அத்தியாயம் – 10
தேவசுரர்களின் போர்
பதம் 8.10.1
ஸ்ரீ-சுக உவாச
இதி தானவ-தைதேய நாவிந்தன் அம்ருதம் ந்ருப
யுக்தா: கர்மணி யத்தாஸ்ச வாஸுதேவ-பரான்முகா:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; தானவ-தைதேயா:—அசுரர்களும், தேவர்களும்; ந—இல்லை; அவிந்தன்—அடைந்தனர் (விரும்பிய பலனை); அம்ருதம்—அமிர்தத்தை; ந்ருப—ராஜனே; யுக்தா:—எல்லோரும் இணைந்து; கர்மணி—கடைவதில்; யத்தா:—முழுகவனத்துடனும், முயற்சியுடனும் ஈடுபட்டனர்; ச—மேலும்; வாஸுதேவ—பரமபுருஷ பகவானாகிய கிருஷ்ணரின்; பரான்முகா:—பக்தரற்றவர்களாக இருந்ததால்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, அசுரர்களும், தைத்யர்களும், முழுகவனத்துடனும், முயற்சியுடனும் கடலைக் கடைவதில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பரமபுருஷ பகவானாகிய கிருஷ்ணரின் அல்லது வாசுதேவனின் பக்தர்களாக இல்லாததால், அவர்களால் அமிர்தத்தைப் பருக முடியவில்லை.
பதம் 8.10.2
ஸாதயித்வாம்ருதம் ராஜன் பாயயித்வா ஸ்வகான் ஸுரான்
பஸ்யதாம் ஸர்வ-பூதானாம் யயௌ கருட-வாஹன:
ஸாதயித்வா—நிறைவேற்றிய பின்; அம்ருதம்—அமிர்த உற்பத்தியை; ராஜன்—ராஜனே; பாயயித்வா—கொடுத்தபின்; ஸ்வகான்—அவரது சொந்த பக்தர்களுக்கு; ஸுரான்—தேவர்களுக்கு; பஸ்யதாம்—முன்னிலையில்; ஸர்வ-பூதானாம்—எல்லா ஜீவராசிகளின்; யயௌ—சென்றுவிட்டார்; கருட-வாஹன:—பரமபுருஷ பகவான், கருடனால் தூக்கிச் செல்லப்பட்டு.
ராஜனே, கடலைக் கடைந்து, தமது பிரிய பக்தர்களாகிய தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்கும் விவகாரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தபின், பரமபுருஷர் அவர்கள் அனைவரது முன்னிலையிலும் கருடனால் தூக்கிச் செல்லப்பட்டவாறு அவரது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றார்.
பதம் 8.10.3
ஸபத்னானாம் பராம் ருத்திம் த்ருஷ்ட்வா தே திதி-நந்தனா:
அம்ருஷ்யமாணா உத்பேதுர் தேவான் ப்ரத்யுத்யதாயுதா:
ஸபத்னானாம்—அவர்களின் போட்டியாளர்களாகிய தேவர்களின்; பராம்—மிகச்சிறந்த; ருத்திம்—சக்தியை; த்ருஷ்ட்வா—கவனித்து; தே—அவர்கள் அனைவரும்; திதி-நந்தனா:—திதியின் புதல்வர்களாகிய தைத்யர்கள்; அம்ருஷ்யமாணா:—பொறுக்க முடியாமல்; உத்பேது:—நோக்கி ஓடினர் (ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக); தேவான்—தேவர்களை; ப்ரத்யுத்யத-ஆயுதா:—தங்களது ஆயுதங்களை உயர்த்தியவாறு.
தேவர்களின் வெற்றியையும், உயர்ந்த சக்தியையும் அசுரர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறாக உயர்த்திய ஆயுதங்களுடன் அவர்கள் தேவர்களை நோக்கி முன்னேறிச் செல்ல ஆரம்பித்தனர்.
பதம் 8.10.4
தத: ஸுர-கணா: ஸர்வே ஸுதயா பீதயைதிதா:
ப்ரதிஸம்யுயுது: சஸ்த்ரைர் நாராயண-பதாஸ்ரயா:
தத:—அதன்பிறகு; ஸுர-கணா:—தேவர்கள்; ஸர்வே—அவர்கள் அனைவரும்; ஸுதயா—அமிர்தத்தால்; பீதயா—பருகிய; ஏதிதா:—அவ்வாறு பருகியதால் புத்துணர்வு பெற்று; ப்ரதிஸம்யுயுது:—அவர்கள் அசுரர்களை எதிர்த்துத் தாக்கினர்; சஸ்த்ரை:—வழக்கமான ஆயுதங்களால்; நாராயண-பத-ஆஸ்ரயா:—நாராயணரின் தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டதையே அவர்களின் உண்மையான ஆயுதமாகக் கொண்டு.
அதன்பிறகு, அமிர்தத்தைப் பருகி புத்துணர்வைப் பெற்றவர்களும், எப்பொழுதும் நாராயணரின் தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டவர்களுமான தேவர்கள், போர் செய்யும் உற்சாகத்துடன் தங்களது பல்வேறு ஆயுதங்களைப் பாவித்து, அசுரர்களை எதிர்த்துத் தாக்கினர்.
பதம் 8.10.5
தத்ர தைவாஸுரோ நாம ரண: பரம-தாருண:
ரோதஸி உதன்வதோ ராஜம்ஸ் துமுலோ ரோம-ஹர்ஷண:
தத்ர—அங்கு (பாற்கடலின் கரையில்); தைவ—தேவர்களும்; அஸுர—அசுரர்களும்; நாம—அவர்கள் புகழப்படுவதுபோல்; ரண:—யுத்தம் செய்தனர்; பரம—மிகவும்; தாருண:—பயங்கரமாக; ரோதஸி—கடற்கரையில்; உதன்வத:—பாற்கடலின்; ராஜன்—ராஜனே; துமுல:—கொடிய; ரோம-ஹர்ஷண:—மெய்சிலிர்க்கச் செய்யும்.
ராஜனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில், பாற்கடலின் கரையில் ஒரு பயங்கரமான போர் மூண்டது. போர் மிகவும் கடுமையாக இருந்ததால், அதைப் பற்றிக் கேட்பதுவே ஒருவரை மெய் சிலிர்க்கச் செய்யும்.
பதம் 8.10.6
தத்ரான்யோன்யம் ஸபத்னாஸ் தே ஸம்ரப்த-மனஸோ ரணே
ஸமாஸாத்யாஸிபிர் பாணைர் நிஜக்னுர் விவிதாயுதை:
தத்ர—அதன்பிறகு; அன்யோன்யம்—ஒருவரோடொருவர்; ஸபத்னா—சண்டை செய்பவர்களாகி; தே—அவர்கள்; ஸம்ரப்த—கோபாவேசத்துடன்; மனஸ:—அவர்களின் மனங்களுக்குள்; ரணே—அப்போரில்; ஸமாஸாத்ய—அவர்களுக்கிடையில் யுத்தம் செய்யும் சந்தர்ப்பத்தைப் பெற்று; அஸிபி:—வாள்களாலும்; பாணை:—அம்புகளாலும்; நிஜக்னு:—ஒருவரையொருவர் அடிக்கத் துவங்கினர்; விவித-ஆயுதை:—பலவிதமான ஆயுதங்களால்.
அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு பிரிவினருமே இதயத்தில் பெரும் கோபங்கொண்டிருந்தனர். விரோதத்துடன் அவர்கள் உடைவாள்களாலும், அம்புகளாலும், பலவிதமான பிற ஆயுதங்களாலும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
பதம் 8.10.7
சங்க-தூர்ய-ம்ருதங்களானாம் பேரீ-டமரிணாம் மஹான்
ஹஸ்தி-அஸ்வ-ரத-பத்தீனாம் நததாம் நிஸ்வனோ ‘பவத்
சங்க—சங்குகளின்; தூர்ய—பெரிய கொம்புகளின்; ம்ருதங்கானாம்—மற்றும் மிருதங்கங்களின்; பேரீ—பேரிகைகளின்; டமரிணாம்—டமாரங்களின்; மஹான்—பேரொலி; ஹஸ்தி—யானைகளின்; அஸ்வ—குதிரைகளின்; ரத-பத்தீனாம்—இரதங்களின் மேல் அல்லது பூமியில் மேல் இருந்து வீரர்களின்; நததாம்—அவர்கள் எல்லோரும் ஒன்றாக ஓசையெழுப்பினர்; நிஸ்வன:—ஒரு பேரொலி; அபவத்—அவ்வாறு ஆனது.
சங்குகள், ஊது கொம்புகள், மிருதங்கள், பேரிகைகள் மற்றும் டமாரங்களின் ஓசைகள் மட்டுமின்றி, யானைகள், குதிரைகள் மேலும் இரத மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோரால் எழுப்பப்பட்ட ஓசைகளும் பேரொலி எழுப்பின.
பதம் 8.10.8
ரதினோ ரதிபிஸ் தத்ர பத்திபி: ஸஹ பத்தய:
ஹயா ஹயைர் இபாஸ் சேபை: ஸமஸஜ்ஜந்த ஸம்யுகே
ரதின:—இரத வீரர்கள்; ரதிபி:—எதிரி இரத வீரர்களுடன்; தத்ர—போர்க்களத்தில்; பத்திபி:—காலாட்படை வீரர்களுடன்; ஸஹ—உடன்; பத்தய:—எதிர்தரப்பு வீரர்களின் காலாட்படை; ஹயா:—குதிரைகள்; ஹயை:—எதிரியின் வீரர்களுடன்; இபா:—யானைப் படைவீரர்கள்; ச—மேலும்; இபை:—எதிரியின் யானைப்படை வீரர்களுடன்; ஸமஸஜ்ஜந்த—சம நிலையில் இருந்துகொண்டு போரிடத் துவங்கினர்; ஸம்யுகே—போர்க்களத்தில்.
அந்த போர்க்களத்தில், இரத வீரர்கள் எதிரி இரத வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் எதிரி காலாட்படை வீரர்களுடனும், குதிரைப் படைவீரர்கள் எதிரி குதிரைப் படைவீரர்களுடனும், யானைப் படைவீரர்கள் எதிரி யானைப்படை வீரர்களுடனும் போர் செய்தனர். சம அந்தஸ்து உள்ளவர்களுக்கிடையில் போர் மூண்டது.
பதம் 8.10.9
உஷ்ட்ரை: கேசித் இபை: கேசித் அபரே யுயுது: கரை:
கேசித் கெளர-முகைகர் ருக்ஷைர் த்வீபிபிர் ஹரிபிர் படா:
உஸ்ட்ரை:—ஒட்டகங்களின் மீதும்; கேசித்—சிலர்; இபை:—யானைகளின் மீதும்; கேசித்—சிலர்; அபரே—மற்றவர்கள்; யுயுது:—சண்டையில் ஈடுபட்டனர்; கரை:—கழுதைகளின் மீதும்; கேசித்—சிலர்; கௌர-முகை:—வெள்ளை முகக் குரங்குகளின் மீதும்; ருக்ஷை:—சிவப்பு முகக் குரங்குகளின் மீதும்; த்வீபிபி:—புலிகளின் மீதும்; ஹரிபி:—சிங்கங்களின் மீதும்; படா:—எல்லா வீரர்களும் இவ்வாறு ஈடுபட்டிருந்தனர்.
சில வீரர்கள் ஒட்டகங்களின் மீதும், சிலர் யானைகளின் மீதும், சிலர் கழுதைகளின் மீதும், சிலர் புலிகளின் மீதும், சிலர் சிங்கங்களின் மீதும் அமர்ந்தவாறு யுத்தம் செய்தனர். இவ்விதமாக அவர்கள் எல்லோரும் போரில் ஈடுபட்டனர்.
பதங்கள் 8.10.10 – 8.10.12
க்ருத்ரை: கங்கைர் பகைர் அன்யே ஸ்யேன-பாஸைஸ் திமிங்லை:
சரபைர் மஹிஷை: கட்கைர் கோ-வ்ருஷைர் கவயாருணை:
சிவாபிர் ஆகுபி: கேசித் க்ருகலாஸை: சசைர் நரை:
பஸ்தைர் ஏகே க்ருஷ்ண ஸாரைர் ஹம்ஸைர் அன்யே ச ஸூகரை:
அன்யே ஜல-ஸ்தல-ககை: ஸத்வைர் விக்ருத- விக்ரஹை:
ஸேனயோர் உபயோ ராஜன் விவிகஸ் தே’ க்ரதோ ‘க்ரத:
க்ருத்ரை:—கழுகுகளின் மீதும்; கங்கை:—பருந்துகளின் மீதும்; பகை:—வாத்துகளின் மீதும்; அன்யே—மற்றவர்கள்; ஸ்யேன—வல்லூறுகளின் மீதம்; பாஸை:—பாஸங்களின் மீதும்; திமிங்கிலை:—திமிங்கிலங்கள் எனப்படும் பெரிய மீன்களின் மீதும்; சரபை:—சரபர்கள் மீதும்; மஹிஷை:—எருமைகளின் மீதும்; கட்கை:—காண்டா மிருகங்களின் மீதும்; கோ—பசுக்களின் மீதும்; வ்ருஷை:—எருதுகளின் மீதும்; கவய-அருணை:—கவய மற்றும் அருணங்களின் மீதும்; சிவாபி:—குள்ள நரிகளின் மீதும்; ஆகுபி:—ராட்சஸ எலிகளின் மீதும்; கேசித்—சிலர்; க்ருகலாஸை:—ராட்சஸ பல்லிகளின் மீதும்; சசை:—ராட்சஸ முயல்களின் மீதும்; நரை:—மனிதர்களின் மீதும்; பஸ்தை:—ஆடுகளின் மீதும்; ஏகே—சிலர்; க்ருஷ்ண-ஸாரை:—கருப்பு மான்களின் மீதும்; ஹம்ஸை:—அன்னப் பறவைகளின் மீதும்; அன்யே—மற்றவர்கள்; ச—மேலும்; ஸூகரை:—காட்டுப் பன்றிகளின் மீதும்; அன்யே—மற்றவர்கள்; ஜல-ஸ்தல-ககை:—நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் மீது சஞ்சரிக்கும் மிருகங்கள்; ஸத்வை—வாகனங்களாக உபயோகிக்கப்படும் பிராணிகளால்; விக்ருத—சிதைக்கப்பட்டவர்கள்; விக்ரஹை:—உடல்களை உடைய விலங்குகளால்; ஸேனயோ:—இரு சேனைகளைச் சேர்ந்த வீரர்களின்; உபயோ:—இருவரின்; ராஜன்—ராஜனே; விவிசு:—நுழைந்தனர்; தே—அவர்கள் அனைவரும்; அக்ரத: அக்ரத:—நேருக்கு நேராக முன்னேறிச் சென்று.
ராஜனே, சில வீரர்கள் கழுகுகள், பருந்துகள், மற்றும் பாஸ எனப்படும் பறவைகளின் மீதும் அமர்ந்து போரிட்டனர். சிலர் பெரிய திமிங்கிலங்களையே விழுங்கிவிடக்கூடிய திமிங்கிலங்களின் மீதமர்ந்து போரிட்டனர். சிலர் சரபர்கள் மீதும், மற்றும் சிலர் எருமை, காண்டாமிருகம், பசு, எருது, காட்டுப்பசு மற்றும் அருணங்கள் ஆகியவற்றின் மீதும் அமர்ந்து யுத்தம் செய்தனர். மற்றவர்கள் குள்ளநரிகள், எலிகள், பல்லிகள், முயல்கள், மனிதர்கள், ஆடுகள், கருநிற மான்கள், அன்னப்பறவைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் மீதமர்ந்து யுத்தம் செய்தனர். இவ்விதமாக, நீர், நில மற்றும் ஆகாய பிராணிகளின் மீதும், உருக்குலைந்த உடல்களைக் கொண்ட மிருகங்களின் மீதும் அமர்ந்தவாறு, இரு சேனைகளும் ஒருவரையொருவர் நோக்கியவாறு முன்னோக்கிச் சென்றனர்.
பதங்கள் 8.10.13 – 8.10.15
சித்ர-த்வஜ-படை ராஜன் ஆதபத்ரை: ஸிதாமலை:
மஹா-தனைர் வஜ்ர-தண்டைர் வ்யஜணைர் பார்ஹ-சாமரை:
வாதோத்தூதோத்த ரோஷ்ணீஷைர் அர்சிர்பிர் வர்ம-பூஷணை:
ஸ்புரத்பிர் விசதை: சஸ்த்ரை: ஸுதராம் ஸூர்ய-ரஸ்மிபி:
தேவ-தானவ-வீராணம் த்வஜின்யௌ பாண்டு-நந்தன
ரேஜதுர் வீர-மாலாபிர் யாதஸாம் இவ ஸாகரௌ
சித்ர-த்வஜ-படை:—நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகளுடனும், மேல் கட்டுகளுடனும்; ராஜன்—ராஜனே; ஆதபத்ரை:—சூரிய ஒளியிலிருந்து காத்துக் கொள்வதற்குரிய குடைகளுடன்; ஸித-அமலை:—அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் தூய்மையாகவும், வெள்ளையாகவும்; மஹா-தனை:—விலையுயர்ந்ததால்; வஜ்ர-தண்டை:—விலையுயர்ந்த இரத்தினங்களாலும், முத்துக்களாலும் செய்யப்பட்ட தடிகளால்; வ்யஜனை:—விசிறிகளால்; பார்ஹ-சாமரை:—மயில் இறகுகளினால் செய்யப்பட்ட மற்ற விசிறிகளால்; வாத-உத்தூத—தென்றல் காற்றினால் படபடக்கும்; உத்தர-உஷ்ணீஷை:—மேல் மற்றும் கீழ் ஆடைகளுடன்; அர்சிர்பி:—பிரகாசத்தினால்; வர்ம-பூஷணை:—ஆபரணங்களுடனும், கேடயங்களுடனும்; ஸ்புரத்பி:—பளபளக்கும்; விசதை:—கூரான, சுத்தமான; சஸ்த்ரை:—ஆயுதங்களுடன்; ஸுதராம்—அபரிமிதமாக; ஸூர்ய-ரஸ்மிபி:—சூரிய ஒலியின் கண் கூசும் பிரகாசத்தால்; தேவ-தானவ-வீராணாம்—அசுரர்கள் மற்றும் தேவர்களின் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்களின்; த்வஜின்யௌ—ஒவ்வொரு பிரிவினரும் தனது சொந்த கொடியை ஏந்தியுள்ள, வீரர்களின் ஒரு பிரிவுகளும்; பாண்டு-நந்தன—பாண்டு மகாராஜனுடைய வம்சத்தவரே; ரேஜது:—தெளிவாக அறியப்பட்ட; விர-மாலாபி:—வீரர்களால் உபயோகிக்கப்படும் மாலைகளுடன்; யாதஸாம்—நீரினங்களின்; இவ—போன்று; ஸாகரௌ—இரு கடல்கள்.
ராஜனே, பாண்டு மகாராஜனின் வம்சத்தவரே, தேவர் மற்றும் அசுர வீரர்கள், மேல்கட்டுகள், பலவித வர்ணங்கள் கொண்ட கொடிகள், மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களும், முத்துக்களும் பதிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட குடைகள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், மயிலிறகு விசிறிகளாலும், மற்ற விசிறிகளாலும் மேலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். தங்களின் மேலாடைகளும், கீழாடைகளும் இளங்காற்றில் படபடக்க, அவ்வீரர்கள் இயல்பாகவே மிகவும் அழகாகக் காணப்பட்டனர். மேலும் பிரகாசமான சூரிய ஒளியில் அவர்களின் கேடயங்களும், ஆபரணங்களும் கூரிய, சுத்தமான ஆயுதங்களும் பளபளத்தன. இவ்வாறாக போர் வீரர்களின் இருவரிசைகள், நீரினங்களின் கூட்டத்தைக் கொண்ட இரு கடல்களைப் போல் காணப்பட்டன.
பதங்கள் 8.10.16 – 8.10.18
வைரோசனோ பலி: ஸங்க்யே ஸோ ‘ஸுராணாம் சமூ-பதி:
யானம் வைஹாயஸம் நாம காம-கம் மய-நிர்மிதம்
ஸர்வ-ஸாங்ராமிகோபேதம் ஸர்வாஸ்சர்யமயம் ப்ரபோ
அப்ரதர்க்யம் அனிர்தேஸ்யம் த்ருஸ்யமானம் அதர்சனம்
ஆஸ்திதஸ் தத் விமானாக்ரியம் ஸர்வானீகாதிபைர் வ்ருத:
பால-வ்யஜன-சத்ராக்ருயை ரேஜே சந்ர இவோதயே
வைரோசன:—விரோசனரின் புதல்வர்; பலி:—பலி மகாராஜன்; ஸங்க்யே—போரில்; ஸ:—பெரும் புகழுக்குரிய அவர்; அஸுராணாம்—அசுரர்களின்; சமூ-பதி:—சேனாதிபதி; யானம்—விமானம்; வைஹாயஸம்—வைஹாயஸம் என்று அழைக்கப்பட்ட; நாம—எனும் பெயரால்; காம-கம்—அவர் விரும்பிய இடங்களுக்கெல்லாம் பறந்து செல்லும்; மய-நிர்மிதம்—மயன் எனும் அசுரனால் கட்டப்பட்ட; ஸர்வ—எல்லா; ஸாங்ராமிக-உபேதம்—எல்லா வகையான எதிரிகளிடமும் போரிடுவதற்குத் தேவையான, அனைத்து விதமான ஆயுதங்களையும் கொண்ட; ஸர்வ-ஆஸ்சர்ய-மயம்—எல்லா விதத்திலும் ஆச்சரியப்படத்தக்க; ப்ரபோ—ராஜனே; அப்ரதர்க்யம்—மாயமான; அநிர்தேஸ்யம்—விவரிக்க முடியாத; த்ருஸ்யமானம்—சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படுவதாயும்; அதர்சனம்—சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமலும்; ஆஸ்தித:—அத்தகைய ஒன்றின் மீது அமர்ந்ததால்; தத்—அந்த; விமான-அக்ரியம்—மிகச் சிறந்த விமானம்; ஸர்வ—எல்லா; அனீக-அதிபை:—சேனைத் தலைவர்களால்; வ்ருத:—சூழப்பட்டவாறு; பால-வ்யஜன-சத்ர-அக்ருயை:—அழகாக அலங்கரிக்கப்பட்ட குடைகளாலும், மிகச்சிறந்த சாமரங்களாலும் பாதுகாக்கப்பட்டு; ரேஜே—பிரகாசமாக அமைந்துள்ள; சந்ர:—சந்திரன்; இவ—போன்று; உதயே—மாலையில் உதயமாகும்.
அப்போரில், மிகவும் புகழ்பெற்ற சேனாதிபதியும், விரோசனரின் புதல்வருமாகிய பலி மகாராஜன், வைஹாயஸம் எனும் ஓர் அற்புத விமானத்தில் வீற்றிருந்தார். ராஜனே, அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்த அவ்விமானம் மயன் எனும் அசுரனால் செய்யப்பட்டதாகும். அது எல்லா வகையான சண்டைகளுக்கும் ஏற்ற ஆயுதங்களால் பொருத்தப்பட்டிருந்தது. அது கற்பனைக்கு எட்டாததும், விவரிக்க முடியாததுமாகும். உண்மையில் அது சிலசமயங்களில் கண்ணுக்குப் புலப்படுவதாயும், சில சமயங்களில் புலப்படாததாயும் இருந்தது. அவ்விமானத்தில், ஓர் அழகிய பாதுகாப்பான குடையின் கீழ் அமர்ந்திருந்த பலி மகாராஜன் மிகச்சிறந்த சாமரங்களால் விசிறப்பட்டார். தனது இராணுவத் தலைவர்களாலும், சேனாதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த அவர், மாலையில் உதயமாகி எல்லாத்திசைகளையும் ஒளிமயமாக்கும் சந்திரனைப் போலவே காணப்பட்டார்.
பதங்கள் 8.10.19 – 8.10.24
தஸ்யாஸன் ஸர்வதோ யாநைர் யூதானாம் பதயோ ‘ஸுரா:
நமுசி: சம்பரோ பாணோ விப்ரசித்திர் அயோமுக:
த்விமூர்தா காலநாபோ ‘த ப்ரஹேதிர் ஹேதிர் இல்வல:
சகுனிர் பூதஸந்தாபோ வஜ்ரதம்ஷ்ட்ரோ விரோசன:
ஹயக்ரீவ: சங்குசிரா: கபிலோ மேகதுந்துபி:
தாரகஸ் சக்ரத்ருக் கம்போ நிசும்போ ஜம்ப உத்கல:
அரிஷ்டோ ‘ரிஷ்டனேமிஸ் ச மயஸ் ச த்ரிபுராதிப:
அன்யே பௌலோம-காலேயா நிவாதகவசாதய:
அலப்த-பாகா: ஸோமஸ்ய கேவலம் க்லேச பாகின:
ஸர்வ ஏதே ரண-முகே பஹுசோ நிர்ஜிதாமரா:
ஸிம்ஹ-நாதான் விமுஞ்சந்த: சங்கான் தத்முர் மஹா-ரவான்
த்ருஷ்ட்வா ஸபத்னான் உத்ஸிக்தான் பலபித் குபிதோ ப்ருசம்
தஸ்ய—அவரை (பலி மகாராஜனை); ஆஸன்—அமைந்துள்ள; ஸ்ரவத:—சுற்றிலும்; யானை:—வெவ்வேறு வாகனங்களால்; யூதானாம்—வீரர்களின்; பதய:—சேனைத் தலைவர்கள்; அஸுரா:—அசுரர்களின்; நமுசி:—நமுசி; சம்பர:—சம்பரன்; பாண:—பாணன்; விப்ரசித்தி:—விப்ரசித்தி; அயோமுக:—அயோமுகன்; த்விமூர்தா—தூவிமூர்தன்; காலநாப:—காலநாபன்; அத—மேலும்; ப்ரஹேதி:—ப்ரஹேதி; ஹேதி:—ஹேதி; இல்வலன்:—இல்வலன்; சகுனி:—சகுனி; பூதஸந்தாப:—பூதஸந்தாபன்; வஜ்ர-தம்ஷ்ட்ர:—வஜ்ரதம்ஷ்ட்ரன்; விரோசன:—விரோசனன்; ஹயக்ரீவ:—ஹயக்ரீவன்; சங்குசிரா:—சங்குசிரன்; கபில:—கபிலன்; மேக-துந்துபி:—மேகதுந்துபி; தாரக:—தாரகன்; சக்ரத்ருக்—சக்ரத்ருக்; சும்ப:—சும்பன், நிசும்ப:—நிசும்பன்; ஜம்ப:—ஜம்பன்; உத்கல:—உத்கலன்; அரிஷ்ட:—அரிஷ்டன்; அரிஷ்டனேமி—அரிஷ்டனேமி; ச—மேலும்; மய: ச—மேலும் மயன்; த்ரிபுராதிப:—திரிபுராதிபன்; அன்யே—மற்றவர்கள்; பௌலோம-காலேயோ:—பௌலோமன் மற்றும் காலேயர்கள் ஆகியோரின் மகன்கள்; நிவாதகவச-ஆதய:—நிவாதகவசனும், மற்ற அசுரர்களும்; அலப்த-பாகா:—அனைவரும் சேர வேண்டிய பாகத்தை எடுத்துக் கொள்ள முடியாமல்; ஸோமஸ்ய—அமிர்தத்தின்; கேவலம்—மட்டுமே; க்லேச-ப-கின:—உழைப்பின் ஒரு பங்கை அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்; ஸர்வே—அவர்கள் அனைவரும்; ஏதே—அசுரர்கள்; ரண-முகே—போரின் முன் வரிசையில்; பஹுச:—அளவுக்கதிகமான பலத்தால்; நிர்ஜித-அமரா:—தேவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால்; ஸிம்ஹ-நாதான்—சிங்கங்களுடையதைப் போன்ற கர்ஜனைகளை; விமுஞ்சந்த:—செய்யும்; சங்காண்—சங்குகளை; தத்மு:—ஊதினர்; மஹா-ரவான்—பெருமுழக்கத்தைச் செய்து; த்ருஷ்ட்வா—கண்டபின்; ஸபத்னான்—அவர்களின் போட்டியாளர்கள்; உத்ஸிக்தான்—கொடிய; பலபித்—(இந்திரன்) பலத்தால் அச்சமடைந்து; குபித:—கோபமடைந்து; ப்ருசம்—மிகவும்.
பலி மகாராஜனை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்தவாறு அசுரர்களின் சேனாதிபதிகளும், படைத்தலைவர்களும் முறையே அவரவர் இரதங்களில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் பின் வரும் அசுரர்கள் இருந்தனர்: நமுசி, சம்பரன், பாணன், விப்ரசித்தி, அயோமுகன், துவிமூர்தன், காலநாபன், ப்ரஹேதி, ஹேதி, இல்வலன், சகுனி, பூதஸந்தாபன், வஜ்ரதம்ஷ்ட்ரன், விரோசனன், ஹயக்ரீவன், சங்குசிரன், கபிலன், மேகதுந்துபி, தாரகன், சக்ரத்ருக், சும்பன், நிசும்பன், ஜம்பன், உத்கலன், அரிஷ்டன், அரிஷ்டனேமி, திரிஹபுராதிபன், மயன், பௌலோமன் மகன்கள், காலேயர்கள் மற்றும் நிவாதகவசன். இந்த அசுரர்கள் அனைவரும் தங்களுக்குச் சேர வேண்டிய அமிர்தத்தைப் பறிகொடுத்து, கடலைக் கடையும் உழைப்பில் மட்டும் பங்கு கொண்டவர்கள். இப்போது அவர்கள் தேவர்களை எதிர்த்துப் போரிட்டனர். மேலும் அவர்களது படைகளை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்கள் சிங்கங்களின் கர்ஜனையைப் போன்ற பெரும் ஓசையை எழுப்பி, சங்குகளை உரத்த சப்தத்துடன் ஊதினர். தமது கொடிய எதிரிகளின் இந்நிலையைக் கண்ட பலபித் என்ற தேவேந்திரன், மிகவும் கோபமடைந்தார்.
பதம் 8.10.25
ஐராவதம் திக்-கரிணம் ஆரூட: சுசுபே ஸ்வ-ராட்
யதா ஸ்வரத்-ப்ரஸ்ரவணம் உதயாத்ரிம் அஹர்-பதி:
ஐராவதம்—ஐராவதம்; திக்-கரிணம்—எங்கும் செல்லக்கூடிய சிறந்த யானை; ஆரூட:—மீதமர்ந்து; சுசுபே—காண்பதற்கு மிகவும் அழகுடையவரானார்; ஸ்வ-ராத்—இந்திரன்; யதா—போலவே; ஸ்ரவத்—உருண்டோடும்; ப்ரஸ்ரவணம்—அலை அலையான சாராயம்; உதய-அத்ரிம்—உதயகிரியின் மேல்; அஹ-பதி:—சூரியன்.
எங்கும் செல்லக்கூடியதும், தாராளமாக பொழிவதற்காக நீரையும், சாராயத்தையும் சேமிப்பில் வைத்திருப்பதுமான ஐராவத யானையின் மீது இந்திரன் வீற்றிருந்தார். அவர், நீர்த்தேக்கங்களுள்ள உதயகிரியிலிருந்து உதிக்கும் சூரியனைப் போல் காணப்பட்டார்.
பதம் 8.10.26
தஸ்யாஸன் ஸர்வதோ தேவா நானா-வாஹ-த்வஜாயுதா:
லோகபாலா: ஸஹ-கணைர்ப வாயு-அக்னி-வருணாதய:
தஸ்ய—இந்திர தேவனின்; ஆஸன்—வீற்றிருந்தனர்; ஸர்வத:—சுற்றிலும்; தேவா:—எல்லா தேவர்களும்; நானா-வாஹ—பலவகையான வாகனங்களுடன்; த்வஜ-ஆயுதா:—மற்றும் கொடிகளுடனும், ஆயுதங்களுடனும்; லோக-பாலா:—அநேக உயர் கிரக அமைப்புக்களில் எல்லா தலைவர்களும்; ஸஹ—உடன்; கணை:—அவர்களது சகாக்கள்; வாயு—வாயுதேவன்; அக்னி—அக்னி தேவன்; வருண—வருண தேவன்; ஆதய:—அவர்கள் அனைவரும் இந்திரனைச் சூழ்ந்தவாறு இருந்தனர்.
கொடிகளாலும், ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பலவகையான வாகனங்களின் மீது வீற்றிருந்த தேவர்கள், சுவர்க்க ராஜனான இந்திரனைச் சூழ்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் வாயு, அக்னி, வருணன் மற்றும் அநேக கிரகங்களின் ஆளுனர்கள் அவர்களது சகாக்கள் ஆகியோர் இருந்தனர்.
பதம் 8.10.27
தே ‘ன்யோன்யம் அபிஸம்ஸ்ருத்ய க்ஷிபந்தோ மர்மபிர் மித:
ஆஹ்வயந்தோ விசந்தோ ‘க்ரே யுயுதுர் த்வந்வ-யோதின:
தே—அவர்கள் எல்லோரும் (தேவர்களும், அசுரர்களும்); அன்யோன்யம்—ஒருவரோடொருவர்; அபிஸம்ஸ்ருத்ய—நேருக்கு நேராக முன்னுக்கு வந்து; க்ஷிபந்த:—ஒருவரையொருவர் ஏசிக் கொண்டு; மர்மபி:-மித:—ஒவ்வொருவரின் இதயத்திலும் பெருந்துன்பத்தை ஏற்படுத்தி; ஆஹ்வயந்த:—ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு; விசந்த:—போர்க்களத்தில் நுழைந்தபின்; அக்ரே—யுத்த முனையில்; யுயுது:—போர் செய்தனர்; த்வந்வ-யோதின:—இரு சிப்பாய்கள் ஒருவரையொருவர் தேடிக் கொண்டனர்.
தேவர்களும், அசுரர்களும் ஒருவரையொருவர் அணுகி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். பிறகு அவர்கள் இன்னும் அருகில் சென்று இருவர் இருவராக நேருக்கு நேராக போரிடத்துவங்கினர்.
பதம் 8.10.28
யுயோத பலிர் இந்ரேண தாரகேண குஹோ ‘ஸ்யத
வருணோ ஹேதினாயுத்யன் மித்ரோ ராஜன் ப்ரஹேதினா
யுயோத—யுத்தம் செய்தனர்; பலி:—பலி மகாராஜன்; இந்ரேண—தேவேந்திரனுடன்; தாரகேண—தாரகனுடன்; குஹ:—கார்த்திகேயனும்; அஸ்யத—போரில் ஈடுபட்டனர்; வருண:—வருண தேவன்; ஹேதினா—ஹேதியுடன்; அயுத்யத்—ஒருவரோடொருவர் போர் செய்தனர்; மித்ர:—மித்திர தேவன்; ராஜன்—ராஜனே; ப்ரஹேதினா—ப்ரஹேதியுடன்.
ராஜனே, பலி மகாராஜன் இந்திரனுடனும், கார்த்திகேயன் தாரகனுடனும், வருணன் ஹேதியுடனும், மித்திரன் ப்ரஹேதியுடனும் யுத்தம் செய்தனர்.
பதம் 8.10.29
யமஸ் து காலநாபேன விஸ்வகர்மா மயேன வை
சம்பரோ யுயுதே த்வஷ்ட்ரா ஸவித்ரா து விரோசன:
யம:—யமராஜன்; து—உண்மையில்; காலநாபேன—காலநாபனுடன்; விஸ்வகர்மா—விஸ்வகர்மா; மயேன—மயனுடனும்; வை—உண்மையில்; சம்பர:—சம்பரன்; யுயுதே—போரிட்டனர்; த்வஷ்ட்ரா—த்வஷ்ட்ரனுடன்; ஸவித்ரா—சூரிய தேவனுடன்; து—உண்மையில்; விரோசன:—அசுரனான விரோசனன்.
யமராஜன் காலநாபனுடனும், விஸ்வகர்மா மய தானவனுடனும், த்வஸ்டன் சம்பரனுடனும், போரிட்டனர். சூரிய தேவன் விரோசனனுடனும்
பதங்கள் 8.10.30 – 8.10.31
அபராஜிதேன நமுசிர் அஸ்வினெள வ்ருஷபர்வனா
ஸூர்யோ பலி-ஸுதைர் தேவோ பாண-ஜ்யேஷ்டை: சதேன ச
ராஹுணா ச ததா ஸோம: புலோம்னா யுயுதே ‘நில:
நிசும்ப-சும்பயோர் தேவீ பத்ரகாளீ தரஸ்வினீ
அபராஜிதேன—அபராஜிதன் எனும் தேவருடன்; நமுசி:—அசுரனான நமுசி; அஸ்வினௌ—அஸ்வின் குமாரர்கள்; வ்ருஷபர்வணா—வ்ருஷபர்வன் எனும் அசுரனுடன்; ஸூர்ய:—சூரிய தேவன்; பலி-ஸுதை:—பலியின் மகன்களுடன்; தேவ:—தேவன்; பாண-ஜ்யேஷ்டை:—அவர்களில் தலைவனான பாணன்; சதேன—நூறு பேர்; ச—மேலும்; ராஹுணா—ராகுவால்; ச—கூட; ததா—அத்துடன்; ஸோம:—சந்திர தேவன்; புலோம்னா—புலோமன்; யுயுதே—போரிட்டனர்; அனில:—காற்றைக் கட்டுப்படுத்தும் அனில தேவன்; நிசும்ப—நிசும்பன் எனும் அசுரன்; சும்பயோ:—சும்பனுடன்; தேவீ—துர்கா தேவி; பத்ரகாளீ—பத்ரகாளி; தரஸ்வினி—மிகவும் சக்தி வாய்ந்த.
அபராஜிதன் எனும் தேவன் நமுசியுடனும், இரு அஸ்வினி சகோதரர்கள் வ்ருஷபர்வனனுடனும் யுத்தம் செய்தனர். சூரிய தேவன் பானனை தலைமையாகக் கொண்ட பலிமகாராஜனின் நூறு மகன்களுடன் யுத்தம் செய்தார். சந்திர தேவன் ராகுவுடன் போரிட்டார். வாயு தேவன் புலோமனுடன் யுத்தம் செய்தார். மேலும் சும்ப, நிசும்பர்கள் பத்ரகாளி என்றழைக்கப்படும், மிகவும் சக்திவாய்ந்த ஜடச் சக்தியான, துர்காதேவியுடன் யுத்தம் செய்தனர்.
பதங்கள் 8.10.32 – 8.10.34
வ்ருஷாகபிஸ் து ஜம்பேன மஹிஷேண விபாவஸு:
இல்வல: ஸஹ வாதாபிர் ப்ரஹ்ம-புத்ரைர் அரிந்தம
காமதேவேன துர்மர்ஷ உத்கலோ மாத்ருபி: ஸஹ
ப்ருஹஸ்பதிஸ் சோசனஸா நரகேண சனைஸ்சர:
மருதோ நிவாதகவசை: காலேயைர் வஸவோ ‘மரா:
விஸ்வேதேவாஸ் து பௌலோமை ருத்ரா: க்ரோதவசை: ஸஹ
வ்ருஷாகபி:—சிவபெருமான்; து—உண்மையில்; ஜம்பேன—ஜம்பனுடன்; மஹிஷேண—மகிஷாசுரனுடன்; விபாவஸு:—அக்னிதேவன்; இல்வலன்:—இல்வலன் எனும் அசுரன்; ஸஹவாதாபி:—வாதாபி எனும் அவனுடைய சகோதரனோடு; ப்ரஹ்ம புத்ரை:—வஸிஷ்டரைப் போன்ற பிரம்ம புத்திரர்களுடன்; அரிம்-தம—எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே; காமதேவேன—காமதேவனுடன்; துர்மர்ஷ:—துர்மர்ஷர்; உத்கலன்:—உத்கலன் எனும் அசுரன்; மாத்ருபி ஸஹ—மாத்ருக்கள் எனப்படும் தேவதைகளுடன்; ப்ரஹஸ்பதி:—பிருஹஸ்பதி எனும் தேவர்; ச—மேலும்; உசனஸா—சுக்ராசார்யருடன்; நரகேண—நரகன் எனும் அசுரனுடன்; சனைஸ்சர:—சனி தேவன்; மருத:—காற்றுத் தேவர்கள்; நிவாத கவசை:—நிவாதகவசன் எனும் அசுரனுடன்; காலேயை:—கால கேயர்களுடன்; வஸவ: அமரா:—வசுக்கள் போர் செய்தனர்; விஸ்வெதேவா:—விஸ்வெதேவ தேவர்கள்; து—உண்மையில்; பௌலோமை:—பௌலோமர்களுடன்; ருத்ரா:—பதினொரு ருத்திரர்கள்; க்ரோதவசை: ஸஹ—க்ரோதவச அசுரர்களுடன்.
பரீட்சித்து மகாராஜனே, எதிரிகளை அடக்குபவரே (அரிந்தம). சிவபெருமான் ஜம்பனுடனும், விபாவஸு மகிஷாசுரனுடனும் யுத்தம் செய்தார். இல்வலன், தனது சகோதரன் வாதாபியுடன் இணைந்து, பிரம்மதேவரின் புத்திர்களோடு போரிட்டான். துர்மர்ஷன் மன்மதனுடனும், உத்கலன் எனும் அசுரன் மாத்ருகா தேவதைகளுடனும், பிருஹஸ்பதி சுக்ராசார்யருடனும், சனி நரகாசுரனுடனும் யுத்தம் செய்தனர். மருக்கள் நிவாதகவசனுடனும், வசுக்கள் காலகேய அசுரர்களுடனும், விஸ்வெதேவ தேவர்கள் பெளலோம அசுரர்களுடனும், மற்றும் ருத்திரர்கள் கோபத்திற்குப் பலியான குரோதவஸ அசுரர்களுடனும் யுத்தம் செய்தனர்.
பதம் 8.10.35
த ஏவம் ஆஜாவ் அஸுரா: ஸுரேந்ரா
த்வந்வேன ஸம்ஹத்ய ச யுத்மானா:
அன்யோன்யம் ஆஸாத்ய நிஜக்னுர் ஒஜஸா
ஜிகீக்ஷவஸ் தீக்ஷ்ண-சராஸி-தொமாரை:
தே—அவர்கள் அனைவரும்; ஏவம்—இவ்விதமாக; ஆஜௌ—போர்களத்தில்; அஸுரா:—அசுரர்களும்; ஸுர-இந்ரா:—தேவர்களும்; த்வந்வேன—இருவர் இருவராக; ஸம்ஹத்ய—ஒன்றாகக் கலந்து; ச—மேலும்; யுத்மானா:—சண்டையில் ஈடுபட்டனர்; அன்யோன்யம்—ஒருவரோடொருவர்; ஆஸாத்ய—அணுகி; நிஜக்னு:—ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்; ஓஜஸா—பெரும் பலத்துடன்; ஜிகீக்ஷவ:—வெற்றியை எதிர்பார்த்த ஒவ்வொருவரும்; தீக்ஷ்ண—கூரிய; சர—அம்புகளாலும்; அஸி—உடைவாள்களாலும்; தோமரை:—ஈட்டிகளாலும்.
இவ்வெல்லா தேவர்களும், அசுரர்களும் போர் புரியும் உணர்வுடன் போர்க்களத்தில் கூடி, பெரும்பலத்துடன் ஒருவரையொருவர் தாக்கினர். வெற்றியை எதிர்நோக்கிய அவர்களனைவரும், தீட்டிய அம்புகளுடனும், உடைவாள்களுடனும் மற்றும் ஈட்டிகளுடனும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கியவாறு இருவர் இருவராகப் போர் புரிந்தனர்.
பதம் 8.10.36
புசுண்டிபிஸ் சக்ர-கதர்ஷ்டி-பட்டிசை:
சக்தி-உல்முகை: ப்ராஸ-பரஸ்வதைர் அபி
நிஸ்த்ரிம்ச-பல்லை: பரிகை: ஸமுத்கரை:
ஸபிந்திபாலைஸ் ச சிராம்ஸி சிச்சிது:
புசுண்டிபி—’புசுண்டி’ எனப்படும் ஆயுதங்களாலும்; சக்ர—சக்ரங்களாலும்; கதா—கதைகளாலும்; ருஷ்டி—’ருஷ்டி’ எனப்படும் ஆயுதங்களாலும்; பட்டிசை:—’பட்டிசை’ எனப்படும் ஆயுதங்களாலும்; சக்தி—’சக்தி’ ஆயுதங்களாலும்; உல்முகை:—’உல்முகை’ எனப்படும் ஆயுதங்களாலும்; ப்ராஸ—ப்ராஸ ஆயுதங்களாலும்; பரஸ்வதை:—’பரஸ்வதம்’ எனப்படும் ஆயுதங்களாலும்; அபி—மேலும்; நிஸ்த்ரிம்ச—நிஸ்த்ரிம்சங்களாலும்; பல்லை:—ஈட்டிகளாலும்; பரிகை:—’பரிக’ம் எனப்படும் ஆயுதங்களாலும்; ஸ-முத்கரை:—முத்கரம் எனப்படும் ஆயுதங்களாலும்; ஸ-பிந்திபாலை:—பிந்திபால ஆயுதங்களாலும்; ச—கூட; சிராம்ஸி தலைகளை; சிச்சிது:—துண்டித்தார்.
அவர்கள் புசுண்டி, சக்கரம், கதை, ருஷ்டி, பட்டிசம், சக்தி, உல்முகம், ப்ராஸம், பரஸ்வதம், நிஸ்த்ரிம்சம், ஈட்டி, பரிகம், முத்கரம் மற்றும் பிந்திபாலம் போன்ற ஆயுதங்களை உபயோகித்து ஒருவரையொருவர் சிரச்சேதம் செய்தனர்.
பதம் 8.10.37
கஜாஸ் துரங்கா: ஸரதா: பதாதய:
ஸாரோஹ-வாஹா விவிதா விகண்டிதா:
நிக்ருத்த-பாஸூரு-சிரோதராங்ரயஸ்
சின்ன-த்வஜேஷ்வாஸ-தனுத்ர-பூஷணா:
கஜா:—யானைகள்; துரங்கா:—குதிரைகள்; ஸ-ரதா:—இரதங்களுடன்; பதாதய:—காலாட்படை வீரர்கள்; ஸாரோஹ-வாஹா:—சாரதிகளுடன் வாகனங்களும்; விவிதா:—அநேக; விகண்டிதா:—துண்டுத்துண்டாக வெட்டப்பட்டன; நிக்ருத்த-பாஹு—துண்டிக்கப்பட்ட கரங்கள்; ஊரு—தொடைகள்; சிரோதர—கழுத்துகள்; அங்ரய:—கால்கள்; சின்ன—சின்னாபின்னப்படுத்தப்பட்ட; த்வஜ—கொடிகள்; இஷ்வாஸ—வில்கள்; தனுத்ர—கவசம்; பூஷணா:—ஆபரணங்கள்.
யானைகள், குதிரைகள், இரதங்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் மற்றும் பலவகைப்பட்ட வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் கண்டதுண்டமாக வெட்டப்பட்டனர். வீரர்களின் கரங்கள், தொடைகள், கழுத்துக்கள் மற்றும் கால்கள் ஆகியவை துண்டிக்கப்பட்டன. மேலும் அவர்களது கொடிகள், வில்கள், கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவையும் கிழித்தெறியப்பட்டன.
பதம் 8.10.38
தேஷாம் பதாகாத-ரதாங்க-சூர்ணிதாத்
ஆயோதனாத் உல்பண உத்திதஸ் ததா
ரேணுர் திச: கம் த்யுமணிம் ச சாதயன்
ன்யவர்ததாஸ்ருக்-ஸ்ருதிபி: பரிப்லுதாத்
தேஷாம்—போர்க்களத்தில் ஈடுபட்டிருந்த அனைவரின்; பதாகாத—தேவாசுரர்களின் கால்கள் பூமியில் பட்டதால்; ரத-அங்க—மேலும் இரதத்தின் சக்கரங்களாலும்; சூர்ணிதாத்—புழுதியாக்கப்பட்டன; ஆயோதனாத்—போர்க்களத்திலிருந்து; உல்பண:—மிகவும் சக்தி வாய்ந்த; உத்தித:—எழும்; ததா—அப்போது; ரேணு:—புழுதி; திச:—எல்லாத் திசைகளிலும்; கம்—விண்வெளி; த்யுமணிம்—சூரியன் வரை; ச—கூட; சாதயன்—அதுவரையுள்ள விண்வெளி முழுவதையும் மறைத்து; ன்யவர்தத—விழுந்து காற்றில் மிதக்கும்; அஸ்ருக்—இரத்தத்தின்; ஸ்ருதிபி:—புழுதியினால்; பரிப்லுதாத்—பரவலாக தெளிக்கப்பட்டதால்.
அசுரர்கள் மற்றும் தேவர்களுடைய கால்களும், இரதங்களின் சக்கரங்களும் பூமியின் மேல் அழுந்தியதால் ஆகாயத்தில் புழுதி வேகமாகப் பரவி, ஒரு புழுதி மேகத்தை ஏற்படுத்தி சூரியன் வரையுள்ள விண்வெளியின் எல்லாத் திசைகளையும் மறைத்தது. ஆனால் புழுதியைத் தொடர்ந்து விண்வெளி எங்கும் இரத்தத் துளிகள் தெளிக்கப்பட்ட போது, புழுதி மேகத்தால் தொடர்ந்து ஆகாயத்தில் மிதக்க முடியவில்லை.
பதம் 8.10.39
சிரோபிர் உத்தூத: கீரிட-குண்டலை:
ஸம்ரம்ப-த்ருக்பி: பரிதஷ்ட-தச்சதை:
மஹா-புஜை: ஸாபரணை: ஸஹாயுதை:
ஸா ப்ராஸ்த்ருதா பூ: கரபோருபிர் பபெள
சிரோபி:—தலைகளால்; உத்தூத—துண்டிக்கப்பட்டு, சிதறிக் கிடந்தன; கிரீட—அவர்களது கிரீடங்களும்; குண்டலை:—குண்டலங்களும்; ஸம்ரம்ப-த்ருக்பி:—கண்கள் கோபத்துடன் நோக்க (தலைகள் அவற்றின் உடல்களில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்ட போதிலும்); பரிதஷ்ட—பற்களால் கடிக்கப்பட்டு; தச்சதை:—உதடுகள்; மஹா-புஜை:—பெரிய கரங்களுடன்; ஸ-ஆபரணை:—ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு; ஸஹ-ஆயுதை:—கரங்கள் துண்டிக்கப்பட்டபோதிலும், அவை ஆயுதங்களைப் பற்றியவாறு இருந்தன; ஸா—அப்போர்க்களம்; ப்ராஸ்த்ருதா—சிதறிய; பூ:—போர்க்களம்; கரப-ஊருபி:—மேலும் யானைகளின் தும்பிக்கைகளை ஒத்த தொடைகளுடனும், கால்களுடனும்; பபௌ—அது அப்படியாயிற்று.
போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, போர்க்களத்தில் வீரர்களின் துண்டிக்கப்பட்ட தலைகள் இங்குமங்குமாக சிதறிக் கிடந்தன. அவற்றிலிருந்து கண்கள் இன்னமும் கடுமையாக நோக்கிய வண்ணமும், பற்கள் கோபத்தால் உதடுகளைக் கடித்தவண்ணமும், இருந்தன. துண்டிக்கப்பட்ட இத்தலைகளிலிருந்த கிரீடங்களும், குண்டலங்களும் சிதறிக் கிடந்தன. அதைப்போலவே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும், பல்வேறு ஆயுதங்களைப் பற்றிய வண்ணமும் இருந்த பல கரங்கள் இங்குமங்குமாக சிதறிக் கிடந்தன. அவ்வாறுதான், யானைகளின் தும்பிக்கைகளை ஒத்த பல கால்களும், தொடைகளும் கூட சிதறிக் கிடந்தன.
பதம் 8.10.40
கபந்தாஸ் தத்ர சோத்பேது: பதித-ஸ்வ-சிரே-‘க்ஷிபி:
உத்யதாயுத-தோர்தண்டைர் ஆதாவந்தோ படான் ம்ருதே
கபந்தா:—முண்டங்கள் (தலைகளற்ற உடல்கள்); தத்ர—அங்கு (போர்க்களத்தில்); ச—கூட; உத்பேது:—உண்டாக்கப்பட்டன; பதித—வீழ்ந்த; ஸ்வ-சிர: அக்ஷிபி—ஒருவரது தலையிலுள்ள கண்களால்; உத்யத—உயர்த்திய; ஆயுத—ஆயுதங்களுடன் கூடிய; தோர்தண்டை:—யாருடைய கரங்கள்; ஆதாவந்த:—நோக்கிப் பாய்ந்து செல்லும்; படான்—வீரர்கள்; ம்ருதே—போர்க்களத்தில்.
போர்க்களத்தில் தலைகளற்ற பல முண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கரங்களில் ஆயுதங்களைப் பற்றியிருந்த, பேய்களைப் போன்ற அம்முண்டங்களால், விழுந்து கிடந்த தலைகளிலுள்ள கண்களின் மூலமாகக் காண முடிந்தது. இவ்வாறாக எதிரி வீரர்களை அந்த முண்டங்கள் தாக்கின.
பதம் 8.10.41
பலிர் மஹேந்ரம் தசபிஸ் த்ரிபிர் ஐராவதம் சரை:
சதுர்பிஸ் சதுரோ வாஹான் ஏகேனாரோஹம் ஆர்ச்யத்
பலி:—பலி மகாராஜன்; மஹா-இந்ரம்—சுவர்க்க ராஜனை; தசபி:—பத்து; த்ரிபி:—மூன்று; ஐராவதம்—இந்திரனின் வாகனமான ஐராவதத்தை; சரை:—அம்புகளாலும்; சதுர்பி:—நான்கு அம்புகளாலும்; சதுர:—அந்த நான்கும்; வாஹான்—வாகனங்களிலிருந்த வீரர்களை; ஏகேன—ஒன்றால்; ஆரோஹம்—யானைகளின் பாகனை; ஆர்சயத்—தாக்கினார்.
பலி மகாராஜன் பிறகு பத்து அம்புகளால் இந்திரனையும், மூன்று அம்புகளால் இந்திரனின் வாகனமான ஐராவத யானையையும் தாக்கினார். நான்கு அம்புகளால் ஐராவதத்தின் கால்களைக் காவல் புரிந்த நான்கு குதிரை வீரர்களையும், ஒரு அம்பால் யானைப் பாகனையும் அவர் தாக்கினார்.
பதம் 8.10.42
ஸ தான் ஆபதத: சக்ரஸ்
தாவாத்பி: சீக்ர விக்ரம:
சிக்சேத நிசிதைர் பல்லைர்
அஸம்ப்ராப்தான் ஹஸன் இவ
ஸ:—அவர் (இந்திரன்); தான்—அம்புகள்; ஆபதத:—அவரை நோக்கி முன்னேறிச்சென்று கீழே விழும்போது; சக்ர:—இந்திரன்; தாவத்பி:—உடனடியாக; சீக்ர-விக்ரம:—வெகுவிரைவில் அடக்கிவிடுவதற்காக ஏவப்பட்டது; சிச்சேத—சின்னா பின்னப்படுத்தியது; நிசிதை:—மிகவும் கூரிய; பல்லை:—வேறொரு வகையான அம்பால்; அஸம்ப்ராப்தான்—எதிரியின் அம்புகளை வரவேற்காமல்; ஹஸன் இவ—நகைப்பதைப் போல்.
பலி மகாராஜனின் அம்புகள் அவரை அடையும் முன்பே, அம்புகளைக் கையாள்வதில் நிபுணராகிய தேவேந்திரன், புன்னகை செய்து மிகவும் கூரானவையும், பல்லம் எனப்படுபவையுமான மற்றொரு வகையான அம்புகளால் அவற்றை நிர்மூலமாக்கினார்.
பதம் 8.10.43
தஸ்ய கர்மோத்தமம் வீக்ஷ்ய துர்மர்ஷ: சக்திம் ஆததே
தாம் ஜ்வலந்தீம் மஹோல்காபாம் ஹஸ்த-ஸ்தாம் அச்சினத் தரி:
தஸ்ய:—இந்திர ராஜனின்; கர்ம-உத்தமம்—மிகச்சிறந்த யுத்தக்கலை; வீக்ஷ்ய—கவனித்தபின்; துர்மர்ஷ:—மிகவும் கோபமான மனோநிலையில் இருந்ததால்; சக்திம்—’சக்தி’ ஆயுதத்தை; ஆததே—எடுத்து; தாம்—அந்த ஆயுதத்தை; ஜ்வலன்தீம்—சுடர்விட்டு எரியும் நெருப்பு; மஹா-உல்கா-ஆபாம்—மிகப் பெரிய கொள்ளிக் கட்டையைப் போல் காணப்படும்; ஹஸ்த-ஸ்தம்—பலியின் கையில் இருக்கும்போதே; அச்சினத்—கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார்; ஹரி:—இந்திரன்.
இந்திரனின் மிகச்சிறந்த போர்த்திறமையை பலி மகாராஜன் கண்டபோது, பொங்கி எழும் கோபத்தை அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறாக, பெரும் கொள்ளிக்கட்டையை போல் கொழுந்து விட்டெரியும், சக்தி எனப்படும் மற்றொரு ஆயுதத்தை அவர் எடுத்தார். ஆனால் அவ்வாயுதம் பலியின் கரத்தில் இருக்கும்போதே இந்திரன் அதைக் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார்.
பதம் 8.10.44
தத: சூலம் தத: ப்ராஸம் ததஸ் தொமரம் ருஷ்டய:
யத் யச் சஸ்த்ரம் ஸமாதத்யாத் ஸர்வம் தத் அச்சினத் விபு:
தத:—அதன் பிறகு; சூலம்—ஈட்டி; தத:—அதன்பிறகு; ப்ராஸம்—ப்ராஸ ஆயுதம்; தத:—அதன்பிறகு; தொமரம்—’தொமர’ ஆயுதம்; ருஷ்டய:—’ருஷ்டி’ ஆயுதங்கள்; யத் யத்—எதையெல்லாம்; சஸ்த்ரம்—ஆயுதம்; ஸமாதத்யாத்—பலி மகாராஜன் உபயோகிக்க முயன்றாராம்; ஸர்வம்—அவையனைத்தையும்; தத்—அதே ஆயுதங்களை; அச்சினத்—கண்ட துண்டமாக வெட்டி வீழ்த்தினார்; விபு:—சக்தி வாய்ந்த இந்திரன்.
அதன்பிறகு, பலி மகாராஜன் ஈட்டி, ப்ராஸம், தொமரம், ருஷ்டி மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக உபயோகித்தார். ஆனால் அவர் எடுத்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்திரன் உடனே கண்டதுண்டமாக வெட்டித் தள்ளினார்.
பதம் 8.10.45
ஸஸர்ஜாதாஸுரீம் மாயாம் அந்தர்தான-கதோ ‘ஸுர:
தத: ப்ராதுரபூச் சைல: ஸு ரானீகோபரி ப்ரபோ
ஸஸர்ஜ—தோற்றுவித்தார்; அத—இப்போது; ஆஸுரீம்—அசுரத்தனமான; மாயாம்—மாயாஜாலத்தை; அந்தர்தான—மறைந்துவிட்டார்; கத:—சென்றபின்; அஸுர:—பலி மகாராஜன்; தத:—அதன்பிறகு; ப்ராதுரபூத்—தோன்றியது; சைல:—ஒரு பெரிய மலை; ஸுர-அனீக-உபரி—தேவப்படையின் தலைக்கு மேல்; ப்ரபோ—எனதருமை ராஜனே.
எனதருமை ராஜனே, பலி மகாராஜன் பிறகு மறைந்து, அசுரத்தனமான மாயாஜாலங்களின் உதவியை நாடினார். பிறகு மாயாஜாலத்தால் உண்டாக்கப்பட்ட பெரிய மலையொன்று தேவப் படைகளின் தலைக்கு மேல் தோன்றியது.
பதம் 8.10.46
ததோ நிபேதுஸ் தரவோ தஹ்யமானா தவாக்னினா
சிலா: ஸடங்க-சிகராஸ் சூர்ணயந்த்யோ த்விஷத்-பலம்
தத:—அப்பெரிய மலையில் இருந்து; நிபேது:—விழத்துவங்கின; தரவ:—பெரிய மரங்களின்; தஹ்யமானா:—நெருப்பில் சுடர்விட்டெரியும்; தவ-அக்னினா—காட்டுத் தீயால்; சிலா:—மற்றும் கற்கள்; ஸ-டங்க-சிகரா:—கடப்பாறையைப் போன்ற கூர்முனைகளைக் கொண்ட; சூர்ணயந்த்ய:—நொறுக்கி; த்விஷத்-பலம்—எதிரிகளின் பலத்தை.
ஒரு காட்டுத்தீயில் கொழுந்து விட்டெரிவது போன்ற மரங்கள் அம்மலையிலிருந்து விழுந்தன. கடப்பாரையைப் போன்ற கூர்முனைகளைக் கொண்ட கல்லின் துணுக்குகளும் கூட தேவப்படைகளின் தலைகளின் மீது விழுந்து நசுக்கின.
பதம் 8.10.47
மஹோரகா: ஸமுத்பேதுர் தந்தசூகா: ஸவ்ருஸ்சிகா:
ஸிம்ஹ-வ்யாக்ர-வராஹாஸ் ச மர்தயந்தோ மஹா-கஜா:
மஹா-உரகா:—பெரிய பாம்புகள்; ஸமுத்பேது:—அவர்களின் மீது விழுந்தன; தந்தசூகா:—மற்ற விஷ மிருகங்களும், பூச்சிகளும்; ஸ-வ்ருஸ்சிகா:—தேள்களுடன்; ஸிம்ஹ—சிங்கங்கள்; வ்யாக்ர—புலிகள்; வராஹா: ச—மேலும் காட்டுப்பன்றிகளும்; மர்தயந்த:—நசுக்கும்; மஹா-கஜா:—மிகப்பெரிய யானைகளும்.
அனைத்தையும் நொறுக்கித் தள்ளியவாறு, தேள்களும், பெரிய பாம்புகளும் மற்றும் வேறு பல விஷ மிருகங்களும், சிங்கங்கள், புலிகள், காட்டுப் பன்றிகள் மற்றும் மிகப் பெரிய யானைகள் ஆகிய அனைத்தும் தேவப்படை வீரர்களின் மீது விழத் துவங்கின.
பதம் 8.10.48
யாதுதான்யஸ் ச சதஸ சூல-ஹஸ்தா விவாஸஸ:
சிந்தி பிந்தீதி வாதின்யஸ் ததா ரக்ஷோ-கணா: ப்ரபோ
யாதுதான்ய:—மாமிசம் உண்ணும் காட்டேரிகள்; ச—மேலும்; சதஸ:—நூற்றுக்கணக்கான; சூல-ஹஸ்தா:—அவை ஒவ்வொன்றும் கையில் ஒரு திரிசூலத்துடன்; விவாஸஸ:—முற்றிலும் நிர்வாணமாக; சிந்தி—கண்ட துண்டமாக வெட்டு; பிந்தி—குத்து; இதி—இவ்வாறாக; வாதின்ய:—பேசும்; ததா—அவ்வாறு; ரக்ஷ:-கணா:—ஓர் இராட்சஸக் கூட்டம்; ப்ரபோ—ராஜனே.
ராஜனே, பிறகு பல நூற்றுக்கணக்கான ஆண், பெண் காட்டேரிகள், கரங்களில் திரிசூலகங்களை ஏந்தியவாறு, முற்றிலும் நிர்வாணமாகத் தோன்றி,”அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டு! குத்து!” என்று கூச்சலிட்டன.
பதம் 8.10.49
ததோ மஹா-கனா வ்யோம்னி கம்பீர-புருஷ-ஸ்வனா:
அங்காரான் முமுசுர் வாதைர் ஆஹதா: ஸ்தனயித்னவ:
தத:—அதன்பிறகு; மஹா-கனா:—பெரிய மேகங்கள்; வ்யோம்னி—ஆகாயத்தில்; கம்பீர-புருஷ-ஸ்வனா:—’கடகட’ வென்ற ஓசையை எழுப்பியவாறு; அங்காரான்—கொள்ளிக் கட்டைகளை; முமுசு:—பொழிந்தன; வாதை:—பெருங்காற்றுகளால்; ஆஹதா:—அலைக்கழிக்கப்பட்டு; ஸ்தனயித்னவ:—இடி முழக்கத்துடன்.
பிறகு பேய்க்காற்றுகளால் அலைக்கழிக்கப்பட்ட கொடூரமான மேகங்கள், ஆகாயத்தில் தோன்றின. ‘கடகட’ வென்று மிகவும் கடுமையாக உருளும் இடி முழக்கத்துடன், அவை எரியும் நிலக்கரியைப் பொழிய ஆரம்பித்தன.
பதம் 8.10.50
ஸ்ருஷ்டோ தைத்யேன ஸுமஹான் வஹ்னி: ஸ்வஸன-ஸாரதி:
ஸாம்வர்தக இவாத்யுக்ரோ விபுத-த்வஜினீம் அதாக்
ஸ்ருஷ்ட:—உண்டாக்கப்பட்ட; தைத்யேன—அசுரனால் (பலி மகாராஜன்); ஸு-மஹான்—பயங்கர அழிவை ஏற்படுத்தக் கூடிய; வஹ்னி:—ஒரு தீ; ஸ்வஸன-ஸாரதி:—வேகமான காற்றினால் ஏந்திச் செல்லப்பட்ட; ஸாம்வர்தக:—அழிவுக் காலத்தில் தோன்றும் ‘ஸாம்வர்தக’ம் எனப்படும் நெருப்பு; இவ—அதைப்போலவே; அதி—மிகவும்; உக்ர:—பயங்கரமான; விபுத—தேவர்களின்; த்வஜினீம்—வீரர்களை; அதாக்—எரித்துச் சாம்பலாக்கியது.
பலி மகாராஜனால் உண்டாக்கப்பட்ட, அழிவை விளைவிக்கக் கூடிய பயங்கரமான நெருப்பு ஒன்று தேவ வீரர்கள் அனைவரையும் எரிக்கத் துவங்கியது. வேகமான காற்றுகளுடன் சேர்த இந்நெருப்பு அழிவுக் காலத்தில் தோன்றும் ஸம்வர்தக நெருப்பைப் போல் பயங்கரமானதாகக் காணப்பட்டது.
பதம் 8.10.51
தத: ஸமுத்ர உத்வேல: ஸர்வத: ப்ரத்யத்ருஸ்யத
ப்ரசண்ட-வாதைர் உத்தூத-தரங்காவர்த-பீஷண:
தத:—அதன் பிறகு; ஸமுத்ர:—கடல்; உத்வேல:—கிளர்ச்சியடைந்து; ஸர்வத:—எல்லா இடங்களிலும்; ப்ரத்யத்ருஸ்யத—எல்லோருடைய கண்முன்னும் தோன்றியது; ப்ரசண்ட—பயங்கரமான; வாதை:—காற்றுகளால்; உத்தூத—சலனமடைந்த; தரங்க—அலைகளின்; ஆவர்த—நீர்ச்சுழலும்; பீஷண:—கொடிய.
அதன்பிறகு, சுழற் காற்றினால் சலனமடைந்த நீர்ச்சுழல்களும், கடலலைகளும், கொடூரமான ஒரு வெள்ளப் பெருக்குடன் எல்லா இடங்களிலும், எல்லோருடைய கண் முன்னும் தோன்றின.
பதம் 8.10.52
ஏவம் தைத்யைர் மஹா-மாயைர் அலக்ஷ்ய-கதிபீ ரணே ஸ்ருஜ்யமானாஸு மாயாஸு விஷேது: ஸுர-ஸைனிகா:
ஏவம்—இவ்வாறாக; தைத்யை—அசுரர்களால்; மஹா-மாயை:—மாயா ஜாலத்தை உண்டாக்குவதில் நிபுணர்களான; அலக்ஷ்ய-கதிபி:—ஆனால் கண்ணுக்குத் தெரியாத; ரணே—சண்டையில்; ஸ்ருஜ்யமானாஸு மாயாஸு—இத்தகையதொரு மாயா ஜால சூழ்நிலையை உண்டாக்கியதால்; விஷேது:—வருத்தமடைந்தனர்; ஸுர-ஸைனிகா:—தேவ வீரர்கள்.
கண்ணுக்குப் புலப்படாத அசுரர்கள் மாயாஜால வித்தைகளில் நிபுணர்களாவர். அவர்களால் இத்தகைய மாயா ஜாலமான சூழ்நிலை உருவாக்கப்பட்டபோது, தேவர்களின் வீரர்கள் வருத்தமடைந்தனர்.
பதம் 8.10.53
ந தத்-ப்ரதிவிதிம் யத்ர விதுர் இந்ராதயோ ந்ருப
த்யாத: ப்ராதுரபூத் தத்ர பகவான் விஸ்வ-பாவன:
ந—இல்லை; தத்-ப்ரதிவிதிம்—அத்தகைய மாயையான ஒரு சூழ்நிலையைத் தடுக்க; யத்ர—எங்கு; விது:—புரிந்து கொள்ள முடிந்தது; இந்ர-ஆதய:—இந்திரன் முதலான தேவர்கள்; ந்ருப—ராஜனே; த்யாத:—தம்மை தியானித்ததால்; ப்ரதுரபூத்—அங்கு தோன்றினார்; தத்ர—அந்த இடத்தில்; பகவான்—பரமபுருஷர்; விஸ்வ-பாவன:—பிரபஞ்சத்தைப் படைத்தவரான.
ராஜனே, அசுரர்களின் செயல்களைத் தடுக்கக் கூடிய எந்த வழியையும் தேவர்களால் கண்டுபிடிக்க முடியாதபோது, அவர்கள் பிரபஞ்சத்தைப் படைத்தவரான பரமபுருஷ பகவானை இதய பூர்வமாகத் தியானித்தனர். பகவானும் பிறகு உடனே தோன்றினார்.
பதம் 8.10.54
தத: ஸுபர்ணாம்ஸ-க்ருதாங்ரி-பல்லவ:
பிசங்க-வாஸா நவ-கஞ்ச-யோசன:
அத்ருஸ்யதாஷ்டாயுத-பாஹுர் உல்லஸச்
ஸ்ரீ-கௌஸ்துபாநர்க்ய-கிரீட-குண்டல:
தத:—அதன்பிறகு; ஸுபர்ண-அம்ஸ-க்ருத-அங்ரி-பல்லவ—கருடனின் இரு தோள்களின் மீது தமது இரு தாமரைப் பாதங்களை பரப்பி வைத்திருப்பவரான பரமபுருஷ பகவான்; பிசங்க-வாஸா:—மஞ்சள் நிற ஆடை அணிந்தவர்; நவ-கஞ்ச-லோசன:—மேலும் அவரது கண்கள், புதிதாக மலர்ந்த தாமரை இதழ்களைப் போலவே இருந்தன; அத்ருஸ்யத—(தேவர்களின் முன்னிலையில்) தோன்றினார்; அஷ்ட-ஆயுத—எட்டு வகையான ஆயுதங்களைக் கொண்டவராய்; பாஹு:—கரங்கள்; உல்லஸத்—பிரகாசமான முறையில் காட்சியளிக்கும்; ஸ்ரீ—ஸ்ரீ தேவி; கௌஸ்துப—கௌஸ்துப மணியால்; அனர்க்கய—கணக்கிட முடியாத மதிப்பு கொண்ட; கிரீட—கிரீடம்; குண்டல:—குண்டலங்களுடன்.
புதிதாக மலர்ந்த தாமரை இதழ்களையொத்த கண்களை உடையவரான பரம்புருஷ பகவான், தமது தாமரைப் பாதங்களை கருடனின் தோள்கள் மீது பரப்பியவாறு அமர்ந்திருந்தார். பரமபுருஷர் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தார். அவர் கௌஸ்துப மணியாலும், ஸ்ரீ தேவியாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மேலும் விலைமதிப்பற்ற கிரீடத்தையும், குண்டலங்களையும் அணிந்திருந்த பரமபுருஷர், எட்டு கரங்களில் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியவராய் தேவர்களின் முன் காட்சியளித்தார்.
பதம் 8.10.55
தஸ்மின் ப்ரவிஷ்டே ‘ஸுர-கூட-கர்மஜா
மாயா வினேகர் மஹினா மஹீயஸ:
ஸ்வப்னோ யதா ஹி ப்ரதிபோத ஆகதே
ஹரி-ஸ்ம்ருதி: ஸர்வ-விபத்-விமோக்ஷணம்
தஸ்மின் ப்ரவிஷ்டே—பரமபுருஷர் பிரவேசித்ததும்; அஸுர—அசுரர்களின்; கூட-கர்ம-ஜா—மந்திரமான, மாயா ஜாலங்களின் காரணத்தால்; மாயா—பொய்த் தோற்றங்கள்; வினேக:—உடனே விலக்கப்பட்டன; மஹினா—உயரிய சக்தியால்; மஹீயஸ:—மிகப்பெரியதற்கும் பெரியவரான பரமபுருஷ பகவானின்; ஸ்வப்ன:—கனவுகள்: யதா—போல்; ஹி—உண்மையில்; ப்ரதிபோதே—விழித்தெழும்போது; ஆகதே—வந்து சேர்ந்தார்; ஹரி-ஸ்ம்ருதி:—பரமபுருஷ பகவானின் நினைவு; ஸர்வ-விபத்—எல்லா வகையான அபாயமான சூழ்நிலைகளையும்; விமோக்ஷணம்—உடனடியாக நிர்மூலப்படுத்திவிடுகிறது.
கனவு காண்பவர் விழித்தெழும்போது, கனவில் தோன்றிய ஆபத்துகள் மறைந்து விடுவதைப் போலவே, போர்க்களத்தினுள் பரமபுருஷ பகவான் புகுந்தவுடனேயே, அவரது தெய்வீகமான வீரியத்தினால், அசுரர்களால் உண்டாக்கப்பட்ட மாயா ஜாலங்கள் அழிக்கப்பட்டன.
பதம் 8.10.56
த்ருஷ்ட்வா ம்ருதே கருட-வாஹம் இபாரி-வாஹ
ஆவித்ய சூலம் அஹினோத் அத காலனேமி:
தல் லீலயா கருட-மூர்த்னி பதத் க்ருஹீத்வா
தேனாஹனன் ந்ருப ஸவாஹம் அரிம் த்ரியதீச:
த்ருஷ்ட்வா—கண்டு; ம்ருதே—போர்க்களத்தில்; கருட-வாஹம்—கருடனால் தூக்கிச் செல்லப்பட்ட பரமபுருஷ பகவானை; இபாரி-வாஹ:—பெரியதொரு சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்ட அசுரன்; ஆவித்ய—சுழற்றி; சூலம்—திரிசூலத்தை; அஹினோத்—அவனை நோக்கி எறிந்தார்; அத—இவ்வாறாக; காலனேமி:—காலனேமி எனும் அசுரன்; தத்—பரமபுருஷருக்கு எதிரான அசுரனின் அத்தகைய ஒரு தாக்குதலை; லீலயா—மிகவும் சுலபமாக; கருட மூர்த்னி—அவருடைய கருட வாகனத்தின் தலை மீது; பதத்—கீழே விழும் போது; க்ருஹீத்வா—சிரமமின்றி அதை உடனே எடுத்த பின்; தேன—மேலும் அதே ஆயுதத்தால்; அஹனத்—கொன்றார்; ந்ருப—ராஜனே; ஸ-வாஹம்—அவனது வாகனத்துடன்; அரிம்—எதிரியை; த்ரி-அதீச:—மூவுலகங்களின் அதிபதியாகிய பரமபுருஷ பகவான்.
ராஜனே, சிம்ம வாகனத்தில் ஏறிவந்த அசுரனான காலனேமி, கருடனால் தூக்கிச் செல்லப்பட்ட பரமபுருஷ பகவான் போர்க்களத்திலிருப்பதைக் கண்டதும், உடனே தனது திரிசூலத்தை எடுத்து அதைச் சுழற்றி கருடனின் தலையைக் குறிவைத்து வீசி எறிந்தான். மூவுலகங்களின் அதிபதியாகிய பரமபுருஷ பகவான் ஸ்ரீ ஹரி, உடனடியாக அந்த திரிசூலத்தைப் பற்றி, அதே ஆயுதத்தால் எதிரியான காலனேமியையும், அவனது வாகனமாகிய சிங்கத்தையும் கொன்றார்.
பதம் 8.10.57
மாலீ ஸுமாலி அதிபலௌ யுதி பேததுர் யச்-
சக்ரேண க்ருத்த-சிரஸாவ் அத மால்யவாம்ஸ் தம்
ஆஹத்ய திக்ம-கதயாஹனத் அண்டஜேந்ரம்
தாவச் சிரோ ‘ச்சினத் அரேர் நததோ ‘ரிணாத்ய:
மாலீ ஸுமாலீ—மாலீ, ஸுமாலீ எனும் இரு அசுரர்கள்; அதி-பலௌ—மிகவும் சக்திவாய்ந்த; யுதி—போர்க்களத்தில்; பேதது:—வீழ்ந்தனர்; யத்-சக்ரேண—யாருடைய சக்கரத்தால்; க்ருத்த-சிரசௌ—அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு; அத—அதன்பிறகு; மால்யவான்—மால்யவான்; தம்—பரமபுருஷ பகவானை; ஆஹத்ய—தாக்கி; திக்ம-கதயா—மிகவும் கூரியதொரு கதையால்; அஹனத்—தாக்க, கொல்ல முயன்றான்; அண்ட-ஐ-இந்ரம்—முட்டைகளில் இருந்து பிறக்கும் பறவைகளுக்கெல்லாம் அரசனான, கருடன்; தாவாத்—அச்சமயத்தில்; சிர:—தலையை; அச்சினத்—துண்டித்து விட்டார்; அரே:—எதிரியின்; நதத:—சிங்கத்தைப் போல் கர்ஜிக்கும்; அரிணா—சக்கரத்தால்; ஆத்ய:—மூல முழுமுதற் கடவுள்.
அதன்பிறகு, மாலீ, ஸுமாலீ எனும் இரு மிகவும் சக்தி வாய்ந்த அசுரர்கள் பரமபுருஷரால் கொல்லப்பட்டனர். பெருமான் தமது சக்கரத்தினால் அந்த அசுரர்களின் தலைகளைத் துண்டித்தார். பிறகு மால்யவான் எனும் மற்றொரு அசுரன் பகவானைத் தாக்கினான். சிங்கத்தைப் போல் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த அசுரன், கூர்மையான தனது கதையால், முட்டைகளிலிருந்து பிறக்கும் பறவைகளின் அரசனாகிய கருடனைத் தாக்கினான். ஆனால் ஆதி புருஷராகிய பரம புருஷ பகவான் தமது சக்கரத்தைப் பாவித்து அந்த அசுரனின் தலையையும் துண்டித்து விட்டார்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “தேவாசுரர்களின் போர்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.