அத்தியாயம் – 11
பரிபூரண சமுதாயம் :
நான்கு சமூகப் பிரிவுகள்
பதம் 7.11.1
ஸ்ரீ-சுக உவாச
ஸ்ருத்வேஹிதம் ஸாது ஸபா-ஸபாஜிதம்
மஹத்தமாக்ரண்ய உருக்ரமாத்மன:
யுதிஷ்டிரோ தைத்ய-பதேர் முதான்வித:
பப்ரச்ச பூயஸ் தனயம் ஸ்வயம்புவ:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ்ருத்வா—கேட்ட பிறகு; ஈஹிதம்—வர்ணனையை; ஸாது ஸபா-ஸபாஜிதம்—பிரம்மதேவர் சிவபெருமான் போன்ற சிறந்த பக்தர்களின் சபைகளில் விவாதிக்கப்படும்; மஹத்-தம-அக்ரண்ய:—மேன்மக்களுள் சிறந்தவர் (யுதிஷ்டிரர்); உருக்ரம-ஆத்மன:—எப்பொழுதும் அசாதாரணமான முறையில் செயற்படுபவரான பரமபுருஷரின் மீது எப்பொழுதும் மனதை ஈடுபடுத்தியுள்ள அவரின் (பிரகலாதரின்); யுதிஷ்டிர—யுதிஷ்டிர மகாராஜன்; தைத்ய-பதே:—அசுர வேந்தனின்; முதா அன்வித:—மகிழ்ச்சியான மனோபாவத்தில்; பப்ரச்ச—விசாரித்தார்; பூய:—மீண்டும்; தனயம்—மகனுக்கு; ஸ்வயம்புவ:—பிரம்மாவின்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பிரம்மதேவர், சிவபெருமான் முதலான சிறந்த புருஷர்களுக்கிடையில் பூஜிக்கத் தகுந்தவையும், விவாதிக்கப்படுபவையுமான பிரகலாத மகாராஜனின் செயல்களைப் பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் கேட்ட பிறகு, மேன் மக்களுக்கிடையில் மிகவும் மதித்துப் போற்றப்படும் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் மிகவும் மகிழ்ச்சியுடன் நாரத முனிவரிடம் மீண்டும் வினவினார்.
பதம் 7.11.2
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
பகவன் ஸ்ரோதும் இச்சாமி ந்ருணாம் தர்மம் ஸனாதனம்
வர்ணாஸ்ரமாசார-யுதம் யத் புமான் விந்ததே பரம்
ஸ்ரீ-யுதிஷ்டிர: உவாச—யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்; பகவான்—பிரபுவே; ஸ்ரோதும்—கேட்க; இச்சாமி—விரும்புகிறேன்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; தர்மம்—தொழிற் கடமைகளைப்பற்றி; ஸனாதானம்—(எல்லோருக்கும்) பொதுவானதும், நித்தியமானதுமான; வர்ண-ஆஸ்ரம்-ஆசார-யுதம்—நான்கு சமூகப் பிரிவுகள், நான்கு ஆன்மீகப் பிரிவுகளின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட; யத்—எதிலிருந்து; புமான்—பொதுவாக ஜனங்கள்; விந்ததே—அமைதியாக அனுபவிக்க முடியுமோ; பரம்—(எதனால் ஒருவன் பக்தித் தொண்டை அடையமுடியுமோ அந்த) மேலான அறிவை.
யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: என் பிரபுவே, எதனால் வாழ்வின் இறுதி லட்சியமாகிய பக்தித் தொண்டை ஒருவனால் அடையமுடியுமோ, அந்த சமயக் கோட்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து நான் கேட்க விரும்புகிறேன். மேலும் மனித சமுதாயத்தின் பொதுவான உத்தியோகக் கடமைகளைப் பற்றியும், வர்ணாஸ்ரம தர்மம் எனப்படும் சமூக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் நெறிமுறைகளைப் பற்றியும் நான் கேட்க விரும்புகிறேன்.
பதம் 7.11.3
பகவான் ப்ரஜாபதே ஸாக்ஷாத் ஆத்மஜ: பரமேஷ்டின:
ஸுதானாம் ஸம்மதோ ப்ரஹ்மம்ஸ் தபோ-யோக-ஸமாதிபி
பகவான்—தாங்கள்; ப்ரஜாபதே:—பிரஜாபதியின் (பிரம்மாவின்); ஸாக்ஷாத்—நேரிடையாக; ஆத்ம-ஜ:—புத்திரர்; பரமேஷ்டினா:—இப்பிரபஞ்சத்திலேயே மேலானவரின் (பிரம்மாவின்); ஸுதானாம்—புத்திரர்களிலேயே; ஸம்மத:—மிகச் சிறந்தவராக கருதப்படுகிறீர்கள்; ப்ரஹ்மன்—பிராமணர்களுள் சிறந்தவரே; தப:—தவத்தினாலும்; யோக—யோகப் பயிற்சியினாலும்; ஸமாதிபி:—மற்றும் சமாதி அல்லது தியானத்தினாலும் (எல்லா விதத்திலும் தாங்களே சிறந்தவர்).
பிராமண சிரேஷ்டரே, தாங்கள் பிரஜாபதியின் (பிரம்மதேவரின்) புதல்வராவீர். உங்களுடைய தவங்கள், அஷ்டாங்க யோகம் மற்றும் சமாதிநிலை ஆகியவற்றின் காரணத்தால் பிரம்மதேவரின் புத்திர்களிலேயே தாங்கள் மிகச் சிறந்தவராக கருதப்படுகிறீர்கள்.
பதம் 7.11.4
நாராயண-பரா விப்ரா தர்மம் குஹ்யம் பரம் விது:
கருணா: ஸாதவ: ஸாந்தாஸ் த்வத்-விதா ந ததாபரே
நாராயண-பரா:—பரமபுருஷராகிய நாராயணரிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்; விப்ரா:—பிராமணர்களுள் சிறந்தவரும்; தர்மம்—சமயக் கோட்பாட்டை: குஹ்யம்—மிகவும் இரகசியமான; பரம்—பரமான; விது:—அறிவீர்; கருணா:—(பக்தர்கள் என்பதால்) அவர்கள் கருணைமிக்கவர்கள்; ஸாதவ:—மேலான நடத்தையுடைய; சாந்தா:—அமைதியானவர்கள்; த்வத்-விதா:—தங்களைப் போலவே; ந—இல்லை; ததா—அவ்வாறு; அபரே—மற்றவர்கள் (பக்தித் தொண்டைத்தவிர்த்து பிறமுறைகளைப் பின்பற்றுபவர்கள்).
அமைதியும், கருணையும், நிறைந்த வாழ்வில் தங்களைவிட மேலானவர் ஒருவருமில்லை. பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதையும், மிகச் சிறந்த பிராமணராவது எப்படி என்பதையும் நன்கறிந்தவர் தங்களைவிட வேறொவரும் இல்லை.
பதம் 7.11.5
ஸ்ரீ-நாரத உவாச
நத்வா பகவதே ‘ஜாய லோகானாம் தர்ம-ஸேதவே
வக்ஷ்யே ஸனாதனம் தர்மம் நாராயணே-முகாச் ச்ருதம்
ஸ்ரீ-நாரத: உவாச—ஸ்ரீ நாரதமுனி கூறினார்; நத்வா—எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்; பகவதே—பரமபுருஷருக்கு; அஜாய—நித்தியமானவரும், பிறப்பற்றவருமான; லோகானாம்—பிரபஞ்சம் முழுவதற்கும்; தர்ம-ஸேதவே—சமயக் கோட்பாடுகளைக் காப்பவரும்; வக்ஷ்யே—நான் விவரிக்கிறேன்; ஸனாதனம்—நித்தியமான; தர்மம்—சமய முறையை; நாராயண-முகாத்—நாராயணரின் வாயிலிருந்து; ஸ்ருதம்—நான் கேட்டதை.
ஸ்ரீ நாரத முனி கூறினார்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய சமயக்கோட்பாடுகளின் காவலரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது முதற்கண் வணக்கத்தைச் சமர்ப்பித்து, நாராயணரின் வாயிலிருந்து நான் கேட்ட நித்திய சமயமுறையைப் பற்றிய கோட்பாடுகளை நான் விவரிக்கிறேன்.
பதம் 7.11.6
யோ ‘வதீர்யாத்மனோ ‘ம்சேன தாக்ஷாயண்யாம் து தர்மத:
லோகானாம் ஸ்வஸ்தயே ‘த்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே
ய:—எவர் (பகவான் நாராயணர்); அவதீர்ய—அவதரித்து; ஆத்மன:—தன்னுடைய; அம்சேன—அம்சமாக (நாராக); தாக்ஷாயண்யாம்—தட்ச மகாராஜனின் புதல்வியான தாட்சாயணியின் கர்பத்தில்; து—உண்மையில்; தர்மத:—தர்ம மகாராஜனிடமிருந்து; லோகானாம்—அனைத்து மக்களின்; ஸ்வஸ்தயே—நன்மைக்காக; அத்யாஸ்தே—நிறைவேற்றுகிறார்; தப:—தவத்தை; பத்ரிகாஸ்ரமே—பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில்.
பகவான் நாராயணர் அவரது அம்சமான நாரதருடன் தட்ச மகாராஜனின் மகளான மூர்த்தியின் மூலமாக இவ்வுலகில் தோன்றினார். அவர் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக தர்ம மகாராஜனால் பெற்றெடுக்கப்பட்டார். அவர் இன்றும் பக்தரிகாஸ்ரமம் என்ற இடத்திற்கு அருகில் கடுந்தவங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளார்.
பதம் 7.11.7
தர்ம-மூலம் ஹி பகவான் ஸர்வ-வேதமயோ ஹரி:
ஸ்ம்ருதம் சதத்-விதாம் ராஜன் யேன சாத்மா ப்ரஸீததி
தர்ம-மூலம்—சமயக் கோட்பாடுகளின் மூலமும்; ஹி—உண்மையில்; பகவான்—பரமபுருஷர்; ஸர்வ-வேத-மய:—சகல வேத ஞானத்திற்கும் சாராம்சமாவார்; ஹரி:—பரம ஜீவன்; ஸ்ம்ருதம் ச—சாஸ்திரங்களையும்; தத்-விதாம்—பரமபுருஷரையும் அறிந்தவர்களின்; ராஜன்—அரசே; யேன—எதனால் (சமயக் கோட்பாட்டினால்); ச—கூட; ஆத்மா—ஆத்மா, மனம், உடல் முதலான அனைத்தும்; ப்ரஸீததி—பூரண திருப்தி அடைகின்றன.
பரம ஜீவனாகிய பரமபுருஷர், சகல வேத ஞானத்திற்கும் சாராம்சமும், சகல சமயக் கோட்பாடுகளுக்கும் மூலமும், சிறந்த வேத வல்லுனர்களின் ஞாபக சக்தியுமாவார். யுதிஷ்டிர மகாராஜனே, இச்சமயக் கோட்பாடே உண்மையானதென அறியப்பட வேண்டும். இச்சமயக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒருவனது மனம். ஆத்மா, உடல் உட்பட்ட அனைத்தும் திருப்தி அடைகின்றன.
பதங்கள் 7.11.8 – 7.11.12
ஸத்யம் தயா தப: சௌசம் திதிக்ஷேக்ஷா சமோ தம:
அஹிம்ஸா ப்ரஹ்மசர்யம் ச த்யாக: ஸ்வாத்யாய ஆர்ஜவம்
ஸந்தோஷ: ஸமத்ருக்-ஸேவா க்ராம்யேஹோபரம: சனை:
ந்ருணாம் விபர்யயேஹேக்ஷா: மௌனம் ஆத்ம-விமர்சனம்
அன்னாத்யாதே: ஸம்விபாகோ பூதேப்யஸ் ச யதார்ஹத:
தேஷு ஆத்ம-தேவதா-புத்தி: ஸுதராம் ந்ருஸு பாண்டவ
ஸ்ரவணம் கீர்த்தனம் சாஸ்ய ஸ்மரணம் மஹதாம் கதே:
ஸேவேஜ்யாவனதிர் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம-ஸமர்ப்பணம்
ந்ருணாம் அயம் பரோ தர்ம: ஸர்வேஷாம் ஸ்முதாஹ்ருத:
த்ரிம்சல்-லக்ஷணவான் ராஜன் ஸர்வாத்மா யேன துஷ்யதி
ஸத்யம்—குற்றம் குறையின்றி உண்மையே பேசுதல்; தயா—துன்புறுவோரிடம் இரக்கம் காட்டுதல்; தப:—(குறைந்தது மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் விரதம் அனுஷ்டித்தல் போன்ற) தவங்கள்; சௌசம்—தூய்மை (தினமும் காலையிலும், மாலையிலும் இருமுறையாவது குளித்தல் மற்றும் கடவுளின் புனித நாமத்தை ஜபித்தல், நினைத்தல்); திதிக்ஷா—பொறுமை (பருவகால மாற்றங்களால் அல்லது சங்கடமான சூழ்நிலைகளால் கலங்காதிருத்தல்); ஈக்ஷா—நல்லதையும், கெட்டதையும் பகுத்தறிதல்; சம:—மன அடக்கம்; தம:—புலனடக்கம்; அஹிம்ஸா—அகிம்சை (எந்த ஜீவராசியையும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தாதிருத்தல்); ப்ரஹ்மசர்யம்—இச்சைகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது விந்துவை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல் (தன் மனைவியைத் தவிர பிற பெண்களுடன் உடலுறவு கொள்ளாதிருத்தல், மாதப்போக்கு முதலான தடை விதிக்கப்பட்ட காலங்களில் சொந்த மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருத்தல்); ச—மேலும்; த்யாக—வருவாயில் குறைந்தது ஐம்பது சதவிகிதத்தை தானம் செய்தல்; ஸ்வாத்யாய:—பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம், மகாபாரதம் போன்ற உன்னத இலக்கியங்களைப் படித்தல் (அல்லது, வேதப்பண்பாட்டில் இல்லாதவர்கள் பைபிளையோ, குர்ரானையோ படித்தல்); ஆர்ஜவம்—எளிமை (கபடமின்றி இருத்தல்); ஸந்தோஷ:—கடும் முயற்சியின்றி கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைந்து; ஸமத்ருக்-ஸேவா—ஜீவராசிகளுக்கிடையில் வேறுபாடு பாராட்டாமல் அனைவரையும் ஆன்மீக ஆத்மாக்களாகப் பார்க்கும் (பண்டிதா: ஸம-தர்சின:) துறவிகளுக்குச் சேவை செய்தல்; க்ராம்யஈஹா-உபரம:—பெயரளவேயான தயாளகுணச் செயல்களில் பங்கேற்காமல்; சனை:—படிப்படியாக; ந்ருணாம்—மனித சமுதாயத்தில்; விபர்யய-ஈஹா—அனாவசியமான செயல்களை: ஈக்ஷா—விவாதித்தல்; மௌனம்—ஆழ்ந்த சிந்தனையுடன் மௌனமாக இருத்தல்; ஆத்ம—தன்னில்; விமர்சனம்—ஒருவன் உடலா, ஆத்மாவா என்று) ஆய்வு செய்தல்; அன்ன-ஆத்ய-ஆதே:—உணவு, பானம் முதலியவைகளின்; ஸம்விபாக—சமமாகப் பகிர்ந்தளித்தல்: பூதேப்ய:—வெவ்வேறு ஜீவராசிகளும்; ச—மேலும்; யதா-அர்ஹத:—ஏற்றவாறு; தேஷு—எல்லா ஜீவராசிகளுக்கும்; ஆத்ம-தேவதா-புத்தி:—தானாக அல்லது தேவர்களாக ஏற்று; ஸுதராம்—முன்னோடியாக; ந்ருஷு—எல்லா மனிதர்களுக்கிடையிலும்; பாண்டவ—யுதிஷ்டிர மகாராஜனே; ஸ்ரவணம்—கேட்டல்; கீர்த்தனம்—பாடுதல்; ச—மேலும்; அஸ்ய—அவருடைய (பகவானுடைய); ஸ்மரணம்—(வார்த்தைகளையும், செயல்களையும்) நினைத்தல்; மஹதாம்—சிறந்த சாதுக்களின்; கதே:—புகலிடமாகிய; ஸேவா—சேவை; இஜ்யா—வழிபாடு; அவனதி:—வணக்கம் செய்தல்; தாஸ்யம்—சேவையை ஏற்றுக்கொள்ளுதல்; ஸக்யம்—நண்பராகக் கருதுதல்; ஆத்ம-ஸமர்ப்பணம்—தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளல்; ந்ருணாம்—அனைத்து மனிதர்களின்; அயம்—இந்த; பர:—மேலானவரான; தர்ம:—சமயக் கோட்பாடுகள்; ஸர்வேஷாம்—எல்லோருடைய; ஸமுதாஹ்ருத:—முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன; த்ரிம்சத்-லக்ஷண-வான்—இந்த முப்பது குணாதிசயங்களையும் பெற்றுள்ள; ராஜன்—அரசே; ஸர்வ-ஆத்மா—அனைவருக்கும் பரமாத்மாவாகிய பரமபுருஷர்; யேன—எவற்றினால்; துஷ்யதி—திருப்தியடைவாரோ.
எல்லா மனிதர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய பொதுவான கோட்பாடுகள் சில உள்ளன: அவை, உண்மையே பேசுதல், கருணை, தவம் (குறிப்பிட்ட நாட்களில் விரதம் அனுஷ்டித்தல்), ஒருநாளுக்கு இருமுறை குளிப்பது, பொறுமை, சரியையும், தவறையும் பகுத்தறிவது, மனவடக்கம், புலனடக்கம், அகிம்சை, பிரம்மச்சரியம், தானம், சாஸ்திரப்படிப்பு, எளிமை, திருப்தி, சாதுக்களுக்குச் சேவை செய்தல், படிப்படியாக அனாவசியமான ஈடுபாடுகளிலிருந்து விலகுதல், மனித சமுதாயத்தினுடைய அனாவசியமான செயல்களின் பயனின்மையை அறிதல், தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து மெளனமாகவும் ஆழ்ந்த கவனத்துடனும் இருத்தல், தான் உடலா அல்லது ஆத்மாவா என்று சிந்தித்தல், (மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய) அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், ஒவ்வொரு ஆத்மாவையும் (குறிப்பாக மனித ரூபத்திலுள்ள ஆத்மாக்களை) பரமபுருஷரின் பின்னப்பகுதிகளாகக் காணுதல், (சாதுக்களுக்குப் புகலிடமான பரமபுருஷரால் அளிக்கப்பட்டுள்ள செயல்களைப் பற்றியும், உபதேசங்களைப் பற்றியும் கேட்டல், இச்செயல்களையும் உபதேசங்களையும் எப்பொழுதும் நினைவில் வைத்திருத்தல், சேவை செய்ய முயலுதல், வழிபடுதல், வணக்கம் செலுத்துதல், ஒரு சேவகனாகப் பணிவிடை செய்தல், ஒரு நண்பனாகுதல், மற்றும் தன்னை அர்ப்பணித்தல், யுதிஷ்டிர மகாராஜனே, இந்த முப்பது தகுதி முறைகளும் மனித உருவிலுள்ள ஒருவனால் அடையப்பட வேண்டியவையாகும். இத்தகுதி முறைகளை அடைவதாலேயே ஒருவனால் பரமபுருஷரை திருப்திப்படுத்தி விட முடியும்.
பதம் 7.11.13
ஸம்ஸ்கார யத்ராவிச்சின்னா: ஸ த்விஜோ ‘ஜோ ஜகாத யம்
இஜ்யாத்யயன-தானானி விஹிதானி த்விஜன்மனாம்
ஜன்ம-கர்மாவதாதானாம் க்ரியாஸ் சாஸ்ரம-சோதிதா:
ஸம்ஸ்காரா:—தூய்மையடையும் சடங்குகள்; யத்ர—எதில்; அவிச்சின்னா:—இடையூறு இல்லாமல்; ஸ:—இத்தகைய ஒருவன்; த்வி-ஜ:—இருபிறப்பு எய்தியவனாக; அஜ:—பிரம்மதேவர்; ஜகாத—கூறினார்; யம்—எவரை; இஜ்யா—வழிபடுவதும்; அத்யயன—வேதங்களை ஓதுவதும்; தானானி—தானம் செய்வதும்; விஹிதானி—வரையறுக்கப்பட்டுள்ளதோ; த்வி-ஜன்மனாம்—இருபிறப்பு எய்தியவர்கள் என்று அழைக்கப்படுபவர்களின்; ஜன்ம—பிறப்பினாலும்; கர்ம—செயல்களாலும்; அவதாதானாம்—தூய்மை அடைந்தவர்கள்; க்ரியா:—செயல்கள்; ச—கூட; ஆஸ்ரம-சோதித:—நான்கு ஆசிரமங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை.
வேத மந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் கர்பாதான சடங்கினாலும், பிற வழிமுறைகளாலும் புனிதப்படுத்தப்பட்டு, பிரம்மதேவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் த்விஜர்கள், அல்லது இருபிறப்பு எய்தியவர்கள் ஆவர். இத்தகைய பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் தங்களுடைய குல வழக்கங்களாலும், நடத்தையாலும் தூய்மையடைந்து பகவானை வழிபட வேண்டும். மேலும் வேதங்களைக் கற்பதுடன், தான தருமங்களையும் செய்ய வேண்டும். இந்த முறையில், (பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய) நான்கு ஆசிரமங்களின் கோட்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
பதம் 7.11.14
விப்ரஸ்யாத்யயனாதீனி ஷட்—அன்யஸ்யாப்ரதிக்ரஹ:
ராஜ்ஞோ வ்ருத்தி: ப்ரஜா-கோப்துர் அவிப்ராத் வா கராதிபி:
விப்ரஸ்ய—பிராமணருடைய; அத்யயன-ஆதீனி—வேத பாராயணம் முதலான; ஷட்—ஆறு (வேதம் படித்தல், வேதங்களை போதித்தல், விக்கிரக வழிபாடு, வழிபடும் முறையைப் பிறர்க்கு போதித்தல், தானம் ஏற்றல் மற்றும் தானம் கொடுத்தல்); அன்யஸ்ய—பிராமணர் அல்லாதவர்களின் (க்ஷத்திரியர்களின்); அப்ரதிக்ரஹ:—பிறரிடம் தானம் ஏற்காமல் (பிராமணர்களுக்கு விதிக்கப்பட்ட மற்ற ஐந்து கடமைகளைச் செய்யலாம்); ராஜ்ஞ:—க்ஷத்திரியர்களின்; வருத்தி:—ஜீவனோபாய முறை; ப்ரஜா-கோப்து:—பிரஜைகளைப் பராமரிக்கும்; அவிப்ராத்—பிராமணர்கள் அல்லாதவர்களிடமிருந்து; வா—அல்லது; கர-ஆதிபி:—வருமானவரி, சுங்கவரி, அபராதத் தொகை போன்றவைகளை வசூலிப்பதன் மூலம்.
ஒரு பிராமணனுக்கு ஆறுவிதமான தொழிற் கடமைகள் உள்ளன. ஒரு க்ஷத்திரியன் தானம் ஏற்கக்கூடாது. ஆனால் பிராமணனுக்குரிய மற்ற ஐந்து கடமைகளையும் அவன் செய்யலாம். ஓர் அரசன் அல்லது க்ஷத்திரியன் பிராமணர்களிடமிருந்து வரி வசூலிப்பதும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவன் தனது மற்ற பிரஜைகளிடமிருந்து குறைந்தபட்ச வரிகளையும், அபராதத் தொகைகளையும் வசூலிப்பதன் மூலம் தனது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்ளலாம்.
பதம் 7.11.15
வைஷ்யஸ் து வார்தா-வ்ருத்தி: ஸ்யான் நித்யம்ப்ரஹ்ம-குலானுக:
சூத்ரஸ்ய த்விஜ-சுஸ்ருஷா வ்ருத்திஸ் ச ஸ்வாமினோ பவேத்
வைஸ்ய:—வணிக சமூகம்; து—உண்மையில்; வார்தா-வ்ருத்தி:—விவசாயம், பசு பராமரிப்பு, வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள; ஸ்யாத்—கட்டாயம் இருக்க வேண்டும்; நித்யம்—எப்பொழுதும்; ப்ரஹ்ம-குல-அனுக:—பிராமணர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி; சூத்ரஸ்ய—நான்காம்தர மனிதர்களின் (தொழிலாளிகளின்); த்விஜ-சுஸ்ருஷா—மூன்று உயர்பிரிவினருக்கு (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்) சேவை செய்தல்; வ்ருத்தி:—ஜீவனோபாயம்; ச—மேலும்; ஸ்வாமின:—எஜமானரின்; பவேத்—அவன் இருக்க வேண்டும்.
வணிகர் சமூகம் எப்பொழுதும் பிராமணர்களின் உத்தரவுகளைப் பின்பற்றி விவசாயம், வியாபாரம், பசு பராமரிப்பு போன்ற தொழிற்கடமைகளில் ஈடுபட வேண்டும். ஒரு சூத்திரன் ஏதேனும் ஓர் உயர்பிரிவைச் சேர்ந்த ஒரு எஜமானரை ஏற்றுக் கொண்டு, அவரது சேவையில் ஈடுபடுவதே அவனது ஒரே கடமையாகும்.
பதம் 7.11.16
வார்தா விசித்ரா சாலின-யாயாவர-சிலோஞ்சனம்
விப்ர-வ்ருத்திஸ் சதுர்தேயம் ஸ்ரேயஸீ சோத்தரோத்தரா
வார்தா—வைசியர்களுக்குரிய ஜீவனோபாய முறை (விவசாயம், பசு பராமரிப்பு, வியாபாரம்); விசித்ரா—பல வகையான; சாலீன—முயற்சியின்றி அடையப்படும் ஜீவனோபாயம்; யாயாவர—வயலுக்குச் சென்று கொஞ்சம் நெல்லை யாசிப்பது; சில—உரிமையாளரால் வயலில் விட்டுச் செல்லப்பட்ட தானியங்களைச் சேகரித்தல்; உஞ்சனம்—கடைகளில் தானியப் பைகளிலிருந்து கீழே சிதறிய தானியங்களைச் சேகரித்தல்; விப்ர-வ்ருத்தி:—பிராமணர்களுக்குரிய ஜீவனோபாய முறைகள்; சதுர்தா—நான்கு வெவ்வேறான முறைகள்; இயம்—இந்த; ஸ்ரேயஸீ—சிறந்தது; ச—மேலும்; உத்தர-உத்தரா—பிந்தியதை முந்தியதுடன் ஒப்பிடும் பொழுது.
பிராமணர் ஒருவர் மாற்றுத் தொழிலாக வைசியர்களுக்குரிய விவசாயம், பசு பராமரிப்பு, அல்லது வியாபாரம் ஆகிய தொழிற் கடமையை ஏற்றுக்கொள்ளலாம். அவர் யாசகம் செய்யாமல் தான் பெற்றதையோ, தினமும் நெல் வயலில் தான் யாசிப்பதையோ, உரிமையாளரால் வயலில் விட்டுச் செல்லப்பட்ட நெல்லை சேகரிப்பதையோ, அல்லது தானிய வியாபாரிகளால் இங்குமங்கும் விட்டுச் செல்லப்பட்ட உணவுத் தானியங்களைச் சேகரிப்பதையோ நம்பி வாழலாம். இங்கு நான்கு ஜீவனோபாய முறைகளைக்கூட பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இந்நான்கில் ஒவ்வொன்றும் முந்தியதைவிடச் சிறந்ததாகும்.
பதம் 7.11.17
ஜகன்யோ நோத்தமாம் வ்ருத்திம் அனாபதி பஜேன் நர:
ருதே ராஜன்யம் ஆபத்ஸு ஸர்வேஷாம் அபி ஸர்வச:
ஜகன்ய:—தாழ்ந்த (மனிதன்); ந—இல்லை; உத்தமாம்—உயர்ந்த; வ்ருத்திம்—ஜீவனோபாய முறையை; அனாபதி—சமுதாயத்தில் நெருக்கடி இல்லாத பொழுது; பஜேத்— ஏற்றுக் கொள்ளலாம்; நர:—ஒரு மனிதன்; ருதே—தவிர; ராஜன்யம்—க்ஷத்திரியர்களின் தொழிலை; அபத்ஸு—அவசரகாலங்களில்; ஸர்வஷோம்—எல்லா வாழ்வு நிலைகளிலும் உள்ள ஒவ்வொருவரும்; அபி—நிச்சயமாக; ஸர்வச:—எல்லாத் தொழிற் கடமைகளையும்.
அவசர காலங்களைத் தவிர மற்ற சமயங்களில், கீழ் நிலையிலுள்ளோர் மேல் நிலையில் உள்ளவர்களின் தொழிற் கடமைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இத்தகைய ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படும் பொழுது, நிச்சயமாக க்ஷத்திரியர்களைத் தவிர மற்ற பிரிவினர் பிறருடைய ஜீவனோபாய முறையை ஏற்றுக் கொள்ளலாம்.
பதங்கள் 7.11.18 – 7.11.20
ருதாம்ருதாப்யாம் ஜீவேத ம்ருதேன ப்ரம்ருதேன வா
ஸத்யான்ருதாப்யாம் அபி வா ந ஸ்வ-வ்ருத்யா கதாசன
ருதம் உஞ்சசிலம் ப்ரோக்தம் அம்ருதம் யத் அயாசிதம்
ம்ருதம் து நித்ய-யாச்ஞா ஸ்யாத் ப்ரம்ருதம் கர்ஷணம் ஸ்ம்ருதம்
ஸத்யான்ருதம் ச வாணிஜ்யம் ஸ்வ-வ்ருத்திர் நீச-ஸேவனம்
வர்ஜயேத் தாம் ஸதா விப்ரோ ராஜன்யஸ் ச ஜுகுப்ஸிதாம்
ஸர்வ-வேதமயோ விப்ர: ஸர்வ-தேவமயோ ந்ருப:
ருத-அம்ருதாப்யாம்—ருதம் மற்றும் அம்ருதம் எனப்படும் ஜீவனோபாய முறைகளின்; ஜீவேத—ஒருவன் வாழலாம்; ம்ருதேன—ம்ருதம் என்ற தொழிலால்; ப்ரம்ருதேன வா—அல்லது ப்ரம்ருதம் என்ற தொழிலால்; ஸத்யான்ருதாப்யாம் அபி—ஸத்யான்ருத தொழிலால் கூட; வா—அல்லது; ந—கூடாது; ஸ்வ-வ்ருத்யா—நாய்களின் தொழிலால்; கதாசன—ஒரு பொழுதும் கூடாது; ருதம்—ருதம்; உஞ்சசிலம்—வயலில் அல்லது சந்தையில் விட்டுச் செல்லப்பட்ட தானியங்களைச் சேகரித்து வாழ்க்கையை நடத்துவது; ப்ரோக்தம்—ப்ரோக்தம் என்று கூறப்பட்டுள்ளது; அம்ருதம்—அம்ருதம் என்ற தொழில்; யத்—எதுவோ; அயாசிதம்—பிறரிடம் யாசிக்காமல் அடைப்படுவது; ம்ருதம்—ம்ருதம் என்ற தொழில்; து—ஆனால்; நித்ய-யாச்ஞா—தினமும் விவசாயிகளிடம் தானியங்கள் யாசிப்பது; ஸ்யாத்—இருக்கட்டும்; ப்ரம்ருதம்—ப்ரம்ருத ஜீவனோபாய முறை; கர்ஷணம்—வயலை உழுதல்; ஸ்ம்ருதம்—இவ்வாறு நினைவில் கொள்ளப்படுகிறது; ஸத்யான்ருதம்—ஸத்யான்ருத தொழில்; ச—மேலும்; வாணிஜ்யம்—வியாபாரம்; ஸ்வ-வ்ருத்தி:—நாய்களின் தொழில்; நீச-ஸேவனம்—நீசர்களின் (வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின்) தொழிலை; வர்ஜயேத்—விட்டுவிட வேண்டும்; தாம்—அதை (நாய்களுக்குரிய தொழிலை); ஸதா—எப்பொழுதும்; விப்ர:—பிராமணர்; ராஜன்ய: ச—மற்றும் க்ஷத்திரியன்; ஜீகுப்ஸிதாம்—மிகவும் வெறுக்கத்தக்க; ஸர்வ-வேத-மய:—அனைத்து வேத ஞானத்திலும் கற்றுத் தேர்ந்தவர்கள்; விப்ர:—பிராமணன்; ஸர்வ-தேவ-மய:—தேவர்களின் சொரூபமான; ந்ருப—க்ஷத்திரியன் அல்லது அரசன்.
அவசர காலங்களில், ருத, அம்ருத, ம்ருத, ப்ரம்ருத மற்றும் ஸத்யாம் ருதக எனப்படும் பல்வேறு வகையான தொழில்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாயின் தொழிலை ஒருவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. வயலிலிருந்து தானியங்களைச் சேகரிக்கும் உஞ்சசில என்ற தொழில் ருத என்று அழைக்கப்படுகிறது. யாசிக்காமல் சேகரிப்பது அம்ருத எனப்படுகிறது. தானியங்களை யாசிப்பது ம்ருத எனப்படுகிறது. நிலத்தை உழுவது ப்ரம்ருத எனப்படுகிறது. வியாபாரம் ஸத்யன்ருத எனப்படுகிறது. ஆனால் கீழானவர்களின் சேவையில் ஈடுபடுவது ஸ்வ-வ்ருத்தி அதாவது நாய்களின் தொழில் எனப்படுகிறது. குறிப்பாக பிராமணர்களும் க்ஷத்திரியர்களும், வெறுக்கத் தகுந்ததான சூத்திரர்களின் சேவையில் ஈடுபடக் கூடாது. பிராமணர்கள் வேத ஞானத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். க்ஷத்திரியர்களோ தேவ ஆராதனையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பதம் 7.11.21
சமோ தமஸ் தப: சௌசம் ஸந்தோஷ க்ஷாந்திர் ஆர்ஜவம்
ஞானம் தயாச்யுதாத்மத்வம் ஸத்யம் ச ப்ரஹ்ம-லக்ஷணம்
சம:—மனவடக்கம்; தம:—புலனடக்கம்; தப:—தவம் மற்றும் விரதம்; சௌசம்—தூய்மை; ஸந்தோஷ:—திருப்தி; க்ஷாந்தி:—மன்னிக்கும் குணம் (கோபத்தால் கலக்கமடையாதிருத்தல்); ஆர்ஜவம்—எளிமை; ஞானம்—அறிவு; தயா—கருணை; அச்யுத-ஆத்மத்வம்—தன்னை பகவானுடைய நித்தியத் தொண்டனாக எண்ணுதல்; ஸத்யம்—உண்மை; ச—கூட; ப்ரஹ்ம-லக்ஷணம்—ஒரு பிராமணருக்குரிய அடையாளங்களாகும்.
மனவடக்கம், புலனடக்கம், தவம், விரதம், தூய்மை, திருப்தி, மன்னிக்கும் குணம், எளிமை, அறிவு, இரக்கம், உண்மை, மற்றும் பரமபுருஷரிடம் பூரண சரணாகதி ஆகியவை ஒரு பிராமணருக்குரிய அடையாளங்களாகும்.
பதம் 7.11.22
சௌர்யம் வீர்யம் த்ருதிஸ் தேஜஸ் த்யாகஸ் சாத்மஜய: க்ஷமா
ப்ரஹ்மண்யதா ப்ரஸாதஸ் ச ஸத்யம் ச க்ஷத்ர- லக்ஷணம்
சௌர்யம்—யுத்தத் தேர்ச்சி; வீர்யம்—தோல்வியின்மை; த்ருதி:—பொறுமை (தோல்வியிலும் ஒரு க்ஷத்திரியன் மனத்தளர்ச்சி அடைவதில்லை); தேஜ:—பிறரை வெல்லும் ஆற்றல்; த்யாக:—தானம் செய்தல்; ச—மேலும்; ஆத்ம-ஜய:—உடல் தேவைகளைக் கட்டுப்படுத்துல்; க்ஷமா—மன்னித்தல்; ப்ரஹ்மண்யதா—பிராமண கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை; ப்ரஸாத:—எச்சூழ்நிலையிலும் மகிழ்ச்சியுடனிருத்தல்; ச—மேலும்; ஸத்யம் ச—மற்றும் உண்மையே பேசுதல்; க்ஷத்ர-லக்ஷணம்—இவை ஒரு க்ஷத்திரியனுக்குரிய அடையாளங்களாகும்.
யுத்த தேர்ச்சி, தோல்வியின்மை, பொறுமை, சண்டைக்கழைத்தல், பெருந்தன்மை, உடல் தேவைகளைக் கட்டுப்படுத்துதல், மன்னித்தல், பிராமண பண்பாட்டில் பற்றுக் கொண்டிருத்தல், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருத்தல், மற்றும் உண்மையே பேசுதல் ஆகியவை க்ஷத்திரியனின் அடையாளங்களாகும்.
பதம் 7.11.23
தேவ குரு-அச்யுதே பக்தஸ் த்ரி வர்க-பரிபோஷணம்
ஆஸ்திக்யம் உத்யமோ நித்யம் நைபுண்யம் வைஸ்ய-லக்ஷணம்
தேவ-குரு-அச்யுதே—தேவர்களிடமும், ஆன்மீக குருவிடமும், பகவான் விஷ்ணுவிடம்; பக்தி:—பக்தி கொண்டிருத்தல்; த்ரி வர்க—சமய வாழ்வுக்குரிய மூன்று கோட்பாடுகளை (அறம், பொருள், இன்பம்); பரிபோஷணம்—கடைப்பிடித்தல்; ஆஸ்திக்யம்—சாஸ்திரங்களிலும், ஆன்மீக குருவிலும், பரமபுருஷரிலும் நம்பிக்கைக் கொள்ளல்; உத்யம:—சுறுசுறுப்பு; நித்யம்—இடைவிடாமல்; நைபுண்யம்—சாமர்த்தியம்; வைஸ்ய-லக்ஷணம்—ஒரு வைசியனுக்குரிய அடையாளங்களாகும்.
தேவர்களிடமும், ஆன்மீக குருவிடமும், பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடமும் எப்பொழுதும் பக்தி கொண்டிருத்தல்; சமய வாழ்விலும், பொருளாதார முன்னேற்றத்திலும், புலன் நுகர்விலும் (தர்ம, அர்த்த, காம) முன்னேற முயற்சித்தல்; குரு மற்றும் சாஸ்திரங்களின் சொற்களில் நம்பிக்கைக் கொள்ளல்; மற்றும் எப்பொழுதும் சாமர்த்தியமாகப் பொருளீட்ட முயற்சித்தல் ஆகியவை வைசியனுக்குரிய அடையாளங்களாகும்.
பதம் 7.11.24
சூத்ரஸ்ய ஸன்னதி: சௌசம் ஸேவா ஸ்வாமினி அமாயயா
அமந்த்ர-யக்ஞோ ஹி அஸ்தேயம் ஸத்யம் கோ-விப்ர-ரக்ஷணம்
சூத்ரஸ்ய—சூத்திரனின் (சமுதாயத்தில் நான்காம் நிலையிலுள்ள தொழிலாளி); ஸன்னதி:—உயர் பிரிவினரிடம் பணிவு; செளசம்—சுத்தம்; ஸேவா—சேவை; ஸ்வாம்னி—தன் எஜமானிடம்; ஆமாயயா—கபடமின்மை; அமந்த்ர-யக்ஞ:—(மந்திரங்களின்றி) வணக்கத்தாலேயே யாகம் செய்தல்; ஹி—நிச்சயமாக; அஸ்தேயம்—திருடாதிருக்கப் பழகுதல்; ஸத்யம்—உண்மையே பேசுதல்; கோ—பசுக்களை; விப்ர—பிராமணர்களை; ரக்ஷணம்—பாதுகாத்தல்.
சமுதாயத்தின் உயர் பிரிவுகளுக்கு (பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு) வணக்கம் செலுத்துதல், எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருத்தல், கபடத்தன்மை இல்லாதிருத்தல், தன் எஜமானருக்குச் சேவை செய்தல், மந்திரங்களை உச்சரிக்காமல் யாகங்கள் செய்தல், திருடாமல் இருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் முழு பாதுகாப்பு அளித்தல் ஆகியவை சூத்திரனின் அடையாளங்களாகும்.
பதம் 7.11.25
ஸ்த்ரீனாம் ச பதி-தேவானாம் தச்-சுஸ்ரூஷானுகூலதா
தத்-பந்துஷு அனுவிருத்திஸ் ச நித்யம் தத்-வ்ரத-தாரணம்
ஸத்ரீணாம்—பெண்களின்; ச—கூட; பதி-தேவானாம்—தங்கள் கணவன்மார்களை வழிபாட்டுக்குரியவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள; தத்-சுஸ்ரூஷா—தன் கணவனுக்குப் பணிவிடை செய்யத் தயாராக இருத்தல்; அனுகூலதா—தன் கணவரிடம் சாதகமாக இருப்பது; தத்-பந்துஷு—கணவனின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும்; அனுவ்ருத்தி:—அவ்வாறே நடந்து கொள்ளுதல் (கணவனின் திருப்திக்காக அவர்களுக்கு நன்கு பணிவிடை செய்தல்); ச—மேலும்; நித்யம்—தினமும்; தத்-வ்ரத-தாரணம்—கணவனின் விரதங்களைத் தானும் அனுஷ்டித்தல் அல்லது கணவன் செயற்படுவது போலவே செயற்படுதல்.
கணவனுக்குச் சேவை செய்தல், கணவனிடம் எப்பொழுதும் அனுகூலமாக நடந்து கொள்ளுதல், கணவனின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்ளுதல், கணவனின் விரதங்களைப் பின்பற்றுதல் ஆகிய இந்நான்கு கொள்கைகளும் கற்புடையவள் என்று விவரிக்கப்படும் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவையாகும்.
பதங்கள் 7.11.26 – 7.11.27
ஸ்ம்மார்ஜனோபலேபாப்யாம் க்ருஹ-மண்டன-வர்தனை:
ஸ்வயம் ச மண்டிதா நித்யம் பரிம்ஸ்ருஷ்ட-பரிச்சதா
காமைர் உச்சாவசை: ஸாத்வீ ப்ரஸ்ரயேண தமேன ச
வாக்யை: ஸத்யை: ப்ரியை: ப்ரேம்ணா காலே காலே பஜேத் பதிம்
ஸம்மர்ஜன—சுத்தம் செய்வதாலும்; உபலேபாப்யாம்—நீரினால் அல்லது மற்ற திரவங்களினால் கழுவி; க்ருஹ—வீட்டை; மண்டன—அலங்கரித்து; வர்தனை:—வீட்டில் இருந்து கொண்டு இத்தகைய கடமைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்; ஸ்வயம்—தானாகவே; ச—மேலும்; மண்டிதா—நன்கு ஆடையணிந்து; நித்யம்—எப்பொழுதும்; பரிம்ருஷ்ட—சுத்தமாக; பரிச்சதா—ஆடைகளையும், வீட்டுச் சாமான்களையும்; காமை:—கணவனின் விருப்பத்திற்கேற்ப; உச்ச-அவசை:—பெரியதும், சிறியதுமான; ஸாத்வீ—கற்புடைய ஒரு பெண்; ப்ரஸ்ரயேண—அடக்கத்துடன்; தமேன—புலன்களை அடக்கி; ச—மேலும்; வாக்யை:—பேச்சினால்; ஸத்யை:—உண்மையான; ப்ரியை:—பிரியமான; ப்ரேம்ணா—அன்புடன்; காலே காலே—உகந்த நேரங்களில்; பஜேத்—பூஜிக்க வேண்டும்; பதிம்—தன் கணவனை.
கற்புடைய ஒரு பெண் தன் கணவனின் மகிழ்ச்சிகாக நன்கு ஆடை அணிந்து, தங்க ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவள் எப்பொழுதும் சுத்தமான, கவர்ச்சியான ஆடைகளை உடுத்தி, வீட்டைப் பெருக்கி, அது எப்பொழுதும் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்படி நீரினாலும் மற்ற திரவங்களினாலும் முழு வீட்டையும் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அவள் வீட்டிற்குத் தேவையான சாமான்களைச் சேகரிக்க வேண்டும். மேலும் வாசனை பத்திகளாலும், மலர்களாலும் வீட்டை எப்பொழுதும் நறுமணம் கொண்டதாக வைத்துக் கொண்டு, தன் கணவனின் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும். அவள் அடக்கத்துடனும், உண்மையாகவும், புலனடக்கத்துடனும் இருப்பதுடன், இனிய வார்த்தைகளையே பேசுபவளாகவும் இருக்க வேண்டும். இத்தகைய ஒரு கற்புடைய பெண் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்பதன் கணவனுக்கு அன்புடன் சேவை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பதம் 7.11.28
ஸந்துஷ்டாலோலுபா தக்ஷா தர்ம-க்ஞ ப்ரிய-ஸத்ய-வாக்
அப்ரமத்தா சுசி: ஸ்னிக்தா பதிம் து அபதிதம் பஜேத்
ஸந்துஷ்டா—எப்பொழுதும் திருப்தியடைந்தவனாக; அலோலுபா—பேராசை கொள்ளாமல்; தக்ஷா—சேவை செய்வதில் திறமையானவளாய்; தர்ம-க்ஞா—சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்; ப்ரிய—இன்பம் ஊட்டும் வகையிலும்; ஸத்ய—உண்மையாகவும்; வாக்—பேசுவதில்; அப்ரமத்தா—தன் கணவனின் சேவையில் கவனத்துடனும்; சுசி—எப்பொழுதும் சுத்தமாகவும், தூய்மையாகவும்; ஸ்னிக்தா—பாசத்துடன்; பதிம்—கணவனை; து—ஆனால்; அபதிதம்—இழிவடையாத; பஜேத்—பூஜிக்க வேண்டும்.
கற்புடைய ஒரு பெண் பேராசை இல்லாதவளாகவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் திருப்தி அடைந்தவளாகவும் இருக்கவேண்டும். குடும்ப விவகாரங்களைக் கையாள்வதில் அவள் சாமர்த்தியம் உள்ளவளாக இருக்கவேண்டும். மேலும் சமயக் கோட்பாடுகளில் ஆழ்ந்த பரிச்சயம் உள்ளவளாகவும் இருக்கவேண்டும். அவள் உண்மையாகவும், இன்பம் ஊட்டும் வகையிலும் பேசுவதுடன், அதிக கவனமுள்ளவளாகவும், எப்பொழுதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். இவ்வறாக கற்புடைய ஒரு பெண் இழிவடையாத தன் கணவனின் அன்பான சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பதம் 7.11.29
யா பதிம் ஹரி-பாவேன பஜேத் ஸ்ரீர் இவ தத்-பரா
ஹரி-ஆத்மனா ஹரேர் லோகே பத்யா ஸ்ரீர் இவ மோததே
யா—எந்த ஒரு பெண்ணும்; பதிம்—தன் கணவனை; ஹரி-பாவேன—அவனை பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரிக்குச் சமமாக மனதால் ஏற்று; பஜேத்—பூஜிக்கிறாளோ அல்லது சேவை செய்கிறாளோ; ஸ்ரீ: இவ—லக்ஷ்மி தேவியைப் போல்; தத்-பரா—அவனிடம் ஈடுபட்டவளாய்; ஹரி-ஆத்மனா—ஹரியின் நினைவில் ஆழ்ந்தவளாய்; ஹரே: லோகே—ஆன்மீகமான வைகுண்ட லோகங்களில்; பத்யா—தன் கணவனுடன்; ஸ்ரீ: இவ—லக்ஷ்மி தேவியைப் போலவே; மோததே—நித்தியமான ஆன்மீக வாழ்வை அனுபவிக்கிறாள்.
லக்ஷ்மி தேவியின் அடிச்சுவடுகளை உறுதியாகப் பின்பற்றி தன் கணவனின் சேவையில் ஈடுபடும் ஒரு பெண், நிச்சயமாகத் தன் கணவனுடன் பரமபதம் அடைந்து வைகுண்ட லோகங்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வாள்.
பதம் 7.11.30
வ்ருத்தி: ஸங்கர-ஜாதீனாம் தத்-தத்-குல-க்ருதா பவேத்
அசௌராணாம் அபாபானாம் அந்த்யஜான்தேவஸாயினாம்
வ்ருத்தி:—தொழிற் கடமை; ஸங்கர-ஜாதீனாம்—கலப்படமான பிரிவினரின் (நான்கு பிரிவுகளைத் தவிர்த்த மற்றவர்கள்); தத்-தத்—அவரவர்; குல-க்ருதா—குடும்பப் பாரம்பரியத்திற்கேற்ப; பவேத்—இருக்க வேண்டும்; அசௌராணாம்—தொழிலால் திருடர்கள் அல்லாதவர்கள்; அபாபானாம்—பாவம் செய்யாதவர்கள்; அந்த்யஜ—தாழ்ந்த பிரிவினர்கள்; அந்தேவஸாயினாம்—அந்தேவஸாயீ அல்லது சண்டாளன் எனப்படும்.
ஸங்கரம் எனப்படும் கலப்படமான பிரிவினருக்கிடையில், திருடர்கள் அல்லாதவர்கள், அந்தேவஸாயீ அல்லது சண்டாளர்கள் (நாய் திண்பவர்கள்) என்று அறியப்படுகின்றனர். அவர்களுக்கும் பாரம்பரிய வழக்கங்கள் உள்ளன.
பதம் 7.11.31
ப்ராய: ஸ்வ-பாவ-விஹிதோ ந்ருணாம் தர்மோ யுகே யுகே
வேத-த்ருக்பி: ஸ்ம்ருதோ ராஜன் ப்ரேத்ய சேஹ ச சர்ம-க்ருத்
ப்ராய:—பொதுவாக; ஸ்வ-பாவ-விஹித:—ஒருவனது இயற்கைக் குணங்களுக்கேற்ப வரையறுக்கப்படும்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; தர்ம:—தொழிற் கடமை; யுகே யுகே—ஒவ்வொரு யுகத்திலும்; வேத-த்ருக்பி:—வேத வல்லுனர்களால்; ஸ்ம்ருத:—அறியப்பட்டது; ராஜன்—அரசே; ப்ரேத்ய—மரணத்திற்குப் பிறகு; ச—மற்றும்; இஹ—இங்கு (இவ்வுடலில்); ச—கூட; சர்ம-க்ருத்—மங்களம்.
அரசே, ஒவ்வொரு யுகத்திலும் தங்களுடைய இயற்கைக் குணங்களுக்கேற்ப செயற்படும் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் நடத்தையானது, இம்மையிலும், மறுமையிலும் மங்களம் அளிப்பதாகும்.
பதம் 7.11.32
வ்ருத்யா ஸ்வ-பாவ-க்ருதயா வர்தமான: ஸ்வ-கர்ம-க்ருத்
ஹித்வா ஸ்வ-பாவ-ஜம் கர்ம சனைர் நிர்குணதாம் இயாத்
வ்ருத்யா—தொழிலால்; ஸ்வ-பாவ-க்ருதயா—தன் இயற்கையான குணத்திற்கேற்ப செய்யப்படும்; வர்தமான:—அமைந்திருக்கும்; ஸ்வ-கர்ம-க்ருத்—தனக்குரிய தொழிலைச் செய்து கொண்டு; ஹித்வா—விட்டுவிட்டு; ஸ்வ-பாவ-ஜம்—ஒருவனது இயற்கையான குணங்களிலிருந்து பிறந்த; கர்ம—செயல்களை; சனை:—படிப்படியாக; நிர்குணதாம்—உன்னதமான நிலையை; இயாத்—அடையலாம்.
ஒருவன் தன்னுடைய இயற்கையான குணத்திற்கேற்ப தனக்குரிய தொழிலைச் செய்து, படிப்படியாக இச்செயல்களை விட்டுவிடும் பொழுது, நிஷ்காம நிலையை அடைகிறான்.
பதங்கள் 7.11.33 – 7.11.34
உப்யமானம் முஹு: க்ஷேத்ரம் ஸ்வயம் நிர்வீர்யதாம் இயாத்
ந கல்பதே புன: ஸூத்யை உப்தம் பீஜம் ச நஸ்யதி
ஏவம் காமாசயம் சித்தம் காமானாம் அதிஸேவயா
விரஜ்யேத யதா ராஜன் அக்னிவத் காம-பிந்துபி:
உப்யமானம்—பயிரிடப்பட்ட; முஹு:—திரும்பத் திரும்ப; க்ஷேத்ரம்—ஒரு நிலம்; ஸ்வயம்—தானே; நிர்வீர்யதாம்—மலட்டுத் தன்மையை; இயாத்—அடையக்கூடும்; ந கல்பதே—தகுந்தநிலை; புன:—மீண்டும்; ஸூத்யை—மீண்டும் அறுவடை செய்ய; உப்தம்—விதைக்கப்படும்; பீஜம்—விதை; ச—மேலும்; நஸ்யதி—வீணாகிறது; ஏவம்—இவ்வாறு; காம-ஆசயம்—காம இச்சைகள் நிறைந்த; சித்தம்—இதயம்; காமானாம்—விரும்பத்தகுந்த பொருட்களின்; அதி-ஸேவயா—திரும்பத்திரும்ப அதிகமாக அனுபவிப்பதால்; விரஜ்யேத—பற்றற்றவனாக ஆக முடியும்; யதா—எப்படி; ராஜன்—அரசே; அக்னி-வத்—நெருப்பானது; காம-பிந்துபி:—சொட்டுச் சொட்டாகவிடப்படும் நெய்யினால்.
அரசே, விவசாய நிலத்தில் திரும்பத் திரும்ப பயிர் செய்யும் பொழுது அதன் உற்பத்தித்திறன் குறைந்து, அதில் விதைக்கப்படும் விதைகள் வீணாகி விடுகின்றன. எரியும் நெருப்பில் சொட்டுச் சொட்டாகவிடப்படும் நெய் நெருப்பை வளர்க்கும். ஆனால் அதில் வெள்ளமாக நெய்யைக் கொட்டினால் அது நெருப்பை அணைத்துவிடும். அது போலவே, காம இச்சைகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு இத்தகைய ஆசைகளை முழுமையாக சமனப்படுத்திவிடுகிறது.
பதம் 7.11.35
யஸ்ய யல் லக்ஷணம் ப்ரோக்தம் பும்ஸோ வர்ணாபிவ்யஞ்ஜகம்
யத் அன்யத்ராபி த்ருஸ்யேத தத் தேனைவ வினிர்திசேத்
யஸ்ய—எவனுடைய; யத்—எந்த; லக்ஷணம்—அடையாளம்; ப்ரோக்தம்—(மேலே) விவரிக்கப்பட்டதோ; பும்ஸ:—ஒரு மனிதனின்; வர்ண-அபிவ்யஞ்ஜகம்—(பிராமணண், க்ஷத்திரியன், வைசியன், க்ஷுத்திரன் முதலான) வகுப்புகளைச் சுட்டிக்காட்டும்; யத்—இருந்தால்; அன்யத்ர—வேறு இடத்தில்; அபி—கூட; த்ருஸ்யேத—காணப்படுவதாக; தத்—அது; தேன—அந்த அடையாளத்தால்; ஏவ—நிச்சயமாக; வினிர்திசேத்—ஒருவன் அழைக்க வேண்டும்.
ஒருவன் வேறொரு வகுப்பில் பிறந்துள்ள போதிலும், மேலே குறிப்பிட்டுள்ளது போல், அவன் ஒரு பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் அல்லது சூத்திரனுக்குரிய அடையாளங்களைக் காட்டுவானாயின், அந்த அடையாளங்களுக்கேற்பவே அவனை ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின் “பரிபூரண சமுதாயம்: நான்கு சமூகப் பிரிவுகள்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.