அத்தியாயம் – 13
எதிர்கால மனுக்களின் வர்ணனை
பதம் 8.13.1
ஸ்ரீ-சுக உவாச
மனுர் விவஸ்வத: புத்ர: ஸ்ராத்ததேவ இதி ஸ்ருத:
ஸப்தமோ வர்தமானோ யஸ் தத்-அபத்யானி மே ஸ்ருணு

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; மனு:—மனு; விவஸ்வத:—சூரிய தேவனின்; புத்ர:—புத்திர; ஸ்ராத்ததேவ:—ஸ்ராத்ததேவராக; இதி—இவ்வாறாக; ஸ்ருத:—அறியப்படும், போற்றப்படும்; ஸப்தம:—ஏழாவது; வர்தமான:—தற்போது; ய:—அவர்; தத்—அவரது; அபத்யானி—குழந்தைகள்; மே—என்னிடமிருந்து; ஸ்ருணு—கேட்பீராக.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஸ்ராத்ததேவர் எனும் பெயர் கொண்ட தற்போதைய மனு விவஸ்வானின் புத்திரராவார். இவர் சூரிய லோகத்தின் ஆளும் மூர்த்தியாக இருக்கிறார். ஸ்ராத்ததேவர் ஏழாவது மனுவாவார். இப்பொழுது அவரது புத்திரர்களைப் பற்றி நான் விவரிப்பதை தயவு செய்து கேட்பீராக.

பதங்கள் 8.13.2 – 8.13.3
இக்ஷ்வாகுர் நபகஸ் சைவ த்ருஷ்ட: சர்யாதிர் ஏவ ச
நரிஷ்யந்தோ ‘த நாபாக: ஸப்தமோ திஷ்ட உச்யதே

தரூஷஸ் ச ப்ருஷத்ரஸ் ச தசமோ வஸுமான் ஸ்ம்ருத:
மனோர் வைவஸ்வதஸ்யைதே தச:- புத்ரா: பரந்தப

இக்ஷ்வாகு:—இஷ்வாகு; நபக:—நபகன்; ச—கூட; ஏவ—உண்மையில்; த்ருஷ்ட:—த்ருடன்; சர்யாதி:—ஸர்யாதி; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்; நரிஷ்யந்த:—நரிஷ்யந்த; அத—அத்துடன்; நாபாக:—நாபாகன்; ஸப்தம:—ஏழாவதான; திஷ்ட:—திஷ்டன்; உச்யதே—மிகவும் புகழ்பெற்றவர்; தரூஷ: ச—மற்றும் தரூஷர்; ப்ருஷத்ர: ச—மற்றும் பிருஷத்ரர்; தசம:—பத்தாவதான; வஸுமான்—வஸுமான்; ஸம்ருத:—அறியப்படும்; மனோ:—மனுவின்; வைவஸ்வதஸ்ய—வைவஸ்வதரின்; ஏதே—இவ்வெல்லா; தஸ-புத்ரா:—பத்து புத்திரர்கள்; பரந்தப—ராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, மனுவின் பத்து புதல்வர்களுக்கிடையில் இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன் மற்றும் நாபாகன் ஆகியோரும் அடங்குவர். ஏழாவது புதல்வர் திஷ்டன் எனப்படுபவராவார். பிறகு தரூஷரும், ப்ருஷத்ரரும் வருகின்றனர். மேலும் பத்தாவது புதல்வர் வஸுமான் எனப்படுகிறார்.

பதம் 8.13.4
ஆதித்யா வஸவோ ருத்ரா விஸ்வேதேவா மருத்-கணா:
அஸ்வினாவ் ரிபவோ ராஜன் இந்ரஸ் தேஷாம் புரந்தர:

ஆதித்யா:—ஆதித்தியர்கள்; வஸவ:—வஸுக்கள்; ருத்ரா—ருத்திரர்கள்; விஸ்வேதேவா:—விஸ்வேதேவர்கள்; மருத்-கணா:—மற்றும் மருத்கள்; அஸ்வினௌ—இரு அஸ்வினி சகோதரர்கள்; ரிபவ:—ரிபுக்கள்; ராஜன்—ராஜனே, இந்ர:—சுவர்க்க ராஜன்; தேஷாம்—அவர்களின்; புரந்தர:—புரந்தரராவார்.

அரசே, இந்த மந்வந்தரத்தில், ஆதித்தியர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விஸ்வேதேவர்கள், மருத்கள், அஸ்வின் குமாரர்கள் மற்றும் ரிபுக்கள் ஆகியோர் தேவர்களாவர். அவர்களது தலைவர் (இந்திரன்) புரந்தரராவார்.

பதம் 8.13.5
கஸ்யபோ ‘த்ரிர் வஸிஷ்டஸ் ச விஸ்வாமித்ரோ ‘த கௌதம:
ஜமதக்னிர் பரத்வாஜ இதி ஸப்தர்ஷய: ஸ்ம்ருதா:

கஸ்யப:—கஸ்யபர்; அத்ரி:—அத்ரி; வஸிஷ்ட—வஸிஷ்டர்; ச—மேலும்; விஸ்வாமித்ர:—விஸ்வாமித்திரர்; அத—அத்துடன்; கௌதம:—கௌதமர்; ஜமதக்னி:—ஜமதக்னி; பரத்வாஜ:—பரத்வாஜர்; இதி—இவ்வாறாக; ஸப்த-ரிஷய:—ஏழு ரிஷிகள்; ஸ்ம்ருதா:—புகழ்பெற்ற.

கஸ்யபர், அத்ரி, வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜமதாக்னி மற்றும் பரத்வாஜர் ஆகியோர் ஏழு ரிஷிகள் எனப்படுகின்றனர்.

பதம் 8.13.6
அத்ராபி பகவஜ்-ஜன்ம கஸ்யபாத் அதிதேர் அபூத்
ஆதித்யானாம் அவரஜோ விஷ்ணுர் வாமன-ரூப-த்ருக்

அத்ர—இம்மனுவின் ஆட்சிக் காலத்தில்; அபி—நிச்சயமாக; பகவத்-ஜன்ம—பரமபுருஷ பகவானின் தோற்றம்; கஸ்யபாத்—கஸ்யப முனிவரால்; அதிதே:—தாய் ஆதிதியின்; அபூத்—சாத்தியமாயிற்று; ஆதித்யானாம்—ஆதித்தியர்களின்; அவர-ஜ:—மிகவும் இளையவர்; விஷ்ணு:—பகவான் விஷ்ணுவாவார்; வாமன-ரூப-த்ருக்—பகவான் வாமனராகத் தோன்றிய.

இந்த மன்வந்தரத்தில், பரமபுருஷ பகவான் ஆதித்தியர்களுக்கெல்லாம் இளையவராகத் தோன்றினார். அவர் குள்ள வாமனர் எனப்படுகிறார். அவரது தந்தை கஸ்யபராவார். தாயார் அதிதியாவாள்.

பதம் 8.13.7
ஸங்க்ஷேபதோ மயோக்தானி ஸப்த-மன்வந்தராணி தே
பவிஷ்யாணி அத வக்ஷ்யாமி விஷ்ணோ: சக்த்யான்விதானி ச

ஸங்க்ஷேபத:—சுருக்கமாக; மயா—என்னால்; உத்கானி—விளக்கப்பட்டது; ஸப்த—ஏழு; மனு-அந்தராணி—மனுவின் மாற்றங்கள்; தே—உமக்கு; பவிஷ்யாணி—எதிர்கால மனுக்களை; அத—கூட; வக்ஷ்யாமி—நான் கூறுவேனாக; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; சக்த்யா அன்விதானி—சக்தியால் அதிகாரம் அளிக்கப்பட்ட; ச—மேலும்.

நான் ஏழு மனுக்களின் நிலையைப் பற்றி சுருக்கமாக விளக்கினேன். இனி எதிர்கால மனுக்களைப் பற்றியும், பகவான் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியும் நான் விவரிக்கப் போகிறேன்.

பதம் 8.13.8
விவஸ்வதஸ் ச த்வே ஜாயே விஸ்வகர்ம-ஸுதே உபே
ஸம்ஞா சாயா ச ராஜேந்ர யே ப்ராக் அபிஹிதே தவ

விவஸ்வத:—விவஸ்வானின்; ச—கூட; த்வே—இரு; ஜாயே—மனைவிகள்; விஸ்வகர்ம-ஸுதே—விஸ்வகர்மாவின் இரு புதல்விகள்; உபே—அவர்கள் இருவரும்; ஸம்க்ஞா:—ஸம்க்ஞா; சாயா—சாயா; ச—மேலும்; ராஜ-இந்ர—ராஜனே; யே—அவ்விருவரையும்; ப்ராக்—முன்பு; அபிஹிதே—விவரித்தேன்; தவ—உமக்கு.

ராஜனே, ஸம்க்ஞா மற்றும் சாயா எனும் பெயர் கொண்டவர்களும், விவஸ்வானின் முதல் இரு மனைவிகளுமான, விஸ்வகர்மானின் இரு புதல்விகளைப் பற்றி நான் ஏற்கனவே (ஆறாம் காண்டத்தில்) விவரித்திருக்கிறேன்.

பதம் 8.13.9
த்ருதீயாம் வடவாம் ஏகே தாஸாம் ஸம்க்ஞா-ஸுதாஸ் த்ரய:
யமோ யமீ ஸ்ராத்ததேவஸ் சாயாயாஸ் ச ஸுதான் ச்ருனு

த்ருதீயாம்—மூன்றாவது மனைவியான; வடவாம்—வடவா; ஏகே—சிலர்; தாஸாம்—மூன்று மனைவிகளில்; ஸம்க்ஞா- ஸுதா: த்ரய:—ஸம்க்ஞாவின் மூன்று குழந்தைகள்; யம:—யமன் எனும் பெயர் கொண்ட ஒரு மகன்; யமீ—யமீ என்ற ஒரு மகள்; ஸ்ராத்ததேவ:—ஸ்ராத்ததேவர் என்ற, மற்றொரு மகன்; சாயாயா:—சாயாவின்; ச—மேலும்; ஸுதான்—மகன்களை; ஸ்ருணு—பற்றி கேட்பீராக.

வடவா எனும் ஒரு மூன்றாவது மனைவியும் சூரிய தேவனுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்று மனைவிகளில் ஸம்க்ஞா எனப்படும் மனைவிக்கு யமன், யமீ மற்றும் ஸ்ராத்ததேவர் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். இப்போது நான் சாயாவின் குழந்தைகளைப் பற்றி விவரிக்கப் போகிறேன்.

பதம் 8.13.10
ஸாவர்ணிஸ் தபதீ கன்யா பார்யா ஸம்வரணஸ்ய யா
சனைஸ்சரஸ் த்ருதீயோ ‘பூத் அஸ்வினௌ வடவாத்மஜௌ

ஸாவர்ணி:—ஸாவர்ணி; தபதீ—தபதீ; கன்யா—மகள்; பார்யா—மனைவி; ஸம்வரணஸ்ய—ஸம்வரண ராஜனின்; யா—அவள்; சனைஸ்சர:—சனைஸ்சரன்; த்ருதீய:—மூன்றாவது குழந்தை; அபூத்—பிறந்தது; அஸ்வினௌ— இரு அஸ்வினி-4rகுமாரர்கள்; வடவா-ஆத்ம-ஜௌ—வடவா எனும் மனைவியின் மகன்கள்.

சாயாவுக்கு ஸாவர்ணி எனப்படும் ஒரு மகனும், தபதீ எனப்படும் ஒரு மகளும் இருந்தனர். பிற்காலத்தில் தபதீ ஸம்வரண ராஜனின் மனைவியானாள். சாயாவின் மூன்றாவது குழந்தை சனீஸ்வரன் (சனி) எனப்படுகிறார். வடவா, அஸ்வினி சகோதரர்கள் எனப்படும் இரு புத்திரர்களை ஈன்றாள்.

பதம் 8.13.11
அஷ்டமே ‘ந்தர ஆயாதே ஸாவர்ணிர் பவிதா மனு:
நிர்மோக-விரஜஸ்காத்யா: ஸாவர்ணி-தனயா ந்ருப

அஷ்டமே—எட்டாவது; அந்தரே—மனுவின் ஆட்சிக் காலம்; ஆயாதே—வரும்போது; ஸாவர்ணி:—ஸாவர்ணி; பவிதா—ஆவார்; மனு:—எட்டாவது மனுவாக; நிர்மோக—நிர்மோகர்; விரஜஸ்க-ஆத்யா:—விரஜஸ்கரும் மற்றவர்களும்; ஸாவர்ணி—ஸாவர்ணியின்; தனயா:—மகன்கள்; ந்ருப—ராஜனே.

ராஜனே, எட்டாவது மனுவின் ஆட்சிக் காலம் வரும்போது, ஸாவர்ணி மனுவாக இருப்பார். அவரது மகன்களுக்கிடையில் நிர்மோகரும், விரஜஸ்கரும் இருப்பார்கள்.

பதம் 8.13.12
தத்ர தேவா: ஸுதபஸோ விராஜா அம்ருதப்ரபா:
தேஷாம் விரோசன-ஸுதோ பலிர் இந்ரோ பவிஷ்யதி

தத்ர—மனுவின் அந்த ஆட்சிக் காலத்தில்; தேவா:—தேவர்கள்; ஸுதபஸ:—ஸுதபர்கள்; விரஜா:—விரஜர்கள்; அம்ருதப்ரபா:—அம்ருதபிரபர்கள்; தேஷாம்—அவர்களில்; விரோசன-ஸுத:—விரோசனரின் மகன்; பலி—பலி மகாராஜன்; இந்ர:—சுவர்க்க ராஜன்; பவிஷ்யதி—ஆவார்.

எட்டாவது மனுவின் ஆட்சிக் காலத்தில், தேவர்களுக்கிடையில் ஸுதபர்கள், விரஜர்கள் மற்றும் அம்ருதபிரபர்கள் ஆகியோர் இருப்பார்கள். விரோசனரின் மகனான பலி மகாராஜன், தேவர்களின் அரசனான இந்திரனாக இருப்பார்.

பதம் 8.13.13
தத்வேமாம் யாசமானாய விஷ்ணவே ய: பத-த்ரயம்
ராத்தம் இந்ர-பதம் ஹித்வா தத: ஸித்திம் அவாப்ஸ்யதி

தத்வா—தானமாகக் கொடுத்து; இமாம்—இப்பிரபஞ்சம் முழுவதையும்; யாசமானாய—அவரிடம் யாசித்த; விஷ்ணவே—பகவான் விஷ்ணுவுக்கு; ய:—பலி மகாராஜன்; பத-த்ரயம்—மூன்றடி நிலத்தை; ராத்தம்—அடைந்தார்; இந்ர-பதம்—இந்திர பதவியை; ஹித்வா—கைவிட்டு; தத:—அதன்பிறகு; ஸித்திம்—பூரணத்துவம்; அவாப்ஸ்யதி—அடைவார்.

பலி மகாராஜன் பகவான் விஷ்ணுவுக்கு மூன்றடி நிலத்தை தானமாகக் கொடுத்தார். இந்த தானத்தால் மூவுலகங்களையும் அவர் இழந்தார். பிறகு, பலி மகாராஜன் அனைத்தையும் பகவானிடம் கொடுத்து, அதனால் பகவான் விஷ்ணு திருப்தியடையும்போது, பலி மகாராஜன் வாழ்வின் பூரணத்துவத்தை அடைவார்.

பதம் 8.13.14
யோ ‘ஸௌ பகவதா பத்த: ப்ரீதேன ஸுதலே புன:
நிவேசிதோ ‘திகே ஸ்வர்காத் அதுநாஸ்தே ஸ்வ-ராட் இவ

ய:—பலி மகாராஜன்; அஸௌ—அவர்; பகவதா—பரமபுருஷ பகவானால்; பத்த:—பந்தப்படுத்தப்பட்டு; ப்ரீதேன—அன்பின் காரணத்தால்; ஸுதலே—ஸுதல இராஜ்யத்தில்; புன:—மீண்டும்; நிவேசித:—அமைந்துள்ள; அதிகே—செல்வம் மிகுந்த; ஸ்வர்காத்—சுவர்க்க லோகங்களை விட; அதுனா—தற்சமயத்தில்; ஆஸ்தே—அமைந்துள்ளது; ஸ்வ-ராட் இவ—இந்திரன் நிலைக்குச் சமமாக.

முழுமுதற் கடவுள் மிகுந்த அன்பினால் பலியை அடக்கியாண்டு, சுவர்க்க லோகங்களை விடச் செல்வம் மிகுந்ததான ஸுதல் இராஜ்யத்தின் அரியாசனத்தில் அவரை அமர்த்தினார். பலி மகாராஜன் இப்போது அந்த கிரகத்தில் இந்திரனை விட அதிக சுகபோகமான நிலையில் வாழ்கிறார்.

பதங்கள் 8.13.15 – 8.13.16
காலவோ தீப்திமான் ராமோ த்ரோண-புக்ர: க்ருபஸ் ததா
ரிஷ்யஸ்ருங்க: பிதாஸ்மாகம் பகவான் பாதராயண:

இமே ஸப்தர்ஷயஸ் தத்ர பவிஷ்யந்தி ஸ்வ-யோகத:
இதானீம் ஆஸதே ராஜன் ஸ்வே ஸ்வ ஆஸ்ரம-மண்டலே

காலவ:—காலவர்; தீப்திமான்—தீப்திமான்; ராம:—பரசுராமர்; த்ரோண-புத்ர:—துரோணாசார்யரின் புத்திரரான அஸ்வத்தாமன்; க்ருப—கிருபாசார்யர்; ததா—கூட; ரிஷ்யஸ்ருங்க:—ரிஷ்யஸ்ருங்கர்; பிதா அஸ்மாகம்—எமது தந்தையான; பகவான்—பகவானின் அவதாரமான; பாதராயண:—வியாசதேவர்; இமே—அவர்கள் அனைவரும்; ஸப்த-ரிஷய:—ஏழு ரிஷிகள்; தத்ர—எட்டாவது மன்வந்தரத்தில்; பவிஷ்யந்தி—ஆவார்கள்; ஸ்வ-யோகத:—அவர்கள் பகவானிடம் செய்த சேவையின் பலனாக; இதானீம்—தற்போது; ஆஸதே—அவர்கள் அனைவரும் இருக்கின்றனர்; ராஜன்—ராஜனே; ஸ்வே ஸ்வே—அவர்களது சொந்த; ஆஸ்ரம-மண்டலே—வெவ்வேறு ஆசிரமங்களில்.

ராஜனே, எட்டாவது மன்வந்தரத்தின் போது, மகா புருஷர்களாகிய காலவர், தீப்திமான், பரசுராமர், அஸ்வத்தாமன், கிருபாசார்யர், ரிஷ்யஸ்ருங்க மற்றும் எமது தந்தையும், நாராயணரின் அவதாரமுமாகிய வியாசதேவர் ஆகியோர் ஏழு ரிஷிகளாக இருப்பார்கள். இப்போதைக்கு அவர்களனைவரும் அவரவர் ஆசிரமங்களில் வாழ்கின்றனர்.

பதம் 8.13.17
தேவகுஹ்யாத் ஸரஸ்வத்யாம் ஸார்வபௌம இதி ப்ரபு:
ஸ்தானம் புரந்தராத் த்ருத்வா பலயே தாஸ்யதீஸ்வர:

தேவகுஹ்யாத்—அவரது தந்தையான தேவகுஹ்யரிடமிருந்து; ஸரஸ்வத்யாம்—ஸரஸ்வதியின் கருவில்; ஸார்வபௌம:—ஸார்வ பௌமர்; இதி—இவ்வாறாக; ப்ரபு:—எஜமானரின்; ஸ்தானம்—இடத்தை; புரந்தராத்—இந்திரனிடமிருந்து; ஹ்ருத்வா—பலாத்காரமாக பறித்துக் கொண்டு; பலயே—பலி மகாராஜனுக்கு; தாஸ்யதி—அளிப்பார்; ஈஸ்வர:—பகவான்.

எட்டாவது மன்வந்தரத்தில், முழுமுதற் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவரான ஸார்வபௌமராகப் பிறப்பார். தேவகுஹ்யர் அவரது தந்தையாக இருப்பார். ஸரஸ்வதீ அவரது தாயாக இருப்பாள். அவர் புரந்தரரிடம் (இந்திரன்) இருந்து இராஜ்யத்தைப் பறித்து அதை பலி மகாராஜனிடம் ஒப்படைப்பார்.

பதம் 8.13.18
நவமோ தக்ஷ-ஸாவர்ணிர் மனுர் வருண-ஸம்பவ:
பூதகேதுர் தீப்தகேதுர் இதி ஆத்யாஸ் தத்-ஸுதா ந்ருப

நவம:—ஒன்பதாவது; தக்ஷ-ஸாவர்ணி:—தக்ஷ-ஸாவார்ணி; மனு:—மனு; வருண-ஸம்பவ:—வருணனின் மகனாகப் பிறப்பார்; பூத கேது:—பூதகேது; தீபகேது:—தீபகேது; இதி—இவ்வாறாக; ஆத்யா:—முதலிய; தத்—அவரது; ஸுதா:—மகன்கள்; ந்ருப—ராஜனே.

ராஜனே, வருணனுக்குப் பிறக்கும் தக்ஷ-ஸாவார்ணி ஒன்பதாவது மனுவாக இருப்பார். அவரது மகன்களுள் பூதகேது மற்றும் தீபகேது ஆகியோரும் அடங்குவர்.

பதம் 8.13.19
பாரா-மரீசிகர்பாத்யா தேவா இந்ரோ ‘த்புத: ஸ்ம்ருத:
த்யுதிமத்-ப்ரமுகாஸ் தத்ர பவிஷ்யந்தி ரிஷயஸ் தத:

பாரா—பாரர்கள்; மரீசிகர்ப—மரீசிகர்பர்கள்; ஆத்யா:—முதலானோர்; தேவா:—தேவர்கள்; இந்ர:—சுவர்க்க ராஜன்; அத்புத:—அத்புதன்; ஸ்ம்ருத:—எனப்படுவார்; த்யுதிமத்—தியுதிமான்; ப்ரமுகா:—முதலானோர்; தத்ர—மனுவின் அந்த ஒன்பதாவது ஆயுட்காலத்தில்; பவிஷ்யந்தி—ஆவார்கள்; ரிஷய:—ஏழு ரிஷிகள்; தத:—பிறகு.

இந்த ஒன்பதாவது மன்வந்தரத்தில், தேவர்களுக்கிடையில் பாரர்களும், மரீசிகர்பர்களும் அடங்குவர். சுவர்க்க ராஜனான இந்திரன் அத்புதன் என்று பெயரிடப்படுவார். தியுதிமான், ஏழு ரிஷிகளுள் ஒருவராக இருப்பார்.

பதம் 8.13.20
ஆயுஷ்மதோ ‘ம்பு தாராயாம்
ரிஷபோ பகவத்-கலா
பவிதா யேன ஸம்ராத்தாம்
த்ரி-லோகீம் போக்ஷ்யதே ‘த்புத:

ஆயுஷ்மத:—ஆயுஷ்மான் எனும் தந்தையின்; அம்புதாராயாம்—அம்புதாரா எனும் தாயின் கருவில்; ரிஷப:—ரிஷபர்; பகவத்-கலா—பரம புருஷ பகவானின் ஓர் அம்ச அவதாரமாக; பவிதா—இருப்பார்; யேன—எவரால்; ஸம்ராத்தாம்—சர்வ ஐசுவரியமுள்ள; த்ரி-லோகீம்—மூவுலகங்களை; போக்ஷ்யதே—அனுபவிப்பார்; அத்புத:—அத்புதன் எனும் பெயர் கொண்ட இந்திரன்.

பரமபுருஷ பகவானின் அம்ச அவதாரமாகிய ரிஷப தேவர், ஆயுஷ்மான் எனும் தந்தைக்கும், அம்புதாரா எனும் தாய்க்கும் பிறப்பார். அவர் அத்புதன் எனும் பெயர் கொண்ட இந்திரனுக்கு, மூவுலக ஐசுவரியங்களையும் அனுபவிக்கும் அதிகாரத்தை அளிப்பார்.

பதம் 8.13.21
தசமோ ப்ரஹ்ம-ஸாவர்ணிர் உபஸ்லோக-ஸுதோ மனு:
தத்-ஸுதா பூரிஸேணாத்யா ஹவிஷ்மத் ப்ரமுகா த்விஜா:

தசம:—பத்தாவது மனு; ப்ரஹ்ம-ஸாவர்ணி:—பிரஹ்ம-ஸாவர்ணி; உபஸ்லோக-ஸுத:—உபஸ்லோகருக்குப் பிறந்த; மனு:—மனுவாக இருப்பார்; தத் ஸுதா:—அவரது மகன்கள்; பூரிஷேண-ஆத்யா:—பூரிஷேணரும் மற்றவர்களும்; ஹவிஷ்மத்—ஹவிஷ்மான்; ப்ரமுகா:—முதலானவர்கள்; த்விஜா:—ஏழு ரிஷிகள்.

பிரஹ்ம-ஸாவர்ணி எனப்படும் உபஸ்லோகரின் புதல்வர் பத்தாவது மனுவாக இருப்பார். அவரது மகன்களுள் பூரிஷேணரும் அடங்குவார். மேலும் ஹவிஷ்மான் முதலான பிராமணர்கள் ஏழு ரிஷிகளாக இருப்பார்கள்.

பதம் 8.13.22
ஹவிஷ்மான் ஸுக்ருத: ஸத்யோ ஜயோ மூர்திஸ் ததா த்விஜா:
ஸுவாஸன-விருத்தாத்யா தேவா: சம்பு: ஸுரேஸ்வர:

ஹவிஷ்மான்—ஹவிஷ்மான்; ஸுக்ருத:—சுக்ருதர்; ஸத்ய:—ஸத்யர்; ஜய:—ஜயன்; மூர்த்தி:—மூர்த்தி; ததா—அச்சமயத்தில்; த்விஜிய:—ஏழு ரிஷிகளாக; சுவாஸன—சுவாஸனர்கள்; விருத்த—விருத்தர்கள்; ஆத்யா:—முதலியோர்; தேவா:—தேவர்கள்; சம்பு:—சம்பு; ஸுர ஈஸ்வர:—தேவர்களின் ராஜனான இந்திரன்.

ஹவிஷ்மான், சுக்ருதர், ஸத்யர், ஜயன், மூர்த்தி ஆகியோரும், மற்றவர்களும் ஏழு ரிஷிகளாக இருப்பர். தேவர்களுள் சுவாஸனர்களும், விருத்தர்களும் அடங்குவர். மேலும் சம்பு அவர்களுடைய அரசனான இந்திரனாக இருப்பார்.

பதம் 8.13.23
விஷ்வக்ஷேனோ விஷுச்யாம் து சம்போ: ஸக்யம் கரிஷ்யதி
ஜாத: ஸ்வாம்சேன பகவான் க்ருஹே விஸ்வஸ்ருஜோ விபு:

விஷ்வக்ஷேண:—விஷ்வக்ஷேணர்; விஷூச்யாம்—விஷூசியின் கருவில்; து—பிறகு; சம்போ:—சம்புவின்; ஸக்யம்—நட்பை; கரிஷ்யதி—உருவாக்கும்; ஜாத:—பிறந்து; ஸ்வ-அம்சேன—ஏற்படுத்திக் கொள்வது ஓர் அம்சத்தால்; பகவான்—பரமபுருஷ பகவான்; க்ருஹே—வீட்டில்; விஸ்வஸ்ருஜ:—விஸ்வசிரஷ்டரின்; விபு:—பரம சக்திவாய்ந்த பகவான்.

விஸ்வசிரஷ்டரின் வீட்டில், பரமபுருஷர், பகவானின் ஒரு அம்சமாக விஷூசியின் கருவிலிருந்து தோன்றுவார். இந்த அவதாரம் ஷ்வக்ஷேனர் எனப்படுவார். இவர் சம்புவுடன் சினேகம் கொள்வார்.

பதம் 8.13.24
மனுர் வை தர்ம-ஸாவர்ணிர் ஏகாதசம ஆத்மவான்
அனாகதாஸ் தத்-ஸுதாஸ் ச ஸத்யதர்மாதயோ தச

மனு:—மனு; வை—உண்மையில்; தர்ம-ஸாவர்ணி:—தர்ம ஸாவர்ணி; ஏகாதசம:—பதினொன்றாவது; அத்மவான்—புலன்களை ஆள்பவரான; அனாகதா:—எதிர்காலத்தில் வருவார்கள்; தத்—அவரது; ஸுதா:—மகன்கள்; ச—மேலும்; ஸத்யதர்ம-ஆதய:—ஸத்யதர்மர் முதலான; தச—பத்து.

பதினொன்றாவது மன்வந்தரத்தில், தர்ம-ஸாவர்ணி மனுவாக இருப்பார். இவர் ஆன்மீக அறிவில் மிகவும் புலமை வாய்ந்தவராக இருப்பார். இவரிடமிருந்து ஸத்யதர்மர் முதலான பத்து மகன்கள் வருவார்கள்.

பதம் 8.13.25
விஹங்கமா: காமகமா நிர்வாணருசய: ஸுரா:
இந்ரஸ் ச வைத்ருதஸ் தேஷாம் ரிஷயஸ் சாருணாதய:

விஹங்கமா:—விஹங்கமர்கள்; காமகமா:—காமகமர்கள்; நிர்வாணருசய:—நிர்வாணருசிகள்; ஸுரா:—தேவர்கள்; இந்ர:—சுவர்க்க ராஜனான இந்திரன்; ச—தவிரவும்; வைத்ருத:—வைத்ருதர்; தேஷாம்—அவர்களின்; ரிஷய:—ஏழு ரிஷிகள்; ச—கூட; அருண-ஆதய:—அருணரை தலைமையாகக் கொண்ட.

விஹங்கமர்கள், காமகமர்கள், நிர்வாணருசிகள் மற்றும் பிற தேவர்களாக இருப்பர். வைத்ருதர், தேவர்களின் ராஜனான இந்திரனாக இருப்பார். மேலும் ஏழு ரிஷிகள் அருணரை தலைமையாகக் கொண்டிருப்பர்.

பதம் 8.13.26
ஆர்யஸ்ய ஸுதஸ் தத்ர தர்மஸேதுர் இதி ஸ்ம்ருத:
வைத்ருதாயாம் ஹரேர் அம்சஸ் த்ரி-லோகீம் தாரயிஷ்யதி

ஆர்யகஸ்ய—ஆர்யகரின்; ஸுத:—புத்திரன்; தத்ர—அந்த ஆட்சிக்காலத்தில் (பதினொன்றாம் மன்வந்தரத்தில்); தர்மஸேது:—தர்மஸேது; இதி—இவ்வாறாக; ஸ்ம்ருத:—புகழ் பெற்ற; வைத்ருதாயாம்—தாய் வைத்ருதாவிடம் இருந்து; ஹரே:—பரமபுருஷ பகவானின்; அம்ச:—ஓர் அம்சம்; த்ரி-லோகீம்—மூவுலகங்களையும்; தாரயிஷ்யதி—ஆட்சிபுரிவார்.

ஆர்யகரின் புதல்வரான தர்மஸேது பரமபுருஷ பகவானின் ஓர் அம்சமாவார். அவர் ஆர்யகரின் மனைவியான வைத்ருதாவின் கருவில் தோன்றி மூவுலகங்களையும் ஆள்வார்.

பதம் 8.13.27
பவிதா ருத்ர-ஸாவர்ணீ ராஜன் த்வாதசமோ மனு:
தேவவான் உபதேவஸ் ச தேவஸ்ரேஷ்டாதய: ஸுதா:

பவிதா—தோன்றுவார்; ருத்ர-ஸாவர்ணி:—ருத்ர-ஸாவர்ணி; ராஜன்—ராஜனே; த்வாதசம:—பன்னிரண்டாவது; மனு:—மனு; தேவவான்—தேவவான்; உபதேவ:—உபதேவர்; ச—மேலும்; தேவஸ்ரேஷ்ட-ஆதய:—தேவஸ்ரேஷ்டர் முதலானவர்கள்; ஸுதா:—மனுவின் புத்திரர்கள்.

ராஜனே, பன்னிரண்டாவது மனு ருத்ர-ஸாவர்ணி என்று பெயரிடப்படுவார். தேவவான், உபதேவர் மற்றும் தேவஸ்ரேஷ்டர் ஆகியோர் அவரது புத்திரர்களுள் அடங்குவர்.

பதம் 8.13.28
ரிததாமா ச தத்ரேந்ரோ தேவஸ் ச ஹரிதாதய:
ரிஷயஸ் ச தபோமூர்திஸ் தபஸ்வி ஆக்னீத்ரகாதய:

ரிததாமா—ரிததாமர்; ச—கூட; தத்ர—அந்த ஆட்சிக் காலத்தில்; இந்ர:—சுவர்க்க ராஜன்; தேவா:—தேவர்கள்; ச—மேலும்; ஹரித-ஆதய:—ஹரிதர்களைத் தலைமையாகக் கொண்ட; ரிஷய: ச—மேலும் ஏழு ரிஷிகள்; தபோமூர்த்தி:—தபோமூர்த்தி; தபஸ்வீ—தபஸ்வீ; ஆக்னீத்ரக—ஆக்னீத்ரகர்; ஆதய:—முதலானவர்கள்.

இந்த மன்வந்தரத்தில், ரிததாமர் என்பது இந்திரனின் பெயராக இருக்கும். மேலும் தேவர்கள் ஹரிதர்களை தலைமையாகக் கொண்டிருப்பர். ரிஷிகளுக்கிடையில் தபோமூர்த்தி, தபஸ்வீ மற்றும் ஆக்னீத்ரகர் ஆகியோரும் அடங்குவர்.

பதம் 8.13.29
ஸ்வதாமாக்யோ ஹரேர் அம்ச: ஸாதயிஷ்யதி தன்-மனோ:
அந்தரம் ஸத்யஸஹஸ: ஸுண்ருதாயா: ஸுதோ விபு:

ஸ்வதாமா-ஆக்ய:—ஸ்வதாமா; ஹரே: அம்ச:—பரமபுருஷ பகவானின் ஓர் அம்சமான; ஸாதயிஷ்யதி—ஆட்சிபுரிவார்; தத்-மனோ:—அந்த மனுவின்; அந்தரம்—மன்வந்தரம்; ஸத்யஸஹஸ:—ஸத்யஸஹரின்; ஸுன்ருதாயா:—சுன்ருதாவின்; ஸுதா—புதல்வர்; விபு:—மிகவும் சக்திவாய்ந்த.

சுன்ருதா எனும் தாயிலிருந்தும், ஸத்யஸஹா எனும் தந்தையிலிருந்தும் ஸ்வதாமர் வருவார். இவர் முழுமுதற் கடவுளின் ஓர் அம்சமாவார். அந்த மன்வந்தரத்தை இவர் ஆட்சி புரிவார்.

பதம் 8.13.30
மனுஸ் த்ரயோதசோ பாவ்யோ தேவ-ஸாவர்ணிர் ஆத்மவான்
சித்ரஸேன-விசித்ராத்யா தேவ-ஸாவர்ணி-தேஹஜா:

மனு:—மனு; த்ரயோதச:—பதின்மூன்றாவது; பாவ்ய:—ஆவார்; தேவ-ஸாவர்ணி:—தேவ ஸாவர்ணி; ஆத்மவான்—ஆன்மீக அறிவில் நன்கு முன்னேறிய; சித்ரஸேன—சித்ரஸனர்: விசித்ர-ஆத்யா:—மேலும் விசித்ரரைப் போன்ற மற்றவர்களும்; தேவ-ஸாவர்ணி—தேவ-ஸாவர்ணியின்; தேஹ-ஜா:—புத்திரர்கள்.

பதின்-மூன்றாவது மனு தேவ-ஸாவர்ணி என்று பெயரிடப்படுவார். ஆன்மீக அறிவில் அவர் தேர்ச்சி பெற்றவராக விளங்குவார். அவரது புத்திரர்களுள் சித்ரஸேனரும், விசித்ரரும் அடங்குவர்.

பதம் 8.13.31
தேவா: ஸுகர்ம-ஸுத்ராம-ஸம்ஞா இந்ரோ திவஸ்பதி:
நிர்மோக-தத்வதர்சாத்யா பவிஷ்யந்தி ரிஷயஸ் ததா

தேவா:—தேவர்கள்; ஸுகர்ம—சுகர்மர்கள்; ஸுத்ராம-ஸம்ஞா:—மற்றும் சுத்ரமர்கள்; இந்ர:—சுவர்க்க ராஜன்; திவஸ்பதி:—திவஸ்பதி; நிர்மோக—நிர்மோகர்; தத்வதர்ச-ஆத்யா:—தத்வ தர்சரைப் போன்ற மற்றவர்களும்; பவிஷ்யந்தி—ஆவார்கள்; ரிஷய:—ஏழு ரிஷிகள்; ததா—அச்சமயத்தில்.

பதின்மூன்றாம் மன்வந்தரத்தில், தேவர்களுள் சுகர்மர்களும், சுத்ராமர்களும் அடங்குவர். சுவர்க்க ராஜனாக திவஸ்பதி இருப்பார். நிர்மோகரும், தத்வதர்சரும் ஏழு ரிஷிகளுள் அடங்குவர்.

பதம் 8.13.32
தேவஹோத்ரஸ்ய தனய உபஹர்தா திவஸ்பதே:
யோகேஸ்வரோ ஹரேர் அம்சோ ப்ருஹத்யாம் ஸம்பவிஷ்யதி

தேவஹோத்ரஸ்ய—தேவஹோத்ரரின்; தனய:—மகன்; உபஹர்தா—நன்மை செய்பவர்; திவஸ்பதே:—அச்சமயத்தில் இந்திரனாக இருக்கும் திவஸ்பதியின்; யோக-ஈஸ்வர:—யோக சங்கதிகளின் அதிபதியான யோகேஸ்வரர்; ஹரே: அம்ச:—பரமபுருஷ பகவானின் ஓர் அம்சம்; ப்ருஹத்யாம்—பிருஹதி எனும் அவரது தாயின் கருவில்; ஸம்பவிஷ்யதி—தோன்றுவார்.

யோகேஸ்வரர் எனப்படும் தேவஹாத்ரரின் புத்திரர் பரமபுருஷ பகவானின் ஓர் அம்சமாகத் தோன்றுவார். ப்ருஹதீ என்பது அவரது தாயாரின் பெயராக இருக்கும். அவர் திவஸ்பதியின் நன்மைக்காக செயலாற்றுவார்.

பதம் 8.13.33
மனுர் வா இந்ர-ஸாவர்ணிஸ் சதுர்தசம ஏஷ்யதி
உரு-கம்பீர-புதாத்யா இந்ர-ஸாவர்ணி-வீர்யஜா:

மனு:—மனு; வா—அல்லது; இந்ர-ஸாவர்ணி:—இந்ர-ஸாவர்ணி; சதுர்தசம:—பதினான்காம்; ஏஷ்யதி—ஆவார்; உரு—உரு; கம்பிர—கம்பீரர்; புத-ஆத்யா:—மேலும் புதரைப் போன்ற மற்றவர்களும்; இந்ர-ஸாவர்ணி—இந்ர ஸாவர்ணியின்; வீர்ய-ஜா:—வீர்யத்திலிருந்து பிறந்த.

இந்ர-ஸாவர்ணி என்பது பதினான்காவது மனுவின் பெயராக இருக்கும். உரு, கம்பீரர் மற்றும் புதர் ஆகியோரைப் போன்ற மகன்கள் அவருக்கு இருப்பார்கள்.

பதம் 8.13.34
பவித்ராஸ் சாக்ஷுஷா தேவா: சுசிர் இந்ரோ பவிஷ்யதி
அக்னிர் பாஹு: சுசி: சுத்தோ மாகாத்யாஸ் தபஸ்வின:

பவித்ரா:—பவித்ரர்கள்; சாக்ஷுஷா:—சாக்ஷுஷர்கள்; தேவா:—தேவர்கள்; சுசி:—சுசி; இந்ர:—சுவர்க்க ராஜன்; பவிஷ்யதி—ஆவார்; அகினி:—அக்னி; பாஹு:—பாஹு; சுசி:—சுசி; சுத்த:—சுத்தர்; மாகத—மாகத; ஆத்யா:—முதலான; தபஸ்வின:—ரிஷிகள்.

பவித்ரர்களும், சாக்ஷுஷர்களும் தேவர்களுக்கிடையில் இருப்பர், சுசி, சுவர்க்க ராஜனான இந்திரனாக இருப்பார். பெரும் தபஸ்விகளான அக்னி, பாஹு, சுசி, சுத்தர், மாகதர் ஆகியோரும், மற்றவர்களும் ஏழு ரிஷிகளாக இருப்பர்.

பதம் 8.13.35
ஸத்ராயணஸ்ய தனயோ ப்ருஹத்பானுஸ் ததா ஹரி:
விதானாயாம் மஹாராஜ க்ரியா-தன்தூன் விதாயிதா

ஸத்ராயணஸ்ய—ஸத்ராயணரின்; தனய:—மகன்; ப்ருஹத்பானு:—பிருஹத்பானு; ததா—அச்சமயம்; ஹரி:—பரமபுருஷ பகவான்; விதானாயாம்—விதானாவின் கருவில்; மஹா-ராஜ—ராஜனே; க்ரியா-தந்தூன்—அனைத்து ஆன்மீகச் செயல்களையும்; விதாயிதா—நிறைவேற்றுவார்.

பரீட்சித்து மகாராஜனே, பதினான்காவது மன்வந்தரத்தில் பரமபுருஷ பகவான் விதானாவின் கருவில் தோன்றுவார். மேலும் ஸத்ராயணர் என்பது அவரது தந்தையின் பெயராக இருக்கும். இந்த அவதாரம் பிருஹத்பானு என்று போற்றப்படுவார். அவர் ஆன்மீகச் செயல்களை கவனித்து நடத்துவார்.

பதம் 8.13.36
ராஜம்ஸ் சதுர்சைதானி த்ரி-காலானுகதானி தே
ப்ரோக்தானி ஏபிர் மித: கல்போ யுக-ஸாஹஸ்ர-பர்யய:

ராஜன்—ராஜனே; சதுர்தச—பதினான்கு; ஏதானி—இவ்வெல்லா; த்ரி-கால—மூன்று காலங்கள் (கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்); அனுகதானி—மூடி; தே—உம்மிடம்; ப்ரோக்தானி—விளக்கினேன்; ஏபி:—இவற்றால்; மித:—மதிப்பிடப்படுகிறது; கல்ப:—பிரம்மாவின் ஒரு நாள்; யுக-ஸாஹஸ்ர—ஆயிரம் சதுர் யுகங்களை; பர்யய:—கொண்டுள்ளது.

ராஜனே, கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களில் தோன்றும் பதினான்கு மனுக்களைப் பற்றி இப்போது உமக்கு நான் விளக்கினேன். இம் மனுக்களின் மொத்த ஆட்சிக்காலம் ஆயிரம் சதுர் யுகங்களாகும். இது ஒரு கல்பம், அல்லது பிரம்ம தேவரின் ஒரு நாள் என்று அழைக்கப்படுகிறது.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “எதிர்கால மனுக்களின் வர்ணனை” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare