அத்தியாயம் – 21
பலி மகாராஜன் பகவானால்
கைது செய்யப்படுதல்
பதம் 8.21.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பகவான் வாமனதேவருடைய பாதவிரல்களின் நகங்களிலிருந்து வெளியாகும், கண்களை கூசச் செய்யும் பிரகாசத்தால், அவரது வசிப்பிடமான பிரம்ம லோகத்தின் பிரகாசம் குறைந்து போனதைக் கண்டு, ஒரு தாமரை மலரிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவர் பரமபுருஷ பகவானை அணுகினார். மரீசியை தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் மற்றும் சனந்தனரைப் போன்ற யோகிகள் ஆகிய அனைவரும் பிரம்மதேவருடன் சென்றனர். ஆனால் அரசே, கண்களை கூசச் செய்யும் அப்பிரகாசத்தின் முன், பிரம்மதேவரும், அவரது சகாக்களும் கூட அற்பமானவர்களாகக் காணப்பட்டனர்.
பதங்கள் 8.21.2 – 8.21.3 : புலனடக்கம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றில் பூரணத்துவம் பெற்றவர்கள், மேலும் நியாயம், சரித்திரம், பொதுக் கல்வி மற்றும் கல்பம் (புராதன சரித்திர சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டது) எனப்படும் வேத இலக்கியம் ஆகியவற்றில் வல்லுனர்கள் ஆகியோர், பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடுவதற்காக வந்த, புண்ணிய புருஷர்களில் அடங்குவர். மற்றவர்கள் பிரம்ம-சம்ஹிதையைப் போன்ற வேத முடிவுகளிலும், மற்றெல்லா வேதங்களைப் பற்றிய (சாம, யஜுர், ரிக் மற்றும் அதர்வ) அறிவிலும், மற்றும் பிற்சேர்க்கையாக உள்ள வேத அறிவிலும் (ஆயுர்வேதம், தனுர்வேதம் முதலானவை) வல்லுனர்களாவர். மற்றவர்கள் யோகப் பயிற்சியினால் உண்டான ஆன்மீக அறிவின் மூலமாக பலன் நோக்குக் கருமங்களின் பிரதிபலன்களிலிருந்து விடுபட்டவர்களாவர். இன்னும் சிலர் சாதாரண கருமத்தினால் அல்லாமல் வேத அறிவின் முன்னேற்றத்தினால் பிரம்மலோகத்தை அடைந்தவர்களாவர். மேல் நோக்கி உயர்த்தப்பட்ட பரமபுருஷரின் தாமரைப் பாதத்தை நீரைக் கொண்டு பக்தியுடன் வழிபட்டபின், பகவான் விஷ்ணுவின் நாபியிலிருந்து உற்பத்தியாகும் தாமரையில் பிறந்தவரான பிரம்மதேவர் பகவானை ஸ்தோதிரம் செய்தார்.
பதம் 8.21.4 : ராஜனே, பிரம்மதேவரின் கமண்டலத்திலிருந்த நீரால் பகவான் வாமனதேவரின் தாமரைப் பாதம் கழுவப்பட்டது. பகவான் உருக்ரம என்றும் அறியப்படுகிறார். அற்புத நடிகர் என்பது இதன் பொருளாகும். இவ்வாறாக அந்த நீர் மிகவும் தூய்மையடைந்ததால், அது கங்கை நீராக மாற்றப்பட்டது. பரமபுருஷரின் தூய புகழ் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்துவதைப் போலவே, அதுவும் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்திக் கொண்டு ஆகாயத்திலிருந்து கீழ்நோக்கி உருண்டோடியது.
பதம் 8.21.5 : பிரம்ம தேவர் மற்றும் பல்வேறு கிரகங்களை ஆளும்தேவர்கள் ஆகிய அனைவரும், அவர்களது உன்னத எஜமானரும், சர்வ வியாபகமுடைய உருவிலிருந்து அவரது சுய உருவிற்குத் தம்மை சுருக்கிக் கொண்டவருமான பகவான் வாமனதேவரை வழிபடத் துவங்கினர். இவ்வழிபாட்டுக்காக எல்லாப் பொருட்களையும் அவர்கள் சேகரித்தனர்.
பதங்கள் 8.21.6 – 8.21.7 : பகவானுக்கு நறுமணமுள்ள மலர்கள், நீர், பாத்தியம், அர்க்கியம், சந்தனப்பசை மற்றும் அகுரு பசை, தூபம், தீபம், பொரி, முழு தானியங்கள், பழங்கள், வேர்கள் மற்றும் முளைகள் ஆகியவற்றை நிவேதனம் செய்து பகாவனை அவர்கள் வழிபட்டனர். அவ்வாறு செய்யும் பொழுது, பகவானின் பெருமைக்குரிய செயல்களைக் குறிக்கும் ஸ்தோத்திரங்களைப் பாடி, “ஜய்! ஜய்!” என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள் நடனமாடினர், இசைக் கருவிகளை வாசித்தனர், பாடினர், சங்குகளை ஊதினர் மற்றும் மேளங்களையும் கொட்டினர். இவ்விதமாக பகவானை அவர்கள் வழிபட்டனர்.
பதம் 8.21.8 : கரடிகளின் ராஜனான ஜாம்பவானும் கூட விழாவில் பங்கேற்றார். எல்லாத் திசைகளிலும் தனது கொம்பை ஊதி ஓசையெழுப்பிய அவர், பகவான் வாமன தேவரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பெரியதொரு விழாவைப் பிரகடனம் செய்தார்.
பதம் 8.21.9 : பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள், யாகம் செய்வதில் உறுதியாக இருந்த தங்கள் எஜமானர், மூன்றடி நிலத்தை யாசிப்பதெனும் சாக்குடன் வந்த வாமனதேவரிடம் அவரது உடைமைகள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டதைக் கண்டு, மிகவும் கோபத்துடன் பின்வருமாறு கூறினர்.
பதம் 8.21.10 : “இந்த வாமனர் நிச்சயமாக ஒரு பிராமணரல்ல. இவர் மிகப்பெரிய வஞ்சகரான பகவான் விஷ்ணுவேயாவார். ஒரு பிராமணரின் உருவை ஏற்று தமது சுயரூபத்தை மறைத்துக் கொண்டுள்ள இவர், தேவர்களின் நன்மைக்காக செயற்படுகிறார்.
பதம் 8.21.11 : “நமது எஜமானரான பலி மகாராஜன் யாகத்தை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பதால், தண்டிக்கும் சக்தியைக் கைவிட்டுவிட்டார். நமது நிரந்தர எதிரியான விஷ்ணு, இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு பிரம்மச்சாரி யாசகராக உடையணிந்து, அவரது உடைமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விட்டார்.
பதம் 8.21.12 : “நமது தலைவரான பலி மகாராஜன் எப்பொழுதும் சத்தியத்தில் உறுதி கொண்டவராவார். யாகம் செய்வதை அவர் துவங்கியிருப்பதால், முக்கியமாக தற்போது இது முற்றிலும் உண்மையாகும். பிராமணர்களிடம் அவர் எப்பொழுதும் அன்பும், கருணையும் கொண்டவர். மேலும் எச்சமயத்திலும் அவரால் பொய் பேச முடியாது.
பதம் 8.21.13 : ஆகவே பகவான் விஷ்ணுவாகிய இந்த வாமனதேவரைக் கொன்று விடுவது நமது கடமையாகும். இது நமது மதக் கொள்கையும், நம் தலைவருக்கு சேவை செய்வதற்குரிய ஒரு வழியுமாகும்.” இந்த முடிவை எடுத்தபின், பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள் வாமன தேவரைக் கொல்லும் நோக்கத்துடன், அவர்களுடைய பல்வேறு ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.
பதம் 8.21.14 : ராஜனே, தங்களது வழக்கமான கோபத்தினால் தூண்டப்பட்டு, தங்களுடைய நீண்ட ஈட்டிகளையும், சூலங்களையும் கையில் எடுத்துக் கொண்ட அசுரர்கள், பலி மகாராஜனின் விருப்பத்திற்கெதிராக, பகவான் வாமனதேவரைக் கொல்ல அவரை நோக்கி முன்னேறிச் சென்றனர்.
பதம் 8.21.15 : ராஜனே, அசுர வீரர்கள் கோபத்துடன், வருவதைக் கண்ட பகவான் விஷ்ணுவின் சகாக்கள் புன்னகை செய்தனர். பிறகு தங்களது ஆயுதங்களை எடுத்து, அசுரர்கள் தங்களது முயற்சிகளைத் தொடர முடியாதபடி அவர்களைத் தடுத்து விட்டனர்.
பதங்கள் 8.21.16 – 8.21.17 : நந்த, சுனந்த, ஜயன், விஜயன், பிரபலன், பலன், குமுதன், குமுதாக்ஷன், விஸ்வக்ஷேனர், பதத்ரிராட் (கருடன்), ஜயந்தன், ஸ்ருததேவர், புஷ்பதந்தர் மற்றும் ஸாத்வதர் ஆகிய அனைவரும் பகவான் விஷ்ணுவின் சகாக்களாவர். அவர்கள் பத்தாயிரம் யானைகளுக்குச் சமமான பலம் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் அசுரர்களின் வீரர்களைக் கொல்ல ஆரம்பித்தனர்.
பதம் 8.21.18 : தமது சொந்த வீரர்கள் பகவான் விஷ்ணுவின் சகாக்களால் கொல்லப்படுவதைக் கண்ட பலி மகாராஜன், சுக்ராசார்யரின் சாபத்தை நினைவிற் கொண்டு, தமது வீரர்கள் தொடர்ந்து சண்டை செய்வதை அனுமதிக்கவில்லை.
பதம் 8.21.19 : ஓ விப்ரசித்தி, ராஹு, நேமி தயவுசெய்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்! சண்டை செய்ய வேண்டாம். உடனே நிறுத்துங்கள். ஏனெனில் தற்போதைய நேரம் நமக்கு அனுகூலமாக இல்லை.
பதம் 8.21.20 : தைதியர்களே, எல்லா ஜீவராசிகளுக்கும் இன்ப, துன்பங்களை அளிக்கக் கூடியவரான பரம்புருஷ பகவானை, மனித முயற்சியால் ஒருவராலும் வெல்ல முடியாது.
பதம் 8.21.21 : பரமபுருஷரைப் பிரதிநிதிக்கும் உன்னதமான காலம் முன்பு நமக்கு ஆதரவாகவும், தேவர்களுக்கு ஆதரவற்றதாகவும் இருந்தது. ஆனால் அதே காலம் இப்பொழுது நமக்கு எதிராக நிற்கிறது.
பதம் 8.21.22 : பரமபுருஷ பகவானின் பிரதிநிதியாகிய காலத்தை, பெளதிக சக்தியாலோ, மந்திரிகளின் ஆலோசனையாலோ, புத்தியாலோ, தந்திரத்தாலோ, கோட்டைகளாலோ, மாய மந்திரங்களாலோ, மருந்துகளாலோ, மூலிகைகளாலோ அல்லது வேறெந்த வழியாலோ ஒருவராலும் வெல்ல முடியாது.
பதம் 8.21.23 : முன்பு தெய்வாதீனமாக, அதிக எண்ணிக்கைக் கொண்ட பகவான் விஷ்ணுவின் இத்தகைய ஆதரவாளர்களை நீங்கள் தோற்கடித்தீர்கள். ஆனால் அதே ஆதரவாளர்கள் இன்று நம்மை வென்றுவிட்ட ஆனந்தத்தில் சிங்கங்களைப் போல் கர்ஜிக்கின்றனர்.
பதம் 8.21.24 : கடவுளருள் நமக்கு ஆதரவாக இருந்தாலன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. ஆகவே, அவர்களை வெல்லுவது சாத்தியமாகக் கூடிய அந்த அனுகூலமான காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்.
பதம் 8.21.25 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ராஜனே, அவர்களது எஜமானரான பலி மகாராஜனின் உத்தரவினாலும், விஷ்ணுவின் வீரர்களால் விரட்டப்பட்டதாலும், அசுரத் தலைவர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகிய அனைவரும் பிரபஞ்சத்தின் கீழான பிரதேசங்களினுள் புகுந்தனர்.
பதம் 8.21.26 : அதன்பிறகு, சோம-பானம் பருகும் நாளில், யாகம் நிறைவேறியபின், தனது பெருமானின் விருப்பத்தை அறிந்த, பறவைகளின் ராஜனான கருடன் நாக-பாசத்தால் (வருணனின் கயிறுகளால்) பலி மகாராஜனை சிறைப்படுத்தினார்.
பதம் 8.21.27 : மிகவும் சக்தி வாய்ந்தவரான பகவான் விஷ்ணுவால் பலி மகாராஜன் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட போது, பிரபஞ்சத்தின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களிலுமுள்ள எல்லாத் திசைகளிலும் கூக்குரல் மிகுந்த புலம்பலொலி எழுந்தது.
பதம் 8.21.28 : ராஜனே, யாரை பகவான் நாக பாசத்தால் சிறைப்படுத்தி இருக்கிறாரோ, அந்த தயாள குணம் கொண்டவரும், புகழ் பெற்றவருமான பலி மகாராஜனிடம் முழுமுதற் கடவுளாகிய வாமனதேவர் பிறகு பேசினார். பலி மகாராஜன் அவரது தேகத்தின் எல்லா ஒளியையும் இழந்துவிட்டபோதிலும், அவரது தீர்மானத்தில் அவர் உறுதியாக இருந்தார்.
பதம் 8.21.29 : அசுர ராஜனே, எனக்கு மூன்றடி நிலம் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறீர். ஆனால் இரு அடிகளால் நான் பிரபஞ்சம் முழுவதையும் அளந்துவிட்டேன். எனது மூன்றாவது அடியை நான் எங்கு வைப்பது என்பதைப் பற்றி இப்போது யோசித்துப் பாரும்.
பதம் 8.21.30 : நட்சத்திரங்கள் மற்றும் சூரிய, சந்திரர்கள் வரையும், மழை பொழியும் மேகங்கள் வரையும் உள்ள, பிரபஞ்சத்திலுள்ள எல்லா நிலமும் உமக்குச் சொந்தமாகும்.
பதம் 8.21.31 : இவ்வுடமைகளில், ஓரடியால் நான் பூர்லோகத்தை அளந்துவிட்டேன். எனது உடலால் எல்லாத் திசைகளிலும் உள்ள ஆகாயம் முழுவதையும் நான் ஆக்கிரமித்துக் கொண்டேன். உமது முன்னிலையிலேயே, எனது இரண்டாவது அடியால் உயர் கிரக அமைப்பையும் நான் அளந்துவிட்டேன்.
பதம் 8.21.32 : உமது வாக்குறுதிக்கேற்ப உம்மால் தானம் செய்ய இயலவில்லை. இதனால் நீர் கீழ்நோக்கி நரகலோகங்களுக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்பது விதி. எனவே, உமது ஆன்மீக குருவான சுக்ராசார்யரின் உத்தரவுக்கேற்ப, இப்போது கீழே சென்று அங்கு வாழ்வீராக.
பதம் 8.21.33 : யாசகர் ஒருவருக்கு அளிப்பதாக வாக்குறுதி செய்ததை முறையாக நிறைவேற்றாதவன், சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதற்குப் பதிலாக அல்லது தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு நரகம் போன்ற வாழ்வு நிலைக்கு இழிவடைகிறான்.
பதம் 8.21.34 : உமது உடைமைகளில் பொய்யான கர்வம் கொண்டு, எனக்கு நிலம் கொடுப்பதாக நீர் வாக்களித்தீர். ஆனால் அவ்வாக்குறுதியை உம்மால் நிறைவேற்ற இயலவில்லை. எனவே, உமது வாக்குறுதி பொய் என்பதால், நீர் நரக வாழ்வில் சில ஆண்டுகள் வாழவேண்டும்.