அத்தியாயம் – 15
சித்ரகேதுவிற்கு நாரதரும், அங்கிரரும்
உபதேசித்தல்
பதம் 6.15.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: துக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சித்ரகேது மகாராஜன், தன் இறந்த மகனின் உடலுக்கருகில் மற்றொரு இறந்த உடலைப் போல் படுத்துக்கிடந்தார். அப்பொழுது, சிறந்த முனிவர்களான நாரதரும், அங்கிரரும், ஆன்மீக உணர்வைப் பற்றி பின்வருமாறு அவருக்கு உபதேசித்தனர்.
பதம் 6.15.2 : அரசே, யாரைக்குறித்து நீர் துக்கப்படுகிறீரோ, அந்த இறந்த உடல் உமக்கென்ன உறவு? அந்த இறந்த உடலுக்கு உம்முடன் என்ன உறவு? தந்தையாகவும், மகனாகவும் உறவு கொண்டிருப்பதாக இப்பொழுது நீர் கூறக்கூடும். ஆனால் இந்த உறவு முன்பு இருந்ததென்று நினைக்கிறீரா? உண்மையாகவே இப்பொழுது இருக்கிறதா? எதிர்காலத்தில் இது தொடருமா?
பதம் 6.15.3 : அரசே, சிறு மணல் துளிகள் எவ்வாறு அலைகளின் வேகத்தினால் சில சமயங்களில் இணைந்து, சில சமயங்களில் பிரிகின்றனவோ, அவ்வாறே, ஜட உடல்களை ஏற்றுள்ள ஜீவராசிகள் காலத்தின் வேகத்தினால் சில சமயங்களில் இணைகின்றனர், சில சமயங்களில் பிரிகின்றனர்.
பதம் 6.15.4 : விதைகள் பூமியில் விதைக்கப்படும்பொழுது, அவை சில சமயங்களில் செடிகளாக வளர்கின்றன, சில சமயங்களில் அவ்வாறு வளர்வதில்லை. சில சமயங்களில் பூமி வளமுடையதாக இருக்காது. இதனால் விதைக்கப்படும் விதைகள் முளைப்பதில்லை. அதுபோலவே, பரமபுருஷரின் தூண்டுதலால் ஒரு தந்தையால் குழந்தைபெற முடிகிறது. ஆனால் சில சமயங்களில் கருத்தரிப்பதில்லை. எனவே, செயற்கையான உறவின் மூலம் தந்தையாவது குறித்து ஒருவன் வருந்தக்கூடாது. ஏனெனில் முடிவாக அது பரமபுருஷரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பதம் 6.15.5 : அரசே, நீரும், உமது ஆலோசகர்கள், மனைவிகள், மந்திரிகள் ஆகிய நாங்களும், மேலும் இப்பொழுது இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள அசைவன, அசையாதன ஆகிய நாமனைவரும் தற்காலிகமான ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறோம். நாம் பிறப்பதற்கு முன் இச்சூழ்நிலை இருக்கவில்லை. நம் மரணத்திற்குப் பிறகும் இந்நிலை இருக்காது. எனவே இப்பொழுதுள்ள நம் சூழ்நிலை பொய்யல்ல என்றாலும், நிரந்தரமானதல்ல.
பதம் 6.15.6 : அனைத்திற்கும் தலைவரும் உரிமையாளருமான பரமபுருஷர், நிச்சயமாக நிலையற்ற இந்த பிரபஞ்ச தோற்றத்தில் ஆர்வமில்லாதவராவார். எனினும், எப்படி கடற்கரையில் தான் உண்டாக்கிய ஒன்றில் ஒரு சிறுவன் ஆர்வம் காட்டுவதில்லையோ, அப்படியே அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகவானும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கிறார். ஒரு தந்தை மகனைப் பெறுவதில் ஈடுபட்டு படைப்பைச் செய்கிறார். ஓர் அரசாங்கத்தை அல்லது அரசரை பொது ஜனங்களின் நன்மையைக் கவனிப்பதில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர் காக்கிறார். மேலும் பாம்புகளைப் போன்ற கொல்லும் பிராணிகளின் மூலமாக அவர் அழிக்கிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் பிரதிநிதிகளுக்குச் சுதந்திரமாகச் செயற்படும் ஆற்றவில்லை. ஆனால் மாயா சக்தியின் வசியத்தினால், ஒருவன் தன்னையே படைத்து, காத்து, அழிப்பவனாக எண்ணுகிறான்.
பதம் 6.15.7 : அரசே, எப்படி ஒரு விதையிலிருந்து மற்றொரு விதை உற்பத்தி செய்யப்படுகிறதோ, அப்படியே ஒரு உடலிலிருந்து (தந்தையின் உடலிலிருந்து), மற்றொரு உடலின் மூலமாக (தாயின் உடல் மூலமாக), ஒரு மூன்றாவது உடல் (ஒரு மகனின் உடல்) உற்பத்தி செய்யப்படுகிறது. எப்படி ஜட உடலின் மூலப் பொருட்கள் நித்தியமானவையோ, அப்படியே இந்த பெளதிக மூலப்பொருட்களின் மூலமாகத் தோன்றும் ஜீவராசியும் நித்தியமானவனாவான்.
பதம் 6.15.8 : தேசீயம் மற்றும் தனித்துவம் போன்ற பொதுக்கருத்தின் பிரிவுகளும், தனிக்கருத்தின் பிரிவுகளும், அறிவு முதிர்ச்சியடையாதவர்களின் கற்பனைகளாகும்.
பதம் 6.15.9 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு நாரதர் மற்றும் அங்கிரரின் உபதேசங்களால் அறிவுறுத்தப்பட்ட சித்ரகேது மகாராஜன் அறிவொளி பெற்றவரானார். பிறகு வாடிய முகத்தைத் தன் கையால் துடைத்துக் கொண்ட அரசர் பின்வருமாறு பேசலானார்.
பதம் 6.15.10 : சித்ரகேது மகாராஜன் கூறினார்: நீங்களிருவரும் உங்களுடைய சுய ரூபங்களை மறைத்துக் கொள்வதற்காக, முக்திபெற்ற அவதூதர்களைப் போல் ஆடையணிந்து இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எல்லோரையும் விட மிகவும் மேலான, விஷயம் தெரிந்த நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் அனைத்தையும் உள்ளபடி அறிவீர்கள் ஆகவே நீங்கள் உயர்ந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர்களாவீர்.
பதம் 6.15.11 : ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகப் பிரியமுள்ள தொண்டர்களும், வைஷ்ணவர்களின் நிலையில் உயர்ந்து நிற்பவர்களுமான பிராமணர்கள், சிலசமயங்களில் பித்தர்களைப்போல் உடையணிகின்றனர். எப்பொழுதும் புலன் நுகர்வில் பற்றுக் கொண்டுள்ள எங்களைப் போன்ற பெளதிகவாதிகளுக்கு நன்மை செய்வதற்காகவும், எங்களுடைய அறியாமையைக் களைவதற்காகவுமே இந்த வைஷ்ணவர்கள் பூமியில் மனம் போனபடி சஞ்சரிக்கின்றனர்.
பதங்கள் 6.15.12 – 6.15.15 : சிறந்த ஆத்மாக்களே, அறியாமையால் மூடப்பட்டுள்ள மக்களுக்கு ஞானத்தை போதிப்பதற்காக உலக முழுவதிலும் சஞ்சரிக்கும் சிறந்த பூரணத்துவம் அடைந்தவர்களுள், சனத்குமாரர், நாரதர், ரிபு, அங்கிரர், தேவலர், அசிதர், அபாந்தரதமர் (வியாசதேவர்); மார்க்கண்டேயர்; கௌதமர், வசிஷ்டர், பகவான் பரசுராமர், கபிலர், சுகதேவர், துர்வாசர், யாக்ஞவல்கியர், ஜாதுகர்ணர், அருணி, ரோமசர், சியவனர், தத்தாத்திரேயர், ஆசுரி, பதஞ்ஜலி, வேதங்களுக்குத் தலை போன்றவரான மாமுனிவர் தௌம்யர், பஞ்சசிகர், ஹிரண்யநாபர், கௌசல்யர், சுருததேவர் மற்றும் ரிதத்வஜர் ஆகியோர் அடங்குவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நிச்சயமாக நீங்களும் இவர்களுக்கிடையில் இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
பதம் 6.15.16 : நீங்கள் சிறந்த புருஷர்கள் என்பதால், உண்மை ஞானத்தை உங்களால் எனக்கு அருள முடியும். நான் அறியாமை இருளில் ஆழ்ந்திருப்பதால், பன்றி அல்லது நாயைப் போன்ற ஓர் அறிவற்ற கிராமத்தான் ஆவேன். ஆகையால், ஞான தீபமேற்றி என்னைக் காத்தருளுங்கள்.
பதம் 6.15.17 : அங்கிரர் கூறினார்: அரசே, நீர் ஒரு மகனைப் பெற விரும்பியபோது உம்மிடம் வந்து, இந்த மகனை உமக்களித்த அதே அங்கிர ரிஷிதான் நான். இவர் பிரம்ம தேவரின் நேரடிப் புதல்வரான மிகச் சிறந்த நாரத முனிவராவார்.
பதங்கள் 6.15.18 – 6.15.19 : அரசே, நீர் பரமபுருஷரின் ஒரு சிறந்த பக்தராவீர். பெளதிகமான ஒன்றின் இழப்பிற்காக துக்கத்தில் மூழ்கிவிடுவது உம்மைப் போன்ற ஒருவருக்கும் ஏற்றதல்ல. ஆகவே பொய்யான இந்த துக்கத்திலிருந்து உம்மை விடுவிப்பதற்காகவே நாங்களிருவரும் வந்திருக்கிறோம். நீர் அறியாமையெனும் இருளில் மூழ்கியிருந்ததே இந்த துக்கத்திற்குக் காரணம். ஆத்ம ஞானத்தில் முன்னேறியவர்கள், பௌதிக இலாப, நஷ்டங்களால் பாதிப்படைவது சிறிதும் விரும்பத்தக்கதல்ல.
பதம் 6.15.20 : முதன்முதலாக உமது வீட்டிற்கு நான் வந்திருந்த பொழுதே, மேலான இந்த உன்னத ஞானத்தை உமக்கு நான் கொடுத்திருக்க முடியும். ஆனால் உமது மனம் பௌதிக விஷயங்களில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணமான ஒரு மகனை மட்டுமே உமக்கு நான் கொடுத்தேன்.
பதங்கள் 6.15.21 – 6.15.23 : அரசே, புத்திரர்களையும், புதல்விகளையும் உடைய ஒருவனின் துக்கத்தை இப்பொழுது நீர் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். சூரசேன தேசத்து அதிபதியே, ஒருவனுடைய மனைவி, வீடு, இராஜ்யம், வேறு பல ஐசுவரியங்கள், புலன் நுகர்வுப் பொருட்கள் ஆகிய அனைத்தும் ஒன்றே. ஏனெனில் இவையனைத்தும் தற்காலிகமானவையே. ஒருவனது இராஜ்யம், படைபலம், பொக்கிஷம், சேவகர்கள், மந்திரிகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகிய அனைத்தும் பயம், மதி மயக்கம், புலம்பல், துக்கம் ஆகியவற்றிற்குக் காரணங்களாகும். இவை, காட்டில் இல்லாத ஓர் அரண்மனையை (கந்தர்வ-நகரம்) இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதைப் போன்றவையாகும். இவை நிலையற்றவை என்பதால், இவை மாயத்தோற்றங்களையும் கனவுகளையும், மனக்கற்பனைகளையும் விட எவ்விதத்திலும் சிறந்தவையல்ல.
பதம் 6.15.24 : கண்களால் பார்க்கப்படும் பொருட்களான மனைவி, குழந்தைகள், உடைமை போன்றவை கனவுகளுக்கும், மனக் கற்பனைகளுக்கும் ஒப்பானவை. உண்மையில் நம்மால் காணப்படுபவைகளுக்கு நிரந்தரமான இருப்பு கிடையாது. சில சமயங்களில் இவை காணப்படுகின்றன. சில சமயங்களில் காணப்படுவதில்லை. நம்முடைய கடந்த செயல்களின் காரணத்தாலேயே இத்தகைய மனக்கற்பனைகளை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த மனக்கற்பனைகளின் காரணத்தால் நாம் மேற்கொண்டு செயல்களைச் செய்கிறோம்.
பதம் 6.15.25 : தேகாபிமானத்திலுள்ள ஜீவராசி, பௌதிக மூலப்பொருட்கள், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயற்புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் சேர்க்கையாலான உடலில் ஆழ்ந்திருக்கிறான். மனதின் மூலமாக ஜீவராசி, அதிபௌதிகம், அதிதைவிகம் மற்றும் அத்யாத்மிகம் என்ற மூவகைத் துன்பங்களை அனுபவிக்கிறான். ஆகவே இந்த உடல் எல்லா வகையான துன்பங்களுக்கும் பிறப்பிடமாகும்.
பதம் 6.15.26 : ஆகவே சித்ரகேது மகாராஜனே, கவனமாக ஆத்மாவின் நிலையை யோசித்துப்பாரும். அதாவது, நீர் யார் (உடலா, மனமா அல்லது ஆத்மாவா) என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும். நீர் எங்கிருந்து வந்தீர், உடலை விட்டதும் எங்கு செல்வீர், நீர் ஏன் பௌதிக துக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர் என்பதையெல்லாம் யோசித்துப்பாரும். இவ்விதமாக உமது உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள முயல்வீராயின், தேவையற்ற பற்றுதலை உம்மால் விட்டுவிட முடியும். இந்த ஜட உலகம், அல்லது கிருஷ்ணருடைய சேவையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத எதுவும் நித்தியமானது என்ற நம்பிக்கையை உம்மால் விட்டுவிட முடியும். இவ்விதமாக நீர் அமைதியை அடைவீர்.
பதம் 6.15.27 : மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: அரசே, மிகவும் மங்களகரமான ஒரு மந்திரத்தை கவனத்துடன் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும், என்னிடமிருந்து இதை ஏற்றுக் கொண்ட பின், ஏழு இரவுகளில் உம்மால் நேருக்கு நேராக பகவானைக் காண முடியும்.
பதம் 6.15.28 : அரசே, முன்பு சிவபெருமானும் மற்ற தேவர்களும் சங்கர்ஷணரின் பாத கமலங்களில் சரணடைந்தனர். இவ்விதமாக அவர்கள் இருமை என்னும் மாயையிலிருந்து உடனே விடுபட்டு, ஆன்மீக வாழ்வில் இணையற்ற, மிகச் சிறந்த மகிமைகளைப் பெற்றனர். அதே நிலையை நீரும் விரைவில் அடைவீர்.