அத்தியாயம் – 14
சிறப்புடைய இல்லற வாழ்வு
பதம் 7.14.1 : யுதிஷ்டிர மகாராஜன் நாரத முனிவரிடம் வினவினார்: பிரபுவே, சிறந்த முனிவரே, வாழ்வின் இலட்சியத்தைப் பற்றி அறியாமல் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், வேத உபதேசங்களுக்கேற்ப சுலபமாக முக்தியடைவது எவ்வாறு என்பதை விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 7.14.2 : நாரத முனி பதில் கூறினார்: அரசே, குடும்பஸ்தர்களாக வீட்டில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிப்பதற்குச் செயற்பட வேண்டியுள்ளது. தங்களுடைய செயலின் பலங்களை தாங்களாவே அனுபவிக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, அப்பலன்களை அவர்கள் வாசுதேவரான கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இப்பிறவியில் வாசுதேவரை திருப்திப்படுத்துவது எப்படி என்பதை பகவானுடைய சிறந்த பக்தர்களின் சகவாசத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
பதங்கள் 7.14.3 – 7.14.4 : ஒரு கிருஹஸ்தன் திரும்பத் திரும்ப சாதுக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஸ்ரீமத் பாகவத்திலும், மற்ற புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள பரமபுருஷரின் மற்றும் அவரது அவதாரங்களின் அமிர்தம் போன்ற செயல்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் கேட்க வேண்டும். இவ்வாறாக, கனவிலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப் போல் ஒருவன் தன் மனைவி மக்களிடமுள்ள பாசத்தைப் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
பதம் 7.14.5 : உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்குத் தேவையான வாழ்க்கைத் தேவையைச் சம்பாதிப்பதற்காக வேலை செய்யும் பொழுது, உண்மையில் கற்றறிந்த ஒருவன், வெளிப்படையாக மிகவும் பற்றுக் கொண்டவனாகக் காணப்பட்ட போதிலும், அவன் குடும்ப விவகாரங்களில் பற்றற்றவனாக மனித சமுதாயத்தில் வாழ வேண்டும்.
பதம் 7.14.6 : மனித சமுதாயத்திலுள்ள அறிவாளி ஒருவன், தன் சொந்த செயல்முறைகளை மிகவும் எளிமையானதாகச் செய்து கொள்ள வேண்டும். அவனது நண்பர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து ஏதேனும் புத்திமதிகள் வருமானால், “ஆம், அது சரிதான்” என்று வெளிப்படையாக அவன் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எதில் வாழ்வின் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாதோ, அத்தகைய தொந்தரவான ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் உள்முகமாக அவன் உறுதி கொண்டிருக்க வேண்டும்.
பதம் 7.14.7 : பரமபுருஷரால் படைக்கப்பட்ட இயற்கையான உற்பத்திப் பொருட்களை, அனைத்து ஜீவராசிகளின் உடல்களையும் ஆத்மாக்களையும் இணைத்து வைத்திருப்பதற்காக உபயோகிக்க வேண்டும். வாழ்வின் தேவைகள் மூன்று வகைப்படும். அவை, ஆகாயத்திலிருந்து (மழையிலிருந்து) உற்பத்தி செய்யப்படுபவை, மண்ணிலிருந்து (சுரங்கங்கள், கடல்கள் அல்லது வயல்களிலிருந்து) உற்பத்தி செய்யப்படுபவை, மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை (திடீரென்று எதிர்பாராமல் அடையப்படுபவை).
பதம் 7.14.8 : உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு எவ்வளவு பிரச்சாரம் சொத்து தேவைப்படுகிறதோ அவ்வளவுக்கு மட்டுமே ஒருவன் உரிமை கொண்டாடலாம். ஆனால் அதற்கும் அதிகமாக ஒருவன் உரிமை கொண்டாடினால், அவன் ஒரு திருடன் என்று கருதப்பட வேண்டும். அவன் இயற்கைச் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவனாவான்.
பதம் 7.14.9 : ஒருவன் மான், ஒட்டகம், கழுதை, குரங்கு, எலி, பாம்பு, பறவை, ஈ போன்ற மிருகங்களைத் தன் சொந்த மகனைப் போலவே பாவிக்க வேண்டும். குழந்தைகளுக்கும், குற்றமற்ற இந்த விலங்குகளுக்கும் இடையில், உண்மையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
பதம் 7.14.10 : ஒரு பிரம்மச்சாரியாகவோ, சந்நியாசியாகவோ அல்லது வானப்பிரஸ்தனாகவோ இல்லாமல், ஒரு குடும்பஸ்தனாக இருப்பவன் கூட அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றையும் தேடுவதில் அதிகமாக பாடுபடக் கூடாது. இல்லற வாழ்வில் கூட பகவானின் அருளால், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப, குறைந்த முயற்சியுடன் கிடைப்பதைக் கொண்டு, உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதில் ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவன் உக்ர-கர்மத்தில் அதாவது கடினமான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது.
பதம் 7.14.11 : நாய்கள், இழிவடைந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாய் தின்னும் சண்டாளர்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுக்குரிய சரியான வாழ்க்கைத் தேவைகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளெல்லாம் குடும்பஸ்தர்களால் அளிக்கப்பட வேண்டும். வீட்டில் மிகவும் நெருக்கமாக தான் பற்றுக் கொண்டுள்ள தன் மனைவியைக்கூட ஒருவன் விருந்தினர்களையும், பொதுஜனங்களையும், உபசரிப்பதற்காக அர்பணித்துவிட வேண்டும்.
பதம் 7.14.12 : தன் மனைவி தனக்கே சொந்தமானவள் என்று ஒருவன் தீவிர எண்ணம் கொண்டிருப்பதால், அவளுக்காக அவன் தன் பெற்றோர்கள் மற்றும் குரு உட்பட, சிலசமயம் தன்னையோ அல்லது மற்றவர்களையோ கூட கொன்றுவிடுகிறான். ஆகவே இத்தகைய ஒரு மனைவியிடமுள்ள தன் பற்றை ஒருவனால் விட முடியுமானால், அவனால் எவராலும் வெல்ல முடியாத பரமபுருஷரையும் வென்று விட முடியும்.
பதம் 7.14.13 : நிதானித்த ஆழ்ந்த யோசனையின் மூலமாக, இறுதியில் சிறு கிருமிகளாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறிவிடப் போகும் தன் மனைவியின் உடலிடம் உள்ள கவர்ச்சியை ஒருவன் விட்டு விட வேண்டும். அற்பமான இவ்வுடலில் சிறப்பாக என்ன இருக்கிறது ஆகாயத்தைப் போல் எங்கும் பரவியிருக்கும் பரமபுருஷர் எவ்வளவு மேன்மையானவர்?
பதம் 7.14.14 : அறிவுள்ள ஒருவன் பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்பதாலோ, அல்லது ஐந்து வகையான யக்ஞங்களைச் (பஞ்ச-ஸூனா) செய்வதாலோ திருப்தியடைய வேண்டும். இத்தகைய செயல்களால் தேகப்பற்றையும், உடலிடம் கொண்டுள்ள பெயரளவேயான உரிமையையும் ஒருவனால் விட்டுவிட முடியும். இதைச் செய்யக்கூடிய ஒருவன் ஒரு மகாத்மாவின் நிலையை அடைகிறான்.
பதம் 7.14.15 : ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும். இந்த அடிப்படையில் தேவர்களையும், சாதுக்களையும், சாதாரண மனிதர்களையும், ஜீவராசிகளையும், முன்னோர்களையும், தன்னையும் ஒருவன் தனித் தனியாக வழிபட வேண்டும். இவ்விதமாக ஒவ்வொருவருடைய இதயத்திலுள்ள பரமபுருஷரை ஒருவனால் வழிபட முடியும்.
பதம் 7.14.16 : ஒருவன் செல்வ வளத்தையும், அறிவு வளத்தையும் முழுமையாகப் பெற்று, அவற்றைக் கொண்டு யக்ஞம் செய்யக்கூடிய அல்லது பரமபுருஷரை திருப்திப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கும்பொழுது, அவன் சாஸ்திர விதிகளுக்கேற்ப யாகங்களைச் செய்து அக்னியில் நைவேத்தியம் செய்ய வேண்டும். இவ்விதமாக பரமபுருஷரை அவன் வழிபட வேண்டும்.
பதம் 7.14.17 : பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரே யாக நிவேதனங்களை அனுபவிப்பவர். அரசே, வேள்வித் தீயில் செய்யப்படும் நிவேதனங்களை பகவான் உண்கிறார் என்ற போதிலும், தானியங்களும், நெய்யும் கொண்டு தயாரிக்கப்பட்ட நல்ல உணவு தகுதியுள்ள பிராமணர்களுடைய வாய்களின் மூலமாக அவருக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது அவர் அதிக திருப்தியடைகிறார்.
பதம் 7.14.18 : ஆகவே, அரசே, முதலில் பிரசாதத்தை பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் அர்ப்பணித்து அவர்களை திருப்திப்படுத்திய பிறகு, அதை மற்ற ஜீவராசிகளுக்கு உமது திறமைக்கேற்ப நீர் விநியோகிக்க வேண்டும். இவ்விதமாக உம்மால் அனைத்து ஜீவராசிகளையும், அதாவது எல்லா ஜீவராசிகளிலும் உறையும் பரம ஜீவராசியை வழிபட முடியும்.
பதம் 7.14.19 : போதுமான செல்வம் படைத்துள்ள பிராமணன் ஒருவன் பாத்ர மாதத்தின் பிற்பகுதியான கிருஷ்ணபட்சத்தில் முன்னோர்களுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும். அவ்வாறே, ஆஸ்வின மாதத்தில் மஹாலயா சடங்குகளின் போது, முன்னோர்களின் உறவினர்களுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும்.
பதங்கள் 7.14.20 – 7.14.23 : (சூரியன் வடக்குத் திசையில் நகரத் துவங்கும் நாளான) மகர-சங்கராந்தியன்று அல்லது (சூரியன் தெற்குத்திசையில் நகரத் துவங்கும் நாளான) கர்கட-சங்கராந்தியன்று ஒருவன் சிரார்த்த சடங்கைச் செய்ய வேண்டும். ஒருவன் மேஷ-சங்கராந்தி தினத்தன்றும், துலா-சங்கராந்தி தினத்தன்றும், வியதீபாத-யோகத்திலும், மூன்று திதிகள் இணையும் நாளிலும், சூரிய அல்லது சந்திர கிரணத்தின் போதும், துவாதசியான பன்னிரண்டாவது நாளிலும், சிரவண-நட்சத்திரத்திலும் கூட இச்சடங்கைச் செய்ய வேண்டும். அக்ஷய-திருதீயை நாளன்றும், கார்த்திகை மாதத்து சுக்ல-பட்சத்தின் நவமி திதியிலும், பனிக்காலம் மற்றும் குளிர்க் காலத்தின் நான்கு அஷ்டமிகளிலும், மாகமாதத்து சுக்ல பட்சத்தின் சப்தமியிலும், பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் கூடிய வேளையிலும், சந்திரன் பூரணமாக இருக்கும் பெளர்ணமியிலும், அல்லது பூரணமாக இல்லாத பௌர்ணமியிலும், எதிலிருந்து குறிப்பிட்ட மாதங்களின் பெயர்கள் பெறப்படுகின்றனவோ அந்த நட்சத்திரங்களுடன் இந்த நாட்கள் சேரும் பொழுதும் இச்சடங்கை ஒருவன் செய்ய வேண்டும். மேலும் அனுராதா, சிரவண, உத்தர-ஃபல்குனி, உத்தராஷாட அல்லது உத்தர-பாத்ரபதா ஆகிய ஏதேனும் ஒரு நட்சத்திரத்துடன் துவாதசி சேர்ந்திருக்கும் பொழுதும் சிரார்த்தச் சடங்கை ஒருவன் செய்ய வேண்டும். மேலும் உத்தர ஃபல்குனி, உத்தராஷாட அல்லது உத்தரபாத் ருபத-நட்சத்திரத்துடன் கூடிய நாட்களிலும் இந்த சிரார்த்தச் சடங்கை ஒருவன் செய்ய வேண்டும்.
பதம் 7.14.24 : இவ்வெல்லாப் பருவ காலங்களும் மனித குலத்திற்கு மிகவும் மங்களகரமான காலங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய காலங்களில் ஒருவன் எல்லா மங்கள காரியங்களையும் செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல்களினால் ஒரு மனிதன் தனது குறுகிய வாழ்நாளிலேயே வெற்றியை அடைகிறான்.
பதம் 7.14.25 : ஒருவன் கங்கையிலோ, யமுனையிலோ அல்லது வேறெந்த புண்ணிய தீர்த்தத்திலோ நீராடினாலும், ஜபம் செய்தாலும், யாகம் செய்தாலும், விரதங்களை அனுஷ்டித்தாலும், அல்லது பரமபுருஷர், பிராமணர்கள், முன்னோர்கள், தேவர்கள் மற்றும் பொதுவாக ஜீவராசிகள் ஆகியோரை வழிபட்டாலும், இப்பருவ காலங்களின் மாற்றத்தின் போது அவனால் செய்யப்படும் தான தருமங்களெல்லாம் நிலையான நற்பயனை அளிக்கும்.
பதம் 7.14.26 : யுதிஷ்டிர மகாராஜனே, ஒருவன் தனக்கும், தன் மனைவிக்கும் அல்லது தன் குழந்தைகளுக்கும் விதிக்கப்பட்ட சம்ஸ்காரங்களைச் செய்ய வேண்டிய சரியான காலத்திலோ, அல்லது அந்திம கிரியைகளைச் செய்யும் போதோ அல்லது வருடாந்திர சிரார்த்த சடங்குகளைச் செய்யும் போதோ அவன் மேற்கூறிய மங்களகரமான சடங்குகளைச் செய்ய வேண்டும். இதனால் அவனது காரிய சித்தி பெருகும்.
பதங்கள் 7.14.27 – 7.14.28 : நாரதமுனி தொடர்ந்து கூறினார்: வேதக் கிரியைகளை நன்கு நிறைவேற்றக் கூடிய இடங்களை இப்பொழுது நான் விவரிக்கிறேன். எங்கு ஒரு வைஷ்ணவர் இருக்கிறாரோ, அந்த இடம் மங்களகரமான எல்லாச் செயல்களுக்கும் மிகச்சிறந்த இடமாகும். அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் கொண்ட இந்த முழுபிரபஞ்ச தோற்றத்திற்கும் பரமபுருஷரே ஆதாரம். பகவானுடைய விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடமான ஆலயம் மிகவும் புனிதமான ஓரிடமாகும். மேலும் கற்றறிந்த பிராமணர்கள் தவம், கல்வி, கருணை ஆகியவற்றைச் செய்வதன் மூலமாக வேதக் கொள்கைகளை அனுஷ்டிக்கும் இடங்கள் மிகவும் மங்களகரமானவையும், புனிதமானவையும் ஆகும்.
பதம் 7.14.29 : எங்கு பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் முறையாக பூஜிக்கப்படுகிறாரோ, அத்தகைய ஓர் ஆலயம் இருக்கும் இடம் உண்மையாகவே மங்களரகமானதாகும். மேலும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, புகழ்பெற்ற புண்ணிய நதிகள் ஓடும் இடங்களும் மங்களகரமானவையே. அங்கு செய்யப்படும் எந்த ஆன்மீக செயலும் நிச்சயமாக நல்ல பயனை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
பதங்கள் 7.14.30 – 7.14.33 : புஷ்கரம் போன்ற புனிதமான ஏரிகளும், சாதுக்கள் வாழும் குருட்சேத்திரம், கயா, பிரயாகை, புலகாசிரமம், நைமிஷாரண்யம், ஃபால்கு நதிக்கரைகள், சேதுபந்தம், பிரபாசை, துவாரகை, வாரணாசி, மதுரா, பம்பா, பிந்து-ஸரோவரம், பத்ரிகாஸ்ரமம் (நாராயணாசிரமம்), நந்தா நதி ஓடும் இடங்கள், பகவான் இராமச்சந்திரரும், அன்னை சீதையும் புகலிடம் கொண்ட சித்திரக் கூடம், மகேந்திரம் மற்றும் மலய மலைப் பிரதேசங்கள் போன்ற இவ்வெல்லா இடங்களும் மிகவும் புண்ணியமானவையாகவும், புனிதமானவையாகவும், கருதப்படுகின்றன. அவ்வாறே, ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்புபவர்கள் இந்தியாவிற்கு வெளியிலுள்ள கிருஷ்ண பக்தி இயக்க மையங்களுக்கும். ராதா-கிருஷ்ண விக்கிரகங்கள் வழிபடப்படும் ஆலயங்களுக்கும் யாத்திரை செல்ல வேண்டும். ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன். இந்த இடங்களுக்கெல்லாம் யாத்திரை சென்று சமயச் சடங்குகளை நிறைவேற்றி, மற்ற இடங்களில் அடையக்கூடிய பலன்களைவிட ஆயிரம் மடங்கு மேலான பலன்களை அடைய முடியும்.
பதம் 7.14.34 : மண்ணுலக அரசே, எவரை இப்பிரபஞ்சத்திலுள்ள அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் சார்ந்துள்ளனவோ, எவரிடம் அனைத்தையும் அர்ப்பணித்துவிட வேண்டுமோ, எவரிடமிருந்து அனைத்தும் வருகின்றனவோ, அந்த பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே உத்தமபுருஷர் என்று கற்றறிந்த மேதைகளான நிபுணர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதம் 7.14.35 : யுதிஷ்டிர மகாராஜனே, பிரம்ம தேவரின் நான்கு புத்திரர்கள் உட்பட, தேவர்களும், பல சிறந்த முனிவர்களும், ஞானிகளும், நானும் உமது ராஜசூய யாகத்தில் கலந்து கொண்டோம். ஆனால் முதலில் பூஜிக்கப்பட வேண்டியவர் யார் என்ற கேள்வி எழுந்தபொழுது, அனைவரும் பரம்புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அதற்குத் தகுதியுடையவர் என்று முடிவு செய்தனர்.
பதம் 7.14.36 : ஜீவராசிகளால் நிறைந்துள்ள பிரபஞ்சம் முழுவதும், பரமபுருஷராகிய அச்சுதரை (கிருஷ்ணரை) வேராகக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதாகும். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பதாலேயே ஒருவனால் அனைத்து ஜீவராசிகளையும் பூஜிக்க முடியும்.
பதம் 7.14.37 : மிருகம், பறவை, முனிவர், தேவர் மற்றும் மனித உடல்களைப் போன்ற பல வசிப்பிடங்களை பரமபுருஷர் படைத்துள்ளார். எண்ணற்ற இந்த தேக ரூபங்கள் அனைத்திலும் பகவான் பரமாத்மாவாக அந்தந்த ஜீவராசியுடன் வாழ்கிறார். இதனால் அவர் புருஷாவதாரம் எனப்படுகிறார்.
பதம் 7.14.38 : யுதிஷ்டிர மகாராஜனே, ஒவ்வொரு உடலிலும் உள்ள பரமாத்மா, தனிப்பட்ட ஆத்மாவின் புரிந்து கொள்ளும் சக்திக்கேற்ப அவனுக்கு அறிவைக் கொடுக்கிறார். எனவே பரமாத்மா தான் உடலுக்குள் முக்கியமானவராக விளங்குகிறார். தனிப்பட்ட ஆத்மாவின் அறிவு, தவம், விரதம் முதலியவைகளின் வளர்ச்சிக்கேற்ப பரமாத்மா தம்மை அவனுக்கு வெளிப்படுத்துகிறார்.
பதம் 7.14.39 : அரசே, திரேதாயுகத்தின் துவக்கத்தில் சிறந்த முனிவர்களும் சாதுக்களும் மக்களிடையே அபச்சாரமான நடவடிக்கைகளைப் பார்த்த பொழுது, எல்லா உபகரணங்களுடனும் கூடிய விக்கிரக வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
பதம் 7.14.40 : சிலசமயம் பக்குவமடையாத பக்தனொருவன் விக்கிரகத்தை பகவானாகவே பாவித்து, உண்மையாகவே எல்லாப் பொருட்களையும் கொண்டு பகவானை வழிபடுகிறான். ஆனால் பகவான் விஷ்ணுவின் அதிகாரப்பூர்வமான பக்தர்களிடம் அவன் பொறாமை கொண்டவனாக இருப்பதால், அவனுடைய பக்தித் தொண்டினால் பகவான் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பதம் 7.14.41 : அரசே,அனைத்து மனிதர்களிலும் தகுதிவாய்ந்த ஒரு பிராமணரை, இந்த ஜட உலகிலேயே மிகச் சிறந்தவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய ஒரு பிராமணர், தவம், வேதக்கல்வி, மனநிறைவு ஆகியவற்றைப் பயில்வதன் மூலமாக, பரமபுருஷருடைய உடலின் ஒத்த பகுதியாகவே மாறிவிடுகிறார்.
பதம் 7.14.42 : யுதிஷ்டிர மகாராஜனே, குறிப்பாக உலகம் முழுவதிலும் பகவானின் மகிமைகளைப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டுள்ள பிராமணர்கள், சிருஷ்டி முழுவதற்கும் உயிரும், ஆத்மாவுமான பரமபுருஷரால் அங்கீகரிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர். பிராமணர்கள் தங்களுடைய பிராச்சாரத்தின் மூலமாக, தங்களுடைய தாமரைப் பாதங்களின் புழுதியால் மூவுலகங்களையும் புனிதப்படுத்துகின்றனர். இவ்வாறாக அவர்கள் கிருஷ்ணராலும் பூஜிக்கத் தகுந்தவர்கள் ஆகின்றனர்.