அத்தியாயம் – 18
குள்ள:அவதாரமான
பகவான் வாமனதேவர்
பதம் 8.18.1
ஸ்ரீ-சுக உவாச
இத்தம் விரிஞ்ச-ஸ்துத-கர்ம-வீர்ய:
ப்ராதுர்பபூவாம்ருத-பூர் அதித்யாம்
சதுர்-புஜ: சங்க-கதாப்ஜ-சக்ர:
பிசங்க-வாஸா நலினாயதேக்ஷண:
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இத்தம்—இவ்விதமாக; விரிஞ்ச-ஸ்துத-கர்ம-வீர்ய:—யாருடைய செயல்களும், மகத்துவங்களும் பிரம்மதேவரால் சதா போற்றப்படுகின்றனவோ அந்த முழுமுதற் கடவுள்; ப்ராதுர்பபூவ—தோன்றினார்; அம்ருத-பூ:—எப்பொழுதும் மரணமற்ற தோற்றத்தையுடையவர்; அதித்யாம்—அதிதியின் கருவிலிருந்து; சது:-புஜ:—நான்கு கரங்களுடைய; சங்க-கதா-அப்ஜ-சக்ர:—சங்கு, கதை, தாமரை மற்றும் சக்கரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள; பிசங்க-வாஸா:—மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள; நலின-ஆயத-ஈக்ஷண:—தாமரை இதழ்களைப் போன்ற மலரும் கண்களையுடைய.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பரமபுருஷரின் செயல்களையும், மகத்துவங்களையும் பிரம்மதேவர் புகழ்ந்து பேசியபின், சாதாரண ஒரு ஜீவராசியைப் போல் மரணத்திற்கு ஒருபோதும் உட்படாதவரான முழுமுதற் கடவுள், அதிதியின், கருவிலிருந்து தோன்றினார். அவரது நான்கு கரங்கள் சங்கு, கதை, தாமரை மற்றும் சக்கரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார். அவரது கண்கள் மலரும் தாமரை இதழ்களைப் போல் காணப்பட்டன.
பதம் 8.18.2
ஸ்யாமாவதாதோ ஜஷ-ராஜ-குண்டல-
த்விஷோல்லஸச்-ச்ரீ-வதனாம்புஜ:புமான்
ஸ்ரீவத்ஸ-வக்ஷா பலயாங்கதோல்லஸத்-
கிரீட-காஞ்சீ-குண-சாரு-நூபுர:
ஸ்யாம-அவதாத:—களங்கத்திலிருந்து விடுபட்ட கருமை நிற உடலையுடைய; ஜஷ-ராஜ-குண்டல—சுறாமீன்களின் வடிவில் செய்யப்பட்டிருந்த இரு குண்டலங்களின்; த்விஷா—பிரகாசத்தால்; உல்லஸத்—கண் கூசச் செய்யும்; ஸ்ரீவதன-அம்புஜ:—அழகியதொரு தாமரை முகத்தையுடைய; புமான்—பரமபுருஷர்; ஸ்ரீவத்ஸ-வக்ஷ—அவரது மார்பின் மீது ஸ்ரீவத்ஸ-அடையாளத்துடன்; பலய—காப்புகள்; அங்கத—கடகங்கள்; உல்லஸத்—ஜொலிக்கும்; கிரீட—கிரீடம்; காஞ்சீ—கச்சை; குண—பூணூல்; சாரு—அழகிய; நூபுர:—கொலுசுகள்.
கருமை நிறமுடைய முழுமுதற் கடவுளின் உடல் எல்லாக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டதாகும். தாமரை போன்ற அவரது முகம் சுறா மீன்களைப் போன்ற குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளித்தது. அவரது மார்பின் மீது ஸ்ரீவத்ஸ அடையாளம் இருந்தது. அவர் தமது மணிக்கட்டுகளில் காப்புகளையும், கரங்களில் கடங்களையும், தலையில் ஒரு கிரீடத்தையும், இடுப்பில் ஒரு கச்சையையும், அவரது மார்பிற்கு குறுக்கே ஒரு பூணூலையும், அவரது தாமரைப் பாதங்களை அலங்கரிக்கும் கொலுசுகளையும் அணிந்திருந்தார்.
பதம் 8.18.3
மது-வ்ரத-வ்ராத-விகுஷ்டயா ஸ்வயா
விராஜித: ஸ்ரீ-வனமாலயா ஹரி:
ப்ரஜாபதேர் வேஸ்ம-தம: ஸ்வரோசிஷா
வினாசயன் கண்ட-நிவிஷ்ட-கௌஸ்துப:
மது-வ்ரத—எப்பொழுதும் தேனைத் தேடியலையும் தேனீக்களின்; வ்ராத—கூட்டத்தால்; விகுஷ்டயா—ஓசை எழுப்பும்; ஸ்வயா—அசாதாரணமான; விராஜித:—அமைந்துள்ள; ஸ்ரீ—அழகிய; வன-மாலயா—ஒரு மலர் மாலையுடன்; ஹரி:—பரமபுருஷர்; ப்ரஜாபதே:—பிரஜாபதியான கஸ்யப முனிவரின்; வேஸ்ம-தம:—இல்லத்தின் இருளை; ஸ்வ-ரோசிஷா—அவரது சுயப் பிரகாசத்தினால்; வினாசயன்—அழித்து; கண்ட—கழுத்தில்; நிவிஷ்ட—அணிந்திருந்தார்; கௌஸ்துப:—கௌஸ்துப மணியை.
ஓர் அசாதாரணமான அழகிய மலர்மாலை அவரது மார்பை அலங்கரித்தது. மேலும் அம்மலர்கள் மிக மிக நறுமணம் உடையவையாக இருந்ததால், பெரிய தேனீக்களின் கூட்டமொன்று அவற்றின் இயல்பான ரீங்கார ஓசைகளை எழுப்பியவாறு, தேனுக்காக அம்மலர்களைச் சூழ்ந்து கொண்டன. கழுத்தில் கௌஸ்துப மணியை அணிந்தவாறு பகவான் தோன்றியபோது, அவரது பிரகாசமானது, பிரஜாபதியான கஸ்யபரின் இல்லத்திலிருந்து இருளைப் போக்கியது.
பதம் 8.18.4
திச: ப்ரஸேது: ஸலிலாசயாஸ் ததா
ப்ரஜா: ப்ரஹ்ருஷ்டா ருதவோ குணான்விதா:
த்யௌர் அந்தரீக்ஷம் க்ஷிதிர் அக்னி-ஜிஹ்வா
காவோ த்விஜா: ஸஞ்ஜஹ்ருஷுர் நகாஸ் ச
திச—எல்லாத் திசைகளிலும்; ப்ரஸேது—மகிழ்ச்சி பொங்கியது; ஸலில—நீரின்; ஆசயா:—நீர்த் தேக்கங்கள்; ததா—அப்போது; ப்ரஜா:—எல்லா ஜீவராசிகளும்; ப்ரஹ்ருஷ்டா—பெரு மகிழ்ச்சி அடைந்தன; ருதவ:—பருவ காலங்கள்; குண-அன்விதா:—அவற்றிற்குரிய தன்மைகளை பூரணமாக வெளிப்படுத்தின; த்யௌ:—உயர் கிரக அமைப்பு; அந்தரீக்ஷம்—விண்வெளி; க்ஷிதி:—பூமியின் மேல்பரப்பு; அக்ன-ஜிஹ்வா:—தேவர்கள்; காவ:—பசுக்கள்; த்விஜா:—பிராமணர்கள்; ஸஞ்ஜஹ்ருஷு:—அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்; நகா: ச—மற்றும் மலைகளும்.
அச்சமயத்தில், எல்லாத் திசைகளிலும் மகிழ்ச்சி பொங்கியது, நதிகளையும், சமுத்திரங்களையும் போன்ற நீர்த் தேக்கங்களிலும், அனைவரது இதயத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. வெவ்வேறு பருவ காலங்கள் அவற்றிற்குரிய குணங்களை முறையாக வெளிப்படுத்தின. உயர் கிரக அமைப்பிலும், வான வெளியிலும், பூமியின் மேல்பரப்பிலும் உள்ள ஜீவராசிகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள், குன்றுகள், மற்றும் மலைகள் கூட மகிழ்ச்சியில் மூழ்கின.
பதம் 8.18.5
ஸ்ரோணாயாம் ஸ்ரவண-த்வாதஸ்யாம் முஹூர்தே ‘பிஜிதி ப்ரபு:
ஸர்வே நக்ஷத்ர தாராத்யாஸ் சக்ருஸ் தஜ்-ஜன்ம தக்ஷிணம்
ஸ்ரோணாயாம்—சந்திரன்; ஸ்ரவண—வீட்டில் அமைந்திருக்கும் போது; ஸ்ரவண-த்வாதஸ்யாம்—பாத்ர மாதத்தின் வளர்பிறையின் பன்னிரண்டாம் நாளன்று அல்லது ஸ்ரவணதுவாதசி என்று புகழப்பட்ட நாளன்று; முஹூர்தே—மங்கள முகூர்த்தத்தில்; அபிஜிதி—அபிஜித் நட்சத்திரம் எனப்படும் ஸ்ரவண சந்திர வீட்டின் முதல் பகுதியிலும்; (நடுப்பகலில் நிகழும்) அபிஜித் முகூர்த்தத்திலும்; ப்ரபு:—பகவான்; ஸர்வே—எல்லா; நக்ஷத்ர—நட்சத்திரங்களும்; தாரா—கிரகங்களும்; ஆத்யா:—சூரியன் முதற்கொண்டு மற்ற கிரகங்கள் வரை; சக்ரு:—செய்யப்பட்டன; தத்-ஜன்ம—பகவானின் பிறந்த நாள்; தக்ஷிணம்—மிகவும் உதாரகுணத்துடன்.
ஸ்ரவண-துவாதசியன்று (பாத்ர மாதத்து வளர்பிறையின் பன்னிரண்டாம் நாள்), அபிஜித் எனும் மங்கள முகூர்த்தத்தில், சந்திரன் ஸ்ரவணம் என்ற வீட்டிற்கு வந்தபோது, பகவான் இப்பிரபஞ்சத்தில் தோன்றினார். பகவானுடைய தோற்றம் மிகவும் மங்களகரமானது எனக் கருதிய, சூரியனிலிருந்து சனிவரையுள்ள எல்லாக் கிரகங்களும், நட்சத்திரங்களும் மிகவும் சாதகமான நிலையில் இருந்தன.
பதம் 8.18.6
த்வாதஸ்யாம் ஸவிதாதிஷ்டன் மத்யந்தின-கதோ ந்ருப
விஜயா நாம ஸா ப்ரோக்தா யஸ்யாம் ஜன்ம விதுர் ஹரே:
த்வாதஸ்யாம்—சந்திரனின் பன்னிரண்டாம் நாளில்; ஸவிதா—சூரியன்; அதிஷ்டத்—இருந்தது; மத்யம்-தின-கத:—தீர்க்க ரேகையில் (நடுப்பகலில்); ந்ருப—ராஜனே; விஜயா-நாம—விஜயா எனும் பெயரால்; ஸா—அந்நாள்; ப்ரோக்தா—அழைக்கப்படுகிறது; யஸ்யாம்—எதில்; ஜன்ம—தோற்றம்; விது:—அவர்கள் அறிவார்கள்; ஹரே:—பகவான் ஸ்ரீ ஹரியின்.
ராஜனே, சந்திரனின் பன்னிரண்டாவது நாளான துவாதசியன்று பகவான் தோன்றினார். அப்போது, கற்றறிந்த அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்திருப்பது போல், சூரியன் தீர்க்க ரேகையில் (உச்சியில்) இருந்தது. இந்த துவாதசி, விஜயா என்று அழைக்கப்படுகிறது.
பதம் 8.18.7
சங்க-துந்துபயோ நேதுர் ம்ருதங்க-பணவானகா:
சித்ர-வாதித்ர-தூர்யாணாம் நிர்கோஷஸ் துமுலோ ‘பவத்
சங்க—சங்குகள்; துந்துபய:—பேரிகைகள்; நேது:—ஒலித்தன; ம்ருதங்க—மிருதங்கங்கள்; பணவ-ஆனகா:—பணவம் மற்றும் ‘ஆனகம்’ எனப்படும் மத்தளங்கள்; சித்ர—பல்வேறு; வாதித்ர—வாத்தியக் கருவிகளுடைய இவ்வோசைகளின்; தூர்யாணாம்—மேலும் மற்ற கருவிகளின்; நிர்கோஷ:—பேரொலி; துமுல:—ஓசை மிகுந்த; அபவத்—ஆனது.
சங்குகள், பேரிகைகள், மத்தளங்கள், பணவங்கள் மற்றும் ஆனகங்கள் ஆகியவை பொருத்தமாக முழங்கின. இவற்றின் ஓசையும், வேறு பல கருவிகளின் ஓசையும் பேரொலியாக எழுந்தது.
பதம் 8.18.8
ப்ரீதாஸ் சாப்ஸரஸோ ‘நருத்யன் கந்தர்வ-ப்ரவரா ஜகு:
துஷ்டுவர் முனயோ தேவா மனவ: பிதரோ ‘க்னய:
ப்ரீதா:—மிகவும் திருப்தியடைந்து; ச—மேலும்; அப்ஸரஸ:—சுவர்க்க லோக நடன மங்கைகள்; அன்ருத்யன்—நடனமாடினர்; கந்தர்வ-ப்ரவரா:—மிகச்சிறந்த கந்தர்வர்கள்; ஜகு:—பாடினர்; துஷ்டுவு:—பிரார்த்தனைகள் செய்து பகவானை திருப்திபடுத்தினர்; முனய:—பெரும் முனிவர்கள்; தேவா:—தேவர்கள்; மனவ:—மனுக்கள்; பிதர:—பித்ருலோக வாசிகள்; அக்நய:—அக்னி தேவர்கள்.
மிகவும் திருப்தியடைந்த சுவர்க்க லோக நடன மங்கைகள் (அப்ஸரஸ்கள்) மகிழ்ச்சியுடன் நடனமாடினர். மிகச் சிறந்த கந்தர்வர்கள் பாட்டிசைத்தனர். மேலும் பெரும் முனிவர்கள், தேவர்கள், மனுக்கள், பிதாமகர்கள் மற்றும் அக்னி தேவர்கள் ஆகியோர் பகவானை திருப்திப்படுத்த பிரார்த்தனைகள் செய்தனர்.
பதங்கள் 8.18.9 – 8.18.10
ஸித்த-வித்யாதர-கணா: ஸகிம்புருஷ-கின்னரா:
சாரண யக்ஷ-ரக்ஷாம்ஸி ஸுபர்ணா புஜகோத்தமா:
காயந்தோ ‘திப்ரசம்ஸந்தோ ந்ருத்யந்தோ விபுதானுகா:
அதித்யா ஆஸ்ரம-பதம் குஸுமை: ஸமவாகிரன்
ஸித்த—சித்தலோக வாசிகள்; வித்யாதர-கணா:—வித்யாதர லோக வாசிகள்; ஸ—உடன்; கிம்புருஷ—கிம்புருஷ லோக வாசிகள்; கின்னரா:—கின்னரலோக வாசிகள்; சாரணா:—சாரணலோக வாசிகள்; யக்ஷ—யக்ஷர்கள்; ரக்ஷாம்ஸி—இராட்சஸர்கள்; ஸுபர்ணா:—சுபர்ணர்கள்; புஜக-உத்தமா:—நாக லோகத்தின் மிகச்சிறந்த வாசிகள்; காயந்த:—பகவானைப் போற்றி; அதி-ப்ரசம்ஸந்த:—பகவானைப் புகழ்ந்து; ந்ருத்யந்த:—நடனமாடி; விபுத-அனுகா:—தேவர்களின் ஆதரவாளர்கள்; அதித்யா:—அதிதியின்; ஆஸ்ரம-பதம்—வசிப்பிடத்தை; குஸுமை:—மலர்களால்; ஸமவாகிரன்—மூடினர்.
சித்தர்கள், வித்யாதரர்கள், கிம்புருஷர்கள், கின்னரர்கள், சாரணர்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள், சுபர்ணர்கள், மிகச் சிறந்த நாகர்கள் மற்றும் தேவர்களின் ஆதரவாளர்கள் ஆகிய அனைவரும், பகவானைப் போற்றிப் புகழ்ந்து நடனமாடும் வேளையில், மலர்களைப் பொழிந்து அதிதியின் வீடு முழுவதையும் மூடிவிட்டனர்.
பதம் 8.18.11
த்ருஷ்ட்வாதிதிஸ் தம் நிஜ-கர்ப-ஸம்பவம்
பரம் புமாம்ஸம் முதம் ஆப விஸ்மிதா
க்ருஹீத-தேஹம் நிஜ-யோக-மாயயா
ப்ரஜாபதிஸ் சாஹ ஜயேதி விஸ்மித:
த்ருஷ்ட்வா—கண்டு; அதிதி:—தாய் அதிதி; தம்—அவரை (பரமபுருஷ பகவானை); நிஜ-கர்ப-ஸம்பவம்—அவளது சொந்த கர்ப்பத்திலிருந்து பிறந்த; பரம்—பரமனான; புமாம்ஸம்—முழுமுதற் கடவுளை; முதம்—பேரானந்தம்; ஆப—மனதில் எண்ணினாள்; விஸ்மிதா—மிகவும் ஆச்சரியமடைந்து; க்ருஹீத—ஏற்றார்; தேஹம்—உடலை, அல்லது தெய்வீக உருவத்தை; நிஜ-யோக-மாயயா—அவரது சுய ஆன்மீக சக்தியால்; ப்ரஜாபதி:—கஸ்யப முனிவர்; ச—கூட; ஆஹ—கூறினார்; ஜய—போற்றி; இதி—இவ்வாறாக; விஸ்மித:—ஆச்சரியம் அடைந்து.
பரமபுருஷ பகவான் தமது சுய ஆன்மீக சக்தியினால், தெய்வீகமான ஒருடலை ஏற்று, தனது சொந்த கர்பத்திலிருந்து தோன்றியதைக் கண்டு, அதிதி ஆச்சரியம் மேலிட பேரானந்தம் அடைந்தாள். குழந்தையைக் கண்ட பிரஜாபதியான கஸ்யபர் பேரானந்தத்துடனும், ஆச்சரியத்துடனும் “ஜெய்! ஜெய்!” என்று கூவினார்.
பதம் 8.18.12
யத் தத் வபுர் பாதி விபூஷணாயுதைர்
அவ்யக்த-சித்-வ்யக்தம் அதாரயத் தரி:
பபூவ தேனைவ ஸ வாமனோ வடு:
ஸம்பஸ்யதோர் திவ்ய-கதிர் யதா நட:
யத்—எது; தத்—அது; வபு:—தெய்வீக உடல்; பாதி—தோன்றுகிறது; விபூஷண—வழக்கமான ஆபரணங்களுடன்; ஆயுதை:—மேலும் ஆயுதங்களுடனும்; அவ்யக்த—தோன்றாத; சித்-வ்யக்தம்—ஆன்மீகமாகத் தோன்றியுள்ள; அதாரயத்—ஏற்றார்; ஹரி:—பகவான்; பபூவ—உடனே ஆனார்; தேன—அதனுடன்; ஏவ—நிச்சயமாக; ஸ:—அவர் (பகவான்); வாமன:—குள்ளமான; வடு:—ஒரு பிராமண பிரம்மச்சாரியாக; ஸம்பஸ்யதோ:—அவரது தாய் தந்தையர் இருவரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே; திவ்ய-கதி:—அற்புத அசைவுகளுடைய; யதா—போல்; நட:—ஒரு நாடக நடிகனை.
பகவான் ஆபரணங்களுடனும், கரங்களில் ஆயுதங்களுடனும் தமது சுயரூபத்தில் தோன்றினார். நித்தியமான இந்த ரூபம் ஜட உலகில் காணப்படாதது என்ற போதிலும், அதே ரூபத்திலேயே அவர் தோன்றினார். பிறகு, அவரது தாய் தந்தையரின் முன்னிலையில், ஒரு நாடக நடிகனைப்போல், ஒரு பிரம்மச்சாரியும், குள்ள பிராமணருமாகிய வாமன ரூபத்தை அவர் மேற்கொண்டார்.
பதம் 8.18.13
தம் வடும் வாமனம் த்ருஷ்ட்வா மோதமானா மஹர்ஷய:
கர்மாணி காரயாம் ஆஸு: புரஸ்க்ருத்ய ப்ரஜாபதிம்
தம்—அவரை; வடும்—பிரம்மச்சாரியான; வாமனம்—குள்ளமான; த்ருஷ்ட்வா—கண்டு; மோதமானா:—சந்தோஷமான மனநிலையில்; மஹா-ரிஷய:—பெரும் முனிவர்கள்; கர்மாணி—சடங்குகளை; காரயாம்-ஆஸு:—நிறைவேற்றினார்; புரஸ்க்ருத்ய—முன்பாக இறுத்தி; ப்ரஜாபதிம்—பிரஜாபதியான கஸ்யப முனிவரை.
பகவானை குள்ள பிரம்மச்சாரி வாமனராகக் கண்ட பெரும் முனிவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இவ்வாறாக பிரஜாபதியான கஸ்யபரைத் தங்கள் முன் இறுத்தி, பிறந்த நாள் சடங்கைப் போன்ற எல்லாச் சடங்குகளையும் அவர்கள் நிறைவேற்றினர்.
பதம் 8.18.14
தஸ்யோபனீயமானஸ்ய ஸாவித்ரீம் ஸவிதாப்ரவீத்
ப்ருஹஸ்பதிர் ப்ரஹ்ம-ஸூத்ரம் மேகலாம் கஸ்யபோ ‘ததாத்
தஸ்ய—பகவான் வாமனதேவரின்; உபனீயமானஸ்ய—அவருக்குப் பூணூல் அளிக்கும் சடங்கின் போது; ஸாவித்ரீம்—காயத்ரீ மந்திரத்தை; ஸவிதா—சூரியதேவன்; அப்ரவீத்—ஓதினார்; ப்ருஹஸ்பதி:—தேவகுருவாகிய பிருஹஸ்பதி; ப்ரஹ்ம-ஸூத்ரம்—பூணூலை; மேகலாம்—வைக்கோல் கச்சையை; கஸ்யப—கஸ்யப முனிவர்; அததாத்—அளித்தனர்.
வாமனதேவரின் பூணூல் அணிவிக்கும் சடங்கின்போது, சூரிய தேவன் தாமாகவே முன்வந்து காயத்ரீ மந்திரத்தை ஓதினார். பிருஹஸ்பதி பூணூலை அணிவித்தார். மேலும் கஸ்யப முனிவர் ஒரு வைக்கோல் கச்சையை அணிவித்தார்.
பதம் 8.18.15
ததௌ க்ருஷ்ணாஜினம் பூமிர் தண்டம் ஸோமோ வனஸ்பதி:
கெளபீனாச்சாதனம் மாதா த்யௌஸ் சத்ரம் ஜகத: பதே:
ததௌ—அளித்தாள்; க்ருஷ்ண-அஜினம்—ஒரு மான்தோலை; பூமி:—பூமிதேவி; தண்டம்—பிரம்மச்சாரியின் தண்டத்தை; ஸோம:—சந்திர தேவன்; வன:-பதி—வனராஜனான; கௌபீன—கோவணத்தை; ஆச்சாதனம்—உடலை மறைக்க; மாதா—அவரது தாயான அதிதி; த்யௌ:—சுவர்க்க லோக இராஜ்யம்; சத்ரம்—ஒரு குடையை; ஜகத:—முழு பிரபஞ்சத்தின்; பதே:—எஜமானரின்.
பூமிதேவி ஒரு மான் தோலை அவருக்கு அளித்தாள். மேலும் வனராஜனான சந்திரதேவன் அவருக்கு ஒரு பிரம்ம-தண்டத்தை (பிரம்மச்சாரிக்குரிய தடியை) வழங்கினார். அவரது தாயான அதிதி கோவணத்துக்குரிய துணியை அளித்தாள். மேலும் சுவர்க்க லோகத்தின் அதிபதி அவருக்கு ஒரு குடையை வழங்கினார்.
பதம் 8.18.16
கமண்டலும் வேத-கர்ப: குசான் ஸப்தர்ஷயோ தது:
அக்ஷ-மாலாம் மஹாராஜ ஸரஸ்வதி அவ்யதாத்மன:
கமண்டலும்—கமண்டலத்தை; வேத-கர்ப:—பிரம்ம தேவர்; குசான்—நாணல் புல்லை; ஸப்த-ரிஷய:—சப்த (ஏழு) ரிஷிகள்; தது:—அளித்தனர்; அக்ஷ-மாலாம்—ஒரு ருத்ராட்ச மாலையை; மஹாராஜ—மகாராஜனே; ஸரஸ்வதீ—சரஸ்வதி தேவி; அவ்யய-ஆத்மன:—பரமபுருஷ பகவானுக்கு.
மகாராஜனே, முடிவற்றவரான பரமபுருஷ பகவானுக்கு பிரம்மதேவர் ஒரு கமண்டலத்தை அளித்தார். சப்த-ரிஷிகள் அவருக்கு நாணல் புல்லையும், சரஸ்வதி தேவி அவருக்கு ஒரு ருத்ராட்ச மாலையையும் அளித்தனர்.
பதம் 8.18.17
தஸ்மா இதி உபனீதாய யக்ஷ-ராட் பாத்ரிகாம் அதாத்
பிக்ஷாம் பகவதீ ஸாக்ஷாத் உமாதாத் அம்பிகா ஸதீ
தஸ்மை—அவருக்கு (பகவான் வாமனதேவருக்கு); இதி—இவ்விதமாக; உபனீதாய—உபநயன சடங்கை மேற்கொண்ட; யக்ஷ-ராட்—சுவர்க்க லோகத்தின் பொக்கிஷத்தாரும், யக்ஷ ராஜனுமாகிய குபேரன்; பாத்ரிகாம்—ஒரு பிச்சைப் பாத்திரத்தை; அதாத்—கொடுத்தார்; பிக்ஷாம்—பிச்சை; பகவதீ—சிவபெருமானின் மனைவியான பவானி தேவி; ஸாக்ஷாத்—நேரிடையாக; உமா—உமா; அதாத்—கொடுத்தாள்; அம்பிகா—அகில லோக மாதாவும்; ஸதீ—கற்புக் கரசியுமான.
இவ்வாறாக வாமன தேவருக்குப் பூணூல் அளிக்கப்படும்போது, யக்ஷ ராஜனான குபேரன் அவருக்கு ஒரு பிச்சைப் பாத்திரத்தை (திருவோட்டை) வழங்கினார். மேலும் சிவபெருமானுடைய மனைவியும், அகில லோக மாதாவுமாகிய பகவதீ தேவி அவருக்கு முதல் பிச்சையை அளித்தாள்.
பதம் 8.18.18
ஸ ப்ரஹ்ம-வர்சஸேனைவம் ஸாபாம் ஸம்பாவிதோ வடு:
ப்ரஹ்மர்ஷி-கண-ஸஞ்ஜுஷ்டாம் அத்யரோசத மாரிஷ:
ஸ:—அவர் (வாமனதேவர்); ப்ரஹ்ம-வர்சஸேன—அவரது பிரம்ம ஜோதியால்; ஏவம்—இவ்வாறாக; ஸபாம்—சபையை; ஸம்பாவித:—அனைவராலும் வரவேற்கப்பட்டு; வடு:—அந்த பிரம்மச்சாரி: ப்ரஹ்ம-ரிஷி-கண-ஸஞ்ஜுஷ்டாம்—சிறந்த பிராமண முனிவர்களால் நிரப்பப்பட்டிருந்தது; அதி-அரோசத—மிஞ்சியவராய், அழகாகத் தோன்றினார்; மாரிஷ:—பிரம்மச்சாரிகளில் மிகச்சிறந்தவரான
இவ்வாறு, அனைவராலும் வரவேற்கப்பட்ட, பிராமண சிரேஷ்டரான பகவான் வாமனதேவர், தமது பிரம்ம ஜோதியை வெளிப்படுத்தி, மிகச்சிறந்த பிராமணர்களால் நிரப்பப்பட்டிருந்த அந்த சபையின் அழகையும் மிஞ்சியவரானார்.
பதம் 8.18.19
ஸமித்தம் ஆஹிதம் வஹ்னிம் க்ருத்வா பரிஸமூஹனம்
பரிஸ்தீர்ய ஸமப்யர்ச்ய ஸமித்பிர் அஜுஹோத் த்விஜ:
ஸமித்தம்—கொழுந்து விட்டெரியும்; ஆஹிதம்—அமைந்திருப்பதால்; வஹ்னிம்—தீயை; க்ருத்வா—மூட்டிய பின்; பரிஸமூஹனம்—முறையாக; பரிஸ்தீர்ய—மிஞ்சியவராய்; ஸமப்யர்ச்ய—வழிபட்ட பின்; ஸமித்பி:—யாகத்திற்குரிய நிவேதனங்களால் அஜுஹோத்—யாகத்தை நிறைவேற்றினார்; த்விஜ:—பிராமணர்களில் மிகச் சிறந்தவர்.
பகவான் ஸ்ரீ வாமன தேவர் யாகக் குண்டத்தில் ஒரு யாகத் தீயை ஏற்படுத்தியபின், அதை வழிபட்டு யாகத்தை நிறைவேற்றினார்.
பதம் 8.18.20
ஸ்ருத்வாஸ்வமேதைர் யஜமானம் ஊர்ஜிதம்
பலிம் ப்ருகூணாம் உபகல்பிதைஸ் தத:
ஜகாம தத்ராகில-ஸார-ஸம்ப்ருதோ
பாரேண காம் ஸன்னமயன் பதே பதே
ஸ்ருத்வா—செவியுற்ற பின்; அஸ்வமேதை:—அஸ்வமேத யாகங்களால்; யஜமானம்—இயற்றுபவர்; ஊர்ஜிதம்—பெருமைமிக்க; பலிம்—பலி மகாராஜன்; ப்ருகூணாம்—பிருகு வம்சத்தில் பிறந்த பிராமணர்களுடைய ஆலோசனையின் கீழ்; உபகல்பிதை:—இயற்றினார்; தத:—அவ்விடத்திலிருந்து; ஜகாம—சென்றார்; தத்ர—அங்கு; அகில-ஸார-ஸம்ப்ருத:—எல்லா சிருஷ்டிக்கும் சாரமாகிய முழுமுதற் கடவுள்; பாரேண—பாரத்தால்; காம்—பூமியை; ஸன்னமயன்—அழுத்தியபடி; பதே பதே—ஒவ்வொரு அடியிலும்.
பிருகு வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்களின் ஆதரவில் பலி மகாராஜன் அஸ்வமேத யாகம் செய்வதை பகவான் கேள்விப்பட்டார். எல்லா விதத்திலும் பூரணமானவராகிய பரமபுருஷர், பலி மகாராஜனுக்கு அருள் புரிவதற்காக அவ்விடத்தை நோக்கிச் சென்றார். தமது நடையினால், ஒவ்வொரு அடிக்கும் அவர் பூமியைக் கீழே அழுத்தினார்.
பதம் 8.18.21
தம் நர்மதாயாஸ் தட உத்தரே பலேர்
ய ரித்விஜஸ் தே ப்ருகுகச்ச-ஸம்ஜ்ஞகே
ப்ரவர்தயந்தோ ப்ருகவ: க்ரதூத்தமம்
வ்யசக்ஷதாராத் உதிதம் யதா ரவிம்
தம்—அவரை (வாமனதேவரை), நர்மதாயா:—நர்மதா நதியின்; தடே—கரையில்; உத்தரே—வடக்குப்புற; பலே:—பலி மகாராஜனின்; யே—யார்; ரித்விஜ:—வேதச் சடங்குகளில் ஈடுபட்டுள்ள வேதியர்கள்; தே—அனைவரும்; ப்ருகுகச்ச-ஸம்ஜ்ஞகே—பிருகு கச்சம் எனும் இடத்தில்; ப்ரவர்தயந்த:—செய்யும்; ப்ருகவ—பிருகு வம்சத்தினர் அனைவரும்; க்ரது-உத்தமம்—மிக முக்கியமான அஸ்வமேத யாகத்தை; வ்யசக்ஷத—அவர்கள் கண்ட; ஆராத்—அருகாமையில்; உதிதம்—உதித்தது; யதா—போல்; ரவிம்—சூரியன்.
நர்மதா நதியின் வடக்குக் கரையிலுள்ள பிருகு கச்சம் எனுமிடத்தில், யாகம் செய்வதில் ஈடுபட்டுள்ள வேளையில், வாமனதேவர், அருகில் உதயமாகும் சூரியனைப் போல் அங்கு காட்சியளிப்பதை, பிருகு வம்சத்தைச் சேர்ந்த பிராமண வேதியர்கள் கண்டனர்.
பதம் 8.18.22
தே ரித்விஜோ யஜமான: ஸதஸ்யா
ஹத-த்விக்ஷோ வாமன-தேஜஸா ந்ருப
ஸூர்ய: கிலாயாதி உத வா விபாவஸு:
ஸனத்-குமாரோ ‘த தித்ருக்ஷயா க்ரதோ:
தே—அவர்கள் அனைவரும்; ரித்விஜ:—வேதியர்களான; யஜமான:—அத்துடன் யாகம் செய்வதில் அவர்களை ஈடுபடுத்தியவரான பலி மகாராஜனும்; ஸதஸ்யா:—சபையோரும்; ஹத-த்விஷ:—தங்களது சரீர தேஜஸில் குறைந்தவர்களாயினர்; வாமன-தேஜஸா—கண்களை கூசச் செய்யும் பகவான் வாமனரின் பிரகாசத்தினால்; ந்ருப—ராஜனே; ஸூர்ய:—சூரியன்; கிலாயாதி—வருகிறாரோ; உத வா—அல்லது; விபாவஸு:—அக்னி தேவன்; ஸனத்-குமார:—சனத்குமார எனப்படும் குமாரர்; அத—அல்லது; தித்ருக்ஷயா—காணும் விருப்பத்துடன்; க்ரதோ:—யாகச் சடங்கை.
ராஜனே, வாமனதேவரின் பிரகாசமான தேஜஸின் முன், வேதியர்கள், பலி மகாராஜன் மற்றும் சபையிலுள்ளோர் ஆகிய அனைவரும் தங்களின் சொந்த தேஜஸைப் பறிகொடுத்தனர். இவ்வாறாக யாகச் சடங்கை காண்பதற்காக சூரியதேவன், சனத் குமாரர் அல்லது அக்னி தேவனே நேரில் வந்திருக்கிறாரோ என்று அவர்கள் ஒருவரையொருவர் விசாரிக்கத் துவங்கினர்.
பதம் 8.18.23
இத்தம் ஸசிஷ்யேஷு ப்ருகுஷு அனேகதா
விதர்க்யமாணோ பகவான் ஸ வாமன:
சத்ரம் ஸதண்டம் ஸஜலம் கமண்டலும்
விவேச பிப்ரத் தயமேத-வாடம்
இத்தம்—இவ்வாறாக; ஸ-சிஷ்யேஷு—தங்களது சீடர்களுடன்; ப்ருகுஸு—பிருகு வம்சத்தினர்க்கிடையில்; அனேகதா—பல விதமாக; விதர்க்யமாண:—அதைப் பற்றி பேசி, விவாதித்த; பகவான்—பரமபுருஷ பகவான்; ஸ:—அந்த; வாமன:—பகவான் வாமனர்; சத்ரம்—குடை; ஸ-தண்டம்—தடியுடன்; ஸ-ஜலம்—நீரால் நிரப்பப்பட்ட; கமண்டலும்—கமண்டலம்; விவேச—புகுந்தார்; பிப்ரத்—கையிலெடுத்துக் கொண்டு; ஹயமேத—அஸ்வமேத யாகத்தின்; வாடம்—சாலைக்குள்.
பிருகு வம்சத்தைச் சேர்ந்த வேதியர்களும், அவர்களது சீடர்களும் பலவிதமாக பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கும் வேளையில், பரமபுருஷ பகவானாகிய வாமனதேவர், தமது கரங்களில் தடி, குடை மற்றும் நீரால் நிரப்பப்பட்ட ஒரு கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு, அஸ்வமேத யாக சாலைக்குள் புகுந்தார்.
பதங்கள் 8.18.24 – 8.18.25
மெளஞ்யா மேகலயா வீதம் உபவீதாஜினோத்தரம்
ஜடிலம் வாமனம் விப்ரம் மாயா-மாணவகம் ஹரிம்
ப்ரவிஷ்டம் வீக்ஷ்ய ப்ருகவ: ஸசிஷ்யாஸ் தே ஸஹாக்னிபி:
ப்ரத்யக்ருஹ்ணன் ஸமுத்தாய ஸங்க்ஷிப்தாஸ் தஸ்ய தேஜஸா
மௌஞ்யா—முஞ்சம் எனப்படும் வைக்கோலால் செய்யப்பட்ட; மேகலயா—ஒரு கச்சையுடன்; வீதம்—சுற்றியிருந்த; உபவீத—பூணூல்; அஜின-உத்தரம்—மான் தோலாலான மேலாடையை அணிந்தவாறு; ஜடிலம்—ஜடா முடியுடன்; வாமனம்—வாமனதேவர்; விப்ரம்—ஒரு பிராமணர்; மாயா-மாணவகம்—ஒரு மனிதனின் மாய மகனான; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ப்ரவிஷ்டம்—புகுந்தார்; வீக்ஷ்ய—கண்டு; ப்ருகவ:—பிருகுவின் சந்ததியினரான வேதியர்கள்; ஸ-சிஷ்ய:—தங்களது சீடர்களுடன்; தே—அவர்கள் அனைவரும்; ஸஹ-அக்னிபி:—வேள்வியுடன்; ப்ரத்யக்ருஹ்ணன்—முறையாக வரவேற்றனர்; ஸமுத்தாய—எழுந்து நின்று; ஸங்க்ஷிப்தா:—குறைக்கப்பட்டு; தஸ்ய—அவரது; தேஜஸா—பிரகாசத்தால்.
ஒரு வைக்கோல் கச்சை, ஒரு பூணூல், மான் தோலாலான மேலாடை மற்றும் ஜடா முடி ஆகியவற்றுடன் ஒரு பிராமண சிறுவனாகத் தோன்றிய பகவான் வாமனதேவர், யாக சாலைக்குள் நுழைந்தார். அவரது ஒளி மிகுந்த பிரகாசம், வேதியர்கள் மற்றும் அவர்களது சீடர்களின் பொலிவை மங்கச் செய்தது. இவ்வாறாக அவர்கள் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து, பகவானை வணங்கி, அவரை முறையாக வரவேற்றனர்.
பதம் 8.18.26
யஜமான: ப்ரமுதிதோ தர்சனீயம் மனோரமம்
ரூபானுரூபாவயவம் தஸ்மா ஆஸனம் ஆஹரத்
யஜமான:—எல்லா வேதியர்களையும் யாகம் செய்வதில் ஈடுபடுத்திய பலி மகாராஜன்; ப்ரமுதித:—மிகவும் சந்தோஷமடைந்து; தர்சனீயம்—காண இன்பமூட்டும்; மனோரமம்—மிகவும் அழகிய; ரூப—அழகுடன் கூடிய; அனுரூப—அவரது உடலின் அழகிற்குச் சமமான; அவயவம்—உடலின் வெவ்வேறு உறுப்புக்கள் அனைத்தும்; தஸ்மை—அவருக்கு; ஆஸனம்—ஆசனம் ஒன்றை; ஆஹரத்—அளித்தார்.
பகவான் வாமனதேவரின் அழகிய அங்கங்கள், அவரது முழு உடலின் அழகிற்குச் சமமான அழகைச் சேர்த்தன. அதைக் கண்டு ஆனந்தமடைந்த பலி மகாராஜன், மிகவும் திருப்தியுடன் அவருக்கு ஓர் ஆசனத்தை அளித்தார்.
பதம் 8.18.27
ஸ்வாகதேனாபினந்யாத பாதௌ பகவதோ பலி:
அவநிஜ்யார்சயாம் ஆஸ முக்த-ஸங்க-மனோரமம்
ஸு-ஆகதேன—வரவேற்புகளால்; அபினந்ய—வரவேற்புரை; அத—இவ்வாறு; பாதௌ—இரு தாமரைப் பாதங்களை; பகவத:—பகவானின்; பலி:—பலி மகாராஜன்; அவநிஜ்ய—கழுவி; அர்சயாம் ஆஸ—வழிபட்டார்; முக்த-ஸங்க-மனோரமம்—முக்தியடைந்த ஆத்மாக்களுக்கு அழகாக இருப்பவரான முழுமுதற் கடவுளை.
இவ்வாறாக, முக்தியடைந்த ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் அழகாக இருப்பவரான முழுமுதற் கடவுளுக்கு முறையான வரவேற்பளித்த பலி மகாராஜன், அவரது தாமரைப் பாதங்களைக் கழுவி அவரை வழிபட்டார்.
பதம் 8.18.28
தத்-பாத-சௌசம் ஜன-கல்மஷாபஹம்
ஸ தர்ம-வின் மூர்த்னி அததாத் ஸுமங்களம்
யத் தேவ-தேவோ கிரிசஸ் சந்ர-மெளலிர்
ததார மூர்த்னா பரயா ச பக்த்யா
தத்-பாத-சௌசம்—பகவானின் தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரை; ஜன-கல்மஷ-அபஹம்—பொது மக்களின் எல்லாப் பாவ விளைவுகளையும் துடைத்து விடுவதான; ஸ:—அவர் (பலி மகாராஜன்); தர்ம-வித்—மதக் கொள்கைகளை நன்கு அறிந்துள்ள; மூர்த்னி—தலைமீது; அததாத்—ஏந்திய; ஸு-மங்களம்—ஸர்வ-மங்களகரமான; யத்—எதை; தேவ-தேவ:—தேவர்களில் சிறந்தவரான; கிரிச:—சிவபெருமான்; சந்ர-மெளலி:—தமது நெற்றியில் பிறையைச் சூடியிருப்பவரான; ததார—தாங்கிக் கொண்டார்; மூர்த்னா—தலைமீது; பரயா—பரம; ச—கூட; பக்த்யா—பக்தியுடன்.
தேவர்களில் சிறந்தவரும், தமது நெற்றியில் பிறையைச் சூடியவருமான சிவபெருமான், விஷ்ணுவின் திருப்பாத விரலிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கை நீரைத் தமது தலை மீது பெரும் பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார். மதக் கொள்கைகளை அறிந்திருந்த பலி மகாராஜன் இதையும் அறிந்திருந்தார். இதன் விளைவாக, சிவபெருமானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி, பகவானது தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரை அவரும் தமது தலைமீது தரித்துக் கொண்டார்.
பதம் 8.18.29
ஸ்ரீ-பலிர் உவாச
ஸ்வாகதம் தே நமஸ் துப்யம் ப்ரஹ்மன் கிம் கரவாம தே
ப்ரஹ்மர்ஷீணாம் தப: ஸாக்ஷான் மன்யே த்வார்ய வபுர்-தரம்
ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; ஸு-ஆகதம்—பூரண வரவேற்பு; தே—உமக்கு; நம: துப்யம்—உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; ப்ரஹ்மன்—பிராமணரே; இம்—எதை; கரவாம—எங்களால் செய்ய முடியும்; தே—உமக்கு; ப்ரஹ்ம-ரிஷீணாம்—சிறந்த பிராமண ரிஷிகளின்; தப:—தவத்தின்; ஸாக்ஷாத்—நேரிடையான; மன்யே—நான் நினைக்கிறேன்; த்வா—நீர்; ஆர்ய—பெருமானே; வபு:-தரம்—சொரூபமாக.
பலி மகாராஜன் பிறகு வாமனதேவரை நோக்கிக் கூறினார். பிராமணரே, எனது இதயபூர்வமான வரவேற்பையும், மரியாதைக்குரிய வணக்கங்களையும் உமக்கு நான் அளிக்கிறேன். உமக்கு எங்களால் ஆகவேண்டியதை தயவுகூர்ந்து கூறுவீராக. சிறந்த பிராமண ரிஷிகளின் தவ சொரூபியாக உம்மை நாங்கள் கருதுகிறோம்.
பதம் 8.18.30
அத்ய ந: பிதரஸ் த்ருப்தா அத்ய ந: பாவிதம் குலம்
அத்ய ஸ்விஷ்ட: க்ரதுர் அயம் யத் பவான் ஆகதோ க்ருஹான்
அத்ய—இன்று; ந:—எங்களது; பிதர:—முன்னோர்கள்; த்ருப்தா—திருப்தி அடைகின்றனர்; அத்ய—இன்று; ந—எங்களது; பாவிதம்—புனிதமடைந்தது; குலம்—குலம்; அத்ய—இன்று; ஸு-இஷ்ட:—முறையாக நிறைவேற்றியவர்களாவோம்; க்ரது:—யாகத்தை; அயம்—இந்த; யத—ஏனெனில்; பவான்—பெருமானாகிய நீர்; ஆகத:—வந்திருப்பதால்; க்ருஹான்—எங்கள் வசிப்பிடத்திற்கு.
எம்பெருமானே, எமது இல்லத்தில் நீர் அன்போடு எழுந்தருளியிருப்பதால், எனது முன்னோர்கள் அனைவரும் திருப்தியடைகின்றனர். எங்களது குடும்பமும், வம்சம் முழுவதும் புனிதமடைந்துள்ளது. மேலும் உமது வருகையினால், நாங்கள் இயற்றும் யாகமும் இப்போது நிறைவு பெறுகிறது.
பதம் 8.18.31
அத்யாக்னயோ மே ஸுஹுதா யதா-விதி
த்விஜாத்மஜ த்வச்-சரணாவனேஜனை:
ஹதாம்ஹஸோ வார்பிர் இயம் ச பூர் அஹோ
ததா புனீதா தனுபி: பதைஸ் தவ
அத்ய—இன்று; அக்னய:—யாகத் தீ; மே—என்னால் நிறைவேற்றப்பட்ட; ஸு-ஹுதா:—முறையாக அர்ப்பணங்கள் செய்யப்பட்டதாயிற்று; யதா-விதி—சாஸ்திர விதிகளுக்கேற்ப; த்விஜ-ஆத்மஜ—பிராமண புத்திரரே; த்வத்-சரண-அவனேஜனை:—உமது தாமரைப் பாதத்தைக் கழுவிய; ஹத-அம்ஹஸ:—எல்லாப் பாவவிளைவுகளிலிருந்தும் தூய்மையடைந்தேன்; வார்பி:—நீரால்; இயம்—இந்த; ச—கூட; பூ:—பூமி; அஹோ—ஓ; ததா—அதுவும்; புனீதா—புனிதம் அடைந்தது; தனுபி:—சிறிய; பதை:—தாமரைப் பாதங்கள் தொட்டதால்; தவ—உமது.
பிராமண புத்திரரே, சாஸ்திர விதிகளுக்கேற்ப யாகத் தீ இன்று கொழுந்துவிட்டெரிகின்றது. மேலும் உமது தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரால், எனது வாழ்வின் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுபட்டுள்ளேன். எம்பெருமானே, உமது சிறிய தாமரைப் பாதங்கள் தொட்டதால் உலகம் முழுவதுமே புனிதமடைந்தது.
பதம் 8.18.32
யத் யத் வடோ வாஞ்சஸி தத் ப்ரதீச்ச மே
த்வாம் அர்தினம் விப்ர-ஸுதானுதர்கயே
காம் காஞ்சனம் குணவத் தாம ம்ருஷ்டம்
ததான்ன-பேயம் உத வா விப்ர கன்யாம்
க்ராமான் ஸம்ருத்தாம்ஸ் துரகான் கஜான் வா
ரதாம்ஸ் ததார்ஹத்தம ஸம்ப்ரதீச்ச
யத் யத்—எதைவேண்டுமானாலும்; வடோ—பிரம்மச்சாரியே; வாஞ்சஸி—நீர் விரும்பும்; தத்—அதை; ப்ரதீச்ச—நீர் எடுத்துக் கொள்ளலாம்; மே—என்னிடமிருந்து; த்வாம்—நீர்; அர்தினம்—எதையோ விரும்பி; விப்ர-ஸுத—பிராமண புத்திரே; அனுதர்கயே—நான் கருதுகிறேன்; காம்—ஒரு பசு; காஞ்சனம்—தங்கம்; குணவத் தாம—தேவையான பொருட்களைக் கொண்ட ஒரு வசிப்பிடம்; ம்ருஷ்டம்—சுவையான; ததா—அத்துடன்; அன்ன—உணவுத் தானியங்கள்; பேயம்—பானம்; உத—உண்மையில்; வா—ஏதேனும்; விப்ர-கன்யாம்—பிராமண புத்திரி; க்ராமாம்—கிராமங்கள்; ஸம்ருத்தான்—செல்வம் கொழிக்கும்; துரகான்—குதிரைகள்; கஜான்—யானைகள்; வா—அல்லது; ரதான்—இரதங்கள்; ததா—அத்துடன்; அர்ஹத்-தம—வழிபடத்தக்கவர்களில் மிகச்சிறந்தவரே; ஸம்ப்ரதீச்ச—நீர் எடுத்துக் கொள்ளலாம்.
பிராமண புத்திரரே, என்னிடம் எதையோ கேட்கும் நோக்கத்துடன் நீர் இங்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே எதை வேண்டுமானாலும் என்னிடமிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம். வழிபாட்டுக்குரியவர்களில் மிகச் சிறந்தவர் தாங்கள். என்னிடமிருந்து ஒரு பசுவையோ, தங்கத்தையோ, தேவையான பொருட்களைக் கொண்டதொரு வீட்டையோ, சுவையான உணவு மற்றும் பானத்தையோ, உமது மனைவியாக ஒரு பிராமண புத்திரியையோ, செல்வம் கொழிக்கும் கிராமங்களையோ, குதிரைகளையோ, யானைகளையோ, இரதங்களையோ அல்லது நீர் விரும்புவதையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர்” எனும் தலைப்பை கொண்ட பதினெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.