அத்தியாயம் – 17
பரமபுருஷர் புதல்வராகத் தோன்ற
சம்மதித்தல்
பதம் 8.17.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, இவ்வாறாக அதிதி தன் கணவரான கஸ்யப முனிவரால் அறிவுறுத்தப்பட்ட பின், அவரது உபதேசங்களை சோம்பலின்றி உறுதியாகப் பின்பற்றி, பயோ-விரத சடங்கை நிறைவேற்றினாள்.
பதங்கள் 8.17.2 – 8.17.3 : கலையாத முழு கவனத்துடன் அதிதி முழுமுதற் கடவுளைப் பற்றி எண்ணினாள். இவ்வாறாக சக்தி வாய்ந்த குதிரைகளுக்கொப்பான அவளது மனதையும், புலன்களையும் அவள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாள். தன் மனதை அவள் பரமபுருஷராகிய வாசுதேவன் மீது பதித்தாள். இவ்வாறாக பயோ-விரதம் எனப்படும் சடங்கை அவள் நிறைவேற்றினாள்.
பதம் 8.17.4 : எனதருமை ராஜனே, பிறகு ஆதிபுருஷராகிய முழுமுதற் கடவுள், மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராய், ஒரு சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவாறு நான்கு கரங்களுடன் அதிதியின் முன் தோன்றினார்.
பதம் 8.17.5 : முழுமுதற் கடவுள் அதிதியின் கண்களுக்குக் காட்சியளித்த போது, அதிதி தெய்வீக ஆனந்தத்தினால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டவளாய், திடீரென்று எழுந்து நின்று, பகவானுக்கு வணக்கம் செலுத்துவதற்காக, ஒரு தடியைப்போல் தரைமீது வீழ்ந்தாள்.
பதம் 8.17.6 : பகவானைத் துதிக்க இயலாமல், அதிதி கூப்பிய கரங்களுடன் மௌனமாக நின்றிருந்தாள். தெய்வீக ஆனந்தத்தினால் அவளது கண்களில் கண்ணீர் ததும்பியது, உடலில் புளகாங்கிதம் ஏற்பட்டது. முழுமுதற் கடவுளை அவளால் நேருக்கு நேராகக் காண முடிந்ததால், அவள் பரவசமடைந்தாள். அவளது உடலும் நடுங்கியது.
பதம் 8.17.7 : பரீட்சித்து மகாராஜனே, தேவ மங்கையான அதிதி பிறகு, பேரன்புடனும், தழுதழுத்த குரலுடனும் பரமபுருஷ பகவானிடம் பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினாள். திருமகளின் கணவரும், அனைத்து யாகச் சடங்குகளையும் அனுபவிப்பவரும், அகில லோக நாயகனும், இறைவனுமாகிய பரமபுருஷரைக் கண்களால் பருகி விடுவது போல் காணப்பட்டாள்.
பதம் 8.17.8 : தேவமங்கையான அதிதி கூறினாள்: எல்லா யாகச் சடங்குகளுக்கும் எஜமானரே, அவற்றை அனுபவிப்பவரே, களங்கமற்றவரே, பெரும் கீர்த்தி வாய்ந்தவரே உமது நாமத்தைப் பாடினால் எல்லா நல்லதிர்ஷ்டங்களும் உண்டாகும்! மூல முழுமுதற் கடவுளே, பரம் ஆளுனரே, எல்லாப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் புகலிடமே, எளிமையும், துன்பமும் கொண்ட ஜீவராசிகளுக்குப் புகலிடம் நீரே. அவர்களது துன்பத்தைக் குறைப்பதற்காகவே நீர் தோன்றியிருக்கிறீர். தயவுகூர்ந்து எங்களிடம் அன்பு கொண்டு, எங்களது நல்லதிர்ஷ்டத்தை பரவச் செய்வீராக.
பதம் 8.17.9 : எம்பெருமானே, நீரே எங்கும் பரவியுள்ள விஸ்வரூபமாவீர். இப்பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குப் பூரண சுதந்திரம் உள்ளவரும் நீரே. உமது அறிவு பிழைபடாததும், எப்பொழுதும் எச்சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவும் இருக்கிறது. இதனால் உமது சக்தியை நீர் பெளதிகத்தில் ஈடுபடுத்திய போதிலும், நீர் எப்பொழுதும் உமது ஆதி வடிவத்திலேயே இருக்கின்றீர். அந்நிலையிலிருந்து நீர் தாழ்வதேயில்லை. நீர் மாயையால் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. பெருமானே எனது பணிவான வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.10 : வரம்பற்றவரே, பெருமானாகிய உம்மை திருப்திபடுத்துவதால், பிரம்ம தேவருடையதைப் போன்ற நீண்ட ஆயுள்; உயர்ந்த, தாழ்ந்த அல்லது மத்திய கிரக அமைப்புக்கள் ஒன்றில் ஒருடலைப் பெறுதல், எல்லையற்ற பௌதிகச் செல்வம், மதம், பொருளாதார முன்னேற்றம், புலன் திருப்தி, முழுமையான தெய்விக அறிவு, மற்றும் எட்டு யோக சித்திகள் ஆகிய அனைத்தையும் ஒருவரால் மிகச் சுலபமாகப் பெற்றுவிட முடியும், எதிரிகளை ஜெயிப்பதெனும் அற்ப விஷயங்களைப் பற்றி என்னவென்று சொல்வது!
பதம் 8.17.11 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரத வம்சத்தில் மிகச் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய, தாமரைக் கண்களையுடைய பகவானை இவ்வாறு அதிதி வணங்கியபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 8.17.12 : பரமபுருஷ பகவான் கூறினார்: தேவர்களின் தாயே, உனது புத்திரர்களின் செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, எதிரிகளால் அவர்கள் தங்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உன்னுடைய இப்புத்திரர்களின் நன்மையைக் குறித்த உனது நெடுங்கால ஆசைகளை நான் அறிவேன்.
பதம் 8.17.13 : தேவ மங்கையே, போரில் எதிரிகளை வென்று, உங்களுடைய வசிப்பிடத்தையும், செல்வங்களையும், உனது புத்திரர்களையும் மீண்டும் பெற்று, அவர்களோடு சேர்ந்து நீ என்னை வழிபட விரும்புகிறாய் என்பதை நானறிவேன்.
பதம் 8.17.14 : இந்திரனை தலைமையாகக் கொண்ட தேவர்களாகிய உனது புத்திர்களால், அசுரர்கள் போரில் கொல்லப்படும்போது, அவர்களது மரணத்தினால், அவர்களுடைய மனைவிகள் துக்கப்படுவதை நீ காண விரும்புகிறாய்.
பதம் 8.17.15 : உனது புத்திரர்கள், இழந்த கீர்த்தியையும், செல்வங்களையும் திரும்பப் பெற்று, அவர்களுடைய சுவர்க்க லோகத்தில் வழக்கம் போல் மீண்டும் வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய்.
பதம் 8.17.16 : தேவ மாதாவே, கிட்டத்தட்ட அசுரத் தலைவர்கள் அனைவருமே, பரமபுருஷரின் ஆதரவை எப்பொழுதும் பெற்றிருப்பவர்களான பிராமணர்களால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், அவர்களை இப்போது வெல்லுவது சாத்தியமல்ல என்பது எனது அபிப்பிராயமாகும். இதனால் இச்சமயத்தில் அவர்களுக்கெதிரான சக்தியைப் பிரயோகிப்பதென்பது சிறிதும் மகிழ்ச்சியை விளைவிக்காது.
பதம் 8.17.17 : ஆயினும், உனது விரதத்தினால் நான் திருப்தி அடைந்திருப்பதால், அதிதி தேவியே, உனக்கு ஆதரவளிக்கக்கூடிய ஏதேனும் உபாயத்தை நான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் என்னை வழிபடுவதானது ஒருபோதும் வீணாவதில்லை. மாறாக அது ஒருவரது தகுதிக்கேற்ப அவர் விரும்பிய பலனை நிச்சயமாக அளிக்கிறது.
பதம் 8.17.18 : உன் புதல்வர்களைக் காப்பாற்றுவதற்காக, மிகச்சிறந்த பயோ-விரதத்தை நிறைவேற்றியதன் மூலமாக, என்னிடம் பிரார்த்தனை செய்து, முறையாக என்னை நீ வழிபட்டதாலும், கஸ்யப முனிவரின் தவத்தின் காரணத்தாலும், நான் உனது புத்திரனாகத் தோன்றி, உன்னுடைய மற்ற புதல்வர்களைக் காப்பாற்ற ஒப்புக் கொள்கிறேன்
பதம் 8.17.19 : உனது கணவராகிய கஸ்யபர், அவரது தவத்தினால் தூய்மை பெற்றுள்ளார். ஆகவே அவரது உடலுக்குள் நான் எப்பொழுதும் இருப்பதாக எண்ணி, அவரிடம் சென்று அவரை வழிபடு.
பதம் 8.17.20 : பெண்ணே, யாரேனும் உன்னிடம் விசாரித்தாலும், இவ்வுண்மையை நீ யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது. மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியதை இரகசியமாக வைத்திருந்தால் அது வெற்றியளிக்கும்.
பதம் 8.17.21 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு பேசியபின் பரமபுருஷ பகவான் அவ்விடத்திலிருந்து மறைந்து போனார். பகவானைத் தமது புதல்வராக பெறப்போகும் கிடைத்தற்கரிய வரத்தைப் பெற்ற அதிதி, தான் வெற்றியடைந்ததாகக் கருதி பெரும் பக்தியுடன் அவள் தனது கணவரிடம் சென்றாள்.
பதம் 8.17.22 : என்றும் தவறாத திருஷ்டியுடையவரான கஸ்யப முனிவர், தியான சமாதியில் இருந்ததால், பரமபுருஷ பகவானுடைய ஓர் அம்சம் தனக்குள்ளே புகுந்திருப்பதை அவரால் காண முடிந்தது.
பதம் 8.17.23 : ராஜனே, காற்று, இரு மரங்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி நெருப்பை உண்டாக்குகின்றது. அதைப்போலவே, பரமபுருஷ பகவானில் தமது உன்னதமான நிலையை முற்றிலும் ஆழ்த்திவிட்டவரான கஸ்யப முனிவர், தமது வீரியத்தை அதிதியின் கருவிற்கு மாற்றினார்.
பதம் 8.17.24 : முழுமுதற் கடவுள் இப்போது அதிதியின் கருவினுள் இருப்பதை அறிந்த பிரம்மதேவர், தெய்வீக நாமங்களை உச்சரித்து, பகவானை அவர் துதிக்கத் துவங்கினார்.
பதம் 8.17.25 : பிரம்ம தேவர் கூறினார்: எல்லோராலும் போற்றப்படுபவரும், அசாதாரணமான செயல்களைக் கொண்டவருமான முழுமுதற் கடவுளே, போற்றி உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். ஆன்மீகிகளின் இறைவனே, மூன்று ஜட இயற்கைக் குணங்களின் ஆளுனரே, திரும்பத் திரும்ப எனது பணிவான வணக்கங்களை உமக்கு சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.26 : எங்கும் பரவியுள்ளவரும், எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் புகுந்திருப்பவருமான பகவான் விஷ்ணுவிற்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மூவுலகங்களும் உமது நாபியினுள் அடங்கியுள்ளன என்ற போதிலும், நீர் அவற்றுக்கு மேற்பட்டவராக இருக்கிறீர். முன்பு நீர் பிருஷ்னியின் புதல்வராகத் தோன்றினீர். பரம சிருஷ்டிக் கர்த்தாவும், வேத ஞானத்தால் மட்டுமே அறியப்படுபவருமான உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.27 : எம்பெருமானே, நீரே துவக்கமும், மூவுலகங்களின் தோற்றமும், அவற்றின் இறுதி அழிவுமாக இருக்கின்றீர். வேதங்களில் நீர், எல்லையற்ற சக்திகளின் இருப்பிடம் என்று போற்றப்படுகிறீர், நீரே பரமபுருஷர். பெருமானே ஆழமான நீரினுள் விழுந்த கிளைகளையும், இலைகளையும் அலைகள் கவர்ந்திழுப்பது போல், நித்திய கால ரூபமாகிய நீர் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கவர்ந்திழுக்கிறீர்.
பதம் 8.17.28 : எம்பெருமானே. அசையும், அசையாத ஜீவராசிகள் அனைவரையும் ஆதியில் உற்பத்தி செய்தவர் நீரே. பிரஜாபதிகளை உற்பத்தி செய்தவரும் நீரே. பெருமானே, நீரில் மூழ்கும் ஒருவனுக்கு நம்பிக்கை அளிப்பது படகு ஒன்றுதான் என்பது போல, தங்களது சுவர்க்க லோக இராஜ்யத்தை இப்போது இழந்துள்ள தேவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் நீர் ஒருவரே.