:—வனத்தில் புகுந்து; ஹி—உண்மையில்; அகமத்—அவர் சென்றார்; ச்யவன ஆஸ்ரமம்—சியவன முனிவரின் ஆசிரமத்திற்கு
சர்யாதிக்கு சுகன்யை எனும் ஓரழகிய, கமலக் கண்களையுடைய மகள் இருந்தாள். சியவன முனிவரின் ஆசிரமத்தைக் காண அவளுடன் அவர் வனம் சென்றார்.
பதம் 9.3.3
ஸா ஸகீபி: பரிவ்ருதா விசின்வந்தி அங்ரிபான் வனே
வல்மீக-ரந்ரே தத்ருசே கத்யோதே இவ ஜ்யோதிஷீ
ஸா—அந்த சுகன்யை; ஸகீபி:—தன் தோழிகளால்; பரிவ்ருதா—சூழப்பட்டிருந்த; விசின்வந்தீ—சேகரிக்கும் பொழுது; அங்ரிபான்—மரங்களிலிருந்து பழங்களையும், மலர்களையும்; வனே—வனத்தில்; வல்மீக-ரந்ரே—ஒரு மண்புழுத் துவாரத்தில்; தத்ருசே—கண்டாள்; கத்யோதே—இரு ஒளிகள்; இவ—போன்ற; ஜ்யோதிஷீ—இரு பிரகாசிக்கும் பொருட்களை.
தன் தோழிகளால் சூழப்பட்டிருந்த சுகன்யை, வனத்திலுள்ள மரங்களிலிருந்து பலவகையான பழங்களை சேகரித்துக் கொண்டு இருக்கும்பொழுது, ஒரு மண்புழுத் துவாரத்தினுள் சூரியனைப் போல் பிரகாசிக்கும் இரு பொருட்களைக் கண்டாள்.
பதம் 9.3.4
தே தைவ-சோதிதா பாலா ஜ்யோதிஷீ கண்டகேன வை
அவித்யன் முக்த-பாவேன ஸுஸ்ராவாஸ்ருக் ததோ பஹி:
தே—அவ்விரு; தைவ-சோதிதா—விதிவசத்தால் தூண்டப்பட்டது போல்; பாலா—அந்த பெண்; ஜ்யோதிஷீ—மண்புழுத் துவாரத்தினுள் உள்ள இரு ஒளிரும் பொருட்களை; கண்டகேன—ஒரு முள்ளால்; வை—உண்மையாகவே; அவித்யத்—குத்தினாள்; முக்த-பாவேன—அறிவற்றவளைப் போல்; ஸுஸ்ராவ—கசிந்தது; அஸ்ருக்—இரத்தம்; தத:—அதிலிருந்து; பஹி:—வெளியே.
விதிவசத்தால் தூண்டப்பட்டவளைப் போல், அச்சிறுமி அறியாமையால் அவ்விரு ஒளிகளையும் முள்ளால் குத்தினாள். குத்தப்பட்ட உடனேயே அவற்றிலிருந்து இரத்தம் கசியத் துவங்கியது.
பதம் 9.3.5
சக்ருன்-மூத்ர-நிரோதோ ‘பூத் சைனிகானாம் ச தத்-க்ஷணாத்
ராஜர்ஷிஸ் தம் உபாலக்ஷ்ய புருஷான் விஸ்மிதோ ‘ப்ரவீத்
சக்ருத்—மலத்தின்; மூத்ர—மற்றும் மூத்திரத்தின்; நிரோத:—நிறுத்தம்; அபூத்—ஏற்பட்டது; ஸைனிகானாம்—போர்ப்படையினரின்; ச—மேலும்; தத்-க்ஷணாத்—உடனேயே; ராஜர்ஷி:—அரசர்; தம்-உபாலக்ஷ்ய—சம்பவத்தைக் கண்ட; புருஷான்—அவரது ஆட்களிடம்; விஸ்மித:—ஆச்சரியமடைந்து; அப்ரவீத்—பேசத் துவங்கினார்.
உடனேயே, சர்யாதியின் படைவீரர்கள் அனைவருக்கும் திடீரென மலமும், மூத்திரமும் கழிப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. இதைக் கண்ட சர்யாதி ஆச்சரியத்துடன் தன் சகாக்களிடம் பின்வருமாறு வினவினார்.
பதம் 9.3.6
அபி அபத்ரம் ந யுஷ்மாபிர் பார்கவஸ்ய விசேஷ்டிதம்
வ்யக்தம் கேனாபி நஸ்தஸ்ய க்ருதம் ஆஸ்ரம-தூஷணம்
அபி—ஐயோ; அபத்ரம்—ஏதோ தீங்கு; ந:—நமக்கிடையில்; யுஷ்மாபி:—நம்மால்; பார்கவஸ்ய—சியவன முனியின்; விசேஷ்டிதம்—முயன்றிருக்கிறார்; வ்யக்தம்—என்பது இப்பொழுது தெளிவாகிறது; கேன அபி—யாரோ ஒருவரால்; ந:—நமக்கிடையில்; தஸ்ய—அவரின் (சியவன முனியின்); க்ருதம்—செய்யப்பட்டுள்ளது; ஆஸ்ரம-தூஷணம்—ஆசிரமத்திற்கு மாசு.
பிருகு புத்திரரான சியவன முனிக்கு நம்மிலொருவர் ஏதோ தீங்கிழைக்க முயன்றிருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது! நிச்சயமாக நம்மில் யாரோ ஒருவர் இந்த ஆசிரமத்தை மாசுபடுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
பதம் 9.3.7
ஸுகன்யா ப்ராஹ பிதரம் பீதா கிஞ்சித் க்ருதம் மயா
த்வே ஜ்யோகிஷீ அஜானந்த்யா நிர்பின்னே கண்டகேன வை
ஸுகன்யா—சிறுமி சுகன்யை; ப்ராஹ—கூறினாள்; பிதரம்—தன் தந்தையிடம்; பீதா—பயந்து; கிஞ்சித்—ஏதோ; க்ருதம்—செய்யப்பட்டுவிட்டது; மயா—என்னால்; த்வே—இரு; ஜ்யோதிஷீ—ஒளிரும் பொருட்கள்; அஜானந்த்யா—அறியாமையால்; நிர்பின்னே—குத்தப்பட்டுவிட்டன; கண்டகேன—ஒரு முள்ளால்; வை—உண்மையாகவே.
மிகவும் அச்சத்திற்குள்ளான சிறுமி சுகன்யை தன் தந்தையிடம் கூறினாள்: நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். அறியாமையால் இவ்விரு ஒளிரும் பொருட்களை நான் முள்ளால் குத்திவிட்டேன்.
பதம் 9.3.8
துஹிதுஸ் தத் வச: ஸ்ருத்வா சர்யாதிர் ஜாத-ஸாத்வஸ:
முனிம் ப்ரஸாதயாம் ஆஸ வல்மீகாந்தர்ஹிதம் சனை:
துஹிது:—தன் மகளின்; தத் வச:—அக்கூற்றை; ஸ்ருத்வா—கேட்டதும்; சர்யாதி:—சர்யாதி மகாராஜன்; ஜாத-ஸாத்வஸ:—பயந்து; முனிம்—சியவன முனிவரை; ப்ரஸாதயாம் ஆஸ—சமாதானப்படுத்த முயன்றார்; வல்மீக-அந்தர்ஹிதம்—மண்புழுப் புற்றினுள் அமர்ந்திருந்த; சனை:—மெதுவாக.
தன் மகளின் இக்கூற்றைக் கேட்டதும் சர்யாதி மகாராஜன் மிகவும் பயந்துவிட்டார். மண்புழுத் துவாரத்தினுள் அமர்ந்திருந்தவர் சியவன முனிதான் என்பதால், பல வழிகளில் அவரை சமாதானப்படுத்த அரசர் முயன்றார்.
பதம் 9.3.9
தத்-அபிப்ராயம் ஆக்ஞாய ப்ராதாத் துஹிதரம் முனே:
க்ருச்ரான் முக்தஸ் தம் ஆமந்த்ரிய புரம் ப்ராயாத் ஸமாஹித:
தத்—சியவன முனியின்; அபிப்ராயம்—கருத்தை; ஆக்ஞாய—புரிந்து கொண்டு; ப்ராதாத்—ஒப்படைத்தார்; துஹிதரம்—தன் மகளை; முனே:—சியவன முனியிடம்; க்ருச்ராத்—மிகவும் சிரமத்துடன்; முக்த:—விடுபட்டு; தம்—முனிவரிடம்; ஆமந்த்ரிய—விடைபெற்று; புரம்—அவரது சொந்த இடத்திற்கு; ப்ராயாத்—திரும்பினார்; ஸமாஹித:—ஆழ்ந்த சிந்தனையுடன்.
சிந்தனையில் ஆழ்ந்த சர்யாதி மகாராஜன் சியவன முனியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, தன் மகளை (பணிவிடை செய்ய) முனிவருக்குக் கொடுத்தார். இவ்வாறு பெருங்கஷ்டத்துடன் ஆபத்திலிருந்து விடுபட்டதும், சியவன முனியிடம் அனுமதி பெற்று அவர் வீடு திரும்பினார்.
பதம் 9.3.10
ஸுகன்யா ச்யவனம் ப்ராப்ய பதிம் பரம-கோபனம்
ப்ரீணயாம் ஆஸ சித்த-க்ஞா அப்ரமத்தானுவ்ருத்திபி:
ஸுகன்யா—சுகன்யை என்ற சர்யாதி மகாராஜனின் மகள்; ச்யவனம்—சியவன மாமுனிவரை; ப்ராப்ய—பெற்றபின்; பதிம்—அவளது கணவராக; பரம கோபனம்—எப்பொழுதும் கடுங்கோபத்துடன் இருப்பவரான; ப்ரீணயாம் ஆஸ—அவரை அவள் திருப்திப்படுத்தினாள்; சித்த-க்ஞா—தன் கணவரின் மனமறிந்து; அப்ரமத்தா அனுவ்ருத்திபி:—கவனக்குறைவு இல்லாமல் சேவைகள் செய்து.
சியவன முனியைத் தன் கணவராகப் பெற்ற சுகன்யை, அவர் எளிதில் கோபப்படக்கூடியவர் என்பதையறிந்து, அவரது மனோ நிலைக்கேற்ப கவனமாக நடந்து கொண்டாள். அவரது கருத்தறிந்து கவனக் குறைவில்லாமல் அவருக்குச் சேவை செய்தாள்.
பதம் 9.3.11
கஸ்யசித் து அத காலஸ்ய நாஸத்யாவ் ஆஸ்ரமாகதௌ
தௌ பூஜயித்வா ப்ரோவாச வயோ மே தத்தம் ஈஸ்வரௌ
கஸ்யசித்—கொஞ்சம்; து—ஆனால்; அத—இவ்வாறாக; காலஸ்ய—காலம் கழிந்தபின்; நாஸத்யௌ—இரு அஸ்வினி குமாரர்கள்; ஆஸ்ரம—சியவன முனியின் ஆசிரமத்தை; ஆகதெள—அடைந்தனர்; தெள—அவர்கள் இருவருக்கும்; பூஜயித்வா—மரியாதையாக வணக்கம் செய்து; ப்ரோவாச—கூறினார்; வய:—இளமையை; மே—எனக்கு; தத்தம்—தயவுகூர்ந்து அருளுங்கள்; ஈஸ்வரௌ—உங்களால் அதைச் செய்யமுடியும் என்பதால்.
சிறிது காலத்திற்குப்பின், சுவர்க்கலோக வைத்தியர்களான அஸ்வினி-குமாரர்கள் சியவன முனியின் ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. மரியாதையுடன் அவர்களை வணங்கிய சியவன முனி, இளமையை அளிக்கும் திறமையுடைய அவர்களிடம் தமக்கு அதை அருளும்படி வேண்டிக்கொண்டார்.
பதம் 9.3.12
க்ரஹம் க்ரஹீஷ்யே ஸோமஸ்ய யக்ஞே வாம் அபி அஸோம-போ:
க்ரியதாம் மே வயோ-ரூபம் ப்ரமதானாம் யத் ஈப்ஸிதம்
க்ரஹம்—ஒரு பாத்திரம் நிறைய; க்ரஹீஷ்யே—நான் கொடுப்பேன்; ஸோமஸ்ய—சோம-ரஸத்தை; யக்ஞே—யாகத்தில்; வாம்—உங்களிருவருக்கும்; அபி—என்றபோதிலும்; அஸோம-போ:—சோமரஸ மருந்தும் தகுதியற்ற உங்களிருவருக்கும்; க்ரியதாம்—நிறைவேற்றினால் போதும்; மே—எனது; வய:—இளமை; ரூபம்—இளமை அழகு; ப்ரமதானாம்—பெண்ணினத்தின்; யத் ஈப்ஸிதம்—விருப்பத்திற்குரியதான.
சியவன முனி கூறினார்: யாகத்தில் சோமபானம் இல்லாத உங்களுக்கு, ஒரு பாத்திரம் நிறைய சோமபானத்தை ஏற்படுத்தி உங்களுக்கு அளிப்பதாக நான் உறுதி செய்கிறேன். அழகும், இளமையும் இளம் பெண்களை கவரக் கூடியவை என்பதால், அன்புடன் அவற்றை எனக்குத் தந்தருளுங்கள்.
பதம் 9.3.13
பாடம் இதி ஊசதுர் விப்ரம் அபினந்ய பிஷக்தமௌ
நிமஜ்ஜதாம் பவான் அஸ்மின் ஹ்ரதே ஸித்த-வினிர்மிதே
பாடம்—சரி, அப்படியே செய்கிறோம்; இதி—இவ்வாறு; ஊசது:—யவன முனியின் திட்டத்திற்கு உடன்பட்டு, அவ்விருவரும் பதிலளித்தனர்; விப்ரம்—பிராமணரிடம் (முனிவரிடம்); அபினந்ய—அவரைக் கொண்டாடி; பிஷக்-தமெள—இரு பெரும் வைத்திய சிரேஷ்டர்களான அஸ்வினி-குமாரர்கள்; நிமஜ்ஜதாம்—மூழ்குங்கள்; பவான்—நீங்கள்; அஸ்மின்—இந்த; ஹ்ரதே—குளத்தில்; ஸித்த-வினிர்மிதே—எல்லா வகையான சித்திகளுக்கும் உரியதான்.
வைத்திய சிரேஷ்டர்களான அஸ்வினி-குமாரர்கள் சியவன முனிவரின் திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். “சித்தியளிக்கும் இம்மடுவில் மூழ்கி எழுங்கள்” (இந்த மடுவில் குளிப்பவரின் விருப்பங்கள் நிறைவேறும்) என்று அந்த பிராமணரிடம் அவர்கள் கூறினர்.
பதம் 9.3.14
இதி உக்தோ ஜரய க்ரஸ்த-தேஹோ தமனி-ஸந்தத:
ஹ்ரதம் ப்ரவேசிதோ ‘ஸ்விப்யாம் வலீ-பலித-விக்ரஹ:
இதி உக்த:—இப்படி கூறியதும்; ஜரயா—முதுமையால்; க்ரஸ்த-தேஹ:—உடல் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்ததால்; தமனி-ஸந்தத—உடல் முழுவதிலும் இரத்த நாளங்கள் காணப்பட்டன; ஹ்ரதம்—மடுவில்; ப்ரவேசித:—புகுந்தனர்; அஸ்விப்யாம்—அஸ்வினி-குமாரர்களின் உதவியுடன்; வலீ-பலித-விக்ரஹ:—அவரது உடலிலுள்ள தோல் தளர்ந்தும், மயிர் நரைத்தும் இருந்தன.
இவ்வாறு கூறிய அஸ்வினி-குமாரர்கள், வயது முதிர்ந்தவரும், நோய்வாய்ப்பட்டு தளர்ந்த போதிலும், நரைத்த முடியும் கொண்டவரும், உடல் முழுவதிலும் இரத்த நாளங்கள் இருக்கக் காணப்பட்டவருமான சியவன முனியைப் பற்றியவாறு, மூவரும் மடுவில் மூழ்கினர்.
பதம் 9.3.15
புருஷாஸ் த்ரய உத்தஸ்துர் அபீவ்யா வனிதா-ப்ரியா:
பத்ம-ஸ்ரஜ: குண்டலினஸ் துல்ய-ரூபா: ஸுவாஸஸ:
புருஷா:—நபர்கள்; த்ரய:—மூன்று; உத்தஸ்து:—எழுந்தனர் (மடுவிலிருந்து); அபீவ்யா:—மிகவும் அழகான; வனிதா-ப்ரியா:—பெண்களுக்கு ஒருவன் மிகவும் கவர்ச்சியுடையவனாக ஆவதுபோல்; பத்ம-ஸ்ரஜ:—தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு; குண்டலின:—குண்டலங்களுடன்; துல்ய-ரூபா:—அவர்கள் ஒரே தேக அம்சங்களைப் பெற்றிருந்தனர்; ஸு-வாஸஸ்:—அழகிய ஆடை அணிந்து.
பிறகு, மிக அழகிய தேக அம்சங்களைக் கொண்ட மூன்று புருஷர்கள் மடுவிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் அழகிய உடை அணிந்து, தாமரை மாலைகளாலும், குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அம்மூவருமே சம அழகுடையவர்களாக இருந்தனர்.
பதம் 9.3.16
தான் நிரீக்ஷ்ய வராரோஹா ஸரூபான் ஸுர்ய-வர்சஸ:
அஜானதீ பதிம் ஸாத்வீ அஸ்வினெள சரணம் யயௌ
தான்—அவர்களை; நிரீக்ஷ்ய—கண்டதும்; வர-ஆரோஹா—அந்த அழகிய சுகன்யை; ஸ-ரூபான்—அம்மூவரும் சம அழகுடையவர்களாக இருந்தனர்; ஸுர்ய-வர்சஸ:—சூரியனைப் போல் பிரகாசிக்கும் உடலுடன்; அஜானதீ—அறியாமல்; பதிம்—தன் கணவரை; ஸாத்வீ:—அப்பதிவிரதை; அஸ்வினௌ—அஸ்வினி குமாரர்களிடம்; சரணம்—சரணம்; யயௌ—அடைந்தாள்.
அவர்கள் சம அழகு கொண்டவர்களாக இருந்ததால், சிறந்த பதிவிரதையும், அழகுமிக்கவளுமான சுகன்யையால் இரு அஸ்வினி குமாரர்களிலிருந்து தன் கணவரைப் பிரித்தறிய இயலவில்லை. தன் கணவரைத் தெரிந்து கொள்ள இயலாமல் அஸ்வினி குமாரர்களை அவள் சரணடைந்தாள்.
பதம் 9.3.17
தர்சயித்வா பதிம் தஸ்யை பாதி-வ்ரத்யேன தோஷிதௌ
ரிஷிம் ஆமந்த்ரிய யயதுர் விமானேன த்ரிவிஷ்டபம்
தர்சயித்வா—காட்டியபின்; பதிம்—அவளது கணவரை; தஸ்யை—சுகன்யையிடம்; பாதி-வ்ரத்யேன—தன் கணவரிடம் அவள் கொண்ட அசையாத நம்பிக்கையால்; தோஷிதெள—அவளிடம் மிகவும் திருப்தியடைந்து; ரிஷிம்—சியவன முனியிடம்; ஆமந்த்ரிய—அவரிடம் அனுமதி பெற்று; யயது:—அவர்கள் சென்றனர்; விமானேன—தங்கள் சொந்த விமானத்திலேறி; த்ரிவிஷ்டபம்—சுவர்க்கத்திற்கு.
அஸ்வினி குமாரர்கள் சுகன்யையின் பதிபக்தியைக் கண்டு மிகவும் திருப்தியடைந்தனர். இவ்வாறாக அவளது கணவரான சியவன முனியை அவளிடம் காட்டியபின், முனிவரிடம் விடைபெற்று, தங்களுடைய விமானத்திலேறி சுவர்க்கம் சென்றனர்.
பதம் 9.3.18
யக்ஷ்யமாணோ ‘த சர்யாதிஸ் ச்யவனஸ்யாஸ்ரமம் கத:
ததர்ச துஹிது; பார்ஸ்வே புருஷம் ஸூர்ய வர்சஸம்
யக்ஷ்யமான:—ஒரு யாகம் செய்யும் விருப்பத்துடன்; அத—இவ்வாறு; சர்யாதி:—சர்யாதி மகாராஜன்; ச்யவனஸ்ய—சியவன முனியின்; ஆஸ்ரமம்—வசிப்பிடத்திற்கு; கத:—சென்றதும்; ததர்ச—அவர்கண்டார்; துஹிது:—தன் மகளின்; பார்ஸ்வே—பக்கத்தில்; புருஷம்—ஒரு மனிதன்; ஸூர்ய-வர்சஸம்—அழகிய, சூரியனைப் போல் பிரகாசமான.
பிறகு, சர்யாதி மகாராஜன் ஒரு யாகம் செய்ய உத்தேசித்து சியவன முனியின் ஆசிரமத்திற்குச் சென்றபோது, தன் பெண்ணின் பக்கத்தில் சூரியனைப் போல் பிரகாசமுள்ள, பேரழகு வாய்ந்த இளம் மனிதனொருவன் நிற்பதைக் கண்டார்.
பதம் 9.3.19
ராஜா துஹிதரம் ப்ராஹ க்ருத-பாதாபிவந்தனாம்
ஆசிஷஸ் சாப்ரயுஞ்ஜானோ நாதிப்ரீதி-மனா இவ
ராஜா—அரசர் (சர்யாதி); துஹிதரம்—மகளிடம்; ப்ராஹ—கூறினார்; க்ருத-பாத அபிவந்தனாம்—தந்தையின் பாதங்களில் அவள் வணங்கிய பிறகும்; ஆசிஷ:—அவளுக்கு ஆசீர்வாதம்; ச—மேலும்; அப்ரயுஞ்ஜான:—மகளுக்கு அளிக்காமல்; ந—இல்லை; அதி-ப்ரீதி-மனா:—அவ்வளவு திருப்தியடைய; இவ—அதுபோல்.
தன் பாதத்தில் வணங்கிய பெண்ணை விருப்பமில்லாதவர் போல் பார்த்த அரசர், அவளை ஆசீர்வதிக்காமலேயே பின்வருமாறு கூறினார்.
பதம் 9.3.20
சிகீர்ஷிதம் தே கிம் இதம் பதிஸ் த்வயா
ப்ரலம்பிதோ லோக-நமஸ்க்ருதோ முனி:
யத் த்வம் ஜரா-க்ரஸ்தம் அஸதி அஸம்மதம்
விஹாய ஜாரம் பஜஸே ‘மும் அத்வகம்
சிகீர்ஷிதம்—நீ செய்ய விரும்பியது; தே—உனது; கிம் இதம்—என்ன இது; பதி:—உன் கணவர்; த்வயா—உன்னால்; ப்ரலம்பித—வஞ்சிக்கப்பட்டார்; லோக-நமஸ்க்ருத:—அனைவராலும் மதிக்கப்படும்; முனி:—மாமுனிவர்; யத்—என்பதால்; த்வம்—நீ; ஜரா-க்ரஸ்தம்—வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்ட; அஸதி—நெறிதவறிய பெண்ணே; அஸம்மதம்—அவ்வளவு கவர்ச்சியற்ற; விஹாய—கைவிட்டு; ஜாரம்—கள்ளக்காதலனை; பஜஸே—நீ ஏற்றாயே; அமும்—இம்மனிதன்; அத்வகம்—தெருப்பிச்சைக்காரனுக்கு ஒப்பானவன்.
நெறிதவறிய பெண்ணே! இது என்ன உன் ஆசை இப்படி ஆயிற்று? அனைவராலும் மதிக்கப்படும் மிகவும் மரியாதைக்குரிய உன் கணவரை நீ வஞ்சித்துவிட்டாய். அவர் முதிர்ந்த வயதினால் நோய்வாய்ப்பட்டு, கவர்ச்சியற்றவராக இருப்பதால், அவரை விட்டு விலகி, தெருப் பிச்சைக்காரனைப் போல் காணப்படும் இந்த இளம் மனிதனை உன் கணவனாக ஏற்றாயே!
பதம் 9.3.21
கதம் மதிஸ் தே ‘வகதான்யதா ஸதாம்
குல-ப்ரஸுதே குல-தூஷணம் து இதம்
பிபர்ஷி ஜாரம் யத் அபத்ரபா குலம்
பிதுஸ் ச பர்துஸ் ச நயஸி அதஸ் தம:
கதம்—எப்படி; மதி: தே—உன்னுடைய மனது; அவகதா—இழிவடைந்தது; அன்யதா—இல்லையெனில்; ஸதாம்—மிகவும் மரியாதைக்குரியவரின்; குல-ப்ரஸுதே—குடும்பத்தில் பிறந்த என் மகளே; குல்-தூஷணம்—குடும்பத்திற்கு இழிவை ஏற்படுத்தியவளே; து—ஆனால்; இதம்—இந்த; பிபர்ஷி—நீ வைத்திருக்கிறாய்; ஜாரம்—ஒரு கள்ளக் காதலனை; யத்—அதுபோல்; அபத்ரபா—வெட்கமின்றி; குலம்—வம்சம்; பிது:—உன் தந்தையின்; ச—மற்றும்; பர்து:—உன் கணவரின்; ச—மேலும்; நயஸி—நீ கீழே கொண்டு செல்கிறாய்; அத: தம—இருளை அல்லது நரகத்தை நோக்கி.
மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த என் மகளே, நீ எப்படி உன் மனதை இந்த அளவிற்கு தாழ்த்திக் கொண்டாய்? வெட்கமில்லாமல் ஒரு கள்ளக் காதலனை உன்னால் எப்படி வைத்திருக்க முடிகிறது? இதனால் உன் தந்தையின் வம்சத்தையும், உன் கணவரின் வம்சத்தையும் நீ நரக வாழ்வை நோக்கி தாழ்ந்திவிடுவாய்.
பதம் 9.3.22
ஏவம் ப்ருவாணம் பிதரம் ஸ்மயமானா சுசி-ஸ்மிதா
உவாச தாத ஜாமாதா தவைஷ ப்ருகு-நந்தன:
ஏவம்—இவ்வாறு; ப்ருவாணம்—பேசி அவளைத் திட்டிய; பிதரம்—அவளது தந்தையிடம்; ஸ்மயமானா—சிரித்துக்கொண்டே (தான் கற்புடையவள் என்பதால்); சுசி-ஸ்மிதா—முகமலர்ச்சியுடன்; உவாச—பதிலளித்தாள்; தாத—அருமைத் தந்தையே; ஜாமாதா—மாப்பிள்ளை; தவ—உங்களுடைய; ஏஷ:—இந்த இளம் மனிதர்; ப்ருகு-நந்தன:—சியவன முனிவர்தான்.
ஆனால் தந்தையின் வசை மொழிகளைக் கேட்ட சுகன்யை, தன் கற்புடையமையின் பெருமிதத்தால் சிரித்துக் கொண்டே தன் தந்தையிடம்,”அப்பா, என்னருகில் நிற்கும் இந்த இளம் மனிதர், பிருகு வம்சத்தில் பிறந்த உங்கள் மாப்பிள்ளையான சியவன மகரிஷியே தான்” என்று கூறினாள்.
பதம் 9.3.23
சசம்ஸ பித்ரே தத் ஸர்வம் வயோ-ரூபாபிலம்பனம்
விஸ்மித: பரம-ப்ரீதஸ் தனயாம் பரிஷஸ்வஜே
சசம்ஸ—அவள் விவரித்தாள்; பித்ரே—தன் தந்தையிடம்; தத்—அது; ஸர்வம்—அனைத்தையும்; வய:—வயது மாற்றத்தின்; ரூப—மற்றும் அழகின்; அபிலம்பனம்—(உன் கணவரால்) எப்படி அடையப்பட்டது; விஸ்மித:—ஆச்சரியமடைந்து; பரம-ப்ரீதா:—மிகவும் மகிழ்ந்து; தனயாம்—அவரது மகளை; பரிஷஸ்வஜே—மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டார்.
இவ்வாறாக தன் கணவர் எப்படி ஒரு வாலிபனுக்குரிய அழகிய உடலைப் பெற்றார் என்பதை சுகன்யை விளக்கினாள். இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்த அரசர் பெருமகிழ்ச்சியுடன் அன்பிற்குரிய தன் மகளை அணைத்துக் கொண்டார்.
பதம் 9.3.24
ஸோமேன யாஜயன் வீரம் க்ரஹம் ஸோமஸ்ய சாக்ரஹீத்
அஸோம-போர் அபி அஸ்வினோஸ் ச்யவன: ஸ்வேன தேஜஸா
ஸோமேன—சோம பானத்துடன்; யாஜயன்—யாகம் செய்வித்து; வீரம்—அரசர் (சர்யாதி); க்ரஹம்—பாத்திரம் நிறைய; ஸோமஸ்ய—சோமபானத்தின்; ச—கூட; அக்ரஹீத்—அளித்தார்; அஸோம-போ:—சோமபானம் அருந்த அனுமதிக்கப்படவில்லை; அபி—என்றாலும்; அஸ்வினோ:—அஸ்வினி குமாரர்களின்; ச்யவன:—சியவன முனி; ஸ்வேன—அவரது சொந்த; தேஜஸா—தவ வலிமையால்.
சர்யாதி மகாராஜனை சோம-யாகம் செய்வித்த சியவன முனி, சோமபானத்தைப் பருகும் தகுதியற்றவர்களாக இருந்த அஸ்வினி குமாரர்களுக்குத் தமது தவ வலிமையால் ஒரு பாத்திரம் நிறைய சோமபானத்தை அளித்தார்.
பதம் 9.3.25
ஹந்தும் தம் ஆததே வஜ்ரம் ஸத்யோ மன்யுர் அமர்க்ஷித:
ஸவஜ்ரம் ஸ்தம்பயாம் ஆஸ புஜம் இந்ரஸ்ய பார்கவ:
ஹந்தும்—கொல்ல; தம்—அவரை (சியவனரை); ஆததே—இந்திரன் கையிலெடுத்தான்; வஜ்ரம்—தன் வஜ்ராயுதத்தை; ஸத்ய:—உடனே; மன்யு:—யோசனையின்றி கடுங்கோபம் கொண்டதால்; அமர்க்ஷித:—மிகவும் அமைதி குலைந்தவராய்; ஸ-வஜ்ரம்—வஜ்ராயுதத்துடன்; ஸ்தம்பயாம் ஆஸ—முடக்கிவிட்டார்; புஜம்—கரத்தை; இந்ரஸ்ய—இந்திரனின்; பார்கவ:—பிருகு வம்சத்தவரான சியவன முனி.
அமைதிகுலைந்து கோபமடைந்த இந்திரன் சியவன முனிவரைக் கொல்ல அவசரமாக வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்தார். ஆனால் சியவன முனி தமது சக்தியால்; வஜ்ராயுதத்தைப் பிடித்திருந்த இந்திரனின் கரத்தை செயலிழக்கச் செய்துவிட்டார்.
பதம் 9.3.26
அன்வஜானம்ஸ் தத: ஸர்வே க்ரஹம் ஸோமஸ்ய சாஸ்வினோ:
பிஷஜாவ் இதி யத் பூர்வம் ஸோமாஹுத்யா பஹிஷ்-க்ருதௌ
அன்வஜானன்—அவர்களது அனுமதியுடன்; தத:—அதன்பின்; ஸர்வே—எல்லா தேவர்களும்; க்ரஹம்—ஒரு பாத்திரம் நிறைய; ஸோமஸ்ய—சோம பானத்தை; ச—கூட; அஸ்வினோ:—அஸ்வினி குமாரர்களும்; பிஷஜௌ—வைத்தியர்கள் மட்டுமே என்ற போதிலும்; இதி—இவ்வாறு; யத்—என்பதால்; பூர்வம்—இதற்கு முன்; ஸோம-ஆஸுத்யா—சோமபானத்தில் பங்கு கொள்வதிலிருந்து; பஹிஷ்-க்ருதௌ—விலக்கப்பட்டிருந்த.
வெறும் வைத்தியர்களாக மட்டுமே இருந்த அஸ்வினி குமாரர்கள் யாகங்களில் சோமபானத்தைப் பருக அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும், அன்றுமுதல் அவர்கள் அதைப் பருக தேவர்கள் அனுமதித்தனர்.
பதம் 9.3.27
உத்தானபர்ஹிர் ஆனர்தோ பூரிஷேண இதி த்ரய:
சர்யாதேர் அபவன் புத்ரா ஆனர்தாத் ரேவதோ ‘பவத்
உத்தானபர்ஹி:—உத்தானபர்ஷி; ஆனர்த—ஆனர்த்தன்; பூரிஷேண:—பூரிஷேணன்; இதி—இவ்வாறு; த்ரய:—மூன்று; சர்யாதே:—சர்யாதி மகாராஜனின்; அபவன்—பெறப்பட்டனர்; புத்ரா:—மகன்கள்; ஆனர்தாத்—ஆனர்த்தனிலிருந்து; ரேவத:—ரேவதன்; அபவத்—பிறந்தார்.
உத்தானபர்ஹி, ஆனர்த்தன் மற்றும் பூரிஷேணன் என்ற மூன்று மகன்களை சர்யாதி மகராஜன் பெற்றார். ஆனர்த்தனிலிருந்து ரேவதன் என்ற ஒரு மகன் வந்தார்.
பதம் 9.3.28
ஸோ ‘ன்த:-ஸமுத்ரே நகரீம் வினிர்மாய குசஸ்தலீம்
ஆஸ்திதோ ‘புங்க்த விஷயான் ஆனர்தாதீன் அரிந்தம
தஸ்ய புத்ர-சதம் ஜக்ஞே ககுத்மி-ஜ்யேஷ்டம் உத்தமம்
ஸ:—ரேவதன்; அந்த:-ஸமுத்ரே—சமுத்திரத்தின் ஆழத்தில்; நகரீம்—ஒரு நகரத்தை; வினிர்மாய—கட்டியபின்; குசஸ்தலீம்—குசஸ்தலி என்ற; ஆஸ்தித:—அங்கு வாழ்ந்து வந்தார்; அபுங்க்த—பெளதிக இன்பத்தை அனுபவித்தார்; விஷயான்—இராஜ்யங்கள்; ஆனர்த-ஆதீன்—ஆனர்த்தனும் மற்றவர்களும்; அரிம்-தம—எதிரிகளை ஒடுக்குபவரான பரீட்சித்து மகாராஜனே; தஸ்ய—அவரது; புத்ர-சதம்—நூறு புத்திரர்கள்; ஜக்ஞே—பிறந்தனர்; ககுத்மி-ஜ்யேஷ்டம்—அவர்களில் மூத்தவராக ககுத்மி இருந்தார்; உத்தமம்—மிகவும் சக்திவாய்ந்த, செல்வச் சிறப்புடைய.
எதிரிகளை ஒடுக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, இந்த ரேவதன் சமுத்திரத்தின் ஆழத்தில் குசஸ்தலி என்ற இராஜ்யத்தை நிர்மாணித்தார். அங்கு வாழ்ந்து கொண்டே ஆனர்த்தம் முதலிய தேசங்களை அவர் ஆண்டு வந்தார். அவருக்கு, ககுத்மியை மூத்தவராகக் கொண்ட நூறு சிறந்த மகன்கள் இருந்தனர்.
பதம் 9.3.29
ககுத்மீ ரேவதீம் கன்யாம் ஸ்வாம் ஆதாய விபும் கத:
புத்ரியா வரம் பரிப்ரஷ்டும் ப்ரஹ்மலோகம் அபாவ்ருதம்
ககுத்மீ—ககுத்மி மகாராஜன்; ரேவதீம்—ரேவதி என்ற; கன்யாம்—ககுத்மியின் மகள்; ஸ்வாம்—அவரது சொந்த; ஆதாய—அழைத்துக் கொண்டு; விபும்—பிரம்மதேவரிடம்; கத:—அவர் சென்றார்; புத்ரியா:—மகளின்; வரம்—வரன்; பரிப்ரஷ்டும்—பற்றி வினவ; ப்ரஹ்மலோகம்—பிரம்ம லோகத்திற்கு; அபாவ்ருதம்—முக்குணங்களுக்கு மேற்பட்ட.
ககுத்மி, தம் சொந்த மகளான ரேவதியை அழைத்துக் கொண்டு, இயற்கையின் முக்குணங்களுக்கு மேற்பட்டதான பிரம்மலோகத்திலுள்ள பிரம்மதேவரிடம் சென்று, அவளுக்கேற்ற ஒரு வரனைப் பற்றி விசாரித்தார்.
பதம் 9.3.30
ஆவர்தமானே காந்தர்வே ஸ்திதோ ‘லப்த க்ஷண: க்ஷணம்
தத்-அந்த ஆத்யம் ஆனம்ய ஸ்வாபிப்ராயம் ஞவேதயத்
ஆவர்தமானே—ஈடுபட்டிருந்ததால்; காந்தர்வே—காந்தர்வர்களின் பாடல்களைக் கேட்டு ரசிப்பதில்; ஸ்தித:—இருந்தது; அலப்த-க்ஷண:—பேசுவதற்கு நேரம் இல்லாமல்; க்ஷணம்—நொடிப்பொழுதும்; தத்-அந்தே—அது முடிவுற்றதும்; ஆத்யம்—பிரபஞ்சத்தின் மூல ஆசானுக்கு (பிரம்மதேவருக்கு); ஆனம்ய—வணக்கம் செலுத்திய பின்; ஸ்வ-அபிப்ராயம்—அவரது சொந்த விருப்பத்தை; ஞவேதயத்—ககுத்மி தெரிவித்தார்.
ககுத்மி அங்கு சென்றபொழுது, பிரம்மதேவர் கந்தர்வர்களின் இசை நிகழ்ச்சிகளைக் கேட்பதில் ஈடுபட்டிருந்ததால், ஒரு நொடிப் பொழுது அவருடன் பேசுவதற்குக்கூட அவருக்கு நேரம் இருக்கவில்லை. எனவே ககுத்மி காத்திருந்தார். இசை நிகழ்ச்சி முடிவுற்றதும் பிரம்ம தேவரை வணங்கியெழுந்த ககுத்மி, தன் நீண்ட நாள் ஆசையைத் தெரிவித்தார்.
பதம் 9.3.31
தச் ச்ருத்வா பகவான் ப்ரஹ்மா ப்ரஹஸ்ய தம் உவாச ஹ
அஹோ ராஜன் நிருத்தஸ் தே காலேன ஹ்ருதி யே க்ருதா:
தத்—அதை; ஸ்ருத்வா—கேட்ட; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; ப்ரஹ்மா—பிரம்மதேவர்; ப்ரஹஸ்ய—சிரித்தபின்; தம்—ககுத்மி மகாராஜனிடம்; உவாச ஹ—கூறினார்; அஹோ—அந்தோ; ராஜன்—அரசே; நிருத்தா:—எல்லோரும் இறந்துவிட்டனர்; தே—அவர்கள் அனைவரும்; காலேன—காலத்தின் போக்கால்; ஹ்ருதி—இதயத்தில்; யே—அவர்கள் அனைவரும்; க்ருதா:—மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கலாம் என்று நீர் முடிவு செய்திருந்த.
அவரது வார்த்தைகளைக் கேட்டபின், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்ம தேவர் உரக்க நகைத்து ககுத்மியிடம் கூறினார்: அரசே, மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரையெல்லாம் நீர் இதயத்தில் நினைத்திருந்தீரோ, அவர்கள் அனைவரும் காலத்தின் போக்கினால் இறந்துவிட்டனர்.
பதம் 9.3.32
தத் புத்ர-பௌத்ர-நப்த்ரூணாம் கோத்ராணி ச ந ஸ்ருண்மஹே
காலோ ‘பியாதஸ் த்ரி-நவ-சதுர்-யுக-விகல்பித:
தத்—அங்கு; புத்ர—மகன்களின்; பௌத்ர—பேரன்களின்; நப்த்ரூணாம்—மற்றும் சந்ததிகளின்; கோத்ராணி—குடும்ப வம்சங்கள்; ச—கூட; ந—இல்லை; ஸ்ருண்மஹே—அதைப்பற்றி நாம் கேட்கிறோம்; கால:—காலம்; அபியாத:—கடந்து விட்டது; த்ரி—மூன்று; நவ—ஒன்பது; சதுர்யுக—நான்கு யுகங்கள் (சத்திய, திரேதா, துவாபர மற்றும் கலி); விகல்பித:—இவ்வாறு அளவிடப்படும்.
இருபத்தேழு சதுர்-யுகங்கள் கடந்துவிட்டன. யாரை நீர் முடிவு செய்திருந்தீரோ அவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய மகன்களும், பேரன்களும், பிறவம்சத்தினரும் கூட மறைந்துவிட்டனர். அவர்களுடைய பெயர்களைக் கூட உம்மால் கேட்க முடியாது.
பதம் 9.3.33
தத் கச்ச தேவ-தேவாம்சோ பலதேவோ மஹா-பல:
கன்யா-ரத்னம் இதம் ராஜன் நர-ரத்னாய தேஹி போ:
தத்—எனவே; கச்ச—நீர்செல்லும்; தேவ—தேவ; அம்ச:—அவருடைய அம்சமாக இருப்பவர் பகவான் விஷ்ணு; பலதேவ:—பலதேவர் எனப்படும்; மஹா-பல:—பரம சக்திவாய்ந்தவரான; கன்யா-ரத்னம்—உமது அழகிய மகளை; இதம்—இந்த; ராஜன்—ராஜனே; நர-ரத்னாய—என்றும் இளமையுடன் இருப்பவரான பரமபுருஷருக்கு; தேஹி—அவருக்கே (திருமணம் செய்து) கொடுத்து விடும்; போ:—அரசே.
அரசே, இங்கிருந்து கிளம்பிச் சென்று, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும், பகவான் பலதேவருக்கு உமது மகளைக் கொடும். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராவார். உண்மையில் அவர் பரமபுருஷராவார். அவரது ஓர் அம்சமாக இருப்பவர்தான் பகவான் விஷ்ணு. அவருக்கு உமது மகளைக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
பதம் 9.3.34
புவோ பாராவதாராய பகவான் பூத-பாவன:
அவதீர்ணோ நிஜாம்சேன புண்ய-ஸ்ரவண-கீர்த்தன:
புவ:—உலகின்; பார-அவதாராய—பாரத்தைக் குறைக்க; பகவான்—பரமபுருஷர்; பூத-பாவன:—எல்லா ஜீவராசிகளுக்கும் எப்பொழுதும் நன்மை செய்பவர்; அவதீர்ண:—இப்பொழுது அவர் அவதரித்திருக்கிறார்; நிஜ-அம்சேன—அவரது எல்லா உபகரணங்களுடனும்; புண்ய-ஸ்ரவண-கீர்த்தன:—அவரைப்பற்றி கேட்பதாலும், பாடுவதாலும் அவர் வழிபடப்படுகிறார். இம்முறையால் ஒருவன் தூய்மையடைகிறான்.
பகவான் பலதேவர் பரமபுருஷராவார். அவரைப் பற்றி கேட்பவரும், பாடுபவரும் தூய்மையடைகிறார். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர் எப்பொழுதும் நன்மை செய்பவர் என்பதால், உலகைப் புனிதப்படுத்தவும், அதன் பாரத்தைக் குறைக்கவும், அவரது எல்லா உபகரணங்களுடனும் அவர் பூமியில் அவதரித்துள்ளார்.
பதம் 9.3.35
இதி ஆதிஷ்டோ ‘பிவந்யாஜம் ந்ருப: ஸ்வ-புரம் ஆகத:
த்யக்தம் புண்ய-ஜன-த்ராஸாத் ப்ராத்ருபிர் திக்ஷு அவஸ்திதை:
இதி—இவ்வாறு; ஆதிஷ்ட:—பிரம்மதேவரால் உத்தரவிடப்பட்டு; அபிவந்ய—வணங்கியபின்; அஜம்—பிரம்மதேவரை; ந்ருப:—அரசர்; ஸ்வ-புரம்—அவரது சொந்த வசிப்பிடத்திற்கு; ஆகத:—திரும்பினார்; த்யக்தம்—காலியாகக் கிடந்த; புண்ய-ஜன—உயர்ந்த ஜீவராசிகளின்; த்ராஷாத்—அவர்களிடமுள்ள பயத்தினால்; ப்ராத்ருபி:—அவரது சகோரர்களால்; திக்ஷு—வெவ்வேறு திசைகளில்; அவஸ்திதை:—வசித்து வந்தவர்கள்.
பிரம்ம தேவரிடமிருந்து இந்த உத்தரவைப் பெற்ற ககுத்மி, அவரை வணங்கிவிட்டு தமது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினார். பிறகு யக்ஷர்களைப் போன்ற உயர்ந்த ஜீவராசிகளிடம் கொண்ட பயத்தினால் எல்லாத் திசைகளிலும் சிதறி வாழ்ந்துவந்த தன் சகோதரர்களாலும் மற்ற உறவினர்களாலும் கைவிடப்பட்டு, தன் வசிப்பிடம் காலியாகக் கிடப்பதை அவர் கண்டார்.
பதம் 9.3.36
ஸுதாம் தத்வானவத்யாங்கீம் பலாய பல-சாலினே
பதரி-ஆக்யம் கதோ ராஜா தப்தும் நாராயணாஸ்ரமம்
ஸுதாம்—தன் மகளை; தத்வா—கொடுத்தபின்; அனவத்ய-அங்கீம்—பரிபூரணமான தேகமுடைய; பலாய—பகவான் பலதேவருக்கு; பல-சாலினே—மிகவும் பலசாலியான, பரம சக்தி வாய்ந்த; பதரீ-ஆக்யம்—பத்ரிகாசிரமம் என்ற; கத:—அவர் சென்றார்; ராஜா—அரசர்; தப்தும்—தவமியற்ற; நாராயண-ஆஸ்ரமம்—நர-நாராயணரின் ஆசிரமத்திற்கு.
பிறகு மிகவும் அழகுவாய்ந்த தன் மகளைப் பரமசக்தி படைத்தவரான பலதேவருக்குக் கொடுத்தபின், உலக வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற அரசர், நர-நாராயணரை திருப்திப்படுத்துவதற்காக பத்ரிகாசிரமத்திற்குச் சென்றார்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “சுகன்யை, சியவன முனி திருமணம்” எனும் தலைப்பை கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.