அத்தியாயம் – 5
தேவர்கள் பகவானிடம் பாதுகாப்பை வேண்டுதல்
பதம் 8.5.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ராஜனே, மிகவும் புண்ணியம் வாய்ந்ததான கஜேந்திர மோட்சத்தின் திருவிளையாடல்களை உமக்கு நான் விவரித்தேன். பகவானின் இத்தகைய செயல்களைக் கேட்பதனால், எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவரால் விடுபட முடியும். இப்பொழுது ரைவத மனுவைப் பற்றி நான் விவரிக்கப் போவதை தயவு செய்து கேட்பீராக.
பதம் 8.5.2 : தாமஸ மனுவின் சகோதரர், ரைவதர் எனும் பெயர்கொண்ட ஐந்தாவது மனுவாவார். அவரது புதல்வர்கள் அர்ஜுனர், பலி மற்றும் விந்தியர் முதலானவர்களாவர்.
பதம் 8.5.3 : அரசே, ரைவத மனுவின் யுகத்தில் சுவர்க்க ராஜன் விபு என்று அழைக்கப்பட்டார். தேவர்களுக்கிடையில் பூதரயர்களும், ஏழுலகங்களை ஆக்கிரமித்திருந்த ஏழு பிராமணர்களுக்கிடையில் ஹிரண்யரோமா, வேதசிரா மற்றும் ஊர்த்வபாஹு ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.5.4 : சுப்ரர் மற்றும் அவரது மனைவியான விகுண்டா ஆகியோரின் சேர்க்கையிலிருந்து, பரமபுருஷ பகவானாகிய, வைகுண்டரும், அவருடன் அவரது அம்சங்களாகிய தேவர்களும் தோன்றினார்.
பதம் 8.5.5 : பரமபுருஷ பகவானாகிய வைகுண்டர், ஸ்ரீதேவியை மகிழ்விப்பதற்காகவே, அவளுடைய பிரார்த்தனைக்கிணங்க, மற்றொரு வைகுண்ட லோகத்தைப் படைத்தார். அது எல்லோராலும் வழிபடப்படுகின்றது.
பதம் 8.5.6 : முழுமுதற் கடவுளுடைய அநேக அவதாரங்களின் பெரும் புகழுக்குரிய செயல்களும், உன்னதமான குணங்களும் அற்புதமான முறையில் விவரிக்கப்பட்டிருப்பினும், சிலசமயங்களில் அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும் பகவான் விஷ்ணுவிற்கு அனைத்தும் சாத்தியமானதாகும். பிரபஞ்சத்திலுள்ள அணுக்களை ஒருவரால் கணக்கிட முடியுமானால், முழுமுதற் கடவுளின் குணங்களை அவரால் கணக்கிட முடியும். ஆனால் பிரபஞ்ச அணுக்களை ஒருவராலும் கணக்கிட முடியாது என்பதைப் போலவே பகவானின் உன்னதமான குணங்களை எவராலும் கணக்கிட முடியாது.
பதம் 8.5.7 : சக்ஷுவின் புத்திரரான சாக்ஷுஷர் ஆறாவது மனுவாவார். அவருக்குப் பூரு, புருஷர் மற்றும் ஸுத்யும்னர் முதலான பல புத்திரர்கள் இருந்தனர்.
பதம் 8.5.8 : சாக்ஷுஷ மனுவின் ஆட்சிக் காலத்தில், சுவர்க்க ராஜன் மந்த்ரத்ருமர் என்று அழைக்கப்பட்டார். தேவர்களுக்கிடையில் ஆப்யர்களும், பெரும் முனிவர்களுக்கிடையில் ஹவிஷ்மான் மற்றும் வீரகர் ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.5.9 : இந்த ஆறாவது மன்வந்தர யுகத்தில், பிரபஞ்சத்தின் எஜமானராகிய பகவான் விஷ்ணு, தமது விரிவங்கத்தின் அம்சமாகத் தோன்றினார். அவர் வைராஜரால் அவரது மனைவியான தேவஸம்பூதியின் கருவில் பெறப்பட்டார். மேலும் அஜிதர் என்பது அவரது பெயராகும்.
பதம் 8.5.10 : பாற்கடலைக் கடைந்ததன் வாயிலாக, தேவர்களுக்கு அஜிதர் அமிர்தத்தை பெற்றுத் தந்தார். ஓர் ஆமையின் உருவில், புகழ்பெற்ற மந்தர மலையைத் தமது முதுகின்மேல் சுமந்தவாறு அவர் இங்குமங்கும் அசைந்தார்.
பதங்கள் 8.5.11 – 8.5.12 : பரீட்சித்து மகாராஜன் விசாரித்தார்: மிகச்சிறந்த பிராமணராகிய சுகதேவ கோஸ்வாமியே, பகவான் விஷ்ணு எதற்காக, எப்படி பாற்கடலைக் கடைந்தார்? எக்காரணத்திற்காக அவர் ஓர் ஆமையாக நீரில் தங்கியிருந்து, மந்தர மலையைச் சுமந்தார்? தேவர்கள் எவ்வாறு அமிர்தத்தைப் பெற்றனர்? மேலும் பாற்கடலைக் கடைந்ததனால் வேறென்ன பொருட்கள் உற்பத்தியாயின? பகவானின் இவ்வெல்லா அற்புதச் செயல்களையும் அன்புடன் விளக்குவீராக.
பதம் 8.5.13 : பெளதிக வாழ்வின் மூன்று துயரச் சூழ்நிலைகளால் அமைதி குலைக்கப்பட்டுள்ள என் இதயம், பக்தர்களின் எஜமானராகிய, முழுமுதற் கடவுளின் மகிமைமிக்க செயல்களை நீர் விவரிப்பதைக் கேட்டு இன்னும் பூரண திருப்தியடையவில்லை.
பதம் 8.5.14 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இங்கு நைமிஷாரண்யத்தில் கூடியுள்ள பிராமண சிரேஷ்டர்களே, இவ்வாறாக துவைப்பாயனரின் புத்திரரான சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் கேள்வி எழுப்பிய போது, அவர் மன்னரைப் பாராட்டினார். பிறகு பரமபுருஷ பகவானின் பெருமைகளை அவர் மேலும் விவரிக்க முயன்றார்.
பதங்கள் 8.5.15 – 8.5.16 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அசுரர்கள் தங்களது ஸர்ப்ப ஆயுதங்களால் தேவர்களைப் போரில் கடுமையாகத் தாக்கியபோது, தேவர்களில் பலர் வீழ்ச்சியடைந்து தங்களது உயிரை இழந்தனர். உண்மையில் அவர்களை உயிர்ப்பிக்க முடியவில்லை. ராஜனே, அந்த சமயத்தில், துர்வாச முனிவரால் தேவர்கள் சபிக்கப்பட்டிருந்தனர். மூவுலகங்களும் வறுமையால் பீடிக்கப்பட்டன. அதனால் வேதக்கிரியைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருந்தன.
பதங்கள் 8.5.17 – 8.5.18 : இந்திரன், வருணன் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர் தங்களுடைய வாழ்வின் இந்நிலையைக் கண்டு தங்களுக்கிடையில் கலந்தாலோசனை செய்தனர். ஆனால் அவர்களால் எந்த தீர்வையும் காண முடியவில்லை. பிறகு தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி சுமேரு மலையின் சிகரத்திற்குச் சென்றனர். அங்கு, பிரம்மதேவரின் சபையில், கீழே விழுந்து பிரம்ம தேவரை வணங்கினர். பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிவித்தனர்.
பதங்கள் 8.5.19 – 8.5.20 : தேவர்கள் எல்லா வலிமையையும், ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதையும், இதன் விளைவாக மூவுலகங்களும் அவற்றின் மங்களத்தை இழந்து காட்சியளிப்பதையும், தேவர்கள் நிராதரவான நிலையில் இருப்பதையும், ஆனால் அசுரர்கள் செழிப்படைந்துவிட்டதையும் கண்டு, தேவர்களுக்கெல்லாம் மேலானவரும், அனைவரையும் விட அதிக சக்தி படைத்தவருமான பிரம்மதேவர், தமது மனதை முழுமுதற் கடவுளின் மீது ஒருமுனைப்படுத்தினார். இவ்வாறாக உற்சாகம் அளிக்கப்பட்டு, அவர் மலர்ந்த முகத்துடன், பின்வருமாறு தேவர்களிடம் பேசினார்.
பதம் 8.5.21 : பிரம்மதேவர் கூறினார்: நான், சிவபெருமான், தேவர்களான நீங்கள், அசுரர்கள், வியர்வையிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள், முட்டைகளிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள், பூமியிலிருந்து வளரும் மரங்கள் மற்றும் கருவிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள் ஆகிய அனைவரும் பரமபுருஷரிடமிருந்து, அதாவது அவரது ரஜோ குண அவதாரத்திலிருந்தும் (குண-அவதாரமான பிரம்ம தேவர்), என்னுடைய பாகமாகவுள்ள பெரும் முனிவர்களிடமிருந்தும் வருகின்றனர். ஆகவே நாம் பரமபுருஷரிடம் சென்று, அவரது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்வோமாக.
பதம் 8.5.22 : பரமபுருஷ பகவானுக்கு கொல்லப்பட வேண்டியவரோ. பாதுகாக்கப்பட வேண்டியவரோ, அலட்சியம் செய்யப்பட வேண்டியவரோ அல்லது வழிபாடு செய்யப்பட வேண்டியவரோ ஒருவரும் இல்லை. ஆயினும், காலத்திற்கேற்ப படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக, நற்குணத்திலோ, தீவிர குணத்திலோ அல்லது அறியாமை குணத்திலோ உள்ள வெவ்வேறு உருவங்களை அவர் அவதாரங்களாக ஏற்கிறார்.
பதம் 8.5.23 : ஜட உடல்களை ஏற்றுக் கொண்டுள்ள ஜீவராசிகளின் நற்குணத்தை எழச்செய்வதற்கு இதுவே தக்க சமயமாகும். நற்குணம், படைப்பைப் பராமரிக்கும் பரமபுருஷரின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கென உள்ளதாகும். ஆகவே இதுவே பரமபுருஷ பகவானிடம் புகலிடம் கொள்வதற்குரிய தக்க தருணமாகும். அவர் இயல்பாகவே தேவர்களிடம் மிகவும் அன்பும், பிரியமும் கொண்டவராக இருப்பதால், நிச்சயமாக அவர் நமக்கு நல்லதிர்ஷ்டத்தை வழங்குவார்.
பதம் 8.5.24 : எதிரிகள் அனைவரையும் அடக்குபவரான, பரீட்சித்து மகாராஜனே, பிரம்மதேவர் தேவர்களிடம் பேசிய பின், அவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, இந்த ஜட உலகிற்கு அப்பாலுள்ள உன்னதமான முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்திற்கு அவர் சென்றார். பகவானின் வசிப்பிடம் ஸ்வேதத்வீபம் எனப்படும் ஒரு தீவின் மேல் இருக்கின்றது. இத்தீவு பாற்கடலில் அமைந்துள்ளது.
பதம் 8.5.25 : பரம்புருஷ பகவானை பிரம்மதேவர் இதுவரை கண்டதேயில்லை என்றாலும், அங்கு (ஸ்வேதத்வீபத்தில்), அவர் பரம புருஷரிடம் பிரார்த்தனைகள் செய்தார். பரமபுருஷ பகவானைப் பற்றி வேத இலக்கியத்திலிருந்து பிரம்மதேவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதால், நிலையான மனதுடன் வேத இலக்கியத்தால் எழுதப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளை அவர் பகவானிடம் சமர்ப்பித்தார்.
பதம் 8.5.26 : பிரம்மதேவர் கூறினார்: பரமபுருஷரே, மாற்றமில்லாத, எல்லையற்ற பரம சத்தியமே, நீரே அனைத்திற்கும் மூல காரணமாவீர். நீர் சர்வ வியாபகம் உடையவராதலால், அனைவரின் இதயத்திலும், அணுவிலும் கூட நீர் இருக்கிறீர். உம்மிடம் எவ்வித பெளதிக குணங்களும் இல்லை. உண்மையில், நீர் கற்பனைக்கு எட்டாதவராவீர். மனக் கற்பனையால் உம்மைக் கைப்பற்ற முடியாது. மேலும் வார்த்தைகளால் உம்மை விவரிக்க இயலவில்லை. நீரே அனைவருக்கும் பரம எஜமானராவீர். ஆகவே அனைவராலும் நீர் வழிபடத் தகுந்தவராவீர். எங்களுடைய பணிவான வணக்கங்களை நாங்கள் உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 8.5.27 : ஜீவ சக்தி, மனம் மற்றும் புத்தி ஆகியவை உட்பட அனைத்தும் எப்படி முழுமுதற் கடவுளுடைய கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றன. என்பதை நேராகவும், மறைமுகமாகவும் அவர் அறிவார். அவரே அனைத்திற்கும் ஒளியூட்டுபவர். அவரிடம் அறியாமை இல்லை. முற்கருமங்களின் விளைவுகளுக்கு உட்பட்டுள்ள ஒரு ஜட உடல் அவருக்குக் கிடையாது. மேலும் அவர் பாரபட்சம் மற்றும் பெளதிக கல்வி ஆகியவற்றின் அறியாமையிலிருந்து விடுபட்டவராவார். ஆகவே நித்தியமானவரும், சர்வ வியாபகம் உடையவரும், ஆகாயத்தைப் போல் மிகப் பெரியவரும், மூன்று யுகங்களில் (சத்திய, திரேதா மற்றும் துவாபர ஆறு ஐசுவரியங்களுடன் தோன்றுபவருமான பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் நான் புகலிடம் கொள்கிறேன்.
பதம் 8.5.28 : ஜடச் செயல்களெனும் சுழற்சியில் பௌதிக உடலானது ஒரு மனோரதத்தின் சக்கரத்தை ஒத்திருக்கிறது. பத்து புலன்களும் (ஐந்து செயற்படுவதற்கும், ஐந்து அறிவைத் திரட்டுவதற்கும்), உடலினுள் உள்ள ஐந்து உயிர்க்காற்றுகளும், இரதத்தினுடைய சக்கரத்தின் பதினைந்து ஆரைக்கால்களாக அமைகின்றன. இயற்கையின் முக்குணங்கள் (நற்குணம், தீவிர குணம், மற்றும் அறியாமைக் குணம்) அதனுடைய செயல்களின் மையமாகும். மேலும் இயற்கையின் எட்டு மூலப்பொருட்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம்) சக்கரத்தின் சுற்றளவை உள்ளடக்கியுள்ளன. பகிரங்கமான, ஜட சக்தி இச்சக்கரத்தை மின் சக்தியைப் போல் அசையச் செய்கின்றது. இவ்வாறாக, சக்கரமானது, அதன் குடம் அல்லது மையத்திலுள்ள தாங்கியாகிய முழுமுதற் கடவுளைச் சுற்றி வெகுவிரைவாக சுழல்கின்றது. இந்த முழுமுதற் கடவுளே பரமாத்மாவும், பரமசத்தியமும் ஆவார். அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.29 : முழுமுதற் கடவுள் தூய நற்குணத்தில் (சுத்த-ஸத்வ) இருக்கின்றார். ஆகவே அவர் ஏக-வர்ணமெனும் ஓம்காரமாவார் (ப்ரணவம்). இருளெனக் கருதப்படும் பிரபஞ்ச தோற்றத்திற்கு பகவான் அப்பாற்பட்டவர் என்பதால், ஜடக் கண்களுக்கு அவர் புலப்படாதவராவார். ஆயினும் காலத்தாலோ அல்லது இடத்தாலோ அவர் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடவில்லை. ஆனால் எங்கும் பரவியவராக இருக்கின்றார். கருட வாகனத்தில் மீது அமர்ந்துள்ள அவர், அற்புத யோக சக்தியின் வாயிலாக, சலனத்திலிருந்து விடுதலை அடைந்தவர்களால் வழிபடப்படுகிறார். நாமனைவரும் அவருக்கு நமது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.30 : முழுமுதற் கடவுளின் மாயா-சக்தியை ஒருவராலும் வெல்ல முடியாது. இது மிகவும் வலிமைமிக்கதாக இருப்பதால், இது ஒருவனை வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அறிவை இழக்கச் செய்து, ஒவ்வொருவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், அதே மாயை, அனைவரையும் ஆள்பவரும், அனைத்து ஜீவராசிகளிடமும் சமமனப்பாங்கு கொண்டவருமான முழுமுதற் கடவுளால் அடக்கி ஆளப்படுகிறது. அவருக்கு நமது வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.31 : எங்களது உடல்கள் நற்குணத்தினால் ஆனவை என்பதால் தேவர்களாகிய நாங்கள் ஸத்வ குணத்தில் இருக்கிறோம். சிறந்த முனிவர்களும் கூட அதே நிலையில்தான் இருக்கின்றனர். எனவே, எங்களாலேயே முழுமுதற் கடவுளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், தீவிர மற்றும் அறியாமைக் குணங்களால் இருப்பதால், தங்களது தேக அமைப்பில் மிகவும் அற்பமானவர்களாக இருப்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்களால் பகவானை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? நமது பணிவான வணக்கங்களை அவருக்குச் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.32 : இப்பூமியில் நான்கு வகையான ஜீவராசிகள் உள்ளன. இவையனைத்தும் அவராலேயே படைக்கப்பட்டவை ஆகும். ஜட சிருஷ்டி அவரது தாமரைப் பாதங்களின் மீது அமைந்திருக்கிறது. அவரே பூரண செல்வமும், சக்தியும் படைத்த மிகச்சிறந்த பரம புருஷராவார். எங்கள் மீது அவர் திருப்தி கொள்வாராக.
பதம் 8.5.33 : பிரபஞ்ச தோற்றம் முழுவதுமே நீரிலிருந்து வெளிவந்ததாகும். நீரால் தான் அனைத்து ஜீவராசிகளும் நீடித்திருக்கின்றன, வாழ்கின்றன மற்றும் விருத்தியடைகின்றன. இந்நீர் முழுமுதற் கடவுளின் விந்துவைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகவே அத்தகைய பெரும் ஆற்றலைக் கொண்ட முழுமுதற் கடவுள் எங்களிடம் திருப்தி அடைவாராக.
பதம் 8.5.34 : ஸோமன் எனப்படும் சந்திரனே அனைத்து தேவர்களுக்கும் உரிய உணவுத் தானியங்கள், பலம் மற்றும் ஆயுள் ஆகியவற்றின் பிறப்பிடமாவார். அவரே எல்லாத் தாவர வகைகளுக்கும் எஜமானரும், அனைத்து ஜீவராசிகளின் உற்பத்தி ஸ்தானமும் ஆவார். வேத பண்டிதர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், சந்திரன் முழுமுதற் கடவுளின் மனமாவார். எல்லா ஐசுவரியங்களுக்கும் மூலமாக அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.35 : யாகச் சடங்குகளில் நிவேதனங்களை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறந்த நெருப்பு, முழுமுதற் கடவுளின் வாயாகும். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக கடலுக்கடியில் நெருப்பு இருக்கிறது. உணவை ஜீரணிக்கச் செய்யவும், உடலின் பராமரிப்பிற்குரிய அநேக அமிலங்களை உற்பத்தி செய்யவும், வயிற்றிலும் நெருப்பு இருக்கிறது. பரம சக்தி வாய்ந்தவரான அப்பரம புருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.36 : அர்சிராதி-வர்த்ம என்றழைக்கப்படும் முக்தி மார்க்கத்தை சூரிய தேவனே கவனிக்கிறார். அவரே வேதங்களை அறிவதற்குரிய முக்கியமான மூலமாவார். பரம சத்தியத்தை வழிபடுவதற்குரிய இடமாக இருப்பவரும் அவரே. அவரே முக்திக்குரிய வாயிலாக இருக்கிறார். மேலும் அவரே நித்திய வாழ்வுக்குரிய மூலமாகவும், மரணத்திற்குரிய காரணமாகவும் இருக்கிறார். சூரிய தேவன் பகவானின் கண்ணாவார். பரம ஐசுவரியங்களைக் கொண்டவரான அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.37 : அசையும், அசையாத ஜீவராசிகள் அனைத்தும் தங்களின் ஜீவாதார சக்தி, தேக பலம் மற்றும் வாழ்வு ஆகியவற்றைக் காற்றிலிருந்து தான் பெறுகின்றன. ஒரு சக்கரவர்த்தியை சேவகர்கள் பின் தொடர்வதைப் போலவே, நாமெல்லோரும் நமது ஜீவாதார சக்திக்காக காற்றைப் பின்தொடர்கிறோம். முழுமுதற் கடவுளின் ஆதியான ஜீவாதார சக்தியிலிருந்துதான் காற்றின் ஜீவதார சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பரமபுருஷர் நம்மிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.38 : சர்வசக்தி படைத்தவரான முழுமுதற் கடவுள் நம்மீது திருப்தியடைவாராக. அவரது செவிகளிலிருந்து வெவ்வேறு திசைகள் உற்பத்தியாகின்றன. உடல் துவாரங்கள் அவரது இதயத்திலிருந்து வருகின்றன. மேலும் ஜீவாதார சக்தி, புலன்கள், மனம், உடலினுள் உள்ள காற்று மற்றும் உடலின் புகலிடமாகிய ஆகாயம் ஆகியவை அவரது நாபியிலிருந்து வருகின்றன.
பதம் 8.5.39 : சுவர்க்க ராஜனான மகேந்திரன் பகவானின் வீரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டார். தேவர்கள் பகவானின் கருணையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டனர். சிவபெருமான் பகவானின் கோபத்திலிருந்தும், பிரம்மதேவர் அவரது நிதான புத்தியிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டனர். வேத மந்திரங்கள் பகவானுடைய உடல் துவாரங்களிலிருந்தும், மிகச்சிறந்த முனிவர்களும், பிரஜாபதிகளும் அவரது புறபாலுறுப்புகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டனர். பரமசக்தி படைத்தவரான அந்த பகவான் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.40 : அவரது மார்பிலிருந்து லக்ஷ்மி தேவி உற்பத்தி செய்யப்பட்டாள். அவரது நிழலிலிருந்து பித்ருலோக வாசிகளும், நெஞ்சிலிருந்து சமயமும், பின்புறத்திலிருந்து (சமயத்தின் எதிர்ப்புறம்) மத துவேஷமும் உற்பத்தி செய்யப்பட்டன. அவரது உச்சத்தலையிலிருந்து சுவர்க்க லோகங்களும், அவரது புலன் இன்பத்திலிருந்து அப்ஸராஸ்களும் உற்பத்தி செய்யப்பட்டனர். பரமசக்தி படைத்தவரான அந்த முழுமுதற் கடவுள் நம்மிடம் திருப்தியடைவராக.
பதம் 8.5.41 : வேத அறிவும், பிராமணர்களும் முழுமுதற் கடவுளின் வாயிலிருந்து வருகின்றனர். க்ஷத்திரியர்களும், தேக பலமும் அவரது கைகளிலிருந்து வருகின்றன. வைசியர்களும், உற்பத்தி, செல்வம் ஆகியவற்றிலுள்ள அவர்களது திறமைவாய்ந்த அறிவும் அவரது தொடைகளிலிருந்து வருகின்றன. மேலும் வேத அறிவிற்கு வெளியிலுள்ள சூத்திரர்கள் அவரது பாதங்களிலிருந்து வருகின்றனர். பூரண சக்தி படைத்தவரான அந்த முழுமுதற் கடவுள் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.42 : பேராசை அவரது கீழுதட்டில் இருந்தும், அன்பு அவரது மேலுதட்டில் இருந்தும், தேகத்தின் ஒளி அவரது மூக்கிலிருந்தும், மிருகத்தனமான காம ஆசைகள் அவரது ஸ்பரிச உணர்விலிருந்தும், யமராஜர் அவரது புருவங்களிலிருந்தும், மற்றும் நித்திய காலம் அவரது கண் இமைகளின் மயிரிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.43 : பஞ்ச பூதங்கள், நித்திய காலம், பலன் நோக்குக் கருமம். ஜட இயற்கையின் முக்குணங்கள், மற்றும் இக்குணங்களால் செய்யப்பட்ட பலவகைப்பட்ட பொருட்களின் தொகுதி ஆகிய அனைத்தும் யோக மாயையினால் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கற்றோர் கூறுகின்றனர். ஆகவே இந்த ஜட உலகைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும். ஆனால் நன்கு கற்றறிந்தவர்கள் இந்த ஜடஉலகை ஏற்க மறுத்துள்ளனர். எனவே அனைத்தையும் ஆள்பவரான பரமபுருஷ பகவான் எங்களிடம் திருப்தி அடைவாராக.
பதம் 8.5.44 : முழுமுதற்க் கடவுள் முற்றிலும் அமைதியானவரும், தீவிர முயற்சியற்றவரும், தமது சுய சாதனைகளில் பூரண திருப்தி கொண்டவருமாவார். தமது புலன்களின் வாயிலாக ஜட உலகச் செயல்களில் அவர் பற்றுக் கொண்டவர் அல்லர். உண்மையில், இந்த ஜட உலகில் பற்றில்லாத காற்றைப் போல் இருந்து கொண்டு அவர் தமது திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.45 : பரமபுருஷ பகவானே, நாங்கள் உம்மிடம் சரணாகதி அடைந்துள்ளோம். இருப்பினும் உம்மைக் காண நாங்கள் ஆசைப்படுகிறோம். தயவுசெய்து உமது சுய உருவையும், புன்னகை பூத்த தாமரை முகத்தையும் எங்களுடைய கண்களுக்குக் காட்டியருளி, அவற்றை எங்களது பிற புலன்களால் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டுகிறோம்.
பதம் 8.5.46 : எம்பெருமானே, முழுமுதற் கடவுளே, நீர் தன்னிச்சையாக பல்வேறு அவதாரங்களில் யுகந்தோறும் தோன்றுகிறீர். மேலும், எங்களுக்குச் சாத்தியமில்லாத அசாதாரணமான செயல்களை இயற்றி, அற்புதமாக செயற்படுகின்றீர்.
பதம் 8.5.47 : கருமிகள் தங்கள் புலன் நுகர்வுக்குரிய செல்வத்தைத் திரட்டுவதிலேயே எப்பொழும் கவலை கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் கடுமையாக உழைத்தாலும் பலன்கள் திருப்தி அளிப்பவையாக இல்லை. உண்மையில், சிலசமயங்களில் அவர்களுடைய வேலை ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கிறது. ஆனால் பகவானின் தொண்டிற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பக்தர்கள் கடினமாக உழைக்காமலேயே கணிசமான பலன்களை அடைகின்றனர். இப்பலன்கள் பக்தர்களின் எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிடுகின்றன.
பதம் 8.5.48 : முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல்களைச் சிறிய அளவில் செய்திருந்தாலும், அவை ஒருபோதும் வீணாவதே இல்லை. முழுமுதற் கடவுள் பரம பிதாவாக இருப்பதால், அவர் இயல்பாகவே மிகவும் பிரியமானவராகவும், ஜீவராசிகளின் நன்மைக்காக எப்பொழுதும் செயற்படத் தயாராகவும் இருக்கிறார்.
பதம் 8.5.49 : ஒரு மரத்தின் வேருக்கு ஒருவர் நீரூற்றும்போது, அம்மரத்தின் அடிமரமும் இலைகளும் தானாகவே திருப்தியடைகின்றன. அதைப் போலவே, பகவான் அனைவரிலும் பரமாத்மாவாக இருப்பதால், ஒருவர் பகவான் விஷ்ணுவின் பக்தராகும்போது, அனைவரும் சேவிக்கப்படுகின்றனர்.
பதம் 8.5.50 : எம்பெருமானே, நீர் நித்தியமானவரும், கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவருமாவீர். உமக்கு எல்லா வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறோம். உமது செயல்களில் நீர் கற்பனைக்கு எட்டாதவராவீர். இயற்கையின் முக்குணங்களுக்கும் நீரே எஜமானராவீர். மேலும் எல்லா பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டவராக இருப்பதால் நீர் ஜடக்களங்கத்திலிருந்து விடுபட்டவராவீர், இயற்கையின் முக்குணங்களை ஆள்பவரும் நீரே. ஆனால் தற்போது நீர் நற்குணத்திற்கு (ஸத்வ) ஆதரவாக இருக்கின்றீர். எங்களது பணிவான வணக்கங்களை உமக்கு சமர்ப்பிப்போமாக.