அத்தியாயம் – 14
பிரபஞ்ச நிர்வாகத்தின் ஒழுங்கு
பதம் 8.14.1
ஸ்ரீ-ராஜோவாச
மன்வந்தரரேஷு பகவன் யதா மனு-ஆதயஸ் து இமே
யஸ்மின் கர்மணி யே யேன நியுக்தாஸ் தத் வதஸ்வ மே
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; மன்வந்தரேஷு—ஒவ்வொரு மனுவின் ஆட்சிக் காலத்திலும்; பகவன்—மிகச் சிறந்த முனிவரே; யதா—அவ்வாறு; மனு-ஆதய:—மனுக்களும், மற்றவர்களும்; து—ஆனால்; இமே—இந்த; யஸ்மின்—எந்த; கர்மணி—செயல்களில்; யே—எவர்கள்; யேன—யாரால்; நியுக்தா:—நியமிக்கப்படுகின்றனர்; தத்—அதை; வதஸ்வ—அன்புடன் விளக்குவீராக; மே—எனக்கு.
பரீட்சித்து மகாராஜன் விசாரித்தார்: பெரும் பாக்கியவானாகிய, சுகதேவ கோஸ்வாமியே, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் உள்ள மனுவும், மற்றவர்களும் எப்படி அவரவர் கடமைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், யாருடைய உத்தரவினால் அவர்கள் அவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பதையும் தயவு செய்து விளக்குவீராக.
பதம் 8.14.2
ஸ்ரீ-ரிஷிர் உவாச
மனவோ மனு-புத்ராஸ் ச முனயஸ் ச மஹீ-பதே
இந்ரா: ஸுர-கணாஸ் சைவ ஸர்வே புருஷ-சாஸனா:
ஸ்ரீ-ரிஷி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; மனவ:—எல்லா மனுக்களும்; மனு-புத்ரா:—மனுவின் எல்லா புத்திரர்களும்; ச—மேலும்; முனய:—எல்லா பெரும் ரிஷிகளும்; ச—மேலும்; மஹீ-பதே—ராஜனே; இந்ரா:—எல்லா இந்திரர்களும்; ஸுர-கணா:—தேவர்களும்; ச—மேலும்; ஏவ—நிச்சயமாக; ஸர்வே—அவர்கள் அனைவரும்; புருஷ-சாஸனா:—பரமபுருஷருடைய ஆட்சியின் கீழ்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பரமபுருஷ பகவான், யக்ஞர் முதலான அவரது பல்வேறு அவதாரங்களில் வரும் போது மனுக்கள், மனு புத்திரர்கள், பெரும் ரிஷிகள், இந்திரர்கள், தேவர்கள் ஆகியோரை அவரவர் கடமைகளில் நியமிக்கின்றார்.
பதம் 8.14.3
யக்ஞாதயோ யா: கதிதா: பௌருஷ்யஸ் தனவோ ந்ருப
மனு-ஆதயோ ஜகத்-யாத்ராம் நயந்தி ஆபி: பிரசோதிதா:
யக்ஞ-ஆதய:—யக்ஞர் முதலான பகவானின் அவதாரங்களை; யா:—யார்; கதிதா:—பற்றி ஏற்கனவே பேசப்பட்டது; பௌருஷ்ய:—பரமபுருஷரின்; தனவ:—அவதாரங்கள்; ந்ருப—ராஜனே; மனு-ஆதய:—மனுக்களும், மற்றவர்களும்; ஜகத-யாத்ராம்—பிரபஞ்ச விவகாரங்களை; நயந்தி—நடத்துகின்றனர்; ஆபி:—அவதாரங்களால்; பிரசோதிதா:—ஊக்குவிக்கப்பட்டு.
ராஜனே, யக்ஞரைப் போன்ற, பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றி நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன். மனுக்களும், மற்றவர்களும் இந்த அவதாரங்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுடைய உத்தரவின் கீழ்தான் பிரபஞ்ச இயக்கங்களை அவர்கள் நடத்துகின்றனர்.
பதம் 8.14.4
சதுர் யுகாந்தே காலேன க்ரஸ்தான் ச்ருதி-கணான் யதா
தபஸா ரிஷயோ ‘பஸ்யன் யதோ தர்ம: ஸனாதன:
சது:-யுக-அந்தே—ஒவ்வொரு சதுர் யுகத்தின் (சத்திய, துவாபர, திரேதா மற்றும் கலி) முடிவிலும்; காலேன—காலப்போக்கில்; க்ரஸ்தான்—மறைந்து விடுவதால்; ஸ்ருதி-கணான்—வேத உபதேசங்கள்; யதா—அவ்வாறு; தபஸா—தவத்தினால்; ரிஷய:—பெரும் முனிவர்கள்; அபஸ்யன்—துஷ்பிரயோகத்தைக் கண்டு; யத:—எங்கிருந்து; தர்ம:—வர்ணாஸ்ரம கடமைகள்; ஸனாதன:—நித்தியமான.
ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்.
பதம் 8.14.5
ததோ தர்மம் சதுஷ்பாதம் மனவோ ஹரிணோதிதா:
யுக்தா: ஸஞ்சாரயந்தி அத்தா ஸ்வே ஸ்வே காலே மஹீம் ந்ருப
தத:—அதன்பிறகு (கலியுகத்தின் முடிவில்); தர்மம்—மதக் கொள்கை; சது:-பாதம்—நான்கு பாகங்களில்; மனவ:—எல்லா மனுக்களும்; ஹரிணா—பரமபுருஷ பகவானால்; உதிதா:—உபதேசிக்கப்பட்டு; யுக்தா:—ஈடுபட்டு; ஸஞ்சாரயந்தி—மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்; அத்தா—நேரடியாக; ஸ்வே ஸ்வே—அவர்களது சொந்த; காலே—காலத்தில்; மஹீம்—இவ்வுலகில்; ந்ருப—ராஜனே.
அதன்பிறகு, ராஜனே, பரமபுருஷ பகவானால் உபதேசிக்கப்பட்டதற்கேற்ப முழுமையாக ஈடுபட்டுள்ள மனுக்கள், சனாதன தர்மத்தின் கொள்கைகளை அதன் முழுமையான நான்கு பாகங்களில் நேரடியாக மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்.
பதம் 8.14.6
பாவயந்தி ப்ரஜா-பாலா யாவத் அந்தம் விபாகச:
யக்ஞ-பாக-புஜோ தேவா யே ச தத்ரான்விதாஸ் ச தை:
பாவயந்தி—கட்டளையை நிறைவேற்றுகின்றனர்; ப்ரஜா-பாலா:—உலக ஆளுனர்களான மனுவின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளும்; யாவத் அந்தம்—மனுவின் ஆட்சிக் காலத்தின் முடிவில்; விபாகச:—பிரிவுகளில்; யக்ஞ-பாக-புஜ:—யக்ஞங்களின் பலனை அனுபவிப்பவர்கள்; தேவா:—தேவர்கள்; யே—மற்றவர்கள்; ச—தவிரவும்; தத்ர அன்விதா:—அத்தொழிலில் ஈடுபட்டுள்ள; ச—மேலும்; தை—அவர்களால்.
யக்ஞங்களின் பலன்களை அனுபவிப்பதற்காக, மனுவின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளுமாகிய, உலகின் ஆளுனர்கள், மனுவினுடைய ஆட்சிக் காலத்தின் இறுதிவரை பரமபுருஷ பகவானின் கட்டளைகளை நிறைவேற்றுகின்றனர். இந்த யக்ஞங்களின் பலன்களில் தேவர்களும் பங்கு கொள்கின்றனர்.
பதம் 8.14.7
இந்ரோ பகவதா தத்தாம் த்ரைலோக்ய-ஸ்ரியம் ஊர்ஜிதாம்
புஞ்ஜான: பாதி லோகாம்ஸ் த்ரீன் காமம் லோகே ப்ரவார்ஷதி
இந்ர:—சுவர்க்க ராஜன்; பகவதா—பரமபுருஷ பகவானால்; தத்தாம்—கொடுக்கப்பட்ட; த்ரைலோக்ய—மூவுலகங்களின்; ஸ்ரியம் ஊர்ஜிதாம்—பெரும் செல்வங்கள்; புஞ்ஜான:—அனுபவிக்கும்; பாதி—பராமரிக்கிறார்; லோகான்—எல்லா கிரகங்களையும்; த்ரீன்—மூவுலகிலுள்ள; காமம்—தேவையான அளவுக்கு; லோகே—உலகினுள்; ப்ரவர்ஷதி—மழையைப் பொழிகிறார்.
சுவர்க்க ராஜனான இந்திரன், பரமபுருஷ பகவானிடமிருந்து வரங்களைப் பெறுகிறார். இவ்வாறாக மிகச்சிறந்த ஐசுவரியங்களை அனுபவிக்கும் அவர், எல்லாக் கிரகங்களின் மீதும் போதுமான அளவுக்கு மழையைப் பொழிவதன் மூலமாக ஜீவராசிகளைப் பராமரிக்கிறார்.
பதம் 8.14.8
ஞானம் சானுயுகம் ப்ரூதே ஹரி: ஸித்த-ஸ்வரூப-த்ருக்
ரிஷி-ரூப-தர: கர்ம யோகம் யோகேச-ரூப-த்ருக்
ஞானம்—உன்னத அறிவை; ச—மேலும்; அனுயுகம்—யுகத்திற்கேற்ப; ப்ரூதே—விளக்குகிறார்; ஹரி:—பரமபுருஷ பகவான்; ஸித்த-ஸ்வரூப-த்ருக்—சனகர், ஸநாதனரைப் போன்ற முக்தி பெற்ற நபர்களில் உருவங்களை ஏற்று; ரிஷி-ரூப-தர:—யக்ஞவல்க்யரைப் போன்ற மகா புருஷர்களின் உருவங்களை ஏற்று; கர்ம—கர்ம; யோகம்—அஷ்டாங்க யோக முறையை; யோக-ஈச-ரூப-த்ருக்—தத்தாத்ரேயரைப் போன்ற ஒரு சிறந்த யோகியின் உருவை ஏற்பதன் மூலமாக.
பரம்புருஷ பகவானாகிய, ஹரி, ஒவ்வொரு யுகத்திலும், உன்னத அறிவைப் பிரச்சாரம் செய்வதற்காக, ஸனகரைப் போன்ற சித்தர்களின் உருவை ஏற்கிறார். கர்ம-மார்கத்தை போதிப்பதற்காக அவர் யக்ஞவல்க்யரைப் போன்ற புண்ணிய புருஷர்களின் உருவை ஏற்கிறார். மேலும் அஷ்டாங்க-யோக முறையை போதிப்பதற்காக அவர் தத்தாத்ரேயரைப் போன்ற பெரும் யோகிகளின் உருவை ஏற்கிறார்.
பதம் 8.14.9
ஸர்கம் ப்ரஜேச-ரூபேண தஸ்யூன் ஹன்யாத் ஸ்வராட்-வபு:
கால-ரூபேண ஸர்வேஷாம் அபாவாய ப்ருதக் குண:
ஸர்கம்—சந்ததியின் உற்பத்தி; பிரஜா-ஈச-ரூபேண—பிரஜாபதி மரீசி, மற்றவர்கள் ஆகியோரின் உருவில்; தஸ்யூன்—திருடர்களையும், அயோக்கியர்களையும்; ஹன்யாத்—கொன்று விடுகிறார்; ஸ்வ-ராட்-வபு:—அரசரின் உருவில்; கால-ரூபேண—காலத்தின் வடிவில்; ஸர்வேஷாம்—அனைத்தின்; அபாவாய—அழிவுக்காக; ப்ருதக்—வெவ்வேறு; குண:—குணங்களைக் கொண்டிருக்கிறார்.
பிரஜாபதி மரீசியின் உருவில், பரமபுருஷ பகவான் சந்ததியை உற்பத்தி செய்கிறார்; அவர் அரசராகி திருடர்களையும், அயோக்கியர்களையும் கொலை செய்கிறார்; மற்றும் காலத்தின் வடிவில், அவர் அனைத்தையும் அழித்துவிடுகின்றார். பெளதிக இருப்பின் பல்வேறு குணங்களனைத்தும், முழுமுதற் கடவுளின் குணங்களே என்பதை உணர வேண்டும்.
பதம் 8.14.10
ஸ்தூயமானோ ஜனைர் ஏபிர் மயயா நாம-ரூபயா
விமோஹிதாத்மபிர் நானா-தர்சனைர் ந ச த்ருஸ்யதே
ஸ்தூயமான:—தேடப்பட்டு; ஜனை:—பொதுவாக ஜனங்களால்; ஏபி:—அவர்கள் அனைவராலும்; மாயயா—மாயையின் ஆதிக்கத்தின் கீழ்; நாம-ரூபயா—பல்வேறு நாமங்களையும், உருவங்களையும் ஏற்று; விமோஹித—குழம்பியுள்ளனர்; ஆத்மபி:—மாயையினால்; நானா—அநேக; தர்சனை:—தத்துவார்த்தமான அணுகுமுறைகளால்; ந—இல்லை; ச—மேலும்; த்ருஸ்யதே—பரமபுருஷ பகவானைக் காண முடியும்.
பொதுவாக மக்கள் மாயச் சக்தியினால் குழப்பம் அடைந்துள்ளனர். ஆகவே அவர்கள் பரம சத்தியமான, பரமபுருஷ பகவானைப் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளின் மூலமாகவும், தத்துவார்த்த கற்பனையின் மூலமாகவும் கண்டறிய முயல்கின்றனர். ஆயினும், பரமபுருஷரை அவர்கள் காண முடியாமல் இருக்கின்றனர்.
பதம் 8.14.11
ஏதத் கல்ப-விகல்பஸ்ய ப்ரமாணம் பரிகீர்திதம்
யத்ர மன்வந்தராணி ஆஹுஸ் சதுர்தச புராவித:
ஏதத்—இவ்வெல்லா; கல்ப—பிரம்ம தேவரின் ஒரு பகல்; விகல்பஸ்ய—மனுக்களின் மாற்றங்களைப் போன்ற, ஒரு கல்பத்தினுள் மாற்றங்களின்; ப்ரமாணம்—ஆதாரங்கள்; பரிகீர்திதம்—(என்னால்) விவரிக்கப்பட்டது; யத்ர—எங்கு; மன்வந்தராணி—மனுவின் ஆட்சிக் காலங்கள்; ஆஹு:—கூறப்பட்டது; சதுர்தச—பதினான்கு; புரா-வித:—கற்றறிந்த பண்டிதர்கள்.
ஒரு கல்பத்தில், அல்லது பிரம்மாவின் ஒரு பகலில், விகல்பங்கள் என்று அழைக்கப்படும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ராஜனே, இவை அனைத்தையும் உமக்கு நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். பிரம்மாவின் ஒரு பகலில் பதினான்கு மனுக்கள் தோன்றுகின்றனர் என்று கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களை அறிந்தவர்களான கற்றறிந்த பண்டிதர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பிரபஞ்ச நிர்வாகத்தின் ஒழுங்கு” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.