அத்தியாயம் – 4
கஜேந்திரன் ஆன்மீக உலகிற்கு
திரும்பிச் செல்லுதல்
பதம் 8.4.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: யானைகளின் அரசனான கஜேந்திரனை பகவான் விடுவித்தபோது, பிரம்மா மற்றும் சிவன் முதலான தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும், முழுமுதற் கடவுளின் இச்செயலைத் துதித்து, பகவான் மீதும், கஜேந்திரன் மீதும் மலர்களைப் பொழிந்தனர்.
பதம் 8.4.2 : சுவர்க்க லோகங்களில் மத்தளங்கள் அடிக்கப்பட்டன. கந்தர்வ லோகவாசிகள் ஆடிப்பாடத் துவங்கினர். அதே சமயத்தில் பெரும் முனிவர்களும், சாரண மற்றும் சித்த லோகவாசிகளும், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்தனர்.
பதங்கள் 8.4.3 – 8.4.4 : கந்தர்வர்களில் சிறந்தவரான ஹூஹூ எனப்படும் அரசர், தேவல முனிவரால் சபிக்கப்பட்டு, ஒரு முதலையாக மாறினார். இப்பொழுது முழுமுதற் கடவுளால் விடுவிக்கப்பட்டு, மிகவும் அழகிய ஒரு கந்தர்வரின் ரூபத்தை அவர் ஏற்றார். யாருடைய கருணையால் இது நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்ததும், உடனே அவர் சிரம் தாழ்த்தி தமது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்ததுடன், உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவரும், நித்திய புருஷர்களில் பரமனுமாகிய, பகவானுக்குச் சற்றே பொருத்தமான ஸ்தோத்திரங்களால் அவரை போற்றத் துவங்கினார்.
பதம் 8.4.5 : முழுமுதற் கடவுளின் அகாரணமான கருணையால் அனுக்கிரகிக்கப்பட்ட ஹூஹூ ராஜன், தனது சுயரூபத்தை மீண்டும் பெற்றதும், பகவானை வலம்வந்து அவரது வணக்கத்தைச் செலுத்தினார். பிறகு, பிரம்மா முதலான எல்லா தேவர்களுக்கும் முன்னிலையில், அவர் கந்தர்வ லோகத்திற்குத் திரும்பினார். எல்லாப் பாவ விளைவுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பதம் 8.4.6 : யானைகளின் அரசனான கஜேந்திரன் முழுமுதற் கடவுளின் கரங்களால் நேரடியாக தொடப்பட்டதால், அது உடனே பெளதிக அறியாமை மற்றும் பந்தம் ஆகிய அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது. இவ்வாறாக அது ஸாரூப்ய-முக்தியை அடையப்பெற்றது. இந்நிலையில் அது மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, நான்கு கரங்களுடன் கூடிய, பகவானுடையதைப் போன்ற அதே தேக அம்சங்களைப் பெற்றது.
பதம் 8.4.7 : இந்த கஜேந்திரன் பூர்வீகத்தில் ஒரு வைஷ்ணவராகவும், பாண்டிய நாட்டு அரசராகவும் இருந்தது. இந்நாடு திராவிட தேசத்தில் (தென்னிந்தியா) உள்ளது. அதன் பூர்வீக வாழ்வில், இந்ரத்யும்ன மகாராஜன் என்று அது அழைக்கப்பட்டது.
பதம் 8.4.8 : இந்த்ரத்யும்ன மகாராஜன் குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்று, மலய மலைகளுக்குச் சென்றார். அங்கு ஒரு சிறிய குடிசையை தமது ஆசிரமமாகக் கொண்டிருந்தார். அவர் தமது தலையில் ஜடா முடி தரித்தவராய், எப்பொழுதும் தவத்தில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை அவர் மெளன விரதத்தை மேற்கொண்டிருக்கும்பொழுது, அவர் பகவானின் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட்டு, பகவத் பிரேமையின் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார்.
பதம் 8.4.9 : இந்ரத்யும்ன மகாராஜன் முழுமுதற் கடவுளின் வழிபாட்டில் ஈடுபட்டு, பரவசமான தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அகஸ்திய மகாமுனிவர் தமது சீடர்களால் சூழப்பட்டவராய் அங்கு வந்து சேர்ந்தார். இந்ரத்யும்ன மகாராஜன், மரியாதையுடன் தம்மை வரவேற்கும் ஆசாரத்தைப் பின்பற்றாமல், தனிமையான ஓரிடத்தில் மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்ட முனிவர் கடுங்கோபமடைந்தார்.
பதம் 8.4.10 : அகஸ்திய முனிவர் பிறகு அரசனுக்கெதிராக பின்வரும் சாபத்தைக் கொடுத்தார்: இந்த இந்ரத்யும்ன மகாராஜன் சிறிதும் மரியாதையற்றவன். தாழ்ந்தவனும், கல்வியறிவு இல்லாதவனுமான இவன் ஒரு பிராமணரை அவமதித்துவிட்டான். ஆகவே இவன் இருளடர்ந்த பிரதேசத்தினுள் நுழைந்து, பேச முடியாத, மந்தபுத்தி கொண்ட ஒரு யானையின் உடலைப் பெறுவானாக.
பதங்கள் 8.4.11 – 8.4.12 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எனதருமை ராஜனே, இவ்வாறாக அகஸ்திய முனிவர் இந்ரத்யும்ன மகாராஜனை சபித்தபின், அவர் தமது சீடர்களுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றார். ராஜன் ஒரு பக்தராக இருந்ததனால், அகஸ்திய முனிவரின் சாபத்தை அவர் மனப்பூர்வமாக வரவேற்றார். ஏனெனில், அது முழுமுதற் கடவுளின் விருப்பமாகும். ஆகவே, அவரது அடுத்த பிறவியில் யானையின் ஒருடலை அவர் பெற்றாலும், பக்தித் தொண்டின் காரணத்தால், பகவானை வழிபடும் முறையையும், அவரைப் பிரார்த்திக்கும் முறையையும் அவர் நினைவில் வைத்திருந்தார்.
பதம் 8.4.13 : முதலையின் பிடியிலிருந்தும், முதலைக்கு ஒப்பான பெளதிக வாழ்விலிருந்தும் யானைகளின் அரசனை விடுவித்தபின், பகவான் அதற்கு ஸாரூப்ய-முக்தியை அளித்தார். கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர், பகவானின் அற்புதமான உன்னதச் செயல்களை போற்றித் துதித்தனர். அவர்களின் முன்னிலையில், தமது கருட வாகனத்தின் மேல் அமர்ந்தவாறு, பகவான், கஜேந்திரனை உடன் அழைத்துக் கொண்டு, அதியற்புதம் வாய்ந்ததான தமது வசிப்பிடத்திற்கு திரும்பிச் சென்றார்.
பதம் 8.4.14 : எனது அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, யானைகளின் அரசனை கிருஷ்ணர் காப்பாற்றியபோது அவரால் வெளிப்படுத்தப்பட்ட அற்புத சக்தியை இப்போது நான் விளக்கினேன். குரு வம்சத்தில் சிறந்தவரே, இக்கதையைக் கேட்பவர்கள் உயர்ந்த கிரக அமைப்புக்களுக்கு உயர்த்தப்படும் தகுதியைப் பெறுவர். இக்கதையைக் கேட்பதால் மட்டுமே, பக்தர்களெனும் நற்பெயரை அவர்கள் பெறுவதுடன், கலியுகத்தின் கெடுதல்களால் பாதிப்படையாமலும், கெட்ட கனவுகளைக் காணாமலும் இருப்பர்.
பதம் 8.4.15 : ஆகவே, காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பிறகு, தங்களது சொந்த நன்மையை விரும்புகின்றவர்கள், குறிப்பாக பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் முக்கியமாக பிராமண வைஷ்ணவர்கள் ஆகியோர் இக்கதையை வழிபிறழாமல் உள்ளபடி படிக்க வேண்டும். இதனால் கெட்ட கனவுகளின் தொல்லைகளை நிஷ்பலமாக்கி விட முடியும்.
பதம் 8.4.16 : குரு வம்சத்தில் சிறந்தவரே, அனைவருக்கும் பரமாத்மாவாக இருக்கும் பரமபுருஷ பகவான் இவ்வாறு திருப்தியடைந்து, அங்குள்ள அனைவரின் முன்னிலையிலும் கஜேந்திரனுக்குப் பின்வருமாறு ஆசி வழங்கினார்.
பதங்கள் 8.4.17 – 8.4.24 : பரமபுருஷ பகவான் கூறினார்: இரவு முடிவுறும் நேரமாகிய அதிகாலையில் துயிலெழுந்து, எனது உருவம்; உனது உருவம்; இந்த ஏரி; இந்த மலை; குகைகள்; தோட்டங்கள்; பிரம்புச் செடிகள்; மூங்கில் செடிகள்; சுவர்க்கலோக மரங்கள் ஆகியவற்றின் மீதும், எனது, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோருடைய வசிப்பிடங்களின் மீதும், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு ஆகியவற்றாலான திரிகூட மலையின் மூன்று சிகரங்களின் மீதும், என்னுடைய மிகவும் பிரியமான வசிப்பிடம் (பாற்கடல்); ஆன்மீக கதிர்களுடன் எப்பொழுதும் பிரகாசமாக ஜொலிக்கும் ஸ்வேதத்வீபம் எனப்படும் வெள்ளை தீவு; எனது ஸ்ரீவத்ஸ குறி; கெளஸ்துப மணி; எனது வைஜயந்தி மாலை; கௌமோதகீ எனப்படும் எனது கதை; எனது சுதர்சன சக்கரம் மற்றும் பாஞ்சஜன்யம் எனும் சங்கு; பறவைகளின் அரசனான எனது கருட வாகனம்; எனது படுக்கையான சேஷ நாகம்; எனது சக்தியின் விரிவாகிய ஸ்ரீதேவி; பிரம்ம தேவர்; நாரத முனி; சிவபெருமான்; பிரகலாதர்; மச்சம், கூர்மம் மற்றும் வராஹம் முதலான எனது அவதாரங்கள்; எல்லையற்றவையும், கேட்பவர்களுக்கு தெய்வ பக்தியையும் ஏற்படுத்துபவையுமான எனது மங்களகரமான செயல்கள்; சூரியன்; சந்திரன்; அக்னி; ஒம்கார மந்திரம்; பரம சத்தியம்; மொத்த ஜட சக்தி; பசுக்கள் மற்றும் பிராமணர்கள்; பக்தித் தொண்டு; தட்ச ராஜனின் புதல்விகளாக, சோம மற்றும் கஸ்யபரின் மனைவிகள்; கங்கை, சரஸ்வதி, நந்தா மற்றும் யமுனை (காலிந்தீ) ஆகிய நதிகள்; ஐராவத யானை; துருவ மகாராஜன்; ஏழு ரிஷிகள்; மற்றும் தெய்வ பக்தியுள்ள மனிதர்கள் ஆகிய இவையனைத்தின் மீதும் மிகுந்த கவனத்துடன் மனதை தியானத்தில் நிறுத்துபவர்கள் எல்லாப் பாவவிளைவுகளிலிருந்தும் விடுபட்டவர்களாவர்.
பதம் 8.4.25 : எனக்குப் பிரியமான பக்தனே, படுக்கையிலிருந்து அதிகாலையில் துயிலெழுந்து, நீ செய்த பிரார்த்தனைகளை எனக்குச் செய்பவனுக்கு, மரணத்தின் போது, ஆன்மீக உலகில் ஒரு நித்தியமான வசிப்பிடத்தை நான் அளிக்கிறேன்.
பதம் 8.4.26 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இந்த உபதேசத்தை அளித்தபிறகு, ரிஷிகேசர் எனப்படுபவரான பகவான், அவரது பாஞ்சஜன்ய சங்கை முழங்கி பிரம்ம தேவர் முதலான எல்லா தேவர்களையும் அவர் மகிழ்வித்தார். பிறகு அவர் தமது கருட வாகனத்தின் மேல் அமர்ந்தார்.